சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அய்சாம்மா - மனசால் பேசுகிறேன்..முகமூடியில்லாமல்...அப்துல்லாஹ் பதிவு : 2 Regist11


Latest topics
» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:06

» ஜூன் மாதம் வந்தால் எனக்கு இரண்டு கவலை...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:02

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:01

» சண்டைன்னு வந்திட்டா என் கணவரை நல்லா மொத்திடுவேன்...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:00

» மனசு பேசுகிறது : முகிலினி
by சே.குமார் Sun 2 Jun 2019 - 12:55

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by பானுஷபானா Mon 27 May 2019 - 13:13

.
அய்சாம்மா - மனசால் பேசுகிறேன்..முகமூடியில்லாமல்...அப்துல்லாஹ் பதிவு : 2 Khan11
அய்சாம்மா - மனசால் பேசுகிறேன்..முகமூடியில்லாமல்...அப்துல்லாஹ் பதிவு : 2 Www10

அய்சாம்மா - மனசால் பேசுகிறேன்..முகமூடியில்லாமல்...அப்துல்லாஹ் பதிவு : 2

Go down

Sticky அய்சாம்மா - மனசால் பேசுகிறேன்..முகமூடியில்லாமல்...அப்துல்லாஹ் பதிவு : 2

Post by அப்துல்லாஹ் on Mon 5 Sep 2011 - 11:19

அன்பார்ந்த சேனை உறவுகளே
இங்கே இந்தத்திரியில் நான் எனக்கான தொடர் பதிவுகள் இடுவதற்காய் தொடங்கியுள்ளேன்.
அடிப்படையில் நெருடுகிற சில விவாதத்திற்குரிய அன்றாட பொதுவான செய்திகள் மற்றும் என் அனுபவங்களை பதிவிட்டு என் தரப்பிலான கண்ணோட்டம் அது முழுக்க முழுக்க என் மனதுக்குப் பட்டதை (பின்னுட்டமாகக் கூட இருக்கலாம்) பதிவேன்...உங்களுக்கும் பிடித்திருந்தால் ஊக்குவித்துத் தொடருங்கள்...


பதிவு 2

அய்சாம்மா - மனசால் பேசுகிறேன்..முகமூடியில்லாமல்...அப்துல்லாஹ் பதிவு : 2 Birdsh

தாய்க் கிழவி மூளி

ஒரே சத்தமாக சிறுவர்கள் இரைந்து பாடும் ஓசை..
தாய்க் கிழவி மூளி
தண்ணி இறைக்கும் வாளி
தட்டான் குடிக்குப் போவாத
தாலி கெட்டி நிக்காத...
என்ன இது குழப்பத்தில் கொஞ்சம் எழுந்து வாசல் பக்கம் வந்து பார்வையிட்டேன்.தெருவில் முக்கடி விடு என்னுடையது. ஜன்னலைத் திறந்தால் ஜனங்களின் நடமாட்டம் எளிதில் கண்ணுக்குக் கிட்டும்.அந்த சந்தில்
முக்கில் சிறுவர்கள் ஏழெட்டுப் பையன்கள் ஒரு வயதான பெண்ணை அதுவும் தடுமாறி நடக்கச் சிரமப்படும் ஒரு மூதாட்டியை சூழ்ந்து கொண்டு இன்னல கொடுப்பதை காண முடிந்தது...
கிராமங்களில் இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு. சிறுவர்கள் கையில் பொம்மைகள் இருந்தால் நலம் ஆனால் சில நேரம் மன நலம் பிறழ்ந்த மனிதர்கள் மாட்டிக் கொண்டால் உண்டு இல்லை என்று பண்ணுவார்கள்...நானும் அந்தப் பருவம் கடந்தவன் தானே.
இப்பொழுத தான் இந்த ஊருக்கு சிறிது இடைவெளி கொடுத்திருக்கிறேன். ஆமாம் நான் பிறந்து படித்தது எல்லாமே இங்கு தான்.எனது பத்தாம் வகுப்பில் தாயார் மரணமடைய அனாதையாய் விடப்பட்டேன். வாப்பா எனது இரண்டாம் ஆண்டு பாலி டெக்னிக் படிக்கையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். என் இரண்டு சகோதரிகள் பின்னர் திருமணம் செய்து கொடுக்க என் வருமானமே அவருக்கு தேவை என்பதால் கடன வுடன வாங்கி என்ன படிக்க வச்சார்...நானும் படிச்சு நல்ல மதிப்பெண் ஈட்டினேன்.
என் தாயாரைத் தவிர அவரது தம்பிமார்கள் கடல் கடந்து வறுமைக்கு பிழைக்க பெற்றோருடன் மலேசியா சென்று அங்கே தங்கி வாழ்ந்து வந்தனர். ஊருக்கு வரும்போது எங்களின் வீட்டில் தான் தங்குவர்.அப்படி ஒரு என் தாயுடன் பிறந்த எனது தாய் மாமன் தன மகளை எனக்குக் கட்டித் தருவதறக்குஎண்ணி என்னை தன்னுடனே வைத்துக்கொள்ள ஆசைப் பட்டார். எனக்கும் பாஸ்போர்ட் எடுத்து தன்னுடன் அழைத்துக் கொண்டார்...
தாய் இல்லாமல் கடந்த ஒரு சில நாட்களில் எனது சாப்பாட்டு பொழப்பு அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. அபோது என்னுடன் படித்த நண்பன் சேகனா வீட்டில் அவனது தாய் அய்சாம்மா வாய் நிறையக் கூப்பிடும்
அன்சாரி இங்க நம்ம விட்டில சாப்பிடுன்னு சொல்லி வாஞ்சையா என்னை மடியில் அணைச்சிக்கிடும். தங்கமான மனுஷி... பெரும்பாலான தடவை ரசமும் சோறும் சுடச்சுட சாப்பிடுவேன்..அந்த ம்மா எனக்கு இன்னும் மனசுக்குள் சோறு மணக்க இருக்கிறாள்.
சரி வாங்க இப்ப நான் வந்தது பத்து வருசத்த கழிச்சிட்டுத்தான்.இங்க நெலம எல்லாமே இப்ப தல கீழ். விடுகட்டியாச்சு தங்கச்சிமார கரை சேர்த்தாச்சு...கையில் ஒரு குட்டி மகளுடன் மலேசிய மனைவியுடன் என்னுடைய மண்ணில் நான் நிக்கிறேன் அதே பழைய அன்சாரி...
வெளிய எஞ்சு போய் பார்த்தேன்.சிறுவர்களை விலக்கிவிட்டு வயதான அந்தத்தாயின் வடிவை பார்த்த உடன ஆயிரம் வாட்ஸ் கரண்ட கையக் கொண்டு தொட்ட மாதிரி ஒரு அதிர்ச்சி...கால்கள் வலுவை இழந்து என்னுடைய ஆதாரம் சேதாரமா உணர்ந்து என்னை நான் இழந்து பிடறிஎல்லாம் வேர்க்க விருவிருக்க நின்னுட்டேன்.
அய்சாம்மா..
அந்தத் தாய் அவள் தான் என உணர மனம் மறுத்தது...என்னவாச்சு... சேகனா எங்கே?
அருகிலிருந்தவர் சொன்னார் ஒரே மகன் கலியாணம் கட்டிய மருமகள், இவரள் தான் பார்த்துக் கட்டிவச்சா.மாமிக்கும் மருமகளுக்கும் சண்டை அவனுக்கு ஒத்து போகலை.வெளிய திரியுது. அவன் பொன்டாட்டி சொல்லக் கேட்டுக் கிட்டு அய்சாம்மாவை இப்படி அனாதையாய் விட்டுட்டான்.

மனுஷன் தானே நானும் மடை உடைத்து வெள்ளமாய் கண்ணிர் பீரிடஅப்படியே வெளிக்காட்ட முடியாமல் துடைத்து அந்தத் தாயை கையை பற்றினேன்.மன நலம் தவறிய அவள் தன குச்சியால் ஒரு அடி என மண்டையில்...
வலித்தது மனசு...
போறியா இல்லியா ...நாய் பெத்த மக்களே... கரவா போவானுவோ...கையில் உள்ள குச்சியால் தரையில் அடித்தாள். தெளிவற்ற கண் பார்வையால் விளங்கியும் விளங்காமலும் ஒரு பார்வை கண்ணில் தளும்பிய நிரை துடைத்துவிட்டு அழுக்கான அய்சாம்மா போப்பா போன்னு..தள்ளிவிட்டாள்.

அன்ஸ் வாட் ஹாப்பன் டியர் ...அருகில் முழுவதும் அலங்கரித்து அந்த மண்ணுக்கே தொடர்பில்லாத ஆடையுடன் என மனைவியும் மகளும் ...
நத்திங் மா...பேசிக்கொண்டே நகர்ந்தேன்.என்னுடன் வர மறுத்த மனசை விட்டுவிட்டு கால்கள் மனைவியுடன்...


நண்பர் சொல்லக் கேட்டு எழுதும் போது ஒரு நாப்பது வயசு பிள்ளை அழுதுக்கிட்டு எழுதுது...என்ன எழுத்த தட்டச்சு செய்றேன்னு என ஈரக் கண்ணைத் தாண்டி காணுவது கஷ்டமாயிருக்கு.
ம்மா மார்கள அல்லாஹ் நமக்கு எதுக்கு குடுத்தான் இப்படி...
ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன் இவனுக இடது நெஞ்சுக்குள் இடிச்சிக்கிட்டிருக்கிறது இதயமில்ல எதோ எந்திரம் தான்...

தாயின் காலடியில் இறைவன் சொர்க்கத்தை வச்சிருக்கான்...எந்தப் பெற்றோராலும் சீ என்று சொல்லப்பட்ட மகன் சொர்க்கம் புக முடியாது... இவை வேத வார்த்தையும் நபி மொழிகளும்..அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: அய்சாம்மா - மனசால் பேசுகிறேன்..முகமூடியில்லாமல்...அப்துல்லாஹ் பதிவு : 2

Post by நண்பன் on Mon 5 Sep 2011 - 11:59

வேலையில் இருக்கும் போது உங்கள் இந்த பசுமையான நினைவுகள் கட்டுரையைப் படித்தேன் கண்ணீர் சிந்தி விட்டேன் :!#: யாரும் என்னைப் பார்க்க வில்லை மனம் வருடும் கட்டுரை
மிக்க நன்றி அப்துல்லாஹ் சார்

தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் உள்ளதை அறிந்த யாரும் இது போன்ற அநியாயங்கள் செய்ய மாட்டார்கள் இன்னும் தொடருங்கள் சார்
என்றும் நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அய்சாம்மா - மனசால் பேசுகிறேன்..முகமூடியில்லாமல்...அப்துல்லாஹ் பதிவு : 2

Post by யாதுமானவள் on Mon 5 Sep 2011 - 16:29

ஊன்றிப் படித்தேன் அப்துல்லாஹ்.... கண்முன்னே நிழலாடுகிறது ஆயிஷாம்மா என்கிற ஒரு தாய்...

"கிராமங்களில் இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு. சிறுவர்கள் கையில் பொம்மைகள் இருந்தால் நலம் ஆனால் சில நேரம் மன நலம் பிறழ்ந்த மனிதர்கள் மாட்டிக் கொண்டால்" -

சிறுவயதில் அனைவரும் கடந்துவந்த நிகழ்வுகள் கண்முன் கொண்டுவருகிரீர்... உயிருள்ள வயதான ஒரு அழுக்கு பொம்மையை படுத்தும் பாடு.... சிறுவர்களுக்கு மகிழ்ச்சி ஆனால் மனநலம் சிதைந்தவருக்கோ மருட்சி...

பெரும்பாலான தடவை ரசமும் சோறும் சுடச்சுட சாப்பிடுவேன்..அந்த ம்மா எனக்கு இன்னும் மனசுக்குள் சோறு மணக்க இருக்கிறாள். -- பெற்ற பிள்ளைகள் மறந்துவிட்டனர். அவளிடமிருந்து ஒரு வாய் சோறு பெற்றவனின் நினைவு இங்கு மணக்கிறது.. அப்படியே கனக்கிறது ..

"மடை உடைத்து வெள்ளமாய் கண்ணிர் பீரிடஅப்படியே வெளிக்காட்ட முடியாமல் துடைத்து அந்தத் தாயை கையை பற்றினேன்.மன நலம் தவறிய அவள் தன குச்சியால் ஒரு அடி என மண்டையில்...
வலித்தது மனசு..." - மண்டையில் அடித்த அடிக்கு மனதில் வலி... அத்தாயினுடனான பாசத்தின் அளவுகோல்

தெளிவற்ற கண் பார்வையால் விளங்கியும் விளங்காமலும் ஒரு பார்வை கண்ணில் தளும்பிய நீரை துடைத்துவிட்டு அழுக்கான அய்சாம்மா போப்பா போன்னு..தள்ளிவிட்டாள். --- அடித்து விரட்டியபின்னும் உள்ளுள் இருந்த ஆத்ம உறவு... அவளை மீண்டுப் பார்க்கவைத்து... "போப்பா"
எனச் சொல்லித் தள்ளி விட்டது... அத்தாயின் மனத்திலும் ஏற்பட்ட வலியின் வெளிப்பாடுதான்...

அருமையான நிகழ்வு... ஆழமாகச் சொல்லி கொஞ்சநேரம் மனத்தினை சலனமற்று அமைதியாக இருக்கும்படி ஆக்கிவிட்டீர் அப்துல்லாஹ்....

வாழ்த்துக்கள் !!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: அய்சாம்மா - மனசால் பேசுகிறேன்..முகமூடியில்லாமல்...அப்துல்லாஹ் பதிவு : 2

Post by அப்துல்லாஹ் on Mon 5 Sep 2011 - 16:36

யாதுமானவள் wrote:ஊன்றிப் படித்தேன் அப்துல்லாஹ்.... கண்முன்னே நிழலாடுகிறது ஆயிஷாம்மா என்கிற ஒரு தாய்...

"கிராமங்களில் இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு. சிறுவர்கள் கையில் பொம்மைகள் இருந்தால் நலம் ஆனால் சில நேரம் மன நலம் பிறழ்ந்த மனிதர்கள் மாட்டிக் கொண்டால்" -

சிறுவயதில் அனைவரும் கடந்துவந்த நிகழ்வுகள் கண்முன் கொண்டுவருகிரீர்... உயிருள்ள வயதான ஒரு அழுக்கு பொம்மையை படுத்தும் பாடு.... சிறுவர்களுக்கு மகிழ்ச்சி ஆனால் மனநலம் சிதைந்தவருக்கோ மருட்சி...

பெரும்பாலான தடவை ரசமும் சோறும் சுடச்சுட சாப்பிடுவேன்..அந்த ம்மா எனக்கு இன்னும் மனசுக்குள் சோறு மணக்க இருக்கிறாள். -- பெற்ற பிள்ளைகள் மறந்துவிட்டனர். அவளிடமிருந்து ஒரு வாய் சோறு பெற்றவனின் நினைவு இங்கு மணக்கிறது.. அப்படியே கனக்கிறது ..

"மடை உடைத்து வெள்ளமாய் கண்ணிர் பீரிடஅப்படியே வெளிக்காட்ட முடியாமல் துடைத்து அந்தத் தாயை கையை பற்றினேன்.மன நலம் தவறிய அவள் தன குச்சியால் ஒரு அடி என மண்டையில்...
வலித்தது மனசு..." - மண்டையில் அடித்த அடிக்கு மனதில் வலி... அத்தாயினுடனான பாசத்தின் அளவுகோல்

தெளிவற்ற கண் பார்வையால் விளங்கியும் விளங்காமலும் ஒரு பார்வை கண்ணில் தளும்பிய நீரை துடைத்துவிட்டு அழுக்கான அய்சாம்மா போப்பா போன்னு..தள்ளிவிட்டாள். --- அடித்து விரட்டியபின்னும் உள்ளுள் இருந்த ஆத்ம உறவு... அவளை மீண்டுப் பார்க்கவைத்து... "போப்பா"
எனச் சொல்லித் தள்ளி விட்டது... அத்தாயின் மனத்திலும் ஏற்பட்ட வலியின் வெளிப்பாடுதான்...

...

அருமையான நிகழ்வு... ஆழமாகச் சொல்லி கொஞ்சநேரம் மனத்தினை சலனமற்று அமைதியாக இருக்கும்படி ஆக்கிவிட்டீர் அப்துல்லாஹ்....

வாழ்த்துக்கள் !!
அழுதேன் அழுகிறேன் பாசத்தை மட்டுமே மனதில் கொண்டு பற்றிப் பிடிக்க கொம்பில்லாது பரிதவிக்கும் அந்த உறவுகள் பற்றிய தங்களின் பொட்டில் அடித்தது போன்ற ஒரு பின்னுட்டம் என்னைக் கலங்கடித்தது என்பதும் உண்மை..தங்களின் பின்னுட்டதிர்க்காகவே பதிவேன் பல்லாயிரம்...
வாழ்க தமிழ்!!! வாழி என் தோழி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: அய்சாம்மா - மனசால் பேசுகிறேன்..முகமூடியில்லாமல்...அப்துல்லாஹ் பதிவு : 2

Post by Atchaya on Mon 5 Sep 2011 - 19:39

இடது நெஞ்சுக்குள் இடிச்சிக்கிட்டிருக்கிறது இதயமில்ல எதோ எந்திரம் தான்...

தாயின் காலடியில் இறைவன் சொர்க்கத்தை வச்சிருக்கான்...எந்தப் பெற்றோராலும் சீ என்று சொல்லப்பட்ட மகன் சொர்க்கம் புக முடியாது...

வலி....மனதின் வலி....இது மனதை சுட்டு விட்ட ஆறாத காயம். இதற்க்கு மறதி ஒன்று மட்டுமே மருந்து....ஆனாலும் மாற்றவோ மறுக்கவோ முடியாது மறதி நிச்சயம் வராது...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: அய்சாம்மா - மனசால் பேசுகிறேன்..முகமூடியில்லாமல்...அப்துல்லாஹ் பதிவு : 2

Post by kalainilaa on Mon 5 Sep 2011 - 20:02

அவசரகாலத்தில் ,அவசியமான தேவைகளுக்கு கிடையில்,
அம்மா ,ஓரம்கட்டபட்டாள்.அழுக்கு துணியை போல் .தேவையற்ற,
ஜடமாய் இவள் இன்று!

எங்கோ நடக்கவில்லை,நமது அருகாமில் தான்.இன்னுமுமிருக்கு,

தோழரே ,உங்கள் கட்டுரை,வாழ்க்கை கணக்கின் விடை.
முதுமையின் முகவரி !அந்த தாயின் மகனும் கடந்து தான் போகணும்.உண்மை அறிவார் ,உணர்ந்து என்ன பயன் அன்று !

இது வரை நான் படித்து வந்தது எல்லாம் ,மனத் தத்துவோம் ,
கவிதைகள் ,யோகோ தான் .இன்று தான் படிக்கிறேன்,வாழ்கையை.காரணம் கடல் கடந்து வந்து வருடங்கள் பல.இனிப்பும் ,கசப்பும்,இன்பம் துன்பம் அறியவில்லை,அறிந்துக்கொள்ள நாடவில்லையோ இல்லை இறைவன் அருளால் இல்லாமல் போனதாலோ ...

உங்கள் எழுத்துக்கள் ,உயிரோட்டமாய் ,நடமாடும் மனித நேயம் .கொண்ட கட்டுரை ,இந்த காற்றை சுவாசிக்க தாருங்கள் இன்னும் .நாங்களும் எங்களை அறிய ,வாழ் உதவும் .

பாராட்டுக்கள் .

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: அய்சாம்மா - மனசால் பேசுகிறேன்..முகமூடியில்லாமல்...அப்துல்லாஹ் பதிவு : 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum