சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

சுவையும், மணமும் நிறைந்த ஆம்லெட்டிற்கு....

Go down

Sticky சுவையும், மணமும் நிறைந்த ஆம்லெட்டிற்கு....

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 23 Jul 2011 - 10:37

சுவையும், மணமும் நிறைந்த ஆம்லெட்டிற்கு.... Omlette-jpg-976
முட்டையை சமைக்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில எளிய டிப்ஸ்....

* முட்டையில் ஆம்லெட் போடும் போது, சேர்ந்து வராமல் உதிர்ந்து போகிறதா? முட்டையை அடிக்கும்போது அதனுடன் சிறிது கடலைமாவும் சேர்த்துக் கொண்டால், ஆம்லெட்டின் சுவையும், மணமும் கூடும்.

* உடல் மெலிந்து காணப்படுபவர்கள் பச்சை முட்டையை அடித்து பாலுடன் கலந்து குடிப்பது நல்லது. பருவம் அடைந்த பெண்களுக்கு இது போன்று குடிக்கக் கொடுப்பது வழக்கம். ஆனால், இதிலிருந்து கிளம்பும் வாடை பலருக்கும் பிடிப்பதில்லை. சிறிதளவு வெண்ணிலா எசென்ஸ், உடைத்த பாதாம் பருப்பு ஆகியவற்றை, இதனுடன் கலந்தால் வாடை நீங்கும்.

* ஆம்லெட் போடுவதற்காக, முட்டையை அடிக்கும் போது, சிறிதளவு தண்ணீ­ர் ஊற்றிக் கொண்டால், ஆம்லெட் 'புசுபுசு'வென நிறைந்து வரும்.

* வேக வைத்த முட்டையின் உள்ளே சில நேரங்களில் கறுநிறப் படலம் படர்ந்திருக்கும். இதைக் கண்டால் சிலர் அறுவறுக்கின்றனர். இதைத் தவிர்க்க, வேகவைத்த பாத்திரத்திலிருந்து முட்டையை எடுத்தவுடனே, குளிர்ந்த நீரில் போட்டு விட்டால், கறுமை ஏற்படாது.

* முட்டை வேக வைக்கும் போது உடைந்து விடாமல் இருக்க, தண்ணீ­ரில் சிறிதளவு வினிகர் ஊற்றினால், விரியாமல் முட்டை வெந்து விடும். அல்லது சிறிதளவு கல் உப்பு போட்டாலும் முட்டை விரியாமல் இருக்கும்.

* கடாயில் வறுப்பதற்காக, முட்டையை உடைத்து ஊற்றும்போது, அங்குமிங்கும் ஓடிச் சிதறி விடுகிறது. இதைத் தவிர்க்க, கடாயில் சிறிதளவு எலுமிச்சை சாறை ஊற்றிப் பரப்பிய பிறகு, முட்டையை உடைத்து ஊற்றினால், முட்டை ஒன்றி இருக்கும்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum