சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Regist11


Latest topics
» விரும்பி போனால் விலகிப் போகும்...!!
by rammalar Yesterday at 8:06

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by rammalar Yesterday at 7:46

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்க
by rammalar Yesterday at 7:45

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by rammalar Yesterday at 7:44

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by rammalar Yesterday at 7:43

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 7:41

» மனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...
by சே.குமார் Wed 22 May 2019 - 8:06

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...!!
by rammalar Sat 18 May 2019 - 13:06

» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...
by rammalar Sat 18 May 2019 - 11:07

» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
by rammalar Sat 18 May 2019 - 11:05

» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0
by rammalar Sat 18 May 2019 - 11:03

» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது
by rammalar Sat 18 May 2019 - 10:55

» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்?-எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
by rammalar Sat 18 May 2019 - 10:53

» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
by rammalar Sat 18 May 2019 - 10:51

» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா
by rammalar Sat 18 May 2019 - 10:50

» லட்சுமியின் என்டிஆர்’-திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:49

» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்!
by rammalar Sat 18 May 2019 - 10:48

» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா!
by rammalar Sat 18 May 2019 - 10:46

» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
by rammalar Sat 18 May 2019 - 10:45

» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:44

» கடல போட பொண்ணு வேணும்
by rammalar Sat 18 May 2019 - 10:41

» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by rammalar Wed 15 May 2019 - 7:01

» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
by rammalar Mon 13 May 2019 - 5:55

» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’
by rammalar Mon 13 May 2019 - 5:39

» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
by rammalar Mon 13 May 2019 - 5:32

» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
by rammalar Mon 13 May 2019 - 5:27

» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்
by rammalar Mon 13 May 2019 - 5:24

» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
by rammalar Mon 13 May 2019 - 5:21

» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா
by rammalar Mon 13 May 2019 - 5:18

» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
by rammalar Sat 11 May 2019 - 21:35

» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு
by rammalar Sat 11 May 2019 - 21:29

» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா?
by rammalar Sat 11 May 2019 - 21:28

» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:45

» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:43

» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம்
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:17

.
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Khan11
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Www10

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

Sticky குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 22 Mar 2014 - 23:08

First topic message reminder :

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள் எனும் தலைப்பில் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பித்து  பூக்களின் படங்களில் பெயர்கள் மட்டுமல்லாமல் அதன் தாவரவியல் பெயர், மருத்துவகுணங்கள், என அறிவியல் ரிதியாகவும்  தொகுக்கப்பட்டது.


இதுவரை தொகுக்கப்பட்ட பூக்களின் பட்டியல்  
பெயர்களின் மேல் சுட்டவும்.

 1. செங்காந்தள்
 2. ஆம்பல்
 3. அனிச்சம்
 4. குவளை
 5. குறிஞ்சி
 6. வெட்சி
 7. செங்கொடுவேரி
 8. தேமாம்பூ
 9. மணிச்சிகை
 10. உந்தூழ்
 11. கூவிளம் பூ
 12. எறுழம்
 13. சுள்ளி
 14. கூவிரம்
 15. வடவனம்
 16. வாகை
 17. குடசம்
 18. எருவை
 19. செருவிளை
 20. கருவிளம்
 21. பயினி
 22. வானி
 23. குரவம்
 24. பசும்பிடி
 25. வகுளம்
 26. காயா
 27. ஆவிரை
 28. வேரல்
 29. சூரல்
 30. சிறுபூளை
 31. குறு்நறுங்கண்ணி
 32. குருகிலை
 33. மருதம்
 34. கோங்கம
 35. போங்கம்
 36. திலகம்
 37. பாதிரி
 38. செருந்தி
 39. அதிரல்
 40. சணபகம்
 41. கரந்தை
 42. குளவி
 43. மா
 44. தில்லை
 45. பாலை
 46. முல்லை
 47. குல்லை
 48. பிடவம்
 49. செங்கருங்காலி
 50. வாழை
 51. வள்ளி
 52. நெய்தல்
 53. தாழை
 54. தளவம்
 55. தாமரை
 56. ஞாழல்
 57. மௌவல்
 58. கொகுடி
 59. சேடல்
 60. செம்மல்
 61. சிறுசெங்குரலி
 62. கோடல்
 63. கைதை
 64. வழை
 65. காஞ்சி
 66. மணிக்குலை
 67. பாங்கர்
 68. மராஅம்
 69. தணக்கம்
 70. ஈங்கை
 71. இலவம்
 72. கொன்றை
 73. அடும்பு
 74. ஆத்தி
 75. அவரை
 76. பகன்றை
 77. பலாசம்
 78. பிண்டி
 79. வஞ்சி
 80. பித்திகம்
 81. சிந்துவாரம்
 82. தும்பை
 83. துழாய்
 84. தோண்றி
 85. நந்தி
 86. நறவம்
 87. புன்னாகம்
 88. பாரம்
 89. பீரம்
 90. குருக்கத்திப்பூ
 91. ஆரம்
 92. காழ்வை
 93. புன்னை
 94. நரந்தம் 
 95. நாகப்பூ
 96. இருவாட்சி
 97. குருந்தம் 
 98. வேங்கை
 99. புழகு 1. மல்லிகையின் வெவ்வேறு இனங்கள
 2. விதைகளுக்கிடையிலான மாறுபாடுகள்
 3. குறுநறுங்கண்ணி போங்கம் திலகம் விதைகளின் வித்தியாசங்கள்!
 4. சங்ககால மலர்களின் பட்டியல் 


மலர்களில் கூறப்படும் மருத்துவக்குறிப்புக்களை  தகுந்த ஆலோசனையின்றி முயற்சித்து பார்க்க வேண்டாம்!

இத்தொகுப்பை நான் முழுமைப்படுத்த உதவிய விக்கிமீடியா, கற்க நிற்க [*படங்கள் ] மற்றும் அனைத்து இணைய தளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.


Last edited by Nisha on Tue 18 Aug 2015 - 23:13; edited 27 times in total (Reason for editing : முதல் பதிவில் லிங்க இணைப்புக்காக)
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 11 Apr 2014 - 11:34

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide36

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 250px-
குறுநறுங்கண்ணி, ஆவு, காகபீலி, குஞ்சி, குஞ்சிரம், குண்டுமணி, குந்துமணி, குன்றி, மணிச்சிகை, பவளக்குன்றி, நஞ்சி, நாய்க்கரந்தை, சிரீடம் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்படும் கொடி

குன்றிச் செடி (Jequirity) என்பது, ஆப்ரஸ் பிரிக்கட்டோரியஸ் (Abrus precatorius) என்னும் அறிவியற் பெயர் கொண்ட ஒரு தாவரம் ஆகும். கடுமையான சிவப்பு நிறத்தில் கருமை நிறத்தில் ஒரு மறுவைக் கொண்ட கொண்ட இதன் விதை பொதுவாகக் குண்டுமணி என அறியப்படுகிறது. இச் சொல் குன்றிமணி என்பதன் திரிபு ஆகும். கவர்ச்சியான இந்த விதை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. எனினும் இதன் தோல் மிகவும் கடினமாக இருப்பதால், இதை முழுதாக விழுங்கினால் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

சில பகுதிகளில் இம் மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டு. சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.

குன்றிமணியில் உள்ள நஞ்சு ஆப்ரின் (abrin) எனப்படுகிறது. இது ரைசின் (ricin) எனப்படும் நச்சுப் பொருளுக்கு நெருக்கமான உறவுடையது.

இது தமிழ் நாட்டில் எங்கும் வளரக்கூடியது. இது செடி, புதர்,மரம் இவைகளைப்பற்றிப் படரக் கூடிய கொடிவகையைச் சேர்ந்தது. இதுஅவரைக் காய் போன்று காய்விட்டு முற்றி வெடித்து விதைகள் சிதறிவிடும்.விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றி மணியைச் சுட்டுவதாக வந்துள்ளது. "புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து' என்பது ஒரு குறள். குன்றிமணியின் சிகப்பைப் போல் வெளித் தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பவர் (போலித் துறவியர்) உலகில் உளர் என்பது இக்குறட் கருத்துநாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 11 Apr 2014 - 11:38

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide37
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 White20Fig-2
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Ficuvire_12
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 White20Fig-1


மார்ச் மாதம் தொடங்கி, செப்டம்பர் வரை பூக்கும். சில இடங்களில் பெப்ரவரியிலேயே பூப்பதும் உண்டு. இது சூழல் பசியப் பசந்து (பசந்தம்>வசந்தம் - இருபிறப்பிச் சொல்) கிடக்கும் காலத்தில் பூப்பதாலும், மல்லிகை போன்று வெள்ளையாய் இதழ்களின் உட்புறம் காட்டுவதாலும், வசந்த கால மல்லிகை என்று சொல்லுகிறார்கள்.

இந்திய சூழலில் இரண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக வசந்த காலத்திலும் (பிப்ரவரி ஆரம்பத்தில் மே வரை), பருவ மழை (அதாவது ஜூன் ஆரம்பத்தில் செப்டம்பர்) காலத்தி்லும் புதிய இலைகள் இளஞ்சிவப்பு சிவப்பு தோன்றும்.

மொட்டாய் இருக்கும் போது முத்துப் போல் அமைவதால் பின் அதிமுத்தம், அதிமுத்தகம் எனப்படும்.

தென் கிழக்கு ஆசியா, இந்தியா போன்ற இடங்களில் கண்டு பிடிக்கபட்டு மலேசியா வடக்கு அவுஸ்ரேலியா வரைக்கும் பரந்து வளரும் செடி மரம் இது.


இந்தியாவில் புதுதிலலி, நொய்டா நகரங்களில் பல இடங்களில் 27 மீற்றரிலிருந்து 32 மீற்றர் வரை மிகவும் உயர்ந்து வளர்ந்து நிழல் தரும் மரமாக காட்சிதருவதை காணலாம்.

தாய்லாந்து இனமக்கள் இக்காய்களையும் இலைகளையும் சமைத்து உணவுக்கும் பயன் படுத்துகிறார்கள்.


இப்பூக்கள் பற்றி சங்கபாடல் சொல்வதென்ன.

எந்த ஒரு அதிர்ச்சியையும், குருகு இலையும், பூவும், தாங்காவாம். பரிபாடல் 15 ஆம் பாட்டில் 41 ஆம் அடியில், “குருகு இலை உதிர குயிலினம் கூவ” என்று வரும். அதாவது குயிலினம் கூவினாலே, குருகு இலை உதிரலாமாம்.

மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்
நெய்யால் தளிக்கும் நிமிர்சுடர் - பெய்ய
முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல்.

என்று சொல்லி, ”இடியிடிக்க, மழை பெய்ய, இளஞ்சிவப்புக் குருகு இலை தளிர்க்கவும் செய்யும்” என்று இன்னுமொரு புதலியற் செய்தியைப் புகல்கிறது என்றும் பாடப்பட்டிருக்கிறது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 12 Apr 2014 - 22:25

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide38

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Ac4e3986

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Marutam

இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம், மருத மரத்தில் கருமருது, கலிமருது, பூமருது ஆகிய வகைகள் உள்ளன.நீர்ப் பெருக்கான இடங்களில், வயல்களின் ஓரங்களில், மருதம் வளர்ந்திருக்கும். மருதம் இணராகப் பூக்கும் தன்மையுடையது. பூவின் நிறம், மஞ்சள் நிறமாக இருக்கும்.

மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கொத்து கொத்தாக வெளிர் மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்கும்.

ஆற்றின் இருகரைகளுக்கும் அழகு சேர்க்கும் அழகிய மரமாகும். இந்தியா முழுவதிலும் மற்றும் மியான்மர் (பர்மா), ஸ்ரீலங்காவிலும் இம்மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. "மருது' வழவழப்பான சாம்பல் நிறப் பட்டையுடன் திகழும்.

இந்த மரத்தின் விதை, பட்டை, பழம் என அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இவற்றிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள்.

இதயத்தின் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுப்பதற்கு மருத மரப் பட்டையில் உள்ள அர்ஜுனின் என்ற வேதிப் பொருள் உதவுவதை சமீபத்திய ஆராய்ச்சிகள் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது.

இதில் லிப்பிட் பெர்ஆக்சிடேஷன் நிறைந்து உள்ளதால், ரத்தம் உறைநிலையைத் தடுப்பதோடு, இதயத் தசைகளை வலுவாக்கும் ஆற்றலும் உள்ளது. ரத்தபேதி மற்றும் சீதபேதி ஏற்பட்டால், இதன் இலைக் கொழுந்தை மென்று விழுங்கினால், உடனடியாக குணமாகும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் அளவை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு.

இந்த மகத்தான மருத மரம் "அர்கீனா' என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது. இதன் தாவரப் பெயர் "டெர்மினேலியா' என்பது.

மருதமரம் மருத்துவக் குணங்கள் நிறைந்த- மக்களின் ஆற்றங்கரை நாகரீகத்தோடு ஒன்றிவிட்ட ஒரு அழகிய மரம் மருது ஆகும். இது மூன்று முக்கிய திருத்தலங் களில் தல மரமாகத் திகழ்ந்து ஒரு புனித மரமாகவும் போற்றப்படுகிறது

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். உலகிலேயே உயரமாகவும், பரந்தும் விரிந்தும் வளரக்கூடிய மருத மரங்களை மருதவனங்களில் காணலாம். நீர் மருது, வெண்மருது செம்மருது மருத மரங்களில் பல வகை உண்டு. அர்ஜூன மரம் என்பதும் மருதமே.

காவிரி பாயும் தஞ்சை - திருவாரூர் மாவட்டங்களில் மருதநில இலக்கணத்தைக் கொண்டிருந்தாலும் அங்குள்ள மருதவனம் என்றோ விறகுகளாகிவிட்டன


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 12 Apr 2014 - 22:29

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide39
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 733fe803
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 7614-004-5C39453E
 
கோங்கம் என்று சங்கப்பாடல் கூறும் மரத்தை இக்காலத்தில் கோங்கு (bombax gossypinum or Yellow Silk Cotton Cochlospermum religiosum) எனக் கூறுகின்றனர்.காடுகளில் கோங்கம் மிகுதியாக வளர்ந்திருக்கும். இளவேனிற் பருவம் தொடங்கியவுடன் இது மிகுதியாகப் பூக்கததொடங்கும். இதன் முகை உருண்டிருக்கும். எனவே, இது மகளிரின் நகிலுக்கு உவமையாகியது.தேனும், தாதும், நிறைந்த இம்மலர் இணராக மலர்ந்திருக்கும். அவற்றில் வண்டுகள் மொய்க்கும்.
 
கோங்கிலவு என்ற மரத்தின் மலர்தான் கோங்கம். பொன்னை ஒத்த தோற்றம் கொண்ட அழகிய மலர்.
 
இள‌ மஞ்சளில் மொட்டுகளும், பளீரிடும் மஞ்சளில் மலர்களும் அடர் பச்சையில் இலைகளும், அதை தாங்கும் மெல்லிய கிளைகளும் மலர்கள் முற்றுகையில் வரும் வெளிர் பச்சை நிறப் பிஞ்சுகளுமாய் காண‌ப்ப‌டும்
 
வறண்ட பிரதேசங்களில் வளரும் மரமாகையால் அடர்த்து, பரந்த கிளைகள் எல்லாம் இந்த மரத்திருக்கு இல்லை காய்கள் முதிர்ந்ததும் வெடித்து, விதைகள் காற்றில் பறந்து விழுகின்ற இடத்தில் துளிர்விடும்.
 
விதைகள், பஞ்சால் சுற்றப்பட்டது போல தோற்றம் கொண்டவை காற்றில் பறக்க ஏதுவாக..... நீரூற்றி வளர்க்க வேண்டியதில்லை, தானாகவே வளரும்.
 
கோங்கமரம் இக்காலத்தில் வீட்டுப்பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. இதனால் செய்யப்பட்ட பொருள்கள் இலேசாகவும், மழமழப்பாகவும், மஞ்சள்-நிறதிலும் இருக்கும்.
 
 
 
கோங்கமரம், பூ, தாது பற்றிய சங்கநூல் செய்திகள்
 
எலியின் காது கோங்கம் பூவின் மையப் பகுதி போல இருக்கும்
கோங்க மலரைப் பதத்தோடு பறித்தெடுப்பர்
கோங்கின் மகரந்தப் பொடிகளை மகளிர் மேனியில் பூசிக்கொள்வர். அதற்காக அவற்றைச் செம்பாலான செப்புகளில் சங்ககாலத்தில் விற்பனை செய்வர். செல்வர் அவற்றை சம அளவு பொன் கொடுத்து வாங்குவர்.
கோங்க-மலரின் முகை மகளிர் முலைபோல் இருக்கும்.
மதுரையை அடுத்த வையை ஆற்றுப் படுகையில் பாணர் முற்றத்தில் கோங்க மலர்கள் கொட்டிக்கிடக்கும்.
கோங்கம்பூ குடை போலவும், மீன் போலவும் இருக்கும்.
கோங்கின் அடிமரத்தில் செதில்கள் பொரிந்திருக்கும். பூ பொன்னிறத்தில் இருக்கும்.
மரத்திலிருந்து கோங்கமலர் காம்பறுந்து விழுவது யானை ஓட்டுநர் வீசும் தீப்பந்தம் போல விழும்.கோங்கமரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும்.
 
 கணிமேதாவியார் இயற்றிய
திணைமாலை நூற்றைம்பது

எரி நிற நீள் பிண்டி இணர் இனம் எல்லாம்
வரி நிற நீள் வண்டர் பாட, புரி நிற நீள்
பொன் அணிந்த, கோங்கம்; - புணர் முலையாய்! - பூந்தொடித் தோள்
என் அணிந்த, ஈடு இல் பசப்பு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 12 Apr 2014 - 22:31

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide40

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Ormo_ormon3

போங்கம் குனி, குன்னி, மலை மஞ்சடை, மலமஞ்சடை, மலைமான்ஜடி, கல்மாணிக்கம் என அழைக்கபடும் இம்ம‌ர‌மான‌து மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக அதிக மழை பெறும், பசுமைமாறாக்காடுகளில் (கடல் மட்டத்திலிருந்து 800-1200 மீ. உயரமான மலைகளில்) மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்கு பகுதிகளில் காணப்படுகின்றன. தெற்கு சயாத்திரி மலைகளிலும் மற்றும் அரிதாக கூர்க் பகுதிகளில் (மத்திய சயாத்திரி) காணப்படுகின்றன.

மரங்கள், 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது. மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது. சிறிய நுனிக்கிளைகள் தட்டை அல்லது குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உரோமங்களுடையது

மலர்கள் பிங்க் நிறமானவை, இலைக்கோணங்களில் காணப்படும் ரெசீம் மஞ்சரி. கனி (அவரைப்போன்றது), நீள்வட்ட வடிவானது உப்பியவை, 12 X 6 செ.மீ. நீளமானது, நீட்சியுடையது, விதை ஒன்று, சிவப்பு (ஸ்கார்லெட்) நிறமானது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 12 Apr 2014 - 22:34

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide41
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 800px-Adenanthera_pavonina_seeds


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Adenanthera1

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 E79de450
மஞ்சாடிப் பூ மரவகையைச்சேர்ந்தது.

மஞ்சாடி (Adenanthera pavonina) எனப்படுவது ஆசியா, அவுத்திரேலியா, தென்னமெரிக்கா, வட அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் ஒரு தாவர இனம் ஆகும். வெட்டுமரத் தேவைக்காகவே இது பெரிதும் பயன்படுகிறது எனினும் இதன் வலிமை குறைந்தவையாகும்.

மஞ்சாடி மரம் மண்ணின் நைதரசன் அளவைச் சமப்படுத்துவதற்காகவே முதன்மையாக வளர்க்கப்படுகிறது. அத்துடன் விலங்குளின் உணவுக்காகவும் மருந்து மூலிகையாகவும் வீட்டுத் தோட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் அழகுத் தாவரமாகவும் இது வளர்க்கப்படுகிறது. இத்தாவரத்தின் தரமான, அழகிய விதைகள் அவற்றின் அழகு காரணமாகவும் உணவுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும் இதன் பரவல் எளிதாகின்றது. மஞ்சாடியின் இளம் காய்களைக் குரங்குகள் போன்ற விலங்குகள் விரும்பியுண்கின்றன. பச்சையாக உள்ள மஞ்சாடி விதைகள் ஓரளவு நச்சுத் தன்மையுள்ளனவாக இருந்த போதிலும் அவற்றைச் சமைக்கும் போது அவற்றின் நச்சுத் தன்மை குறைந்து உண்ணத் தக்கனவாக மாறுகின்றன. மஞ்சாடி விதைகளே பழங்கால இந்தியாவிற் தங்கம் போன்ற பெறுமதி மிக்க மாழைகளை நிறுப்பதற்குப் பயன்பட்டன. மஞ்சாடி விதைகள் கழுத்தணிகள், கைம்மாலைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் பூக்கள் சற்று நீளமாயும் பூனை வால் போன்று கூந்தல் கொண்டும் அமைந்திருக்கும். கொட்டைகள் செந்நிறமாயும் பிரகாசமானவையாயும் இருக்கும். இதன் இளம் தளிர்கள் சமைத்து உண்ணத் தக்கவை. மஞ்சாடி மரத்தின் வைரப் பகுதி மிகவும் கடினத் தன்மை கூடியதாகும். அது தோணி செதுக்குவதிலும் மரத் தளபாடங்கள் செய்வதிலும் விறகுக்காகவும் பயன்படுகிறது.

மஞ்சாடி மரமானது சவர்க்கார உற்பத்தியிற் பயன்படுத்தப்படுகிறது.இதன் மரப் பகுதியிலிருந்து உணவுக்காகப் பயன்படுத்தப்படும் செந்நிறச் சாயம் பெறப்படுகிறது.

மஞ்சாடி விதைகளிலிருந்து பெறப்பட்ட சாறு வெகுவாக உட்கொள்ளச் செய்யப்பட்ட எலிகளும் சுண்டெலிகளும் உடலெரிவுக்கு எதிரான தன்மை கூடுவதை வெளிப்படுத்தியுள்ளன


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 12 Apr 2014 - 22:38

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide42
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Ptiri
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 37ae0aeaae0aebee0aea4e0aebfe0aeb0e0
 
பாதிரி (Stereosperm suaveolens) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 மீட்டர் உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.
 
காட்டுப் பெருவழிகளில் இம் மரம் மிகுதியாக வளர்ந்து நிற்கும். ""அந்தப் பாதிரி"", `காணப் பாதிரி' என்றெல்லாம் வழங்குவார். பாதிரிமலர் செம்மையானது. பஞ்சு போன்ற துய்யினை உடையது. அதன் இதழ்கள் மெல்லியதாக இருக்கும்.
 
இளம் மஞ்சளாய் கொஞ்சம், அடர் மஞ்சளில் கொஞ்சம் எனக் கண்கவர் வண்ணக் கலவையில் மொட்டும், மலருமாய் இந்த மலர்கள் காணப்படும்.மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மலரும் பருவம் கொண்ட இந்த மரத்திற்கு அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி என நிறைய பெயர்கள் உண்டு இம்மலருக்கு. சரித்திரப் பெருமையும் உண்டு
 
ஆற்றுத் துறையில் வேனில் காலத்தில் பாதிரி மலரும்.பாதிரி மரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும் பாதிரி மரத்தில் இலைகள் உதிர்ந்து பூக்கள் பூத்துக் குலுங்கும். இப்படிப் பூத்துக் குலுங்கும் ஓவியத்தை யாழ் என்னும் இசைக்கருவியின் வயிற்றுப்பகுதியில் வரைந்திருப்பார்கள்.
 
பாதிரி பருத்த அடிமரம் கொண்டது. அதன் பூ குருமயிர் போல் மலர்ந்திருக்கும். அதிரல், பாதிரி, நறுமணம் மிக்க மாரோடம் ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர் ஓவியர்களின் செந்நிறம் தோய்த்த தூரிகை போலப் பாதிரியின் தூய மலர் இருக்கும். பாதிரி மலர் பழுக்கக் காய்ச்சிய தகடு போல் எரிநிறம் கொண்டிருக்கும். பாதிரிச் சினை மொட்டுகளும் அழகாக இருக்கும் வளையாத பஞ்சிழை போல் துய் இருக்கும் தலைகளைக் கொண்டிருக்கும். காம்பு சிறிதாக வளைந்திருக்கும். அடிப்பூ கருத்திருக்கும்
 
 இதன் வேர் - சிறுநீர் இலகுவாக வெளியேறப் பயன்படும், உடலுக்குக் குளிர்ச்சி தந்து பலமூட்டும்இதன் காய் - அரைத்துத் தலையில் பற்றுப் போட்டால் ஒற்றைத் தலைவலி நிற்கும்இதன் பூ - நசுக்கித் தேனுடன் கலந்து உண்டால் தொடர்ச்சியான விக்கல் நிற்கும், நீரிற் காய்ச்சிப் பருகினால் ஆண்மைக் குறைவு நீங்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 12 Apr 2014 - 22:40

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide43

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 P4140941

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Ramdhan20Champa-1

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Ramdhanchapha-4
செருந்தி ஒரு வ‌கைக்கோரை இன‌த்தை சார்ந்த‌து.மண஼ம் வீசுகின்ற செருந்திமலர், இளவேனிற் காலம் தொடங்கியவுடன் மலர்ந்து நிற்கும். மலர்கள் பொன்னிற வண்ணத்துடன் காட்சியளிக்கும்.

இது நெட்டிக்கோரையெனவும், வாட்கோரையெனவும்,தண்டான்கோரையெனவும் அழைக்கப்படும்.
செருந்திப்பூவை மக்ளீர்க்கு உவமையாக கூறிவர்

நல்ல மஞ்சளில் இதழ்கள் செய்து, அதை அழகுற அருகருகே அடுக்கி வைத்தது போல மொட்டும் மலர்களும்
கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும்.

செருந்தி பொய்கையில் புதர்புதராக வளரும்,பூக்கும். இதற்குக் கண்பு என்னும் கணுக்கள் உண்டு. களிறுகள் இதனை உண்டும் உழக்கியும் மாய்க்கும் செருந்தி நெய்தல் நிலத்தில் பொன் நிறத்தில் பூக்கும்.
வயலில் கோரைப்புல் போலும்,உப்பங்கழிகளிலும் வளரும் இது பசுமையான தோகைகளைக் கொண்டது.
கடற்கரை மணல்மேடுகளில் ஞாழல் பூவும் செருந்திப் பூவும் மணம் கமழும்.
செருந்தி சூரியக் கதிர் போல் அரும்பிப் பொன் போல் கொத்தாகப் பூக்கும். இதனை மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.செருந்தியையும் நெய்தலையும் சேர்த்துக் கட்டி ஆடவர் மார்பில் மாலையாக அணிவர்.செருந்திப் பூவின் கால் செந்நிறம் கொண்டது.செருந்தி நெருக்கமான மொட்டுகளைக் கொண்டது.செருந்தி வண்டு அருந்தும் தேன் உள்ள மலர்.

விஷேச வாசனை கிடையாது, இருப்பினும் இதன் விதைகளுக்கான அமைப்பு வித்தியாசமானது. சிறு
குவளை போன்ற சிவப்பு நிற அமைப்பின் உள்ளே பொத்தி வைத்த முத்துகளாய் அழகிய விதைகள் காண‌ப்ப‌டும்.

விதைகள் முதலில் பச்சை நிறத்தில் இருக்கும், பின் முற்றுகையில் நல்ல கருப்பு வண்ணத்தில் மாறும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 12 Apr 2014 - 22:43

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide44
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Jewel20Vine-1
 
அதிரல் கொடி மரத்தில் படரும். அதன் பூக்கள் பூனைப் பற்கள் அளவில் இருக்கும். ஆற்றுமணலில் கொட்டிக் கிடக்கும். மகளிரும் ஆடவரும் இதனைத் தனியாகக் கட்டியும் பிற பூக்களோடு சேர்த்துக் கட்டியும் அணிந்துகொள்வர்.
 
அதிரல் வேனில் காலத்தில் பூக்கும். இம்மலர் இரவில் அல்லது வைகறைப் பொழுதில் மலரும்.
பாதிரி மரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும்
 
இதனைப் `புனலிக்கொடி' என்று நச்சினாரிக்கினியரும், காட்டுமல்லிகை என்று அரும்பதவுரையாசிரியரும், மோசிமல்லிகை, என்று அடியார்க்கு நல்லாரும் குறிக்கின்றனர். இது இளவேளிற்காலத்தில் மிகுதியாக மலரும். அதிரல் மொட்டின் வடிவம் கூர்மையாகவும் நீட்சியுடையதாகவும் இருக்கும். -மொட்டின் வடிவினை நாம் உணரலாம். வெண்மை நிறமாக விளங்கும் அதிரல் மொட்டுக்களின்மீது மெல்லிய வரிகள் காணப்படும். அவை வெருகின் கூரிய எயிறுகளைப் போன்றிருக்கும் என்று அடிகள் உணர்த்துகின்றன.
 
காட்டு மல்லிகை எனப் பேச்சு வழக்கில் சொல்லப்படும் மல்லிகையின் மணமில்லா மல்லிகை இது., அழகிய வெள்ளை நிறத்தில் ஆறேழு இதழ்களும், தளிர் பச்சையில் சிறு காம்பும், அடர் பச்சையில் நீள் வட்ட இலைகளும், மலருமாக‌ அழ‌காக‌ இருக்கும்.
 
வசமில்லா மலராக இருந்‍தாலும், மலரினவெண்மைநிறமும், அதன்நீண்டஇதழ்களுமாய்,பார்க்கவே அழகாக இருக்கும்.
 
பூஜைக்கு உகந்த மலராகவும், திருமண சடங்கிலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் மலராகவும் உள்ளது மணிப்பூரில் ஒரு பிரச்சித்தி பெற்ற மலரிது.
 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 12 Apr 2014 - 22:49

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide45

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 981da262

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Michelia_champaca_Blanco1_191
சண்பகம் இளவேனிற் காலத்தில் மலர்கின்ற மலர், சண்பகமலர் மணமும் குளிர்ச்சியும் உடையது.

சண்பகம் என்பது என்றும் பசுமையான பெரிய தாவரம் ஒன்றாகும். இது தெற்காசியா, தென்கிழக்காசியா, சீனாவின் சில பகுதிகள் என்பவற்றை உள்ளடக்கிய இந்தோமலாயா சூழலியல் வலயத்தைத் தாயகமாகக் கொண்டது.[1] மிகுந்த நறுமணம் கொண்ட மஞ்சள் அல்லது வெண்ணிறப் பூக்களுக்காக இது வெகுவாக அறியப்படுகிறது. எனினும், முதன்மையாக இது பயிரிடப்படுவது இதன் வெட்டு மரத்துக்காகவாகும். அவ்வாறே, இது நகர்ப்புற நிலவடிமைப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் கவர்ச்சியான சதைப்பகுதி கொண்ட பழங்கள் பறவைகளை வெகுவாகக் கவரக் கூடியன

சண்பகம் ஒரு காட்டு மலராகும்,சண்பகமலர் பொன்னிறமுடையது.சண்பகத்தில் களிம்பு நிறம் முதல் மஞ்சள்-செம்மஞ்சள் நிறம் வரையான வேறுபாடுகள் கொண்ட கலப்பினங்கள் உருவாக்கப்படுவதுண்டு.தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளில் இதனை ஒத்த இனங்களுடன் கலந்துருவாக்கப்பட்ட கலப்பினங்கள் காணப்படுகின்றன.

சண்பகப் பூக்கள் தென்கிழக்காசியாவிற் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இவை முதன்மையாக வீடுகளில் அல்லது ஆலயங்களில் வழிபாடு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிறுமிகளும் பெண்களும் இதன் பூக்களை அழகுக்காகவும் இயற்கையான நறுமணத்துக்காகவும் தலையிற் சூடிக் கொள்வர். அறைகளில் இயற்கையான நறுமணம் திகழ்வதற்காக நீர் மேலிடப்பட்டு வைக்கப்படுவதுடன், மணவறைக் கட்டில்களிலும் மணமாலைகளிலும் இதன் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சண்பகம் என்பது மிகுந்த நறுமணத்தைக் கொண்ட ஓர் அரிய தாவரம். அதனாலேயே இது பெருமளவிற் பயன்படுத்தப்படுவதில்லை. தலையிற் சூடப்படும் போது இதன் தனியொரு பூவே சூடப்படுகிறது. சில வேளைகளிலேயே இது சிறிய கொத்தாகச் சூடப்படும். மிக அரிதாகவே இதனாற் செய்யப்பட்ட மாலைகள் அணியப்படுகின்றன. மணவறைக் கட்டில்களை அலங்கரிப்பதில் மல்லிகையும் உரோசாவும் போன்றே இதுவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பூக்கள் கொண்ட நீர்ப் பாத்திரங்கள் அறைகளில் வைக்கப்படுகின்றன. அழகு மிகுந்த இதனால், நறுமணத் தன்மை குறைந்த ஏனைய பூக்களுடன் சேர்த்து அலங்கரிக்கப்படுகிறது."[4]

சண்பகப் பூவின் நறுமணத்தின் காரணமாக இது 'களிப்புறு நறுமண மரம்' என்றும் அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் பல இல்ல நறுமணத் தயாரிப்பாளர்கள் சண்பகப் பூவைக் கொண்டு நறுமணப் பொருட்களைத் தயாரிக்கி

சண்பகம் அழகுத் தாவரமொன்றாக அயன மண்டலப் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது

சண்பகப்பூவின் மருத்துவ பயன்கள்.: வாத பித்த நோய், எலும்பு காய்ச்சல், பால்வினை நோய், விந்துவிரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி, நீங்குமாம்.


அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த பெருந் தண் சண்பகம் போல
கலித்தொகை (150:20-21) பாடல்"


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sun 13 Apr 2014 - 13:34

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide46


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 800px-Sphaeranthus_indicus
இதன் கொடி வடிவில் பெரியதாக இருக்கும். `கரந்தை மாக்கொடி' என்று பதிற்றுப்பத்துக் குறிக்கிறது. கரந்தைப் பூவின் நிறம் சிவப்பு. இது மணமும் உடையது. ""செம்பூங்கரந்தை"" என்று அகப்பாடலும், ""நறும்பூங்கரந்தை"" என்று புறப்பாடலும் கூறுவதைக் காணலாம். நாகுவின் முலையைப் போன்று பரந்து கரந்தைப் பூவின் வடிவம் அமைந்திருக்கும்.

கரந்தை எனும் மலரை  பல வேறுபட்ட பெயர்கள்  கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் அடையாளம்காட்டுகிறார்கள். படத்தில்  காண்பது  கொட்டைகரந்தை எனும் இனமாகும்.  
கொட்டைக்கரந்தை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, செல்களின் அழிவை கட்டுப்படுத்தி, உடல் உறுப்புகளுக்கு வலிமையையும், உடலுக்கு ஊட்டத்தையும் தரும் அற்புத மூலிகை கொட்டை கரந்தை. ஸ்பேரான்தஸ் இன்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அஸ்டரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறு செடிகள் வயலோரங்களில் களைச்செடியாக வளருகின்றன.

பூக்காத அல்லது பூக்க ஆரம்பித்துள்ள கொட்டைகரந்தை செடியின் இலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஏராளமான வேதிச் சத்துக்கள் அடங்கியுள்ளன. மெத்தில் சேவிகால், ஆல்பா அயனோன், டிகாடினின், மெத்தாக்சி சின்னமால்டிகைடு, ஸ்பேரான்திம், ஸ்பேரான்தனோலாய்டு, பீட்டா சைட்டோஸ்டீரால், ஸ்டிக்மா ஸ்டீரால், யுடெஸ்மோனலைடு, கிரிப்டோ மெரிடியால் போன்ற வேதிப்பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான இம்மினோ குளோபுளின்களை சீர் செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பூக்காத கொட்டைகரந்தை செடிகளின் இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் 1 முதல் 2 கிராமளவு தேனுடன் கலந்து சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுவதுடன் பார்வை கூர்மை அடையும். இளநரை மாறும்

கரந்தை என அடையாளம் காட்டப்படும் இதர இனங்கள்.


 1. திருநீற்றுப்பச்சை/உருத்திரச்சடை/சப்ஜாச்செடி எனும் மூலிகை.
 2. கொட்டைக்கரந்தை/ காய்த்த கரந்தை
 3. ஒரு மரவகை
 4. நீர்ச்சேம்பு
 5. குரு
 6. கரந்தைத்திணை
 7. கரந்தைப்பூமாலை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 16 Apr 2014 - 0:15

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide47

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 286

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Peep

குளவி – பன்னீர் பூ, மரமல்லி என அழைக்கப்படும் மலர்.

மல்லிகையின் ஒரு வகை, மரத்தில் பூக்கும் மல்லிகை, மர மல்லிகை, காட்டு மல்லிகை!
 
காட்டு மல்லிகை என்றாலும் வீட்டிலும் வளரும் மரம்.

மரமல்லிப் பூக்கும் காலம் அலாதியானது மழைக்காலத்தில்தான் அவைப் பூக்கும்.டிசம்பர், ஜனவரி மாதங்களில் மரம்முழுக்க வெள்ளையாய், நீளமாய் பூக்க ஆரம்பித்துவிடும். இரவில் பெய்த மழையில் நனைந்தபடி தரை சேர்ந்திருக்கும் பூக்கள் எழுப்பும் வாசம் நம்மை வேறொரு உலகத்திற்கு அள்ளிக்கொண்டு போகும்.

வெண்மை நிறத்தில், நான்கு அல்லது ஐந்து இதழ்களுடன், நீண்ட காம்புடன், மலரும் மொட்டுமாய் இவை மலர்ந்திருக்கும்,ஓங்கி உயர்ந்து வளரும் மரம் அல்ல இது.பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.

காட்டு மல்லிகை, சாதி மல்லிகை, ஊசி மல்லிகை, குடமல்லிகை என்று மல்லியில் பல வகைகள் உள்ளன.

இவைகளின் மருத்துவப் பயன்கள் பெரும்பாலும்ஒன்றாகத்தான் இருக்கும். காட்டு மல்லிகை இலைகளை அரைத்து பூசினால் வெண்குஷ்டம் கட்டுப்படும்.குடல் புழுவை வெளியேற்றும்.

மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி, மதுரை ம‌ல்‌லி எ‌ன்றெ‌ல்லா‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் மரு‌த்துவ ம‌ல்‌லியை‌ப் ப‌ற்‌றிஉ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியுமா?
தலை‌‌யி‌ல் சூடுவத‌ற்கு‌ம், மாலை அல‌ங்கார‌ங்களு‌ க்கு‌ம் பய‌ன்படு‌ம் ம‌ல்‌லிகை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம்.
சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப்புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாகவெளியேறி விடும்.
புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள் , சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து,காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

 இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டுதினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 16 Apr 2014 - 0:17

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide49
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 2c61ce66

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 800px-Mango_blossoms

மாமரப் பூங்கொத்தில் சுமார் 4000 பூக்கள் இருக்கும். பூங்கொத்தில் பெரும்பகுதி ஆண் பூக்களாகவும் மற்றவை இருபால் பூக்களாகவும் இருக்கும். சாதாரணமாக, நிழலில் வளரும் பூக்கள் இருபால் பூக்களாக இருக்கும். உலர்ந்த அல்லது குளிர் தட்பவெப்பம், மாமரம் பூப்பதை தூண்டுகிறது. மேலும், எதிபான், பொட்டாசியம் நைட்ரேட் அல்லது நாப்தலீன் அசிடிக் ஆசிட் ஆகிய வேதிப்பொருட்களும் பூப்பதை தூண்டப் பயன்படுத்தப்படுகின்றன.

மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. இவற்றுள் இந்திய சிற்றினமே (Mangiferra indica) உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மாம்பழம் உலகெங்கும், குறிப்பாக ஆசியாவில், கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது. பழமாகவும், பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன.

முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன.

மாம்பூ இணராக மலரும். இதற்கு மணம் உண்டு. `கடிகமழ்மா' `கவிழ் இணர் மா' என்று இலக்கியங்கள் குறிக்கின்றன. மாம்பூ எளிதில் மரத்தினின்றும் உதிர்ந்து விழும். அவ்வாறு உதிர்ந்து விழும் காட்சி மழைத்துளி விழுவதைப் போலக் காட்சியளிக்கின்றது புலவர் ஒருவருக்கு.

உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 16 Apr 2014 - 0:24

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide50

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 95925050தில்லைப் பழம்

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 32679370ஆண் தில்லைப் பூ

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 93823042பெண் தில்லைப் பூ
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 95855257
தில்லை மரம்தில்லை மரத்திற்கு Excoecaria agallocha L. என்று புதலியலில் ஒரு பெயர் உண்டு. "அகிலைத் தில்லை" என்று அந்த மரத்திற்கு தமிழ்ப் புதலியற் பெயர் கொடுத்திருக்கிறார்கள். (அகில் மரக் குடும்பத்தைச் சேர்ந்ததால், அந்த அகில் என்ற சொல்லும் உள்ளே வருகிறது. அகில்கட்டை நமக்கு பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து காலங் காலமாய் வந்து கொண்டிருந்தது.) கடற்கரையோரப் பகுதிகளில், சதுப்பு நிலப்பகுதிகளின் ஓரத்தில் தில்லை மரம் வளர்கிறது. நெய்தலும் மருதமும் கலந்த பகுதிகளில்தான் இது காணப்படும்.


தில்லை மரம் கொஞ்சம் அலாதியானது. ஒருபக்கம் அது அச்சம் தரும் மரம்; இன்னொரு பக்கம் நம்மைப் பெரிதும் ஈர்க்கும் தன்மையது. இந்தச் சிறு மரத்தின் எந்தப் பகுதியை ஒடித்தாலும் அலரி (= அரளி) மாதிரிப் பால் தெறிக்கும். அந்தப் பால் நம் உடம்பில் பட்டால் அரிக்கும்; எரியும்; சிவந்து போகும்; கண்ணில் பட்டாலோ, கண்ணெரிச்சலோடு, கொஞ்சம் கொஞ்சமாய் தற்காலமாகவோ, சிலபொழுது முற்றிலுமோ, கண்பார்வை போகவும் செய்யலாம். இதனாலேயே இந்த மரத்தை blinding tree என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.


தில்லை மரம் 6 மீட்டர் உயரம் வளரக்கூடியது நல்ல சூழ்நிலை (அதாவது நீர் ஒழுங்காக ஏறி, வடியும் சூழல்) இருந்தால் 10 மீட்டர் கூட வளருமாம். பொதுவாகத் தில்லை மரம், பசுமை குன்றாத மரம். மரத்தை வெட்டிப் போட்டால், துண்டுகள் நீரில் மிதக்கும். ஒரு கொம்பில் ஏற்படும் இலைகளின் வளர்ச்சி பார்ப்பதற்கு ஒரே ஒழுங்கில் காட்சியளிக்காது மாற்றொழுங்கில் (alternative ஒன்று மாற்றி ஒன்றாய்) காட்சியளிக்கும். இலைகள் நீண்ட கோழிமுட்டை வடிவில் முனையுடன் இருக்கும். இளம் இலைகள் பூஞ்சை (pink) நிறத்திலும், முற்றிய இலைகள் ஆழ்சிவப்பு (deep red) நிறத்திலும் இருக்கும். தில்லம் என்ற சொல் தில்லை மரத்தின் விதையைக் குறிக்கும்.

தில்லை மரம் இந்தக் காலப் பப்பாளியைப் போல் ஆண், பெண் மரம் எனத் தனித் தனியானது. ஆண் பூ தனி, பெண் பூ தனி. பூக்கள் என காணப்படும்.

ஆண் தில்லை மரத்தில் இலையுதிர்த்த வடுக்களின் அருகில் பூங்கதிர்கள் உருவாகும். பூக்கள் நறுமணம் உள்ளவை; மஞ்சள் சாயலோடு கூடிய சிறு பூக்களாக இருக்கும். பெண் பூக்கதிர்கள் ஆண் கதிர்களைக் காட்டிலும் இன்னும் சிறியவை. 1.0 -2.5 செ.மீ. அளவுடையவை. இரண்டு பூக்களுமே டிசம்பர் ஜனவரியில் அதிகமாகப் பூக்கும். அதனையடுத்து ஆகஸ்ட் - அக்டோபர்மாதங்களிலும் சிறிதளவு பூக்கும்.

இந்த மரம் அதிகம் நிறைந்திருந்த காரணத்தால்தான், சிதம்பரத்தைத் 'தில்லை' என்று குறிப்பிட்டார்கள்

இன்றைக்குப் பிச்சாவரத்திற்கு அருகில் கடல் இருந்தாலும், ஒரு காலத்தில் கடலும், கழியும், இன்றைக்குச் சற்று தள்ளி இருக்கும் பெரும்பற்றப் புலியூர் (=சிதம்பரம்) வரை நெருங்கித் தான் இருந்தது என்று புவியியலார் சொல்லுகிறார்கள். [சிதம்பரத்தில் வெள்ளம் வந்தால் ஊரெல்லாம் தத்தளிப்பதும் அதன் தாழ்புவி (low level of ground) நிலையை நமக்கு உணர்த்தும்.] அந்த ஊர் முழுதும் ஒரு காலத்தில் தில்லை வனமாகத் தான் இருந்தது. சோழ நாட்டில் நாலு புலியூர்கள் இருந்தன என்பார்கள். அதில் இது ஒன்று (காவிரிக்கும் வடபால் உள்ளது). இன்னொன்று பெரும்புலியூர் (இன்றைக்குப் பெரம்பலூர் என்றால் தான் பலருக்கும் விளங்கும்.) மீதம் இரண்டும் சட்டென்று எனக்கு நினைவுக்கு வரவில்லை. தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். பெரும்பற்றம் என்ற முன்னொட்டை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். பெரிய பாதம் தான் பெரும் பற்றம் என்று குறிக்கப் பட்டது. பற்றம்>பத்தம்>பாதம் என்று விரியும் சொல்லைப் பார்த்தால், பற்றிக் கொள்ளுவதும் பதிவதும் ஒன்றிற்கொன்று தொடர்புள்ளவை என்று புரியும்.

பெரிய பாதம் கொண்டவரை வ்யாக்ர பாதர் என்று இருபிறப்பிச் சொல்லால் வடமொழியாளர் மொழி பெயர்ப்பார்கள். (வியல்ந்து கிடப்பது என்பது அகண்டு கிடப்பது. வியல்ந்த கோள் வியாழன். வியல் என்ற முன்னொட்டு "பெரும்" என்ற பொருளையும் குறிக்கும். வியக்கிறான் என்றால் வாயை அகலத் திறந்து பெரிதாக விரிக்கிறான் என்று தான் தமிழில் பொருள். வியத்தல்/வியக்குதல் என்பது பொதுவாக வாய்அகலும் செயலைக் குறிக்கும். வழக்கம் போல வடமொழிப் பலுக்கில் ரகரம் நுழைந்து, வியக்கம் வியக்ரம் ஆகும். வியக்க பாதர், வியக்ர பாதர் ஆன கதை அது தான். யாரோ ஒரு முனிவர் சற்றே பெரிய பாதம் கொண்டவர். அந்த முனிவர் தில்லை வனத்தில் இருந்திருக்கிறார். அவருக்கும் ஆடலரசனுக்கும் இடையே ஒரு தொன்மம் இருந்திருக்கிறது. அவர் பெயரால் இது பெரும்பற்றப் புலியூர் அழைக்கப் படுகிறது. இன்னொரு முனிவரையும் இந்த ஊரோடு தொடர்புறுத்துவார்கள். அவர் பெயர் பதஞ்சலி. அவரை நாட்டியத்தோடு தொடர்பு படுத்தும் தொன்மமும் உண்டு. இங்குமே பாதம்>பதம் என்ற சொல் உள்ளே இருப்பதைப் பார்க்கலாம். நம்மூர் ஆட்களை, ஊர்களை, செயல்களைப் புரிந்து கொள்ளத் தமிழ் தான் பயன்படுமே ஒழிய வடமொழி அல்ல. இருந்தாலும் ஒருசிலர் இந்தப் பழக்கத்தை விடாமலே, வடமொழியின் உள்ளே தேடு தேடென்று விதம் விதமாய்த் தேடிக் கோண்டிருப்பார்கள். :

பெரும்பற்றப் புலியூர் இன்றைக்குச் சிதம்பரம் என்று அழைக்கப் படுகிறது. அது உண்மையில் சிற்றம்பலம். அந்தப் பெயரைக் கூப்பிடக் கூப்பிட ஒரு சிலரின் பலுக்கத் திரிவால், அது சித்தம்பரம் ஆயிற்று. பின்னால் சிதம்பரம் என்று திரிந்தது. இதை அறிந்து கொள்ளாமல், சித்தம் + பரம் = சிதம்பரம் என்றெல்லாம் சொல்லப் புகுவதைப் பார்க்கும் போது, பொருந்தக் கூறுவது என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியும். (அந்த அம்பலம் சின்ன அம்பலம்; ஆனால் குறிப்பிடத் தக்க அம்பலம்; அதைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.) சிலருக்குச் சித்தம்பரம் என்று கூறுவது மனத்திற்கு நிறைவாய், உகப்பாய் இருக்கலாம். ஆனால், வரலாறு அப்படி இல்லை என்று மட்டுமே நாம் சொல்ல முடியும். பொதுவாகத் தமிழ் ஊர்களில் பெரும்பாலானவை அப்படிக் கருத்து முதல்வாதத்தில் பெயரிடப் படுவன அல்ல. இயற்கை, குமுகம், மாந்தர் பெயர் என இப்படித்தான் ஊர்ப்பெயர்கள் 100க்கு தொன்னூற்று தொன்பது விழுக்காடு எழுகின்றன.

அன்புடன்,
இராம.கி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 16 Apr 2014 - 0:27

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide51

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide52

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 2271378334_8aaf09e60e

நிலத்தில் வளர்கின்ற மரம். வெண்ணிறத்துடன் இணராக மலரும். அதனால் `வாலினர்ப் பாலை' என நற்றிணை குறிப்பிடுகின்றது. கொடிய வேனிற்~ காலத்தில் எல்லா மரங்களும் கரிந்துபோக இம்மரம் மட்டும் தளிர்த்துப் பூ விடுகிறது. இம்மரத்தின் பெயரால் அது வளரும் நிலமும் பாலை எனப்பட்டது.

இம்மரம் இந்தியா முழுவதும் ஈரப்பசை அதிகமான இடங்களில் காணப்படுகிறது.பாலமரக் கன்று, இலங்கையின் தேசிய மரம்

25மீ. உயரம் வரை வளரக் கூடிய இம்மரம் எப்போதும் பசுமையாக இருக்கும்; கசப்பான பாலைக் கொண்டது. மரப்பட்டை கடினமானது; கருஞ்சாம்பல் நிறம் உடையது. கிளைகள் வட்ட அடுக்காய் இருக்கும். மரத்தின் அடிப்பாகம் முட்டுக் கொடுக்கப் பட்டிருக்கும். இலைகள் 4 - 7 வரை வட்ட அடுக்காகவும், 10-20 செ.மீ. நீளத்தில் தோல் போன்றும் காணப்படும். பூக்கள் சிறியதாக, பசுமை கலந்த வெள்ளை நிறத்தில், நறுமணம் மிகுந்து, பல பூக்களையுடைய கொத்துக்களாய் இருக்கும். பழங்கள் மிகவும் நீளமாகவும் (30-60 செ.மீ) குறுகியும், ஒடுங்கியும் காணப்படும். அவை இணை இணையாகத் தொங்குவதுடன் அடர்த்தியான கொத்துக்களையும் அமைத்துக் கொள்ளூம்


பாலப்பழம் பழுக்கும் பாலமரம் வேறு. இதனை வீடுகளில் வளர்ப்பதில்லை. அது காட்டில் தானாக வளரும் மரங்களாகும். அவற்றில் ஆண்டுக்கு ஒருமுறை பழம் காய்க்கும். அப்பழங்கள் மிகவும் இனிப்பானது.

கருமையான நிறத்தில் சுண்டுவிரல் அளவில் சற்றே குறைந்த பருமனுள்ளதாக, 50 சென்டிமீட்டர் நீளத்தில் நுனியில் மட்டும் இணைந்திருக்கும் இரட்டைக்காய்கள் காய்க்கும் பாலமரம் வேறு. இதற்கும் பாலை நிலத்துக்கும் தொடர்பு உண்டு.


சாத்திம் (Chhatim) என்பது இம்மரத்தின் உலர்ந்த பட்டையாகும். இம்மருந்து நாட்பட்ட வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றிற்கு உடனடியாகக் குணமளிக்காக் கூடியது. இது மற்ற மருந்துகளைப் போலன்றி மலேரியா காய்ச்சலைப் படிப்படியாக, வியர்வையோ, சோர்வோ ஏற்படாமல் குறைக்கிறது. இம்மருந்து தோல் வியாதிக்கும் ஏற்றது.

இம்மருந்து இயங்கு நரம்புகளைத் தாக்கி வாதத்தையும், பின்பு இரத்தக் கொதிப்பையும் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. சில பரிசோதனைகள் இம்மருந்தின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலியக்க வினைகளையும் மறுத்துப் பேசுகின்றன


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 16 Apr 2014 - 0:28

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide531
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide541
முல்லை, காட்டுப் புறங்களில் வளரும் கொடி. கார்காலத்தில் மாலை நேரத்தில் மலரும். -
காட்டுப் புறங்களில் கொன்றை, காயா, தளவம் இவற்றுடன் கலந்து காணப்படும். மற்றக் காலங்களில் வெறும் புதல்போன்று காட்சியளிக்கும். முல்லைக்கொடி, கார்காலத்தில் தளிர்த்து, ஏராளமான அரும்புகளை விடும். இதன் முகை வெண்மையாக நீண்டிருக்கும். காட்டுப் பூனையின் பற்களைப் போன்று காட்டில் முல்லை அரும்புகள் அரும்பிய காட்சி தோன்றும். செந்நிலப் புறவுகளில் வளரும் இக்கொடியின் மலர்கள் மிகுந்த மணமுடையன. மலருக்குரிய பல பெயர்களில், முல்லை மலரைக் குறிப்பிடும் போது `முல்லை வீ' எனச் சங்க இலக்கியங்களுள் குறிக்கக் காணலாம்.

முல்லையின் வாசத்துக்கு எல்லையே இல்லை.

முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

முல்லைப்பூ வகை :

குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் முல்லை (நன்முல்லை), கல் இவர் முல்லை, குல்லை, தளவம் , நந்தி ,பிடவம் , மௌவல் ஆகிய மலர் வகைகள் இடம்பெற்றுள்ளன.

முல்லை :

முல்லை என்னும் சொல்லே காட்டில் மலரும் வனமுல்லையைத்தான் குறிக்கும். பாரி வள்ளல் தன் தேரை வழங்கியது இந்த முல்லைக்குத்தான். இதற்குக் காய்கள் உண்டு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 16 Apr 2014 - 0:40

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 220pxflowermullaiiமுல்லை - நன்முல்லை
அள்ளூர் நன்முல்லையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இக்காலத்தில் மகளிர் தலையில் சூடிக்கொள்ளும் முல்லை இந்த நன்முல்லை ஆகும். இதனைச் சூடிக்கொண்ட புலவர் நன்முல்லையார். இவரது பாடல்களில் 11 சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 220pxflowernithiyamalliமுல்லை நாள்முல்லை என்னும் நித்தியமுல்லை :இதற்குப் பருவகாலம் இல்லை. நாள்தோறும் பூக்கும்.
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 220pxflowermullaithalavமுல்லை தளவம் என்னும் செம்முல்லை சாதிமல்லி :இதன் புறவிதழின் வெளிப்பக்கம் சிவப்பாக இருக்கும்
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Mogra
முல்லை அடுக்குமல்லி :இந்த மல்லிகையில் ஒரே பூவில் (தாமரை போல்) பல அடுக்குகள் இருக்கும்.
 
குல்லை என்னும் குட்டிப்பிலாத்தி :
கார் காலத்தில் முதல் மழை பெய்த நாளில் அரும்பு விட்டு புதர் புதராகப் பூத்துக் குலுங்கும்.

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 70358132

 பிடவம் பூத்துக் குலுங்கும் ஊர் பிடவூர். பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் மாண்டபோது அவ்வூரில் பூத்திருந்த பூக்களை யாரும் சூடிக்கொள்ளவில்லை. துக்கம் கொண்டு ஆடும் நாளில் முல்லையே! ஏன் பூக்கிறாய் எனப் புலவர் பாடுகிறார்.
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 220pxflowertreemalli மரமல்லி :நள்ளிருளில் பூத்து நாறும்(மணக்கும்). இதனை மௌவல் என்பர்.
 
 
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 220pxflowernanthiநள்ளிருள்-நாறி ( நந்தி ) :
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide96

நந்தியாவிட்டை என இக்காலத்தில் வழங்கப்படும் நந்திப் பூவில் இரண்டு வகை உண்டு. இதில் ஒரே ஒரு அடுக்கு கொண்டது ஒருவகை. ஒன்றுக்குள் ஒன்றாகப் பல அடுக்குகள் கொண்டது அடுக்கு நந்தியாவிட்டை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 16 Apr 2014 - 0:42

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide56
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Cannabis_sativa_gross
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 100-CFA-frank-CANNABIS-SATIVA

கஞ்சா செடி (Cannabis) ( /ˈkænəbɪs/; Cán-na-bis) பூக்கும் தாவரவர்க்கத்தை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது மூன்று பிரதான இனங்களை உள்ளடக்கும் அவை, கனாபிசு சற்றைவா (Cannabis sativa),கனாபிசு இன்டிகா(Cannabis indica),மற்றும் கனாபிசு ருடேராலிசு(Cannabis ruderalis). இந்த மூன்று வர்க்கங்களும் மத்திய ஆசியாவிலிருந்து தெற்காசியா வரையான நாடுகளை சுதேச பிரதேசங்களாகக் கொண்டவை.

கஞ்சா ஈரிலில்லமுள்ள, ஓராண்டுக்குரிய பூக்கும் தாவரமாகும். இது ரம்பப்பல் வடிவுடனான கைவடிவக் கூட்டிலைகள் கொண்டது. .முதலாவது இலைச்சோடி தனிச் சிற்றிலைகளைக் கொண்டமைய சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து பதிமூன்று சிற்றிலைவரை அதிகரித்துச் செல்லும். பொதுவாக 7-9 இலைகள் காணப்படும். இனங்களையும் வாழும் சூழலையும் பொறுத்து இவ்வெண்ணிக்கை மாறுபடும். பூக்கும் நிலையிலுள்ள தாவரமொன்றில் மீண்டும் சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து மீண்டும் தனிச்சிற்றிலையில் முடியும்.

இவற்றின் இலைகள் கொண்டுள்ள தனித்துவமான வலையுரு நரம்பமைப்பு கஞ்சாத் தாவரத்தை புதியவர்களும் இலகுவாக இனங்காண உதவுகின்றது. இதன் ஒவ்வொரு பிளவுபட்ட இலையும் இருப்பது போல அதன் ஒவ்வொருபிளவின் எல்லைவரைச் செல்லும் தனித்தனி நடுநரம்பைக் கொண்டிருக்கும்.


கஞ்சா நீண்ட காலமாக நார்ப் பொருள் உற்பத்தி, எண்ணெய் வித்து, மற்றும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கைத்தொழில் ரீதியில் நார் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் சில வர்க்கங்கள் போதையூட்டும் பொருட்களாகவும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றது. இதில் காணப்படும் வேதிப்பொருளான THC (Δ9- tetrahydrocannabinol), இவ்வியல்புக்குக் காரணமாகும். சிவமூலிகை என அழைக்கப்படும் கஞ்சா பக்தி கலந்த போதையை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 23 Apr 2014 - 0:39

 குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide57
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 70358132
பிடவம்  செடி வகை சார்ந்தது.. இது சேய்மையிலும் மணம் பரப்பும் மலர்களைக் கொண்டது.கார்கால முதல் மழையின்போது ‘குப்’ என்று ஒரே நாளில் காடெல்லாம் பூத்துக் குலுங்கும். மறுநாளே அத்தனையும் கொட்டிப்போகும். இப்படி ஒரு வார காலம் பூக்கும். இவ்வளவுதான் இதன் வாழ்வு. இதனை இக்காலத்தில் குட்டிப்பிலாத்தி என்கின்றனர்.

இலை இல்லாமல் பூத்துக் குலுங்கும். இலையில பிடவம் ஈர்மலர் அரும்பு,செடியில் நீண்ட முட்கள் இருக்கும். முட்புறப் பிடவம் செடி முடம்பட்ட கால், கை போல இருக்கும். தொகுமுகை விழிந்த முடக்கால் பிடவு
செடி கருமையாகவும் இருக்கும். சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்,காம்பு நீளமாக இருக்கும். மொட்டுகள் கூர்மையாக இருக்கும். வெள்ளை வெளேர் எனப் பூத்துக் குலுங்கும். குளுமையும் நறுமணமும் கொண்டது. குலை குலையாகப் பூக்கும். பூவின் முதுகில் சிவந்த கோடுகள் இருக்கும்.

முல்லை நிலத்தில்,மலைக்காட்டில் பூக்கும். பூக்கும். மணல் வெளியிலும் பூக்கும். வழியெங்கும் பூத்துக் குலுங்கும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 23 Apr 2014 - 0:43

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Slide581
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 3 Koeh-003கிராமங்களில் கருங்காலி, செங்கருங்காலி, வெள்ளைக் கருங்காலி என்ற மூன்று வகையான மரங்கள் தானாகவே வளர்கின்றன. பார்ப்பதற்கு கருவேலன் மரத்தைப் போல் தோற்றம் அளிக்கும். சீப்பு வடிவில் மெல்லிய இலைகள், முட்கள் நிறைந்த மெல்லிய கிளைகளில் பூக்கள், அத்துடன் தண்டில் கருவேலன் காயைப் போல், சப்பையான காய்கள் தோன்றும். ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் மஞ்சள் நிறப் பூக்கள் பூக்கும்.

நமது மரங்களில் ஒன்று கருங்காலி. அதனை ஈட்டி என்றும் தோதகத்தி என்றும் சொல்வார்கள். தேக்கை விட விலை உயர்ந்தது. கருங்காலி மரம். வேறு எந்த வகையையும் விட அதிகம் பயன் படுவதும் இந்த மரம் தான். ஒரு மரத்தின் வகையே மொத்த மரங்களை வீழ்த்துவதற்கு துணை புரிவதால் இந்த அவப்பெயர் கருங்காலியை பற்றிக்கொண்டது

பொதுவாக கருங்காலி மரம் இந்தியா முழுமைக்கும், மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது

மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை. எதிர்விளைவு களை ஏற்படுத் தாதவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று

சரி, துரோகிக்குக் கருங்காலி என்று ஏன் பெயர் வந்தது?
கோடரி போன்ற மரம் வெட்டுகிற ஆயுதங்களுக்கு எல்லாம் மிக சிறந்த முறையில் கைப்பிடி செய்ய உகந்த மரம் தான். தன் இனத்தை தானே அழிப்பதால் தான் துரோகிய கருங்காலி என்பார்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by ராகவா on Wed 23 Apr 2014 - 3:53

வாவ்..அருமையான பதிவு...
தொடருங்கள் அக்கா,..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 23 Apr 2014 - 9:03

நன்றி அச்சலா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by நண்பன் on Wed 23 Apr 2014 - 16:47

அறிந்திடாத அரிய பல தகவல்கள் இவைகள்.. அனைத்தையும் என்னால் படிக்க முடியா விட்டாலும் எனது சந்ததியினரை கண்டிப்பாக படிக்க தெரிந்து கொள்ள வைப்பேன்

குறிஞ்சிப்பாட்டைத் தேடுவோருக்கு தேன் போல் நிறைந்துள்ளது சேனையில் அழியாப் பொக்கிசம் இவைகள் என்றும் உங்கள் பெயர் சொல்லும்
நிஷா மேடம் உள்ளம் நிறைந்த நன்றிகள் தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by றஸ்ஸாக் on Wed 23 Apr 2014 - 23:36

ஏதோ சொல்றீங்க என்னண்டுதான் புரியல உறவே ஒரு சிலவற்றைத் தவிர புதுமையாய் இருக்கிறது அதுவும் இன்றுதான் .....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 24 Apr 2014 - 0:04

றஸ்ஸாக் பாலமுனை wrote:ஏதோ சொல்றீங்க என்னண்டுதான் புரியல உறவே ஒரு சிலவற்றைத் தவிர புதுமையாய் இருக்கிறது அதுவும் இன்றுதான் .....

என்ன புதுமை.. எது புரியவில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum