சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

சங்கானையில் நடந்தது என்ன? Khan11

சங்கானையில் நடந்தது என்ன?

2 posters

Go down

சங்கானையில் நடந்தது என்ன? Empty சங்கானையில் நடந்தது என்ன?

Post by நண்பன் Thu 16 Dec 2010 - 17:32

கொள்ளையர்கள் கைகளில் துப்பாக்கியா- அது சாத்தியமா? இரவு எட்டுமணி. குப்பென்ற இருட்டு. எவரும் எதிர்பாராத வேளையில் மிகப் பெரும் திகில் சம்பவம் நடந்தேறியது. சங்கானை முருகமூர்த்தி ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நித்தியா னந்தக் குருக்கள் ஆலய பூசையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியிருந்தார்.அவரின் வீடும் கோவிலும் மிகவும் அண்மித்த தூரங்களைக் கொண்டவை.

ஆலயத்தில் இருக்கக்கூடிய சில பணிகளை முடித்துக் கொண்டு அவரது இளைய மகன் ஜெகானந்த சர்மா (வயது 28) இரவு எட்டுமணியளவில் வீடு நோக்கி நடந்துசெல்கிறார். ஆலயத்தைத்தாண்டி வீட்டை அண்மிக்கும் வேளை யாரோ இருவர் அவரின் நெற்றியில் துவக்கை வைக்க இன்னொருவன் அவரின் கழுத்தில் கிடந்த சங்கிலியை அறுக்கின்றான். ஜெகானந்த சர்மா துணிச்சலோடும் பொய்த்துவக்காக இருக்கும் என்ற நம்பிக்கை யோடும் துவக்கை தட்டிவிட்டு அவர்களை எதிர்க்க,

‘டுமீல்’ என்ற சத்தம் ஜெகானந்த சர்மாவின் நெஞ்சுப்பகுதியை துளைக்கின்றது. அந்தக் கணத்தில் சத்தமிட்டவாறு ஜெகானந்த சர்மா ஓடி மறைந்துகொள்ள, அதேநேரம் வீடுதிரும்பாத மகனைத் தேடி, தந்தை நித் தியானந்தக்குருக்கள் கோவிலை நோக்கி செல்கின்றார். துவக்கோடு நிற்கும் இரு வரும் நித்தியானந்தக் குருக்களைத் தடுக்கின்றனர். அவர் அணிந்திருந்த சங்கிலி, உருத்திராக்கமாலை, மோதிரங்கள் கழற்றப்படுகின்றன.

நித்தியானந்தக் குருக்களும் அந்தக் குப்பிருட்டிலும் அவர்களை எதிர்க்க, இரண்டாவது ‘டுமீல்’ சத்தம் குருக்களின் தொண்டைப்பகுதியைத் துளைக்க ‘ஆ’ என்று கத்துவதற்கும் சந்தர்ப்பமின்றி, மழை வெள் ளத்திற்குள் நித்தியானந்தக் குருக்கள் சரிகின்றார். வெடிச்சத்தங்கள் வீட்டில் இருந்தவர்களை சலசலப்புக்குள்ளாக்க, நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாமல் நித்தியானந்தக் குருக்களின் மூத்தமகன் நித்திய சிவதாண்டவ சர்மா தனது வீட்டிலிருந்து சார்ச்சர் லைட்டுடன் தந்தையின் வீட்டை நோக்கி வருகின்றார். இரத்த வெள்ளத்தில் தனது தந்தை விழுந்து கிடப்பதைக் கண்ட மகன் ஓடிச்சென்று தூக்க முற்பட்டபோது, அவரின் கையில் இருந்த சார்ச்சர் லைட்டை இனந்தெரியாத ஒருவன் பறித்தெடுத்து வீசுகின்றான். அவர்களின் நோக்கம் நிறைவேறுகின்றது. நித்திய சிவதாண்டவ சர்மா அணிந் திருந்த சங்கிலி, மோதிரம் என் பன பறிக்கப்படுகின்றன. நகைகளைப் பறித்தவர்கள் அவரையும் சுடுவதற்குத் தயா ரான போது நித்திய சிவதாண்டவ சர்மா அவர்களை மன்றாடித் தப்பித்துக்கொள்ள,

கொள்ளையர்கள், நித்தியானந்தக் குருக்களின் வீட்டை நோக்கிச் செல்கின்றனர்.இருவரைச் சுட்டுவிட்டு தங்க நகைகளைப் பறித்த அவர் களின் கொடூர தாண்டவம் முடியவில்லை. எதிர்க்க முற்பட்டனர்கொள்ளையர்களை எதிர்ப் பதென முடிபுசெய்த நித்தியானந்த சர்மாவின் மகன்கள் சிவா னந்த சர்மாவும், பவானந்த சர்மாவும் வீட்டில் இருந்த- கோவில் தேவைக்குப் பயன்படுத்தப்படும் வாளை எடுத்து கொள் ளையர்களை விரட்டுவதற்குத் தயாரானார்கள். துவக்கோடு வாள் மோதுவது முடியாத காரியமல்லவா?

வாளோடு நின்ற சிவானந்த சர்மா மீது வெடிகள் தீர்க்கப்படுகின்றன. கையிலும் காலிலுமாக மூன்று சூடுகள் விழ இரத்தம் பீறிட்ட நிலையில் துளசி மாடத்தில் சிவானந்த சர்மா சரிந்து விழுகிறார். அப்போதுதான் வீட்டிலிருந்த பெண்கள் நிலைமையை உணர்ந்துகொண்டு அறைக் குள் ஓடிச்சென்று கதவைத் தாளிட்டு தம் பலத்தால் தடை போட்டனர்.விறாந்தாவின் கதவை உடைத்து உள் நுழைந்த கொள் ளையர்கள் கூக்குரல் மத்தியில் நின்றுபிடிக்க விரும்பாமல் அங்கு நிறுத்தி வைக்கப்பட் டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

தகவல்கள் கொடுக்கப்பட்டன

முதலாவது வெடியில் காய மடைந்த ஜெகானந்த சர்மா பரந்தன் இந்துக்கல்லூரியின் ஆசிரியர். மார்பில் பட்ட குண்டு அவரின் குருதியை வெளியேற்றுக்கொண்டிருந்த போதிலும், பின் பாதையால் வீட்டின் குளியலறையில் நின்று கொண்டு தங்கள் வீட்டில் நடக்கும் அவலத்தை தொலை பேசி மூலமாக தனது நண்பர்களுக்கு அறிவித்துக்கொண் டேயிருந்தார். அதனூடாகத் தகவல்கள் பொலிஸாருக்கும் கிடைத்தது. எனினும் பொலிஸார் வந்து சேர்வதற்குள் எல்லாம் நடந்தாயிற்று.

வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்

சம்பவத்தை அறிந்த குருக்களின் வீட்டில் பொதுமக்கள் கூட, காயமடைந்தவர்களை வைத் தியசாலைக்குக் கொண்டு செல்லும் பணி தீவிரமாகிறது.என்னசெய்வது! அங்கும் வேதனை. ஒற்றையடிப்பா தையை மட்டும் தனக்கு உரித்தாக்கிக்கொண்ட சங்கானைப் பாலம் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்தது.

ஆ! கடவுளே! என்ன சோதனை. குற்றுயிராய் மூவர். வட்டுக்கோட்டையால் செல்வதென்றால் வழுக்கையாற் றுப்பாலமும் உடைந்துபோயிற்று.சுமார் ஆறு கிலோமீற்றர் சுற்றித்திரிந்து சங்கானை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து மூவரும் அம்புலன்ஸ் வண்டியில் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு எடுத்துச்செல்லப் பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

விசாரணை தொடர்கின்றது

வழமைபோல் எல்லாம் நடந்து முடிந்தபின் பொலிஸாரும், இராணுவத்தினரும் சம்பவ இடத் திற்குச் சென்று விசாரணை களை மேற்கொண்டனர்.படைத்தரப்பில் பல பிரிவு கள் விசாரணை செய்ததாக அறியமுடிந்தது. கைரேகை நிபு ணர்களும் தங்கள் பணியைச் செய்தனர்.கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள் அளவெட்டியில் மீட்கப்பட்டதாக தகவல்- இதில் இன்னு மோர் விடயம்,

கொள்ளையர்களினால் எடுத்துச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள், சம்பவம் நடந்த அன்றுதான் வவுனியாவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து வேண்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹிPறூறூ 4866 என்ற இலக்க முடைய இந்த மோட்டார் சைக்கிளை விற்றவரின் விபரங்களை அறிவதற்கு காயமடைந்த ஜெயானந்த சர்மா தேற வேண்டும்.

மர்மமான கொள்ளை அண்மையில் அளவெட்டியில் நடந்த துப்பாக்கிச்சூடு அதனைத்தொடர்ந்து சங்கானையில் துப்பாக்கி வேட்டு. யார் இதைச் செய்தது? ஏ.கே.47 என்ற வகைத் துவக்கை கொள்ளையர்கள் பயன்படுத்தியதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன. அவ்வாறாயின் சாதாரண கொள்ளைக்கோஷ்டிகள் இத்தகைய ஆயுதங்களை வைத்தி ருக்கின்றனவா? அவர்கள் அவ்வாறு வைத்திருப்பார்களாயின் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்வது பயங்கரமான தல்லவா?

எங்கோ மர்மம் இருக்கிறது! அந்த மர்மத்தை படைத்தரப்பு வெளிப்படுத்தாதவரை மர்மம் நீடிக்கவே செய்யும். எதுவாயினும் ஓர் அந்த ணச் சிவாச்சாரியார் குடும்பத்திற்கு நேர்ந்த இந்த அவலத்தால் இந்துமக்கள் ஆழ்ந்த வேதனையடைந்துள்ளனர். இதே சம்பவம் ஒரு பெளத்த துறவிக்கு நடந்திருந்தால், கத்தோலிக்க குருவுக்கு நேர்ந்திருந்தால் இந்த நாடே கலங்கியிருக்கும். என்ன செய்வது! சபிக்கப்பட்ட இந்து சமயத்தின் மதகுருமாருக்கு அவலம் நேர்ந்தால் அதுபற்றி யாருமே குரல் கொடுப்பதற்கு இல்லை என்ற இந்தத் துயர் நித்தியானந்தக் குருக்களின் மகனும் கனகராயன் குளம் மகாவித்தியாலய ஆசிரியருமான பவானந்த சர்மாவுக்கு மட்டு மல்ல; எங்கள் எல்லோருக்கும் இருக்கவே செய்கிறது.

விதுரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சங்கானையில் நடந்தது என்ன? Empty Re: சங்கானையில் நடந்தது என்ன?

Post by ஹம்னா Thu 16 Dec 2010 - 21:21

அதிர்ச்சி அதிர்ச்சி


சங்கானையில் நடந்தது என்ன? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum