சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

எகிப்து பொதுத் தேர்தல் திட்டமிட்டபடி ஆரம்பம்

Go down

Sticky எகிப்து பொதுத் தேர்தல் திட்டமிட்டபடி ஆரம்பம்

Post by *சம்ஸ் on Tue 29 Nov 2011 - 6:23

எகிப்து பொதுத் தேர்தல் திட்டமிட்டபடி ஆரம்பம்
நூற்றுக்கணக்கானோர் வரிசையில் காத்துநின்று வாக்களிப்பு
எகிப்தில் முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தமது வாக்குகளை அளித்தனர்.

எனினும் இராணுவ கவுன்ஸிலுக்கு எதிராக எகிப்து தலைநகர் தஹ்ரியார் சதுக்கத்தில் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டம் நீடித்து வருகிறது.

மூன்று தசாப்தமாக எகிப்தை ஆண்ட முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மக்கள் கிளர்ச்சி மூலம் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்கான முதலாவது தேர்தல் நேற்று ஆரம்பமானது. எனினும் பல தசாப்தங்களின் பின் எகிப்தில் சுயாதீனமான தேர்தல் ஒன்று நடைபெற்ற முதல் சந்தர்ப்பமாக இது பதிவானது.

இதில் கெய்ரோவிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்கக் காத்திருந்த 55 வயதான ஷரப் ஷினாவி, “தனது வாழ்நாளில் வாக்களிப்பது இதுதான் முதல்முறை” என்று சி. என். என். தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். “எகிப்து வரலாற்றில் மக்களுக்கு இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது இது தான் முதன்முறை. நான் இன்று 10 மணி நேரம் காத்து நின்றாவது அல்ல நாளைக்காவது எனது வாக்கை பதிவு செய்வேன்” என்று குறிபபிட்டார்.

இதில் பல வாக்குச் சாவடிகளிலும் குறித்த நேரத்தைவிடவும் தாமதித்தே வாக்குப்பதிவு ஆரம்பமானது. வாக்குச்சீட்டு மற்றும் உபகரணங்கள் வருவதற்கு தாமதமானதால் இந்த சிக்கலுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

எகிப்து பொதுத் தேர்தல் அட்டவணையின் முதல் கட்ட தேர்தலே நேற்று ஆரம்பமானது. நேற்று முக்கியமான நகரங்களான கெய்ரோ, அலச்சாண்ரியா போன்ற பகுதிகளில் தேர்தல் இடம்பெற்றது. இதில் 498 அங்கத்தவர்களில் 168 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.

மூன்று கட்டமாக நடைபெறும் எகிப்து பாராளுமன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடையவுள்ளது. இதில் எகிப்து பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான 508 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரம் மிக்க மேல் சபைக்கான 270 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இத்தேர்தலில் 40க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum