சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Khan11
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Www10

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

Sticky குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 22 Mar 2014 - 23:08

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள் எனும் தலைப்பில் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பித்து  பூக்களின் படங்களில் பெயர்கள் மட்டுமல்லாமல் அதன் தாவரவியல் பெயர், மருத்துவகுணங்கள், என அறிவியல் ரிதியாகவும்  தொகுக்கப்பட்டது.


இதுவரை தொகுக்கப்பட்ட பூக்களின் பட்டியல்  
பெயர்களின் மேல் சுட்டவும்.

 1. செங்காந்தள்
 2. ஆம்பல்
 3. அனிச்சம்
 4. குவளை
 5. குறிஞ்சி
 6. வெட்சி
 7. செங்கொடுவேரி
 8. தேமாம்பூ
 9. மணிச்சிகை
 10. உந்தூழ்
 11. கூவிளம் பூ
 12. எறுழம்
 13. சுள்ளி
 14. கூவிரம்
 15. வடவனம்
 16. வாகை
 17. குடசம்
 18. எருவை
 19. செருவிளை
 20. கருவிளம்
 21. பயினி
 22. வானி
 23. குரவம்
 24. பசும்பிடி
 25. வகுளம்
 26. காயா
 27. ஆவிரை
 28. வேரல்
 29. சூரல்
 30. சிறுபூளை
 31. குறு்நறுங்கண்ணி
 32. குருகிலை
 33. மருதம்
 34. கோங்கம
 35. போங்கம்
 36. திலகம்
 37. பாதிரி
 38. செருந்தி
 39. அதிரல்
 40. சணபகம்
 41. கரந்தை
 42. குளவி
 43. மா
 44. தில்லை
 45. பாலை
 46. முல்லை
 47. குல்லை
 48. பிடவம்
 49. செங்கருங்காலி
 50. வாழை
 51. வள்ளி
 52. நெய்தல்
 53. தாழை
 54. தளவம்
 55. தாமரை
 56. ஞாழல்
 57. மௌவல்
 58. கொகுடி
 59. சேடல்
 60. செம்மல்
 61. சிறுசெங்குரலி
 62. கோடல்
 63. கைதை
 64. வழை
 65. காஞ்சி
 66. மணிக்குலை
 67. பாங்கர்
 68. மராஅம்
 69. தணக்கம்
 70. ஈங்கை
 71. இலவம்
 72. கொன்றை
 73. அடும்பு
 74. ஆத்தி
 75. அவரை
 76. பகன்றை
 77. பலாசம்
 78. பிண்டி
 79. வஞ்சி
 80. பித்திகம்
 81. சிந்துவாரம்
 82. தும்பை
 83. துழாய்
 84. தோண்றி
 85. நந்தி
 86. நறவம்
 87. புன்னாகம்
 88. பாரம்
 89. பீரம்
 90. குருக்கத்திப்பூ
 91. ஆரம்
 92. காழ்வை
 93. புன்னை
 94. நரந்தம் 
 95. நாகப்பூ
 96. இருவாட்சி
 97. குருந்தம் 
 98. வேங்கை
 99. புழகு 1. மல்லிகையின் வெவ்வேறு இனங்கள
 2. விதைகளுக்கிடையிலான மாறுபாடுகள்
 3. குறுநறுங்கண்ணி போங்கம் திலகம் விதைகளின் வித்தியாசங்கள்!
 4. சங்ககால மலர்களின் பட்டியல் 


மலர்களில் கூறப்படும் மருத்துவக்குறிப்புக்களை  தகுந்த ஆலோசனையின்றி முயற்சித்து பார்க்க வேண்டாம்!

இத்தொகுப்பை நான் முழுமைப்படுத்த உதவிய விக்கிமீடியா, கற்க நிற்க [*படங்கள் ] மற்றும் அனைத்து இணைய தளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.


Last edited by Nisha on Tue 18 Aug 2015 - 23:13; edited 27 times in total (Reason for editing : முதல் பதிவில் லிங்க இணைப்புக்காக)
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky

Post by Nisha on Sat 22 Mar 2014 - 23:14

மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்


 1. அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
 2. நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
 3. முகை - நனை முத்தாகும் நிலை
 4. மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
 5. முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
 6. மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு
 7. போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
 8. மலர் - மலரும் பூ
 9. பூ - பூத்த மலர்
 10. வீ - உதிரும் பூ
 11. பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
 12. பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
 13. செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை


Last edited by Nisha on Sun 6 Apr 2014 - 18:20; edited 9 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 22 Mar 2014 - 23:17

கபிலர்….தமிழ்ச்சங்கப்புலவர்களில் மிக புகழ் பெற்றவர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இவரால் அதிகமான சங்கபாடல்கள் பாடப்பெற்றுள்ளது. இவர் புலனழுக்கற்ற அந்தனாளன் எனும் பாராட்டைபெற்றவர்.


இவர் பாடிய 200 க்கும் மேற்பட்ட பாடல்களில் பத்துப்பாட்டு எனும் நூலில் இடம்பெறும் குறிஞ்சிப்பாட்டும் ஒன்று.

இப்பாடலில் மூலம் இரே இடத்தில் ஒரே தடவையில் 99 வகையான தாவரத்தின் பெயர்களை பட்டியல் இட்டிருப்பதன் மூலம் கபிலர் காவியங்களின் மட்டுமல்ல தாவரவியலின் அறிஞராகவும் திகழ்ந்தவர்.

வால்மீகியும், காளி தாசனும் தங்கள் பாடலக்ளில் தாவரங்களைக்குறித்து பாடி இருந்தாலும் இப்படி 99 தாவரங்களின் பெயர்களை ஓரே பாட்டின் மூலம் கூறவில்லை.குறிஞ்சிப்பாட்டு 62 முதல் 07 வரை காணப்படும் மலர்களின் பெயர்ப்பட்டியல்….

ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி,ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 22 Mar 2014 - 23:21

மக்கள் வாழ்வில் மலர்கள்

உலகில் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தவர்களே. இயற்கைக் காட்சிகள், இயற்கை நிகழ்ச்சிகள், ஆகியவை இவர்களது வாழ்வில் மிகுதியும் இடம் பெற்றன. இயற்கையின் மாற்றத்திற்கும், போக்கிற்கும் ஏற்பத் தங்களது வாழ்வையும் அவர்கள் அமைத்துக்கொண்டனர். சங்ககால மக்களும் இதற்கு விதிவிலக்கல்லர்.

இயற்கையன்னையின் அன்பளிப்பான, மரம், செடி, கொடிகளின் மலர்கள் யாவும், தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்று, அவர்களது வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு ஒன்றாகக் கலந்தன. மக்களுக்குச் சிறுபொழுது, பெரும் பொழுது போன்ற காலங்களை உணர்த்தின. மங்கலப் பொருட்களாகவும், உணவாகவும் ஆயின. இவ்வாறான பல நிலைகளில் மலர்கள் பயன்பட்ட முறையினைச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். இயற்கையன்னையின் எழில் தோற்றம் மலர்க்காட்சிகளால் எவ்வாறு வனப்புற்றது என்பதையும், இம்மலர்கள் தமிழ் மக்களின் வாழ்வில் இணைந்து பயன்பட்ட நிலைகளையும் காணலாம்.


மலரும் மகளிரும்

மலர்கள், மரங்களிலும், செடிகளிலும், கொடிகளிலும் நீர்நிலைகளிலும் பூத்து நிற்கின்றதை நாம் அறிவோம். -80- மலர் மலர்ந்து இயற்கைக்கு மெருகூட்டுவதுடன் அதன் பயன் முற்றுப்பெற்று விடுவதில்லை. மக்களது வாழ்விற் புகுந்து வாழ்க்கை நிகழ்ச்சி஖ளுடன் ஒன்றும்போதுதான் அது மேலும் சிறப்படைகிறது.

மலர்கள் நிறைந்த கா, பொதும்பு, சோலை ஆகிய இடங்களில் சென்று, பூக்களைப் பறிக்க மகளிரே பெரும்பாலும் செல்கின்றனர். வளைகள் ஒலிக்க, இழைகள் அசைய, உள்ளத்தில் களிப்புப் பொங்க, மகளிர் பூக்கொய்யச் செல்லுங் காட்சி கண்ணிற்கு விருந்தாக அமைகிறது. நீர்ப்பூவான நெய்தல், குவளை போன்ற மலர்களைத் தழையுடைக்காகவும், அரும்பு முல்லை போன்ற மலர்களைத் தலையில் சூடுவதற்காகவும் பறிக்கின்றனர். சிலர் பூக்களைப் பறித்து விற்கவும் செய்கின்றனர்.

நன்றி இணையம்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்......செங்காந்தள்

Post by Nisha on Sat 22 Mar 2014 - 23:32

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide3

காந்தள் ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லிஆசியே (Liliaceae) எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும். காந்தள் என அழைக்கப்படும் கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி தமிழீழம் தவிர இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் தாவரவியற் பெயர்: லில்லி ஆசியே குளோரி லில்லி (Liliaceae Glory lily), இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். இதை மேலாண்மை பொருந்திய மலராகக் கருதுகிறார்கள்

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! 2-1

காந்தள் மலர் நன்றாக விரிந்ததும் துடுப்புப்போன்று காட்சி தரும். காந்தளில் இரண்டு இனங்கள் இருந்தன எனத் தோன்றுகின்றது. காந்தள் பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கும். மிகுந்த சிவப்பாக உள்ள காந்தள் மலர் ""தோன்றிப்பூ"" என்றும், சிவப்பு நிறம் அல்லாத காந்தள் `வெண்காந்தள்' அல்லது ""கோடல்"" என்றும் கூறப்பட்டன. செங்காந்தட் பூவைத் ""தோன்றிப்பூ"" என்றும் ""குருதிப்பூ"" என்றும் இலக்கியங்கள் ஆள்கின்றன. முல்லைப்பாட்டு தோன்றிமலர் குருதிபோலப் பூத்திருப்பதாகக் கூறுகிறது. வெண் காந்தள் (கோடல்) மலரில் மெல்லிய கோடுகள் காணப்படும்.

இப்போது காந்தள்மலர், `கார்த்திகைப்பூ' என்று சில இடங்களில் வழங்கப்படுகிறது. காரணம் கார்த்திகை மாதத்தில் இது மிகுதியாகப் பூக்கும்.

  கோடல்என்றும் தோன்றி என்றும் கூறப்பெறும் காந்தள்மலர் மலைச்சாரலில் வளரும். இதன் மலர் குலைகுலையாகப் பூத்திருக்கும். இதற்கு நல்ல மணம் உண்டு.கொம்பு கோடு இல்லாத செடியைக் (கோடு+அல்) கோடல் என்று குறிப்பிட்டனர் எனத் தெரிகிறது. கோடல் என்பது வளையலுக்கும் பெயர். வளையல் போன்று இருப்பதால் `கோடல்' என்ற காரணப் பெயர் வந்திருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide5

காந்தட்கொடி குறிஞ்சி நில மக்கள் தம் வீடுகளின் வேலியோரங்களிலும், பாதையோரங்களிலும் வளர்ந்திருக்கும். ""காந்தளம் சிறுகுடி"" என்று ஊரினைச் சிறப்பித்துள்ளனர்.இது கார்காலத்தில் மிகுதியாகப் பூத்துக் குலுங்கும். மாலை நேரத்தில் உருண்டு திரண்டிருக்கும். செங்காந்தள் மொட்டுக்கள் நள்ளிரவில் மலரும். அது விளக்கைப் போன்று காட்சியளிக்கும்.

காந்தட் பூ நன்றாக மலர்ந்திருக்கும் காட்சி, நாகப்பாம்பு படமெடுத்தாற்போல் அமைந்திருக்கின்றதென்றும், குலையாக மலர்ந்திருக்கும் காந்தள் கைகூப்பித் தொழுவதைப் போன்று தோன்றுகிறதென்றும் கூறுவர்.

காந்தட் பூவின் இதழ்கள் வாடியவுடன் உதிர்ந்து விடுகின்றன. மலரிதழ்கள் வாடிய காட்சி பாம்பு பை அவிந்ததுபோலத் தோன்றுகிறது.

காந்தள் மலர் மொட்டாக இருக்கும்போது குவிந்து நீண்டிருக்கும். இதனாலேயே அது கைவிரலுக்கு உவமை~ யாக அமைகிறது. ""மணிக்காந்தள் மெல்விரல்கள்"" எனச் சிலம்பு கூறும். புறநானூறு ""காந்தள் முகை புரைவிரல்"" எனக் காந்தள் முகையினை விரலுக்கு ஒப்புமையாக்கிக் கூறுகின்றது. நுனி சிவந்து காணப்படும். காந்தள் மொட்டு விரியும்போது இரத்தம் தோய்ந்த யானைத் தந்தம் போன்று காட்சியளிப்பதாக கூறப்~ படுகிறது. இதன் இதழ்கள் நீண்டு காணப்படுவதால் மலர்ந்த மலர், கை விரித்ததுபோலத் தோற்றமளிக்கிறது. காந்தள் மலரின் இதழ்கள், உடைந்த வளையல் துண்டுகள் போலவும், துடுப்பினைப் போன்றும் தோற்றம் தருகின்றன.

இதன் கிழங்கு கலப்பையைப் போன்று இருப்பதால், ""கலப்பைக் கிழங்கு"" எனப் பெயரிட்டனர். இதன் காய் நீண்டு காக்கையின் அலகினைப் போன்று சிறிது வளர்ந்திருப்பதால் இதனைக் ""காக்கை முக்குச் செடி"" என்று கோயம்புத்தூர்ப் பகுதியில் வழங்குகின்றனர்.

உருது மொழியில், இதனை ""அக்கினி சிகர்"" என்று கூறுவர். மலையாளத்தில் இன்றும், `தோன்றிப்பூ' `மேன்தோன்றிப்பூ' என்று இலக்கியப் பழம் பெயராலேயே வழங்குகின்றனர்.

மேல் தோன்றி என்பதே மேந்தோன்றி ஆயிற்று. தரையில் கிழங்காக அடங்கிய செடி கார்காலத்தில் -திடீரென்று கிளம்பி மேலே அழகிய பூவொடு தோன்றுதால் `தோன்றி' என்றும், `மேல்தோன்றி' என்றும் அழைக்கப்பட்டது. எங்கோ திரிகின்ற பார்வையைச் சட்டென்று ஈர்க்கும் கவர்ச்சி காந்தளுக்கு உண்டு. மலையாளத்தில் மழைக்காலத்தின் தொடக்கத்தை உணர்த்துவது இது.

இக்கொடியின் தண்டு பசுமையானது. வலுவில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலியவற்றைப் பற்றுக்கோடாகப் பிடித்துக்கொண்டு இந்தத்தண்டு 10-20 அடி உயரம் வளரும்.கிளை விட்டுப் படரும் ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும்

காந்தட் பூவுக்குத் தெய்வத் தன்மை உண்டு என்ற கருத்தில், இதனை வண்டுகள் மொய்த்தலில்லை என்ற ஒரு கொள்கையும் உண்டு.

காந்தள், வேங்கை, சண்பகம் முதலிய பூக்களில் தும்பியினம் படிந்து தாதுண்ணா என்றும், உண்டால் சிறகு உதிர்ந்துவிடும் என்றும் நூலோர் கூறுவர். என்று ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் எழுதிச் செல்கின்றார்.

""மலர்ந்த காந்தளினது மலரை, இது தெய்வத்திற்கு உரியதென்று அறிந்தும் அதன்பால் நின்றும் நீங்காமல் ஊதியது தும்பி என்று உ. வே. சா அவர்கள் குறிப்புரை எழுதியுள்ளார்.

ஆனால், காந்தளைசு சுரும்பு மூசும் என்பதற்குச் சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.

எனவே, சூர் விரும்பும் காந்தள் மலரை வண்டு மூசாது என்றும், சூர் விரும்பாத காந்தளை வண்டு மூசும் என்றும் கருத இடமிருக்கிறது. இதழ்கள் சோர்ந்து விழுகின்ற காட்சியை வளைகையினின்றும் விழுவதற்கு உவமையாகக் கூறுவர்

மருத்துவப் பயன்கள்

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது.இக்கிழங்கில் காணப்படும் நச்சுப்பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு வைத்திய முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வித்தியாசப்படுகின்றது. * தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள்.தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sun 23 Mar 2014 - 16:40

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide6

அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம் , பொய்கை நீர்ச்சுனைகளிலும் , மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டினையும் கொண்ட ஒரு வகை நீர்த் தாவரம்ஆம்பல் சற்று கூர்மையான இதழ்களைக் கொண்டது. பச்சை நிறத்தில் நீண்ட தண்டு, வெள்ளை நிறத்திலும் வெளிர் சிவப்பிலும் மலர்கள் காணப்படும்.ஆம்பல் அல்லது அல்லி மலர்கள் நெய்தல் நிலத்திற்கு உரித்தானவை .

குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு..... ஔவையார்
கொட்டி, ஆம்பல், நெய்தல் ஆகிய பூக்கள் குளத்தில் நீர் இருந்தால் வளரும். நீர் இல்லாதபோது தானும் காய்ந்து நீர் வந்ததும் மீண்டும் தழைத்துக் கொள்ளும்

நீர்அளவே ஆகுமாம் நீராம்பல் - ஔவையார்.
நீர் உயர்ந்தால் ஆம்பல் உயர்ந்து மிதக்கும். நீர் தாழ்ந்தால் ஆம்பல் தாழ்ந்து மிதக்கும் .


மருத்துவ பயன்கள்
இதழ்களும், இலைகளும் தண்டும், விதைகளும் கூட மருந்தாக பயன்படுகிறது

நீரிழிவை நீக்கும்.புண்களை ஆற்றும்.வெப்பச் சுட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீரும். இதை சர்பத் செய்து சாப்பிடலாம். கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு கட்டிகள் உண்டாகும்.இதற்கு அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரிது பூசினால் கட்டி உடைந்து குணமாகும்.அவுரி இலைக்குப் பதில் ஆவாரைக் கொழுந்தை சேர்த்து அரைத்துப் பூச அக்கி கொப்புளம் தீரும்.

அல்லி இதழ்களை நீரிலிட்டு காய்ச்சி கசாயமாக்கி பாலுடன் கலந்து பருகி வர நாவறட்சி,தீராத தாகம்,சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

அல்லி விதையை சேகரித்து தூளாக்கி பாலுடன் கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும்.கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும்.

அல்லி இதழ்களை மட்டும் சேகரித்து அதனுடன் 200 மில்லி நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்

கண்சிவப்பு,எரிச்சல்,நீர் வடிதல் இவற்றுக்கு அல்லி இதழ்களை அரிது கண்களின் மீது வைத்து கட்டிவர நல்ல குணம் கிடைக்கும்.அல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் அல்லது தேனில் கலந்து உட்கொண்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்கலாம்.

அவுரி இலைச் சாறு,மருதாணி இலைச் சாறு வகைக்கு 100 மில்லி அளவு எடுத்து 500 மில்லி தேங்காய் எண்ணையில் கலந்து ,அதில் 100 கிராம் அல்லிக் கிழங்கும்,35 கிராம் தான்றிக் காயும் அரைத்து கலந்து காய்ச்சி பதமுடன் இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.இதை தலைக்குத் தேய்த்து வர இளநரை மறையும்.முடி கருத்து தழைத்து வளரும்.அத்துடன் பித்தம் தணியும்.

சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ் சேர்த்து காய்ச்சி கசாயம் ஆக்கி குடித்து வர இதயம் பலமடையும்.இதய படபடப்பு நீங்கும்.ரதம் பெருகும்.அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்து பொடியாக்கி1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நோய் குணமாகும்.நீரிழிவு நோய் தீரும்.ஆண்மை பெருகும்.

வெள்ளை அல்லி இதழ்கள் 100 கிராம் அளவு எடுத்து அதே அளவு ஆவாரம்பூவை சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு காய்ச்சி அரை லிட்டராக சுண்டியபின் அதனை வடிகட்டி அதனுடன் அரை கிலோ சர்க்கரையை கலந்து நன்கு காய்ச்சி பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதில் 30 மில்லி அளவு எடுத்து அதை 100 மில்லி பசும் பாலில்கலந்துதினமும்இருவேளைகுடித்துவரஉஷ்ணம்தணியும்.ரத்தக்கொதிப்பும்,நீரிழிவுநோயும்கட்டுப்படும்.வெள்ளைநோய் ,மேகவெட்டை குணமாகும்.உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் நோயும் தீரும்


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! 2-2குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Aampel1குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! 800px-Laitche-P064
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Ampel
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Mon 24 Mar 2014 - 15:05

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide7


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! A39548a0

Botanical Name : Anagallis arvensis
Family
: Myrsinaceae
மலர்களில் மிகவும் மென்மையானது அனிச்சம் பூ. அதை மோந்து பார்த்தாலேயே வாடி விடுமாம்.மென்மைக்கு உதாரணமாக திருக்குறளில் கூறப்படும் மலர் அனிச்சம் பூ ஆகும்.அனிச்சம்‍

நுகர்ந்தாலே வாடிவிட கூடிய ஒரு மென்மையான மலர்.மென்மை மட்டும் அல்லாமல் புலனுணர்வு கொண்ட மிகச்சில மலர்களுள் ஒன்று இந்த அனிச்சம். சுவாசமோ, ஸ்பரிசமோ அல்லது ஏன் ஒரு சிறு தென்றல் காற்றின் வருடல் கூட இந்த மலரில் மாற்றத்தை ஏற்படுத்துமாம்.

இளஞ் சிவப்பிலும், அழகிய ஆரஞ்சிலும்ஊதா நிறத்திலும் அழகாய் மலர்ந்திருக்கும் சூரியன் வெளிச்சம் இருக்கும் திசையில் இலைகள் திரும்பி கொண்டே இருக்கும்

இது ஒரு செடி வகைத்தாவரமாகும்.

மோப்பக் குழையும், அனிச்சம்; முகம் திரிந்து
நோக்கக் குழையும், விருந்து.


மோந்தால் வாடிவிடும் அனிச்ச மலர்;
முகம் மலராது திரிந்து நோக்கினாலே வாடிவிடுவர் விருந்தினர்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by பானுஷபானா on Mon 24 Mar 2014 - 15:17

மலர்களின் கட்டுரை தொகுப்பு சூப்பர் நிஷா தொடருங்கள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by rammalar on Mon 24 Mar 2014 - 21:27

பயனுள்ள பகிர்வு... *_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Tue 25 Mar 2014 - 12:06

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide8
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! F10457
 

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! White_Flower

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! 3-1
செங்குவளை, கருங்குவளை, நீலக்குவளை என்றெல்லாம் நிறத்துக்கேற்ப அழைக்கபடும் மல்ர் இது. சங்கப் பாடல்களில் உவமையாக இம்மலர் பயன் படுத்தப்ட்டிருக்கும். தேவாரம், திருப் புகழ், திருமந்திரம் என அனைத்திலும் பாடப்பட்ட மலர் இது. பெண்ணின் விழிகளுக்கு ஒப்பிடப்படும் மலர் இது.

இது மலைப் பக்கத்துச் சுனைகளில் மிகுதியாகப் பூத்திருக்கும். ஆனால் சில இடங்களில் கழி, பொய்கை, போன்றவற்றிலும் வளர்ந்திருக்கக் காணலாம். குவளையில் சிவப்பு நிறமும், நீல நிறமும் உடைய இரு இனம் உண்டு.

மலர்ந்தவுடன் குவளை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். ஆகவேதான் அது அழகு பெற்ற மையுண்ட கண்களுக்கு உவமையாகக் கூறப்படுகிறது. குவளை காலையில் மலர்ந்திருக்கும்; மாலையில் கூம்பும். கயங்களில் தொகுதி தொகுதியாக மலர்ந்திருக்கும். மொட்டு, கூம்பு போன்ற அமைப்புடன் இருக்கும்.

குவளை மலர் மிகுதியான இதழ்களை உடையது. எனவே குவளையைப் `பல்லிதழ்' என்று அழைத்தனர். வீடுகளிலும் குவளை மலரைத் தாழி எனப்படும் பூந்தொட்டிகளில் வைத்து வளர்த்தனர். அதனை ""தாழிக் குவளை வாடுமலர் சூட்டி"" என்ற அடியால் உணரலாம்.

ஆமபலைபோன்ற நீர்தாவரம் இது. பார்க்கும் போது குவளையும் ஆம்பலும் ஒரே மலர் போல் தோன்றினாலும் இருமலர்களையும் ஒத்திட்டு பார்க்க வேண்டும்.


ஆம்பல் சற்று கூர்மையான இதழ்களைக் கொண்டது.
குவளை கூர்மை இல்லாது வளைந்த இதழ்களைக் கொண்டது.

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Fb78e2a7
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Vk
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Tue 25 Mar 2014 - 15:50

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide9

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! 7bec2d99
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Neela_kurinji
இயற்கையின் எத்தனையோ அதிசயங்களில் ஒன்று குறிஞ்சி மலர். ஒரே நாளில் இரண்டு முறை பூக்கும் தாவரங்கள் ஒருபக்கம். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி என ஆச்சரியமூட்டும் இயற்கையின் முன்னேநிலங்களை ஐவகையாய் பிரிக்கையில்மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என பிரிக்கப்பட இம்மலரே காரணம்.

இது கார்காலத்தில் மலரும் என்பதைக் `கார் மலர்க்~ குறிஞ்சி' என்ற மதுரைக் காஞ்சியால் அறிகிறோம். இதன் காம்பு கருமையான நிறமுடையது என்பதையும், அது தேனுடைய பூ என்பதையும், அறிய முடிகிறது.

இரண்டு முதல் மூன்று அடி உயரம் வரை வளரக்கூடிய இம்மலர் நீல நிறமுடையது. இச்செடி தமிழக மலைப்பகுதிகளில் செழித்து வளர்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் வகையில் தொடங்கி சுமார் 32 வகை குறிஞ்சி மலர்கள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் இச்செடிகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இம்மலர் பூக்கும். மணி போன்ற அமைப்பையுடைய இம்மலர்கள் பூக்கத் தொடங்கிய உடனேயே தேனீக்கள் கூட்டம் கூட்டமாக மொய்க்கத் துவங்குகின்றன.

குறிஞ்சிச் செடி கூட்டங்கூட்டமாக மலரும், மலரும் காலம் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை. உலகம் முழுக்க ஸ்டிரோபிலாந்தஸ் தாவரப் பிரிவில் 200க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவற்றில் 150 வகைகள் இந்தியாவில் இருக்கின்றன.

குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டு்மே பூப்பது குறிஞ்சியின் சிறப்பு. எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்பதைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பளியர் பழங்குடியினர் தங்கள் வயதை கணிப்பார்கள்.....

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Neelakurinji

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! 4-2
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue 25 Mar 2014 - 16:49

பகிர்வுக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 27 Mar 2014 - 0:49

நன்றி ரமேஷ்  சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 27 Mar 2014 - 0:53

 குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide10


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Vetchi

வெட்சி' சிவப்பு அல்லது வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்களில் சிறிதளவு தேனுடன் கொண்ட பூக்களை உடைய சிறு தாவரம் / அதன் பூ.மரங்களின் தீ பிழம்பு என செல்லமாக அழைக்கப்படும் பெருவாரியான மக்களால் இட்லி பூ எனவும் அழைக்கப்டும்.

குல்லை, செச்சை, செங்கொடுவேரி, சேதாரம் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறது.இதனைச் `செச்சை' என்றும் வழங்குவர். இதன் முகை சிவல் என்ற பறவையின் காலில் உள்ள முட்களைப் போன்று இருக்கும் என்ற செய்தியினை அகப்பாடலடி தெரிவிக்கின்றது. வெட்சிப் பூ பெரியதாக இருக்கும். காம்பு சிவப்பாக இருக்கும்.

`வெட்சி மாமலர்', 'செங்கால் வெட்சி' என்று இலக்கியங்கள் கூறுகின்றன.


மருத்துவ பயன்கள்

ஆயுர்வேத மருத்துவத்தில் உதவிடும் தாவரம் இது.
புண்களை ஆற்றும் ,கண்களுக்கு நல்லது ,பசியினமைக்கும் நல்லது

பூவை -வெள்ளாட்டுபாலில் கொடுக்க வெள்ளை தீரும்
பூவை குடிநீராக்கி குடிக்க சுரம் தீரும்
பூவை நெய்விட்டு வதக்கி -சீரகம் ,சிறுநாகபூவுடன் உண்ண-நீர் வேட்கை போகும்
வேரை-திப்பிலயுடன் கொடுக்க -கழிச்சல் நிற்கும்
வேரை புண்ணில் போட புண் சீக்கிரம் ஆறும


வெட்சிப்பூ மேக வழல் விட்டோடும் வாசனையாம்
அடசி வழி யாயுயிர் கொள்ளா ரணங்கே -எச்சுஞ்
சுரமுடனே தாகந் தொலைக்கும் உலகில்
விரைவாய் இளைப்பகற்றும் விள
(அகத்தியர் குண பாடம் )
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 27 Mar 2014 - 0:54

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide11


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! PC241524
செங்கொடிவேலி ரோஜாநிறப் பூவுள்ள கொடிவகை
வெட்சியைப் போலவே இருந்தாலும்வேறுபாடுகள் நிறையவே உண்டு .


ஒரே கொத்தில் நூற்றுகணக்கான மலர்கள் ஒரே சமயத்தில் மலரும்வெட்சியில், நூற்றுக்கணக்கில் மலர்கள்அதே கொத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மாதக் கணக்கில் இருக்கும்

பல்வேறு மருத்துவபலன்களை தன்னகத்தே கொண்டதான இம்மலர் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாவதுபோல் ஆவதும் உண்டு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 27 Mar 2014 - 0:56

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide12


தேமாம்பூ; ஆம்பிரம்; மாம்பூ என அழைக்கப்படும்.

முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படும், முதலில் புளிப்பாகவும் கனிந்த பின் இனிப்பாகவும் இருக்கும் பழத்தைத் தரும் பூ / அதனைத் தரும் மரம்


மாமரம் 35 - 40 மீ உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன் இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன. இவை 15 - 35 செ.மீ நீளமும், 6 - 16 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. இவை மிகச்சிறியதாக, 5 - 10 மி.மீ. நீளமுடைய இதழ்களையும், மிதமான இனிய மணத்தையும் கொண்டுள்ளன. பூத்து, மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன.

மாம்பழம் நீன்ட காம்புகளுடன் மரக்கிளைகளில் கொத்தாய் தொங்கும். பழங்கள் 10 - 25 செ.மீ நீளமும், 7 - 12 செ.மீ விட்டமும், 2.5 கிலோகிராம் வரை எடையும் உடையவை. காய்கள் பச்சையாகவும், பழங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. பெருபாலும் இரகத்தைப் பொருத்து நிறம் மாறினாலும், சூரியன் படும் பாகங்கள் சிவப்பாகவும், மற்ற இடங்கள் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்த பழம் இனிய மணம் கொண்டிருக்கிறது. பழத்தின் நடுவில் கடின ஓடுடைய ஒற்றை விதை காணப்படும். இ

நல்ல வடிகால் வசதியும் சற்றே அமிலத்தன்மையும் (pH 6-7) உள்ள எந்த மண்ணிலும் மாமரங்கள் நன்கு வளரும். மேற்கூறியவாறு, உறைபனியற்ற எந்த பகுதிகளிலும் மாமரங்கள் வளரும்; ஆனால், 12-15 பாகை C வெப்பநிலைக்குக் கீழே வளர்ச்சி குன்றிவிடும். 15 பாகை C க்கு கீழேயும், 40 பாகை C க்கு மேலும் பூக்கள் உதிர்ந்து, மகரந்தம் குறைவதால் காய் பிடிப்பு குறைந்துவிடும். காய் முதிரும்போது அதிக அளவில் நீர் தேவைப்படுகிறது. அதிக காற்று, பூக்களையும், காய்களையும் உதிர்த்து விடும். மாமரத்தின் இலைகளாலும், பூக்களாலும் சிறிதளவு உறைபனியை கூட தாங்க முடியாது. மாமரம் சுமார் -5 பாகை C வரை தாங்கவல்லது

மாமரப் பூங்கொத்தில் சுமார் 4000 பூக்கள் இருக்கும். பூங்கொத்தில் பெரும்பகுதி ஆண் பூக்களாகவும் மற்றவை இருபால் பூக்களாகவும் இருக்கும். சாதாரணமாக, நிழலில் வளரும் பூக்கள் இருபால் பூக்களாக இருக்கும். உலர்ந்த அல்லது குளிர் தட்பவெப்பம், மாமரம் பூப்பதை தூண்டுகிறது. மேலும், எதிபான், பொட்டாசியம் நைட்ரேட் அல்லது நாப்தலீன் அசிடிக் ஆசிட் ஆகிய வேதிப்பொருட்களும் பூப்பதை தூண்டப் பயன்படுத்தப்படுகின்றன.

மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. இந்தியாவில், இது மிக அதிக அளவில் காணப்படும் பழக்கம். பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில், மாம்பழக்கூழில் சர்க்கரை சேர்த்து உலர்த்தப்பட்டு சிறு துண்டுகளாக மிட்டாய் போலவும் உண்ணப்படுகிறது. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், மற்றொரு பிரபலமான பானம், மாம்பழத்தையும் தயிரையும் கலந்து செய்யப்படும் மாம்பழ லஸ்ஸி ஆகும்.

உப்பு, மிளகாய் சேர்க்கப்பட்ட மாங்காய்த் துண்டுகள்மாங்காயும், பலவிதமாக உலகெங்கும் உண்ணப்படுகிறது. இந்தியாவில், மாங்காய் துண்டுகள் மிளகாய்த் தூள் அல்லது உப்பு சேர்த்து உண்ணப்படுகின்றன. மேலும் மாங்காயைக் கொண்டு குழம்புகள், ஊறுகாய்கள், பச்சடிகள் ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன. இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், மாங்காய்கள் ருஜக் அல்லது ரொஜக் எனப்படும் புளிப்பு பச்சடி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில், மாங்காய்கள் 'பகூங்க்' எனப்படும் மீன் அல்லது இறால் கொண்டு தயாரிக்கபடும் கூழுடன் உண்ணப்படுகின்றன. மாங்காய் கொண்டு தயாரிக்கப்படும் சட்னி இனிப்பாகவோ, புளிப்பாகவோ, காரமாகவோ பல நாடுகளில் தயாரிக்கப்படுகிறது


மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் பொருத்து பழச்சதை மிருதுவாகவோ, கூழாகவோ, உறுதியாகவோ இருக்கும்.

மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும், கொப்புளங்களும் உண்டாக்கலாம். மாம்பாலில் இருக்கும் அமிலப்பொருட்களே இதற்கு காரணமாகும். இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும், இரத்த இழப்பு நிற்கும், இதய நலம் உண்டாகும் என நம்புகின்றனர்.

இந்திய துணி வகைகளில் மாம்பழ வடிவம் அழகுக்காகப் பயன் படுத்தப்படுகிறது.
  வகைகள் அல்லது இரகங்கள்தேமா (இனிப்பு மிக்கது} புளிமா (புளிப்பு மிக்கது)கறுத்த கொழும்பான்வெள்ளைக் கொழும்பான்பங்கனப்பள்ளிமல்கோவாருமானிதிருகுணிவிலாட்டுஅம்பலவி [கிளி சொண்டன் மற்றும் சாதாரண அம்பலவி என இரண்டு]செம்பாட்டான்சேலம்பாண்டிகளைகட்டிபச்சதின்னிகொடி மாமத்தள காய்ச்சி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 27 Mar 2014 - 10:13

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide13

சொற்பொருள் கொண்டு நோக்கும்போது உச்சியில் செந்நிறம் உடைய பூவாகக் கருத இடமுண்டு. இதனைச் செம்மணிப் பூ என்பர்

மணிச்சிகை புதர்கள் போல் காணப்படும் ஒரு மெல்லிய கொடி, 3-5 மீ நீண்டு வளரும். முட்டை-இதயம்-வடிவ இலைகளோடு இளஞ்சிவப்பு-ஊதா வெள்ளை புனல் வடிவ பூக்களோடு கடற்கரைகள் மற்றும் உப்பு மண்ணில் வருட்ம் முழுமைக்கும் பூக்கும் பூ இது.

தாளிக்கொடி - மஞ்சிகம் , மஞ்சிகை என அழைக்கபடும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 27 Mar 2014 - 10:16

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide14


Name : Bamboo
Botonical name : Bambusa oldhamii
Family: Poaceae


நெடிதுயர்ந்து வளரும் புதர் தாவரம் மூங்கில் எனவும் அழைக்கப்படும்.
புதர் தாவரம் ஆகிய மூங்கிலின் மலர் பெயர்தான் உந்தூழ்.எப்போதாவதுதான் மலரும் ஆண்டுக்கு ஒருமுறை மலரும் வகையும் உண்டு எப்போது பூக்கும் என்று தெரியாத வகையும் உண்டு

மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன. உண்மையில் மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு மரம் தான். மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் அதிக அளவு பருமன் 1 சென்ட்டிமீட்டரிலிருந்து 30 சென்ட்டிமீட்டர் வரை இருக்கும். மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரம். ஒரு மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அது 60 அடி உயரம் வரை வளரும் காலமே 59 நாட்கள்தான். கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும்.

மெலொகன்னா பாக்கிஃபெரா (Melocanna baccifera)[2] என்ற மூங்கில் இன மரங்களில் பெரும்பாலானவை48 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றாக பூக்கும்
.
சில மூங்கில் மரங்கள் இந்த வழக்கத்திற்கு மாறாக ஒருசேரப் பூக்காமல் இடையே பூப்பதுண்டு. ஆனால், அந்நேரங்களில் சில விதைகளே உருவாகும்.

இவ்வகை மூங்கில் பூப்பிற்குப் பிறகு விதைகள் உருவாகி மூங்கில் மரங்கள் மடிந்து விடுகின்றன

மூங்கில் பூ பூத்தால் அந்த வருடம் துரதிஷ்டம் அல்லது அத்தவருடம் வெள்ளாமை சரியாக இருக்கது என்ற நம்பிக்கை பல இடங்களில் இருக்கிறது.

உண்மையில் அதற்கான காரணம் மூங்கில் அரிசி என்றால் எலிகளுக்கு ரொம்ப ஆசை. அதை உண்ண சுற்று வட்டார எலிகளெல்லாம் அங்கே குடி பெயர்ந்துவிடும். மூங்கில் அரிசி தீரும் வரை அங்கேயே குடும்பத்தை பெருக்கும்.

மூங்கில் அரிசி தீர்ந்துவிட்டால் அப்போது பல மடங்காக பெருகி இருக்கும் எலிக்கூட்டம் சுற்றுவட்டார விவசாயநிலங்களுக்குத்தான் படையெடுக்கும். அப்போது கண்டிப்பாக அந்த வருட விவசாயம் வழக்கத்தை விட அதிக சேதாரத்தைத்தான் சந்திக்கும்.

இதுதான் மூங்கில்பூத்தால் ஆகாது என்ற வழக்கை தந்திருக்கும்.


கொல்லிமலை அடிவாரத்திலேயே மூங்கில் தோப்ப பூத்திருப்பதை பாருங்கள்.


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! DSC00124


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 27 Mar 2014 - 10:19

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide15

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! 2-4


வில்வம். கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலூரம்

தாவர அமைப்பு - வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப் படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. கனி தொடர்வன, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும்.

எல்லாச் சிவன் கோவில்களிலும் இருக்கும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள். கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும். இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும். பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியன ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம். இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். இது ஒரு விருட்சகம். கோவில் தோரும் இதை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன் படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது. ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம். இதை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.மருத்துவப் பயன்கள்

வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.

இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.

பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.

பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.

பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை - கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.

வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.

வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.

வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.

புற்றுநோய்தீர -: நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.

இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் ஸ்நானம் செய்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது உடலுறவு கூடாது.

வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்து தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும் நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும்.

வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போம்.

வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.

வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.

வில்வக் காயை சுடவேண்டும். சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.

ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.

வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும் பாண்டு வியாதி பறந்தோடும்.

வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.

வில்வ வேரை 10 - 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர, தேவையில்லாத விந்து வெளியேற்றத்தைத் தடுத்து, விந்துவைப் பெருக்கும். ஆண்மையை அதிகரிக்கும்.

வில்வ இலைகளைக் கொண்டு வந்து அரைத்து கோலி அளவு காலையில் வெறும் வயிற்றில் நீரில் கலக்கிக் குடித்து விட்டு ஒரு மணி நேரம் சென்ற பின் தலைக்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். நாளடைவில் மாத ருது காலம் தவராமலும் அதுவால் ஏற்படும் வயிற்று வலியும் படிப்படியாகக் குறைந்து குணமாகிவிடும்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 28 Mar 2014 - 20:30

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide16
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! 12
சிவப்பு பூக்கள் எங்கும் காணப்படும் இந்த ஏறுகொடி பல பெரிய மரங்கள் மற்றும் புதர்கள் மீது 5-10 மீட்டர் வரை படர்ந்து வளரும். பூக்கும் பருவம் குளிர் மற்றும் பிப்ரவரியில் உச்ச காலம் ஆகும்.

தண்டு மற்றும் இலைகள் மருத்துவ பயன் கொண்டதென கூறப்படுகிறது . மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், குறைந்த மட்ட வெப்பமண்டல பசுமைமாறா காடுகளிலும் காணப்படுகிறது.

இது மழைக் காலத்தில் மிகுதியாகப் பூக்கும். பூ சிவப்பு நிறத்துடன் இருக்கும். மழைக்காலம் நீங்கிப் பூக்கும் மலர்கள் மங்கி நரை நிறத்துடன் இருப்பதாகக் கூறப்படுகின்றன.

இதற்கு விளக்கம் கூறும்போது, `எறுழ் மணி நிறத்துடனும் மலரும்' என்று பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கூறுவார். இம் மலர்கள் இணராகப் பூத்துநிற்கும் என்பதை, `விரியிணர்க் கால் எறுழ் ஒள்வீ"" என்ற அடியால் உணரலாம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 28 Mar 2014 - 20:31

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide17
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! 1-3
கருங்காலி வகை மரம் / அதன் பூ

சாலம்; மரா; ஆச்சா; தும்பி; கருங்காலி; கருத்தாலி என்ற பல பெயர்களால் அழைக்கப்படும், கலப்பை செய்யப் பயன்படும் ஒரு வகை மரம்

ஒரு சதுர அடி மரத் துண்டு, இரண்டாயிரத்துக்கும் மேலே விலை போகக் கூடிய
கருங்காலி எனப்படும் மரத்தின் மலர் பெயர் இது

அழகிய அடர் சிவப்பு இதன் மலர் நிறம்வெளிர் பச்சை, அடர் பச்சை என இதன் இலைகளின் நிறம், நெடிதுயர்ந்து வளரும் இந்த மரம், பார்க்க எல்லா மரத்தையும் போல இருந்தாலும் இது உறுதிக்குப் பெயர் போனது

எத்துணையோ கலைப் பொருட்கள் இதை கொண்டு செய்கின்றனர் இணையத்தில் தேடினால் நிறைய யானைகளும், வேறு சில பொருட்களும் இருந்தன. அதன் விலையைப் பார்க்கையில் அந்த யானையை உயிருடனே வாங்கி விடும்அளவு அதிகம்
.
கருங்காலிக் கட்டைக்கு
நானாக் கோடாலி
இருந்கதளைத் தண்டுக்கு
நானியதே "

என ஔவையாரால் பாடப்பட்ட மலர் இது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 28 Mar 2014 - 20:42

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide18
கூவிரம் என்பது சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.கூவிரம் பூவை இக்காலத்தில் ஊமத்தம்பூ என்கின்றனர்.

ஊமத்தை ( jimson weed/Thorn Apple ) என்பது ஒரு தாவர இனம்.. இதன உயிரியல் பெயர் - டதூரா ஸ்டரமோனியம் ( Datura stramonium). இச்செடி மூன்றில் இருந்து ஐந்து அடி நீளம் வளரக்கூடியது.

தோல் நோய்கள், புண், அரிப்பு, கிருமி, நீர் கடுப்பு உள்ளிட்டவைகளக்கு மருந்தாக பயன்படுகிறது.
பொதுவாக நோய்தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாப்பானகவும் செயற்படும்.அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்குமயக்க மருந்தாகவும் பயன்படுகிறது
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 28 Mar 2014 - 20:46

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide20
வடவனம் என்னும் மலரைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டுந்தான் உள்ளது.

துழாஅய் என்னும் மலரும் 99 மலர்களில் ஒன்றாக எண்ணப்படுவதால் வடவனம் என்னும் மலரைத் துளசி என அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு. செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும் சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம். துளசி போலவே இருக்கும் மற்றொரு செடி திருநீற்றுப்பச்சை.

குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறும் 99 மலர்களின் தொகுப்பில் அது இடம்பெற்றுள்ளது

துளசி (Ocimum Sanctum) மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு


மருத்துவக் குணங்கள்

சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
தொற்றுநோய்களை எதிர்க்கும்.
சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்
வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்
துளசிவிதை ஆண்மையை அதிகரிக்கும்
ஞாபக சக்தியை அதிகரிக்கும்
வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும்.

துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.

துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.
ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.
நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.
உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.


தொடர்ந்த தேடலுடன்....
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 28 Mar 2014 - 20:52

வடவனம்

Name : Banyan
Botanical Name : Ficus benghalensis
Family: Moraceae


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! 1-4
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! 396px-Banyan_botanical_c1800-1830

ஆலமரம் / அதன் பூ

"ஆல் போல் தளைத்து
அருகு போல் வேரூன்றி "


எனும் வாக்குக்கமைய தாயாகிய மரம் வளர்த்த சேயாகிய விழுதுகள், தாயின் கடைசி காலத்தில் அவள் பாரத்தை தாங்கும் என உறவுக்கும் ஒப்புமை கூற வைக்கும் மரம். ஆலமரம் விழுதுகள் விட்டு பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது

இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது

ஆலமரம் என்றால் Ficus benghalensisஎனும் இனத்தையே குறிக்கும் . ஆலமரத்தின் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகிறது

பொதுவாக 30-40 மீட்டர் உயரம் வரையும், மிக அரிதாக 60 மீட்டர் வரையும் கூட வளரக்கூடிய இதன் அடிமரம் 2 மீட்டர் வரை பருக்கக்கூடியது. ஒழுங்கற்ற அடிமரத்தைக் கொண்ட இதில் விழுதுகள் உண்டாகி மரத்தை நிலத்தில் உறுதியாக வைத்திருப்பதுடன், பாரமான இதன் கிளைகளையும் தாங்குகின்றது. 10-35 சமீ நீளமும், 5-15 சமீ அகலமும் கொண்ட நீள்வட்ட வடிவில் அமைந்த இலைகள் மினுக்கம் கொண்டவை. இளம் தாவரத்தின் இலைகளே பெரிதாகக் காணப்படும். சமயத்தில் 45 சமீ நீளம் வரை கூட வளர்வதுண்டு. முதிர்ந்த மரத்தின் இலைகள் ஒப்பீட்டளவில் சிறியவை. பொதுவாக 10 சமீ நீளம் கொண்டவை.

இந்த மரத்தில், கவர்ச்சியான நிறங்களைக் கொண்ட அல்லது மணம் பொருந்திய பூக்கள் இருப்பதில்லை

மருத்துவக் குணம்

இதனை இயக்கு ரோதம், காமரம், சோளி, தோல்மரம், பாமரம், பூதம், வடம், பானோக்கி என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை, பழம், பூ, விழுது, பால் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை.

அச்சரம் புண்கிரந்தி யாவும் பயந்தோட
வச்சமற மேகமுந்தீ யாகுமே-இச்சகத்தில்
நாதனென மூவருக்கு நற்றுணையா மாக்கைக்கும்
பூத மதிபதியைப் போல்
- தேரையன் வெண்பா

பொருள் - நாள்பட்ட புண்கள், மேகம், வயிற்றுக் கடுப்பு, நீரிழிவு இவைகளைப் போக்கி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.


சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட அகக்குப்பைக்
கொல்லக்கின்ற நீரிழிவை கொல்லுங்காண்- நல்லாலின்
பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலையுமென விள்- அகத்தியர் குணபாடம்

உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும்.

அதுபோல், ஆலமரத்தின் பழுத்த இலைகளை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் கலந்து, கரப்பனுக்கு பூசி வந்தால் கரப்பான் எளிதில் காணாமல் போகும்.

ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவலாம்.


நீரிழிவு நோயாளிகளுக்கு

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

எலும்பு முறிவுக்கு

எலும்பு முறிவு, சுளுக்கு, இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கட்டு மீதும், சுளுக்கு, இரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், இரத்தக்கட்டு, சுளுக்கும் நீங்கும். எலும்புகள் பலமாகும்.

வாய்ப்புண் நீங்க

ஆலம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈற்றுப்புண் இவைகள் நீங்கும். இரண புண்களுக்கு இந்த நீரைக் கொண்டு கழுவலாம்.

பல் பாதுகாப்பு

ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி

என்பது நம் முன்னோர்களின் பழமொழி. ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் நன்கு வலுவுடன் பளிச்சிடும். ஆலம் பால் ஆடும் பற்களை உறுதிப்படுத்தும். பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நீக்கி ஈறுகளை பலப்படுத்தும்

வடவனம் என்பது துளசிச்செடியா, ஆலமரத்தினை குறிக்கிறதா  என்பதில் இருவேறுபட்ட கருத்துகள் இருப்பதால் இரணடையும் பகிர்ந்துள்ளேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 28 Mar 2014 - 20:55

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! Slide21

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! A50c7bfc

வாகை, Albizia lebbeck என்னும் மரம் தெற்காசியாவைப் பூர்வீர்கமாகக் கொண்டது. இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தை சேர்ந்தது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.

வாகை மரத்தில் கடவுள் தன்மை இருப்பதாகக் கருதி அதனை வழிபட்டனர். இப் பூ மெல்லியதாகப் பஞ்சு போன்ற துய்யினை உடையதாக இருக்கும்.

அதனால் `துய்ப்பூ வாகை என்று பாடியுள்ளனர். இம்மலரின் நிறம் பொன்போன்று இருக்கும். அதனால் இதனைப் `பொன்படுவாகை' என்று குறித்தனர். கருநீல மலரும் உண்டு. புலவர் கருவண்டினை இம்மலருக்கு உவமையாகக் காட்டுகின்றார். முல்லைப் புதரைச்சுற்றி வண்டுகள் பற‌கின்றன. அக் காட்சி, போர்வீரர்கள், வாகைப் பூவும், போந்தைத் தோடும் கலந்து தொடுக்கப்பட்ட கண்ணியின் தோற்றத்தை ஒத்திருக்கின்றது.

`புகழா வாகை' என்றொரு இனமுமுண்டு. அம்மலரின் இதழ்கள் நீண்டிருக்கும். அதனை `அகத்தி' என்று நச்சினார்க்~ கினியர் பொருள் கொள்வார். புகழப் பெறும் வாகைத் திணையின் நீக்குதற்குப் `புகழா வாகை' என்று கூறப்பட்டது என்றும் ஒருசாராசிரியர் கூறுவர். இது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை.

இது 18 இருந்து 30 மீ வரை வளரக் கூடிய மிதமான அல்லது பெரிய வகை மரமாகும். கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோலக் காணப்படும். இது பலத்தண்டுகளையுடையதாகவும் பரந்து வளரக்கூடியதாகவும் உள்ளது.

இலைகள் இரட்டைச்சிறகமைப்பையும், அடிக்காம்பு (Rachis) 70-90 மிமி நீளமும், மேற்காம்புகள் (Rachillae) 1 - 5 இணைகளாகவும், 50-70 மிமி நீளமும் காணப்படும். சிற்றிலைகள் 3-11 இணைகளுடனும், நீள்வட்டம் மற்றும் முட்டைப் போன்ற வடிவிலும்,சமச்சீரற்ற நிலையிலும் காணப்படும்.

இலை தொடக்கத்தில் கரும்பச்சையிலும் இரவு நேரங்களில் மூடிக்கொள்ளும் பண்புடையதாகவும், முதிர்ந்த நிலையில் பழுப்பு நிறத்திலும் காம்புகளுடன் இறுகிய அமைப்பிலும் காணப்படும். இளமஞ்சள்/வெண்நிறம் உடைய கொத்தான மகரந்தத் தாள்களை உள்ளடக்கிய மணமிக்க பூக்களையும், தட்டையான காய்களையும் உடையது[/b]

தமிழீழத்தின் தேசிய மரம்

வாகை ஆங்கிலத்தில் சிரிஸ்ஸா என்று அழைக்கப்படுகிறது. லத்தினில் வாகை "மமோசா பிளெக்சூஸா" (Mimosa Flexuosa). என்று அழைக்ப்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர் albizza odaritissma. வாகையின் பகுதிகள் சித்த மருத்துவத்திலும் பயன்படுகின்றது.

மருத்துவக் குணம்

வாகை மலர்ச்சூடுதல் வெற்றிக்களிப்பை உணர்த்தும்.
வீக்கம், கொப்புளம் வடிதலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.
இருமல், நுரையிரல் அழற்சி, ஈறழற்சி ஆகியவற்றிற்கு இவை மருந்தாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
குறிப்பாக இம்மரப்பட்டையை அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையவவாக கருதப்படுகின்றது
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum