சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சங்க இலக்கியத்தில் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சங்க இலக்கியத்தில் Khan11
சங்க இலக்கியத்தில் Www10

சங்க இலக்கியத்தில்

Go down

Sticky சங்க இலக்கியத்தில்

Post by Atchaya on Sat 10 Sep 2011 - 5:35


சங்க இலக்கியங்களில் சுமார் 154க்கும் மேற்பட்ட குறிப்புகள் ஜோதிடத்தைப் பற்றி உள்ளன! அகத்தியரில் ஆரம்பித்து பல சான்றோரால் இயற்றப்பட்ட ஆயிரக்கணக்கான அற்புதமான ஜோதிட நூல்கள் தமிழில் உள்ளன.

நாள்தோறும் நல்ல காரியங்களைச் செய்வதற்கு நாளும் ஓரையும் பார்த்தவர்கள் பழந்தமிழர்கள். நாள் என்ற தமிழ் வார்த்தையே நட்சத்திரத்தைக் குறிக்கும் என்பது ஒரு சுவையான செய்தி! களவொழுக்கத்தில் தலைவனுக்கு தீய ராசி, தீய நாள் இல்லை என்பதை "மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை" என்று தொல்காப்பியம் (1081) கூறுகிறது.

பழந்தமிழில் ஜோதிடம் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை. மாறாகக் கணியம் என்ற சொல் பல இடங்களிலும் பயிலப்படுகிறது. உலகமே இன்று போற்றி வியக்கும் தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் ஒரு சிறந்த ஜோதிடர்; வானநூல் விற்பன்னர். அதனால்தான் அவர் "யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற அடிப்படை ஜோதிட உண்மையைக் (அவனவன் கர்மமே அவனுக்கு நன்மையையும் தீமையையும் தருகிறது!) கூறினார்,

நற்றிணை (373.6), காரரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கை என்றும் அகநானூறு (151.15) "கணிவாய்ப் பல்லிய காடிறந்தோரே" என்றும் கூறுகின்ற வரிகளால் கணி என்ற வார்த்தை பயிலப்படுவதைப் பார்க்கலாம். கணிப்பது ஜோதிடம்; அதைக் கணிப்பவர் கணி அதாவது ஜோதிடர்.

மேலே கண்ட வரியில் வரும் கணிவாய் வேங்கை என்றால் என்ன? வேங்கை பௌர்ணமியன்றுதான் பூக்கும்! அந்த தினத்தில் சந்திரன் ரோஹிணி நட்சத்திரத்தைச் சேரும். ஆகவே அது காதலர் அல்லது புதுமணம் செய்யப் புகும் யுவதியும் வாலிபனும் கடிமணம் செய்து கொள்வதற்கு உகந்த நாளாகத் தமிழரால் கொள்ளப்பட்டது. கணியர் போல (ஜோதிடர் போல) நல்ல நாள் இதுவெனப் பூத்துக் காட்டுவதால் அது கணிவாய் வேங்கை எனச் சொல்லப்பட்டது! பல்லி சொல்வதைக் கேட்டு நம்பும் பழக்கமும் பழந்தமிழரிடம் பரவலாக இருந்தது! தன்னைப் பிரிந்து இருந்த தலைவன் வருவான் என்பதை பல்லி சொல் கேட்டுத் தலைவி உணர்ந்து கொள்வாள்! இப்படிக் கணித்துச் சொல்வதால் அதுவும் 'கணிவாய்ப் பல்லி' எனப்பட்டது.

அசுவனி முதலாக ரேவதி ஈறாக பெயர் சூட்டப்பட்ட 27 நட்சத்திரங்கள் நாண்மீன்கள் என்றும் பெயர் சூட்டப்பெறாத இதர நட்சத்திரங்கள் விண்மீன்கள் என்றும் தமிழ் இலக்கியத்தில் குறிக்கப்படுகின்றன.

அருந்ததியின் சிறப்பு

அருந்ததியை புது மணம் புரிந்தோர் பார்ப்பது சம்பிரதாயமாக இருந்தது. அருந்ததியை சங்க இலக்கியம் வடமீன், செம்மீன், மீன், சிறுமீன், சாலினி, வானத்து அணங்கு எனப் பலவாறாகச் சுட்டிக் காட்டுகிறது! சில சங்க வரிகளைக் கீழே காணலாம்:

வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலி 221)

வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை (புறம் 228-9)

விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள் நின் தொன்னகர்ச் செல்வி (பதிற்றுப்பத்து 3127-28)

கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை மாதரும்

கார்த்திகை நட்சத்திரம் அறுமீன் என்றும் ஆரல் என்றும் குறிப்பிடப்படுகிறது!

அறுமீன் பயந்த (நற்றிணை 202-9)
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் (அகநானூறு 141-8)
என்பதோடு அறுவர் பயந்த ஆலமர் செல்வ (முருகு 255) என்பதன் மூலம் கார்த்திகை மகளிர் அறுவரும் சுட்டிக் காட்டப்படுவதையும் கண்டு மகிழலாம்!

சுக்கிரனும் மழையும்

சுக்கிரன் மழை தரும் கிரகமாக தமிழர் தமது ஜோதிட-விஞ்ஞான அறிவால் கண்டுபிடித்திருந்தனர்! அது தெற்குப் பக்கம் ஏகினால் மழை பெய்யாது என்பதை புறநானூறு "இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்துசுவர் பூட்ட" என்று அற்புதமாகக் குறிப்பிடுகிறது! இதே கருத்தை புறநானூற்றின் மேலும் ஐந்து பாடல்கள் வலியுறுத்துகின்றன! பாடல்கள்172, 383, 384, 386, 388 ஐப் படித்துணரலாம்.)


நன்றி : ஸ்ரீஜோஸியம் , நாகராஜன் & நிலாச்சாரல்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum