சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

ஜோதிடம் - 4 Khan11

ஜோதிடம் - 4

Go down

ஜோதிடம் - 4 Empty ஜோதிடம் - 4

Post by Atchaya Sat 10 Sep 2011 - 5:27


பிரபல உளவியலாளர் ஜங் ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபட்ட உண்மையான ஒரு விஞ்ஞானி. அவரது குருவான சிக்மண்ட் ப்ராய்டிடம் கண்ணுக்குப் புலனாகாத அகல்டிஸம் பற்றித் தான் ஆய்வு மேற்கொள்வதை ஒரு கடிதத்தில் அவர் விளக்கினார். இதன் தொடர்பாக ஜோதிடத்தில் தான் மிகவும் ஆர்வம் கொண்டு அதை ஆராய்ந்து வருவதாகவும் எழுதினார். ஆரம்பத்தில் இதற்கு மிகவும் ஆதரவளித்த ப்ராய்டு, பின்னாட்களில் இதை ஆதரிக்கவில்லை. என்றாலும் 1875ல் பிறந்து 1961ல் மறைந்த ஜங் வாழ்நாள் முழுவதும் மாலை நேரங்களில் ஜாதகக் கணிப்பிலும் ஜோதிட ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார். எப்போதெல்லாம் ஒரு நோயாளியின் உளவியல் சிகிச்சையில் சவாலான நிலை ஏற்பட்டதோ அப்போதெல்லாம் அந்த நோயாளியின் ஜாதகத்தைக் கணித்து நோயாளியின் உளவியல் பான்மையை அறிந்து அதற்குத் தக தன் சிகிச்சையை அவர் மேற்கொண்டார்!

ஜங்கின் சிங்க்ரானிசிடி கொள்கை

ஜங் உளவியல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கண்டுபிடித்த உண்மைகள் ஏராளம்! உலகில் அதிசயமாக நடக்கும் ஏராளமான சம்பவங்களைப் பார்த்து அவர் வியந்தார். இதற்கெல்லாம் மூல காரணம் என்ன என்பதை ஆராய அவர் மனம் துடித்தது! வியக்கத்தக்க அபூர்வ சம்பவங்களை தற்செயல் ஒற்றுமை என்று அவரால் ஒதுக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் அதிசயக்கத்தக்க ஒற்றுமைகள் ஏற்படுமா என்ன என்று அவர் கேட்டார். நீண்ட உண்மை சம்பவங்களை அவர் எடுத்துரைத்தார்.

உதாரணமாக ஒருவர் 19.58 மணியில் (அதாவது இரவு 7.58க்கு) பிறந்திருக்கிறார். 1958ம் வருடம் ஒரு முறை அவர் ஒரு பஸ்ஸில் ஏறிய போது அவரது டிக்கட் எண் 1958 என்று இருந்தது! அன்று மாலை அவர் விளையாடிய விளையாட்டு ஒன்றில் அவர் 1958 பாயிண்டுகள் எடுத்திருந்தார்! மற்றவர்கள் இதைத் தற்செயல் ஒற்றுமை என்று ஒதுக்கினாலும் அவர் மனம் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டது. இப்படி நடப்பதற்கு ஏதோ ஒரு காரணம் எங்கோ இருக்கிறது என்று அவர் நம்பினார்.

எல்லோருக்கும் இப்படி ஏதோ சில அபூர்வங்கள் அன்றாடம் நடந்தாலும் அதை அவர்கள் கவனிப்பதில்லை அல்லது அவர்களுக்குக் கவனிக்கத் தெரியவில்லை. பலர் இறந்த போது அவர்களது கைக்கடிகாரமோ அல்லது சுவர் கடிகாரமோ அதே நிமிடத்தில் நிற்கிறது. இது ஏன்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கான விடையைக் காண அவர் துடித்தார். இறுதியில் சிங்க்ரானிசிடி (Synchronicity) என்ற கொள்கையை முன் வைத்தார் அவர்.

இப்படிப்பட்ட சம்பவங்களைப் பழைய காலத்தில் மாஜிக் அல்லது மாயாஜாலம் என்றனர். ஆனால் 18ம் நூற்றாண்டில் தத்துவ ஞானமோ இதை ரகசியத் தொடர்புகள் அல்லது அர்த்தமுள்ள தொடர்புகள் என்று கூறத் தலைப்பட்டது. "தத்துவ ஞானம் விளக்கும் இந்தக் கொள்கையை நான் ஆதரிக்கிறேன்" என்று அவர் வெளிப்படையாக எழுதினார்.

பிரபஞ்சத்திற்கும் நமக்கும் ஏதோ ஒரு தொடர்பு நிச்சயமாக இருக்கிறது என்பதை ஜோதிடர்கள் அறுதியிட்டு உறுதியாகக் கூறுவதை அவர் ஆதரித்தார்.

ஜங்கின் ஜோதிட ஆய்வு

இந்த சிங்க்ரானிசிடி கொள்கையை ஆராயப் புகுந்த ஜங், அர்த்தமுள்ள தொடர்புகளுக்காக (Meaningful connections) ஜோதிடத்தை ஆராய வேண்டியிருந்தது! அவர் ஒரு பிரபல விஞ்ஞானி ஆயிற்றே! அதனால் மோசடி, ஏமாற்றுதல், பிழையான புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்கள் தருதல் ஆகியவை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பான விஞ்ஞான சோதனை முறைகளை மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது!

தனது ஆய்வுக்காக 483 திருமணங்களை எடுத்துக்கொண்டார். அதாவது 966 ஜாதங்களை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டார். திருமணமானவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கும் உள்ள வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது அவர் நோக்கமாக இருந்தது. அதில் அதிசயக்கத்தக்க முடிவுகளை அவர் கண்டார். உதாரணமாக, பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சந்திரனும் ஆணின் ஜாதகத்தில் உள்ள சூரியனும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடன் இருப்பதைக் கண்டு அவர் வியந்தார்! பாரம்பரிய ஜோதிடர்களும் இந்த சந்திர சூரிய தொடர்பை ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றி வருவது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கான காரணத்தை விஞ்ஞானமும் பாரம்பரிய ஜோதிடமும் ஒரே மாதிரியாகக் கூறுவது பொருள் பொதிந்தது அல்லவா! என்றாலும் இந்த 966 ஜாதகங்கள் மீதான ஆராய்ச்சி மிகச் சிறியது என்பதை அவர் கருத்தில் கொண்டு இது விரிவாக ஆராயப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய ஜோதிடரின் விளக்கம்

சிங்க்ரானிசிடி என்பது உளவியல் அடிப்படையில் காலம், வெளி இவற்றிற்கான ஒப்புமை (Relativity of Space and Time) என்று அவர் முத்தாய்ப்பாகக் கூறினார். ஜங்கின் ஆய்வை விவரித்துப் பேசுகையில் ஆஸ்திரேலிய ஜோதிடரான பர்ஸ் மோரிஷ் "சாதாரண தற்செயல் ஒற்றுமை என்று கூற முடியாதபடி காலமானது ஒரே சமயத்தில் பல இடங்களில் தன்னை வெளிப்படுத்தும் அடிப்படைக் குணங்களை உண்மையாகவே கொண்டிருக்கிறது" என்று வியந்து கூறினார்.

ஜங்கின் திருமண ஆய்வை 'அஸ்ட்ரோ-காஸுவேஷன்' என்று பர்ஸ் மோரிஷ் பெயரிட்டு, "சந்திரனும் சூரியனும் பூமியில் உள்ள ஆண் பெண்களைப் பாதிக்கும்போது இதே அடிப்படையில் மற்றைய அனைத்தும் நிரூபிக்கப்படலாம். அனைத்து சம்பவங்களுமே எல்லா ராசிகள் மற்றும் நக்ஷத்திரங்கள் ஆகியவற்றின் பாதிப்பினால் ஏற்படுபவையே! வானத்தில் நமது சௌகரியத்திற்காக போடப்பட்ட எல்லைப் பிரிவுகளே இந்த ராசி மண்டல அமைப்புகள்" என்று கூறினார்.

ஜோதிடர் பி.வி.ராமனுக்கு ஜங் எழுதிய கடிதம்!

சமீப காலம் வரை வாழ்ந்து மறைந்த மிகப்பெரும் ஜோதிடர் பி.வி.ராமன் அவர்களுக்கு டாக்டர் ஜங் ஜோதிடம் பற்றி 1947 செப்டம்பர் 6ம் தேதி எழுதி அனுப்பிய கடிதம் பொருள் பொதிந்த ஒன்றாக இருக்கிறது. கடிதத்தைப் பார்ப்போம்:-

"நீங்கள் ஜோதிடம் பற்றிய எனது அபிப்ராயத்தை அறிய விரும்புவதால் கடந்த 30 ஆண்டுகளாக மனித மனத்தின் இந்த குறிப்பிட்ட செயலில் நான் ஆர்வமுடையவனாக இருப்பதை சொல்லிக் கொள்கிறேன்! நான் ஒரு உளவியலாளன் என்பதால் ஒருவரின் குணாதிசயங்களில் உள்ள சிக்கல்களில் ஜாதகம் எதை வெளிப்படுத்துகிறது என்பதை அறிவதில் முக்கிய ஆர்வமுடையவனாக இருக்கிறேன். மிகவும் கஷ்டமான உளவியல் சிகிச்சை ஆய்வில் இன்னொரு கோணத்தின் மூலமாக வேறொரு பார்வையைப் பெறுவதற்காக நான் வழக்கமாக ஜாதகத்தைப் பெறுகிறேன். அடிக்கடி இதர வழிகளில் அறிய முடியாத சில கருத்துக்களை ஜோதிட விவரங்கள் வெளிப்படுத்துவதை நான் சொல்ல வேண்டும். பலவிதமான இப்படிப்பட்ட அனுபவங்களால் ஜோதிடம் உளவியலாளருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒன்று என்ற கருத்தைக் கொண்டுள்ளேன். ஏனெனில் Projected என்று நாங்கள் கூறும் உளவியல் அனுபவத்தை ஜோதிடம் கொண்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில் நட்சத்திரத் தொகுதிகளில் இருப்பது போல உளவியல் உண்மைகளை நாங்கள் காண்கிறோம் என்பதுதான்!"

ஜோதிடத்தை முறையாக ஆராய்ந்த விஞ்ஞானி யாராவது உண்டா அவரது முடிவுகள் என்ன என்று கேட்கும் மனிதர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அதை ஆராய்ந்த ஜங்கைச் சுட்டிக் காட்டுவதோடு அவரது பதில் சரியான உண்மை விளக்கமாக இருப்பதைக் காண்பிப்பதும் பொருத்தம்தானே!

நன்றி நாகராஜன் & நிலாச்சாரல்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum