சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது  நீதி வெண்பா.  Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது  நீதி வெண்பா.  Khan11
பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது  நீதி வெண்பா.  Www10

பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது நீதி வெண்பா.

Go down

Sticky பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது நீதி வெண்பா.

Post by rammalar on Wed 19 Mar 2014 - 18:29

பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது
நீதி வெண்பா
-

பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது  நீதி வெண்பா.  139515524612

பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தானதிரும்
பெண்ணிருவர் பேசில்விழும் விண்மீன்கள்- பெண்மூவர்
பேசில் அலைசுவறும் பேதையே பெண்பலர்தாம்
பேசில்உலகு என்னாமோ பின்

-
வரையறையின்றி ஒரு பெண் உரத்துப்

பேசினால் பெரிய இந்த பூமி அதிரும்

இரண்டுபேர் சேர்ந்து அவ்வாறு பேசினால் வானத்து

நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்

மூன்று பேர் சேர்ந்து அவ்வாறு பேசினால்

கடலலைகள் வற்றிவிடும்

-
பல பெண்கள் சேர்ந்து பேசினால் உலகம்

என்னாகுமோ
-
-------------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது நீதி வெண்பா.

Post by Nisha on Wed 19 Mar 2014 - 20:43

போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலோளி
தோற்றி நின்றனை பாரத நாடைலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே! எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ!

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ?
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே!

 அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

 ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்
;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!

 நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சாலவே யரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ!

 புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான் வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்

 
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்

 சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!


போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம் 
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது நீதி வெண்பா.

Post by Nisha on Wed 19 Mar 2014 - 21:08

ஆண், பெண் உறவுகள், ஆணாதிக்கம் பெண்ணின் பெருமை, தாய்மையின் சிறப்பு இவற்றை பற்றி எழுதாத விவரங்கள், கருத்துக்கள் இல்லை.

பெரும்பாலும் சரித்திரத்தில், இலக்கியங்களில், பெண்கள் மென்மையானவர்கள், இளகிய மனம் உடையவர்கள் என்று கூறப்படுகின்றனர். அதே சமயம் பெண்களின் ‘மனதின்’ ஆழத்தை அறிய முடியாது. மனவலிமை உடையவர்கள் பெண்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றன.

பெண்களும், ஆண்களும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள் (வாழ்க இந்த வித்தியாசம் என்கிறது ஒரு ஃப்ரெஞ்சு பழமொழி!). பெண்களை ஆண்கள், மலரே, கொடியே, என்று வர்ணித்தாலும், அடிப்படையில் "பாலியல்" உணர்வு தான், பெண்களை போக பொருளாக கருதப்பட்டு வந்ததின் காரணம்.

பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது நீதி வெண்பா –
பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தானதிரும்;
பெண்ணிருவர் பேசில்விழும் விண்மீன்கள்;- பெண்மூவர்
பேசில் அலைசுவறும்; பேதையே! பெண்பலர்தாம்
பேசில் உலகு என்னாமோ பின்!


வரையறையின்றி ஒரு பெண் உரத்துப் பேசினால் பெரிய இந்த பூமி அதிரும்; இரண்டுபேர் சேர்ந்து அவ்வாறு பேசினால் வானத்து நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்; மூன்று பேர் சேர்ந்து அவ்வாறு பேசினால் கடலலைகள் வற்றிவிடும்; பல பெண்கள் சேர்ந்து பேசினால் உலகம் என்னாகுமோ?


சமயவாதிகளும் தங்களது சமயப்போதனைகள் மூலம் பெண்களைப் பிற்பட்டவர்களாகவும், வலிவற்றவர்களாகவும் உருவகித்துக் காட்டினர். தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற உளப்பாங்கினைப் பெண்களிடையே தோற்றுவித்தனர். ஆணாதிக்கத்தை நிலை நிறுத்த கணவனைத் தலைவன் என்று கூறியவர்கள் மனைவியைத் தாதி என்றும், ஊழியக்காரி என்றும் வருணித்து என்றென்றும் தங்களது ஆணாதிக்கம் நிலைபெற வேண்டுமென்ற கருத்தில் தான் என்று பல சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.பெண்களின் உடல் வாகு


பெண்களின் உடல் அவர்களின் பல வேடங்களுக்கேற்ப அமைக்கபட்டது. தாயாக, தாதியாக, சகோதரியாக, மனைவியாக, தந்தை; தாய்க்கு பெண் மகவாக, இல்லத்தரசியாக, வேலை பார்க்கும் சம்பாதிக்கும் பெண்ணாக இருக்க வேண்டியதால் அவர்களின் உடலமைப்பு சிக்கலானது. மாதவிடாய் தோன்றியபோதும், அது மறையும் போதும் ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்களும் அவர்களை வெகுவாக பாதிக்கும். இருந்தாலும் "பெண்கள் இயல்பாகவே உடல் திடம் மிக்கவர்கள்.


சோகை, ஒவ்வாமை, மிகுந்த எடை, மாதவிடாய்த் தொல்லைகள் போன்ற சில நோய்களைத் தவிர்த்துவிட்டால் வேறு எந்த நோயுடன் 40 வயதிற்கு கீழான பெண்ணும் எனது மருத்துவமனைக்கு வருவதில்லை" என்கிறார் அனுபவமிக்க மருத்துவர் ஒருவர். அப்படியே நோய்வாய்ப்பட்டாலும் ஆண்களை விட விரைந்து நலமடைந்து விடுகின்றனர். நீரிழிவு ஒன்றைத் தவிர பிற எல்லா நோய்களிலிருந்தும் அவர்கள் எளிதாக நிவாரணம் பெற்றுவிடுகின்றனர்.


காசநோய், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் இதயக் கோளாறு போன்றவற்றால் பெண்களைவிட ஆண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதயக் கோளாறினால் இறப்பவர்களில் 80 விழுக்காட்டினர் ஆண்கள். இதே போல் உயர் இரத்த அழுத்தத்தினாலும் பெண்கள் பெரும் பாதிப்பு அடைவதில்லை.


சின்னச்சின்ன வலிகள், நோய்கள் போன்றவற்றைக்கூட ஆண்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. தாங்க முடியாமல் துடித்துத் துன்புறுவர். ஆனால் பெண்களோ பல நோய்களையும் உடல் உபாதைகளையும் பொறுத்துக் கொள்கின்றனர் அல்லது புறத்தே ஒதுக்கி விடுகின்றனர். இயல்பாகவே ஆண்களைவிடப் பெண்களின் வாழ்நாள் அதிகம். அதிலும் பரபரப்புக்கும் பதட்டத்திற்கும், மன இறுக்கத்திற்கும் ஆட்படும் போது ஆணின் வாழ்நாள் மேலும் குறைந்து போகிறது.பெண்களின் மனதிடம்

இயல்பாகவே பெண்கள் உறுதியான உளப்பாங்கு உடையவர்களாக உள்ளனர். "திருமணம் என்னும் கல்லூரியில் ஆண்கள் தங்கள் இளங்கலைப்பட்டத்தை இழக்கின்றனர். பெண்கள் முதுகலைப் பட்டம் ஏற்கின்றனர்" என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது முற்றிலும் உண்மை. அச்சமும் நாணமும் நிறைந்த கன்னியாக இருந்த பெண் கல்யாணமான பின்னர் உடற்திடமும் மனத்திடமும் கொண்ட குடும்பத் தலைவியாகிறாள்.


ஒரு பெண் தனது பிறந்த வீட்டில் 20-25 வருடங்கள் வாழ்ந்த பின் மணமானதும் கணவன் வீட்டுக்கு செல்கிறாள். இந்த பெரிய மாற்றத்தை அவள் எப்படி சமாளிக்கிறாள்? முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையை அவள் ஏற்றுக் கொள்கிறாள். சிறுவயதிலிருந்தே இதற்கு அவள் தயாராக்கப்படுகிறாள்.


ஒரு குருவி, எப்படி தனக்கென்று ஒரு கூட்டை அமைத்துக் கொள்கிறது? யார் சொல்லிக் கொடுத்தார்கள்? அதே போல பெண் தனக்கென்று ஓரு தனி இல்லம் – குடித்தனம் அமைக்க விழைவது அவள் உள்ளத்தில் ஊறிய, தொடக்க காலத்திலிருந்தே வரும் உணர்வு உந்துதல். என்று சொல்லலாம். தன் தாயைப் போல், மற்றொரு தாயாக விரும்புகிறாள்.


பெண்கள் தங்களின் வயதொத்த ஆண்களை விட, மனதளவிலும், உடலளவிலும் விரைந்து வளர்ச்சியடைகின்றனர். ஆண்களைவிட பொறுப்புணர்வும், முதிர்ச்சியும் அதிகம் உள்ளவர்கள்.- See more at: http://gnationsonline.blogspot.comஉங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
~MP~https://m.facebook.com/story.php?story_fbid=459604544136502&id=357282474368710


Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 21:15; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது நீதி வெண்பா.

Post by Nisha on Wed 19 Mar 2014 - 21:14

உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்- பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்

கடலினைத் தாவும் குரங்கும் - வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ் பெண்ணும்
வடமலை தாழ்ந்தத னாலே - தெற்கில்
வந்து சமன் செய்யும் குட்டை முனியும்

நதியி னுள்ளேமுழு கிப்போய் - அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த - திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் - ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் - அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும் - அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ்நெறி காட்டி - நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது நீதி வெண்பா.

Post by rammalar on Thu 20 Mar 2014 - 3:55

:/ -
--

பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது  நீதி வெண்பா.  1238808_157926374405968_821296563_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது நீதி வெண்பா.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu 20 Mar 2014 - 5:18

என்ன ஒரு கட்டுப்பாடு!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது நீதி வெண்பா.

Post by Nisha on Fri 28 Mar 2014 - 14:52

கவியருவி ம. ரமேஷ் wrote:என்ன ஒரு கட்டுப்பாடு!

இந்த தலைப்பை ஒட்டி ஒரு சிறு பட்டிமன்ற விவாதம் வைப்போமா!

ராம் மலர் ஐயா, கவியருவி சார்,  துறைவன் சார்,  பானுசபானா, அச்சலா, சம்ஸ்  இன்னும் இயன்றவர்கள் அனைவரும் தம் கருத்தினை  சொல்லலாமே..

பெண்கள் வீட்டில் கண்கள் என்கிறார்கள்!
ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண்ணிருப்பாள் என்கிறார்கள்!
பெண் இன்றிப்பெருமையும் இல்லை, கண் இன்றிக்காட்சியும் இல்லை,
பெண் மிரண்டால் வீடு கொள்ளாது!
பெண்னுரிமை இல்லாத நாடு - கல்வியறிவில்லாத வீடு என்றார் லெனின்! 
சகிப்புத்தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண் என்கிறார் காந்தியடிகள்!
பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பிழந்தவை.
காற்றை விட வேகமானது பெண்களின் எண்ணம என்கிறார் ஷேக்ஸ்பியர்!
அன்பு செய்யும் பெண்ணின்  நெஞ்சம் என்றும் இளமையோடிக்கும்.
பெண் சுதந்திரமில்லாத நாடு கபிட்சமடையாது!
பெண்களின் கண்ணீர் உலகிலேயே ஆற்றல் வாய்ந்தது!
பெண் என்பவள் காற்றில் அசையும் நாணலை போன்றவள்!புயல் வந்தாலும் ஒடிந்து விழ மாட்டாள்
இதெல்லாம் பெண்கள் பற்றி  நம் முன்னால் வாழ்ந்தவர்கள் தம அனுபவத்தில் உணர்ந்ததை எழுதிசென்றவை!

அப்படி இருக்கும் போது எப்படி பெண் பேசினால் பூமி அதிரும்! மூன்று பெண் சேர்ந்து சிரித்தால்  உலகழியும் என்பது சரியா!
 
இப்படியெல்லாம் எழுதுவதால் ஆண்களை கேலி செய்து பெண் உரிமை பேசுவதாய் எண்ணாதீர்கள்! ஆண் என்பவன்  தந்தையாய், சகோதரனாய், கணவனாய், தோழனாய்  பெண்ணின் கூட உடன் வராவிட்டால் அவள் ஒன்றுமே இல்லை,  அவளை இயக்குவதே ஆண் தான்!  ஆணின் அன்பு அவளை வழி நடத்தும் கடிவாளம் என்பதில்  மாற்றுக்கருத்தில்லை!


இந்த பாடலில் நோக்கம்  நிச்சயம் வேறு அர்த்தத்தோடு இருக்க வேண்டும்! 
பொறுமையின் சின்னமான பெண் பொங்கியெழுந்தால்  வீடு தாங்காது என்பர்! இந்த கருத்து இப்பாடலில் மறைந்துள்ளதா!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது நீதி வெண்பா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum