சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சொந்தக் கதை பாகம் 5 Regist11


Latest topics
» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:06

» ஜூன் மாதம் வந்தால் எனக்கு இரண்டு கவலை...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:02

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:01

» சண்டைன்னு வந்திட்டா என் கணவரை நல்லா மொத்திடுவேன்...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:00

» மனசு பேசுகிறது : முகிலினி
by சே.குமார் Sun 2 Jun 2019 - 12:55

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by பானுஷபானா Mon 27 May 2019 - 13:13

.
சொந்தக் கதை பாகம் 5 Khan11
சொந்தக் கதை பாகம் 5 Www10

சொந்தக் கதை பாகம் 5

Go down

Sticky சொந்தக் கதை பாகம் 5

Post by jasmin on Sun 27 Nov 2011 - 10:46

[url=http://www.chenaitamilulaa.net/t26458-1]பாகம் 01

பாகம் 02

பாகம் 03

பாகம் 04

பாகம் 05


பாகம் 06


பாகம் 07

பாகம் 08பாகம் 09பாகம் 10பாகம் 11பாகம் 12பாகம் 13
[/url]


பாகம் 05இவ்வளவு தூய்மையான இந்த மார்க்கத்தில் இந்த பிரிவுகள் ஏன் வந்தது என்று ஆராய என் மனம் தூண்டியது .முதலில் சுன்னி .ஷியா என்ற இருபிரிவுகளும் எப்படி ஏற்பட்டன என் ஆராய்ந்தேன் .

நபிகள் நாயகம் [சல்]அவர்கள் காலத்தில் இந்த பிரிவுகள் இருக்கவில்லை ..ஆனால் அவர்களுக்கு பின்னால் வந்த ஆட்சியாளர்கள் மக்கள் பிரதினிதிகள்[கலிஃபாக்கள்] காலத்தில் ஹஜரத் அபூபக்கர் காலத்திலும் .உமர்[ரலி] அவர்கள் கால்த்திலும் எந்த குழப்பமும் இல்லை .ஆனால் ஹஜரத் உதுமான் அவர்கள் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜியம் அசைய துவங்கியது .அத்ற்கு காரணம் கலிஃபா உமர் அவர்கள் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜியம் உலகம் எங்கும் பல பாகங்களாக விரிந்து பரந்து கிடந்தது .

அவற்றை நிர்வாகம் செய்ய நிர்வாக வசதிக்காக அரச பிரதினிதிகளாக [கவர்னர்கள்] பல பாகங்களில் கலிஃப்ஃபாவினால் நியக்கப் பட்டவர்கள் கலிஃப்ஃபாவின் கட்டளைப் படி நிர்வாகம் செய்து வந்தார்கள் . ஹஜ்ரத் உமர் கலீபாவாக இருந்தவரை எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இஸ்லாத்திற்கு எதிராக மறைமுகமான எதிர்ப்புகள் உருவாகி இருந்தன.

ஹஜ்ரத் உதுமான் அவர்கள் கலீஃபாவாக இருந்த காலத்தில் அவரின் சொந்தக் காரர்களில் சிலர் வேலை இல்லாமல் இருந்தனர் ..அவர்கள் இயற்கையிலேயே இளகிய மனம் கொண்ட கலீஃபாஉதுமான் அவர்களின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து பரந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜியத்தின் பல பாகங்களுக்கு கவர்னர்களாக ஆகிக்கொண்டார்கள் .

இதில் மிக முக்கியமானவர் முஆவியா[ரலி]அவர்கள் .இவர்கள் இன்றைய ஈராக் பகுதியில் கவ்ர்னராக இருந்தார்கள் .இந்த நேரத்தில் பல பாகங்களில் பொருப்பு வகித்த கவர்னர்கள் கலீஃபாவின் உத்தரவு இல்லாமல் சொந்தமாக தாங்களே உத்தரவு போடும் அளவுக்கு மாறிப் போனார்கள் ..அதாவது கலீஃபாவுக்கு அனுப்ப வேண்டிய நிதியைக் கூட அனுப்பாமல் அலட்சியம் காட்டினார்கள் .இத்னால் மதினாவை தலை நகராக கொண்ட இஸ்லாமிய சாம்ராஜியத்தில் சிறிது சிறிதாக விரிசல் விட ஆரம்பித்தது .

இஸ்லாத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்ய எதாவது விஷ்யம் கிடைக்காதா என்று காத்திருந்த எதிரிகளுக்கு [அன்றைய யூதர்களுக்கு] அல்வா சாப்பிட்டதுபோல் அமைந்தது இந்த நிகழச்சிகள் .மதினாவில் மக்கள் மத்தில் சிரிய சல சலப்பு தொன்ற ஆரம்பித்தது.இது போதாதா எதிரிகளுக்கு ஊதி பெரிதாக்க .அத்னால் அவர்கள் அப்துல்லா இப்னு சபா என்ற யூதனை புதிதாக இஸ்லாத்திலே இணைந்தவன் போல் போலியாக காட்டிக்கொண்டு மதினாவிலே குழ்ப்பம் ஏற்படுத்த அனுப்பி வைத்தனர்.

பெரும் திட்டத்தோடு மதினாவை அடைந்த அந்த போலி முஸ்லிம் யூதன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய்தான் .மதினாவில் மக்களிடையே கலீஃபாவுக்கு எதிராக விஷ விதையை தூவினான் .ஏற்கனவே நிர்வாகத்திற்கு போதிய நிதி இல்லாமல் பற்றாக்குறை அரசாங்கம் நடத்தி வந்த ஹஜரத் உதுமான் இந்தமாதிரியான ஒரு தாக்குதலையும் சமாளிக்க வேண்டி இருந்தது .

அவர்களுக்கு நெருக்கமான நண்பர்களே அவர்களைப் பார்த்து நாசுக்காக அவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவு விஷயம் முற்றியது ...இறுதியில் கலிஃபா அவர்கள் மக்களை சந்திக்க வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டு சிறைவில் முற்றுகை இடும் அளவு ஆகி இறுதியில் வீட்டில் உள்ளே குரான் ஓதிக்கொண்டு இருக்கும்போது மதிலேறி குதித்து வந்த சில போராட்டக் காரர்களால் கலிஃபா படுகொலை செய்யப்பட்டார்.

தலைமையை இழந்த இஸ்லாமிய பேரரசு எங்கு பார்த்தாலும் கூச்சலும் குழப்பமும் . நிர்வாகம் செய்ய ஆள் பலமும் நிதி பலமும் இல்லாதது ,கலீபா கொலை செய்யப் பட்ட நிகழ்ச்சியில் சம்பந்தம் என்ற பலகீனமான நிலையில் மதினாவின் இஸ்லாமிய பேரரசுக்கு கலீஃபாவாக நியமிக்கப் பட்டார் நபி [சல்] அவர்கள் மருமகனும் இஸ்லாத்தின் இணையில்லாத வீரருமான ஹஜரத் அலி அவர்கள்.

தலைமை பொருப்பை ஏற்ற ஹஜரத் அலியின் மீது திட்டமிட்ட படி கொலைப் பழியைப் போட்டான் குழப்பவாதி அப்துல்லா இப்னு சபா ....ஆனால் இதை உதாசீணம் செய்த ஹஜ்ரத் அலி அவர்கள் மீண்டும் பலமான இஸ்லாமிய சாம்ராஜியத்தை நிறுவிட வேண்டும் என்று போராடினார்கள்.ஆனால் அவர்களுக்கு பல இஸ்லாமிய கவர்னர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை .அதில் தலைமையானவர் முஆவியா[ரலி] அவர்கள்.

முஆவியா[ரலி] அவர்கள் அலி[ரலி] அவர்களை கலீஃபாவாக ஒத்துக்கொள்ளவில்லை....இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது .இந்த தருணத்தில் மக்காவிலே ஹஜ் செய்வதற்காக வந்த நபி[சல்] அவர்களின் மனைவி ஆயிசா அம்மையார் அவர்களிடம் அலி[ரலி]தான் கலிஃபா உதுமானை பதவிக்காக ஆளை ஏவி கொன்றுவிட்டார் என்று தவறாக சொல்லப்பட்டது .அதனால் ஆயிஷா அம்மையாரும் ஒரு படையை திரட்டிக்கொண்டு அலி[ரலி] அவர்களோடு போர் [மாவு சண்டை]செய்தார்கள்.

இறுதியில் போரை நிறுத்தி அலி[ரலி] அவ்ர்கள் ஆயிஷா அம்மையாரிடம் நடந்த சம்பவங்களை விளக்கி சொல்ல வேண்டி இருந்தது ..முஆவியா[ரலி] அவர்களோடும் அவர்களே கவர்னராக ஈராக் பகுதியில் தொடரவேண்டும் என்றும் அவருக்கென்று சில விஷேச அதிகாரம் இருக்கும் அதில் கலீஃபா தலையிடக்கூடாது என்ற கண்டிஷன் அடிப்படையில் சமாதானமாக போக வேண்டி வந்தது .

இது மதினாவில் இருந்த பெரும்பான்மையான மக்களுக்கு பிடிக்கவில்லை ..அவர்கள் முஆவியா[ரலி] அவர்களை வெறுத்தார்கள் அலி[ரலி]தான் எங்கள் தலைவர் என்று பரைசாற்ற கொஞ்சம் அளவுக்கு மீறி போனார்கள் . இந்த தீவிரமான மக்களை அப்துல்லாஹ் இப்னு சபா ஒன்று திரட்டினான் ....அவர்களிடையே இன்னுமொரு விஷ விதையை விதைத்தான் உண்மையிலேயே நபித்துவம் அலி[ரலி]அவர்களுக்குத்தான் கிடைத்திருக்க வேண்டும் என்றும் அது தவறுதலாக நபி முகம்மது[சல்] அவர்களுக்கு கிடைத்து விட்டது என்றும் விஷ விதையை தூவினான் .

ஆனால் இதை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத மக்கள் ஹஜரத் அலி[ரலி] அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் சரியான மரியாதை தரப்படவில்லை என்பதை நம்பினார்கள்.அதனால் அலி[ரலி] அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டுமானால் சில இஸ்லாமிய சடங்குகளில் அவர்களின் பெயர் சேர்க்கப் பட வேண்டும் என்று வாதாடினார்கள் .

இதை இஸ்லாத்தை அதன் தூய வடிவிலே பின் பற்றி வந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஏன் அலி[ரலி] அவர்களே இதற்கு ஆதரவு அளிக்கவில்லை..இதனால் இந்த விஷயத்தில் மட்டும் முஸ்லிம்கள் இரு பிரிவுகளாக பிரிந்து நின்ற போது அலி[ரலி] அவர்கள் மரணித்தார்கள் .ஹஜ்ரத்முஆவியா[ரலி]தன்னை கலீஃபாவாக பிரகடனப்படுத்தினார் ..இப்போது அலி[ரலி]அவர்கள்மீது அவர்களின் ஆதரவுமக்கள் வைத்து இருந்த அபரிதமான அன்பு வெறியாக மாறியது.

இந்த நேரத்தில் ஈராக்கிலே ஒரு சம்பவம் நடந்தது ...ஹஜரதுமுஆவியா[ரலி] அவர்கள் மரணித்தார்கள் இத்னால் அவரின் மகன் யஜீது மக்களின் ஆதரவைப் பெறாமலேயே தன்னிச்சையாக தன்னை கலீஃபாவாக முடிசூட்டிக்கொண்டார்.இப்போது மதினாவில் கலீஃபாவாக இருந்த ஹஜரத அலி[ரலி] அவர்களின் மூத்த மகன் ஹஜரத் ஹசன் [ரலி] அவர்கள் மக்காவிலே இறந்து விட ..அவர்களின் இளைய சகோதரர் ஹூசனை மக்கள் கலீஃபாவாக ஆக்கினர் .

கலீஃபாவாக ஆனதும் ஹஜ்ரத் ஹூசைன் அவர்கள் ஈராக் மக்களின் ஆதரவை நம்பி மதினாவாசிகள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வெறும் 72 பேரோடு யஜீதோடு போர் தொடுத்து ஈராக்கின் கர்பலா [கர் என்றால் துன்பம் பலா என்றால் துயரம்]என்ற இடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு தலையை வெட்டி எடுக்கப்பட்டு தலை வேறு முண்டம் வேறாக அடக்கம் செய்யப்பட்டார் .

இந்த நிகழச்சி அலி[ரலி] அவர்களின் ஆதவாளரிடையே பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது ....இதனால் இவர்கள் ஹுசைன்[ரலி] அவர்களின் படுகொலையை காரணமாக வைத்து ஐந்துபேர் கொள்கையை உருவாக்கினார்கள்.ஹுசனார் படுகொலை செய்யப்பட்ட நாளை துக்க நாளாக அனுசரித்து தங்களின் மார்புகளில் அடித்துகொண்டு அரட்டிக்கொண்டார்கள் ..இறுதியில் தாங்கள் முஸ்லிம்கள்தான் ..ஒரே இறைவனைவணங்குபவர்கள் தான் முகம்மதை[சல்] நபியாக ஏற்றுகொள்பவர்கள்தான் அதோடு அலி[ரலி] அவர்களையும் மதிக்கும் பிரிவினர் என்று தனியாக அறிவித்துக்கொண்டார்கள். இவர்களே ஷியாக்கள். இவர்கள அல்லாது நபி[சல்] அவர்களின் சுன்னத்தை மட்டும் பின்பற்றும் முஸ்லிம்கள் சுன்னி முஸ்லிம்களாக உள்ளனர் .

சரி இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை ஆனால் இந்த ஷாபி ,ஹனபி மாலிகி ,ஹம்பலி என்று சொல்கிறார்களே அது என்ன ..? தொடரும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 5

Post by நண்பன் on Sun 27 Nov 2011 - 11:01

உங்கள் சொந்தக் கதை இஸ்லாமிய சரித்திரத்திற்கு சென்று விட்டது இவைகள் நீங்கள் படித்தவைகள் என்று எங்களிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள் நல்லது தொடருங்கள் நாங்களும் தெரியாத சில விசயங்களைத் தெரிந்து கொள்கிறோம்
நன்றியுடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 5

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 27 Nov 2011 - 11:11

எனதன்புச் சகோதரி அத்தனையும் உண்மையான சரித்திரம்
நான் கற்றிருந்தவற்றோடு ஒப்பிட்டு நோக்கினேன் சொல்லப்பட்டவற்றில் நான் அறிந்திராத விடயம் ஆயிஷா நாயகி போர்தொடுத்தது மாத்திரம் என்னையும் தேடிக் கற்றிட ச் செய்திருக்கின்ற உங்களது உரையை மிகவும் ஆச்சரியமாகப்பார்த்து பின்தொடர்கிறேன் மிக்க நன்றி உண்மையில் இவ்வாறுதான் பிரிவினை உருவானது இஸ்லாத்தில் பிளவு ஏற்பட காரணமாக இருந்த சந்தர்ப்பமும் இதுவே அணுவணுவாக ஆராய்ந்து மனதில் நிறுத்தி இவ்வளவு தெளிவாக எழுத இறைவன் மேலதிய ஆற்றலை உங்களுக்கு அளித்திருக்கிறான் ஜசாக்கள்ளாஹ் கைர் தொடருங்கள் இஸ்லாத்தின் மகிமை இதுதான் அனைவருக்கும் பொதுவான மார்க்கம் ஒரு சாராருக்கோ பகுதியினருக்கோ சொந்தமானதல்ல மறு பகுதிக்காக காத்திருக்கிறேன் நன்றி


சொந்தக் கதை பாகம் 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 5

Post by jasmin on Sun 27 Nov 2011 - 11:13

சொந்த கதையில்தான் நாம் தெரிந்துகொண்ட விஷயங்களை தெளிவாக சொல்ல முடியும் ...இஸ்லாத்திலே பிறந்தவர் நீங்கள் ஏற்றுக்கொண்டவள் நான் உங்களை விட நான் இஸ்லாத்தை அலசி ஆராய வேண்டி இருக்கிறது .....இங்கே நான் சொல்லவருவது இஸ்லாமிய வரலாறு இல்லை .... நண்பரே என்னைப் போன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களின் சந்தேகங்களுக்கான பதில் ...என்ன செய்ய .. நபி[சல்] அவர்கள் தனது 53 ஆவது வயதில் ஏன் 9 வயதான் ஆயிஷாவை மணந்துகொண்டார்கள் என்று கேட்கப் படும் போது உங்களைப் போன்ற பிறவி முஸ்லிம்களின் பதில் ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லையே ஏன் ?

பொறுத்துகொண்டு மேலே படியுங்கள் ராசா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 5

Post by நண்பன் on Sun 27 Nov 2011 - 11:27

jasmin wrote:சொந்த கதையில்தான் நாம் தெரிந்துகொண்ட விஷயங்களை தெளிவாக சொல்ல முடியும் ...இஸ்லாத்திலே பிறந்தவர் நீங்கள் ஏற்றுக்கொண்டவள் நான் உங்களை விட நான் இஸ்லாத்தை அலசி ஆராய வேண்டி இருக்கிறது .....இங்கே நான் சொல்லவருவது இஸ்லாமிய வரலாறு இல்லை .... நண்பரே என்னைப் போன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களின் சந்தேகங்களுக்கான பதில் ...என்ன செய்ய .. நபி[சல்] அவர்கள் தனது 53 ஆவது வயதில் ஏன் 9 வயதான் ஆயிஷாவை மணந்துகொண்டார்கள் என்று கேட்கப் படும் போது உங்களைப் போன்ற பிறவி முஸ்லிம்களின் பதில் ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லையே ஏன் ?

பொறுத்துகொண்டு மேலே படியுங்கள் ராசா
நீங்க என்னிடம் கேட்டீர்களா? அடி மடியில் கை வைக்கிறீர்கள் சொந்தக் கதை பாகம் 5 459498 சொந்தக் கதை பாகம் 5 459498 எழுதுங்கள் தெரியாத விளக்கங்களை தெரிந்து கொள்கிறோம் சொந்தக் கதை பாகம் 5 459498 சொந்தக் கதை பாகம் 5 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 5

Post by நிலாம் on Sun 27 Nov 2011 - 11:52

உங்கள் முயற்ச்சிக்கு இறைவன் இம்மையிலும் மறுமையிலும் கூலி வழங்குவானாக நல்ல கதைதான் தொடருங்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்
சொந்தக் கதை பாகம் 5 517195 சொந்தக் கதை பாகம் 5 517195
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 5

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 27 Nov 2011 - 12:55

jasmin wrote:சொந்த கதையில்தான் நாம் தெரிந்துகொண்ட விஷயங்களை தெளிவாக சொல்ல முடியும் ...இஸ்லாத்திலே பிறந்தவர் நீங்கள் ஏற்றுக்கொண்டவள் நான் உங்களை விட நான் இஸ்லாத்தை அலசி ஆராய வேண்டி இருக்கிறது .....இங்கே நான் சொல்லவருவது இஸ்லாமிய வரலாறு இல்லை .... நண்பரே என்னைப் போன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களின் சந்தேகங்களுக்கான பதில் ...என்ன செய்ய .. நபி[சல்] அவர்கள் தனது 53 ஆவது வயதில் ஏன் 9 வயதான் ஆயிஷாவை மணந்துகொண்டார்கள் என்று கேட்கப் படும் போது உங்களைப் போன்ற பிறவி முஸ்லிம்களின் பதில் ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லையே ஏன் ?

பொறுத்துகொண்டு மேலே படியுங்கள் ராசா

உண்மைதான் அவ்வாறு எதார்த்தமாக கேட்கப்படும் விடயங்களுக்கு விடைசொல்லத் தெரிவதில்லை அறியவுமில்லை காரணம் அதிகமானவர்கள் இஸ்லாத்தை அதிகமாக ஆராய்வதுமில்லை வரலாறுகளை படிப்பதுமில்லை இதுதான் இதற்கு காரணம் உங்களால் முடிந்திருக்கிறது அதை மற்றவர்களுக்கு எத்திவைப்பதன் மூலம் இன்னுமோர் படி உயர்ந்து நிற்கிறீர்கள் பாராட்டுகள்


சொந்தக் கதை பாகம் 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 5

Post by ஹம்னா on Sun 27 Nov 2011 - 13:23

நன்றி ஜாஸ்மின் தொடருங்கள் காத்திருக்கிறோம்.


சொந்தக் கதை பாகம் 5 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 5

Post by *சம்ஸ் on Sun 27 Nov 2011 - 13:34

நீங்கள் தேடி அறிந்தவைகளை அனைவரும் அறிந்து கொள்ள எங்களிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள் அருமையான விடையம் தொடருங்கள்.உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 5

Post by முனாஸ் சுலைமான் on Sun 27 Nov 2011 - 14:04

*சம்ஸ் wrote:நீங்கள் தேடி அறிந்தவைகளை அனைவரும் அறிந்து கொள்ள எங்களிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள் அருமையான விடையம் தொடருங்கள்.

@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 5

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum