சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மார்ச் மாதம் எப்படி? - சுவாமி கண்ணன் பட்டாச்சார்யா Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Yesterday at 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
மார்ச் மாதம் எப்படி? - சுவாமி கண்ணன் பட்டாச்சார்யா Khan11
மார்ச் மாதம் எப்படி? - சுவாமி கண்ணன் பட்டாச்சார்யா Www10

மார்ச் மாதம் எப்படி? - சுவாமி கண்ணன் பட்டாச்சார்யா

Go down

Sticky மார்ச் மாதம் எப்படி? - சுவாமி கண்ணன் பட்டாச்சார்யா

Post by rammalar on Tue 5 Mar 2013 - 1:28

மேஷம்:
-
இந்த மாதம் 2ம் தேதி முதல் ராசிநாதன் அங்காரசு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போவதால் சேமிப்புகள் நல்லகாரியங்களுக்காக செலவழியும். உத்தியோகம் செய்பவர்கள் பதிவேடுகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. குடும்பம் மகிழ்ச்சியாக காணப்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிராயணங்கள் வெற்றி தரும். பங்குசந்தை வியாபாரம் பெருகும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிரனுக்கு நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 3.3.13 ஞாயிறு மாலை 5.15 - 5.3.13 செவ்வாய் இரவு 7.30 வரை மேலும் 30.3.13 சனிக்கிழமை இரவு 1.10 - 2.4.13 செவ்வாய் அதிகாலை 3.30 மணி வரை.

ரிஷபம்:
-
இந்த மாதம் ராசிநாதன் சுக்ரன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக புதிய முயற்சிகளை பற்றி சிந்திப்பீர். எதிர்பார்த்த வருமானம் வந்து சேர்வதில் தாமதம் ஏற்படலாம். சொந்த தொழில் செய்பவர்கள் பணியில் சுறுசுறுப்புடன் இருந்தாலும் பலன்கள் விலகி போகும். கூட்டுத்தொழில் சிறந்தோங்கும். போட்டிகள் வந்து தொல்லை கூடும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் சுபகாரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பு ஏற்படும். கலைஞர்கள் பணிகளில் கலகலப்பு பெறுவீர்கள்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு நெய் தீபமிட்டு வழிபட வளம் பெருகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 5.3.13 செவ்வாய் இரவு 7.30 மணி முதல் 7.3.13 வியாழன் இரவு 10.00 மணி வரை

மிதுனம்
-
இந்த மாதம் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதபகவான் அருளால் கடிதப்போக்குவரத்துகள் சாதகமாக இருக்கும். புதிய நபர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு பணி யில் உற்சாகம் குறைவாகவே காணப்படும். கூட்டு தொழில் லாபம் தரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் வெற்றி பெறலாம். குடும்பத்தில் காணப்படும் குறைகள் நிவர்த்தியாகும்.
பரிகாரம்: வியாழன் தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 7.3.13 வியாழன் இரவு 10.00 மணி முதல் 9.3.13 சனிக்கிழமை இரவு 1.30 மணி வரை.

கடகம் :
-
இந்த மாதம் அஷ்டம ஸ்தானத்தின் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. பழைய கடன்களை, பிரச்னைகளை சரி செய்யக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். புதிய செயல்களில் வெற்றியை காண்பீர்கள். குடும்பம் சீராக நடந்தாலும் சிறு சிறு பிரச்னைகள் இருக்கலாம். தொல்லைகள் அகன்றிட பெண்களின் உதவிகள் பெருமை சேர்க்கும். பெண்களின் சேமிப்பு சுபகாரியங்களுக்காக செலவழியும் கலைஞர்கள் பணி யில் திருப்பமும் புகழும் பெருவார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு தீபமேற்றி வழிபாடு செய்தால் மகிழ்ச்சி பொங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 9.3.13 சனிக்கிழமை இரவு 1.30 மணி முதல் 12.3.13 செவ்வாய் காலை 6.30 மணி வரை.

சிம்மம்:
-
இந்த மாம் சப்தம ஸ்தானத்தில் ராசிநாதன் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி உறவுகள் பலப்படும். எதிர்பாராத பிரயாணம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆன்மிக ஸ்தலங்களுக்குச் செல்ல சிலருக்கு வாய்ப்புண்டு. மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். கலைஞர்களின் பணியில் கலகலப்புத் தோன்றிடும். புதிய வாய்ப்பு கிடைக்கலாம். பங்குச் சந்தை வியாபாரத்தில் லாபம் சிறிது கூடலாம்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அனுமனுக்கு நெய்தீபமிட்டு வழிபாடு செய்தால் தொழில் சிறக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 12.03.2013 செவ்வாய் காலை 6.30 மணி முதல் 14.03.2013 வியாழன் பகல் 2.30 மணி வரை.

கன்னி:
-இந்த மாதம் ராசிநாதன் புதன் ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் பழைய கடன் சிறு தொல்லை தரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களில் நிதானித்து முடிவெடுப்பது நல்லது. சொந்தத் தொழில் சிறப்புடன் நடந்துவரும். கூட்டு வாணிபத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மங்கல நிகழ்ச்சிகளால் பெண்களின் மனம் மகிழும். தொலைபேசி மூலம் வரும் தகவல் குடும்பத்தின் ஒற்றுமையை அதிகரிக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் குரு பகவானுக்கு நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்து, வழிபாடு செய்வது நல்ல பலனளிக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 14.03.2013 வியாழன் பகல் 2.30 மணி முதல் 16.03.2013 சனிக்கிழமை இரவு 12.40 மணி வரை.
-
--------------------------
நன்றி: மங்கையர் மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15639
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: மார்ச் மாதம் எப்படி? - சுவாமி கண்ணன் பட்டாச்சார்யா

Post by rammalar on Tue 5 Mar 2013 - 1:45

துலாம்:
இந்த மாதம் ராசிநாதன் சுக்ர பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் அடுத்தடுத்து முயற்சிகள் செய்து வெற்றி காணுவீர்கள். திட்டமிட்ட பணவரவு மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. கூட்டுத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் வந்துசேரும். குடும்பத்தில் சீரான முன்னேற்றம் காணப்படும். பெண்கள் நூதனப் பொருட்கள் வாங்கவும் புதிய ஆபரணங்கள் வாங்கவும் வாய்ப்பு உண்டாகும்.
பரிகாரம்: விநாயகருக்கு சங்கடஹரசதுர்த்தி அன்று, அருகம்புல் மாலை சூட்டி, வழிபாடு செய்வது சகல சௌபாக்கியங்களையும் அருளும்.
சந்திராஷ்டம தினங்கள்: 16.03.2013 சனிக்கிழமை இரவு 12.40 மணி முதல் 19.03.2013 செவ்வாய் பகல் 12.15 மணி வரை.

விருச்சிகம்:
இந்த மாதம் ஜீவனஸ்தானாதிபதி சூரிய பகவான் சுகஸ்தானமாகிய நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் நல்ல பலனைத் தரும். உத்தியோகம் செய்பவர்களுக்கு வேலை மிகுதியால் நெருக்கடிகள் தோன்றலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றி காண்பர். குடும்ப வாழ்க்கை மேம்படும். தம்பதியர் ஒற்றுமை பெருகும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் இன்பம் சேர்த்திடும். பூர்விக சொத்துகளில் இருந்த வில்லங்கம் நீங்கிடும். பெண்களுக்கு சேமிப்பு பெருகும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றி செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் செல்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 19.03.2013 செவ்வாய் பகல் 12.15 மணி முதல் 21.03.2013 வியாழக்கிழமை இரவு 11.40 மணி வரை.

தனுசு:
இந்த மாதம் சூரியனும், புதபகவானும் சேர்ந்து மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் சகோதரன் அல்லது சகோதரியால் எதிர்பாராத தொழில் மேன்மை உண்டாகும். கூட்டுத் தொழிலில் வழக்கம் போல் லாபம் சேரும். குடம்பத்தில் சிறுசிறு குறைகள் வந்த போதிலும், பெண்கள் அதனைப் போக்கிடுவர். பிரிந்த சொந்தங்கள் தேடிவரக்கூடும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாய்ப்புகளை பெற்ற போதிலும், எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் போகலாம்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கிட்டும், துளசி மாலை அணிவித்தும் வழிபாடு செய்வது எல்லா நலன்களையும் அளிக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 21.03.2013 வியாழக்கிழமை இரவு 11.40 மணி முதல் 24.03.2013 ஞாயிறு காலை 9.30 மணி வரை.

மகரம்:
இந்த மாதம் பாக்கியாதிபதி புதன் வாக்குஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சில காரியங்களை பேசியே சாதித்துக் கொள்வீர்கள். புதுநபர் வரவால் பணம் சேரும். கூட்டு முயற்சித் தொழில்களில் லாபம் அதிகமாகும். குடும்பம் சிறுசிறு தொல்லைகளை கொடுத்தாலும் ஒரு பாதிப்பும் இராது. பிரிந்த சொந்தங்கள் வீடு தேடி வரக்கூடும். பங்குச் சந்தை வியாபாரம் பயனைத்தந்து பொலிவு பெற இன்னும் சிறிது நாளாகும்.
பரிகாரம்: பெண் தெய்வம் ஆலயம் சென்று திங்கட்கிழமை தோறும் வாசனை மலர்களால் அர்ச்சித்து தீபம் ஏற்றி வழிபட்டால் சிறப்பான வாழ்க்கை அமையும்.
சந்திராஷ்டம தினங்கள்: 24.03.2013 ஞாயிறு காலை 9.30 மணி முதல் 26.03.2013 செவ்வாய் மாலை 4.45 மணி வரை.

கும்பம்:
இந்த மாதம் ஐந்துக்குடைய புதனும், ஏழுக்குடைய சூரியனும் சேர்ந்து ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் கூட்டுத் தொழில் செய்வோருக்கு நீண்ட கால பிரச்னை தீரும். கணவன் மனைவி உறவு பலப்படும். எடுத்த காரியங்களை சிறப்புடன் செய்வீர்கள். குடும்பம் சிறப்புடன் நடக்கும். சிறு கடன்கள் அடையும். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் பிரிந்த சொந்தங்களை சேர்த்து வைக்க முயற்சிப்பார்கள். பங்குச் சந்தை தொழிலில் சிறிதளவே லாபம் காணலாம்.
பரிகாரம்: சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனைசெய்து வணங்கினால் மனோதைரியம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 26.03.2013 செவ்வாய் மாலை 4.45 மணி முதல் 28.03.2013 வியாழன் இரவு 10.00 மணி வரை.

மீனம்:
இந்த மாதம் சூரியன், புதன், சுக்ரன் போன்ற அநேக கிரகங்கள் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவினங்கள் அதிகரிக்கும். பிரச்னைகளைச் சாதூரியமாக தீர்த்து வைப்பீர்கள். கூட்டுமுயற்சித் தொழில்களில் வழக்கமான லாபமே கிட்டும். குடும்பம் சிறப்பாக நடந்தாலும் சிறு சிறு குறைகளும் தலைக்காட்டும். உடன் பிறந்தவர் இல்லத்தில் நிகழும் மங்கல நிகழ்ச்சிகளில் பெண்கள் பிரச்னைகளைச் சந்திக்க நேரலாம். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் புதிய வாய்ப்பைப் பெற்றிடுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் நல்ல பலனளிக்கும்.
பரிகாரம்: பெருமாள் கோவிலில் நெய் விளக்கேற்றி துளசி மாலை அணிவித்து புதன்கிழமை தோறும் வழிபாடு செய்வோர் நல்ல நலமும் பெற்றிடுவர்.
சந்திராஷ்டம தினங்கள்: 01.03.2013 வெள்ளிக்கிழமை பகல் 2.00 மணி முதல் 03.03.2013 ஞாயிறு மாலை 5.15 மணி வரை. 28.03.2013 வியாழன் இரவு 10.00 மணி முதல் 30.03.2013 சனி இரவு 1.10 மணி வரை.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15639
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum