சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Regist11


Latest topics
» விரும்பி போனால் விலகிப் போகும்...!!
by rammalar Yesterday at 8:06

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by rammalar Yesterday at 7:46

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்க
by rammalar Yesterday at 7:45

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by rammalar Yesterday at 7:44

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by rammalar Yesterday at 7:43

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 7:41

» மனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...
by சே.குமார் Wed 22 May 2019 - 8:06

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...!!
by rammalar Sat 18 May 2019 - 13:06

» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...
by rammalar Sat 18 May 2019 - 11:07

» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
by rammalar Sat 18 May 2019 - 11:05

» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0
by rammalar Sat 18 May 2019 - 11:03

» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது
by rammalar Sat 18 May 2019 - 10:55

» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்?-எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
by rammalar Sat 18 May 2019 - 10:53

» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
by rammalar Sat 18 May 2019 - 10:51

» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா
by rammalar Sat 18 May 2019 - 10:50

» லட்சுமியின் என்டிஆர்’-திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:49

» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்!
by rammalar Sat 18 May 2019 - 10:48

» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா!
by rammalar Sat 18 May 2019 - 10:46

» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
by rammalar Sat 18 May 2019 - 10:45

» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:44

» கடல போட பொண்ணு வேணும்
by rammalar Sat 18 May 2019 - 10:41

» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by rammalar Wed 15 May 2019 - 7:01

» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
by rammalar Mon 13 May 2019 - 5:55

» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’
by rammalar Mon 13 May 2019 - 5:39

» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
by rammalar Mon 13 May 2019 - 5:32

» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
by rammalar Mon 13 May 2019 - 5:27

» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்
by rammalar Mon 13 May 2019 - 5:24

» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
by rammalar Mon 13 May 2019 - 5:21

» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா
by rammalar Mon 13 May 2019 - 5:18

» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
by rammalar Sat 11 May 2019 - 21:35

» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு
by rammalar Sat 11 May 2019 - 21:29

» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா?
by rammalar Sat 11 May 2019 - 21:28

» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:45

» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:43

» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம்
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:17

.
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Khan11
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Www10

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

Sticky குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 22 Mar 2014 - 23:08

First topic message reminder :

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள் எனும் தலைப்பில் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பித்து  பூக்களின் படங்களில் பெயர்கள் மட்டுமல்லாமல் அதன் தாவரவியல் பெயர், மருத்துவகுணங்கள், என அறிவியல் ரிதியாகவும்  தொகுக்கப்பட்டது.


இதுவரை தொகுக்கப்பட்ட பூக்களின் பட்டியல்  
பெயர்களின் மேல் சுட்டவும்.

 1. செங்காந்தள்
 2. ஆம்பல்
 3. அனிச்சம்
 4. குவளை
 5. குறிஞ்சி
 6. வெட்சி
 7. செங்கொடுவேரி
 8. தேமாம்பூ
 9. மணிச்சிகை
 10. உந்தூழ்
 11. கூவிளம் பூ
 12. எறுழம்
 13. சுள்ளி
 14. கூவிரம்
 15. வடவனம்
 16. வாகை
 17. குடசம்
 18. எருவை
 19. செருவிளை
 20. கருவிளம்
 21. பயினி
 22. வானி
 23. குரவம்
 24. பசும்பிடி
 25. வகுளம்
 26. காயா
 27. ஆவிரை
 28. வேரல்
 29. சூரல்
 30. சிறுபூளை
 31. குறு்நறுங்கண்ணி
 32. குருகிலை
 33. மருதம்
 34. கோங்கம
 35. போங்கம்
 36. திலகம்
 37. பாதிரி
 38. செருந்தி
 39. அதிரல்
 40. சணபகம்
 41. கரந்தை
 42. குளவி
 43. மா
 44. தில்லை
 45. பாலை
 46. முல்லை
 47. குல்லை
 48. பிடவம்
 49. செங்கருங்காலி
 50. வாழை
 51. வள்ளி
 52. நெய்தல்
 53. தாழை
 54. தளவம்
 55. தாமரை
 56. ஞாழல்
 57. மௌவல்
 58. கொகுடி
 59. சேடல்
 60. செம்மல்
 61. சிறுசெங்குரலி
 62. கோடல்
 63. கைதை
 64. வழை
 65. காஞ்சி
 66. மணிக்குலை
 67. பாங்கர்
 68. மராஅம்
 69. தணக்கம்
 70. ஈங்கை
 71. இலவம்
 72. கொன்றை
 73. அடும்பு
 74. ஆத்தி
 75. அவரை
 76. பகன்றை
 77. பலாசம்
 78. பிண்டி
 79. வஞ்சி
 80. பித்திகம்
 81. சிந்துவாரம்
 82. தும்பை
 83. துழாய்
 84. தோண்றி
 85. நந்தி
 86. நறவம்
 87. புன்னாகம்
 88. பாரம்
 89. பீரம்
 90. குருக்கத்திப்பூ
 91. ஆரம்
 92. காழ்வை
 93. புன்னை
 94. நரந்தம் 
 95. நாகப்பூ
 96. இருவாட்சி
 97. குருந்தம் 
 98. வேங்கை
 99. புழகு 1. மல்லிகையின் வெவ்வேறு இனங்கள
 2. விதைகளுக்கிடையிலான மாறுபாடுகள்
 3. குறுநறுங்கண்ணி போங்கம் திலகம் விதைகளின் வித்தியாசங்கள்!
 4. சங்ககால மலர்களின் பட்டியல் 


மலர்களில் கூறப்படும் மருத்துவக்குறிப்புக்களை  தகுந்த ஆலோசனையின்றி முயற்சித்து பார்க்க வேண்டாம்!

இத்தொகுப்பை நான் முழுமைப்படுத்த உதவிய விக்கிமீடியா, கற்க நிற்க [*படங்கள் ] மற்றும் அனைத்து இணைய தளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.


Last edited by Nisha on Tue 18 Aug 2015 - 23:13; edited 27 times in total (Reason for editing : முதல் பதிவில் லிங்க இணைப்புக்காக)
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 19 Jun 2014 - 23:43

100 க்கும் மேல் பதிவு இட்டும் வியாபாரம் குறைவா?நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 23:59

Nisha wrote:100 க்கும் மேல் பதிவு இட்டும்  வியாபாரம்  குறைவா?


கதையில இருந்ததனால் வியாபாரம் பண்ணீயதே தெரியல்லயே !!!!!!


Last edited by jaleelge on Fri 20 Jun 2014 - 0:11; edited 1 time in total
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 20 Jun 2014 - 0:06

ஹலோ சார்..

ன்னியதே இல்லை. பண்ணியதே என வரணும்.

பன்னி என்றால் பன்றி எனும் அர்த்தம் கொள்வர். கவனம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 0:10

Nisha wrote:ஹலோ சார்..

ன்னியதே இல்லை. பண்ணியதே என வரணும்.

பன்னி என்றால்  பன்றி எனும் அர்த்தம் கொள்வர்.  கவனம்!

-நன்று  மேடம்..
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 26 Jun 2014 - 23:44குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide84

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 800px-Starr_061223-

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide85

ஆத்தி மரம் (Bauhinia racemosa), ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சீசல்பீனியேசியே (Caesalpiniaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது.

இம் மரத்தின் பட்டை, தலைவலி, காய்ச்சல், தோல் வியாதிகள், கட்டி, இரத்த நோய்கள், வயிற்றுப்போக்கு போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. இது நுண்ணுயிரெதிர்ப்புப் பொருட்களுக்கான மூலமாகப் பயன்படக்கூடும் எனவும் ஆய்வுகள் காட்டுகின்றன.இந்தியாவின் சில பகுதிகளில் இதன் இலை பீடி சுற்றுவதற்குப் பயன்படுகிறது.


ஆத்திப்பூ இதுவா.. அல்லது ஆர் எனப்படும் அகத்திப்பூவா எனபது என் தேடலில் கிட்டவில்லை.

எனினும் சோழர் சூடும் ஆர் என்னும் ஆத்தி (அகத்திப்பூ)


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 450px-Starr_050518-

நெடுந்தண் ஆரத்து அலங்குசினை வலந்த
பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்
தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும்
யாணர் வைப்பின் கானம் (நற்றிணை - 292)

பசுமை நிறமும் நறுமணமும் கொண்ட தமாலம் நீண்டு குளுமையாக வளரும் ஆர் மரத்தில் சுற்றிக்கொண்டிருந்தது. ஆர் மரத்தில் தொடுத்திருந்த தேனை எடுப்பதற்காக ஆர் மரத்தை வளைத்தனர். அப்போது ஆர் மரத்தைப் பற்றியிருந்த தமாலக்கொடி நழுவி விழுந்துவிட்டது. இது நாளும் யாணர் (புது வருவாய்) தரும் நிலம். – .

எனும் பாட‌லில் சொல்ல‌ப‌ட்டுள்ள‌படி

தமாலம் என்பது வெற்றிலை. வெற்றிலைக் கொடிக்காலில் வெற்றிலைக் கொடியை அகத்தி மரத்தில் படரவிடுகின்றனர் என‌ கொண்டால் ஆர் என‌ சொல்ல‌ப‌ட்ட‌ ம‌ர‌ம் ஆத்தி ம‌ர‌மென‌ கொள்ளளாம்.

எனினும் ஆத்தியில் ப‌ல் வேறுப‌ட்ட் பிரிவுக‌ள் இருப்ப‌தால் ஆத்தியில் இது இன்ன்னொருவ‌கை என‌ கொள்க‌.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 26 Jun 2014 - 23:45

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide86

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 2772_pd1741889_1

அவரை என்பது பயன்மிக்க ஒரு கொடிவகை தாவரம். இது நீண்டு வளரும் சுற்றுக்கொடி. இதன் காயே அவரைக்காய். உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும். இதில் புரதச் சத்து அதிகம் உள்ளது (காயின் எடையில் சுமார் 25% விழுக்காடு புரதச்சத்து). நார்ப்பொருளும் நிறைய உள்ள ஒரு காய். இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும்.

இதனை மொச்சை என்று பிற்காலத்தவர் வழங்குவர். அவரை முன்பனிக்காலத்தில் மிகுதியாக மலரும். இது நீலநிறத்திலும் சிவப்புநிறத்திலும் காணப்படும். கொத்துக் கொத்தாக மலரும் அவரையின் சிவந்த மொட்டு, பவழம் போன்று பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். மலையைச் சார்ந்த புனங்களில் அவரை மிகுதியாக வளர்ந்திருக்கும். தினை விளைவதற்கு முன்னர் அப்புனத்தில் அவரையை விதைப்பர் மலைவாணர். தினை விளைந்து அறுக்கப்பட்ட பின்னர், அதன் தண்டிலே அவரைக்கொடி படர்ந்திருக்கும். புனத்தில் காணும் புதர்களிலும் இது படர்ந்து பூக்கும். அவரையின் பூக்கள் கிளியின் அலகினைப் போன்று இருக்கும் என்பர்.

இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (Lablab purpureus). இக்கொடி நிலைத்திணை இயலில் ஃவேபேசி (Fabaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த அவரையிலும் பல வகைகள் உண்டு. மொச்சை அவரை என்னும் வகையின் விதைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாக கருதப்படுகிறது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 26 Jun 2014 - 23:47

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide87

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Transparent20Wood20Rose

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Crotalaria_verrucosa_28Blue_Rattlepod29_W_IMG_3298

இதனைச் `சிவதைக் கொடி' என்றும் வழங்குவர். இது பனிக்காலத்தில், மாலையில், ஞாயிறு இறங்குகின்ற பொழுது மலரும் என்று அகநானூறு காட்டுகின்றது. பகன்றைப் பூ வெண்ணிறமாக, வட்ட வடிவில் அமைந்திருக்கும். கிண்ணம் போன்ற தோற்றத்தை உடையது.

பகன்றை மலர் வெண்ணிற மலர். இதனை இக்காலத்தில் கிலுகிலுப்பை எனக் கூறுவர். கருவிளை என்பது இதைப் போன்று நீல நிறத்தில் பூக்கும் மலர். பகன்றைக் கொடி கொழுகொழுப்பாகச் செந்நிறம் கொண்டிருக்கும். மகளிரும் மைந்தரும் பகன்றை மலரைக் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர்.

பகன்றை மலர் பால்மதி போல் வெண்ணிறம் கொண்டது. பகன்றை வெண்ணிறம் கொண்டது. கருவிளை இதைப் போலவே நீல நிறம் கொண்டிருக்கும். பகன்றைக்கொடி கொழுத்து வளரும். பகன்றைக்கொடி சிவப்பாக இருக்கும். மகளிர் சேலை கட்டும் கொச்சகம் (கொசவம்) போல மடிப்புகளுடன் இருக்கும்.பாண்டில் என்னும் தோல்பறை போல வெண்ணிறத்தில் பூக்கும். பெரிய இலைகளுடன் கிண்ணத்தில் வைத்திருக்கும் நுரைத்த பால் போலப் பூக்கும்.$

வயலில் சேற்றில்,வளரும்,பசுமையான புதரில் மலரும்.பனியில் மலரும். தூவல் தூறலில் மலரும்

பகன்றை மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள் சுவையானவை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 26 Jun 2014 - 23:49

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide88

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 562px-

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 2114298751_7f00dc6b18_z

பலாசம் புரசு,கல்யாண முருங்கை எனவும் அழைக்க‌படுகிறது.

திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர் ஆகிய சிவத் தலங்களில் புரசு (பலாசம்) தலமரமாக உள்ளது. இது பலாசம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது பகட்டான செம்மஞ்சள் நிறப் பூங்கொத்தினையும், தட்டையான விதைகளையும் உடைய இலையுதிர் காடுகளில் தானே வளரும் மரமாகும். அழகுக்காக வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதுண்டு. இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவக் குணமுடையதாக விளங்குகிறது.

பலாச மரத்தின் பிறப்பிடம் கிழக்கு ஆபிரிக்கா. பின் தென் ஆசியா, வட ஆஸ்திரேலியா, இந்தியபெருங்கடல் தீவுகள் மற்றும் புயூஜி தீவுகளில் பரவிற்று. தாய்லேண்டு, வியட்னாம், பங்களதேஸ், வட சீனா மற்றும் இந்தியாவில் வளர்த்தனர்.

புரசின் இலைகள் மூன்று மூன்றாக இருக்கும். உடலுக்குச் செழிப்பைத் தரக்கூடிய நீர்த் தத்துவத்தையும், நிலத்தில் உள்ள உலோகங்கள் முதலிய தாதுக்களையும் கொண்டு, அனைத்தையும் கலந்து மருத்துவக் குணம் உண்டானதாக வளர்கின்றது. இதன் இலைகள் துவர்ப்புச் சுவை கொண்டது. கார்ப்பும் கசப்பும் துணைச் சுவைகளாகக் கொண்டது. உடலுக்குச் சூட்டைக் கொடுத்தும், மலச்சிக்கலைப் போக்கும் மருத்துவக் குணமும் உடையது. இதன் மலர்கள் கார்ப்புச் சுவையும், கசப்பும் துவர்ப்புமான துணைச் சுவைகளையும் உடையது. சீத வீரியம் கொண்டது. பக்குவமடையும்போது இனிப்புச் சுவை கொள்ளும். இதன் விதை பக்குவமடையும்போது கார்ப்புச் சுவையாக இருக்கும். எண்ணெய்ப் பசை கொண்டது. இது மர இனத்தைச் சேர்ந்ததாகும். இலை, தண்டு, வேர், பிசின், பூ, விதை மருத்துவக் குணம் கொண்டவையாகும். தமிழகம் எங்கும் தானாகவே வளர்கின்றது.

கல்யாண முருங்கை தமிழமெங்கும் வேலிகளில் வைத்து வளர்க்கிறார்கள். மிள‌குக்கொடிகளைப் படரவிட இதை வளர்ப்பார்கள். காப்பிப் பயிர்களுக்கு இடையில் நிழலுக்காக வளப்பார்கள். இது சுமார் 85 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் அகன்றும் பெரிதாகவும் இருக்கும். இதன் மலர்கள் அதிகசிவப்பாக இருக்கும். இதன் இதழ்களை பெண்களின் உதடுகளுக்கு அக்காலத்தில் உவமையாக ஒப்பிடுவார்கள். 'முருக்கிதழ் புரையும் செவ்விதழ்' என வரும். உருட்டு விதைகளையும் முட்களையும் கொண்டமென்மையான கட்டைகளையும் உடைய மரம். விதைகள் கருப்பாக இருக்கும். முருக்க மரம் என்றும் வழங்கப்பெறும். கட்டைகளை வெட்டி ஈரத்தில் நட்டால்உயிர் பிடித்து வளரும். விதை மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.

சிவப்பு புரசு- இதன் பூக்கள் சிவப்பு நிறமாக இருக்கும். இதுவே அதிகமாகக் காணப்படுகின்றது.

வெண்மை புரசு- இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இது அறிவை வளர்ப்பதில் சிறப்புடையது.

மஞ்சள் புரசு- இதன் இலைகள் யானைக் காதுகளைப் போன்று அகன்ற இலைகளைக் கொண்டது. இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

நீலம் புரசு- இதன் பூக்கள் நீல நிறத்தில் இருக்கும்.

பொதுவாக எல்லா வகையான புரசுகளும் ஒரே மருத்துவக் குணம் உடையதாக காணப்படுகின்றது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sun 6 Jul 2014 - 20:26

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide89
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Sita-Ashok_28Saraca_asoca29_leaves_26_flowers_in_Kolkata_W_IMG_4175
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Sita-Ashok_28Saraca_asoca29_flowers_in_Kolkata_W_IMG_4146
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 800px-Caesalpinioideae_-_JohannisbrotgewC3A4chs_-_Oasis_Park_-_Fuerteventura_-_1
 
 
பிண்டி Caesalpinioideae என்னும் மரத்தை இக்காலத்தில் அசோகமரம் என்பர்.இந்துக்கள் அசோகமரத்தையும் புனித மரமாகவே போற்றிப் பேணி வருகின்றனர். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இம் மரத்தை ‘பிண்டி’ என்றும் ‘செயலை’ என்றும் அழைத்து வந்தனர்.அசோகமரம் அன்பின் அடையாளமாகப் போற்றப்படுகிறது.

சங்க இலக்கியப் பெயராக பிண்டி எனவும், வேறு பெயராக செயலை எனவும், பிற்கால இலக்கிய பெயராக அசோகு எனவும், உலக வழக்குப் பெயராக அசோக மரம் எனவும் அழைக்கப்படுகிறது.. தழைத்திருக்கும் செவ்விய தளிர்களை உடையது. செக்கச்சிவந்த மலர்களை உடையது. கொத்துக் கொத்தாகப் பூப்பது. தற்போது தென்னிந்தியாவில், பெங்களூர் ‘லால்பாக்’ தாவரத் தோட்டத்தில் அருமையாக வளர்க்கப்பட்டு வரும் மரமாகும்.

‘அசோகா’, ‘சாரகா’ என்ற இரு பெயர்களைக் கொண்டிருக்கின்றது. அசோகு என்றால் சோகமே இல்லாதது என்றும் செழிப்புள்ள மரம் என்றும் பொருள்.

இவ்வாறு பல நம்பிக்கைகளுக்குச் சொந்தம் கொண்டாடும் இந்த அசோக மரத்தில் மருத்துவ குணங்கள் பெருமளவில் நிறைந்து காணப்படுகின்றன.

திருமாலிருஞ்சோலையெனும் திருமால் கோவிலில் அசோக மரம் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

நம் நாட்டில் வங்கத்திலும் மற்றும் தக்காண தீபகற்பப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசங்களிலும் அசோக மரத்தை அதிகளவில் காணலாம. இலங்கை, பர்மா, இந்தோனேஷியா, தாய்லாந்து நாடுகளிலும் நீர்வளம் மிகுந்த இடங்களிலும் இவை நன்றாக வளர்கின்றது.

தோற்றம்: மாமரத்தின் இலைகளைப் போல இலைகளும், மஞ்சள் நிறத்தில் பூக்களும் இவை கொண்டிருக்கின்றது. முதிர்ந்த காய்கள் கருப்பாகவும், சுவையில் கசப்பாகவும் இருக்கும்.

நடுத்தர உயரத்தில் வளர்கின்ற இந்த மரம், அதிகபட்சமாக 28 அடி உயரம் வரையிலும் வளரும். இந்த நிலையில் அடிமரம் 20 செ.மீ. விட்டமுடையதாக இருக்கும். மரத்தின் தலைப் பகுதியில் 6 மீட்டர் சுற்றளவிற்கு அடர்ந்த தழையமைப்பைக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்பகுதி பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில் இருக்கும்.

இதன் இலைகள் கூட்டாக வளரும். ஒரு அடி நீளத்தில் இந்த கூட்டிலைகள் வளரும். அதில் 4 முதல் 6 ஜோடி சிற்றிலைகள் இருக்கும். இந்த இலைகள் ஒவ்வொன்றும் சுமார் அரை அடி நீளத்தில் ஈட்டி போன்ற தோற்றத்தில் காணப்படும். இதன் துளிர் இலைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். முதிர்ந்த இலைகளோ விறைத்துக் கொண்டிருக்கும். குளிர்காலம் முடியும் காலங்களில் துளிர் இலைகளை அதிகளவில் காணலாம். அப்போது அவை மிக அழகாகக் காட்சி தரும்.

ஜனவரி, மார்ச் மாதங்களின்போது மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும், வானத்தை நோக்கிய நிலையில், பூக்கள் அடர்ந்த செண்டுகளாக, முற்றிய இலைகளிலிருந்து உருவாகும்.

முதலில் மஞ்சள் நிறத்தில் தொடங்கி பின்னர் குங்குமச் சிவப்பு நிறத்தைப் பெற்றுவிடும். இம்மரத்தின் பூக்களில், மகரந்தத் துகள்கள் பூக்களை விட்டு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். இப்பூக்கள் நல்ல நறுமண முடையவை.

இதிலிருந்து வெளிப்படும் காய்கள் புளியின் வடிவில் இருக்கும். முதலில் சிவப்பு, பிறகு பச்சை, முடிவில் கருப்பு என்ற நிலையில் மாறிவிடும். இந்தக் காய்கள் சுமார் முக்கால் இன்ச் நீளமும், இரண்டு இன்ச் அகலமும் கொண்டு நெற்றுக்களாக முதிர்ந்துவிடும். மே, ஜுன் மாதங்களில் இவைகளை அதிகளவில் காணலாம். இதில் 4 முதல் 8 தடித்த விதைகள் காணப்படும். எப்போதும் நிழல் தரும் இந்த மரம் ஒரு அழகுமிக்க மரமாகும்.

மருத்துவப் பண்புகள்: அசோக மரத்தில் மிக அதிகளவிலான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இம்மரத்தின் தண்டுப் பகுதி, இலைகள், பூக்கள் மற்றும் விதைகளில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

தொன்று தொட்டு பழங்காலம் முதற்கொண்டே மக்களால் அறியப்படுகின்ற இந்த மரத்தைப் பற்றி ராமாயணம், புராணங்கள், இதிகாசங்கள், உபநிடதங்களில் எல்லாம் கூறப்பட்டுள்ளது. புத்த பிரான் இம்மரத்தின் அடியில்தான் பிறந்தார் என்றும் நம்பப்டுவதால் புத்தர்கள் இம்மரத்தை மிகவும் போற்றுகின்றனர்.

பெண்களுக்கு வருகின்ற எல்லா விதமான குறைபாடுகளையும் முழுமையாகத் தீர்த்து வைக்கும் குணம் இவற்றுக்கு இருப்பதால் இதனைப் பெண்களின் மரம் என்று கூடச் சொல்வார்கள்.

புத்தர்கள், ஜைனர்கள், இந்துக்கள் இம்மரத்தைப் பெரிதும் போற்றுகிறார்கள். காமதேனுவின் வில்லிலுள்ள ஐந்து கணைகளில் இம்மரத்தின் பூக்களும் ஒன்றாக நம்பப்படுகின்றது. மாயாதேவி சித்தார்த்தரை ஈன்றெடுத்தது இந்த மரத்தின் அடியில்தான். இலங்கையில் ஒரு அசோக மரத்தின் அடியில்தான் சீதாப்பிராட்டியார் சிறைவைக்கப்பட்டிருந்தார்.

இம்மரம் நன்கு செழித்து வளர பெண்களின் பாதம் இதன்மேல் பட வேண்டும். பெண்கள், தமது வலது காலால் இம்மரத்தை உதைத்தால் நன்கு பூக்கள் பூக்கும் என்றெல்லாம் பல விதமான நம்பிக்கைகள் இம்மரத்தைப்பற்றிக் கூறப்படுகின்றன. இம்மரத்தின் பூக்களை நீரில் போட்டு யார் ஒருவர் தமது குழந்தைகளுக்குக் கொடுக்கிறாரோ, அந்தக் குழந்தை துக்கம், சோகத்திலிருந்து முழுமையாக விடுபட்டு விடும் எனும் நம்பிக்கைகள் உண்டு

விஞ்ஞான ரீதியாகப் பார்க்கும் போது, இம்மரம் பெண்களுக்கு வரும் எல்லா விதமான நோய் நொடிகளையும் தீர்த்து வைக்கிறது.

‘அசோகு’ என்ற சொல் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது. கபிலரும் குறிஞ்சிப்பாட்டில் இம்மரத்தைப் பற்றிப் பாடியுள்ளார்.

‘பகன்றை பலாசம் புல்பூம் பிண்டி’ என வரும் குறிஞ்சிப் பாட்டடி மூலம் இதனைக் காணலாம். திருமுருகாற்றுப் படையில் நக்கீரரும் இவ்விரு பெயர்களையும் குறிப்பிடுகின்றனர். மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனாரும் குறிப்பிட்டுள்ளார்.

இம்மரத்தின் தளிரை ஆடவரும், மகளிரும் காதில் செருகிக் கொள்வர் எனவும், இதனைக் குரங்குகள் உணவாகக் கொள்ளும் எனவும் குறிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ‘சராக்கா’ என்ற பேரினத்தில் ஒரு சிற்றினமாக ‘இண்டிகா’ எனப்படும் பிண்டி மட்டும் வளர்கிறது எனவும் அறியப்பட்டுள்ளது.

இம்மரங்களைக் கொண்ட அசோக வனத்தில்தான் இராவணன் கவர்ந்து சென்ற இராமனது மனைவியாகிய சீதையைச் சிறை வைத்தான் என இராமகாதை கூறுவதையும் காணலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sun 6 Jul 2014 - 20:33

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 11084376

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Kattumulla-jasminum-angustifolium-1

பித்திகம் என்னும் மலரைப் பித்திகை என்றும் வழங்கினர். அந்தப் பூவின் வெரிந் (முதுகு) பகுதி சிவப்பாக இருக்கும். இந்தப் பூ மாலையில் மலரும். ஆடவர் பித்திக மாலையைச் சூடிக்கொள்வர்.

மலர்கள் அதிவெப்பநிலை போது பூக்கும், நேர்த்தியானது நறுமணமானவை.

பித்திகைப்பூ அரும்பு சிவப்பாக இருக்கும்.
மகளிரின் கடைக்கண் மழையில் நனைந்த பித்திக மலரின் முதுகுப் பகுதி சிவந்திருப்பது போல இருக்குமாம்.

வானம் மூட்டமாக இருந்த காலத்தில் பித்திகப்பூ மணம் விசுவதைக் கொண்டு விளக்கேற்றும் தேரம் வந்துவிட்டது எனத் தெரிந்துகொண்டார்களாம்.

குறிஞ்சிநிலத் தலைவி தன் ஆயத்தாருடன் மலர்களைக் குவித்து விளையாடிய 99 மலர்களில் பித்திகமும் ஒன்று.
பித்திக மலர் பசுமையான காம்பு கொண்டது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sun 6 Jul 2014 - 20:35

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide92
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 407px-Vitex_negundo_Blanco1228
 
இதனை கருநொச்சிப்பூ, செங்கோட்டு மலர்கள்என்றும் அழைப்பராம்.நொச்சியில் பல வகைகள் உள்ளன. கருநொச்சி விசேஷமானது.

சிந்து என்னும் மலரை அடுத்து வாரம் என்னும் சொல்லைச் 'சிந்து' என்பதனுடன் சேர்த்துச் 'சிந்துவாரம்' என்னும் பெயரில் ஒரு மலரை அறிஞர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.வாரம் என்பது தனியொரு மலர்.

சிந்து மலர் மணமுள்ள மகரந்தப் பொடிகளைச் சிந்துவது. "சிந்துரச்சுண்ணம் என மணப்பொடிகளை இலக்கியங்கள் போற்றுகின்றன. குங்குமத்தைச் செந்தூரம் என்பர். திலகமிடும்போது சிந்தி மணப்பது சிந்தூரம். சிவப்பாக இருப்பதால் இது செந்தூரம். சிந்தி மணப்பதால் இது சிந்து.

குளம் குட்டைகளின் கரையோரங் களிலும் பாதையோரங்களிலும் பக்கக் கிளைகளுடன் படர்ந்து வளரும் சிறு செடியாகும். மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது.

நொச்சி இலை நெற்பயிருக்குத் தழையுரமாகவும் விலங்குகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. நொச்சி இலையின் மணம் காரணமாகச் சில பூச்சிகள் இதனை நெருங்குவதில்லை. ஆதலால் தானியப் பாதுகாப்பில் நொச்சி இலை பயன்படுகிறது. ஓலைச் சுவடிகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.

நொச்சி செங்குத்து வலார்களைக் கொண்டு செங்கோடாக வளரும். இதன் பூவே செங்கோட்டு மலர். இக்காலத்தில் கொசுக்கள் அண்டாமல் இருக்க நொச்சி இலைகளை அருகில் போட்டுக்கொண்டு உறங்குவர். அக்காலத்தில் யாழ்ப்பையை அந்துப் பூச்சிகள் அண்டாமல் இருக்க இந்தச் செங்கோட்டு மலர்கள் சிலவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

செந்தூரம் தயாரிக்க உதவுவது செந்தூர மரம். இதன் பழம்பெயர் சிந்து. அதன் மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 17 Jul 2014 - 0:30

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide93

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Leucas_aspera_at_Gandipet2C_Hyderabad2C_AP_W2_IMG_9054

தும்பை, பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, பேய்தும்பை, கழுதைத்தும்பை, கசப்புத்தும்பை, கவிழ்தும்பை, மற்றும் மஞ்சள்தும்பை என அழைக்கபடும்

தும்பைக்கு எல்லாவகை மண்ணும் ஏற்றது. இந்தச்செடி வறண்ட நிலங்களில் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரம் வரை உள்ள இடங்களில் நன்கு வளரும் தாவரம். ஒரு அடிமுதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். .

தும்பைச் செடி மற்ற செடிகளுடன் தோட்டங்களிலும் வயல், வரப்புகளிலும், கிராம்ப்புறங்களின் சாலை இருமருங்களிலும், புதர்களின் ஓரங்களிலும் வளரும் தன்மை உடையது.

இந்தச் செடி அடித் தண்டிலிருந்தே, மூன்று நான்கு கிளைகளுடன் வளரும் தன்மை கொண்டது. கிளைகளில் பல சிறு கிளைகள் தோன்றி, அந்தக் கிளைகளில் பல இலைகள் நீண்ட காம்புகளுடன் அடர்த்தியாகப் பற்றி இருக்கும். ஒவ்வொரு சிறு கிளையின் நுனியிலும் கோலி குண்டின் அளவைப் போல பந்து போன்று ஒரு பிரிவு வளர்ந்து அதன் துளைகளிலிருந்து மொக்கு வெளிவந்து அழகான வெண்மைநிற பூக்கள் பூக்கும் விதம் பார்வைக்கு மிக்க அழகாக தோற்றமளிக்கும்..

இதன் இலை அடி அகன்றும், நுனி குறுகியும் காணப்படும்.சுமார் 4 செ.மீ. நீளத்தில் ஒரு சென்டிமீட்டர் அகலத்திலிருக்கும். இலை சற்று கனமாக இருக்கும். இலையை கசக்கி முகர்ந்து பார்த்தால் ஒரு காரமான வாடை இருக்கும்.

இலைகள் நீளமாகவும் இலைகளுக்கு மேலும் கீழும் பூக்களும் அமைந்திருக்கும். மலர்கள் தூய வெள்ளை நிறமாக ஒரே இதழ்விட்டு ஒரு சிறிய மொட்டு இதழின் நேராக நிற்கும். ஐந்து இதழ்களை உடையது. அடியில் இவை இணைந்து குழல் வடிவமாயிருக்கும் மகரந்த வட்டம் தாதிழைகளை உடையது இதில் இரண்டு உயரமானவை. சூல் தண்டு நீண்டது. சூலக வட்டம் நான்கு பிரிவானது. இலைக்குத் தனிவாசனை உண்டு. நட்ட ஆறுமாத த்தில் பூத்து வடும். இவை விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

தும்பை, குப்பைமேனி, கையான்தகரையைச்சூரண்ம் செய்து தொடர்ந்து கற்ப முறையில் சாப்பிட்டுவர உடலில் ஏற்படுகின்ற நோய்களும், மன விகாரமும் தீரும். நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும். நோயின்றி வாழலாம். இதையே ஔவை,


'வாக்குண்டாம்;நல்ல மணமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது
துப்பார்...திரு மேனி தும்பை கையான் துணை' என்றார்.

தும்பிக்கையான் என்று தும்பிக்கையையுடைய விநாயகரை அவர் கூறவில்லை. திரு மேனி என்கின்ற குப்பைமேனியும், துரோணபுஷ்பம் என்னும் தும்பையும்,கைகேகி எனப்படும் கையானும் மருந்தாகத் துணையாக இருக்கும் போது வாக்குத் தெளிவுண்டாகும். நல்ல மனமுண்டாகும். மாமலரால் கலைமகளின் கடைக்கண் பார்வை கிட்டும். அதனால் கல்வி அறிவு உண்டாகும். இந்த உடல் முடங்கிப் போகாது;எப்போது? திருமேனியும், தும்பையும், கையானும்மருந்தாகித் துணை நிற்கும் போது என்கிறார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 17 Jul 2014 - 0:36

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide94

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 450px-Starr_080117-1577_Ocimum_tenuiflorum

துழாய் எனப்படும் துளசி (Ocimum Sanctum) மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு


துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி என வெவ்வேறு பெயர்களிலும்

தும்பையில் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்) என வேறுபட்ட இனங்களும் உண்டு

வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம்.

பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
தொற்றுநோய்களை எதிர்க்கும்.
சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்
வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்
துளசிவிதை ஆண்மையை அதிகரிக்கும்
ஞாபக சக்தியை அதிகரிக்கும்
வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்


எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.


துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.

ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.

உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 21 Aug 2014 - 22:12

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide95

தோன்றி என்னும் மலரைக் காந்தள் மலரின் வகை என்கின்றனர். மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில்

காந்தள் = செங்காந்தள்
கோடல் = வெண்காந்தள்

என்னும் மலர்கள் உள்ளன. ஆயின் தோன்றி-மலர் என்பது இருநிறமும் கலந்த மலரோ என எண்ணவேண்டியுள்ளது.

குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் இதனைச் ‘சுடர்பூந் தோன்றி’ எனக் குறிப்பிடுகிறது.

இப்பெயர் ‘நள்ளிருள் நாறி’ என்னும் பெயருக்குத் தரப்பட்டுள்ள விளக்கம் போல் உள்ளது. தோன்றி < தோன்றிப்பூ < சுடர்பூந்தோன்றிப்பூ – என இந்தப் பூவின் விளக்கம் அமைகிறது.

,மருதோன்றிமருத்தோன்றி, மருதாணி, அழகணம் என்றெல்லாம் கூறப்படும் பூவின் பெயரே தோன்றி என வழக்காறு நோக்கிக் கொள்வது பொருத்தமானது.

(‘தாமரை’ என்னும் சொல்லிலுள்ள ‘தா’ குறைந்து ‘மரை’ என நின்று, ‘மரை’ என்னும் சொல் தாமரை மலரை உணர்த்துகிறது. இதனை முதற்குறை என்று இலக்கணம் குறிப்பிடுகிறது.

அதுபோல ‘மருத்தோன்றி’ என்னும் சொல்லிலுள்ள ‘மரு’ என்னும் முதல் மறைந்து ‘தோன்றி’ என நின்று மருதாணிப் பூவை உணர்த்துகிறது எனல் பொருத்தமானது. இதனை இப்படிப் பார்க்கவேண்டும். தோன்றி என்பது பழந்தமிழ். மரு = மணம். தொலை தூரம் மணக்கும் பூ என விளக்கும் விளக்கப்பெயராக அமைந்துள்ளது ‘மருத்தோன்றி’.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 21 Aug 2014 - 22:15


மருதோன்றி

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 331px-Lawsonia_inermis_Ypey36

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 673px-Flower2C_MARUTHAANI_KAAY

மருதோன்றி (மருதாணி, Lawsonia inermis) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய செடியாகும்.

இத்தாவரம் ஒரு செடி வகையினைச் சார்ந்தது. இருப்பினும், 5,6 அடி உயரம் வரை வளரும் இயல்புடையது. இச்செடியின் இலைகள் புதர்போல அடர்ந்து காணப்படும்.

இதன் இலைகள், நீளத்தில் ஏறத்தாழ ஒரு அங்குல அளவுக்குள் இருக்கும்.அகலத்தில் அரை அங்குல அளவு இருக்கும். இலை அம்பு வடிவமானது. எனவே, இலை நுனிகூராக இருக்கும். இளஇலையின் நிறம்,வெளிர்பச்சையாகவும்,முதிர் இலை சற்று அடர்பச்சையாகவும் இருக்கும்.

பயன்கள்


தற்போது இதன் இலைக் கூழ்மம் கடைகளில் கிடைக்கிறது. அதன் மூலம் வேண்டியவாறு வண்ணமிடலாம். பாரம்பரிய முறையில் இதன் இலைகளைக் கெட்டியாக அரைத்து, கைகளில் இடுவர்.

சித்தமருத்துவப்படி, பித்த உடம்பாக இருப்பவருக்கு கருச்சிவப்பு தோன்றும். மற்றவருக்கு செஞ்சிவப்பாகத் தோன்றும்.
நகசுத்தி எனப்படும் நோய், விரல்களில் வராது தடுக்கும் தன்மையுடையது.

இளநரை மாற, கண்கள் குளிர்ச்சி, நல்ல தூக்கம் வர இவ்விலைகளை அரைத்து தலையில் தேய்ப்பர். தவிர பொதுவாகப் பெண்கள் தங்கள் கைகளில் கால்களிலும் மருதோன்றிக் கூழ்மத்தைக் கொண்டு அழகு செய்கின்றனர்

மருத்துவப் பயன்கள்:

• உறக்கமின்மை : தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும்.

• மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

• இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

• இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு

• இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும்.
• நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

• ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம்.

• அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.
• இங்கே சுட்டி காட்டியுள்ளது சில மருத்துவ பயன்களே. இன்னும் எண்ணற்ற பயன்கள் இதில் அடங்கியுள்ளது.

பவுடராக வரும் இந்த மருதாணியில், எந்த அளவு அதன் மருத்துவ குணங்கள் அழிக்கபடாமல் வரும் என்பது கேள்விக்குறியே. முடிந்த அளவு மருதாணி தலைகளை பறித்து உபயோகப்படுத்த பாருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 21 Aug 2014 - 22:16


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide96

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Tabernaemontana_florePleno170el

நந்தியாவட்டை (Ervatamia divaricata, Tabernaemontana divaricata, Crepe jasmine) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் பூவும் இலையும் மருத்துவக் குணங்கள் உடையன.

நந்தியாவிட்டை என இக்காலத்தில் வழங்கப்படும் நந்திப் பூவில் இரண்டு வகை உண்டு. இதில் ஒரே ஒரு அடுக்கு கொண்டது ஒருவகை. ஒன்றுக்குள் ஒன்றாகப் பல அடுக்குகள் கொண்டது அடுக்கு நந்தியாவிடை எனப்படும்

நந்தியாவட்டையின் இலைகளை நன்றாக அலசிச் சுத்தமாக்கி, இடித்துச் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடித்து நந்தியாவட்டை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. கண் எரிச்சல், கண்பார்வை மங்குதல் என்பவற்றுக்கு இது கண்ணில் ஒரு துளி (மூலிகை மருத்துவம் தெரிந்தவரின் மருத்துவ ஆலோசனை பின்பற்றப்பட வேண்டும்) விடப்படுகிறது. சரும நோய்களுக்கும் தடவலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 21 Aug 2014 - 22:18


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide97

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 South20Indian20Lavang20Lata-1

நறவம் என்பது ஒரு மலர்.

நறவம்பூ கொத்துக்கொத்தாகப் பூக்கும்.

வடகிழக்கு இந்தியாவை தாயகமாக கொண்டு ஆரஞ்சு, எலுமிச்சை தாவரவகையை சேர்ந்த இனம். தற்காலத்டில் அரிதான் அழிந்து விட்ட இனங்களில் பட்டியலில் நறவமும் உண்டு. மார்ச், ஏப்ரல் காலங்களில் பூக்கும் இத்தாவரங்களின் பூக்கள் ஏனைய சிட்ரஸ்வகைதாவரங்கள் போன்றே இருக்கும்.

உலர்ந்த பழங்கள் மருத்துவ எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. வேர்கள் மற்றும் பழங்கள் தேள்-stings சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 21 Aug 2014 - 22:20


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide98

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Calopoly_17

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 800px-Fruits_of_Calophyllum_brasiliense

புன்னாக மலர்கள் வெள்ளை நிறமானவை, மணமுடையது, மிக உயரமான மரங்கள், 35 மீ. உயரமுடையது.

மரத்தின் பட்டை வெளிப்புறத்தில் மஞ்சள் நிறமானவை, நன்கு படகு போன்ற பிளவுகளுடையது; உள்பட்டை நார் போன்றது, சிவப்பு நிறமானது.

இந்தோசைனா மற்றும் இந்தோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சாயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1600 மீ. வரையுள்ள உயரமான மலைகளில் காணப்படுபவை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 21 Aug 2014 - 22:22

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide99

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 800px-CottonPlant

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 390651_090112204118_Gossypium_herbaceum6

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Tanaman-katun

பாரம்பூ என குறிஞ்சிபாட்டில் அழைக்கபடும் பலர் பருத்தி parutti, [K. parti, M. parutti.] Indian cotton-plant, Gossypium herbaceum; பஞ்சு உண்டாகுஞ் செடிவகை.பாரம் என்னும் சொல் சுமைப்பளுவைக் குறிக்கும்.

பருத்தி ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்படுகிறது.

பருத்தி அயன் மற்றும் துணை அயனப் பகுதிகளில் மட்டுமே விளையும் இழைப் பயிராகும்.செடியிலிருந்து நாம் பலவிதமாக பயன்படுத்தும் மெதுமையான பருத்தி இழைகள் கிடைக்கின்றன. இச்செடியின் விதைகள் மூடிய, மிருதுவான, அடர்ந்த இழைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பினைப் பெற்றிருக்கும். இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் பஞ்சு என்று அழைக்கிறோம். பருத்தி செடி நில நடுக்கோட்டுப் பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது.


பருத்தியின் பயன்கள்

பருத்தி முக்கியமாக உடை தயாரிக்க பயன் படுகின்றது, மற்றும் மீன்பிடி வலைகள், கூடாரங்கள், புத்தக அட்டைகள் ஆகியவற்றிலும் பருத்தி பயன் படுத்தப்படுகிறது. சீனர்கள் உருவாக்கிய முதல் காகிதம் பஞ்சு இழைகளைக்கொண்டே உருவாக்கப்பட்டது. தற்போதைய அமெரிக்க டாலர் நோட்டும், அரசாங்க காகிதங்களும் பஞ்சு இழை கலந்தே செய்யப்படுகின்றன. டெனிம் எனும் உறுதியான முரட்டுத்துணி வகை பெரும்பாலும் பருத்தியைக் கொண்டே செய்யப்படுகிறது.

பஞ்சு பிரிக்கப்பட்ட, பருத்தி விதைகளிலிருந்து பருத்திக்கொட்டை எண்ணை ஆட்டப்படுகிறது. சுத்தகரிக்கபட்ட பின், இது மனிதர்களால் மற்ற சமையல் எண்ணைகள் போலவே பயன் படுத்தப் படுகிறது. எண்ணை பிரித்த பின் கிடைக்கும் புண்ணாக்கு, விலங்குகளுக்குத் தீவனமாக பயன் படுகிறது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 21 Aug 2014 - 22:24

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide100

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 6235759716_e7fc7df7cc_z

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Luffaacutangulaho2

பீரம் பீர்க்கு ‍எனப்படும் வெள்ளரி இனத்தைச் சேர்ந்த தாவரம்/காய்

'பீர்க்கு' என்றால் ஒரு வகைக் கொடி.இதன் காய் கூட நீளமாக இருக்கும்.மஞ்சள் பூக்களோடு பூக்கும் இக்கொடி ஒரு வெப்பமண்டல படர்க்கொடியாகும். இரண்டு பெண் மற்றும் ஆண் மலர்கள் ஒரே தாவரத்தில் தோன்றும்.

இது உணவாகபயன் படும் காய்கறிகளிளில் ஒன்றாகும்.பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.


இதன் இலை, விதைகள், வேர் என பீர்க்கங்காயின் முழுத்தாவரமும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. கசப்பான மருந்தாகும். விதைகள் பேதியை தடுக்கும், கபம் வெளியேற்றும், பேதிமருந்து, எண்ணெய் தோல் நோய்களுக்கு தடவும் மருந்தாகப் பயன்படும். இலைகள் பொடிக்கப்பட்டு இரத்தக் கட்டிகளின் மீது தடவப்படும், கண் வலிக்கு இலைகளின் சாறு பயன்படும். வேரானது நீர்க் கோர்வைக்கும், மிதமான பேதி மருந்தாகவும் பயன்படுகிறது.

நீரிழிவு குணமடையும்

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இது நல்ல பமருந்தாகும். பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. கஷாயம் மாதவிடாய் மற்றும் சிறுநீர்க் கோளாறுகளுக்கு பயன்படும்.

நாள்பட்ட புண்களை குணமாக்கும்

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் மூத்திரக்கடுப்பை நீக்கும். மிதமான பேதி மருந்து. மூச்சுத்திணறல் நோய்க்கு நல்ல மருந்து, மண்ணீரல் பெரிதானதை குணப்படுத்தும். மலை ஜாதியினர் இந்த மருந்தை வலிப்பு நோய், மூச்சுப்பிடிப்பு, புண்கள், சிரங்குகள் ஆகியவற்றில் பயன்படுத்துவர். கனிகள் - கசப்பான நன்மருந்து, பேதிமருந்து, நோயை ஆற்றும், வாந்தி மருந்து.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 21 Aug 2014 - 22:40

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide90


வஞ்சி மரம் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் வெப்ப மண்டல பகுதிகளில் வளரக்கூடியது.
ஒருவகை பனை இனத்தை சேர்ந்தது சுமார் 600 வேறுபட்ட இனங்கள் இத் தாவர குடும்பத்தில் உள்ள‌து.

இம்மரம் தளபாடங்கள் மற்றும் கூடைகள் உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன.இம்மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் மருத்துவ குணம் கொண்டதாகவும். சாயம் தயாரிக்கவும் பயன் படுகிறது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by பானுஷபானா on Fri 22 Aug 2014 - 10:11

பகிர்வுக்கு நன்றீ நிஷா

பருத்திக் காய் சாப்பிட ரொம்ப டேஸ்டா இருக்கும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16836
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Tue 30 Sep 2014 - 22:28

குருக்கத்திப்பூ

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide101

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Madhavi20Lata-1

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 45c098


குருக்கத்தி ஒரு படர்க்கொடியாகும். வெள்ளை இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் மலர்கள் மற்றும் ஹெலிகாப்டர் போன்ற பழங்களோடு கொத்து கொத்தாக பூக்கும். வாசனை தரும் மலரிது. மாதவிக்கொடி என அழைக்கப்டும் குருக்கத்தி அரும்புகளையும் தளிர்களையும் கொண்டு மணம் வீசி மாமரத்தின் கிளையினைத் தழுவிப்படர்வதாக சங்கப்படல்கள் குறிப்பிடுகின்றன.

கசப்பும், இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால், தலைநோய், தாகம், கபம், புண், பித்தம், பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாகும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Tue 30 Sep 2014 - 22:31

ஆரம்

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Slide102

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 220px-Santalum_album_-_KC3B6hlerE28093s_Medizinal-Pflanzen-128

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 Sandalwood

ஆரம் என குறிஞ்சிப்பாட்டில் அழைக்கபடுவது இக்கால சந்தனமரமஆகும்.

சந்தனம் மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா. இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும். சுமாரான உயரத்துடன் கூடிய மரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.

மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது.

இதன் தாயகம் இந்தியா. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது.தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது. இது துவர்ப்பு மணமும் உடையது. தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும்.

இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாக இருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம்
விட ஆரம்பிக்கும். இந்தப் பழத்தைப் பறவைகள் உட்கொண்டு அதன் எச்சம் விழும் இடத்தில் விதை மூலம் நாற்றுக்கள் பரவும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப் பலன் கிடைக்கும்.

தேக்கு,கடம்பு,மஞ்சள் கடம்பு,தோதகத்தி,சந்தனம் போன்ற மரங்கள் எல்லாம் இயற்கை தந்த வரம்.

 இவை வானிலிருந்து மழையை ஈர்த்து மனிதனுக்கு சிற்றோடையாக, ஆறாக தருகின்றன. காற்றை
தூய்மைப்படுத்தி தென்றலை வீசச்செய்கின்றன.
 
மலைவாழ் ஆதிவாசிகள் தேன்சேகரிக்கவும், மூலிகைகளை சேகரிக்கவும் உதவுகின்றன.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 17 Oct 2014 - 17:51

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 6 1466140_247694332061294_30565507_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum