Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
மங்கள்யான்’ புவி வட்டபாதையை அதிகரிக்கும் பணி இன்று தொடங்கியது
2 posters
Page 1 of 1
மங்கள்யான்’ புவி வட்டபாதையை அதிகரிக்கும் பணி இன்று தொடங்கியது
ஸ்ரீஹரிகோட்டா, நவ. 6–
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, இந்தியாவால் முதல்முறையாக உருவாக்கப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பிற்பகல் 3.21 மணிக்கு பூமியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இதன்மூலம் செவ்வாய் கிரக பயணத்துக்கு ‘மங்கள்யான்’ செல்லும் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்சி மையம் (இஸ்ரோ) முதல் வெற்றியை பெற்றுள்ளது.
வரும் 10 நாட்கள் ‘மங்கள்யான்’ தொடர் பயணத்துக்கான அடுத்தகட்ட பணிகள் நடைபெறுகிறது. இதன்மூலம் புவி வட்ட சுற்றுப்பாதையில் வலம் வந்து கொண்டிருக்கும் மங்கள்யானின் சுற்று வட்டபாதை படிப்படியாக அதிகரிக்கப்படும். குறிப்பிட்ட அளவு சுற்று வட்டபாதை அதிகரிக்கப்பட்ட பிறகு ‘மங்கள்யான்’ அங்கிருந்து செவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்கும்.
மங்கள்யானின் புவிவட்ட சுற்றுப்பாதையை அதிகரிக்கும் முதல்கட்ட பணி இன்று தொடங்கியது. அடுத்தகட்ட பணி நாளை மறுநாள் (8–ந்தேதி) நடக்கும் அப்போது சுற்றுவட்ட தூரம் 40 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்கும்.
வருகிற 16–ந்தேதி வரை புவி சுற்றுவட்ட பாதையை அதிகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். புவி சுற்றுவட்ட பாதை 2 லட்சம் கிலோ மீட்டராக அதிகரிக்கப்படும்.
மொத்தம் 25 நாட்கள் ‘மங்கள்யான்’ விண்கலம் புவிவட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும். அங்கிருந்து செவ்வாய் கிரகம் நோக்கி செல்லும் நீண்ட பயணம் மீண்டும் தொடங்கும். டிசம்பர் மாதம் 1–ந்தேதி நள்ளிரவு இந்த பயணம் ஆரம்பம் ஆகிறது.
அதன் பிறகு 44 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தின் அருகே மங்கள்யான் செல்லும். 300 நாள் பயணத்துக்குப் பிறகு 2014–ம் ஆண்டு செப்டம்பர் 24–ந்தேதி செவ்வாய் கிரக சுற்று வட்டப் பாதையில் ‘மங்கள்யான்’ நிலை நிறுத்தப்படும். அங்கு செவ்வாய் கிரகத்துக்கு அருகே 300 கிலோமீட்டரும் தொலைவில் சுற்று வட்டப் பாதையில் வலம் வந்து ஆய்வு மேற்கொள்ளும்.
நவீன கருவிகள், கேமராக்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ‘மங்கள்யான்’ விண்கலம் அனுப்பும் தகவல்கள், புகைப்படங்கள் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா? கனிம வளங்கள் உள்ளனவா? அங்கு இருக்கும் வாயுக்களின் தன்மை என்ன? என்பது குறித்து விஞ்ஞானிகள் கண்டறிவார்கள்.
‘மங்கள்யான்’ திட்ட இயக்குனர் அருணன் கூறும்போது, ‘விண்கலத்தில் உள்ள சூரிய மின் தகடு உள்பட அனைத்து கருவிகளும் தனது செயல்பாட்டை சிறப்பாக தொடங்கி உள்ளன’ என்றார்.
பூமியை வலம் வரும் மங்கள்யானை 3 மையங்களில் இருந்து விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதன் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும், இந்த திட்டம் முழுமையாக வெற்றி பெறும் என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
‘மங்கள்யான் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது. இதன் பயணத்தை உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள். திட்டமிட்டபடி ‘மங்கள்யான்’ செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்து பயனுள்ள தகவல்களை தெரிவிக்கும்’ என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும்! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» புவி வெப்பமடைதலால் ஏற்படும் விளைவுகள்.
» மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்
» மங்கள்யான் பற்றி தகவல் அறிய பேஸ்புக்
» புவி மணி நேரம்: உலகம் முழுவதும் ஒரு மணித்திலாயம் மின் விளக்குகள் அணைப்பு
» புவி வெப்பமடைதலால் ஏற்படும் விளைவுகள்.
» மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்
» மங்கள்யான் பற்றி தகவல் அறிய பேஸ்புக்
» புவி மணி நேரம்: உலகம் முழுவதும் ஒரு மணித்திலாயம் மின் விளக்குகள் அணைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|