சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 Khan11
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 Www10

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Page 2 of 37 Previous  1, 2, 3 ... 19 ... 37  Next

Go down

Sticky வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Tue 21 Feb 2012 - 15:40

First topic message reminder :

பெப்ரவரி 19
1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.
1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.
1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.

1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.
1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.
1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.
1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Wed 28 Mar 2012 - 9:17

மார்ச் 28

193: ரோமானிய சக்கரவர்த்தி பேர்டினக்ஸ் படுகொலை செய்யப்பட்டார்.
1930: துருக்கியின் கொன்ஸ்தாந்திநோபிள், அங்கோரா ஆகிய நகரங்கள் முறையே இஸ்தான்புல், அங்காரா என பெயர்மாற்றப்பட்டன.
1979: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் மைல் ஐலன்டிலுள்ள அணுஉலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தினால் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டது. 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், அப்பிராந்தியத்தில் வேறு பகுதிகளை விட அதிக எண்ணிக்கையானோர் புற்றுநோய்குள்ளாக்கியிருந்தமை கண்டறியப்பட்டது.
1999: கொசோவோவில் 146 அல்பேனியர்கள் சேர்பிய படைகளால் கொல்லப்பட்டனர்.
2005: இந்தோனேஷியாவின் சுமத்ரா பகுதியில் 8.7 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.
2006: பிரான்ஸில் வேலைவாய்ப்பு ஒப்பந்த சட்டத்தை எதிர்த்து சுமார் 10 லட்சம் பேர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Sun 1 Apr 2012 - 10:19

மார்ச் 31

1866: சிலியின் வல்பரைஸோ துறைமுகம் மீது ஸ்பானிய கடற்படை தாக்குதல் நடத்தியது.
1889: பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரம் திறந்துவைக்கப்பட்டது.
1909: பொஸ்னியா மற்றும் ஹேர்ஸகோவினா பிராந்தியத்தை ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதை சேர்பியா ஏற்றுக்கொண்டது.
1917: டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடமிருந்து 25 மில்லியன் டொலருக்கு வாங்கிய அமெரிக்கா அதை வேர்ஜின் தீவுகள் என பெயர்மாற்றம் செய்தது.
1918: அஸர்பைஜனர் சிவில் யுத்தத்தில் 3000 இற்கு அதிகமானோர் பலியாகினர்.
1921: ரோயல் அவுஸ்திரேலிய கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.
1931: நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 2000 பேர் பலியாகினர்.
1959: 14 ஆவது தலாய் லாமா டென்ஸின் கயாட்ஸோ திபெத்திலிருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்றார்.
1966: சோவியத் யூனியனின் லூனா 10 விண்காலம், சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்த முதலாவது விண்கலமாகியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Sun 1 Apr 2012 - 10:20

ஏப்ரல் 1

325: சீனாவில் 4 வயதான ஜின் செங்டி தனது மன்னராக நியமிக்கப்பட்டார்.
1867: சிங்கப்பூர் பிரிட்டனின் காலனியாகியது.
1873: பிரித்தானிய கப்பலொன்று மூழ்கியதால் 547 பேர் பலி.
1918: பிரித்தனரிய விமானப்படை உருவாக்ப்பட்டது.
1924: ஜேர்மனியில் அடோல்வ் ஹிட்லர் கிளர்சியில் பங்கேற்றமைக்காக 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1946: ஹவாய் தீவில் சுனாமி தாக்கியதால் 159 பேர் பலி.
1949: அயர்லாந்து குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.
1957: சுவிட்ஸர்லாந்தில் 'நூடில்ஸ் பயிர்ச்செய்கை' நடைபெறுவதகா பிபிசியில் ஒளிபரப்பான ஏப்ரல் முட்டாள் தின விவரணமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1979: ஈரானை இஸ்லாமிய குடியரசாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் 98 சதவீதமானோர் ஆதரவளித்து வாக்களித்தனர்.
1992: பொஸ்னிய யுத்தம் ஆரம்பமானது.
2001: யுத்த குற்றச்சாட்டுக்குள்ளான யூகோஸ்லாவிய முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் சரணடைந்தார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Sat 7 Apr 2012 - 10:55

ஏப்ரல் 06

1917: முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக அமெரிக்கா போர் பிரகடனம் செய்தது.
1919: இந்தியாவில் மகாத்மா காந்தி பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்.
1930: மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார்.
1965: முதலாவது தகவல் தொடர்பு செய்மதியான ஏர்லி பேர்ட் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1994: ருவாண்டா ஜனாதிபதி ஜூவெனல் ஹபியாரிமானாவும் புரூண்டி ஜனாதிபதி சைபிரியன் என்டயாமிராவும் பயணம் செய்த விமானம் ருவாண்டாவில் சுட்டுவீழ்த்தப்பட்டதில் இருவரும் பலியாகினர்.
2005: ஈராக்கில் குர்திஷ் தலைவரான ஜலால் தலபானி பிரதமரானார்.
2009: இத்தாலியில் 6.3 ரிச்சடர் அளவிலான பூகம்பம் தாக்கியதால் 307 பேர் பலி.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 Ruwanda


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Sat 7 Apr 2012 - 10:56

ஏப்ரல் 07

1927: முதலாவது தொலைதூர தொலைக்காட்சி ஒளிபரப்பு வாஷிங்டன் டி.சி நகரிலிருந்து நியூயோர்க் நகருக்கு மேற்கொள்ளப்பட்டது.
1939:அல்பேனியா மீது இத்தாலி படையெடுத்தது.
1943: உக்ரேனின் டேராபோவ்லியா நகரில் 1100 யூதர்கள் உள்ளாடைகள் வரை ஆடைகள் களையப்பட்டு அருகிலுள்ள கிராமொன்றுக்கு பேரணியாக கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1946: பிரான்ஸிடமிரந்து சிரியா சுதந்திரம் பெற்றது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
1948: உலக சுகாதார ஸ்தாபனம் ஐ.நாவினால் அமைக்கப்பட்டது.
1978: நியூத்திரன் குண்டு தயாரிப்புத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஒத்திவைத்தார்.
2003: அமெரிக்கத் துருப்புகள் ஈராக்கின் பாக்தாத் நகரை கைப்பற்றின.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Sun 8 Apr 2012 - 11:28

ஏப்ரல் 07

1927: முதலாவது தொலைதூர தொலைக்காட்சி ஒளிபரப்பு வாஷிங்டன் டி.சி நகரிலிருந்து நியூயோர்க் நகருக்கு மேற்கொள்ளப்பட்டது.
1939:அல்பேனியா மீது இத்தாலி படையெடுத்தது.
1943: உக்ரேனின் டேராபோவ்லியா நகரில் 1100 யூதர்கள் உள்ளாடைகள் வரை ஆடைகள் களையப்பட்டு அருகிலுள்ள கிராமொன்றுக்கு பேரணியாக கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1946: பிரான்ஸிடமிரந்து சிரியா சுதந்திரம் பெற்றது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
1948: உலக சுகாதார ஸ்தாபனம் ஐ.நாவினால் அமைக்கப்பட்டது.
1978: நியூத்திரன் குண்டு தயாரிப்புத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஒத்திவைத்தார்.
2003: அமெரிக்கத் துருப்புகள் ஈராக்கின் பாக்தாத் நகரை கைப்பற்றின.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Sun 8 Apr 2012 - 11:31

ஏப்ரல் 08

1929: இந்திய சுதந்திர போராட்டத்தின்போது பகத் சிங், பதுகேஷ்வர் தத் ஆகியோர் டெல்லி சட்டசபையில் குண்டுவீசினர்.
1950: இந்தியாவும் பாகிஸ்தானும் லியாகத் - நேரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 India4
1961: பாரசீக வளைகுடாவில் எம்.வி. தாரா கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பவத்தில் 281 பேர் பலி.
1970: எகிப்தில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டுவீசியதால் 46 பாடசாலை சிறார்கள் பலி.
1973: உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காஸோ காலமானார்.
1985: சுமார் 2000 பேர் பலியான போபால் விச வாயு கசிவுக்கு சம்பவத்திற்காக யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக இந்தியா வழக்குத் தொடுத்தது.
1992: இதய சத்திர சிகிச்சைக்கான குருதி பரிமாற்றத்தின் மூலம் தனக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டதாக ஓய்வு பெற்ற அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான ஆர்தர் ஆஷ் அறிவித்தார்.
2004: டார்பூர் மோதலை முடிக்கு கொண்டுவரும் முகமாக சூடான் அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
2005: பாப்பரசர் 2 ஆம் அருளப்பர் சின்னப்பரின் இறுதிக்கிரியையில் சுமார் 40 லட்சம் பேர் பங்குபற்றினர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Tue 10 Apr 2012 - 11:49

ஏப்ரல் 09

1867: ரஷ்யாவிடமிருந்து அலாஸ்கா பிராந்தியத்தை வாங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.

1947: அமெரிக்காவின் கான்ஸாஸ் பிராந்தியத்தில் ஏற்பட்ட டோர்னாடோ சூறாவளியினால் 181 பேர் பலி.

1957: சில மாதங்களாக மூடப்பட்டிருந்த சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

1967: போயிங் 737 ரக விமானத்தின் கன்னிப் பறப்பு இடம்பெற்றது.

1992: பனாமாவின் முன்னாள் சர்வாதிகாரி மனுவல் நொரிகாவுக்கு போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை விதித்தது.

1999: நைஜீரிய ஜனாதிபதி இப்ராஹிம் பாரே மெய்னாஸ்ஸரா சுட்டுக்கொல்லப்பட்டார்.

2003: பாக்தாத் நகரம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததையடுத்து ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் பாரிய உருவச்சிலை வீழ்த்தப்பட்டது.

2005: பிரித்தானிய முடிக்குரிய இளவரசர்ஸுக்கும் கமீலா பார்கருக்கும் திருமணம் நடைபெற்றது.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 Suez21


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Tue 10 Apr 2012 - 11:50

ஏப்ரல் 10

1815: இந்தோனேஷியாவின் தாம்போரா எரிமலை வெடிப்பினால் சுமார் 71,000 பேர் பலி. இவர்களில் 11,000 பேர் நேரடியாகவும் ஏனையோர் பஞ்சம் மற்றும் நோய்களினால் இறந்தனர்.
1912: டைட்டானிக் கப்பல், இங்கிலாந்தின் சௌதம்டன் துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
1963: அமெரிக்க நீர்மூழ்கியொன்று கடலில் மூழ்கியதால் 129 பேர் இறந்தனர்.
1972: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 5,200 பேர் பலியாகினர்.
1998: 30 வருட கால வட அயர்லாந்து மோதலை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக பெரிய வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.
1972: உயிரியல் ஆயுத தடுப்பு உடன்பாட்டில் 74 நாடுகள் கையெழுத்திட்டன.
2010: போலந்து விமானப்படை விமானம் ரஷ்யாவில் விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த போலந்து ஜனாதிபதி லேச் கஸின்ஸிக் உட்பட 96 பேர் பலி.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 Volcanom


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Wed 11 Apr 2012 - 11:20

ஏப்ரல் 11

1865 – ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்.

1955 – ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலா ளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

1957 – பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.

1970 – அப்போலோ 13 ஏவப்பட்டது.

1979 – தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பா லாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.

1869 – கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (இ. 1944) பிறந்த நாள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by பானுஷபானா on Thu 12 Apr 2012 - 14:29

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 331844 வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 331844 வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 331844 வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Sat 14 Apr 2012 - 9:55

ஏப்ரல் 13


1796: இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு யானையொன்று கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவில் காணப்பட்ட முதலாவது யானை இது.
1849: ஹங்கேரி குடியரசாகியது.
1919: ஜாலியன் வாலாபாக் படுகொலை: இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பிரித்தானிய படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால் 379 பேர் பலி.
1945: ஜேர்மன் படையினரால் ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் இராணுவ கைதிகள் கொல்லப்பட்டனர்.
1970: சந்திரனில் தரையிறங்குவதற்காக 3 விண்வெளி வீரர்களுடன் சென்ற அப்பலோ விண்கலத்தில் ஒட்சிசன் தாங்கி வெடித்தது. இதனால் இப்பயணம் கைவிடப்பட்டு விண்கலம் பூமிக்கு திருப்பப்பட்டது.
1987: போர்த்துக்கலின் கட்டுப்பாட்டிலிருந்த மெக்காவ் தீவை 1999 ஆம் ஆண்டு சீனாவிடம் திருப்பிக் கொடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1997: அமெரிக்க மாஸ்டர்ஸ் கோல்வ் சுற்றுப்போட்டியில் 21 வயதான டைகர் வூட்ஸ் சம்பியனானார். மிக இளம் வயதில் இப்பட்டத்தை வென்ற வீரர் இவர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Sat 14 Apr 2012 - 9:56

ஏப்ரல் 14

1845: ஆஸ்திரியாவிலிருந்து பிரிவதாக ஹங்கேரி சுதந்திர பிரகடனம் செய்தது.

1865: அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் நாடக அரங்கொன்றில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டார். மறுநாள் அவர் உயிரிழந்தார்.

1912: பிரிட்டனின் டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதியது. (மறுநாள் இக்கப்பல் மூழ்கியது)

1944: பம்பாய் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் 300 பேர் பலி.

1979: உகண்டாவில் இடி அமீன் பதவி விலகியதையடுத்து யூசுபு லுலே ஜனாதிபதியாக பதவியேற்றார்.

1986: மேற்கு பேர்லினில் அமெரிக்க படையினர் இருவர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக லிபியா மீது குண்டுத்தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் உத்தரவிட்டார். இத்தாக்குதலில் 60 பேர் பலியாகினர்.

1988: ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை வாபஸ் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் சோவியத் யூனியன் கையெழுத்திட்டது.

1999: அல்பேனிய அகதிகள் மீது நேட்டோ படையினர் தவறுதலாக தாக்குதல் நடத்தியதில் சுமார் 75 பேர் பலி.

2002: வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் 2 நாட்கள் பதவியிலிருந்து விலகியிருந்தபின் மீண்டும் ஆட்சியைப் பொறுப்பேற்றார்.

2010: சீனாவில் 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் சுமார் 2700 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Sun 15 Apr 2012 - 10:40

ஏப்ரல் 15

1865: நாடக அரங்கொன்றில் முதல்நாள் சுடப்பட்டு கோமா நிலையிலிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் உயிரிழந்தார்.
1896: முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா கிறீஸின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது.
1912: நியூயோர்க்கை நோக்கிய தனது கன்னிப் பயணத்தின்போது பனிப்பாறையில் மோதிய 269 மீற்றர் நீளமான, பிரிட்டனின் ஆர்.எம்.எஸ்.டைட்டானிக் கப்பல் அதிகாலை 2.20 மணியளவில் மூழ்கியது. 1517 பயணிகள் பலியாகினர்.
1989: பிரிட்டனின் ஹில்ஸ்பரோ நகரில் கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது சன நெரிசலில் சிக்கி லிவர் பூல் கழக ரசிகர்கள் 96 பேர் பலியாகினர்.
2002: சீன விமானமொன்று தென்கொரியாவின் பூஸான் பிராந்திய மலையில் மோதி சிதறியதால் 128 பேர் பலி.
2010: ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து சாம்பல் பரவியதால் ஐரோப்பாவின் பல பகுதிகள் வான் போக்குவரத்து பலநாட்கள் பாதிக்கப்பட்டது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 Titanic2k


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Mon 16 Apr 2012 - 16:48

ஏப்ரல் 16


1818: அமெரிக்க – கனேடிய எல்லை தொடர்பான ரஸ் - பகொட் உடன்படிக்கையை அமெரிக்கா அங்கீகரித்தது.

1853: இந்தியாவின் முதலாவது பயணிகள் ரயில்சேவை பம்பாய், தானே நகரங்களுக்கிடையில் ஆரம்பமானது.

1917: நாட்டைவிட்டு வெளியேறியிருந்த விளாடிமிர் லெனின் சுவிட்ஸர்லாந்திலிருந்து ரஷ்யாவுக்குத் திரும்பினார்.

1919: பிரித்தானிய படையினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக மஹாத்மா காந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

1944: பெல்கிரேட் நகரில் நேசநாடுகளின் படைகள் குண்டுவீச ஆரம்பித்தன. இத்தாக்குதலில் சுமார் 1100 பேர் பலியாகினர்.

1945: ஜேர்மனியின் பேர்லின் நகர் மீதான இறுதித் தாக்குதலை சோவியத் படைகள் ஆரம்பித்தன.

1945: ஜேர்மனிய கப்பலான எம்.வி. கோயா மீது சோவியத் நீர்மூழ்கியொன்று நடத்திய தாக்குதலால் சுமார் 7000 பேர் பலியாகினர்.

1947: டெக்ஸாஸ் நகர துறைமுகத்தில் கப்பலொன்று தீப்பற்றியதால் சுமார் 600 பேர் பலி.

1972: அப்பலோ 16 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

1992: மொஸாம்பிக்கில் பி.கத்ரினா எனும் எண்ணெய் தாங்கி கப்பல் மூழ்கியதால் சுமார் 60,000 தொன் மசகு எண்ணெய் கடலில் கலந்தது.

2001: இந்தியா - பங்களாதேஷ் நாடுகளுக்கிடையில் 5 நாள் எல்லை மோதல் ஆரம்பிமானது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 Mv250


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Tue 17 Apr 2012 - 10:39

ஏப்ரல் 17

1492: ஆசியாவிலிருந்து வாசனைத் திரவியங்களைக் கொண்டுவருவது தொடர்பாக கிறிஸ்டோபர் கொலம்பஸுக்கும் ஸ்பெய்ன் அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1756 -தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805) பிறந்த நாள்
1895: முதலாவது சீன – ஜப்பான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக இருநாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1912: சைபீரியாவில் வேலை நிறுத்தம் செய்த தங்கச்சுரங்க ஊழியர்கள் மீது ரஷ்ய படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் சுமார் 150 பேர் பலி.
1941: ஜேர்மனியிடம் யூகோஸ்லாவியா சரணடைந்தது.
1946: பிரான்ஸிடமிருந்து சிரியா சுதந்திரம் பெற்றது.
1961: கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோவின் ஆட்சியை அகற்றுவதற்காக அமெரிக்காவிலிந்து சி.ஐ.ஏ.யினால் பயிற்றுவிக்கப்பட்ட 1400 கியூப அகதிகள் கியூபாவில் தரையிறக்கப்பட்டனர். இவர்களில் 100 பேர் காஸ்ட்ரோவின் படைகளின் தாக்குதலில் பலியாகினர். 1189 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
1970 – அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
1971: இந்தியாவின் கல்கத்தா நகரில் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் பங்களாதேஷ் அரசாங்கம் அமைக்கப்பட்டது.
1975 – சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர் (பி. 1888) நினைவு நாள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Wed 18 Apr 2012 - 10:18

ஏப்ரல் 18


1930: அன்றைய தினம் செய்திகள் இல்லையென பி.பி.சி. வானொலி அறிவித்தது.
1945: ஜேர்மனியின் ஹேலிகோலன்ட் தீவின்மீது சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் தாக்குதல் நடத்தின.
1954: எகிப்தில் கமால் அப்துல் நாசர் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1955: புகழ்பெற்ற பௌதிகவியல் விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் காலமானார்.
1955: இந்தோனேஷியாவின் பான்டூங் நகரில் நடைபெற்ற முதலாவது ஆசிய-ஆபிரிக்க மாநாட்டில் 29 நாடுகள் பங்குபற்றின.
1983: லெபனானின் பெய்ரூத் நகரில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
1988: ஈரானிய கடற்படைக்கு எதிராக அமெரிக்கா பாரிய கடற்படைத் தாக்குதலை ஆரம்பித்தது. 1992: ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி மொஹமட் நஜிபுல்லாவின் அரசாங்கத்திற்கு எதிரகா ஜெனரரல் அப்துல் ரஸித் டோஸ்டம், அஹமட் ஷா மசூத்துடன் இணைந்து காபூல் நகரை கைப்பற்ற கிளர்ச்சி செய்தார்.
1996: லெபனானின் ஐ.நா. வளாகத்தில் இஸ்ரேலிய படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதால் 106 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
2007: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களினால் 198 பேர் கொல்லப்பட்டதுடன் 251 பேர் காயமடைந்தனர்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 Alberteinsteine


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Thu 19 Apr 2012 - 11:30

ஏப்ரல் 19

1839: லண்டன் உடன்படிக்கை மூலம் பெல்ஜியம் ஒரு முடியரசாக்கப்பட்டது.
2005: ஜேர்மனியைச்சேர்ந்த கர்தினால் ரட்ஸிங்கர் பாப்பரசராக தெரிவானார். இவர் 16 ஆவது ஆசிர்வாதப்பர் என்ற பெயரை தெரிவு செய்தார்.
1954: பாகிஸ்தானில் உருதும் வங்காளமும் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
1971: முதலாவது விண்வெளி நிலையமான சல்யூட்-1 ஏவப்பட்டது.
1975: இந்தியாவின் முதலாவதுசெய்மதியான ஆர்யபட்டா ஏவப்பட்டது.
1995: அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் 198 பேர் பலி சுமார் 500 பேர் காயம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Fri 20 Apr 2012 - 9:22

ஏப்ரல் 20

1792: ஆஸ்திரியாவுக்கு எதிராக பிரான்ஸ் யுத்தப் பிரகடனம் செய்தது.
1889: ஜேர்மனின் முன்னாள் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் பிறந்தார்.
1926: திரைப்படத்திற்கு ஒலியை இணைக்கக்கூடிய தொழில்நுட்பம் குறித்து அமெரிக்காவின் வார்னர் பிரதர்ஸ் மற்றும் வெஸ்டர்ன் எலெக்ரிக் நிறுவனங்கள் அறிவித்தன.
1959: அடோல்வ் ஹிட்லரின் பிறந்த தினத்தையொட்டி ஜேர்மனியில் தேசிய விடுமுறைத் தினம் அறிவிக்கப்பட்டது.
1972: கோளாறுக்குள்ளான அப்பலோ 16 விண்கலம் பல மணித்தியால தாமதத்தின்பின் சந்திரனில் இறங்கியது.
1978: சோவியத் வான் பறப்பில் அனுமதியின்றி பறந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட கொரிய விமானமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்தில் இருவர் பலியாகினர். 97 107 பேர் உயிர் தப்பினர்.
1999: அமெரிக்காவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 24 பேர் காயமடைந்தனர்.
2008: ஜப்பானில் நடைபெறும் 'இன்டி ஜப்பான் 300' காரோட்டப் பந்தயத்தில் டெனிகா பட்ரிக் எனும் பெண் வெற்றி பெற்று இப்போட்டியில் வென்ற முதல் பெண் எனும் பெருமையைப் பெற்றார்.
2010: மெக்ஸிகோ வளைகுடாவில் பிரித்தானிய நிறுவனமொன்றுக்குச் சொந்தமான டீப்வாட்டர் ஹொரைஸன் எண்ணெய் அகழ்வுத்தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தையடுத்து; அத்திலாந்திக் சமுத்திரத்தில் பாரிய எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 Deepwater


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Sat 21 Apr 2012 - 6:41

ஏப்ரல் 21

1945: சோவியத் யூனியின் செஞ்சேனைப் படையினர் ஜேர்மனியின் பேர்லின் புறநகர் பகுதிகளை முற்றுகையிட்டனர்.
1960: பிரேஸில் தலைநகர் பிரஸில்லியா உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
1962: சியாட்டில் உலக சந்தை திறக்கப்பட்டது. 2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவில் திறக்கப்பட்ட முதலாவது உலக சந்தை இது.
1975: தென் வியட்நாம் ஜனாதிபதி என்குயென் வான் தியூ ராஜினாமா செய்தார்.
1987: கொழும்பு புறக்கோட்டையில் தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய வாகன குண்டுத் தாக்குதலில் 113 பேர் பலியாகினர்.
1989: சீன மறுசீரமைப்புத் தலைவர் ஹியூ யவோபாங்கை நினைவுகூரும் முகமாக சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் தியனமென் சதுக்கத்தில் கூடினர்.
1993: பொலிவியாவின் முன்னாள் சர்வாதிகாரி லூயிஸ் கார்சியா மேஸாவுக்கு கொலை, களவு, மோசடி, அரசியலமைப்பு மீறல் குற்றச்சாட்டில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை விதித்தது.
2004: ஈராக்கின் பஸ்ரா நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 74 பேர் பலியாகினர்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 Colombo1987


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by பானுஷபானா on Sat 21 Apr 2012 - 11:21

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 331844 வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 331844 வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 331844 வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by mufees on Sun 22 Apr 2012 - 0:14

:!+:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Mon 23 Apr 2012 - 6:15

ஏப்ரல் 23

1660: சுவீடனுக்கும் போலந்துக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1661: பிரிட்டனில் இரண்டாம் சார்ள்ஸ் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1927: துருக்கி, சிறுவர் தினத்தை தேசிய விடுமுறைத் தினமாகக் கொண்டாடிய உலகின் முதல் நாடாகியது.
1940: அமெரிக்காவில் நாட்சேஸ் நகரில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 198 பேர் பலியாகினர்.
1984: எயிட்ஸ் நோய்க்கு காரணமான வைரஸ் (HIV) கண்டுபிடிக்கப்பட்டது.
1990: இலங்கையின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரும் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான லலித் அத்துலத் முதலி கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1990: நமீபியா 160 ஆவது அங்கத்துவ நாடாக ஐ.நாவில் இணைந்தது.
1993: எதியோப்பியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக எரித்திரிய பிராந்திய மக்கள் வாக்களித்தனர்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 2 Hiv2


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Wed 25 Apr 2012 - 19:48

ஏப்ரல் 24

1877: ஒட்டோமன் பேரரசுக்கு எதிராக ரஷ்யா யுத்தப் பிரகடனம் செய்தது.
1898: ஸ்பெய்னுக்கு எதிராக அமெரிக்கா யுத்தப் பிரகடனம்.
1904: லித்துவேனியாவில் 40 வருடங்களாக அமுலில் இருந்த ஊடகத் தடை நீக்கப்பட்டது.
1918: உலகில் முதல் தடவையாக இராணுவத் தாங்கிகளுக்குhன சமர், பிரான்ஸில் அமெரிக்க, ஜேர்மனிய படைகளுக்கிடையில் இடம்பெற்றது.
1926: 3 ஆவது நாடொன்று தாக்குதல் நடத்தும்போது நடுநிலை வகிப்பதற்கு இணங்கும் ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் ஜேர்மனியும் கையெழுத்திட்டன.
1967: சோயுஸ் 1 விண்கலத்தின் பரசூட் விரிய மறுத்ததால் சோவியத் விண்வெளி வீரர் விளாடிமிர் கொமாரோவ் அவ்விண்கலத்தில் இறந்தார்.
1968: ஐ.நாவில் மொரிஷியஸ் அங்கத்துவம் பெற்றது.
1970: சீனாவின் முதலாவது செய்மதி ஏவப்பட்டது.
1990: ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி விண்வெளிக்கு ஏவப்பட்டது.
2005: உலகின் முதலாவது குளோனிங் நாயான ஸ்னப்பி, தென் கொரியாவில் பிறந்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Wed 25 Apr 2012 - 19:48

ஏப்ரல் 25

1859: பிரித்தானிய, பிரெஞ்சு பொறியியலாளர்கள் சுயஸ் கால்வாய் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தனர்.
1898: ஸ்பெய்னுக்குஎதிராக அமெரிக்கா யுத்தப் பிரகடனம் செய்தது.
1945: இத்தாலியில் நாஸி படைகள் சரணடைந்தன.
1981: ஜப்பானின் சுராகா நகரிலுள்ள அணு மின் உலையில் 100 ஊழியர்கள் கதிர்வீச்சு தாக்கத்திற்குள்ளாகினர்.
1988:இரண்டாம் உலக யுத்தகாலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இஸ்ரேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
2005: ஜப்பானின் அமகாசாக்கி நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 107 பேர் பலி.
2007: ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்ஸினின் இறுதிக் கிரியை இடம்பெற்றது.

2011: அமெரிக்காவின் தென் மாநிலங்களில் சூறாவளியினால் சுமார் 300 பேர்பலி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 37 Previous  1, 2, 3 ... 19 ... 37  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum