சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஜோதிடம் பொய்யே Regist11


Latest topics
» என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:44

» இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்
by rammalar Tue 9 Jul 2019 - 14:42

» அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
by rammalar Tue 9 Jul 2019 - 14:41

» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:33

» பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’
by rammalar Tue 9 Jul 2019 - 14:30

» போதை ஏறி புத்தி மாறி
by rammalar Tue 9 Jul 2019 - 14:29

» எனக்கு கட்-அவுட்டா? சமந்தா வியப்பு
by rammalar Tue 9 Jul 2019 - 14:27

» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
by rammalar Tue 9 Jul 2019 - 14:26

» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
by rammalar Tue 9 Jul 2019 - 14:25

» 17 வயது டைரக்டரின் விருது
by rammalar Tue 9 Jul 2019 - 14:23

» இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்
by rammalar Tue 9 Jul 2019 - 14:22

» த்ரிஷாவின் கர்ஜனை
by rammalar Tue 9 Jul 2019 - 14:20

» இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
by rammalar Tue 9 Jul 2019 - 14:19

» தோழர் வெங்கடேசன் – சினிமா
by rammalar Tue 9 Jul 2019 - 14:18

» ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா
by rammalar Tue 9 Jul 2019 - 14:16

» சேனையில் இருந்து விடை பெறுகிறேன்
by சே.குமார் Sun 7 Jul 2019 - 15:22

» பிக்பாஸ் - கிழியும் முகமூடிகள்
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சண்டை வந்தாச்சு
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சோகமழை
by சே.குமார் Sat 29 Jun 2019 - 16:25

» பிக்பாஸ் - வெடிக்கலையே...
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:56

» பிக்பாஸ் சீசன்-3 ஆரம்பம்
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:51

» ஹோலியும் ராதையும்
by rammalar Sun 23 Jun 2019 - 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Sun 23 Jun 2019 - 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Sun 23 Jun 2019 - 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Sun 23 Jun 2019 - 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

.
ஜோதிடம் பொய்யே Khan11
ஜோதிடம் பொய்யே Www10

ஜோதிடம் பொய்யே

Go down

Sticky ஜோதிடம் பொய்யே

Post by Atchaya on Sat 10 Sep 2011 - 5:29

ஜோதிடம் பொய்யே என நிரூபிக்கத் துடித்தார் ஒரு பிரெஞ்சுக்காரர். அவர் பெயர் மைக்கேல் காக்லின். பிரான்ஸில் உள்ள சார்போர்ன் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பி.ஹெச்.டி பட்டத்தைப் பெற்ற அவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் ஜோதிடம் மீது அனைவருக்குமே மோகம் உண்டு என்பதால் இஷ்டத்திற்கு ஜோதிடர்கள் அனைவரும் எல்லா மக்களையும் ஏமாற்றுகின்றனரா என்பதே அவரது சந்தேகம். அதெப்படி எல்லோருடைய பலனையும் சரியாக ஒருவரால் கூற முடியும்? அவர் யோசித்தார்.

சரி, இந்த ஜோதிடத்தை நாமே பொய் என்று நிரூபித்தால்தான் முடியும் என்ற முடிவுக்கு வந்த அவர் பிரெஞ்சுப் பத்திரிகை ஒன்றில் பெரிதாக விளம்பரம் ஒன்றைக் கொடுத்தார். யார் யாரெல்லாம் தங்கள் பிறந்த இடம் மற்றும் நேரத்தைக் குறித்து அனுப்புகிறார்களோ அவர்களுக்கு இலவசமாக ஜாதகம் கணித்து அனுப்பப்படும் என்பதே விளம்பரத்தின் சாரம். நூற்றுக்கணக்கில் பிறந்த நேரம் வந்து குவிந்தது,

கிரிமினலின் ஒரே ஜாதகம் அனைவருக்கும்!

அனைவருக்கும் தேர்ந்த கிரிமினல் ஒருவரின் ஜாதகத்தை அனுப்பி வைத்ததோடு பலன்களாக "நீங்கள் நல்லவர்", "அனைவரையும் கவர்பவர்" என்றெல்லாம் பொதுப்படையாக எழுதி அனுப்பினார். அத்தோடு ஒரு வேண்டுகோளையும் இணைத்து அனுப்பினார். ஜாதகப் பலன்கள் சரியாக இருக்கிறதா, அது குடும்ப உறுப்பினருக்கு என்றால் அவருடைய அபிப்ராயம் என்ன என்பதை விளக்கி எழுதுமாறு வேண்டுகோள் இருந்தது. பதில்களும் வந்து குவிந்தன.

94 சதவிகிதம் பேர் பலன்கள் சரியாக இருப்பதாக எழுதி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த குடும்ப உறுப்பினரின் பிறந்த நேரத்தை அனுப்பியோரில் 90 சதவிகிதம் பேர் தங்கள் குடும்பத்தினருக்குப் பலன்கள் சரியாக இருக்கிறதென்று உறுதி கூறி மகிழ்ந்தனர்!

இது போதாதா காக்லினுக்கு? "அனைவருக்கும் ஒரே கிரிமினல் ஜாதகத்தையே அனுப்பினேன். பொதுவான வாக்கியங்களையே எழுதினேன். யார் தான் தங்களை நல்லவர் இல்லை என்று கூறுவார்? யார் தான் தன்னை ஒருவரையும் வரவேற்பவர் இல்லை என்று மறுப்பார்? இதிலிருந்தே ஜோதிடம் ஒரு மோசடிக்கலை என்று தெரிகிறது" என்று மக்களுக்குத் தான் அவர்களை ஏமாற்றிய விதத்தை விளக்கிக் கூறினார்.

காக்லின் தொடர் ஜாதக ஆராய்ச்சி!

என்றாலும் ஜாதக ஆராய்ச்சியை காக்லின் நிறுத்தவே இல்லை. பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ஹாலந்து ஆகிய நாடுகளில் உள்ள அதிகாரபூர்வமான பிறப்புப் பதிவேடுகளிலிருந்து தமது ஆராய்ச்சிக்குத் தேவையான புள்ளி விவரங்களைச் சேகரித்தார். சுமார் 24000 ஜாதகங்கள் சேர்ந்த போது அதிலிருந்து அவர் நுட்பமான இரண்டரை லட்சம் ஜாதக விவரங்களை ஆய்வு செய்து முடித்து விட்டார். 1954ல் பல்கலைக் கழகப் பட்டத்தை அவர் பெற்றிருந்தார். 27 வருடம் கழித்து 1981ல் தனது தொடர்ந்த ஆராய்ச்சியின் விளைவாக சுமார் ஒரு லட்சம் ஜாதகங்களைச் சேகரித்து ஆய்வு செய்திருந்தார்.

ஜாதகங்களை விஞ்ஞானிகள், பிரபல விளையாட்டு வீரர்கள், பிரபல வீரர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், ஓவியர்கள், இசைக் கலைஞர்கள்,தொழில் அதிபர்கள் என்றெல்லாம் தொழில் முறைப்படி பிரித்து ஆராய்ந்தார்.

இவர் இப்படிப் பிரித்து விரிவாக ஆராய்ந்ததற்கு ஒரு காரணமும் உண்டு. இப்படிப் புள்ளி விவர அடிப்படையில் க்ராப்ட் என்ற பிரபல விஞ்ஞானி ஜோதிடம் ஒரு விஞ்ஞானமே என்று நிரூபிக்க ஏராளமான சான்றுகளைச் சேர்த்திருந்தார். ஆனால் பிறப்பு நேரத்தை அவர் குறிக்கவில்லை. ஆகவே அதில் நம்பகத்தன்மை இல்லை என்று எப்படிச் சாக்குச் சொல்லி அதை ஒதுக்குவது என்று காத்திருந்த விஞ்ஞானிகள் அதை ஒதுக்கினர்.

காக்லினின் பிரமிப்பு - ஜோதிடம் உண்மையே!

இப்போது காக்லின் துல்லியமாக அனைத்து விவரங்களையும் கணித்ததால் அவரால் எதையும் விஞ்ஞான சோதனை அடிப்படையில் கூற முடியும். என்ன ஆச்சரியம்! அவராலேயே நம்ப முடியவில்லை. குரு ஆதிக்கம் உள்ளவர்கள் மத குருமார்களாகவும், செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள் பிரபல விளையாட்டு வீரர்களாகவும் இருப்பதை அவரால் காண முடிந்தது. இப்படி ஜாதகங்கள் ஆச்சரியமூட்டும் ஏராளமான உண்மைகளை அந்த ஜாதகத்திற்கு உரிய மனிதர்களுக்குக் கூறுவதைக் கண்டு பிரமித்தார்.

ஜோதிடம் பொய் என நிரூபிக்க ஆராய்ச்சி நடத்தியவர் இறுதியில் தானே ஒரு பிரபல ஜோதிடராகி விட்டார்! ஜோதிட ஆர்வலர்கள் அவரை வெகுவாகப் பாராட்டினர். ஆனால் விஞ்ஞானிகள் அவர் ஜோதிடத்தைப் புகழ்ந்த போது அதை ஏற்கத் தயங்கினர்!

ரிட்டன் இன் தி ஸ்டார்ஸ்

இரண்டாம் உலக மகாயுத்தத்தைத் தொடர்ந்து ஜோதிடத்தை விஞ்ஞான அடிப்படையிலும் புள்ளி விவர அடிப்படையிலும் ஆராய ஏராளமான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் இந்த முயற்சிகள் பெரிய அளவில் இல்லாமல் மிகச் சிறிய அளவிலேயே இருந்தன. ஆனால் க்ராப்ட் மற்றும் காக்லின் ஆய்வுகள் பிரம்மாண்டமாக இருந்தன. அதிலும் காக்லின் ஆய்வு மிகத் துல்லியமாக இருந்தது.

தனது ஆய்வுகளை வைத்து அவர் 'ரிட்டன் இன் தி ஸ்டார்ஸ்' (Written in the Stars) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். உலகின் பிரபலமான ஜோதிட புத்தகமாக இது ஆனது!

1928 நவம்பர் 13ம் தேதி பிறந்த காக்லின் 1991 மே 20ம் தேதி மறைந்தார்.

இவரது 'செவ்வாய் விளைவு' ஜாதகங்கள் குறித்த ஆராய்ச்சி உலகெங்கும் பிரபலமானது. இவரது அருமை மனைவி அதை உலகில் பரப்ப முயற்சி எடுத்தார். இன்று உலகளாவிய அளவில் அனைத்து ஆராய்ச்சியாளர்களும் இவரது ஆய்வுகளை மேற்கோள் காட்டுகின்றனர். இவர் எழுதிய புத்தககங்களைப் படித்து ஜோதிடம் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்கின்றனர்!

நன்றி நாகராஜன் & நிலாச்சாரல்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: ஜோதிடம் பொய்யே

Post by kalainilaa on Sat 10 Sep 2011 - 5:40

ஜோதிடத்தின் ஒருப்பக்க்மும் ,அதை ஏற்க நினைத்தவர்களின் ,நிலை .அவர்யவர் நம்பிக்கை .

பகிர்வுக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: ஜோதிடம் பொய்யே

Post by Atchaya on Sat 10 Sep 2011 - 6:22

முதன் முதலாய் பின்னூட்டமிட்ட உங்களுக்கு :];: :];:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: ஜோதிடம் பொய்யே

Post by நண்பன் on Sat 10 Sep 2011 - 8:52

kalainilaa wrote:ஜோதிடத்தின் ஒருப்பக்க்மும் ,அதை ஏற்க நினைத்தவர்களின் ,நிலை .அவர்யவர் நம்பிக்கை .

பகிர்வுக்கு நன்றி .
ஜோதிடம் பொய்யே 111433 ஜோதிடம் பொய்யே 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜோதிடம் பொய்யே

Post by lafeer on Sat 10 Sep 2011 - 10:48

நம்பிக்கைதான் வாழ்க்கை என்று சொல்வார்கள் ஆனால் ஜோதிடம் எல்லாம் நம்பக்கூடாது
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: ஜோதிடம் பொய்யே

Post by ஹனி on Sat 10 Sep 2011 - 13:45

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. அதைப்பார்ப்பதில் ஒரு இன்ரஸ்ட்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: ஜோதிடம் பொய்யே

Post by நண்பன் on Sat 10 Sep 2011 - 13:47

ஹனி wrote:ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. அதைப்பார்ப்பதில் ஒரு இன்ரஸ்ட்.
அப்படியா சொல்லவே இல்லை @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜோதிடம் பொய்யே

Post by ஹனி on Sat 10 Sep 2011 - 14:03

நண்பன் wrote:
ஹனி wrote:ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. அதைப்பார்ப்பதில் ஒரு இன்ரஸ்ட்.
அப்படியா சொல்லவே இல்லை @.

அதுதான் இப்ப சொல்லிட்டம் இல்ல.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: ஜோதிடம் பொய்யே

Post by நண்பன் on Sat 10 Sep 2011 - 14:05

ஹனி wrote:
நண்பன் wrote:
ஹனி wrote:ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. அதைப்பார்ப்பதில் ஒரு இன்ரஸ்ட்.
அப்படியா சொல்லவே இல்லை @.

அதுதான் இப்ப சொல்லிட்டம் இல்ல.
:cheers: :cheers: :cheers: :bball:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜோதிடம் பொய்யே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum