சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பூனை குறுக்கே போனால் சகுனமாம்  பூசாரி குறுக்கே வந்தால் புண்ணியம் கிடைக்குமாம்!  Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பூனை குறுக்கே போனால் சகுனமாம்  பூசாரி குறுக்கே வந்தால் புண்ணியம் கிடைக்குமாம்!  Khan11
பூனை குறுக்கே போனால் சகுனமாம்  பூசாரி குறுக்கே வந்தால் புண்ணியம் கிடைக்குமாம்!  Www10

பூனை குறுக்கே போனால் சகுனமாம் பூசாரி குறுக்கே வந்தால் புண்ணியம் கிடைக்குமாம்!

Go down

Sticky பூனை குறுக்கே போனால் சகுனமாம் பூசாரி குறுக்கே வந்தால் புண்ணியம் கிடைக்குமாம்!

Post by முனாஸ் சுலைமான் on Tue 7 Feb 2012 - 17:23

பூனை குறுக்கே போனால் சகுனமாம்  பூசாரி குறுக்கே வந்தால் புண்ணியம் கிடைக்குமாம்!  395335_260832427318383_100001748841680_585243_984646337_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பூனை குறுக்கே போனால் சகுனமாம் பூசாரி குறுக்கே வந்தால் புண்ணியம் கிடைக்குமாம்!

Post by முனாஸ் சுலைமான் on Tue 7 Feb 2012 - 17:23

பூனை குறுக்கே போனால் சகுனமாம்
பூசாரி குறுக்கே வந்தால் புண்ணியம் கிடைக்குமாம்!

புத்தி கெட்டவர்கள் போதித்த பொய்ப்புராண கதைகள்!
சாஸ்திரம், சம்பிராதயம் பார்த்து நாம் எதை சாதித்துவிட்டோம்?

நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இழந்தது அதிகமா? அல்லது பெற்றது அதிகமா என்று பார்த்தால் இழப்புத்தான் மிஞ்சியது. காரணம் இறைவன் உதவியால் நம்மீது நம்பிக்கையில்லாமல் அடுத்தவரின் மூடநம்பிக்கை வார்த்தைகளை நம்பி நாம் வீணாகிக் கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை. ஆனால் அதன் தாகம் தற்போது அல்லாஹ்வின் உதவியால் மறைந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு மிகப்பெரிய அளவின் மாற்றம் கண்டுள்ளது என்பதை நினைக்கும்போது மனதுக்கு பெரிய சந்தோசமாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்...!

ஆனாலும் இன்னும் நம்மில் பலருக்கு இந்த குணங்கள் மாறவில்லை. இதற்கு துணைபோகும் சில மார்க்கவாதிகள் (ஹஜரத்) வழிநடத்தி துனைசெல்கிரார்கள் என்றால் ஆச்சரியப்படுவதில் ஒன்றுமில்லை. இன்னும் நம்மில் பலருக்கு மூடநம்பிக்கையான விசயம் உள்ளத்தில் குடிகொண்டு இருக்கிறது. மார்க்கம் அறிந்த ஹஜரத்மார்களே உண்மையை மறைத்துக்கொண்டு லாபம் ஈட்டவேண்டும் என்கிற அடிப்படையில் பலதவருக்கு வழிவகுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். இதனால் திருந்தக் கூடிய மக்களும் சந்தேகநோக்கத்துடன் சிர்க்கை சிங்காரமாக்குகிறார்கள் என்பது உண்மை.

ஒருவர் முதன்முதலாக வேலைக்கு செல்லும்போதோ? அல்லது வெளியூர் செல்லும்போது அல்லது ஏதாவது ஒருகாரியத்திற்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது நமது குறுக்கே பூனையா அல்லது விதவைப் பெண்ணோ அல்லது காலிக் குடத்துடன் ஒரு பெண்ணோ வந்தால் செல்ல மாட்டார்கள். இதை கவனிக்க ஒருநபர் வீட்டின் வெளிய வந்து பார்ப்பார்கள். அந்த நபர்கள் சென்ற உடன் இம் நீங்கள் போகலாம் என்று வீட்டில் காத்திருப்பவர்களை வெளியே அனுப்பி வைப்பார்கள்.

இதேபோல் ஒருகாரியத்திற்கு செல்லுமுன் நேரம் பார்ப்பார்கள். இப்போ செல்வது நல்ல நேரமா? அல்லது கெட்ட நேரமா? அல்லது இராகு காலமா? கடைசியிலே நல்ல நேரம்பார்த்து செல்வதினால் எதுவும் விளங்காது இப்படி மூட நம்பிக்கையில் செல்வதினால். இறைவன் சில படிப்பினையை கொடுத்துவிடுகிறான்.

அதேபோல் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மந்திரித்து பார்ப்பது, தாயத்து போடுவது, தட்டு என்ற பேப்பரில் குரான் வசனம் எழுதிகொடுத்து தண்ணீரில் கரைத்து குடிக்க சொல்வது, கணக்குப் போட்டு பார்ப்பது, பால்கிதாப் என்ற பலவகையிலும் மக்களை ஏமாற்றி குழப்பங்கள் செய்து சம்பாதித்துக் கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். இஸ்லாத்தில் எது கூடாதோ அதைத்தான் நம்மக்கள் விரும்பி செய்கிறார்கள். ஏன் நரகத்திற்கு செல்வதற்குதான்! இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.!

பூனை குறுக்கப்போனால் அனைத்து காரியம் கெட்டுவிடுமா? அப்படிஎன்றால் ஒருநாளைக்கு எத்தனை பூனை என் குறுக்கே செல்கிறது. அப்போ இந்த சகுனம் எங்கே போய்விட்டது. சகுனம் பூனையின் மீதல்ல. நமது எண்ணத்தின் மீது என்பதை நன்கு புரிந்துகொள்ளவேண்டும். என்றைக்கு பூனை குறுக்கே போகவில்லையோ அன்று எனக்கு ரொம்ப போர் அடிக்கும். காரணம் நம்முடன் சுய சிந்தனை இல்லை, தன்னம்பிக்கை இல்லை, இறைவனை நினைப்பதில்லை என்பது தான் முக்கிய கரணம்.

அடுத்து நேரம் பார்ப்பது! நமக்கு எங்கே நேரம் பார்க்க டைம் இருக்கிறது. சாப்பிடக்கூட நேரம் கிடைக்க மாட்டேன்கிறது அந்தளவிற்கு பிசி. ஒவ்வொரு மனிதனுக்கு இறைவனின் நாட்டமும், தன்னம்பிக்கையும், உழைப்பின் வேகமும், விவேகமும் இருந்தால் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். முட்டாள்தனமாக சிந்திப்பர்வர்களுக்கு தான் எல்லாநேரமும் கெட்ட நேரமும். ஏன் இன்னும் சொல்லப்போன அவர்கள் இவ்வுலகிற்கு வந்ததே கேட்டநேரம்தான். இன்னும் சொல்லப்போனால் முகநூளில் யாருடைய லைக் இல்லாவிட்டாலே கெட்ட (போர்) நேரம் என்று நினைக்கும் அளவிற்கு மக்களின் என்னம் மாறிவிட்டது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பூனை குறுக்கே போனால் சகுனமாம் பூசாரி குறுக்கே வந்தால் புண்ணியம் கிடைக்குமாம்!

Post by முனாஸ் சுலைமான் on Tue 7 Feb 2012 - 17:23

நல்ல இல்லறவாழ்க்கையை துளைத்துவிட்டு அன்பான கணவனை பறிகொடுத்துவிட்டு இறைவனின் சோதனைக்கு ஆளாகி இருக்கும் விதவைப் பெண்ணை பார்த்து கவலைப்படாமல் அவரகளி நமது சமுதாயம் ஒதுக்குகிறது. காரணம் அவர்களை கண்டால் எதுவும் விளங்காதாம். இப்படி சொல்கிறவர்கள் தான் மிகவும் கெட்டவர்களாகவே இருப்பார்கள். நல்லவர்களை சொதிப்பதால் அல்லாஹ்வின் உதவியால் விதவை கோலத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிவதில்.

வீட்டில் டீ குடிக்க பால்காரனிடம் பால் வாங்கியிருப்பார். பால்கொடுத்த பால்காரன் கணக்கை தூக்கிக்கொண்டு மந்திரவாதி வீட்டிற்கு வந்து காசு கேட்பார். இவர் பால்வான்கிவிட்டு பால்காரனை இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று இழுத்தடிப்பார். ஆனால் பலருக்கு பால்கிதாப் போட்டு குரிசொல்கிறார். எப்படி இருக்கிறது! இவர் கடனை இவரால் அடைக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது அடுத்தவருக்கு நல்லது நடக்கும் என்று எப்படி தெரியும். இன்னும் பல விசயம் அடுக்கிக்கொண்டே போகலாம்..இன்ஷா அல்லாஹ்...!

ஆகவே பூனை குறுக்கே சென்றாலும், யானை குறுக்கே சென்றால் எந்த காரியமும் கெட்டுவிடுவதில்லை. அடுத்து திங்கட்கிழமை நல்ல நாள், செவ்வாய் கிழமை கெட்ட நாள், புதன்கிழமை பொன் கிடைக்கும் நாள் என்று எல்லாம் இறைவன் படைக்கவில்லை. அனைத்தையும் நல்லநாளாகவே படைத்திருக்கிறான். முதலில் நல்ல என்னத்தை வளர்த்துக்கொண்டு, தன்னம்பிக்கையோடு வாழவேண்டும்.

நாம் இதுபோன்று வாழ்வதால் இறைவனை பலிசுமத்துகிறோம் என்பது தான் உண்மை. நமக்கு இப்படித்தான் நடக்கும் என்று இறைவனின் ஏட்டில் இருந்தால் அதன்படியே அனைத்தும் நடந்து கொண்டியிருக்கும். விதியை மதியால் வெல்ல முடியாது! வாழ்க்கையின் விதி வேறு, மதி வேறு!
ஆனால் இறைவன் விதித்த விதியின்படி மதியோடு அனுதினமும் அல்லாஹ்வின் குரான் வசனத்தையும் புரிந்துகொண்டு ஓதி, முஹம்மது நபி ஸல் (அலை) அவர்களின் ஹதீஸின்படி வாழ்த்து தொழுகையை விட்டுவிடாமல் பொறுமையோடு பிழைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்....! சைத்தானின் தீண்டல் உங்களிடம் இருக்காது. அனைத்துலகத்திலும் உங்களின் வாழ்வும் பிரகாமாக இருக்கும்.

முயற்சி செய்யுங்கள்...! மூட நம்பிக்கையை விட்டு விலகுவதற்கு!
தெளிவுப்பெருங்கள் திருக்குரானின் வசனப்படி நடந்து கொள்வதற்கு!
பயிற்சிப் பெறுங்கள் முஹம்மது நபி ஸல் (அலை) ஹதீஸின்படி வாழ்வதற்கு!
இன்ஷா அல்லாஹ்...! உங்களின் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும்...!
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பூனை குறுக்கே போனால் சகுனமாம் பூசாரி குறுக்கே வந்தால் புண்ணியம் கிடைக்குமாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum