சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அவ்வையார் நூல்கள் - மூதுரை  Regist11


Latest topics
» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Yesterday at 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Yesterday at 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Yesterday at 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Yesterday at 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Yesterday at 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Yesterday at 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Yesterday at 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Yesterday at 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Yesterday at 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» திருட்டு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:20

.
அவ்வையார் நூல்கள் - மூதுரை  Khan11
அவ்வையார் நூல்கள் - மூதுரை  Www10

அவ்வையார் நூல்கள் - மூதுரை

Go down

Sticky அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by யாதுமானவள் on Sat 9 Jul 2011 - 20:00

அவ்வையின் வாக்குண்டாம் (மூதுரை)
[அவ்வையார் நூல்கள் - மூதுரை  Aaraikkeeraipg261
தமிழின் பொக்கிஷங்கள் எனப் போற்றப்படும் நூல்களில் முக்கியமான இடத்திலிருப்பது அவ்வை மூதாட்டியின் படைப்புக்களனைத்தும். இவர் படைப்புக்கள் அன்று முதல் இன்று வரை அழியாப் புகழ் பெற்று மணம் பரப்பக் காரணம், அதில் பொதிந்துள்ள அறநெறிக் கருத்துக்கள்தாம்.

அறிவுக்கு விருந்தாக இருக்கும் இந்நூல்களை சேனையில் பதிவிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் படித்து கரை கடந்த ஆனந்த வெள்ளத்தில் திளைத்திடுக!

காப்பு - வெண்பா

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதந்
தப்பாமற் சார்வார் தமக்கு.

பிரித்துப் படிக்க:
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
(துப்பு - சிவந்த பவழம் ; ஆர் - அழகு,; மாமலராள் - சரஸ்வதி ; நுடங்காது - நோய்பிடித்து சிதையாது)

பவழம் போல் சிவந்த திருமேனியையும் தும்பிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின் திருவடிகளை நறுமணமிக்க பூக்களைக் கொண்டு பூஜை செய்வோருக்கு நல்ல வாக்கும் மனமும் செந்தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியின் அருளும் (அறிவும் ) கிடைக்கும் என்கிறார் அவ்வை பிராட்டி.

மனிதப் பிறப்பில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழவேண்டும் ; அந்த உதவி/உபகாரம் பற்றி அவ்வை கூறுகிறார்...

உதவி எப்படி செய்ய வேண்டும் என்பதை;

நன்றி யொருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் எனவேண்டா - நின்று
தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே றான்தரு தலால்.

(தெங்கு - தென்னை ; தாள் - அடி, (வேர்)

நிலைபெற்று உறுதியாக நீண்டு வளரும் தென்னையானது தான் வேர் மூலம் குடித்ததை நீரை எப்படி thalai மீது கொண்டு மிக்க இனிமையும் நல்லதுமான இளநீரைத் தருகிறதோ அதே போல் ஒருவருக்கு ஒரு உபகாரம் செய்துவிட்டு அவன் அதை எப்போது நமக்குத் திருப்பிச் செய்வானோ என சந்தேகப்படவேண்டாம்... தக்க நேரத்தில் அதன் பலன் கிட்டும் என்பதாக அழகாகக் கூறுகிறார் அவ்வை.

அடுத்ததாக ...
[/b][/u]எப்படிப்பட்டவர்க்கு உபகாரம் செய்யவெண்டும் என்றும் கூறுகிறார் [/b][/u]

நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரங்
கல்மேல் எழுத்துப் போற் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்.

அதாவது, நற்குனங்களுடிய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது கல்லின் மேல் எழுதிய எழுத்துப் போல என்றும் அழியாது நிலைத்து இருக்கும். அதே நேரம், அன்பற்ற தீய குணமுடைய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது தண்ணீர்மேல் எழுதிய எழுத்துபோல் உடனே மறைந்துவிடும் என்கிறார்.

அடுத்து .... தொடர்வோம்....Last edited by யாதுமானவள் on Sat 9 Jul 2011 - 20:42; edited 3 times in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by முனாஸ் சுலைமான் on Sat 9 Jul 2011 - 20:19

அன்பற்ற தீய குணமுடைய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது தண்ணீர்மேல் எழுதிய எழுத்துபோல் உடனே மறைந்துவிடும் ://:-: ://:-: ://:-: ://:-: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by யாதுமானவள் on Sat 9 Jul 2011 - 21:01

முனாஸ் சுலைமான் wrote: அன்பற்ற தீய குணமுடைய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது தண்ணீர்மேல் எழுதிய எழுத்துபோல் உடனே மறைந்துவிடும் ://:-: ://:-: ://:-: ://:-: :”@:

நன்றி முனாஸ் சுலைமான் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by kalainilaa on Sat 9 Jul 2011 - 21:39

மனிதப் பிறப்பில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழவேண்டும் ; அந்த உதவி/உபகாரம் பற்றி அவ்வை கூறுகிறார்...

அவை சொல்லும் வழி.வலிப்போக்கும்!
ஈகைக்கு கை சேர்க்கும் .நன்றி தோழியே .தொடருங்கள் .அவ்வை சொன்ன சுவடிகளை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by யாதுமானவள் on Sat 9 Jul 2011 - 21:49

kalainilaa wrote:மனிதப் பிறப்பில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழவேண்டும் ; அந்த உதவி/உபகாரம் பற்றி அவ்வை கூறுகிறார்...

அவை சொல்லும் வழி.வலிப்போக்கும்!
ஈகைக்கு கை சேர்க்கும் .நன்றி தோழியே .தொடருங்கள் .அவ்வை சொன்ன சுவடிகளை .

நன்றி Kalainilaa
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 9 Jul 2011 - 22:15

தமிழ்பெரும் மூதாட்டி ஔவையாரின் வரிகளுக்கு சேனையில் மகுடம் சூடிட எமது சேனையின் ஔவையார் யாதுமானவள் அவர்களின் முயற்சிக்கு மிக்க நன்றிகள் பாராட்டுகள்

ஔவையாரின் வரிகளிலுள்ள படிப்பினைகளை கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது மிக்க நன்றி
எளிமையான உதாரணங்கள் அழகான பாடல்கள் உதவிக்கு தென்னையினையும் உபாகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விபரித்திருப்பது மிகச்சிறப்பு

தொடருங்கள் அக்கா மிக்க நன்றி


அவ்வையார் நூல்கள் - மூதுரை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by யாதுமானவள் on Sat 9 Jul 2011 - 23:09

சாதிக் wrote:தமிழ்பெரும் மூதாட்டி ஔவையாரின் வரிகளுக்கு சேனையில் மகுடம் சூடிட எமது சேனையின் ஔவையார் யாதுமானவள் அவர்களின் முயற்சிக்கு மிக்க நன்றிகள் பாராட்டுகள்

ஔவையாரின் வரிகளிலுள்ள படிப்பினைகளை கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது மிக்க நன்றி
எளிமையான உதாரணங்கள் அழகான பாடல்கள் உதவிக்கு தென்னையினையும் உபாகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விபரித்திருப்பது மிகச்சிறப்பு

தொடருங்கள் அக்கா மிக்க நன்றி

சேனையின் ஔவையார் யாதுமானவள் ? அது சரி.... :) நன்றி சாதிக்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by *சம்ஸ் on Sat 9 Jul 2011 - 23:16

அதாவது, நற்குனங்களுடிய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது கல்லின் மேல் எழுதிய எழுத்துப் போல என்றும் அழியாது நிலைத்து இருக்கும். அதே நேரம், அன்பற்ற தீய குணமுடைய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது தண்ணீர்மேல் எழுதிய எழுத்துபோல் உடனே மறைந்துவிடும் என்கிறார்.

நன்றி அக்கா
தொடருங்கள் .............
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by யாதுமானவள் on Sat 9 Jul 2011 - 23:22

*சம்ஸ் wrote:அதாவது, நற்குனங்களுடிய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது கல்லின் மேல் எழுதிய எழுத்துப் போல என்றும் அழியாது நிலைத்து இருக்கும். அதே நேரம், அன்பற்ற தீய குணமுடைய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது தண்ணீர்மேல் எழுதிய எழுத்துபோல் உடனே மறைந்துவிடும் என்கிறார்.

நன்றி அக்கா
தொடருங்கள் .............

நீங்களெல்லாம் ஆர்வத்துடன் படிப்பது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது.
நன்றி சம்ஸ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: அவ்வையார் நூல்கள் - மூதுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum