சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சொந்தக் கதை பாகம் 4 Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சொந்தக் கதை பாகம் 4 Khan11
சொந்தக் கதை பாகம் 4 Www10

சொந்தக் கதை பாகம் 4

Go down

Sticky சொந்தக் கதை பாகம் 4

Post by jasmin on Sat 26 Nov 2011 - 15:30

[url=http://www.chenaitamilulaa.net/t26458-1]பாகம் 01

பாகம் 02

பாகம் 03

பாகம் 04

பாகம் 05


பாகம் 06


பாகம் 07

பாகம் 08பாகம் 09பாகம் 10பாகம் 11பாகம் 12பாகம் 13
[/url]

ஆன்மீகத்தில் உண்மையை உணர்ந்து ஒரே இறைவனையே வணங்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுவிட்ட நான் அடுத்த விடயங்களையும் ஆராய்ந்தேன் அவற்றை ஒன்று ஒன்றாக இங்கே பதிவு செய்கிறேன்

சமத்துவமும் சகோதரத்துவமும்

---------------------------------

நான் ஏற்கனவே சொன்னதுபோல் நான் 24 மனை தெலுங்கு செட்டியார் வகுப்பை சேர்ந்தவள்.அது என்ன 24 மனை செட்டியார் .இது செட்டியார் என்ற ஜாதியில் இருக்கும் ஒரு உட்பிரிவு .இதுபோல் நகைசெட்டி ,சளுப்ப செட்டி ,கோமுட்டி செட்டி என்ற பல பிரிவுகள் செட்டியார் ஜாதியில் இருக்கின்றன நாங்கள் ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் போன்ற உறவுகள் வைத்துக்கொள்வதில்லை .காரணம் பல இருக்கின்றன ...ஆனால் அதில் நாங்கள்தான் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்ல நாங்கள் வைத்து இருக்கும் காரணம் வேடிக்கையாக இருக்கும் .

செட்டியார் ஜாதியிலேயே இவ்வளவு என்றால் இன்னும் பல ஜாதிகள் இருக்கின்றனவே அவற்றின் நிலை என்ன ? பிராமணர்கள் இருக்கிறார்கள் அவர்களிலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன .அதுபோல் முதலியார்கள், நாடார்கள்,வன்னியர்கள் என்று ஜாதிகள் ஏராளம் ஏராளம் .இவ்வாறு ஜாதிகள் இருப்பதை நான் எள்ளளவும் குறை சொல்ல இயலாது .ஆனால் அவைகள் பயன்படுத்தப் படும் விதத்தில் குறைகள் இருக்கின்றன .

ஜாதிகளின் பிரிவுகளில் இது உயர்ந்த ஜாதி ,இது தாழ்ந்த ஜாதி என்று பிரிவுகள் வாதிடுகின்றன ...அது ஏன் ....கடவுளின் தலையில் இருந்து பிறந்தவன் பிராமணன் .அத்னால் அவன் அறிவில் சிறந்தவன் .மேலும் உயர்ந்த இடத்தில் இருந்து பிறந்ததால் அவன் எல்லவற்றிலும் உயர்ந்தவன் ,சரி

கடவுளின் நெஞ்சில் இருந்து பிறந்தவன் சத்திரியன் ..அவன் நெஞ்சில் இருந்து பிறந்த்தால் வீரம் மிக்கவன் பிராமணனுக்கு அடுத்த நிலையில் உயர்ந்தவன் [இன்று சத்திரியர்கள் இருக்கிறார்களா என்று தெரியாது]

மூன்றாவதாக கடவுளின் வயிற்றில் இருந்து பிறந்தவன் வைசிகன் ..வயிறு சம்பந்தமாக இருப்பதால் வியாபாரி பிராமணனுக்கும் சத்திரியனுக்கும் அடுத்த நிலை ....அடுத்து வரும் காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன் .இவன் நிலைதான் இன்று பரிதாபகரமானது .

காலில் இருந்து பிறந்தவனாக அவன் கருதப்பட்டதால் அவனை எல்லோரும் காலில் போட்டு மிதித்தார்கள் மனித குலத்தில் மிகவும் தாழ்ந்த ஜாதி என்று அவன் கருதப்பட்டான் .அவன் வாழும் தெருக்களில் மற்ற ஜாதிக்காரர்கள் செல்வது பாவமாகப்பட்டது .ஒரு மிருகத்தைவிட அந்த மனிதன் கேவலமாக நடத்த்ப்பட்டான்

இது என்ன நியாயம் .ஒரே மாதிரியாக பிறக்கும் மனிதர்கள் மத்தியில் கொஞ்சம்கூட அறிவுக்கு ஒவ்வாத இந்த பிரிவுகள் ஏன் வந்தன .தன்னைப்போல் பிறந்த ஒருவனை அவன் குறிப்பிட்ட ஒரு தாய் தந்தையருக்கு பிறந்ததால் அவன் தாழ்ந்தவன் என்று சொல்ல எவருக்கு உரிமை இருக்கிறது .அந்த உரிமையை அவர்களுக்கு கொடுத்தது யார் ?எனக்கு இதுவரை இதற்கு பதில் தெரியவில்லை .

இதுபோல் கிரிஷ்தவத்தைப் பார்த்தால் அங்கேயும் பல பிரிவுகள் ,கத்தோலிக்கம் ,பெந்தகோஷ்த் ,பிராடஷ்டண்ட் என்று .ஏசு பிரான் என்ற கடவுளை ,பிதா சுதன் பரிசுத்த ஆவி என்று மூன்று பேர் கொள்கையை அடிப்படையாக அவர்கள் வைத்து இருந்தாலும் அவர்கள் வைத்து இருக்கும் வேத நூல் வேறு வேறு விதமாக இருந்தது .இதற்குமேல் இதை நான் அலசஅவசியமில்லை என்று கருதி மேலே செல்கின்றேன்.

இவ்வளவையும் கடந்து இஸ்லாத்திற்குள் வந்தேன் . நாம் முஸ்லிமாகிவிட்டோம் என்று மகிழ்ந்து இருந்த வேளையில் ஆர்வக் கோளாறு காரணமாக ஏன் இஸ்லாத்திலே இதுபோன்ற பிரிவுகள் இல்லையா என்று ஆராய்ந்த போது ஆரம்பத்தில் பெரும் இடி என் தலையில் இறங்கியது .ஏன் இல்லை இருக்கிற்தே ..இஸ்லாத்திலே சுன்னி ,ஷியா என்ற இரு பிரிவுகள் இருக்கின்றன என அறிந்த போது எனக்குள் லேசான சபலம் தட்ட துவங்கியது .

சுன்னி முஸ்லிம் ,ஷியா முஸ்லிம் ..இரு பிரிவுகள்தானா சரி பரவாயில்லை என்று நினைத்து மேலே சென்றபோது எனக்கு இன்னும் பல ஆச்சர்யங்கள் காத்து இருந்தன .சுன்னி முஸ்லிமில் ..ஷாபி ,ஹனபி ,மாலிகி ,ஹம்பலி என்ற நான்கு பெரும் பிரிவுகள் இருந்தன .என் சபலம் விரியத்துவங்கியது . நாம்தான் தெரியாமல் தேவை இல்லாமல் இதில் வந்து மாட்டிக்கொண்டோமோ என்று தோன்றியது .ஷியா முஸ்லிமை கேட்டபோது அங்கும் போரி என்ற ஒரு பிரிவு இருந்தது .

சரி வந்தது வந்துவிட்டோம் கொஞ்சம் உள்ளே போய் பார்த்துவிடுவோமே என்று முயன்ற போது இன்னும் பல ஆச்சர்யங்கள் எனக்கு கிடைத்தன .

மேலே நான் சொன்ன விடயங்களோடு போய் விடவில்லை இன்னும் இந்தியாவில் உருது முஸ்லிம் என்றும் தமிழ் முஸ்லிம் என்றும் சொன்னார்கள் ..இதுவாவது பரவாயில்லை ஏதோ பேசும் மொழியை வைத்து சொல்கிறார்கள் என்றால் தமிழ் முஸ்லிமில் மரைக்காயர் ,ராவுத்தர் ,லெப்பை என்றும் சொன்னார்கள் . நான் நொறுங்கிப் போனேன்

முதலில் என் கணவரிடம் இருந்து ஆரம்பித்தேன் ,மெதுவாக அவரிடம் நீங்கள் என்ன முஸ்லிம் என்று கேட்டேன் .என் கணவர் திகைத்தார் ,சும்மா சொல்லுங்கள் நீங்கள் ஷாபியா ,ஹனபியா என்றேன் .ஓ அதுவா ...ஷாபி என்று சிரித்தார் ...ஓகோ சரி தமிழ் முஸ்லிமா .உருது முஸ்லிமா என்று கேட்டேன் ..அவர் முகம் லேசாக சுருங்கியது ...ஏன் தமிழ்தான் என்றார் .

என் அடுத்த கேள்வி என் கணவரை மிகவும் சங்கடத்தில் ஆள்த்தியது நீங்கள் மரைக்காயரா .ராவுத்த்ரா ,லெப்பையா ....என் கணவர் உடைந்து போனார் .தலையை லேசாக பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்து விட்டார் . நான் அவரோடு சண்டை போட்டேன் .உங்களுக்குள் இத்தனை பிரிவுகளை வைத்துக்கொண்டு என்னை ஏமாற்றி விட்டீர்களே எங்கள் செட்டியார் இனத்தில்கூட இவ்வளவு பிரிவுகள் இல்லையே என்றேன் .

என் கேள்விகளுக்கு அவரால் சரியாக பதில் சொல்ல இயலவில்லை ..அவரின் பதில்கள் அனைத்தும் மழுப்பலாகவே வந்தது .

எனக்கு என் சிறு வயதில் முஸ்லிம்கள் பற்றி எங்கள் வீடுகளில் சொந்தக்காரர்கள் பேசிகொள்ளும் பேச்சு ஞாபகத்திற்கு வந்தது ..ஒரு முஸ்லிம் போனால் ...அவரை துலுக்கன் ....பாய் ..அல்லது வேறு ஒரு அசிங்கமான பெயர் அல்லது தீவிரவாதி என்றுதான் சொல்லுவோம் .அதன் அர்த்தங்கள் எனக்கு முழுமையாக தெரியாவிட்டாலும் இப்போது என் கணவர் எனக்கு தீவிரவாதியாக தெரிந்தார் .

மிகவும் நொந்துபோய் இருந்த நான் சரி இத்தனை பிரிவுகள் இதில் இருக்கின்றனவே அவை அனைத்தும் என்ன சொல்கின்றன என ஆராய ஆரம்பித்தேன் .முதலில் கடவுளைப் பற்றி என்ன சொல்கின்றன என்று ஆராய்ந்தேன் ....ஒட்டுமொத்தமாக எல்லா பிரிவுகளும் கடவுளை அல்லாஹ் என்றே அழைத்தன ...சபாஷ் எனக்கு ஆர்வம் வந்த்து .

சரி இவர்கள் படிக்கும் வேதங்கள் என்ன என்று பார்த்தேன் ..என்ன ஆச்சர்யம் எல்லாம் குரான் குரான் என்றே இருந்தன .என் ஆர்வம் விரிந்தது .சரி இவர்களுக்கு மேலும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கின்றன என ஆராய்ந்த போது என் ஆர்வம் ஆச்சர்யமாக ஆகிப்போனது .அவர்களின் எல்லா பிரிவினரின் கடவுள் ஒரே கடவுள் .வேதம் ஒரே வேதம் ,இறைதூதர் ஒரே தூதர் ,சட்டங்கள் அனைவருக்கும் ஒரே சட்டம் .அருமை எனக்கு நம்பிக்கை வந்தது .

அரபு நாட்டிலே பிறந்து அரபு மொழி மட்டும் பேசும் ஒரு முஸ்லிம்ஆண் ஹைதராபாத் வந்து உருதுமொழி மட்டும் தெரிந்த ஒரு பெண்ணை மணமுடித்து செல்லும் ரகசியம் எனக்கு விளங்கியது .இங்கே நாடோ அல்லது மொழியோ இவர்களை பிரிக்க இயலவில்லை .அமெரிக்காவில் இருக்கும் ஒரு வெள்ளை வேற்று இன முஸ்லிம் ஆப்பிரிக்காவிலே இருக்கும் ஒரு கரிய நிற பெண்ணை மணமுடிக்க முடிந்தது .இங்கே இனமோ நிறமோ இவர்களை பிரிக்க முடியவில்லை .மனித குலத்தில் ஓர் அதிசயம் ஏன் ஆச்சர்யம்கூட.

இதைவிட இவர்களின் வணக்க வழிபாடுகளின் எண்ணிக்கையில் சில சிறிய வேறுபாடுகள் இருந்தபோதும் அவர்கள் வணக்கத்திற்காக நிற்கும் முறையிலும் வணங்கும் செயலிலும் சிறிதளவும் வேறுபாட்டைக் காணமுடியவில்லை .பணக்காரனும் பரதேசியும் ,முதலாளியும் தொழிலாளியும் ,கருப்பனும் வெள்ளையனும் ,அரபியும் அஜமியும் ஒரே வரிசையில் தோளோடு தோள் உரச நின்றார்கள் .

சில வேளைகளில் சுஜூது செய்யும்போது கருப்பனின் கால்களில் வெள்ளையனின் தலை இருந்தது .சமத்துவம் இங்கே உயிர்பெற்றது .எனக்கு சந்தோஷம் உள்ளத்தை நிறைத்தது .ஒரே பள்ளியில் உருதுவும் தமிழும் .மரைக்காவும் ராவுத்தரும் லெப்பையும் ஒரே வரிசையில் தோளோடு தோள் உரச நின்றார்கள் தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முத்தமிட்டார்கள் ...என் கணவரை நான் கடிந்து கொண்டதற்காக வெட்கப் பட்டேன் .அவரிடம் மன்னிப்பு கேட்டேன் .

அப்படியானால் இந்த பிரிவுகள் எதனால் ....ஏன்? தொடரும்


jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 4

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Nov 2011 - 16:12

ஜெஸ்மின் இப்போது அதிகமாகவே உங்கள் மீது சந்தேகம் வருகிறது இந்த மிகப்பெரும் அலசலைக் கண்டு பிரமித்துப்போகிறேன் இது சேனையின் மிக முக்கியமான பொக்கிசமாகக் கருதுகிறேன் இறைவனுக்கே எல்லாப்புகளும் அல்ஹம்துலில்லாஹ் இந்த சம்பவத்தைத்தொகுத்து ஒரு புத்தகமாக்கிவிடலாமா என்று என்மனம் நாடுகிறது அத்தனை பெறுமதிமிக்க சரித்திரமாகத்தோன்றுகிறது இந்த அளவு ஆழ்ந்து ஆராய்ந்து விடயங்களைத் தொகுத்தளிக்கும் அபாரத்தினை நான் உங்களிடம் காணும்போது சாதாரணமாய்க் காணமுடியவில்லை

நான் இஸ்லாமியனாக இருப்பதில் பலதடவை இறைவனுக்கு நன்றி சொல்லியிருக்கிறேன் காரணம் மனிதனா அவதரிக்கும் சாதாரண ஜடத்தினை மனிதனாக கருதும் ஒரே மார்க்கமாக இஸ்லாம் மாத்திரம் போற்றப்படுவதை மகிழ்வுடன் பார்த்திருக்கிறேன் ஜாதி மத பேதங்களுக்கப்பால் மனிதனை மனிதனாக கருது என்பதை வலியுறுத்தி நிற்கிறது அதை தெளிவாக உணர்ந்து எழுதியமைக்கு நன்றி மிகப்பெரிய பாடம் சமுதாயத்திற்கு கற்றுத்தருகிறீர்கள் நன்றிகள்
தொடருங்கள்


சொந்தக் கதை பாகம் 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 4

Post by jasmin on Sat 26 Nov 2011 - 16:16

என் அருமை சகோதரர் ஹாசிம் அவர்கள் என் மீது சந்தேகப் பட தேவை இல்லை .. நான் எழுதி இருக்கும் அனைத்தும் உண்மை ...வெகு விரைவில் இறைவன் நாடினால் நாம் சந்திக்கும் பாக்கியம் [என் குடும்பதினரோடு ] கிடைக்கலாம் அப்போது நீங்களும் உங்களோடு சேர்ந்து சந்தேகப் படும் நண்பரும் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள் .எனது கதை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது இன்னும் சூடு பிடிக்கவில்லை .....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 4

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Nov 2011 - 16:19

jasmin wrote:என் அருமை சகோதரர் ஹாசிம் அவர்கள் என் மீது சந்தேகப் பட தேவை இல்லை .. நான் எழுதி இருக்கும் அனைத்தும் உண்மை ...வெகு விரைவில் இறைவன் நாடினால் நாம் சந்திக்கும் பாக்கியம் [என் குடும்பதினரோடு ] கிடைக்கலாம் அப்போது நீங்களும் உங்களோடு சேர்ந்து சந்தேகப் படும் நண்பரும் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள் .எனது கதை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது இன்னும் சூடு பிடிக்கவில்லை .....

உங்கள் மீது சந்தேகம் என்று சொன்னதே வேறு அர்த்தம் ஒரு அசாத்தியமான திறமையுள்ளவராக இருக்கிறது சாதாரணமாய் இருக்கிறீர்கள் என்ற அர்த்தம் தவறாக இல்லை சகோ


சொந்தக் கதை பாகம் 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 4

Post by நண்பன் on Sun 27 Nov 2011 - 10:25

நான் ஒரு இஸ்லாமியனாக இருந்து அறிந்திடாத அரிய தகவல்கள் இங்கு என்னால் காண படிக்க கிடைத்தது அதுவும் ஜாஸ்மின் மூலம் இப்படி ஒரு சான்ஸ் கிடைத்ததது இறைவனுக்கும் அடுத்த படியாக ஜாஸ்மினுக்கும் நன்றி.

இன்னும் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று ஆர்வம் அதிகரித்து விட்டது ஜாஸ்மின் வேகமாக தொடருங்கள் என்றும் நன்றியுடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 4

Post by நண்பன் on Sun 27 Nov 2011 - 10:36

jasmin wrote:என் அருமை சகோதரர் ஹாசிம் அவர்கள் என் மீது சந்தேகப் பட தேவை இல்லை .. நான் எழுதி இருக்கும் அனைத்தும் உண்மை ...வெகு விரைவில் இறைவன் நாடினால் நாம் சந்திக்கும் பாக்கியம் [என் குடும்பதினரோடு ] கிடைக்கலாம் அப்போது நீங்களும் உங்களோடு சேர்ந்து சந்தேகப் படும் நண்பரும் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள் .எனது கதை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது இன்னும் சூடு பிடிக்கவில்லை .....
யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்னீர்கள் ஜாஸ்மின் சந்தேகப்படு நீ ஏமாற்றப்பட மாட்டாய் என்றாலும் இப்போது உங்கள் மீது நல்ல நம்பிக்கை என்னை நீங்கள் ஏமாற்ற மாட்டீர்கள் சொந்தக் கதை பாகம் 4 188826

இந்தச்சிரிப்புக்குக்காரணம் என்ன?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 4

Post by ஹம்னா on Sun 27 Nov 2011 - 12:18

நண்பன் சொன்னது போன்று நாங்கள் அறிந்திடாத பல தகவல்களை தந்தீர்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள இஸ்லாமியர்களுக்குள் உள்ள பிரிவுகள் அதிகமாக இந்தியாவில்தான் காணப்படுகிறது. இலங்கையில் நான் அறிந்த வரைக்கும் இவ்வாரான பிரிவுகள் மிகவும் குறைவு.
நன்றி ஜாஸ்மின் உங்கள் தொடரை மிகவும் ஆர்வமாக படிக்கிறேன். நன்றிகளும் பாராட்டுக்களும்.
அன்புடன்
ஹம்னா.


சொந்தக் கதை பாகம் 4 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum