சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சொந்தக் கதை பாகம் 12 Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சொந்தக் கதை பாகம் 12 Khan11
சொந்தக் கதை பாகம் 12 Www10

சொந்தக் கதை பாகம் 12

Go down

Sticky சொந்தக் கதை பாகம் 12

Post by jasmin on Tue 6 Dec 2011 - 10:13
இப்படி கற்புக்கும் பேச்சுக்கும் அதன் உண்மையான உரிமைகளை பெண்களுக்கு தாராளமாக வழங்கும் இஸ்லாம் அதோடு நின்றுவிடவில்லை.திருமணம் என்ற ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கு தேவையான் முக்கியமான விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறது என்று பாருங்கள் .

நான் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன் என் தாத்தா இறந்து போன சமயம் எனக்கு 16 வயது நடந்துகொண்டு இருந்தது ..என் தந்தை இறந்த பின்னால் தரிகெட்ட தாயும் ஓடியதால் முக்கால் அனாதையாக இருந்த நான் என் தாத்தா இறந்த பிறகு முழு அனாதையானேன் ,பள்ளி இறுதிப் படிப்பை முடித்து கிராஃபிக் சைன்ஷ் வகுப்பில் சேர்ந்த சமயம் .

வருமானம் இல்லாத பாட்டி வகையின்றிப்போனார் . சுய நலக்காரர்களான என் தாய் மாமன்களும் நான் எப்படி ஒழிந்தாலும் சரி என்று வேண்டா வெறுப்பாக இருந்தனர் ,வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்கள் என் தாயின் நடத்தை பற்றி என் முன்னாலேயே மிகவும் அசிங்கமாக பேசி மகளும் இன்னும் சிறிது நாளில் யாரையாவது இழுத்துக்கொண்டு ஓடி விடுவாள் என்று சிரித்தனர்.

ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் மாலை வேலை செய்துகொண்டு என் படிப்பை தொடரந்தேன் .அந்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் எப்படியாவது என்னை தன் ஆசைக்கு இணங்க வைத்து விடுவது என்று போராடினார் ,என் தாய் செய்துவிட்டுப் போன அசிங்கம் இனி எங்கள் குடும்பத்தில் நடந்துவிடக்கூடாது என்று நானும் என் தங்கையும் உறுதியாக இருந்தோம் .

மூன்று வருட காலம் என் வாழ்வில் மிகவும் சோதனையாக கட்டம் . நான் அழுகாத இரவுகள் மிக சில.ஒரு வழியாக என் படிப்பை முடித்து நான் வேலையில் சேர்ந்த சமயம் ஓரளவு வருமானம் வந்தது .எனக்கு கொஞ்சம் தன்னம்பிக்கை வந்தது.என் மாமன்களிடம் எனக்கு கொஞ்சம் மரியாதை கிடைத்தது ,அந்த மரியாதை எனக்கல்ல என் பணத்திற்கு என்பது கண்கூடு.

அந்த சமயத்தில் பல வரன்கள் எனக்கு வந்தன. ஆனால் வந்தவர்கள் எல்லாம் என் அழகை புகழ்ந்தாலும் பொன்னும் பொருளும் இரக்கமில்லாமல் கேட்டனர் .மற்றவர்களைக் காட்டிலும் என் தாயின் செய்கையை சுற்றிக்காட்டி கொஞ்சம் அதிகமாகவே கேட்டனர்.அதனால் என் தாய்மாமன்கள் பின் வாங்கினார்கள்.

நானும் வரதட்சணை கேட்கும் யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று வியாக்கியானம் பேசினேன்,ஆனால் அது உண்மையல்ல இயலாமை.இப்படி பேசிக்கொண்டு இருந்தாலும் நீ கிழவியாக சாகவேண்டியதுதான் என்று எல்லோரும் சொன்னார்கள். நானும் பரவாயில்லை வேறு என்ன செய்வது என்று இருந்தேன் .அப்போதுதான் என் தாய்மாமன் மூலம் என் கணவர் எங்களுக்கு அறிமுகம் ஆனார் .

அறிமுகம் ஆன் புதிதில் எங்களோடு நன்றாக பழகிய அவர் அடிக்கடி என்னைப் பார்க்க ஆரம்பித்தார் .என் கதையைக் கேட்டு இவர் பரிதாபப்படுகிறாரா அல்லது என்னை சும்மா மற்றவர்கள்போல் சைட் அடிக்கிறாரா என்று தெரியாமல் நான் குழம்பிப்போனேன்.அவர் எதார்த்தமாக சிரிக்கும்போது நானும் லேசாக புன்னகை பூத்து மனதிற்குள் நாசமா போறவன் பொண்ணுகன்னா இளிக்கிறதப் பாரு என்று மனதில் நினைத்துக்கொள்வேன்.

ஆனால் என்னைப் பார்த்து எதார்த்தமாக சிரித்த என் கணவர் ஒரு முறைகூட அதற்குமேல் எதுவும் செய்தது இல்லை.அதனால் அவருடைய நடத்தைகளை ஆராய்ந்த நான் அவர் சுவாபமே யாரைப் பார்த்தாலும் இளிப்பது என்பதை அறிந்துகொண்டேன்.இப்படி இருக்கையில் ஒரு நாள் அவர் எங்கள் குடும்பத்தில் ஒரு பெரிய குண்டை தூக்கிப்போட்டார் .என்னை திருமணம் செய்ய விரும்புவதாக சொன்னார்.

அவர் அப்படி சொன்னதும் என் குடும்பத்தில் பெரிய பூகம்பம வெடித்தது.அவருடைய குடும்பத்தோடு ஒப்பிடுகையில் எங்கள் குடும்பம் ஒரு கடுகளவுகூட சமமாக முடியாது.பொருளாதாரத்திலும் ,சமூக அந்தஷ்திலும் ,படிப்பிலும் மிக மிக உயரத்தில் இருந்த அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் .அசிங்கமான தாய்க்கு பிறந்து ஏழையாக இருந்த என்னை திருமணம் செய்ய விரும்பியது ஒருபுறம் வித்தியாசமாக இருந்தாலும் இடையில் பெரிய தடையாக இருந்தது மதம்.

அப்போது இதை எப்படியாவது தட்டிக்கழித்துவிட எண்ணிய என் தாய்மாமன்கள் என் கணவரை சும்மா சமாதனப் படுத்தி[அவரிடம் இவர்கள் அதிகம் காரியம் ஆக வேண்டி இருந்தது] தட்டிக்கழிக்க கண்டுபிடித்த ஆயுதம் சீர்வரிசையும் வரதட்சணையும் .ஆனால் அதுவே அவர்களுக்கு எதிராக போனது என் கணவர் சாந்திக்கு இதில் சம்மதம் என்றால் அவள் கேட்கும் சீரை நான் கொடுத்து திருமணம் செய்து கொள்கிறேன் யாரும் சல்லி காசுகூட செலவு செய்ய வேண்டியது இல்லை என்றார்.

இது எனக்கு வித்தியாசமாக தெரிந்தது ,அவர் அழகு ,படிப்பு பதவி எல்லாம் என்னைக் கவர்ந்தாலும் இறுதியில் அவர் சொன்ன வார்த்தை என்னை திகைக்க வைத்தது .உடனே நான் எனக்கு சம்மதம்தான் ஆனால் நான் கேட்கும் சீரை தருகிறேன் என்று சொல்கிறாரே பத்து லட்சம் தருவாரா என்று கேட்டேன் .[உள்ளுக்குள் என் கணவர் எழுந்து ஓடுவதை கற்பனை செய்துகொண்டே]

ஆனால் அந்த மனிதன் எழுந்து ஓடவில்லை தலையை குனிந்து சிரித்துக்கொண்டேஅவள் பர்டிகுலர்சை தாருங்கள் ஃபிக்சட் டெபாசிட்டில் பணத்தை போட்டு விடலாம் என்றார்.எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்திற்கே தூக்கி வாரிப்போட்டது .இதில் சிலர் பயம் காரணமாக கலண்டு கொண்டனர்.என் மாமன் அவரிடம் மூன்று நாள் டயம் கேட்டார்.பின் நாங்கள் கூடி விவாதித்தோம் .

என் மாமன்மாரின் மனைவிகள் இது வேண்டாம் என்று பொறாமையில் சொன்னார்கள்.ஆனால் நான் பிடிவாதமாக அவரையே திருமணம் செய்வேன் என்றேன் .என் தங்கையும் அதற்கு ஆதரவு தந்தாள். நான் என் கணவரை தனியாக சந்தித்து எனக்கு பணம் வேண்டாம் சும்மா கிண்டலுக்குத்தான் நான் சொன்னேன் நீங்கள் விரும்பினால் நான் உங்களை எதுவுமே வாங்காமல் திருமணம் செய்து கொள்கிறேன் என்றேன் .ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டு தான் வாக்களித்தபடி நான் சும்மா கேட்ட தொகையை நிஜமாகவே தந்து என்னை திருமணம் செய்து கொண்டார்.ஓட்டாண்டியாக இருந்த நான் ஒரே நாளில் லட்சாதிபதியாகிப்போனேன்.

எங்கள் திருமணம் மிக எளிய இஸ்லாமிய முறையில் நடந்தது.பின்னால் என் கணவர் என்னை பொன்னால் அலங்கரித்தார் .அப்போதுதான் நான் இஸ்லாத்தில் ஒரு பெண் திருமணத்திற்காக அட்வான்ஷ் ஜீவனாம்ஷமாக ஒரு பெரிய மலை அளவு தங்கத்தைகூட கேட்டு வாங்கலாம் என்று அறிந்து கொண்டேன்.[என் கணவர் என்னை ஏமாற்றி இருக்கிறார் ...சும்மா]

இப்போது சொல்லுங்கள் இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமை கொடுப்பது யார் ..இவர்களா,இல்லை இஸ்லாமா?

அது மட்டுமல்ல ஒரு பெண் இறந்து விட்டால் இவர்களின் நிலை எப்படி இருக்கிறது தெரியுமா....ஆண் புது மாப்பிள்ளையாகிவிடுவான் .ஆனால் பெண்.....கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் வரை இந்தியாவில் ராஜஷ்தானில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது .அதாவது கணவன் இறந்தால் அவனை எரிக்கும்போது அந்த பெண்ணையும் சேர்த்து எரித்து விடுவார்கள்.என்னே கொடுமை சார் இது?

சரி உடன்கட்டை ஏறும் வழக்கம் இப்போது இல்லை ஆனால் ஒரு விதவைக்கு இன்று இவர்கள் கொடுக்கும் மரியாதை என்ன.....வெள்ளை உடை அணிந்து பொட்டு பூ வைக்காமல் மூலியாக இருக்க வேண்டும்.அதாவது இவள் விதவை என்று மற்றவர்கள் அறியவேண்டும்.இன்னும் ஏதாவது நல்ல விஷேஷங்களில் இவர்களை சேர்க்க மாட்டார்கள்.

ஆனால் இஸ்லாம் இதை எப்படி அணுகியது .... நபிகள்[சல்] அவர்கள் காலத்தில் விதவைகள் எப்படி நடத்தப்பட்டார்கள் தெரியுமா? கணவன் இறந்து விடடாலோ அல்லது விவாகரத்து செய்தாலோ அவர்கள் பொது சொத்தாகி விடுவார்கள் .யார் வேண்டுமானலும் போய் அவர்களை தங்கள் இச்சைக்கு அழைக்கலாம்.அப்படிப்பட்ட மிருக வாழ்க்கை வாழந்த மனிதர்களிடையே வந்த அந்த மனிதருள் புனிதர் என்ன செய்தார் .

தான் கட்டிளம் காளையாக் இருந்தபோதுகூட தன்னைவிட 15 வயது மூத்த இரண்டுமுறை விதவையான ஒரு பெண்ணை மணந்துகொண்டார் .இதுதான் அந்த சமுதாயத்தில் விதவைப் பெண்களுக்கு கிடைத்த முதல் மறுமலர்ச்சி .இந்த திருமணம் நடந்த பிறகு அந்த சமூகத்தில் யாரும் விதவைப்பெண்ணை அனுக முடியவில்லை.அப்படி அணுகினாலும் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டார்கள் .

இது விதவைப் பெண்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முழு பாதுகாப்பு சுதந்திரம் .ஒரு கணவன் இறந்து விட்டாலோ அல்லது விவாகரத்து செய்யப்பட்டாலோ அந்த பெண் கரு அறியும் காலம் [இத்தா] முடிந்தவுடன் புது பெண்ணாக மறு திருமணத்திற்கு தயாராகி விடுகிறாள்.இப்பொது சொல்லுங்கள் பெண்களின் திருமண உரிமை காப்பது இவர்களா அல்லது இஸ்லாமா? தொடரும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 12

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 10:32

நல்லதொரு சிறப்பான முன்னுதாரணத்தை முன் வைத்துள்ளீர்கள் அத்தோடு உங்கள் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களும் சாட்சியாக உள்ளது மிக்க மகிழ்ச்சி.

இது விதவைப் பெண்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முழு பாதுகாப்பு சுதந்திரம்
.ஒரு கணவன் இறந்து விட்டாலோ அல்லது விவாகரத்து செய்யப்பட்டாலோ அந்த பெண்
கரு அறியும் காலம் [இத்தா] முடிந்தவுடன் புது பெண்ணாக மறு திருமணத்திற்கு
தயாராகி விடுகிறாள் நிச்சியமாக இது உண்மைதான் இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் இஸ்லாம் விதவைக்கு வாழ்வளிக்கிறது அவர்களும் சமூகத்தில் சிறந்தவர்களாக வாழ வழி செய்கிறது அருமையாகச் சொன்னீர்கள் ஜாஸ்மின் தொடருங்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 12

Post by *சம்ஸ் on Tue 6 Dec 2011 - 14:11

அருமையான தொடர் உண்மையை உள்ளம் திறந்து பேசுவது அதில் இருந்து அறியாத அறிந்த விடையங்கள் நாங்களும் படித்து அறிந்து கொள்ள கிடைக்கிறது உங்களின் வாழ்கையில் இன்னும் இன்னும் சிறப்புடன் திகழ எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 12

Post by ஹம்னா on Wed 21 Dec 2011 - 15:27

*சம்ஸ் wrote:அருமையான தொடர் உண்மையை உள்ளம் திறந்து பேசுவது அதில் இருந்து அறியாத அறிந்த விடையங்கள் நாங்களும் படித்து அறிந்து கொள்ள கிடைக்கிறது உங்களின் வாழ்கையில் இன்னும் இன்னும் சிறப்புடன் திகழ எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
@. @. @.


சொந்தக் கதை பாகம் 12 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 12

Post by முனாஸ் சுலைமான் on Wed 21 Dec 2011 - 20:50

என் மாமன்மாரின் மனைவிகள் இது வேண்டாம் என்று பொறாமையில் சொன்னார்கள்.ஆனால் நான் பிடிவாதமாக அவரையே திருமணம் செய்வேன் என்றேன் .என் தங்கையும் அதற்கு ஆதரவு தந்தாள். நான் என் கணவரை தனியாக சந்தித்து எனக்கு பணம் வேண்டாம் சும்மா கிண்டலுக்குத்தான் நான் சொன்னேன் நீங்கள் விரும்பினால் நான் உங்களை எதுவுமே வாங்காமல் திருமணம் செய்து கொள்கிறேன் என்றேன் .ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டு தான் வாக்களித்தபடி நான் சும்மா கேட்ட தொகையை நிஜமாகவே தந்து என்னை திருமணம் செய்து கொண்டார்.ஓட்டாண்டியாக இருந்த நான் ஒரே நாளில் லட்சாதிபதியாகிப்போனேன்.

எங்கள் திருமணம் மிக எளிய இஸ்லாமிய முறையில் நடந்தது.பின்னால் என் கணவர் என்னை பொன்னால் அலங்கரித்தார் .அப்போதுதான் நான் இஸ்லாத்தில் ஒரு பெண் திருமணத்திற்காக அட்வான்ஷ் ஜீவனாம்ஷமாக ஒரு பெரிய மலை அளவு தங்கத்தைகூட கேட்டு வாங்கலாம் என்று அறிந்து கொண்டேன்.[என் கணவர் என்னை ஏமாற்றி இருக்கிறார் ...சும்மா]

இப்போது சொல்லுங்கள் இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமை கொடுப்பது யார் ..இவர்களா,இல்லை இஸ்லாமா?
ஆச்சரியமாக இருக்கிறது சில விசயங்கள் வாழ்த்துக்கள் சகோதரி ஜாஸ்மின்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சொந்தக் கதை பாகம் 12

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum