சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?  Khan11

கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?

3 posters

Go down

கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?  Empty கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?

Post by *சம்ஸ் Sun 16 Dec 2012 - 20:03

கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?  13-pineapple-300
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறு தவறு ஏற்பட்டாலும், வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அவ்வாறு கர்ப்பிணிகள் உண்ணும் உணவில் சில நல்ல உணவுகள் மற்றும் சில கெட்ட உணவுகளும் உள்ளன. அதிலும் கர்ப்பமாக ஒரு பெண் இருந்தால், அவர்கள் வீட்டில் இருப்போர் பல ஆலோசனைகளைச் சொல்வார்கள். உதாரணமாக, கர்ப்பமாக இருக்கும் போது நட்ஸ் மற்றும் சிறு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று சொல்வது. அதுமட்டுமின்றி இந்த நேரத்தில் உண்ணும் உணவுகளில் உள்ள நல்லது மற்றும் கெட்டது பற்றியும் அதிகம் சொல்வார்கள். உதாரணமாக, கர்ப்பத்தின் போது பப்பாளியை சாப்பிடக் கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும் என்றெல்லாம் சொல்வார்கள். எப்படி பப்பாளியை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு ஏற்படுமோ, அதேப்போல் அன்னாசிப் பழத்தை சாப்பிட்டாலும், சிலர் பாதிப்பு ஏற்படும் என்று சொல்வார்கள். சரி, இப்போது அன்னாசியை சாப்பிடுவது நல்லதா கெட்டதா, இவற்றில் எது உண்மை என்று பார்ப்போமா!!! குறை பிரசவம்: கர்ப்பிணிகள் அனைவரும் சாப்பிடக்கூடாத பழங்களில், அன்னாசியும் ஒன்று. ஏனெனில் அவற்றை அதிக அளவில் சாப்பிட்டால், அதில் உள்ள புரோமிலியன் (Bromelian) கருப்பையை பலவீனமடையச் செய்துவிடும். அதுமட்டுமின்றி கருப்பை சுவர்களில் சுருக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும். நிறைய பெண்களுக்கு இதனை சாப்பிட்டதால், குறைப் பிரசவம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. கருச்சிதைவு: அன்னாசிப் பழத்தை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இதில் உள்ள புரோமிலியன் (Bromelian) என்னும் நொதி, பப்பாளியில் உள்ள பப்பைன் (Papain) நொதிக்கு சமமானது. புரோமிலியன் கருப்பையின் சுவற்றை மிகவும் மென்மையாக்கிவிடுவதால், கருவை சுமக்க முடியாத நிலையை உண்டாக்கி, சிதைவை ஏற்படுத்துகிறது. அதிலும் அன்னாசியில் பச்சை மற்றும் கனியாமல் கெட்டியாக இருக்கும் பழத்தை சாப்பிடுவது மிகுந்த கெடுதலை ஏற்படுத்தும். ஆகவே இதனை ஒரு 10 மாதம் சாப்பிடாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் நல்லது. மற்ற பிரச்சனைகள்: பொதுவாகவே அளவுக்கு அதிகமாக அன்னாசிப் பழத்தை சாப்பிட்டாலே, வயிற்றுப்போக்கு மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்றவை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள அமிலம் மிகவும் மோசமானது. ஆகவே இத்தகைய பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அவர்களுக்கு எவ்வளவு பிரச்சனையை உண்டாக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். என்ன தான் இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் கர்ப்பமாக இருக்கும் போது உடலுக்கு அவசியமான, செரிமானத்தை சரியாக நடத்தும் நொதியைக் கொண்டாலும், இதை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் இந்த பழத்தை சாப்பிட்டு, அந்த மாதிரியான பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்கிறது என்று மற்றவர்களை சாப்பிட சொல்ல வேண்டாம். ஏனெனில் உங்கள் கர்ப்பப்பை வலுவுடன் இருக்கலாம். ஆனால் அவ்வாறே அனைவருக்கும் நடக்கும் என்று நினைப்பது தவறானது. எனவே பாதுகாப்பான பிரசவம் நடைபெற வேண்டுமெனில், இதனை சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?  Empty Re: கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?

Post by rammalar Sun 16 Dec 2012 - 20:06

கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?  Pregnant-women-eat-papaya கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?  480414
-

கர்ப்பிணிகள் பப்பாளி பழத்தையும் தவிர்ப்பது நல்லது

கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?  6a9dbe2b-05e9-4eb5-846d-e8d1fc4c05e3_S_secvpf
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?  Empty கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி சாப்பிடலாமா?

Post by *சம்ஸ் Sun 16 Dec 2012 - 20:35

கர்ப்பமாக இருக்கும் போது எந்த உணவை சாப்பிட்டாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் எதையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து பின்னரே சாப்பிட வேண்டும். ஏனெனில் வயிற்றின் உள்ள சிறு கரு வளர்கிறது. ஆகவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் அப்போது உண்ணும் உணவிற்கு ஒரு பட்டியலே உள்ளது. அதில் முக்கியமாக பப்பாளி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்களும், முன்னோர்களும் சொல்வார்கள். இப்போது அந்த பப்பாளியை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்று பார்ப்போமா!!! பப்பாளி பழம் பப்பாளியின் பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடலாம் என்று நிறைய பேர் சொல்வதோடு, மருத்துவர்களும் சொல்கின்றனர். ஏனெனில் அதில் வைட்டமின் ஏ மற்றும் பி, பீட்டா-கரோட்டீன் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்கள். மேலும் இந்த பழத்தை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிட்டால், செரிமான மண்டலம் நன்கு இயங்கும். பப்பாளிக் காய் பப்பாளியின் காயை கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லதல்ல என்று பிரிட்டிஷ்ஷில் உள்ள ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் இதில் உள்ள பெப்சின் என்னும் பொருள், கருப்பைக்கு சுருக்கத்தை ஏற்படுத்தி கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமல்லாமல், இதில் பாப்பைன் கருவின் வளர்ச்சியை குறைத்து, கருவிற்கு செல்லும் அனைத்து சத்துக்களையும் தடுத்துவிடும். மேலும் கர்ப்பத்தில் பிரச்சனைகள் இருந்து கர்ப்பமானவர்கள், இந்த பப்பாளியை சாப்பிடாமல் இருப்பது நல்லது. கருச்சிதைவு கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கருவை அழிப்பதை விட, பப்பாளியின் காயை சாப்பிட்டு வந்தால், கரு உருவாகாமல் தடுக்கலாம். ஏனெனில் பப்பாளியில் லாடெக்ஸ் என்னும் பொருள் உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதனை கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் சாப்பிட்டால், அதில் உள்ள லாடெக்ஸ் நிச்சயம் கர்ப்பத்தை கலைத்துவிடும். அதுவே கர்ப்பமாக இருக்கும் போது சற்று தாமதமாக இந்த பப்பாளியை சாப்பிட்டால், குறை பிரசவத்தில் குழந்தை பிறக்கும். அலர்ஜி நிறைய பெண்களுக்கு பப்பாளி அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் அலர்ஜிக்கு லாடெக்ஸ் அலர்ஜி என்று பெயர். இந்த அலர்ஜியால் பாதிக்கப்பட்ட பெண்கள், இதை பார்த்தாலே அவர்களுக்கு அந்த அலர்ஜி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். மேலும் இந்த அலர்ஜி உள்ள பெண்கள், வாழைப்பழம், கோதுமை மற்றும் ஆப்பிள் போன்றவற்றை கூட சாப்பிட முடியாத நிலையில் பாதிக்கப்படுவர். ஆகவே பப்பாளி பழமாக இருந்தாலும் சரி, காயாக இருந்தாலும் சரி, கர்ப்பிணிகள் இதை முற்றிலும் தவிர்ப்பது பாதுகாப்பானது. அதிலும் இந்த பப்பாளியை சாப்பிட வேண்டுமென்றால், உங்கள் மருந்துவரை அணுகி பின்னர் சாப்பிடுங்கள்.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?  Empty Re: கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?

Post by முனாஸ் சுலைமான் Sun 16 Dec 2012 - 21:13

:!+: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?  Empty Re: கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?

Post by *சம்ஸ் Sun 16 Dec 2012 - 22:00

முனாஸ் சுலைமான் wrote: :!+: :flower:
நன்றி சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?  Empty Re: கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum