சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Regist11

Latest topics
» விரும்பி போனால் விலகிப் போகும்...!!
by rammalar Yesterday at 8:06

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by rammalar Yesterday at 7:46

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்க
by rammalar Yesterday at 7:45

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by rammalar Yesterday at 7:44

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by rammalar Yesterday at 7:43

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 7:41

» மனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...
by சே.குமார் Wed 22 May 2019 - 8:06

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...!!
by rammalar Sat 18 May 2019 - 13:06

» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...
by rammalar Sat 18 May 2019 - 11:07

» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
by rammalar Sat 18 May 2019 - 11:05

» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0
by rammalar Sat 18 May 2019 - 11:03

» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது
by rammalar Sat 18 May 2019 - 10:55

» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்?-எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
by rammalar Sat 18 May 2019 - 10:53

» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
by rammalar Sat 18 May 2019 - 10:51

» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா
by rammalar Sat 18 May 2019 - 10:50

» லட்சுமியின் என்டிஆர்’-திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:49

» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்!
by rammalar Sat 18 May 2019 - 10:48

» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா!
by rammalar Sat 18 May 2019 - 10:46

» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
by rammalar Sat 18 May 2019 - 10:45

» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:44

» கடல போட பொண்ணு வேணும்
by rammalar Sat 18 May 2019 - 10:41

» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by rammalar Wed 15 May 2019 - 7:01

» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
by rammalar Mon 13 May 2019 - 5:55

» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’
by rammalar Mon 13 May 2019 - 5:39

» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
by rammalar Mon 13 May 2019 - 5:32

» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
by rammalar Mon 13 May 2019 - 5:27

» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்
by rammalar Mon 13 May 2019 - 5:24

» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
by rammalar Mon 13 May 2019 - 5:21

» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா
by rammalar Mon 13 May 2019 - 5:18

» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
by rammalar Sat 11 May 2019 - 21:35

» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு
by rammalar Sat 11 May 2019 - 21:29

» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா?
by rammalar Sat 11 May 2019 - 21:28

» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:45

» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:43

» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம்
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:17

.
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Khan11
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Www10

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

Sticky குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Sat 22 Mar 2014 - 23:08

First topic message reminder :

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள் எனும் தலைப்பில் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பித்து  பூக்களின் படங்களில் பெயர்கள் மட்டுமல்லாமல் அதன் தாவரவியல் பெயர், மருத்துவகுணங்கள், என அறிவியல் ரிதியாகவும்  தொகுக்கப்பட்டது.

இதுவரை தொகுக்கப்பட்ட பூக்களின் பட்டியல்  
பெயர்களின் மேல் சுட்டவும்.

 1. செங்காந்தள்
 2. ஆம்பல்
 3. அனிச்சம்
 4. குவளை
 5. குறிஞ்சி
 6. வெட்சி
 7. செங்கொடுவேரி
 8. தேமாம்பூ
 9. மணிச்சிகை
 10. உந்தூழ்
 11. கூவிளம் பூ
 12. எறுழம்
 13. சுள்ளி
 14. கூவிரம்
 15. வடவனம்
 16. வாகை
 17. குடசம்
 18. எருவை
 19. செருவிளை
 20. கருவிளம்
 21. பயினி
 22. வானி
 23. குரவம்
 24. பசும்பிடி
 25. வகுளம்
 26. காயா
 27. ஆவிரை
 28. வேரல்
 29. சூரல்
 30. சிறுபூளை
 31. குறு்நறுங்கண்ணி
 32. குருகிலை
 33. மருதம்
 34. கோங்கம
 35. போங்கம்
 36. திலகம்
 37. பாதிரி
 38. செருந்தி
 39. அதிரல்
 40. சணபகம்
 41. கரந்தை
 42. குளவி
 43. மா
 44. தில்லை
 45. பாலை
 46. முல்லை
 47. குல்லை
 48. பிடவம்
 49. செங்கருங்காலி
 50. வாழை
 51. வள்ளி
 52. நெய்தல்
 53. தாழை
 54. தளவம்
 55. தாமரை
 56. ஞாழல்
 57. மௌவல்
 58. கொகுடி
 59. சேடல்
 60. செம்மல்
 61. சிறுசெங்குரலி
 62. கோடல்
 63. கைதை
 64. வழை
 65. காஞ்சி
 66. மணிக்குலை
 67. பாங்கர்
 68. மராஅம்
 69. தணக்கம்
 70. ஈங்கை
 71. இலவம்
 72. கொன்றை
 73. அடும்பு
 74. ஆத்தி
 75. அவரை
 76. பகன்றை
 77. பலாசம்
 78. பிண்டி
 79. வஞ்சி
 80. பித்திகம்
 81. சிந்துவாரம்
 82. தும்பை
 83. துழாய்
 84. தோண்றி
 85. நந்தி
 86. நறவம்
 87. புன்னாகம்
 88. பாரம்
 89. பீரம்
 90. குருக்கத்திப்பூ
 91. ஆரம்
 92. காழ்வை
 93. புன்னை
 94. நரந்தம் 
 95. நாகப்பூ
 96. இருவாட்சி
 97. குருந்தம் 
 98. வேங்கை
 99. புழகு 1. மல்லிகையின் வெவ்வேறு இனங்கள
 2. விதைகளுக்கிடையிலான மாறுபாடுகள்
 3. குறுநறுங்கண்ணி போங்கம் திலகம் விதைகளின் வித்தியாசங்கள்!
 4. சங்ககால மலர்களின் பட்டியல் 

மலர்களில் கூறப்படும் மருத்துவக்குறிப்புக்களை  தகுந்த ஆலோசனையின்றி முயற்சித்து பார்க்க வேண்டாம்!

இத்தொகுப்பை நான் முழுமைப்படுத்த உதவிய விக்கிமீடியா, கற்க நிற்க [*படங்கள் ] மற்றும் அனைத்து இணைய தளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

Last edited by Nisha on Tue 18 Aug 2015 - 23:13; edited 27 times in total (Reason for editing : முதல் பதிவில் லிங்க இணைப்புக்காக)
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 29 May 2014 - 8:51

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide70

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Jasmine20Grandiflorum20Absolute

சாதி மல்லிகை (Jasminum grandiflorum ) - ஸ்பானிஷ் ஜாஸ்மின், ராயல் ஜாஸ்மின், காடலோனியான் ஜாஸ்மின் என்றெல்லாம் ஆங்கிலத்திலும் சமேலி என்று இந்தியிலும் அழைக்கப்படும் மலர் இது,

தெற்காசியாவில் காணப்படும் செடி வகையாகும். இந்தியாவில் இதன் இலைகள் ஆயுர்வேத மருத்துவத்திலும், இதன் மலர்கள் பெண்களின் சிகை அலங்காரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில், இது சால்ட் ரேஞ் மற்றும் ராவல்பிண்டி மாவட்டத்திலுள்ள காடுகளில், கடல்மட்டத்திலிருந்து 500-1500 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. இது சில நேரங்களில், மல்லிகையின் (Jasminum officinale ) ஒரு வகையாகவே கருதப்படுகிறது.

இது படர்ந்து 2–4 மீட்டர் உயரம் வளரக்கூடிய இலையுதிர் புதர்ச் செடியாகும். இதன் இலைகள், எதிர் இலையடுக்கத்துடன், 5–12 செ.மீ. நீளத்துடன், காது (அல்லது இறகு) வடிவமுள்ள 5–11 குற்றிலைகளுடன் காணப்படும்.

இதன் மலர்கள், திறந்த நுனிவளராப்பூந்துணர்களாக, 13–25 மீ.மீ. நீளம் கொண்ட தண்டுடன் வெண்ணிறம் கொண்ட அல்லிவட்டத்துடன் (இதழ்கள்) 13–22 மீ.மீ. நீளமுள்ள ஐந்து இதழ்களுடன் பூக்கின்றன.இவற்றின் மணம் தனித்தன்மையுடனும், இனிமையாகவும் இருக்கும்.

இது மிதவெப்ப மண்டலங்களிலும், வெப்ப மண்டலங்களைச் சார்ந்த பகுதிகளிலும் அழகுச் செடியாக வளர்க்கப்படுகின்றது.

கரைத்துப்பிரித்தல் (கரைப்பான் வழிச் சாறு இறக்கல்) முறைப்படி, இவற்றின் சாறு எடுக்கப்பட்டு, ஜாஸ்மின் கான்கிரீட்டுகளாகவும், ஜாஸ்மின் ஒலியோரேசின்களாகவும் மாற்றப்படுகின்றன. இவை இரண்டும் வாசனைத்திரவியத் தொழிலில் உபயோகப்படுகின்றன.

செம்மல் என்னும் மலரை ஒரு தனி மலராகச் சங்கநூல் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது.உதிர்ந்த பழம்பூக்களைச் செம்மல் எனக் குறிப்பிடும் சொல்லாட்சியும் உள்ளது.

செந்நிறத்தில் காடுமேடுகளில் பூத்துக் கிடக்கும் மலரே செம்மல் எனல் பொருத்தமானது. குறிஞ்சிநிலக் கோதையர் இந்தச் செம்மல் மலரையே குவித்து விளையாடினர். அவர்கள் குவித்து விளையாடிய 99 வகையான மலர்களில் செம்மல் என்பது ஒன்று.

இதுவும் செம்மல் என விக்கிமீடியா சொல்கிறது.
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 800pxflowersemmal

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 6 Jun 2014 - 22:34

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide71குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Trapa_natans_flowerகுறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Water_chestnutகுறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 373px-விதைகளோடு கூடிய நீர் வாழ் தாவரம் இது. குட்டை செடி வகையை சார்ந்தது. 12 முதல் 15 அடி (3.6 முதல் 4.5 மீ) நீளம் வரை வளரகூடிய தாக நீரினுள் அமிழ்த்தப்ட்ட நீண்ட தண்டுகள் மேல் விசிறி-வடிவ இலைகளோடு நீரில் மிதந்து கொண்டிருக்கும் . ஜீன் மாதத்தில் துளிர்த்து ஜூலை முதல் ஆகஸ்ட் வரை வெளிறிய‌ வெள்ளை நிற பூக்கள் பூக்கிறது.

இது. 3,000 ஆண்டுகளாக சீனா மற்றும் இந்தியா பயிரிடப்படும் தாவர இனமாகும். இந்தியாவில் singhara அல்லது paniphal (கிழக்கு இந்தியா) என்று அழைக்கப்படுகிறது ஏரிகளின் பயிரிடப்படுகிறது. தானிய பயிர் தோல்விகாலத்தில் இத்தாவரத்தின் பழங்கள் உலர்த்தப்ட்டு வேகவைத்த மாற்றுதானியமாக சாப்பிடுவதற்கும் பயன் பட்டது.

தாயாந்து, தாய்வான், வடசீனா, இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் பயிரிடப்படுகின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 6 Jun 2014 - 22:35

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide72

கோடல் என்பது வெண்காந்தள் மலர்.

கோடல் என்றும் தோன்றி என்றும் கூறப்பெறும் காந்தள்மலர் மலைச்சாரலில் வளரும். இதன் மலர் குலைகுலையாகப் பூத்திருக்கும். இதற்கு நல்ல மணம் உண்டு.கொம்பு கோடு இல்லாத செடியைக் (கோடு+அல்) கோடல் என்று குறிப்பிட்டனர் எனத் தெரிகிறது. கோடல் என்பது வளையலுக்கும் பெயர். வளையல் போன்று இருப்பதால் `கோடல்' என்ற காரணப் பெயர் வந்திருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.

குறிஞ்சிப்பாட்டு மலர்களின் பெயரை அடுக்கிக் காட்டும்போது ஒண்செங்காந்தள் என்று செங்காந்தள் மலரையும், கோடல் என்று வெண்காந்தள் மலரையும் குறிப்பிடுகிறது.

காந்தள் மலருக்கு ஆறு இதழ்கள் மட்டுமே உண்டு. முருகப்பெருமானுக்கு ஆறு தலை எனக் கற்பனை செய்கின்றனர். காந்தள் மலருக்குக் கார்த்திகை மலர் என்னும் பெயர் உண்டு. முருகனைக் கார்த்திகேயன் என்பார்கள். இவை எல்லாமே ஒப்புமைக் கற்பனைகள்.

பெண்ணின் கையிலிருந்த வளையல்கள் கோடல் மலர் போலக் கழன்று வீழ்ந்தன எனப் பாடல்கள் உவமை காட்டுகின்றன.

சங்கு அடுத்துச் செய்த வளையல்கள் வெள்ளைநிறம் கொண்டவை. எனவே வெண்காந்தள் மலராகிய கோடல் மலரே இங்கு உவமையாக்கப்பட்டுள்ளன

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 6 Jun 2014 - 22:36

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide73குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 3228941960_f1e30ff92f_o

கைதை என்னும் மலர் தாழம்பூவின் இனம்.
பூவே முள்ளாகிக் கையில் தைப்பதால் ‘கைதை’ என இதற்குப் பெயரிட்டனர்.
கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும்.
கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ.
கைதை என்பது நிழல் தரும் மரம்.

அடர் பச்சையும் வெளிர் பச்சையும் சமவிகிதத்தில் கலந்த நிறத்தில் இலைகள், மொட்டு விடுகையிலேஆழ்ந்த மஞ்சள் அதன் நிறம் மலர்கையிலே வெளிறிவிடும்.

இந்தியா, இலங்கை சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா,மலேசியா ஆகிய நாடுகளில் இவ்வகைதாவரம் வளர்கிரது.

தாழை மலரே தாழம்பூ எனப்படுகிறது. நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.

சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தாழை, கைதை ஆகிய இரு மலர்களும் இடம்பெற்றுள்ளன

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 6 Jun 2014 - 22:38

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide74

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 3359816745_93480fa390_z

வழை என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும். 'கொங்கு முதிர் நறு வழை' எனக் குறிஞ்சிப்பாட்டு விளக்கம் தருகிறது.

எல்லா மலர்களும், இலைகளுக்கு நடுவே கிளை முடியுமிடத்தில் மலரும்,

ஆனால் இந்த மலர்கள், மரத்திலே மலரும்.அடர் பச்சை வண்ண இலைகள்,தூய வெள்ளையில் உள்ளம் கொள்ளை கொள்ளும் சிறு இதழ்கள், அதன் நடுவில் மகரந்தங்கள் முதிர்ந்து கிடக்கும் , மலர் தாங்கும் சிறு காம்புடன் அடர்த்தியாய் வளரும் மர வகை மணம் நிறைந்த மலர்கள், அவை வாடினாலும் மணம் வீசும்.வாசனைத் திரவியங்களின் தயாரிப்பில் இம்மலர் உபயோகப் படுத்தப் படுகிறது..

சில மருத்துவ குணங்களும் கொண்ட மலர் இது.

வழைமரம் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்

•ஆய் அண்டிரனின் குடிப்பூ வழை.

•குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று வழை.

•வையை ஆறு அடித்துக்கொண்டுவந்த மலர்களில் ஒன்று.

•நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.

•கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும்.

•குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து.

•தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்த்து.

•யானை விரும்பும் தழைமரம்.

•மூங்கில் நெல் அரிசி போட்டுக் குறமகள் வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள்.

•வழை வளர்ந்த காடு நீர்வளம் மிக்கது ஆகையால் பாலைநிலமாக மாறுவதில்லை.

•வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Fri 6 Jun 2014 - 22:41

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide75குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 False20White20Teakகுறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 False20White20Teak-2

ஆற்றுப்பூவரசு என அழைக்கபடும் காஞ்சிமரம் அழகு மிக்கது. மணல் மலிந்த ஆற்றுத் துறைகளில் 10. 20 மீற்றர்கள் வரை உயரமாக் வளர்ந்து 3. 7 செ. மீற்றர்கள் நீளமான இலைகளோடு மிகச்சிறிய பச்சை நிற பூக்கள் பூக்கும் பெரிய இலையுதிர் மரம் இது.சிடம்பர் முதல் மார்ச் வரை பூக்கும் மலரினம் .

தண்ணீர் நிறைந்த பொய்கை, ஆறு, மாடு, இவைகளின் கரைகளில் இது வளர்ந்து நிற்கும். இம்மலரிலிருந்து நறுமணம் கமழும்.

காஞ்சி இளவேனிற் காலத்தில் மலரும். மஞ்சள் நிற மலரையுடைய இதன் மொட்டுக்க‌ள் கொத்தாகப் பயறுபோற் காட்சியளிக்கும். -இணராகப் பூத்து நிற்கும் காஞ்சிப் பூக்கள் கோதை போன்று காட்சிதரும்.

இம் மலரில் தாதும், தேனும் நிறைந்திருக்கும். ஆகவே, இம்மலரைச் சுற்றி மிஞிறுகள் எப்போதும் ஆர்த்துக் கொண்டேயிருக்கும். இதன் தாதினைக் குயில்களும் அளைந்து கொண்டிருக்கும்.

ஆற்றோர ஊர்கள் வெள்ளத்தால் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றும் மரங்களாய்க் காஞ்சி மரங்கள் இருந்தன.
காஞ்சிப் பூக்கள் அதன் நனை பருவத்தில் மீன் போலத் தோற்றமளிக்கும் பூக்கள் மரத்தில் இருக்கும்போதே அதன் தாதுகள் கொட்டும்.குறைந்த உயரத்திலேயே கிளைகள் விடும் காஞ்சிமரத்தின் மீது பசுமையான இலைகளை உடைய குருகு என்னும் கொடி குறுங்கால் காஞ்சி மரத்தில் ஏறிப் படர்ந்து பூத்துக் கிடக்கும்.காஞ்சி இலைகளை ஆயர் தம் ஆடுமாடுகளுக்குத் தீனியாக அறுத்துப் போடுவர்.காஞ்சி தழைக்காக வெட்டப்படும்.மணல் மலிந்த ஆற்றுத் துறைகளில் மருதும் காஞ்சியும் நெருங்கி வளரும்.

இது மருத நிலத்தில் வளருகின்ற மரம். பரந்து நிழல்தரும் மரமாகையால் உழவர்கள் இதனடியில் நெல்லின் குப்பையைக் குவித்து வைப்பர்.

காஞ்சிப்பூவின் மணததை வதுவை நாற்றம் என்றனர்

மயில்மணிச்சிரல் என்னும் மீன்கொத்தி குயில் முதலான பறவைகள் காஞ்சி காஞ்சி மரத்தில் இருப்பிடம் கொள்வதை விரும்பும்.அமரும் இருக்கைகள் காஞ்சித் தழையில் செய்யப்படுவது உண்டு.
காஞ்சித் தளிர்களை ஆரமாகக் கட்டி அணிந்துகொள்வர்

ச‌ங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் காஞ்சியும் ஒன்று.
மகிழ்வு காஞ்சி மரத்தடியில் அதன் உதிர்-பூ எருவின் மேல் மகளிர் குரவை ஆடுவர்.
மகளிர் வள்ளைப் பாட்டில் ஊர்வளம் பாடி காஞ்சி நிழலில் நெல் குற்றுவர்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 11 Jun 2014 - 10:07

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide76-1

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Blue_water_lily

கருநீலமுடைய நெய்தல் பெரும்பான்மையும் கழிகளிலேயே காணப்படும். ஆனால், கழனி, கயங்கள் இவைகளிலும் ஆங்காங்கு காணப்படும். `மணிப்பூ நெய்தல் என்று குறிப்பர். நலம் பெற்ற அழகிய குளிர்ந்த கண்ணிற்கு நெய்தல் மலரை உவமையாக்கி மகிழ்வர் புலவர்.

மாலை நேரத்தில் இம்மலர் கூம்பும். இது மிகுதியான மலர்ந்திருக்கும் காட்சி, நீலமணி நிறைந்த பொதியை அவிழ்த்து விட்டாற் போலிருக்கும்.நெய்தல் குலையாக மலர்ந்து மணம் வீசும். `மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்' என்று குறிஞ்சிப் பாட்டு வர்ணிக்கின்றது.

நெய்தல் உட்துளையை உடைய மலர் என்று கூறுவர்.நெய்தலின் காம்பு திரட்சியுடையது. ஆதலின் அதனைப் `பாசடை நிவந்த கணைக்கால்' நெய்தல் என்றனர். சேறு நிறைந்த செழிப்பான இடங்களில் நெய்தல் இடையறாது பூக்கும் தன்மை வாய்ந்தது. நறு மணமும், தேனும் நிறைந்தது. கரும்பைவிட இனிப்புடையதான நெய்தல் மலரை எருமைகள் விரும்பியுண்கின்றன என்பதைப் பதிற்றுப்பத்தால் அறி௟லாம்.

நெய்தலை நீல மலர் என்று பின்னத்தூரார் கூறுவர். நெய்தலும் நீலமலரும் நிறத்தால் ஒக்குமாயினும், நீலத்தின் இதழ் முழுவதும் நீலநிறம் கொண்டிருப்பதே இவற்றிடை வேறுபாடு. அன்றியும், நீலம் காலையில் மலரும்; நெய்தல் வைகறையில் மலரும். மேலும் பல்லிதழ் நெய்தலோடு நீலம் `நிகர்க்கும்' என்ற ஐங்குறுநூற்று அடிகள், நெய்தல் வேறு, நீலம் வேறு என்பதனைச் சுட்டு~ கின்றன. நெய்தற் பூவின் இதழ் வேல்வடிவில் இருக்கும். சங்க இலக்கியத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட மலர்களுள் நெய்தல் மலரும் ஒன்று

நெய்தல் மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர்.

ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை.

நெய்தல் கண்ணுக்கு உவமையாகக் காட்டப்படும்,வைகறையில் மலரும். பூ.நறுமணம் கொண்டது. செருந்தியொடு சேர்ந்து பூக்கும்பூ.

குறிஞ்சிப்பாட்டு நன்னீர் மலர்,உவர்நீர் மலரென இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது.

நன்னீர் மலரெனபடுவது சுனையிலும், நெல்வயலிலும்,குளங்களிலும் பூக்கும்.

உவர் நீர் மலரெனபடுவது உப்பங்கழிகளில் பூக்கும்.

அஃதே நீள் நறு நெய்தல். இதன் காம்பு நீண்டது. அலங்கும் இதழ்களைக் கொண்டது.புல்லிய இதழ்களைக் கொண்டது. மணிக்குலைக் கள் கமழ் நெய்தல். இது குறுகிய காம்பினைக் கொண்டது.

நெய்தல் பூத்திருக்கும் பகுதியை ‘நெய்தல் படப்பை’ என்பர்.
கண்ணியாகக் கட்டித் தலையிலும் சூடிக்கொள்வர். தொடையாகக் கட்டி மார்பில் அணிந்துகொள்வர்.
நெய்தல் பூவை தெய்வப்பாவைக்குச் சூட்டும் பழக்கம் இல்லை.

சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் ‘நெய்தலங்கானல் நெடியோய்!’ என விளிக்கிறார். இதனால் நெய்தலங்கானல் என்பது சோழநாட்டின் பகுதியாக விளங்கிய பெருநிலப் பகுதி எனத் தெரிகிறது

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 11 Jun 2014 - 10:10

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide77

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Toothbrushfruits

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 410px-
உகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்)என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்படும் ஒரு செடி.

முல்லைப்பூவைப் போலத் தலையில் சூடிக்கொள்வர்.ஓமை, உகாய், உவா என வெவ்வேறு பெயர்களாலும் அழைக்கபடுகிறது.மிகச் சிறிய வெள்ளை மலர்கள் அதனூடே அதனினும் சிறிய பச்சை மொட்டுகள், வெளிர் சிகப்பில் கனிகள் மலரை விட கனிகள் அழகாய் இருக்கும்.பட்டுப் புழு வளர்ப்பில் உதவும் மரம் இது

உகாய் மரத்தின் காய் நெல்லைப் போல் நெல்லின் அளவினதாய் இருக்கும். அதன் நெற்று ஈரம் பட்டவுடன் வெடித்துச் சிதறும். காயிலிருந்து வெடித்து உதிரும் விதை மிளகைப்போல் காரம் உடையது. பறவைகள் உகாய் விதைகளை மேயும்.இது மழையின் ஈர மண்ணில் காலூன்ற ஏந்தாய் அமையும். நறுமணம்மிக்க இந்த மரத்தின் மலர்கள் மலரும் காலம் ஜூன் மாதம் ஆகும்.

மருத்துவப்பயன்கள்
உகாய் மரம் சிறுநீரகக் கல்லுக்கு எதிரான தன்மையைக் கொண்டது. முகம்மது நபியவர்கள் இதன் குச்சிகளையே பற்தூரிகையாகப் பயன்படுத்தியுள்ளார்கள். முஸ்லிம்களிற் பெரும்பாலானோர் இதனை இன்றளவிலும் பின்பற்றுகின்றனர். பல நூற்றாண்டுகளாகப் பற்தூரிகையாகப் பயன்படுத்தப்படும் இதனை உலக சுகாதார நிறுவனம் வாய்ச் சுகத்துக்கான சிறந்த பொருளாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறது. இதில் ஏராளமான மருந்துப் பொருட்கள் காணப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன

பாங்கர் மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்

குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று பாங்கர் மலர்

திருப்பரங்குன்றத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று.
சூடும் பூக்களில் ஒன்று.

பாட்டங்கால் எனப்பட்ட வீட்டுத்தோட்டத்தில் பூக்கும்.
பாங்கர் கொடி முசுண்டைமேல் ஏறிப் பம்பிக் கிடக்கும்

சங்ககாலத்து ஊர்களில் ஒன்று உகாய்க்குடி. அவ்வூரில் வாழ்ந்த புலவர் உகாய்க்குடி கிழார். இவரது பாடல் குறுந்தொகைத் தொகுப்பில் பாடல் எண் 63 ஆக அமைந்துள்ளது

ஓமாம்புலியூர் சிவன் கோவிலின் ஸ்தல விருட்சமாக இந்த ஓமை ஓராயிரம் பலன்கள் கொண்ட ஒற்றை மரம் இருப்பதாகவும் தகவல் உண்டு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 11 Jun 2014 - 10:12

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide78

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Taloora20Lac20Tree

மரா மரத்தைப் பழந்தமிழ் மராஅம் என்றே வழங்கியது. பின்னர் இதனை மராம் என்றனர்.

Taloora லேக் மரம் இலையுதிர் மரம் ஆகும் . மராஅம் மலர் ஒரு முனையத்தில் அடர்த்தியாக இல்லாது கிளை விட்டு பிரியும் மலர்க்கொத்து போல் சுண்ணாம்பு நீறு போல் வெண்மையாகப் பூக்கும். மணம் மிக்கது. பூ வலமாகச் சுழன்றிருக்கும்.

மராஅம் ஊர்த்தெருவில் ஓங்கிப் பூக்கும் இப்பூகுவித்து விளையாடும் பூ. கூந்தலில் சூடும் பூ.
மகளிர் கூந்தலில் பாதிரி, அதிரல் ஆகிய பூக்களோடு மராஅம் பூவையும் அடைச்சிக்கொள்வர் (சடைவில்லை ஆக்கிச் செருகிக்கொள்வர்). பருந்து இருக்கும் அளவுக்கு உயரமானது.

இம்மரத்தின் பட்டையிலிருந்து ஒரு வகை சாயம் தயாரிக்கபடுகிறது.

மராஅம் என்னும் வெண்கடம்ப மரச் சோலையில் வேழ வெண்பூ பூக்குமாம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by SAFNEE AHAMED on Wed 11 Jun 2014 - 10:15

நன்றி உங்கள் படிபினையான இந்த தகவல்ளுக்கு  *_  *_
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 11 Jun 2014 - 10:15

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide79

'தணக்கு நுணாவே' என்று பிங்கல நிகண்டு (நூற்பா 2717 இம்மரத்தைக் குறிப்பிடுவதோடு . இதற்கு நூணா, தணக்கு, மஞ்சள் பாவட்டை,மஞ்சனத்தி என பல பெயர்கள் உண்டு என்பதும் ஆங்கிலத்தில் 'Togari wood' என்ற அழைக்கப்படும் இம்மரத்தைத் தாவரவியலாளர் 'MORINDA TINCTORIA' என்றழைப்பதாகவும் என் தேடலில் கிடைத்தவை.

ஆனால் மேலே இருக்கும் முதல் படம், விபரம் மேபிள் http://en.wikipedia.org/wiki/Mapleஎனப்படும் உயர் ரக கனடிய தவர இனத்தை குறிக்கிறது. எனினும. கிடைத்த தகவல்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது கீழே இருக்கும் இரண்டாது, மூன்றாவது படங்களே இப்பூவிற்குரிய சான்றாக இருக்குமென கருதுகிறேன்.

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 2442347707_24eabfa7e3_z

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Yamas304

சிறிய வெள்ளை நிற மலர். முத்தின் வெண்மையில், நீண்ட ஐந்து இதழ்களும், நடுவே சிறு மகரந்தக் குழல்களும், அடர் பச்சையில் இலைகளும் கொண்டது.

நுணாமரம் அல்லது மஞ்சணத்தி எனப்படும் ஒருவகை மூலிகை சிறுமரமாகும். இது விதைகள் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது. சுமார் 15 அடி உயரம் வரை வளரும். தடிப்பான பட்டையும், இதிரடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோண சிறு கிளைகளையும் சிறிய வெண்னிற மலர்களையும் முடிச்சு முடிச்சாக்காய்களையும் கருப்பு நிறப் பழங்களையும் உடைய மரம். மரத்தின் உட்புறம் மஞ்சள் வண்ணமாயிருக்கும்

மஞ்சணத்தியின் காய் பழுத்தவுடன் கருப்பு நிறமாகக் காட்சியளிக்கும்.கருகருவென முடிச்சு முடிச்சாக இருக்கும் இதன் பழத்தை இப்பழத்தை உண்ணும் பழக்கம் இன்றும் உள்ளது.துவர்ப்பு சுவை கொண்டபழம் இது.

இதன் காய், பழம், இலை ஆகியன ஆடு, மாடுகளின் உணவாகப் பயன்படுகிறது. நெற்பயிருக்குத் தழை உரமாக மஞ்சணத்தி கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கை உண்டு

நுணாமரம் இலேசானது. என்றாலும் நாரோட்டம் இருப்பதால் வலிமையானது.உறுதிக்கும் பெயர் போனது.

இம்மரம், கலப்பை-மாட்டுவண்டியின் உறுப்புகள், கதவு-நிலை ஆகியன செய்யப் பயன்படுகிறது. குறிப்பாக ஏர் மற்றும் மாட்டுவண்டியின் நுகக்கால் செய்ய இதனைப் பயன்படுத்தும் வழக்கம் முன்னர் பரவலாக இருந்துள்ளது. இதன் பொருட்டே கிணற்றோரத்திலும், வயலோரத்திலும் வளரும் மஞ்சணத்திச் செடிகளை அழிக்காமல் வளரவிடுவர். இம்மரம் மாட்டின் கழுத்தில் புண் ஏற்படுத்தாது. இதன் காரணமாகவே, நுகக்கால் செய்ய இம்மரத்தை விரும்பிப் பயன்படுத்தியுள்ளனர். இம்மரத்தின் மிருதுத்தன்மை காரணமாக 'பாதக்குறடு' எனப்படும் மரச்செருப்பை மஞ்சணத்தி மரத்தால் செய்வர். சுவரொட்டிகள் அச்சடிக்கப் பயன்படுத்தும் மரத்திலான எழுத்துக்கள் செய்ய மஞ்சணத்திக் கட்டையையே விரும்பிப் பயன்படுத்துகின்றனர். எழுத்துக்களில் எளிதில் சிராய்ப்பு ஏற்படாமையே இதற்குக் காரணமாகும். மஞ்சணத்தி மரத்தால் செய்யப்பட்ட பணப் பெட்டியில் பணம் வைத்தால் வீண்செலவு ஏற்படாது. பணம் அதிலேயே தங்கியிருக்கும் என்ற நம்பிக்கையும் சிலரிடம் காணப்படுகிறது. கட்டில் கால்கள் இம்மரத்தால் செய்யப்படும்.குங்குமச் சிமிழ், தெய்வச் சிலைகள் போன்ற கலைப்பொருள் இதனால் செய்யப்படும்

செயற்கை இழைகலான லினென் மற்றும் உல்லன் துணிகளுக்கு இயற்கை சாயம் கொடுக்க இதன் வேரிலிருந்து சிகப்பு நிறம் தயாரிக்கப்படுகிறது

சிறு செடியாக வளரும்போதே இதைப் பிடுங்கி எறியாவிட்டால் நன்றாக வேர்விட்டுவிடும். பின்னர் மண்வெட்டி மற்றும் கடப்பாரையைப் பயன்படுத்தி அகழ்ந்தெடுத்துதான் அப்புறப்படுத்த வேண்டும். இதன் வேரின் ஒரு சிறு பகுதி மண்ணுக்குள் புதைந்து இருந்தாலும் அதிலிருந்து மரம் துளிர்த்துவிடும். வீட்டுத் தோட்டங்களிலும் குளக்கரை ஓரங்களிலும் இம்மரம் வளந்திருப்பதைக் காணலாம், ஆயினும் வேம்பு, பூவரசுபோல் இம்மரத்தை விருப்பத்துடன் நட்டு வளர்ப்பதில்லை.

'தணக்கு நுணாவே' என்று பிங்கல நிகண்டு (நூற்பா 2717 இம்மரத்தைக் குறிப்பிடுகிறது.
இம்மரம் மருத்துவக் குணமுடையது. 'பதார்த்த தகுணபாடம்' என்ற நூல் இதன் பயன்பாடுகளை இவ்வாறு குறிப்பிடுகிறது.

"பட்டை கரப்பானொரு பாரச் சிலேஷ்மசுர
மொட்டிநின்ற புண்கிரந்தி யோட்டுங்காண்-மட்டலரை
யேந்து நுனாவி னிலைமாந்தம் தீர்த்துநல்ல
காந்திதரு மேகமடுங் காண்."

மஞ்சணத்தி மரத்தின் பட்டையானது கரப்பான், கபச்சுரம், கிரந்தி ஆகிய நோய்களையும் மஞ்சணத்தி இலையானது மாந்தம், மேகம் ஆகிய நோய்களையும் போக்கும் என்பதை இந்நூற்பாவால் அறிய முடிகிறது.

இவை தவிர இன்றளவும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இம்மரம் பின்வரும் நோய்களைத் தீர்க்கப் பயன்படுகிறது.

1. இரத்தக்கட்டு

(அ) மஞ்சணத்தி இலையைச் சட்டியிலிட்டு வதக்கி, சூட்டுடன் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

(ஆ) வெள்ளைக் கல்லைச் சுடவைத்து அக்கல்லை மஞ்சணத்தி இலையுடன் ஒரு துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

(இ) மஞ்சணத்தி இலைச் சாறு ஓர் அவுன்ஸ் உள்ளுக்குச் சாப்பிட வேண்டும்.

2. வெட்டுக்காயம்

(அ) மஞ்சணத்திக் கட்டையை இழைத்துப் பொடியாக்கி நல்லெண்ணெயில் கலந்து வெட்டுக் காயத்தில் வைத்தால் காயம் விரைவில் குணமாகும்.

(ஆ) மஞ்சணத்தி இலையுடன் மஞ்சளை அரைத்துக் கட்ட வேண்டும்.

பிஹார், மத்தியப் பிரதேசம், வங்காளம் ஆகிய மாநிலங்களில் இது தனிப் பயிராகப் பயிரிடப்படுகிற‌து
.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 11 Jun 2014 - 10:17

SAFNEE AHAMED wrote:நன்றி உங்கள் படிபினையான இந்த தகவல்ளுக்கு  *_  *_

ஓ! பின்னூட்டமிட்டதுக்கு நன்றிப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Wed 11 Jun 2014 - 10:20

Post by Nisha on Thu 19 Jun 2014 - 8:59

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide80

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Twisted20Acacia

சங்க இலக்கியங்களின் இது கொடி என்று கூறப்படுகின்றது. நச்சினாக்கினியர், இதனை, ""இண்டங் கொடி"" என்பர். இக்கொடி பனிக்காலத்தில் செழித்து வளர்ந்து பூத்து நிற்கும். ஈங்கை மலர்கள் வெண்மை, துவர் ஆகிய இரு வண்ணங்களில் உள்ளன இம்மலரின் உட்பகுதியில் பஞ்சுபோன்ற ஒரு பொருள் அமைந்திருக்கும். அதனைத் `துய்' என்பர். அதனால் இம் மலர் `வண்ணத் துய் மலர்' என்று சிறப்பிக்கப்படுகின்றது. இம்மலர் குருவியின் குஞ்சினுக்கு உவமையாகக் கூறப்படுகின்றது.

இண்டு தமிழ் நாட்டில் சிறு காடுகளிலும், வேலிகளிலும் தானே வளர்வது. வரட்சியைத் தாங்கி வளரக் கூடியது. முதன் முதலில் இந்தோ மலேசியா மற்றும் தாய்வானில் தோன்றியது. சிறகமைப்புக் கூட்டிலைகளையும் வளைந்த கூரிய முட்கள் நிறைந்த வெண்மையான தண்டினையும் உடைய ஏறு கொடி. பருவத்தில் காலையில் சிறு சிறு பூக்கள் வெண்மையாக கொத்தாக வேப்பம் பூப் போல் பூக்கும். பட்டையான காய்களயுடையது. விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.இலை, தண்டு, மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்கள்.

இது பற்றி சங்க இலக்கியத்தில் தரப்பட்டுள்ள செய்திகள் பின்வருமாறு:

மகளிர் மணல் மேல் அமர்ந்து ஆடும் கழங்கு விளையாட்டுக் காய்கள் போலப் பாறைகளின் மீது ஈங்கைப் பூக்கள் கொட்டுமாம். இளவேனில் காலத்தில் கோங்கம் பூக்கத் தொடங்கும்போது, ஈங்கை தளிர் விடுமாம்.

நௌவி-மான் குளம்பு அடி மண்ணில் பதிந்தது போல ஈங்கைப்பூ வெண்ணிறம் கொண்டதாம்
பிசிர் மயிர்களைக் கொண்ட ஈங்கைப் பூவும் வட்டு அளவு இருக்கும். ஈங்கை வயல் வேலியில் பூக்கும். ஈங்கைக்கு முள் உண்டு. இதனை மாமரத்துக்கு வேலியாகப் பயன்படுத்துவர். புதராக இருக்கும் ஈங்கைப் பூங்குழை தன்னை வருடிக்கொடுக்கும் இன்பத்தில் குருகு என்னும் பறவை பதுங்கியிருக்கும். ஈங்கை ஒரு வெண்மையான கொடி. பனி அரும்பும் கூதிர் காலத்தில் (கார்த்திகை மார்கழி மாதங்களில்) பகன்றையும், ஈங்கையும் பூக்கும். ஈங்கை வெண்ணிறத்தில் பூக்கும்.

வெள்ளம் வடிந்த ஆற்றுமணலில் ஈங்கையின் வாடிய பூக்கள் வரிவரியாகப் பரவிக் கிடந்தன. ஈங்கைத் தளிர் மாரிக் காலத்தில் மாந்தளிர் போல் இருக்கும். ஈங்கை முள் வளைவாக இருக்கும். ஈங்கைப் பூ மழை பொழியும்போது விழும் பனிக்கட்டி போல் இருக்கும். அவள் மேனி மாந்தளிர் போலவும், மாரி காலத்து ஈங்கை போலவும் மாமைநிறம் கொண்டிருந்தது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 19 Jun 2014 - 9:02

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide81குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Red-silk-cotton-tree-Semal-Sem-4f59cb9fe20b0குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Kapok_seeds_I_IMG_8004

இலவம் சாரல்களில் மிகுதியாக வளர்ந்திருக்கும். இளவேனிற்காலமே இது பூத்துக் குலுங்கும் காலம். அப்போது இலை தெரியாத அளவிற்கு மரமே பூவால் நிறைந்~திருக்கும்.இலவம்பூ சிவப்புநிறத்தில் இருக்கும். இதனை `எரிப்பூ இலவம்' என்றும், `எரிவுருவுறழ இலவம் மலர்' என்றும் புலவர்கள் பாடுகின்றனர். இதன் இதழ்கள் பெரிதாக இருக்கும். கோங்கின் நுண்தாது இதன்மீது படும்போது, பவளச் செப்பில் பொன் துகள் சொரிந்ததைப் போன்று காட்சியளிக்கும்.

இலவ மரம் என்னும் மால்வேசியேக் குடும்பத்தைச் சார்ந்த மரம் உற்பத்திச் செய்யும் காய்களில் இருந்து பெறப்படும் நார் பொருள் இலவம் பஞ்சு ஆகும். இதன் பஞ்சைப் பட்டுப் பஞ்சு என்றும் அழைப்பர். இதற்குக் காரணம் பஞ்சில் உள்ள மினுமினுப்பும் அதன் கவர்ச்சிகரமானத் தோற்றம் பட்டைப்போல் இருப்பதால் தான்

அடர் சிவப்பில் பின்னோக்கி மடங்கிய ஐந்து நீண்ட இதழ்கள், அதன் நடுவே அடர் மஞ்சளில் மகரந்தக் குழல்கள்
கிளை முடிவில் மலரும் இந்த மலர்கள் பிஞ்சாகி, காயாகி, கனியாகாமல் வெடித்து சிதறி, பஞ்சாகும். சிதறும்
விதைகள், வேறிடம் சென்று மீண்டும் பயிராகி, மரமாகும்

வெள்ளை நிறத்தில் மினுமினுப்புடன் காணப்படும்.
நீருறுஞ்சும் தன்மை அற்றது.
அதிகப்படியான மிதக்கும் தன்மையுள்ளது (30 மடங்கு எடையைத் தாங்கக்கூடியதும், நீலரில் மிதக்கும் தக்கையைவிட ஏழுமடங்கு மிதக்கும் தன்மையுடையது.
பஞ்சு எளிதில் தீப்பற்றக்கூடியது

இதனால் வெளிவரும் பஞ்சு மென்மையானதாகவும் உறுதியற்றும் இருப்பதால் இவை நூல்நூற்கப் பயன்படுவதில்லை.இது மெத்தை, தலையனை, உயிர்காக்கும் உரை போன்றவற்றை செய்யப் பயன்படுகிறது

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 19 Jun 2014 - 9:03

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide82குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 28-amaltas-flowers300

கொன்றை மரம், (Golden Shower Tree) ஃபேபேசியே (Fabaceae) என்னும் தாவரவியற் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது தெற்காசியப் பகுதியைச் சேர்ந்தது. பாகித்தானின் தெற்குப் பகுதிகளிலிருந்து, இந்தியா ஊடாகக் கிழக்கே மியன்மார் (பர்மா) வரையும், தெற்கே இலங்கைத் தீவு வரையும் இது பரவலாகக் காணப்படுகின்றது.

இதனைக் `கடுக்கை' என்று அகநானூற்றுப் பாடல் குறிக்கின்றது. இது முல்லைநிற மரம். கார்காலத்தில் இம்மலர் பூக்கத் தொடங்கும். கொன்றை மலர்கள் மஞ்சள் நிறத்தினை உடையன. மாலைபோலப் பூக்கள் கொத்தாகப் பூத்து நிற்கும். அன்றலர்ந்த நாண்மலர் பொன் போன்றிருக்கும். மலர்ந்தபின் ஊழ்த்த மலர் பசலைக்கு உவமையாகக் கூறப்பட்டிருக்கிறது. அது மங்கிய மஞ்சள் நிறத்தில் அமைந்திருக்கும்

இது நடுத்தர உயரம் கொண்ட ஒரு மரம். விரைவாக வளரக்கூடிய இம்மரம் 10 தொடக்கம், 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இலையுதிர்க்கும் தன்மை கொண்ட அல்லது, ஓரளவு பசுமைமாறாத் தன்மை கொண்ட இம் மரத்தின் இலைகள், 15 தொடக்கம் 60 சென்ட்டி மீட்டர் வரை நீளம் கொண்டவை. இறகு வடிவான இவ்விலைகள், 3 தொடக்கம், 8 சோடிகள் வரை எண்ணிக்கையான சிற்றிலைகளைக் கொண்டவை. சிற்றிலைகள் ஒவ்வொன்றும், 7 - 21 செமீ நீளமும், 4 - 9 சமீ அகலமும் உள்ளவை. பூக்கள், 20 - 40 சமீ நீளமுள்ள நுனிவளர் பூந்துணர்களில் (racemes) உருவாகின்றன. சம அளவும், வடிவமும் கொண்ட ஐந்து மஞ்சள் நிற இதழ்களாலான பூக்களின் விட்டம் 4 - 7 சமீ வரை இருக்கும். இதன் பழம் 30 - 60 சமீ நீளமும், 1.5 - 2.5 செமீ வரை அகலமானதுமான ஒரு அவரையம் (legume) ஆகும். நச்சுத்தன்மை கொண்ட பல விதைகளைத் தன்னுள் அடக்கிய இப் பழம் எரிச்சலூட்டும் மணம் தருவது.

கொன்றை பெரும்பாலும் அலங்காரத் தாவரமாகவே வளர்க்கப்படுகிறது. வெப்பமண்டலம் மற்றும் குறை வெப்பமண்டலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. நன்றாக நீர் வடியக் கூடிய நிலத்தில், நல்ல சூரிய ஒளியில் சிறப்பாக வளரும். வறட்சியையும், உப்புத்தன்மையையும் தாங்கக் கூடிய இத் தாவரம், குறுகியகால உறைபனிக் காலநிலையையே தாக்குப் பிடிப்பதில்லை. கொன்றை, பூஞ்சணம், இலைப்புள்ளி, மற்றும் வேர் நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியது.

இந்துக்கள், கொன்றைப் பூவைச் சிவனின் பூசைக்குரியதாகக் கருதுகின்றனர். இச் சமய இலக்கியங்கள், சிவபெருமானைக் கொன்றைப் பூவைத் தலையில் சூடியவராக வர்ணிக்கின்றன.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha on Thu 19 Jun 2014 - 9:06

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide83குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 800px--1குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 800px--2

அடும்பு என்பது ஒருவகையான படரும் கொடி. இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்.இதன் அறிவியல் பெயர் ஐப்போமியா பெஸ் கேப்ரே (Ipomoea pes-caprஅஎ).

பூவுடன் அடும்புக் கொடி. தரையில் படர்ந்திருக்கும் அடுப்பம் பூவின் இலை மானின் காலடி போல இருக்கும். அதன் பூ தார்மாலையில் தொங்கும் மணி போல் இருக்கும். கடற்கரை நிலத்தில் மிகுதியாகக் காணப்படும்.அடுப்பங் கொடி பெரிதாக இருக்கும். அதன் பூவை மகளிர் தம் கூந்தலின் கோதை முடிப்பில் சேர்த்து வைத்துக்கொள்வர்.

சங்க இலக்கியங்களிலே நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர் பல பாடல்களில். நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது.

இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். இச்செடி இருவிலை நிலைத்திணை வகையைச் சேர்ந்தது

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 21:20

Nisha wrote:குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 Slide83குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 800px--1குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 5 800px--2

அடும்பு என்பது ஒருவகையான படரும் கொடி. இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்.இதன் அறிவியல் பெயர் ஐப்போமியா பெஸ் கேப்ரே (Ipomoea pes-caprஅஎ).

பூவுடன் அடும்புக் கொடி. தரையில் படர்ந்திருக்கும் அடுப்பம் பூவின் இலை மானின் காலடி போல இருக்கும். அதன் பூ தார்மாலையில் தொங்கும் மணி போல் இருக்கும். கடற்கரை நிலத்தில் மிகுதியாகக் காணப்படும்.அடுப்பங் கொடி பெரிதாக இருக்கும். அதன் பூவை மகளிர் தம் கூந்தலின் கோதை முடிப்பில் சேர்த்து வைத்துக்கொள்வர்.

சங்க இலக்கியங்களிலே நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர் பல பாடல்களில். நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது.

இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். இச்செடி இருவிலை நிலைத்திணை வகையைச் சேர்ந்தது

அப்பாடா உங்கள் தேடலைப் பார்க்கும் போது....

எனக்கு தலையே சுத்துது....

மிக.....மிக....அர்ப்புதமான...கடின தேடலுக்கு வாழ்த்துக்கள்......
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by நண்பன் on Thu 19 Jun 2014 - 21:26

jaleelge wrote:

ஆனால் இணையத்தில் தேடுவோர்க்கு சேனையில் உண்டு பல லட்சம் தகவல்  !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by ராகவா on Thu 19 Jun 2014 - 21:27

நண்பன் wrote:

அருமை அண்ணே!! i* i* ^* 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 21:36

அனுராகவன் wrote:

நன்றி தம்பி......

எப்படி போனாலும்....

நிஷா மேடம் எமக்காக...

வேலைப்பழுவுக்கு மத்தியில்....

கணனியின் முன்னிருந்து தேடும் நிலை...

அப்பாடா பொறுமைக்கு அந்தத்தில் நின்றுதான் தேட வேண்டும்....

எம் வனிதைக்கு ...சேனையின் சார்பில் அவங்களுக்கு அடிப்போம்..சலியூட்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by ராகவா on Thu 19 Jun 2014 - 21:38

அடடே! என் வணக்கமும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by நண்பன் on Thu 19 Jun 2014 - 21:39

நன்றி தம்பி......

எப்படி போனாலும்....

நிஷா மேடம் எமக்காக...

வேலைப்பழுவுக்கு மத்தியில்....

கணனியின் முன்னிருந்து தேடும் நிலை...

அப்பாடா பொறுமைக்கு அந்தத்தில் நின்றுதான் தேட வேண்டும்....

எம் வனிதைக்கு ...சேனையின் சார்பில் அவங்களுக்கு அடிப்போம்..சலியூட்...
 ~/ ~/ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by ராகவா on Thu 19 Jun 2014 - 21:39

நண்பன் wrote:
நன்றி தம்பி......

எப்படி போனாலும்....

நிஷா மேடம் எமக்காக...

வேலைப்பழுவுக்கு மத்தியில்....

கணனியின் முன்னிருந்து தேடும் நிலை...

அப்பாடா பொறுமைக்கு அந்தத்தில் நின்றுதான் தேட வேண்டும்....

எம் வனிதைக்கு ...சேனையின் சார்பில் அவங்களுக்கு அடிப்போம்..சலியூட்...
 ~/ ~/ 
 )( )( 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 22:27

நன்றிகள்..வாழ்த்துக்கள்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum