சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


 மாயக்கலை ஜோதிடம்! Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
 மாயக்கலை ஜோதிடம்! Khan11
 மாயக்கலை ஜோதிடம்! Www10

மாயக்கலை ஜோதிடம்!

Go down

Sticky மாயக்கலை ஜோதிடம்!

Post by Atchaya on Sat 10 Sep 2011 - 5:32

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட மாயக்கலை ஜோதிடம்!

பகுத்தறிவாளர்களும் விஞ்ஞானிகளும் ஜோதிடத்தை மாயக்கலை என்று கருதியதால் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அது தடை செய்யப்பட்டிருந்தது. பின்பு அந்த நாடுகளில் அந்தத் தடை மக்களாலேயே உடைக்கப்பட்டு மிகவும் மதிக்கப்பட்ட கலையாக இப்போது இருக்கிறது.

பிரபல அமெரிக்க பெண் ஜோதிடர் இவாஞ்ஜலின் ஆடம்ஸ்

இதையொட்டி ஒரு அபூர்வமான சம்பவத்தைப் பார்ப்போம். அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியையே ‘ஜோதிடம் ஒரு விஞ்ஞானமே' என்று ஒப்புக் கொள்ளச் செய்தார் ஒரு ஜோதிடப் பெண்மணி! அவர் பெயர் இவாஞ்ஜலின் ஆடம்ஸ் (பிறப்பு 8-2-1868; மறைவு-1932) திருமணமானபின் அவரது பெயர் ஜார்ஜ் இ.ஜோர்டன் என்று ஆனது. அவர் ஒரு பிரபலமான குடும்பத்தையும் வம்சாவளியையும் சார்ந்தவர். அமெரிக்காவின் ஆறாவது ஜனாதிபதியான ஜான் க்வின்ஸி ஆடம்ஸின் பாரம்பரிய வம்சாவளியில் வந்தவர் அவர். எதையும் துணிச்சலாகப் பேசக்கூடிய தைரியம் வாய்ந்த பெண்மணியான அவர், ஜோதிடத்தை 'உண்மைக்கெல்லாம் பெரிய உண்மை' என்று கூறி அதைப் பரப்புவதே தனது வேலை என்று கூறவும் செய்தார்! அவரது எழுச்சி திடீரென்று பிரகாசமான நட்சத்திரம் வானில் தோன்றியது போல இருந்தது. நாளுக்கு நாள் அவரது புகழ் கூடிக் கொண்டே போனது! "எனது ஜாதகத்தில் 12ம் இடத்தில் செவ்வாயும் சூரியனும் சேர்ந்து இருப்பதால் எனது எதிரிகளை ஜெயித்துக்கொண்டே இருப்பேன்" என்று உரக்கக் கூவி வந்தார் அவர்!

நியூயார்க்கில் நிகழ்ந்த அதிசய நிகழ்வு!

நியூயார்க் நகரில் அவர் வந்து இறங்கிய அன்று நடந்த சம்பவமே அவரைப் புகழின் உச்சிக்கு ஏற்றி விட்டது. நகருக்குள் நுழைந்த அவர் பிஃப்த் அவென்யூவில் இருந்த வின்ட்சார் ஹோட்டலுக்குச் சென்று ஒரு அறையை எடுத்துத் தங்கினார். அந்த ஹோட்டலின் முதலாளியான வாரன் எஃப் லேலண்ட் என்பவரின் ஜாதகத்திற்குப் பலனைச் சொல்ல ஆரம்பித்தார். அவரது ஜாதகத்தின் மூலம் அவருக்கு உடனடியாக ஒரு பெரும் ஆபத்து வரவிருப்பதையும் ஒரு பெரும் வீழ்ச்சி அவரை எதிர்நோக்கி இருப்பதையும் தான் கணிப்பதாக இவாஞ்ஜலின் கூறினார். இவாஞ்ஜலின் ஸ்டாக் சம்பந்தமாக ஆலோசனை தருவது வழக்கம்! ஆகவே லேலண்ட் உடனடியாக நினைத்தது அவரது ஸ்டாக்குகளைப் பற்றித்தான். மறுநாள் ஸ்டாக் மார்க்கெட்டிற்கு விடுமுறை தினம். ஆகவே மறுநாள் இடைவேளைக்கு முன்னதாக ஸ்டாக்குகள் விழுந்து விடாது என்று அவர் நம்பினார். ஆனால் ஸ்டாக்குகளுக்கு ஒன்றும் ஏற்படவில்லை. அவரது விண்ட்சார் ஹோட்டலே தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விட்டது. தன் கையில் கிடைத்த ஒன்றிரண்டு பொருட்களுடன் இவாஞ்ஜலின் வெளியேற நேரிட்டது. ஆனால் அவர் வெளியேறுவதற்கு முன் நியூயார்க் நகரில் ஆரம்பித்து அமெரிக்கா முழுவதும் அவர் புகழ் பரவி விட்டது!

நீதிமன்றத்தில் ஜோதிடத்தின் பெருமையை நிலை நாட்டியவர்!

என்றாலும் கூட 1914ம் ஆண்டு ஜோதிட பலன் கூறியதற்காக அன்றைய சட்டத்தின் படி அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அபராதத்தைக் கட்டி விட்டுத் தப்பிக்க அவர் விரும்பவில்லை. 'நீதிமன்ற விசாரணைக்கு வருகிறேன்' என்று துணிச்சலாகக் கூறி விட்டார்.

வழக்கு நீதிமன்றத்தில் வந்தது. ஏராளமான புத்தகங்களுடன் கூண்டில் ஏறிய இவாஞ்ஜலின் ஜோதிடம் ஒரு உண்மையான கலைதான் என்பதை ஆணித்தரமான வாதங்களுடன் எடுத்துக் கூறி நிலைநாட்டினார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நீதிபதியின் முன்னிலையிலேயே அவர் இதுவரை பார்த்திராத நபரின் பிறந்த தேதியை வைத்து ஜாதகத்தைக் கணித்து பலன்களைக் கூற ஆரம்பித்தார்.

நீதிபதி அசந்து போனார். ஏனெனில் பலன் கூற இவாஞ்ஜலின் கணித்த ஜாதகம் நீதிபதியின் மகனுடையது! நீதிபதி தனது தீர்ப்பில், "இவாஞ்ஜலின் ஜோதிடத்தை உன்னதமான ஒரு விஞ்ஞான நிலைக்கு ஏற்றி விட்டார்" என்று புகழாரம் சூட்டினார்!

இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் ஜோதிடக் கலைக்கு ஒரு பெரும் மதிப்பு ஏற்பட்டது, எல்லா ஜோதிடர்களும் இவாஞ்ஜலினைக் கொண்டாடினர். இவாஞ்ஜலின் ஆடம்ஸின் ரேடியோ உரைகளைக் கேட்கவென்றே ஒரு பெரும் கூட்டம் அமெரிக்காவில் உருவாகி இருந்தது. இவர் பல புகழ் பெற்ற ஜோதிட நூல்களையும் 'தி பௌல் ஆஃப் ஹெவன்' (The Bowl of heaven) என்ற தனது சுயசரிதையையும் எழுதியுள்ளார்.

1959ம் ஆண்டு நவம்பரில் கூட வாஷிங்டன் டி.சி. நகரில் காதரின் க்யூ. ஸ்பென்ஸர் என்ற ஜோதிடர் மீது ஜோதிடம் கூறியதற்காக வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அவரும் விடுதலை ஆனார்.

நன்றி : ஜோதிடம் , நாகராஜன், & நிலாச்சாரல்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum