சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஆங்கிலம் பேசுவது எப்படி? - 1 (Asking the time) Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஆங்கிலம் பேசுவது எப்படி? - 1 (Asking the time) Khan11
ஆங்கிலம் பேசுவது எப்படி? - 1 (Asking the time) Www10

ஆங்கிலம் பேசுவது எப்படி? - 1 (Asking the time)

Go down

Sticky ஆங்கிலம் பேசுவது எப்படி? - 1 (Asking the time)

Post by ராகவா on Sat 28 Sep 2013 - 11:22

கால ஓட்டமும் உலக ஓட்டமும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. காலவோட்டத்திற்கு ஏற்ப எமது வாழ்க்கை ஓட்டமும் ஓடிக்கொண்டே இருக்கின்றது. காலத்தை கணக்கிட்டு எமது கடமைகளை உரிய நேரத்தில் செய்ய கடிகாரம் எனும் நேரம் காண்பிப்பான் எப்போதும் எமக்கு தேவையாகவே இருக்கின்றது. நேரக் கணிப்பான் இல்லாவிட்டால் எதனையும் உரிய நேரத்தில் செய்ய தவறிவிடுவோம்.

நிழலை அளந்து நேரம் அறிந்து வந்த எம்மூதாதையர் காலப் பழக்கம் 19ம் நூற்றாண்டுகளில் கடிகாரம், கைக்கடிகாரம் போன்ற இலத்திரனியல் கண்டுப்பிடிப்புகளால் மெல்ல மறையத்தொடங்கியது. கைக்கடிகாரமும், கடிகாரமும் கூட 20ம் நூற்றாண்டுகளில் மறையத் தொடங்கி அழைப்பேசியிலேயே நேரம் பார்த்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. ஆம்! உலக அறிவியல் எத்தனை வேகமாக வளர்ந்து வருகிறது! அறிவியல் உலகம் எல்லாவற்றையுமே அவசரமாக்கி விட்டுள்ளது. பேருந்துக்கு அவசரம், தொடருந்துக்கு அவசரம், பணியகத்திற்கு செல்ல அவசரம், நேர்முகத் தேர்வுக்கு நேரம் பிந்திவிடுமோ என்றும் அவசரம், நேரம் சற்றுப் பிந்திவிட்டால் அதனாலான இழப்புகளும் அதிகம். எனவே எப்போதும் நேரம் பார்த்துப்பார்த்து பணி செய்யப் பழகிவிட்டோம். சில வேளை இந்த நேரம் காண்பிப்பான் நம்மிடம் இல்லை என்றால் என்ன செய்வது? யாராவது முன் பின் தெரியாத ஒருவரிடம் என்றாலும் நேரத்தை கேட்டறிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எல்லோருக்குமே ஏற்படக்கூடியது தான்.

சரி! அப்படியானால் ஆங்கிலத்தில் எப்படி நேரம் கேட்டறிவது எனப் பார்ப்போமா?

What is the time now?
இப்பொழுது நேரம் என்ன?

Do you know what time it is?
உனக்குத் தெரியுமா எத்தனை மணி (என்று)?

Can you tell me the time?
உன்னால் எனக்கு நேரத்தைச் சொல்ல முடியுமா?

What time is it?
இப்போது என்ன நேரம்?

இப்படி எல்லாம் கேட்கலாம். ஆனால் ஆங்கிலத்தில் இப்படி கேட்டால் உங்களை நாகரிகம் அற்றவர் என்று கருதிவிடுவர். நாகரிகமற்ற விதமான பேச்சை விரும்பாத பலரும் உள்ளனர். எனவே ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதற்கும், பதிலளிப்பதற்கும் நாகரீகமானதும் தாழ்மையானதும் பேச்சு வழக்கு உள்ளது. அதனை "Polite Language" என்பர். நாமும் அதனைத்தான் கற்க வேண்டும். நாம் எமது பேச்சு வழக்கில் மற்றோர் எம்மை பண்பாளர்களாக மதிக்கும் நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எனவே ஆங்கிலத்தில் தாழ்மையாகவும் மரியாதையாகவும் நேரம் கேட்டறியும் சொற்றொடர்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை கீழே பார்ப்போம்.

Excuse me, what is the time now, please?
மன்னிக்கவும், தயவுசெய்து இப்பொழுது நேரம் என்ன?

ஆங்கிலத்தில் எப்பொழுதும் ஒருவரின் கவனத்தை ஈர்ப்பதற்கு "Excuse me" (மன்னிக்கவும்) எனும் சொல்லை முன்னொட்டாக சொல்லி பேச்சைத் தொடர்வது ஆங்கிலத்தில் மரியாதையான ஒரு அனுகுமுறையாகும். அத்துடன் "please" (தயவுசெய்து) எனும் சொல்லையும் இணைத்து உங்கள் வேண்டுக்கோளை விடுங்கள். அது உங்கள் பேச்சை கேட்பவர், நீங்கள் நாகரீகமாகப் பேசத்தெரிந்தவர், பண்பானவர் என்பதை எடுத்துக்காட்டும்.

மேலும் நேரத்தை கேட்டறிவதற்கான (Polite Language) சொற்றொடர்கள் சில:

Excuse me, what is the time please?
Excuse me, what time is it?
Excuse me, have you got the time, please?
Sorry, do you have the time, please?
Can you tell me the time please?
Can you please tell me what is the time?
Excuse me, could you tell me the time, please?
Excuse me, could you tell me what time it is?
Excuse me, do you have the time?

பதிலளித்தல் (Telling the time)

நாம் நமது தமிழில் ஒருவர் நேரம் கேட்டால் எவ்வாறு பதிலளிப்போம்? "இப்பொழுது பத்து மணி", "சரியாக மூன்று மணி", "எட்டுக்கு இருபத்தைந்து", "ஒன்பதே கால்", "எட்டரை" என பல்வேறு விதமாக பதிலளிப்போம் அல்லவா, அவ்வாறே ஆங்கிலத்திலும் பதிலளிக்கப்படுகின்றது. கீழுள்ள சொற்றொடர்களை பார்க்கவும்.

1:00: It's one o' clock.
இப்பொழுது ஒரு மணி.

3:00: It is three o'clock.
இப்பொழுது மூன்று மணி.

10:00: It is ten o'clock.
இப்பொழுது பத்து மணி.

It's ___ o' clock.(two/there/four/five/six/seven/eight/nine/ten/eleven/twelve) பொருத்தமான நேர இலக்கத்தைப் பொருத்திப் பதிலளியுங்கள். மேலும் பதிலளிக்கும் சில சொற்றொடர்களை கீழே பாருங்கள்.

8:00: It's eight o'clock.
இப்பொழுது எட்டு மணி.

8:05: It's five past eight.
இப்பொழுது 8 மணி 5 நிமிடம்.

8:10: It's ten past eight.
இப்பொழுது 8 மணி 10 நிமிடம்.

8:15: It's quarter past eight.
இப்பொழுது எட்டே கால்.

8:20: It's twenty past eight.
இப்பொழுது எட்டு இருபது.

8:30: It's half past eight.
இப்பொழுது எட்டரை.

8:40: It's twenty to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு இருபது. (இருபது நிமிடங்கள் உள்ளன)

8:45: It's quarter to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு கால். (கால் மணித்தியாளம் உள்ளது)

8:50: It's ten to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு 10. (நிமிடங்கள் உள்ளன)

8:55: It's five to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு ஐந்து. (நிமிடங்கள் உள்ளன)

9:00: It's nine o'clock.
இப்பொழுது ஒன்பது மணி.

8:35: It's twenty five to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு இருபத்தைந்து. (நிமிடங்கள் உள்ளன.

It's midnight.
இப்பொழுது நல்லிரவு. (இரவு 12.00 மணி)

It's noon.
இப்பொழுது நடுப்பகல் (பகல் 12.00 மணி)

It's lunch time.
இப்பொழுது பகல்சாப்பாட்டு நேரம்.

It's dinner time.
இப்பொழுது இரவு சாப்பாட்டு நேரம்.

It's time to go to bed. (Good night)
இப்பொழுது படுக்கைக்கு (நித்திரைக்கு) போகும் நேரம்.

ஆங்கிலத்தில் ஒருவரிடம் நேரத்தை கேட்டு, அதற்கு அவர் பதிலளித்தால், பதிலுக்கும் பதிலளிக்கும் வழக்கு ஆங்கிலத்தில் உள்ளது. சிலவேளை உங்களிடம் யாரேனும் ஒருவர் நேரம் கேட்டு, நீங்கள் நேரத்தைக் கூற, அவர் அதற்கு நன்றி கூறினால், நன்றிக்கும் மறுமொழிக் கூற மறவாதீர்கள். கீழுள்ள சொற்றொடர்களை கவனத்தில் கொள்ளவும்.

எடுத்துக்காட்டாக:

Excuse me. what is the time please?
It's five o' clock.
Thank you.You're welcome.

Excuse me. Have you got the time?
Yes, it's 5.00.
Thank you.You're welcome.

Excuse me. Can you tell me the time, please?
Yes, of course. It's seven o'clock.
Thanks.

கவனிக்கவும்:

நேரம் குறித்த மேலும் சில சொல்லாடல்கள். (இவற்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.)

To be on time
குறித்த நேரத்திற்கு. (வந்திடவும்/இருக்கவும்) நேரம் பிந்திவிட வேண்டாம் என்பதனை வலியுறுத்திக் கூறுவதற்கான சுருக்கச் சொற்றொடர்.

We'll leave at 10:10 am sharp.
நாங்கள் வெளிக்கிடுவோம் சரியாக (கூர்மையாக) காலை 10.10 க்கு.

மேலுள்ள வாக்கியத்தில் "sharp" எனும் சொல்லும் இணைந்து பயன்பட்டுள்ளதைக் கவனியுங்கள். "Sharp" என்றால் தமிழில் "கூர்மை" என்று பொருளாகும். அதாவது 10:10 am Sharp" என்பது, சரியாக (கூர்மையாக) பத்து மணி, பத்து நிமிடத்திற்கு என்பதாகும். அதன் உட்பொருள் 10.09 க்கும் அல்ல, 10.11 க்கும் அல்ல. மிகவும் கூர்மையாக 10.10 என்பதாகும். (கத்தியின் கூர்மைப் போன்று என்பதை நினைவில் கொள்க.)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஆங்கிலம் பேசுவது எப்படி? - 1 (Asking the time)

Post by ராகவா on Sat 28 Sep 2013 - 11:25

இன்றைய கணனியுலகில் எல்லாமே எளிதாகிவிட்டன. நாம் எங்காவது செல்லவேண்டுமானால், முன்பின் தெரியாத இடமென்றாலும் எவரின் தயவும் இன்றி நாமாகவே கூகிள் ஏர்த், கூகிள் மெப் போன்றவற்றின் உதவியுடன் சென்றுவிடக்கூடிய வசதிகள் வந்துவிட்டன. வளர்ந்த நாடுகளில் வீதிகள், கட்டடங்கள் மட்டுமன்றி, பொது மலசலக்கூடம், ஒற்றையடிப் பாதைகள் போன்றவற்றைக் கூட எளிதாக கண்டறிந்துக்கொள்ள கூடிய வகையில் வரைப்பட நூல்கள் மக்கள் பயன்பாட்டில் பரவலாகக் கிடைக்கின்றன. இருப்பினும் என்னத்தான் வசதிகள் வந்தப்போதும் எல்லோருக்கும் எதாவது ஓர் சூழ்நிலையில், எவராவது ஒருவரிடம் பாதை கேட்டு அறிந்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படவே செய்கிறது. மற்றவரிடம் நாம் பாதை கேட்பதும், மற்றவர் எம்மிடம் பாதைக்கேட்டு நாம் ஒருவருக்கு வழிக்காட்டி உதவுவதும் அடிக்கடி ஏற்படும் சாதாரண விடயங்களே ஆகும்.

எனவே இன்றையப் பாடத்தில், ஆங்கிலத்தில் எவ்வாறு வழி கேட்பது என்று பார்ப்போமா?


ஆங்கிலத்தில் பேசிப் பழகும் போது; மரியாதைமிக்கதும் தாழ்மையானதுமான பேச்சு வழக்கிலேயே பேசிப்பழகுதல் பயன்மிக்கதாகும். நாம் ஏற்கெனவே வழங்கிய Polite and More Polite பாடத்தில் அவற்றை விளக்கமாக கற்றிருப்பீர்கள். புதிதாக இத்தளத்திற்கு வருகை தந்துள்ளோர் ஒருமுறை பார்த்துக்கொள்ளவும்.

Do you know the way to...?
Can you tell me the way to...?
Can you tell me the easy way to...?
Can you tell me the best way to...?

இவற்றையே மிகவும் தாழ்மையாக அல்லது மரியாதைமிக்க வகையில் (More Polite) கேட்பதனால் "Could", "Would", போன்ற சொற்களை முன்னொட்டாகப் பயன்படுத்தலாம்.

Could you tell me the way to...please?
Could you tell me the easy way to...please?
Could you tell me the best way to...please?Would you tell me the way to...please?Could you please tell me the way to...?Would you mind telling me...please?
சிலர் தாம் செல்லவேண்டிய இடத்திற்கான வழியை இவ்வாறு கேட்பதைப் பார்த்திருக்கலாம்.

Where the nearest HSBC bank is?
What the best way to get there?
What the easy way is?
What is the quickest way to Discovery bay?
How can I get there?
How to get Stanley beach?
How to find nearest Welcome Shop?
What the easy way to post office?

மேலுள்ளவாறு வழி கேட்பது பிழையானதல்ல என்றாலும், அவை மரியாதையான தாழ்மையான பேச்சு வழக்கைக் கொண்டதல்ல. எனவே அவற்றை எவ்வாறு "Polite Form" சொற்களாக பயன்படுத்தலாம் என்பதனை கீழே பாருங்கள்.

Could you tell me where the nearest HSBC bank is?
Could you tell me what the best way to get there?
Could you tell me what the easy way is?
Could you tell me what is the quickest way to Discovery bay?
Could you tell me how can I get there?
Could you tell me how to get Stanley beach?
Could you tell me how to find nearest Welcome Shop?
Could you tell me what the easy way to post office please?
Would you mind telling me what the easy way to post office please?

யாராவது ஒருவர் உங்களிடம் ஓரிடத்திற்கான வழிகேட்டால், அதற்கு பதிலளித்தல் அநேகமாக "நேராக சென்று, வலப்பக்கம் திரும்பி, இடப்பக்கம் திரும்பி, முதலாம்/இரண்டாம்/மூன்றாம் சந்தியில் திரும்பி, எதிரே உங்கள் வலப்பக்கத்தில், உங்கள் இடப்பக்கத்தில்" போன்ற சொற்களே பயன்படும்.

அதனையே ஆங்கிலத்தில் இவ்வாறு கூறலாம்.

எடுத்துக்காட்டாக:
Excuse me, could you tell me the way to HSBC bank please?
Certainly, go straight along this road, take the first/second/third turning on the right,HSBC bank is on your left/right/front.
ஒரு இடத்திற்கான வழி கேட்டு, அதற்கு ஒருவர் பதிலளித்தால், கட்டாயம் மறக்காமல் நன்றி கூறுங்கள். சிலவேளை நீங்கள் ஒருவருக்கு வழிக்காட்டி அதற்கு ஒரு நபர் நன்றி கூறினால், நன்றிக்கும் பதிலளிக்கும் வழக்கு ஆங்கிலப் பேச்சு வழக்கில் இருப்பதனை மறந்துவிடாதீர்கள். கீழே கவனிக்கவும்.

Excuse me, could you tell me the way to...please?
Go straight along this road/take the first turning on the right/...is on your left.
Thanks, you've been very helpful.Don't mention it. Good luck.
ஒருவரின் கவனத்தை திசைத் திருப்பி உதவி/வழி கேட்பதானால் "Excuse me", "Sorry to interrupt" போன்ற சொற்றொடர்களை முன்னொட்டாக பயன்படுத்த மறவாதீர்கள்.

Excuse me, could you tell me the way to...please?
Sorry to interrupt, could you tell me the way to...please?
I'm sorry to interrupt you, could you tell me the way to...please?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஆங்கிலம் பேசுவது எப்படி? - 1 (Asking the time)

Post by rammalar on Sat 28 Sep 2013 - 11:48

நாம் கேட்பது தமிழரிடம் என்றாலும்
ஆங்கிலத்தில் கேட்டால்தான் உடனே பதில்
வரும்...!!
-
அப்பறம், ஃபிகரிடம் டைம் கேட்குமுன்
கையில் இருக்கும் வாட்சை பையில்
போட்டுக் கொள்வது நலம்...!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஆங்கிலம் பேசுவது எப்படி? - 1 (Asking the time)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum