சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்… Regist11

Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்… Khan11
ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்… Www10

ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Go down

Sticky ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by சர்ஹூன் on Tue 13 Sep 2011 - 11:45

ஊருக்கு போயிருந்தேன்… சென்ற முறை போன போது இருந்த டென்சன் , அவசரம், இன்ன பிற வகையறாக்கள் இந்த முறை இல்லாததால், அந்த ஒரு மாத விடுமுறையினை விட இந்த 2 வார விடுமுறை மிக திருப்தியுடனும் மகிழ்ச்சியாகவும் முடிந்தது. நிறைய பொழுதுகளை குடும்பத்துடன் கழிக்க முடிந்தது. உம்மாவுடன் நிறைய நேரம் கதைக்க முடிந்தது. இப்படி பல “முடிந்தது”க்கள்.

ஊர்க்கதைகள்தான் நிறைய சொல்ல வேண்டி இருக்கின்றது. குளத்து மீன்கள் என்றால் நிறைய ஆசை. சப்புக்கொட்டி சாப்பிடுவேன். இம்முறை ஊரில் இருந்த போது, களப்பிற்கு சென்றிருந்தேன். சந்தையில் வாங்குவதை விட அங்கு உடனே பிடித்த மீன்கள் வாங்கலாம் என்ற காரணத்தையும் தாண்டி கொஞ்சம் லாபமாக வாங்கலாம் என்பதே முன்நின்றது. பெரிய மணலை மீன் ( உங்க ஊர்ல என்ன சொல்லுவீங்களோ தெரியாது ) தொடக்கம், சிறிய சிறிய மன்னா மீன் வரை கிடைத்தது. நான் மீன் வாங்கிய மீன் பிடிகாரர், கட்டாரிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கின்றாராம். உழைப்பவர்கள் ஒரு போதும் ஓய்ந்திருக்க மாட்டார்கள் இல்லையா?

ஒன்றாக படித்த நண்பர்கள் – இப்போது வெகு தூரம் போய் விட்டது போல ஒரு பிரமை இன்னும் என்னை பீடித்த படியே இருக்கின்றது. அது உண்மைதான் என மனமும் நம்பத்தொடங்கிவிட்டது போலவே உணர்கின்றேன். ஒன்றாக திரிந்த நண்பர்களிடம், ஐந்தாறு வருடங்களின் பின் நமது நண்பனை காண்கின்றோம் எங்கின்ற ஒரு மலர்ச்சி இல்லை. ஏதோ ஒப்புக்கு ஒரு முகமனுடன், வேறு ஏதோ சிந்தனை ஆட் கொண்டவாறு விலகி விடுகின்றனர். குடும்பஸ்தர்களான அவர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கலாம். நாளை நானும் இப்படி மாறிவிடுவேனோ என எணிக்கொண்டேன்.

பெருநாளைக்கு பட்டாசு வெடிப்பது ஒரு அலாதி அனுபவம். சுமார் 4 வருடங்களின் பின் இந்த முறை கிடைத்தது. தம்பிமாருடன் சேர்ந்து வெடி வெடித்தது. எத்தனை மகிழ்ச்சி. ஆனாலும் ஒரு ஜாக்கிரதை குணம் திடீரென ஒட்டிக்கொண்டதைப் போல உணர்ந்தேன். முன்பெல்லாம் கையில் ராக்கெட் வாணம் வைத்து அனாயசமாக விட்ட எனக்கு, இப்போது அதை செய்வதற்கான துணிவு கடைசி வரையிலும் வரவே இல்லை. குழாய் தேடி, வீட்டு மொட்டை மாடியில் நின்று வெடித்தோம். வயதானால், முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாகிவிடுவோமோ என்னவோ!!!எங்களூரின் பெருநாள் கொண்டாட்டங்கள் முன்பிருந்ததற்கும் இப்போதுள்ளதற்கும் நிறைய வித்தியாசங்கள். தற்போது ஏதோ ஒரு செயற்கைத்தனம் ஒட்டிக் கொண்டது போல ஒரு தோற்றம்.

பெருநாள் அன்று இரவு , என் தங்கை பற்பசை ட்யூப்பை வைத்து எதுவோ செய்து கொண்டிருந்தாள்.. என்ன என்றதற்கு, மருதாணி என பதில் வந்தது. பழைய நினைவுகள் என்னுள் பரவத் தொடங்கின.
முன்பெல்லாம் நாளை பெருநாள் என்றால், ஆளுக்கு ஒரு பொலித்தீன் பையுடன் கிளம்பிவிடுவோம், - மருதாணி மரம் தேடி. அதைப்பறித்து வந்து, அரைத்து வாழை இலையில் குண்டு குண்டாக உருட்டி அம்மாக்கள் தயாராக்கி வைக்க, இரவுச்சாப்பாடு முடித்துவிட்டு தொடங்கினால், அம்மா அழகழாக கைகளில் மருதாணி உருண்டைகளை அழுத்தி இடுவார். காலை வரை அவை உதிராமல் இருக்க, கைகளை பொலுத்தீன் பைகளால் கட்டிக்கொண்டு படுப்போம், பெருநாள் காலையில், மருதாணி உதிர்ந்து கைகள் நிறைய முழுச் செம்மஞ்சள் பொட்டுக்களை காட்டிச் சிரித்து நிற்கும்.
இதில், யாருடைய கை அதிகம் சிவத்திருக்கின்றது என்ற சண்டைக்கும் பஞ்சம் இருக்காது.பின்னர் கை கழுவி, பெருநாள் பலகாரம் உண்ணும் போது மருதாணி மணம் + பலகார வாசனை கலந்து வரும் ஒரு சுகந்தம்!!! அப்பா!! அதுதான் பெருநாள்..

நிறைய நீங்கள் இழந்துவிட்டீர்கள் தம்பி தங்கைகளே!!

இனி என்ன அடுத்த விடுமுறைக்கு செல்லும் வரை இதையே அசை போட்டுக் கொண்டு காலம் தள்ள வேண்டியதுதான் ……………

சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by யாதுமானவள் on Tue 13 Sep 2011 - 12:11

சாதாரண நிகழ்ச்சி... சுவையாக சுறுசுறுப்புடன் படிக்கும்படி சிறுவயது நியாபகங்களையும் பெருவாரியான இழந்துவிட்ட சந்தோஷங்களையும் சிறப்பாகச் சொல்லி இருக்கின்றீர். பல "முடிந்தது" களில் "தற்போது ஏதோ ஒரு செயற்கைத்தனம் ஒட்டிக் கொண்டது போல ஒரு தோற்றம்" என்று இக்கால சிறுவர் சமூகம் இழந்தவிட்டதாய் தாங்கள் உணர்த்தும் உங்கள் ஏக்கத்தையும் எங்களால் உணர "முடிந்தது".

வாழ்த்துக்கள் சரஹுன்! தொடர்க உங்கள் அனுபவங்களை !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 13 Sep 2011 - 12:24

சுவாரஷ்யமாக ரசித்தெழுதினீர்கள் என்று சொல்வதைவிட அனுபவித்தெழுதியுள்ளீர்கள் ஆசை எடுக்கிறது அதில் கலந்து கொள்ள மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் ரசிப்புத் தன்மை

தொடருங்கள் தோழா
நானும் நாட்களை எண்ணுகிறேன் சென்றிடத்தான்

ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்… Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by நண்பன் on Tue 13 Sep 2011 - 13:19

மிகவும் அருமையாக இருந்தது நானும் ரசித்துப் படித்தேன் ஒரு சிறு கதை படிப்பது போன்ற அனுபவம் இது போன்ற நிறைய இன்பங்களை இழந்து கொண்டிருக்கிறோம் சர்ஹுன் உங்கள் அனுபவம் எங்களை ஆர்வமூட்டி விட்டது நாங்களும் செல்கிறோம் மிக விரைவில் நன்றி இன்னும் தொடருங்கள்
உங்கள் அனுபவங்களை
நன்றியுடன்
நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by அப்துல்லாஹ் on Tue 13 Sep 2011 - 16:10

என்னஒரு நடை
வார்த்தைகள் உணர்ச்சியை உடுத்திக்கொண்டு ...சொல்ல வரும் செய்திகளும் சுவையாக மணிப் பிரவாளமாக வந்து விழுகிறது. இன்னும் சொல்லக் கேட்க மாட்டோமா....
சரஹுன் பகிர்ந்து கொள்ளுங்கள் கேட்கவும் உங்களின் மகிழ்ச்சியுடன் நாங்களும் கலக்கவும் ஆசை கொள்கிறோம் சகோதரா ...
பகுதி ௨ போட்டு தொடர்ந்து தாருங்கள்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by நண்பன் on Tue 13 Sep 2011 - 16:20

அப்துல்லாஹ் wrote:என்னஒரு நடை
வார்த்தைகள் உணர்ச்சியை உடுத்திக்கொண்டு ...சொல்ல வரும் செய்திகளும் சுவையாக மணிப் பிரவாளமாக வந்து விழுகிறது. இன்னும் சொல்லக் கேட்க மாட்டோமா....
சரஹுன் பகிர்ந்து கொள்ளுங்கள் கேட்கவும் உங்களின் மகிழ்ச்சியுடன் நாங்களும் கலக்கவும் ஆசை கொள்கிறோம் சகோதரா ...
பகுதி ௨ போட்டு தொடர்ந்து தாருங்கள்...
ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்… 111433 ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்… 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by gud boy on Tue 13 Sep 2011 - 19:51

உண்மை தான்....நம்முடைய விடுமுறையும் இப்பொது நான்கு சுவற்றுக்குள்ளெ முடிந்து விடுகிறது..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by சர்ஹூன் on Wed 14 Sep 2011 - 16:29

ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள் :!+: :{:*):
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by நண்பன் on Wed 14 Sep 2011 - 17:03

ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்… TblSambavamnews_54361689091

இதனால் சர்ஹுன் அவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் சேனை உறவுகளின் உள்ளத்தில் இவர் நீங்காத இடம் பிடித்ததால் இவருடய கட்டுரைகள் கதைகள் நகைச்சுவைத் துணுக்குகள் என தொடர்ந்து சேனையில் பதியுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்
இப்படிக்கு சேனை
உறவுகள்..........
படுகிறார் படுகிறார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by சர்ஹூன் on Wed 14 Sep 2011 - 17:12

நண்பன் wrote:ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்… TblSambavamnews_54361689091

இதனால் சர்ஹுன் அவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் சேனை உறவுகளின் உள்ளத்தில் இவர் நீங்காத இடம் பிடித்ததால் இவருடய கட்டுரைகள் கதைகள் நகைச்சுவைத் துணுக்குகள் என தொடர்ந்து சேனையில் பதியுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்
இப்படிக்கு சேனை
உறவுகள்..........
படுகிறார் படுகிறார்

ஐயோ எனக்கு இப்படி ஒரு வரவேற்பா?? ரொம்ப கூச்சமா இருக்கு.. :];: :];: :”@: :”@:

இன்ஷா அல்லாஹ்.. என்னால் முடிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வேன்..

அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பர்களே! @. @. @.
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 14 Sep 2011 - 17:15

அவரது இணைவிலேயே அவரது ஆர்வமும் கலகலப்பும் எம்மைக் கவர்ந்தன இடையில் காணாமல் போனதன் ரகசியம் அரிய படைப்பாகத் தந்து கவர்ந்துவிட்டார்
என்றும் தொடர்வார் என்பதில் ஐயமில்லை மகிழ்வுடன் கூடவர நாங்கள்

ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்… Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by kalainilaa on Wed 14 Sep 2011 - 17:17

முன்பெல்லாம் நாளை பெருநாள் என்றால், ஆளுக்கு ஒரு பொலித்தீன் பையுடன் கிளம்பிவிடுவோம், - மருதாணி மரம் தேடி. அதைப்பறித்து வந்து, அரைத்து வாழை இலையில் குண்டு குண்டாக உருட்டி அம்மாக்கள் தயாராக்கி வைக்க, இரவுச்சாப்பாடு முடித்துவிட்டு தொடங்கினால், அம்மா அழகழாக கைகளில் மருதாணி உருண்டைகளை அழுத்தி இடுவார். காலை வரை அவை உதிராமல் இருக்க, கைகளை பொலுத்தீன் பைகளால் கட்டிக்கொண்டு படுப்போம், பெருநாள் காலையில், மருதாணி உதிர்ந்து கைகள் நிறைய முழுச் செம்மஞ்சள் பொட்டுக்களை காட்டிச் சிரித்து நிற்கும்.
இதில், யாருடைய கை அதிகம் சிவத்திருக்கின்றது என்ற சண்டைக்கும் பஞ்சம் இருக்காது.பின்னர் கை கழுவி, பெருநாள் பலகாரம் உண்ணும் போது மருதாணி மணம் + பலகார வாசனை
கலந்து வரும் ஒரு சுகந்தம்!!! அப்பா!! அதுதான் பெருநாள்..

அருமையான பகிர்வு .உணர்வுகளை தட்டிவிட்டுவீர்கள் தோழரே.
பழைய காலத்தை ,நோக்கி பயணம் போகிறது.

நன்றி !

நிறைய நீங்கள் இழந்துவிட்டீர்கள் தம்பி தங்கைகளே!!
இவர்களின் பார்வையில் இழந்தது,நமது வாழ்க்கைதான் தோழரே!

தம்பி தங்கை,
சொல்வது ,வாழ்கையை வாழத்தெரியாமல் வாழ்வதாக நாம் !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by அப்துல்லாஹ் on Wed 14 Sep 2011 - 18:11

சர்ஹூன் wrote:
நண்பன் wrote:ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்… TblSambavamnews_54361689091

இதனால் சர்ஹுன் அவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் சேனை உறவுகளின் உள்ளத்தில் இவர் நீங்காத இடம் பிடித்ததால் இவருடய கட்டுரைகள் கதைகள் நகைச்சுவைத் துணுக்குகள் என தொடர்ந்து சேனையில் பதியுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்
இப்படிக்கு சேனை
உறவுகள்..........
படுகிறார் படுகிறார்

ஐயோ எனக்கு இப்படி ஒரு வரவேற்பா?? ரொம்ப கூச்சமா இருக்கு.. :];: :];: :”@: :”@:

இன்ஷா அல்லாஹ்.. என்னால் முடிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வேன்..

அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பர்களே! @. @. @.

நானும் அந்த மகிழ்ச்சிக்கடலில் நிந்தினேன்... சர்ஹுன் நிறைய தாருங்கள் @. @. @. @.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by Atchaya on Wed 14 Sep 2011 - 18:26

நிறைய நீங்கள் இழந்துவிட்டீர்கள் தம்பி தங்கைகளே!!

ஆ மா ம் உண்மை தான் ரொம்ப நாளா நீங்க வரது இல்லே. உங்க இந்த பதிவே இப்புடி இருக்கே அப்ப நாங்க நிறையவே இழந்து ........
:!#: :!#:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by kalainilaa on Wed 14 Sep 2011 - 18:28

அப்துல்லாஹ் wrote:
சர்ஹூன் wrote:
நண்பன் wrote:ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்… TblSambavamnews_54361689091

இதனால் சர்ஹுன் அவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் சேனை உறவுகளின் உள்ளத்தில் இவர் நீங்காத இடம் பிடித்ததால் இவருடய கட்டுரைகள் கதைகள் நகைச்சுவைத் துணுக்குகள் என தொடர்ந்து சேனையில் பதியுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்
இப்படிக்கு சேனை
உறவுகள்..........
படுகிறார் படுகிறார்

ஐயோ எனக்கு இப்படி ஒரு வரவேற்பா?? ரொம்ப கூச்சமா இருக்கு.. :];: :];: :”@: :”@:

இன்ஷா அல்லாஹ்.. என்னால் முடிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வேன்..

அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பர்களே! @. @. @.

நானும் அந்த மகிழ்ச்சிக்கடலில் நிந்தினேன்... சர்ஹுன் நிறைய தாருங்கள் @. @. @. @.

தோழரே !சேனை எப்போதும் உங்களை வரவேற்கும்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by நண்பன் on Wed 14 Sep 2011 - 18:38

சர்ஹூன் wrote:
நண்பன் wrote:ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்… TblSambavamnews_54361689091

இதனால் சர்ஹுன் அவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் சேனை உறவுகளின் உள்ளத்தில் இவர் நீங்காத இடம் பிடித்ததால் இவருடய கட்டுரைகள் கதைகள் நகைச்சுவைத் துணுக்குகள் என தொடர்ந்து சேனையில் பதியுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்
இப்படிக்கு சேனை
உறவுகள்..........
படுகிறார் படுகிறார்

ஐயோ எனக்கு இப்படி ஒரு வரவேற்பா?? ரொம்ப கூச்சமா இருக்கு.. :];: :];: :”@: :”@:

இன்ஷா அல்லாஹ்.. என்னால் முடிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வேன்..

அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பர்களே! @. @. @.
இன்ஷா அல்லாஹ் உங்கள் உடலும் உள்ளமும் என்றும் நலமுடன் இருக்க இறைவன் துணை தொடர்ந்து சேனையுடன் இணைந்திருங்கள்
:!@!: :];: :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by நண்பன் on Wed 14 Sep 2011 - 18:39

Atchaya wrote:நிறைய நீங்கள் இழந்துவிட்டீர்கள் தம்பி தங்கைகளே!!

ஆ மா ம் உண்மை தான் ரொம்ப நாளா நீங்க வரது இல்லே. உங்க இந்த பதிவே இப்புடி இருக்கே அப்ப நாங்க நிறையவே இழந்து ........
:!#: :!#:
@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by பர்ஹாத் பாறூக் on Wed 14 Sep 2011 - 18:52

ஊரில் இருந்து கொண்டுவந்த ஒரு மூட்டை மகிழ்ச்சியில் ஒரு பங்கை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by kalainilaa on Wed 14 Sep 2011 - 18:55

பர்ஹாத் பாறூக் wrote:ஊரில் இருந்து கொண்டுவந்த ஒரு மூட்டை மகிழ்ச்சியில் ஒரு பங்கை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி

மூட்டை மகிழ்ச்சி மட்டுமே !மூட்டை பூச்சில்லை :”: :”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by சர்ஹூன் on Thu 15 Sep 2011 - 12:02

Atchaya wrote:நிறைய நீங்கள் இழந்துவிட்டீர்கள் தம்பி தங்கைகளே!!

ஆ மா ம் உண்மை தான் ரொம்ப நாளா நீங்க வரது இல்லே. உங்க இந்த பதிவே இப்புடி இருக்கே அப்ப நாங்க நிறையவே இழந்து ........
:!#: :!#:

ஐயையோ ஒவர் அழுகையாவில்ல இருக்கு.. கவலை வேண்டாம் நண்பரே! இனி வரும் காலங்களில் இணைந்திருப்போம்.. @. :!+:
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by நண்பன் on Thu 15 Sep 2011 - 12:04

kalainilaa wrote:
பர்ஹாத் பாறூக் wrote:ஊரில் இருந்து கொண்டுவந்த ஒரு மூட்டை மகிழ்ச்சியில் ஒரு பங்கை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி

மூட்டை மகிழ்ச்சி மட்டுமே !மூட்டை பூச்சில்லை :”: :”: :”:
அதை இங்குருந்துதான் எடுத்துச்செல்ல வேண்டும் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by சர்ஹூன் on Thu 15 Sep 2011 - 12:05

நண்பன் wrote:
kalainilaa wrote:
பர்ஹாத் பாறூக் wrote:ஊரில் இருந்து கொண்டுவந்த ஒரு மூட்டை மகிழ்ச்சியில் ஒரு பங்கை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி

மூட்டை மகிழ்ச்சி மட்டுமே !மூட்டை பூச்சில்லை :”: :”: :”:
அதை இங்குருந்துதான் எடுத்துச்செல்ல வேண்டும் @.

உண்மைதான் :”: :”: :”: :”:
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum