சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   - Page 2 Khan11

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

+5
rammalar
ராகவா
பர்ஹாத் பாறூக்
Nisha
*சம்ஸ்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   - Page 2 Empty தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by *சம்ஸ் Wed 26 Mar 2014 - 12:26

First topic message reminder :

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்


மொழிப் பயிற்சி – 1 :

ஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இந்நாளில் பட்டப் படிப்பு படித்தவர்களே தாய்மொழியான தமிழில் நான்கு வரிகள் பிழையின்றி எழுத முடிவதில்லை. அதிலும் தமிழை உச்சரிப்பதில் நிறையத் தடுமாற்றம்; குளறுபடிகள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக இதோ ஒரு சிறிய முயற்சி; மொழிப் பயிற்சி உங்களுக்காக…
அச்சுறுத்த வேண்டா:

“”தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள், மிகக் கடுமையான இலக்கணங்கள், கற்றுக்கொள்வது எளிதன்று” என்று கூறி இளையவர்களை அச்சுறுத்த வேண்டா. தமிழில்,

“”எழுத்தெனப் படுவ

அகரமுதல் னகர இறுவாய்

முப்பஃது என்ப…”

என்றார் தொல்காப்பியர். ஆய்தம் ஒன்று சேர்த்து முப்பத்தோர் எழுத்துகளே தமிழில் உள. கூட்டு ஒலிகளையெல்லாம் எழுத்தெண்ணிக்கையாக்கிஅச்சுறுத்தல் ஏனோ?

ஆங்கிலத்தில் தலைப்பு எழுத்து, சிறிய எழுத்து என இருவகையும், ஒவ்வொன்றிலும் இரண்டு பிரிவுகளுமாக மொத்தம் நூற்றுநான்கு எழுத்துகள் உள்ளன என்று நாம் சொல்லுவதில்லை. அன்றியும் ஆங்கிலத்தில் சில எழுத்துகளை ஒலிக்காமலேயே உச்சரிக்க வேண்டும் (Psychology-சைக்காலஜி). சில எழுத்துகளின் ஒலி இடத்திற்கேற்ப மாறுபடும், இப்படிப்பட்ட சிக்கல்கள் தமிழில் இல்லை. என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே படிக்கலாம்.

÷தமிழில் வல்லெழுத்துகள் இடம் நோக்கி மென்மைபெற்று ஒலிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. க்ஷஹ இத்தகைய ஒலி வேறுபாடுகள் வடசொற்கலப்பினால் வந்தவை.


தமிழ் இயற்கை மொழி:

மாந்த இனம் கை, கால்களை அசைத்து முகக்குறிகாட்டி (சைகைகளால்) கருத்தை-எண்ணத்தைப் புலப்படுத்திய நிலையிலிருந்து மேம்பட்டு வாய்திறந்து பேசக் கற்றுக்கொண்ட முதல்மொழி-இயற்கைமொழி தமிழேயாகும். எந்த மொழிக்காரரும், எந்நாட்டவரும் பேசவேண்டுமாயின் முதலில் வாய்திறத்தல் வேண்டும். ஒன்றும் பேசாதிருப்பவரைப் பார்த்து “”என்ன வாயைத் திறக்க மாட்டீங்களா?”  என்போமன்றோ?  வாயை மெல்லத் திறந்தால் தோன்றும் ஒலி “அ’. சற்று அதிகம் திறந்தால்  “ஆ’ தோன்றும். இவ்வாறே அங்காத்தலில் தொடங்கி தமிழ் ஒலிகள் (எழுத்துகள்) இயற்கையாகவே-இயல்பாகவே எழுந்தவை என்றுணர வேண்டும்.


ஒலிப்பு-உச்சரிப்பு:

இந்த இனிய மொழியின் தனிச்சிறப்பு உச்சரிப்பாகும். நாம் இன்று தமிழ் என்னும் சொல்லையே சரியாக உச்சரிப்பதில்லை. தமில், தமிள், டமில் என்று பலவாறு உச்சரிப்பவர் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லில், த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம். மூவினமும் தமிழில் அடக்கம். தமிள் வாள்க! என்று மேடையில் முழக்கமிடுகிறார்கள். தமிளா… தமிலா… என்று அழைக்கிறார்கள். “தமிழ்மொழி என் தாய்மொழி’ என்ற தொடரை ஒவ்வொருவரும் ஒரு நாளில் பத்து முறையாவது பிழையின்றி ஒலித்திடப் பயிற்சி செய்யவேண்டும்.

÷”"என்ன நேயர்கலே நிகழ்ச்சியைப் பார்த்திங்கலா… உங்கல் கருத்தை எங்கலுக்கு எளுதியனுப்புங்கள்” என்று ல, ழ, ள மூன்றையும் கொலைசெய்து அறிவிப்பவர்கள் ஊடகங்களில் பலர் உள்ளனர். நிகழ்ச்சி என்னும் சொல்லில் “ச்’சை விழுங்கி, நிகழ்சி என்பது ஒரு தனிபாணி போலும். இவற்றையெல்லாம் எப்படிச் சரிசெய்வது?


நுண்ணொலி வேறுபாடுகள்:

தமிழில் உள்ள எல்லா எழுத்துகளிலும் வல்லினம், மெல்லினம் என்றிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். அதனால், “சார் இங்கே என்ன “ல’னா சார் போடணும்? வல்லினமா மெல்லினமா? என வினவுவர். பதினெட்டு மெய் எழுத்துகளை மூன்றாக, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பிரித்துள்ளனர். ய், ர், ல், வ், ழ், ள் இவ்வாறு இடையின எழுத்துகள். மேற்பல் வரிசையின் முன்பகுதி உட்புறத்தை (அண்ணம்) நாக்கின் நுனி கொண்டு தொட்டால் (ஒற்றுதல்) தோன்றுவது ஒற்றல் “ல’கரம். நாக்கின் நுனியை உள்ளே வளைத்து அண்ணத்தை (மேற்பல் வரிசை உட்புறம்) வருடினால் தோன்றுவது வருடல் “ள’கரம். இரு நிலைக்கும் இடையில் நாக்கின் நுனி வளைந்து நின்று தோன்றும் ஒலி “ழ’கரம். இது சிறப்பு ழகரம் என்று சுட்டப்படும். இம்மூன்று ஒலிகளையும் வேறுபடுத்திச் சரியாக ஒலித்தால் பொருள் வேறுபடுதலை அறியலாம்.


எடுத்துக்காட்டுகள்:

தால் – நாக்கு, தாள்-எழுதும்தாள், பாதம் (அடி);

தாழ் – தாழ்ப்பாள், பணி(ந்து);

வால் – தூய்மை (வெண்மை)-

வாலறிவன், வாலெயிறு;

வாள் – வெட்டும் கருவி,

வாழ் – வாழ்வாயாக

இப்படிப்பல காட்டலாம்.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்


Last edited by *சம்ஸ் on Thu 3 Apr 2014 - 11:05; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   - Page 2 Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by *சம்ஸ் Fri 23 Jan 2015 - 14:15

வல்லெழுத்து மிகா இடங்கள்

1.​ அது,​​ இது,​​ எது ​ முன் மிகாது.

(எ-டு)​ அது பெரிது,​​ இது சிறிது,​​ எது கரும்பு?

2.​ அவை,​​ இவை,​​ எவை ​ முன் மிகாது.

(எ-டு)அவை சென்றன,​​ இவை கண்டன,​​ எவை தின்றன?

3.​ அவ்வாறு,​​ இவ்வாறு,​​ எவ்வாறு?

(எ-டு)​ அவ்வாறு சொன்னார்,​​ இவ்வாறு செப்பினார்,​​ எவ்வாறு கண்டார்?

4.​ ஒரு,​​ இரு,​​ அறு,​​ எழு என்னும் எண்களின் முன் மிகாது.

(எ-டு)​ ஒரு கோடி,​​ இரு தாமரை,​​ அறுபதம்,​​ எழுசிறப்பு.

5.​ பல,​​ சில முன் மிகாது.

(எ-டு)​ பல சொற்கள்,​​ சில பதர்கள்,​​ பல தடைகள்,​​ சில கனவுகள்.

6.​ உகர ஈற்று ​ வினையெச்சங்கள் முன் மிகாது.

(எ-டு)​ வந்து சென்றான்,​​ நின்று கண்டான்.

7.​ அத்தனை,​​ இத்தனை முன் மிகாது.

(எ-டு)​ அத்தனை குரங்குகள்,​​ இத்தனை பசுக்களா?

குறிப்பு:​ அத்துணை முன் மிகும்.

(எ-டு)​ அத்துணைப் பெயர்களா?​ இத்துணைச் சிறப்பா?

8.​ பெயரெச்சம் முன் மிகாது.

(எ-டு)​ ஓடாத குதிரை,​​ வந்த பையன்,​​ பறந்த புறா

குறிப்பு:​ ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.

(எ-டு)​ ஓடாக் குதிரை,​​ பாடாத் தேனீ

9.​ என்று,​​ வந்து,​​ கண்டு முன் மிகாது.

(எ-டு)​ என்று சொன்னார்,​​ வந்து சென்றார்,​​ கண்டு பேசினார்.

வல்லொற்று மிகுமிடங்கள்,​​ மிகாவிடங்கள் அனைத்தும் ஈண்டு உரைக்கப்படவில்லை.​ சுருக்கமான பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது.​ இதனில் வரும் சில இலக்கணச் செய்திகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

வேற்றுமை உருபுகள் ​(2 முதல் 7 முடிய)​ விரிந்து ​(வெளிப்படையாக)​ இருப்பின் வேற்றுமை விரி எனப்படும்.​ நூலைக் கற்றான் -​ இதில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பாடாக உள்ளது.​ உருபு மறைந்துவரின் வேற்றுமைத் தொகை எனப்படும்.​ பால் பருகினான் -​ இதில் பாலைப் பருகினான் எனும் பொருள் புலப்பட்டாலும் ஐ என்னும் உருபு மறைந்துள்ளது.

ஒரு வினைச் சொல் நிற்க,​​ ​ அது பொருள் நிறைவு பெறாமல் இருந்து,வேறொரு வினைச் சொல் கொண்டு நிறைவுற்றால் அது வினையெச்சம்.​ ​(எ-டு)​ வந்து ​(முற்றுப் ​ பெறாத வினை)​ நின்றான் என்ற வினைமுற்றைக் கொண்டு நிறைவு பெறும்.​ இதுபோல் முற்றுப் பெறாத வினை,​​ ஒரு பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் எனப்படும்.​ வந்த ​(முற்றுப் பெறாத வினை)​ பையன் என்னும் பெயரைக் கொண்டு முடிந்தது.​ இந்த வகையான பெயரெச்சத்தில் ஈற்றெழுத்து ​(வினையின் கடைசி எழுத்து)​ இல்லாமற் போயிருந்தால் ​(கெட்டிருந்தால்)​ அது ஈறு கெட்ட பெயரெச்சம்;​ அதுவே எதிர்மறைப் பொருளும் ​(இல்லை என்பது)​ தருமானால் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

(எ-டு)​ உலவாத் தென்றல் -​ உலவாத தென்றல் என்பதில் “த்’ என்னும் ஈற்றெழுத்துக் கெட்டு ​(இல்லாமற் போய்)​ உலவா என நின்று “த்’ வல்லொற்றுடன் கூடி உலவாத் தென்றல் ஆயிற்று.​ தென்றல் உலவும் ​(அசையும்)​ இது உலவாத ​(அசையாத)​ என்னும் எதிர்மறைப் பொருள் தருதல் காண்க.

ஆறு தொகையுள் ஒன்று பண்புத் தொகை.​ பண்பு உருபு ஆகி மறைந்து கெட்டிருக்கும்.​ “மை’ விகுதியும் கெட்டிருக்கும்.​ ​(எ-டு)​ செந்தாமரை-​ இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும்.​ இருபெயர் ஒட்டிப் பண்புத் தொகையாக வரின் அது இரு பெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.​ ​(எ-டு)​ வட்டக்கல் -​ வட்டமாகிய கல்.​ கல்லே வட்டம்.​ வட்டமே கல்.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   - Page 2 Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by *சம்ஸ் Fri 23 Jan 2015 - 14:19

இலக்கண விளக்கம் எழுதிக் கொண்டே போனால் அது விரிந்து கொண்டே செல்லும்.​ எளிதாகவும்,​​ சுருக்கமாகவும் சிலவற்றை அறியுமாறும் எழுதினோம்.​ ஒற்றுமிகுதல் தொடர்பாக அறியத்தக்க மற்றும் இரண்டு செய்திகளையும் தருகிறோம்.​ உவமைத் தொகை என்பது ஒன்று.​ ஒன்றை மற்றதற்கு உவமையாகச் சொல்லும் போது உவமை உருபு ​(போல,​​ ஒத்த,​​ அனைய,​​ நிகர்த்த )மறைந்திருப்பது உவமைத் தொகை.​ ​(எ-டு)​ முத்துப்பல் என்பது முத்து போன்ற பல் எனும் பொருளது.​ இங்கே உவமைத் தொகையில் சந்தி “ப்’ மிகுந்தது.​ உவமை விரியில் மிகவில்லை.

குற்றியலுகரம் என்பதும் அறிய வேண்டிய ஒன்று.​ இதை விளக்கவே பல பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும்.​ இயன்றவரை சுருக்கமாகச் சொல்வோம்.​ குறைந்த ஓசையுடைய “உ’ எனும் எழுத்து.​ உகரத்திற்கு ஒரு மாத்திரை.​ குறைந்த உகரத்திற்கு அரை மாத்திரை.​ தொடர் வகையான ஆறு வகைப்படும்,​​ சொல்லின் ஈற்றில் வல்லொற்றின் மீது உகரம் ஏறி ​(சேர்ந்து)​ வருதல் இதன் இயல்பு.​ ​(எ-டு)​ குரங்கு-​ இச்சொல்லின் “கு’ வில் உள்ள உகரம் குறைந்து ஒலிக்கும்.​ முழுமையான உகரம் எது?​ அது முற்றியலுகரம்.​ பசு-​ “சு’ வில் உள்ள உகரம் முழுமையானது.

வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லொற்று மிகும் என முன்னர் சொல்லியிருக்கிறோம்.​ பத்து-​ இதில் உள்ள “உ’ ​(த்+உ)​ அயலில் “த்’ என்ற வல்லெழுத்தை நோக்க வன்தொடர்க் குற்றியலுகரமாம்.​ பத்துப்பாட்டு இங்கே வல்லொற்று மிகுதலைக் காண்கிறோம்.​ எட்டுத் தொகையும் இவ்வாறே.

எழுத்து என்பதில் வன்தொடர்க் குற்றியலுகரம் உள்ளது.​ “கள்’ எனும் பன்மை விகுதி சேரும்போது வல்லொற்று மிகுமா?​ “கள்’ ஒரு தனிச் சொல் அன்று;​ பன்மை காட்டும் விகுதி.​ ஆதலின் எழுத்துகள் என்பதே இயல்பானது.​ இவ்வாறே தலைப்புகள்,​​ இனிப்புகள் என்று இயல்பாக எழுதுவதே பொருத்தம்.​ ஆயினும் பழந்தமிழ்ப் புலவர் ​(பரிமேலழகர் உள்ளிட்டவர்)​ எழுத்துக்கள் என்று எழுதியுள்ளார்கள்.​ ஆதலின் இருவேறுமுறையிலும் எழுதலாம்.​ ஆயினும் இனிப்புக்கள் வழங்கப்பட்டன எனும்போது இனிப்புச் சுவையுடைய கள் எனும் பொருள் காணக்கூடும்.​ ஆதலின் இனிப்புகள் என்றே எழுதுக

வலி மிகுதல் -​ மிகாமை சில குறிப்புகள்:

தமிழ் பேசு,​​ தமிழ்ப் பேச்சு:​​

மேற்​கா​ணும் இரண்​டி​லும் தமிழ் என்பது நிலைமொழி.​ பேசு,​​ பேச்சு என்பன வருமொழி.​ ஒன்று இயல்பாகவும்,​​ ஒன்று “வலி’ மிகுந்தும் வந்திருப்பது ஏன்?​ தமிழ் பேசு என்பது தமிழில் பேசு என விரியும்.​ ஆதலின் ஐந்தாம் வேற்றுமைத் தொகை.​ தமிழ்ப் பேச்சு என்பது தமிழில் ஆகிய பேச்சு அல்லது தமிழில் பேசப்பட்ட பேச்சு என விரியும்.​ இதனில் “இல்’ உருபோடு பிறிதொரு சொல்லும் மறைந்திருப்பதால் உருபும் பயனும் உடன் தொக்க தொகை.​ தமிழ் படி-​ தமிழைப் படி -​ இரண்டாம் வேற்றுமைத் தொகை தமிழ்ப்படி -​ தமிழில் உள்ள படி -​ உருபும் பயனும் உடன் தொக்க தொகை.​ தமிழ்ப் படம்,​​ தமிழ்ப்பாடம்,​​ தமிழ்ப் பேராசிரியர் என்பவற்றை விரித்துப் பொருள் காண்க.

ஊர்ப் பெயர்களின் முன்னர் க,ச,த,ப வந்தால் வல்லெழுத்து மிகும்.

(எ-டு)​ திருவாரூர்த் தமிழ்ச்சங்கம்

சென்னைக் கம்பன் கழகம்

அம்பத்தூர்த் தொழிற்பேட்டை

ய்,ர்,ழ் ஈறாக வரும் சொற்கள் முன் வல்லெழுத்து பெரும்பாலும் மிகும்.​ ​(எ-டு)​ தாய்ப்பாசம்,​​ வேர்க்கடலை,​​ யாழ்ப்பாணம்,​​ நாய்க்குட்டி,​​ நீர்ச்சோறு,​​ கூழ்ச்சட்டி

காய்கதிர்-வினைத் தொகையில் மிகவில்லை ​(காய்ந்த கதிர்,​​ காய்கின்ற கதிர்,​​ காயும் கதிர்)

மோர் குடி -​ வேற்றுமைத் தொகையில் மிகவில்லை ​(மோரைக் குடி)

தாழ் சடை -​ இதுவும் வினைத் தொகை -​ மிகவில்லை.

வேய்ங்குழல் என்று வல்லொற்று மெல்லொற்றாகத் திரிதலும் உண்டு ​(வேய்-​ மூங்கில்)

“இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்’ என்பது பொதுவிதி.​ உயிரோசை இறுதியில் சொற்கள் முன் வரும்.​ க,ச,த,ப க்கள் மிகும்.

(எ-டு)​ வரச் சொன்னான் ​(ர்+அ=ர)

பலாப் பழம் -​ ​(ல்+ஆ=லா)

கரிக்கட்டை -​ ​(ர்+இ=ரி)

எதிர்மறைப் பெயரெச்சத்தில் ​(வலி)​ மிகாது.

(எ-டு)​ வாடாத பூ ​(த்+அ=த)​​

அண்ணாதுரையா?​ அண்ணாத்துரையா?​​

துரை என்​பது ​(Dur​ai)​ வட​சொல்.​ மெல்லொலி கொண்டது.​ ஆதலின் த் மிகாது.​ ஆனால் துரை ​(Thurai) என்று அழுத்தி ஒலித்தால் தமிழ் வல்லெழுத்தாகி அண்ணாத்துரை என்று வரும்.​ ஒலிக்கும் முறையை ஒட்டி “வலி’ மிகுதலும் மிகாமையும் ஏற்படுகின்றன.

​​(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   - Page 2 Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by சே.குமார் Fri 23 Jan 2015 - 15:30

மிகவும் பயனுள்ள பதிவு....  நன்றி
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   - Page 2 Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Jan 2015 - 17:27

மிக்க நன்றி தொடருங்கள்


தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   - Page 2 Empty மொழிப்பயிற்சி – 9 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

Post by *சம்ஸ் Fri 13 Feb 2015 - 13:39

ஞானசம்பந்தர் -​ ஞானச் செல்வர்

இரண்டிலும் ஞான என்பது நிலைமொழி.​ ஒன்றில் ஒற்று மிகாமலும்,​​ ஒன்றில் மிகுந்தும் வந்துள்ளதேன்?​ சம்பந்தர் ​(சம்பந்தம்)​ வடசொல்.​ ‘sa’ என்ற ஒலியை உடையது.​ செல்வர் என்பது தமிழ்ச்சொல்.​ செ ​(che)​​ என அழுத்தி ஒலிக்கப்படுதலின் வல்லெழுத்து மிகுந்தது.​ ஞானச்சம்பந்தர் என்பதும் ஞான செல்வர் என்பதும் பிழையாகும்.

ஞானபீடம் -​ இலக்கியப் பீடம்

ஞான பீட விருது என்கிறோம்.​ இங்கே ஒற்று மிகவில்லை.​ இலக்கியப் பீடம் இதழ் என்கிறோம்.​ இங்கே ஒற்று மிகுந்துள்ளது.​ ஏன்?​ ஞானம்,​​ பீடம் இரண்டும் வடசொற்கள்.​ B-பீடம் என்பது இருக்கை.​ “இலக்கியம்’ தமிழ்.​ B-பீடத்தையும்,​​ P-​​ பீடம் எனத் தமிழ் ஒலிப்படுத்தி உரைத்தலால் இலக்கியப்பீடம் என்று ஒற்று மிக்கது.​ மற்றும் பீடு + அம் என்றும் பிரித்துப் பெருமை,​​ அழகு எனப் பொருள் காணலும் ஆகும்.​ ​(அம்-விகுதி)​​

ஒருகால் -​ ஒருக்கால்

“உன்னால் ஒருக்காலும் இதைச் செய்ய முடியாது’ என்று பேசுகிறோம்.​ ஒரு பொழுதும்,​​ எந்தச் சமயத்திலும் முடியாது என்பதே இதன்பொருள்.​ ஆனால் இச்சொல் ஒருகாலும் என்றிருப்பதே முறை,​​ நெறி.​ இங்கே வல்லொற்று மிகாது.​ ஒரு பொழுதும் என்பதை,​​ ஒருப்பொழுதும் என்று சொல்லுவோமா?​ இலக்கியச் சான்று:​ ” ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்றோதுவார் முன்’

எதிர்க்கட்சி-​ எதிர்கட்சி

எதிரில் உள்ள கட்சி அல்லது எதிரியாக இருக்கும் கட்சி எதிர்க்கட்சி.​ ஒரு விளையாட்டில் இரண்டு

கட்சிகள் மோதும்போது எதிர் எதிரே இருந்து மோதுவதால் எதிர்க்கட்சி எனல் சரியே.​ இவ்வாறே சட்டமன்றத்திலும் ஆளும் கட்சிக்கு ​ வரிசைக்கு எதிரே இருப்பது எதிர்க்கட்சி எனல் பொருத்தமே.​ ஆனாலும் எதிர்க்கட்சி என்ன செய்கிறது?​ நேற்று எதிர்த்தது,​​ இன்று எதிர்க்கிறது,​​ நாளையும் எதிர்க்கும்.​ எதிர்த்த,​​ எதிர்க்கிற,​​ எதிர்க்கும் கட்சியை எதிர்கட்சி என வினைத்தொகையாகச் சொல்லுதலும் சரியாகுமன்றோ?​​

ஒற்று இரட்டித்தல்:​​

ஒற்​று​மிகுதலோடு சேர்த்து எண்ணத்தக்கது ஒற்று இரட்டித்தல் என்னும் இலக்கண விதியாகும்.​ சோறு+பானை= சோறுப்பானை என்று எழுதுவதில்லை.​ சோற்றுப்பானை என்கிறோம்.​ ஆறு + வழி = ஆற்றுவழி என்கிறோம்.​ சோறு,​​ ஆறு என்பவற்றுள் ​(ற்+உ=று)​ உள்ள “ற்’ மற்றுமொன்று கூடி வருவதால் ஒற்று இரட்டித்தல் என்றுரைக்கிறோம்.​ சோ+ற்+ற்+உ =(சோற்று)

ஒற்று இரட்டித்த பின் வலி ​(வல்லொற்று)​ மிகுந்து சோற்றுப் பானை என்றாகிறது.​ அடையாறு + இல் = அடையாற்றில் என இங்கும் ஒற்று இரட்டித்தல் வேண்டும்.​ அடையாறில் என்று எழுதுவது பிழை.​ ஆற்றில் வெள்ளம் வந்தது என்றுதானே சொல்லுகிறோம்.​ ஆறில் வெள்ளம் வந்தது என்று சொல்வதில்லையே.​ மாடு+சாணம்= மாட்டுச்சாணம் என்கிறோம்.​ வீடு + சோறு= வீட்டுச் சோறு என்கிறோம்.​ இந்த இலக்கணத்தை மறக்க வேண்டாம்.

தமிழ்நாடு+ அரசு = தமிழ்நாட்டரசு என்றுதான் எழுத வேண்டும்.​ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பது பிழை.​ தமிழ்நாட்டரசுப் போக்குவரத்துக் கழகம் என்பதே சரியானது.​ தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்று பிழையற்ற தமிழில் ஒரு நிறுவனம் குறிக்கப்படும்போது,​​ தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏன் வந்தது?​ தமிழ்நாடு அரசு ஏன் வந்தது?​ தமிழ்நாட்டரசு என்று மாற்றுக.​ கிணறு+தவளை= கிணற்றுத் தவளை. காடு +பாதை = காட்டுப்பாதை என்றெல்லாம் மக்கள் சரியாகச் சொல்லும்போது நாடு+அரசு= நாட்டரசு என்றுதானே எழுத வேண்டும்?

கட்டுப்பாடு+அறை = கட்டுப்பாட்டறை எனச் சொல்க.​ மேம்பாடு + திட்டம் = மேம்பாட்டுத்திட்டம் என்க.​ நம்நாடு + சட்டம் = நம்நாட்டுச் சட்டம் தானே.​ விளையாட்டு செய்திகள் என்று தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள்.​ விளையாட்டுச் செய்திகள் என்று வல்லொற்று மிகுதல் வேண்டும்.​ விளையாட்டைப் பற்றிய செய்திகள் என உருபும் பயனும் உடன் தொக்க தொகை இதுவாம்.​ விளையாட்டுச் செய்திகளை விளையாட்டாய் எண்ணாதீர் ​(இக்குறிப்பில் ஒற்று இரட்டித்தல் இல்லை.​ வல்லொற்று மிகுதல் மட்டுமே)​​

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   - Page 2 Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by Nisha Fri 13 Feb 2015 - 13:40

அட


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   - Page 2 Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by *சம்ஸ் Fri 13 Feb 2015 - 14:11

Nisha wrote:அட

இதுவும் நல்லா இருக்கு
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   - Page 2 Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum