சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்! Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்! Khan11
சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்! Www10

சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்!

Go down

Sticky சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்!

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 7 Aug 2011 - 11:01

சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்! Rose%20Sisters-jpg-1085
ஒரே பாய்ச்சலில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு இலகுவாக சென்று விடுகிறார்கள் ரோஸ் சகோதரிகள். அவர்கள் பேச்சிலும் அதே பாய்ச்சல் பளிச்சிடுகிறது.

2005-ம் ஆண்டு மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்... 2008-ம் ஆண்டு தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பிரஸ்ட் ஸ்டிரோக் பிரிவில் தங்கம் வென்றது... 2009-ம் ஆண்டு நடந்த தேசிய போட்டியில் 50 மீட்டர் பேக் ஸ்டிரோக் பிரிவில் மறுபடியும் தங்கம்... இந்த ஆண்டு பெண்களுக்கான தேசிய நீச்சல் போட்டியில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் வென்றது... - அக்காளின் சாதனை இவை என்றால், தங்கையும் தன் பங்குக்கு பதக்கங்களை குவித்து வருகிறார்.

2010-ம் ஆண்டு மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களோடு தனிநபர் சாம்பியன் பட்டம்... இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 5 தங்கம், ஒரு வெள்ளி... சென்ற மாதம் மறுபடியும் ஒரு தங்கம்... என்று, தங்கையின் சாதனைகளும் தொடர்கிறது.

சேலத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியான ஏஞ்சல் ரோஸ், அவரது தங்கையும் 6-ம் வகுப்பு மாணவியுமான அஸ்வின் ரோஸ் ஆகியோர்தான் தங்கம் குவிக்கும் நீச்சல் சகோதரிகள். முதலில் ஏஞ்சல் ரோசுடன் பேசுவோம்...

அது என்ன இருவரது பெயரிலும் 'ரோஸ்'?

'ரோஸ்' என்பது எங்களது குடும்பப் பெயர். அதாவது, எங்கள் அம்மா பெயர் லீமாரோஸ். அதனால், எங்களது பெயரிலும் ரோஸ் இடம்பிடித்து விட்டது.

நீச்சல் ஆர்வத்தின் பின்னணி?

எனக்கு டி.வி. பார்ப்பது பிடிக்கும் என்றாலும் நீச்சல் போட்டிகளை விரும்பிப் பார்ப்பேன். சின்ன வயது முதலே இந்த பழக்கம் என்னிடம் உள்ளது. அதுதான் எனது நீச்சல் ஆர்வத்திற்கும் காரணம். என்னுடைய விருப்பத்தை அப்பாவிடம் சொன்னபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டார். எனது விருப்பத்திற்கு மதிப்பளித்து நீச்சல் பயிற்சிக்கு அனுப்பினார். அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

முதல் வெற்றி?

மூன்றாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதல் போட்டியில் பங்கேற்றேன். ஆரம்பத்தில் பயமாக இருந்தது. அதனால்தான் என்னவோ என்னால் இரண்டாமிடமே வர முடிந்தது. அந்த போட்டியில் வெள்ளி வென்றேன். அந்த முதல் பதக்கம் மறக்க முடியாத சந்தோஷத்தை கொடுத்தது. மேலும், இனிவரும் போட்டிகளில் வெற்றிபெற முடியும் என்கிற தன்னம்பிக்கையையும் எனக்கு அந்த முதல் வெற்றி தந்தது.

முதல் தோல்வி கற்றுத் தந்த பாடம்?

இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை முதல் தோல்வியில் கற்றுக்கொண்டேன். இன்னொரு பாடத்தையும் கூடவே கற்றுக்கொண்டேன். பொதுவாக, வட மாநிலங்களில் நடைபெறும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்கும்போது மராட்டியம், கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். காரணம், அங்குள்ள குளுகுளு காலநிலை. நம் தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் கோடைக்காலத்தில் எடுக்கும் நீச்சல் பயிற்சிகளை மழைக்காலத்தில் மேற்கொள்வதில்லை. ஆனால், மராட்டியம், கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் எல்லா நாட்களில் பயிற்சி மேற்கொள்கிறார்கள். அதனால், நானும் மழை பெய்தாலும்கூட கண்டிப்பாக பயிற்சி எடுக்க வேண்டும் என்கிற வழக்கத்தை தற்போது பின்பற்றி வருகிறேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது.

மறக்க முடியாத நீச்சல் போட்டி?

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புனேயில் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம் வென்றது. அப்போது கிடைத்த பாராட்டை அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.

ரோல் மாடல்?

அமெரிக்க நீச்சல் வீராங்கனையான ப்ருக் ஹான்சன்தான் என்னுடைய ரோல் மாடல். அவரைப் போன்று ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

நீச்சல் பயிற்சி எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது?

நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எந்த நோயும் சட்டென்று வந்துவிடாது. மனதை எளிதில் ஒருமுகப்படுத்தலாம். அதன் காரணமாக நன்றாக படிக்க முடியும். படிக்கும் பாடம் மனதில் ஆழமாக பதியும். ஒரு பாடப்பிரிவை 45 நிமிடத்தில் படித்து முடித்துவிடலாம். மேலும், நன்றாக பசியெடுக்கும். அதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. உடல் எடையும் கண்டபடி கூடாது. மொத்தத்தில் மனமும், மூளையும் ரொம்ப 'ப்ரீ' ஆக இருக்கும்.

சிறந்த நீச்சல் பயிற்சிக்கு சில டிப்ஸ்...

ரெகுலராக நீச்சல் கற்று வரவேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகளை அளவோடு சாப்பிட வேண்டும். தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். அப்போதுதான் நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கும். போட்டி நடைபெறும் 15 நிமிடத்திற்கு முன்பு எனர்ஜி டிரிங், வாழைப்பழம் போன்ற பழங்கள் சாப்பிட வேண்டும். அதேநேரம், போட்டி நடைபெறும் நாளன்று அசைவம், பாஸ்ட் புட் வகைகளை தொடக் கூடாது.

சக நீச்சல் வீராங்கனை என்ற முறையில் தங்கையிடம் கற்றுக்கொண்டது...

அவள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பாள். அந்த சுறுசுறுப்பை நானும் பின்பற்றுகிறேன். மற்றபடி, அவள் கூறும் நல்ல அறிவுரைகளையும் தவறாமல் பின்பற்றுவேன்.

வருங்கால நீச்சல் வீராங்கனைகளுக்கு உங்கள் அறிவுரை...

நீச்சல் பயிற்சி பற்றி எந்த பயமும் வேண்டாம். டீன்-ஏஜில் இந்த பயிற்சிக்கு வருவதைவிட, அதற்கு முன்பாக சின்ன வயதிலேயே வந்து விடுவது நல்லது. அப்படி வந்தால் பயத்தை தவிர்த்து விடலாம். எல்லாத் துறைகளிலும் சாதிக்கும் பெண்கள் நீச்சல் போட்டியிலும் சாதிக்க முடியும்... என்கிற ஏஞ்சல்ரோஸின் பேச்சில் அத்தனை கம்பீரம்! விவேகம்!!

இனி, சிறு வயதிலேயே நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் பல குவித்து வரும், ஏஞ்சல் ரோஸின் தங்கை அஸ்வின் ரோஸூடன் பேசுவோம்...

அக்காவை போட்டியாக நினைப்பீர்களா?

இல்லை. அக்காவின் நீச்சல் போட்டிகளையும், அவரது பரிசுகளையும் பார்த்துதான் நானும் நீச்சல் போட்டிக்குள் நுழைந்திருக்கிறேன்.

பிற ஆர்வங்கள்...

இசை கேட்பது பிடிக்கும். வாலிபால், டென்னிஸ், கூடைப்பந்து விளையாட்டுகளும் விளையாடுவேன்.

மிரள வைத்த போட்டி...

ஆரம்பத்தில் என்னுடன் போட்டியிடும் சக வீராங்கனைகள் உயரமாக இருந்தால் பயந்து விடுவேன். இப்போது அந்த பயம் இல்லை. போட்டியின்போது சக வீராங்கனைகள் ஆரம்பத்தில் அதிவேகமாக நீந்துவார்கள். அதனால் எளிதில் களைப்படைந்து விடுவார்கள். அதனால், ஆரம்பத்தில் விவேகத்துடன் நீந்தும் நான், அவர்கள் களைப்படையும் நேரம் வேகமாக நீந்திவிடுவேன். அதனால் வெற்றியை எளிதில் எட்டிப் பிடித்துவிடலாம்.

அக்காளிடம் கற்றுக்கொண்டது?

நீச்சல் பயிற்சியை நன்றாக சொல்லிக்கொடுப்பார். நிறைய அறிவுரையும் தருவார். ஒருமுறை வெற்றி பெறாவிட்டால் அடுத்தமுறை கண்டிப்பாக வெற்றி பெற்று விடலாம் என்று ஊக்குவிப்பார். அதுபோன்ற ஊக்கத்தினால்தான் சமீபத்தில் மத்தியபிரதேசம் இந்தூரில் நடந்த தேசிய போட்டியில் 9-11 வயதுக்கு உட்பட்டோருக்கான குரூப்-4 பிரிவில் தங்கம் வென்று வந்திருக்கிறேன்... என்கிற அஸ்வின் ரோஸின் முகத்தில் இன்னும் பல பதக்கங்களை குவிக்கிற தன்னம்பிக்கை பளிச்சிடுகிறது.

'ரோஸ்' சகோதரிகளின் பெற்றோர் - செல்வநாதன்-லீமாரோஸ். இருவரும் சேலத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்!

Post by ஹம்னா on Sun 7 Aug 2011 - 12:58

:) :) :)


சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்!

Post by முனாஸ் சுலைமான் on Sun 7 Aug 2011 - 13:07

நாமும் பாரட்டுவோம் உற்சாகப்படுத்துவோம் :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்!

Post by நண்பன் on Sun 7 Aug 2011 - 14:28

நீச்சல் பயிற்சி எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது?

நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எந்த நோயும் சட்டென்று வந்துவிடாது. மனதை எளிதில் ஒருமுகப்படுத்தலாம். அதன் காரணமாக நன்றாக படிக்க முடியும். படிக்கும் பாடம் மனதில் ஆழமாக பதியும். ஒரு பாடப்பிரிவை 45 நிமிடத்தில் படித்து முடித்துவிடலாம். மேலும், நன்றாக பசியெடுக்கும். அதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. உடல் எடையும் கண்டபடி கூடாது. மொத்தத்தில் மனமும், மூளையும் ரொம்ப 'ப்ரீ' ஆக இருக்கும்.

வாவ் ரோஸ் பெமிலிக்கு வாழ்த்துக்கள் இன்னும் உலகளவில் வெற்றி பெற நன்றி சாதிக் தகவலுக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்!

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 7 Aug 2011 - 14:28

:];: :];:


சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்!

Post by kalainilaa on Sun 7 Aug 2011 - 15:52

ஆரம்பத்தில் என்னுடன் போட்டியிடும் சக வீராங்கனைகள் உயரமாக இருந்தால் பயந்து விடுவேன். இப்போது அந்த பயம் இல்லை. போட்டியின்போது சக வீராங்கனைகள் ஆரம்பத்தில் அதிவேகமாக நீந்துவார்கள். அதனால் எளிதில் களைப்படைந்து விடுவார்கள். அதனால், ஆரம்பத்தில் விவேகத்துடன் நீந்தும் நான், அவர்கள் களைப்படையும் நேரம் வேகமாக நீந்திவிடுவேன். அதனால் வெற்றியை எளிதில் எட்டிப் பிடித்துவிடலாம்.
:!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum