சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

பருத்தி நூலிழை ஏற்றுமதிக்கான பதிவு 70 சதவீதம் உயர்வு Khan11

பருத்தி நூலிழை ஏற்றுமதிக்கான பதிவு 70 சதவீதம் உயர்வு

Go down

பருத்தி நூலிழை ஏற்றுமதிக்கான பதிவு 70 சதவீதம் உயர்வு Empty பருத்தி நூலிழை ஏற்றுமதிக்கான பதிவு 70 சதவீதம் உயர்வு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Sep 2011 - 6:25

சென்ற ஆகஸ்ட் மாதம், நம் நாட்டில் இருந்து, 9.77 கோடி கிலோ பருத்தி நூலிழை ஏற்றுமதி மேற்கொள்ள, ஜவுளி ஆணையகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இது, நலிவடைந்த ஜவுளித் துறை, புத்துயிர் பெற்று வருவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. எனினும், ஏற்றுமதி வரியை திரும்பப் பெறும் டீ.ஈ.எல்.பீ திட்டம் வரும் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அதன் பிறகே ஜவுளித் துறையின் வளர்ச்சி குறித்து எதுவும் கூற முடியும் என்று இத்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மத்தியில், நூலிழை ஏற்றுமதி வரிச் சலுகையை (டீ.ஈ.எல்.பீ திட்டம்) மத்திய அரசு திரும்பப் பெற்றது. இத்திட்டம் பின்னர் திரும்ப அறிமுகப்படுத்தப்பட்டு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவது போன்றவற்றாலும் ஏற்றுமதியாளர்கள் சற்றே உற்சாகத்துடன் வர்த்தகம் மேற்கொண்டனர். சென்ற ஆண்டில், மத்திய அரசு 72 கோடி கிலோ பருத்தி நூலிழை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியது. ஆனால், எட்டு மாதத்திற்குள்ளாகவே இந்த இலக்கு எட்டப்பட்டு விட்டது. அதன் பின்னர் ஏற்றுமதி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால், உள்நாட்டு சந்தையில் பருத்தி நூலிழை வரத்து அதிகரித்தது. இதனால், நூலிழை விலை வீழ்ச்சியடைந்தது. நூற்பாலைகள், கையிருப்பை குறைப்பதற்காக உற்பத்தியை குறைத்தன. அதே சமயம், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், சர்வதேச சந்தையிலும் பருத்தி நூலிழைக்கான தேவை குறைந்தது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டு (2011-12) ஏப்ரல் முதல், நூலிழை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும், சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்திய நூலிழைக்கான தேவை குறைவாகவே உள்ளது. சென்ற ஏப்ரல் மாதம் 7.13 கோடி கிலோ பருத்தி நூலிழை ஏற்றுமதி மேற்கொள்வதற்காக ஜவுளி ஆணையகத்திடம் ஏற்றுமதியாளர்கள் பதிவு செய்திருந்தனர். இது, மே மாதம் 6.31 கோடி கிலோவாகவும், ஜூன் மாதம் 5.40 கோடி கிலோ என்ற அளவிலும் குறைந்தது. ஜூலை மாதம், 5.72 கோடி கிலோ பருத்தி நூலிழையை ஏற்றுமதி செய்வதற்காக ஏற்றுமதியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இது, ஆகஸ்ட் மாதம் 9.77 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு இறுதியில், ஒரு கிலோ சங்கர்-6 ரக பருத்தியின் விலை 32 ரூபாயாக சரிவடைந்தது. தற்போது ஒரு கிலோ 39 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. பருத்தி விலை ஓரளவு நிலை பெற்றதையடுத்து, நூலிழை விலையும் சற்றே உயர்ந்துள்ளது. சென்ற ஜூன் மாதம், ஒரு கிலோ பருத்தி நூலிழை (30 கவுண்ட்), 140 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விலை போனது. இது, தற்போது 180 ரூபாய் வரை விலை போகிறது. டீ.ஈ.எல்.பீ திட்டம் முடிவடைய இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருப்பதால், இந்த வளர்ச்சி தொடருமா என்ற அச்சம் ஜவுளித் துறையினருக்கு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஜவுளி கூட்டமைப்பின் தலைமைச் செயலர் டீ.கே.நாயர் தெரிவித்தார்.


பருத்தி நூலிழை ஏற்றுமதிக்கான பதிவு 70 சதவீதம் உயர்வு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum