சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Khan11

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

3 posters

Go down

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Empty சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

Post by ahmad78 Sat 1 Mar 2014 - 11:09

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்) - கான் பாகவி




பிரிட்டன் குழந்தைகளில் 10% முஸ்லிம்கள்




சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  British-islamic-flag_thumb
[size=92]பி[/size]
ரிட்டன்டைம்ஸ்ஏடு அண்மையில் அதிகாரப்பூரவ ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளில் 10 விழுக்காட்டினர் முஸ்லிம் குழந்தைகள் ஆவர் என்கிறது அந்த அறிக்கை. தேசிய புள்ளிவிவரத் துறை வெளியிட்ட அந்த அறிக்கை மேலும் கூறுவதாவது:


ஐந்து வயதுக்குட்பட்ட 3 லட்சத்து 17 ஆயிரத்து 952 குழந்தைகள், ‘முஸ்லிம்கள்எனப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனின் மொத்தக் குழந்தைகளில் இவர்கள் 9.1 விழுக்காடு ஆவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் பிறப்புஇறப்பு துறைப் பேராசிரியர் டேவிட் கோல்மேன், “உயர்ந்துவரும் இந்த எண்ணிக்கை, முஸ்லிம் நாடுகளிலிருந்து நீண்டகாலமாக நடந்துவரும் குடியேற்றத்தைக் காட்டுகிறதுஎன்று சொன்னார்.


பிரிட்டனில் மதங்களில் முதலிடம் வகிப்பது கிறிஸ்தவம். அடுத்த இடத்தைப் பெற்றிருப்பது இஸ்லாம். அடுத்து இந்துக்கள் (1.6%) சீக்கியர்கள் (0.8%), யூதர்கள் (0.5%), புத்தர்கள் (0.3%) பட்டியலில் உள்ளனர். ‘மதம் சாராதோர்’ (Unreligion) என்ற பெயரில் 11,93,614 குழந்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 34.1 விழுக்காடு. மதம் குறிப்பிடாத குழந்தைகள் 9.6 விழுக்காடு.


இதற்கிடையே, பிரிட்டன் ராணியின் மதிப்புமிக்க பரிசுக்கு ஒரு முஸ்லிம் பெண் போலீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நைகீ ஹாபர்ட் என்பது அவரது பெயர். பிரிட்டன் முஸ்லிம்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கண்ணியமாகும் இது என்று நைகீ குறிப்பிட்டிருக்கிறார்.


2006ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர், சட்டஒழுங்குப் பிரச்சினைகளைக் கையாண்ட விதம், சமூக நல்லிணக்கத்திற்காக ஆற்றிய பணி, குடும்ப வன்முறைகளை ஒழிக்க எடுத்த நடவடிக்கைஎனப் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.



இன்னொருபக்கம், பிரிட்டனில்டவர்ஹோம்லட்நகர்மன்றம், முஸ்லிம் குடும்பங்களில் குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இஸ்லாமிய சமூக ஆர்வலர்கள் இதைப் பெரிய முன்னேற்றமாகக் கருதுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக டவர்ஹோம்லட் முஸ்லிம்களுக்காக வங்காள மொழியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிவருகின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Empty Re: சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

Post by ahmad78 Sat 1 Mar 2014 - 11:09

[size=undefined]பிலிப்பைன்ஸ் நாட்டினர் 30 பேர் இஸ்லாத்தில்[/size]




சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  4138992133

[size=127][/size]
டந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி (10.1.2014) வெள்ளிக்கிழமை மதீனா நகரில் ஈமானிய உணர்வுப்பூர்வமான ஒரு நிகழ்ச்சி. மார்க்க அறிஞர்கள், மாணவர்கள், நகரப் பெரியவர்கள் குழுமியிருந்த அந்நிகழ்ச்சியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த 30 பேர் திருக்கலிமா மொழிந்து இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.


புனித நபவீ பள்ளிவாசலின் இமாம் ஷைகு அலீ பின் அப்திர் ரஹ்மான் அல்ஹுதைஃபீ, பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் ஷைகு முஹம்மத் அப்பாஸ் நதீம், நபவீ பள்ளிவாசலின் தொழுகை அறிவிப்பாளரும் (முஅத்தின்) மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் இயாத் ஷுக்ரீ முதலானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


ஷைகு முஹம்மத் அப்பாஸ் அவர்கள் ஆற்றிய ஆங்கில உரையில், பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையைத் தெளிவாக எடுத்துரைத்தார். அடுத்து வாழ்த்துரை வழங்கிய டாக்டர் இயாத் ஷுக்ரீ அவர்கள், ‘இக்லாஸ்’ (குல் ஹுவல்லாஹ்) அத்தியாயத்தின் விரிவுரை வழங்கினார்.



இறுதியாகப் பேசிய இமாம் ஷைகு ஹுதைஃபீ அவர்கள், இஸ்லாத்தின் மேன்மை, அதை ஏற்பதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தினார். பிறகு பிலிப்பைன்ஸ் சகோதரர்கள் ஒவ்வொருவராக வந்து கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைந்தனர். தொடர்ந்து இஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொள்ளப்போவதாகவும்உம்ராவழிபாட்டை நிறைவேற்ற இருப்பதாகவும் புதிய சகோதரர்கள் அறிவித்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Empty Re: சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

Post by ahmad78 Sat 1 Mar 2014 - 11:10

[size=undefined]ஆஸ்திரேலிய பழங்குடி மக்களிடையே[/size]
[size=undefined]பரவும் இஸ்லாம்[/size]




சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Resize
[size=84][/size]
ஸ்திரேலியா நாட்டின் சமய-பண்பாட்டுத் துறைப் பேராசிரியர் ஆடம் போஸோமாய் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடி மக்களிடையே இஸ்லாத்தை ஏற்போரின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. 2002 – 2006ஆம் ஆண்டுகளில் 600 முதல் 1000பேர் இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். இதற்குக் காரணம் உண்டு. ஆஸ்திரேலியர்களில் கணிசமானோரின் பூர்வீகம் இந்தோனேசியா ஆகும். இவர்களின் முன்னோர்கள் இந்தோனிசியாவிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் வந்தவர்கள். அத்தோடு ஆப்கானிஸ்தான் வணிகர்கள் பலரும் இவ்வாறு அங்கே குடியேறியுள்ளனர்.


எனவே, மூதாதையர்களின் மார்க்கத்தை நோக்கி பழங்குடியினர் படையெடுக்கின்றனர். புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய ஆதம் என்பவர் கூறுகிறார்: பிரிட்டிஷ்காரர்கள் ஆஸ்திரேலியாவை ஆக்கிரமித்திருந்த காரணத்தால், நான் கிறித்தவத்திலேயே பிறந்து வளர்ந்தவன். ஆனாலும், கிறித்தவச் சடங்குகள் எதையும் நான மேற்கொண்டதில்லை. மேலும், என் கேள்விகளுக்குச் சரியான விடைகளும் கிறித்தவத்தில் கிடைக்கவில்லை.



1770ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் காலனி ஏற்பட்டது முதல், பசிபிக் பெருங்கடலை ஒட்டி வாழ்ந்த பழங்குடி மக்களில் பெரும்பாலோர் கிறித்தவர்களாகவே இருந்தனர். ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கட் தொகையில் 3 விழுக்காட்டினர் பழங்குடியினர் ஆவர். இவர்களுக்கெதிரான இனப் பாகுபாட்டை சர்வதேச மன்னிப்பு நிறுவனம் கண்டித்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Empty Re: சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

Post by ahmad78 Sat 1 Mar 2014 - 11:10

[size=undefined]ஐரோப்பிய அருங்காட்சியகத்தில்[/size]
[size=undefined]உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன்[/size]




சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Worlds-biggest-Quran-10

[size=92]பி[/size]
ரான்ஸ், பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் உலகிலேயே மிகப் பெரிய இரு திருக்குர்ஆன் பிரதிகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இப்பிரதிகள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த இருபெரும் பிரதிகளில் ஒன்று ஆப்கானிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டுதான் இது வெளியுலகுக்குத் தெரியவந்தது. மற்றொன்று மங்கோலியாவின் (தாதரிஸ்தான்) பழைமையான பிரதி. இது 2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதம் முதல் ஐரோப்பிய அருங்காட்சியகங்களை இப்பிரதிகள் அலங்கரிக்க உள்ளன.


ஐந்து மாதங்கள்வரை கண்காட்சியில் நீடிக்கவுள்ள இப்பரதிகளை இலட்சக்கணக்கான ஐரோப்பிய மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலைநகரம் காபூலில் ஆப்கன் பிரதி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 218 பக்கங்களைக் கொண்ட இப்பிரதி, 3 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இப்பிரதி ஷைகு மன்சூர் நாதிரீ அவர்களால் எழுதப்பட்டது.



மங்கோலியா பிரதி, உலகிலேயே இரண்டாவது பெரிய திருக்குர்ஆன் பிரதியாகக் கருதப்படுகிறது. இது, மங்கோலியா தலைநகர் உலன்பதோர் (காஸான்) பள்ளிவாசல் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இது விலையுயர்ந்த குர்ஆன் பிரதி என்கின்றனர். விலை உயர்ந்த கற்களால் இப்பிரதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் ஒன்றரை மீட்டரும் அகலம் இரண்ட மீட்டரும் கொண்டது. 632 பக்கங்கள் கொண்ட இப்பிரதியின் எடை, 800 கி.கி. ஆகும். இப்பிரதி பொன், வெள்ளி ஆகியவற்றால் முலாம் பூசப்பட்டுள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Empty Re: சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

Post by ahmad78 Sat 1 Mar 2014 - 11:11

[size=undefined]அயர்லாந்தில் இஸ்லாமிய நற்பணி[/size]
[size=undefined]மன்றம் தேர்வு[/size]




சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Islamic-Cultural-Office

[size=107][/size]
யர்லாந்து நாட்டில், வோடர்போர்டு தொழில்நுட்ப அகாடமியின்கீழ் இயங்கும் இஸ்லாமிய நற்பணி மன்றம் 2013 மே மாதம் நிறுவப்பட்டது. அகாடமியில் உள்ள முஸ்லிம் மாணவர்களின் சேவைக்காக உருவாக்கப்பட்ட இம்மன்றம், 2013ஆம் ஆண்டுக்கான அயர்லாந்தின் சிறந்த தொண்டு நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


இந்த இஸ்லாமிய நற்பணி மன்றம் விரிவான ஆக்கப்பணிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த நவம்பரில் ஏழை மற்றும் அநாதைகளின் நிதி உதவிக்காக முஸ்லிம் மாணவர் மன்றங்களின் ஒத்துழைப்பில்நற்பணி வாரம்கடைப்பிடிக்கப்பட்டது. இஸ்லாமிய மாணவர் மன்றங்களின் கூட்டமைப்பு, இந்த மன்றத்திற்குசிறந்த இஸ்லாமிய நற்பணி மன்றம்என்ற சிறப்புப் பெயரை கடந்த டிசம்பரில் வழங்கி கௌரவித்தது.


இது தொடர்பாக அயர்லாந்து பத்திரிகையானஇண்டிபென்டென்ட்எழுதியிருப்பதாவது: 2043வாக்கில் அயர்லாந்தில் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாமே விளங்கப்போகிறது. குடியேற்றமும் இங்குள்ள முஸ்லிம்களின எண்ணிக்கை விகிதம் உயர்ந்திருப்பதுமே இதற்குக் காரணமாகும்.



நாட்டிலேயே மிகப் பெரிய பள்ளிவாசல் ஒன்று எழுப்பும் திட்டத்திற்கு அரசு அனுமதி கிடைத்த சில வாரங்களுக்குப்பின் இந்த அறிக்கை அந்த ஏட்டில் வெளியாகியுள்ளது. அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கலோங்கிரிபீன் பகுதியில் இந்தப் பள்ளிவாசல் எழுப்பும் பணி முடியும் தருவாயில் உள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Empty Re: சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

Post by ahmad78 Sun 18 May 2014 - 10:00

பெல்ஜியத்தில் பெருகும் முஸ்லிம்களின் எண்ணிக்கை

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய முஸ்லிம் மகளிர் மன்றக் கூட்டத்தில், பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மன்றம் உலக முஸ்லிம்களுக்கு விடுத்த அறிக்கையில், “முஸ்லிம் மகளிருக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை முஸ்லிம்கள் வழங்கிட வேண்டும். அப்போதுதான் சமூக நீதி நிலைபெறும்; முஸ்லிம் பெண்களின் நிலை உயரும்” என்று வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பெல்ஜியம் இமாமும் சமூக ஆர்வலருமான நூருத்தீன் தவீல் கூறியதாவது: ஃப்ளாமென்க் பகுதியில் வாழும் பெல்ஜிய மக்களிடையே இஸ்லாம் வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாகப் பெண்கள் அதிகமாக இஸ்லாத்தில் இணைகின்றனர்.

ஆயினும், பெரிய நகரங்களில் வாழ்வோர் இஸ்லாத்தில் இணைவதாகத் தெரியவில்லை. முஸ்லிம்களுடன் கலந்து வாழும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. சமூகத் தொடர்புச் சாதனங்களுக்கு இதில் முக்கியப் பங்கு இருக்கிறது.
இளைஞர்கள், முதியோர் எனப் பல வயதினரும் இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். இருப்பினும் பெண்களின் சதவீதமே அதிகம். குறிப்பிட்ட எண்ணிக்கை தெரியவில்லை.

ஆனால், இஸ்லாத்திற்கு மாறுவோர் மனஅமைதியைத் தேடியே வருகின்றனர் என்பது மட்டும் உறுதி. புதிதாக இஸ்லாத்தில் இணைந்த பெண்களுக்கென ஒரு மன்றம் அண்மையில் தொடங்கப்பட்டது. குறுகிய காலத்தில் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 700ஐ எட்டியது என்று இமாம் நூருத்தீன் விவரித்தார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Empty Re: சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

Post by ahmad78 Sun 18 May 2014 - 10:02

ஆஸ்திரேலியாவில் முதலாவது இஸ்லாமிய அருங்காட்சியகம்

ஆஸ்திரேலியா நாட்டிலேயே முதலாவது இஸ்லாமிய அருங்காட்சியகம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் திறப்பு விழாவில் ஆஸ்திரேலியா நிதியமைச்சர் ஜோய்ஹாக்கி, பன்முகக் கலாசாரத் துறை அமைச்சர் நகோலாஸ், ஆஸ்திரேலியா தபால்துறை பொது மேலாளர் அஹ்மது ஃபாஹோர் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆஸ்திரேலியா தபால்துறை நிர்வாகமே இந்த அருங்காட்சியத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

திறப்பு விழாவில் பேசிய அஹ்மது ஃபாஹோர், “அருங்காட்சியகம் திறக்கப்படுவதற்கு முன்பே, அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பார்வையாளர்கள் முன்பதிவு முடிந்துவிட்டது. அருங்காட்சியகம் வெறும் வரலாற்றை மட்டும் கூறுவதாக இருக்காது. இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் வேண்டிய தகவல்களைப் பார்வையாளர்களுக்கு அளிக்கும்; இஸ்லாமியக் கலாசாரம், பண்பாடுகளைக் காட்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: ஆஸ்திரேலியர்களின் மனதில் உருவாகியுள்ள இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களையும் உண்மைக்குப் புறம்பான தீர்மானங்களையும் களைவதில் அருங்காட்சியகம் இயன்றவரை பங்காற்றும். கல்வி, கலாசாரம் இரண்டையும் போதிக்கும் மையமாக இது விளங்கும். இத்திட்டத்திற்குத் தாராளமாக நிதியுதவி செய்த முஸ்லிம் சமுதாயம் பாராட்டுக்குரியது.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் ஹாக்கி தமது உரையில், “சிறப்பான முறையில் இந்தப் பணி நிறைவடைந்துள்ளது. அனைவரையும் வாழ்த்துகிறேன். அருங்காட்சியத்தைத் திறந்துவைப்பதில் உவகை கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் ஆப்கானிய ஒட்டக உருவம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இஸ்லாம் பரவுவதற்கு ஆப்கன் முஸ்லிம்கள் அளித்த பெரும் பங்கினை நினைவுகூரும் முகமாகவே இந்த ஏற்பாடு. 18ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான் முஸ்லிம்கள் ஆஸ்திரேலியா வந்தார்கள் என்றும் அமைச்சர் நினைவுகூர்ந்தார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Empty Re: சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

Post by Nisha Sun 18 May 2014 - 16:19

சர்வதேசப்பார்வை .. சரி.. எதைக்குறித்த சர்வதேசப்பர்வை என தலைப்பில் குறிக்கலாமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Empty Re: சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

Post by rammalar Sun 18 May 2014 - 17:14

-
பிரிட்டன் அரசில் போலீஸ் வேலையில்
முஸ்லிம் பெண் பாராட்டப்படுகிறார்...
-
இன்னொரு முஸ்லிம் நாட்டில் பெண்களுக்கு
கார் ஓட்டவே அனுமதி இல்லை...மனைவி
கார் ஓட்டியதை முக நூலில் பார்த்த கணவன்
அவளை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார்,..!
-
பெல்ஜியம் மகளிர் மாநாட்டில் முஸ்லிம்
மகளிர் முன்னேற்றத்திற்கு சொன்ன
ஆலோசனை வரவேற்கத்தக்கது...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Empty சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

Post by ahmad78 Mon 19 May 2014 - 9:53

திறந்த வெளியில் மலஜலம் கழிப்பவர்கள் உலகிலேயே நம் நாட்டில் தான் அதிகம் என்ற அதிர்ச்சியான தகவல் சமீபத்திய ஐக்கிய நாட்டின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 597 மில்லியன் (60 கோடி) மக்கள் திறந்த வெளியில் தங்களின் “தேவைகளை“ நிறைவேற்றுகிறார்களாம்.
 
உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் இணைந்து தயாரித்து ஜெனிவா நகரில் வெளியிடப்பட்ட Progress on Drinking Water and sanitation 2014 என்ற அறிக்கையில் இது வெளியிடப்பட்டுள்ளது.
 
திறந்த வெளியில் ”செல்வதை” தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் நம் நாடு அக்கறையுடன் செயல்படவில்லையென்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது
 
இவ்வறிக்கையின் மீது கருத்து தெரிவித்த இந்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ஜெய்ராம் ரமேஷ் இது “ நம் அனைவருக்கும் ஒரு மானக்கேடாகும்” என்றுள்ளார்
 
 
திறந்த வெளியில் “வேலை” யை முடித்துக் கொள்ளும் 100 கோடி பேரில் 82 கோடி பேர் உலகின் 10 நாடுகளில் உள்ள தாகவும் இந்த நிலையை மாற்றுவதில் பங்களாதேஷ் வியட்நாம் மற்றும் பெரு நாடுகள் 1990ல் இருந்து பெரு முயற்சி எடுத்து பெருமளவில் குறைத்து விட்டதாகவும அந்த அறிக்கை சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளது
 
அவ்வறிக்கையில் எந்தெந்த நாடுகளில் திறந்த வெளியில் ”போவது” அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் 5 வயதுக்கு கீழே குழந்தைகள் இறப்பது சத்தற்ற குழந்தைகள் ஏழ்மை மற்றும் ஏழை பணக்காரர்களின் இடையே உள்ள பாகுபாடு அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Fpc


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)  Empty Re: சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...!
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
» காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பேச்சால் கோபத்தின் உச்சத்தில் சமாஜ்வாதி..
» செய்தித் தாள்களை உண்பதற்காக​வோ,சுத்தம் செய்வதற்கா​கவோ பயன்படுத்த​லாமா?
» செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum