சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மெல்ல நடந்ததே புன்மாலை அந்திப் பொழுது... Regist11


Latest topics
» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Yesterday at 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Yesterday at 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Yesterday at 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Yesterday at 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Yesterday at 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Yesterday at 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Yesterday at 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Yesterday at 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Yesterday at 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» திருட்டு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:20

.
மெல்ல நடந்ததே புன்மாலை அந்திப் பொழுது... Khan11
மெல்ல நடந்ததே புன்மாலை அந்திப் பொழுது... Www10

மெல்ல நடந்ததே புன்மாலை அந்திப் பொழுது...

Go down

Sticky மெல்ல நடந்ததே புன்மாலை அந்திப் பொழுது...

Post by rammalar on Mon 7 Apr 2014 - 5:02


ஒட்டக்கூத்தர், சோழ மன்னனின் அரசவையில்
தலைவராக இருந்தார். புகழேந்திப் புலவரும் சோழ
மன்னன் அரசவையை அலங்கரித்தார்.

இரண்டு பெரும் புலவர்களும் தங்கள் இலக்கிய
விவாதத்தால் குலோத்துங்க சோழனையும் மற்ற
கவிஞர்கள், அறிஞர்களையும் மகிழச் செய்தனர்.

    ஒரு நாள் புகழேந்திப் புலவர் தாம் இயற்றிய
நளவெண்பாவில் உள்ள பாடல்களைப் பாடி
விளக்கமளித்தார். அவற்றில் ஒரு பாடலில் அந்தி
மாலைப் பொழுதை வர்ணித்திருந்தார்.


ஒரு பாடலில் அந்திப் பொழுதை அரசனாக உருவகம்
செய்துள்ளார். "அரசன் அரசவைக்கு வரும்போது
சங்குகள் ஊதும். அதுபோல் மல்லிகை மலர்களைச்
சங்காகக்கொண்டு வண்டுகள் ஊதுகின்றன.
அரசனுக்கு மெய்க்காப்பாளனாக கரும்புவில்
ஏந்திய மன்மதன் வருகிறான். அரசனின் தோளில்
மாலை அசைவது போல் முல்லை மலர்ந்திருக்க,
அந்திப்பொழுது என்னும் அரசன் ஆட்சி செய்ய
வருகிறான்", என்ற பொருளில்,

     "மல்லிகையே வெண் சங்கா வண்டூத வான்கரும்பு

      வில்லி கணை தெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்

      மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே

      புன்மாலை அந்திப் பொழுது''

     என்று பாடியுள்ளார்.
-
புகழேந்திப் புலவர் அந்திப் பொழுதின் அழகைப் பாடி
விளக்கம் சொன்னவுடன் ஒட்டக்கூத்தர், "புகழேந்திப் புலவர்
அந்திப்பொழுதின் அழகைப் பாடி விளக்கியது மிக அழகாக
இருந்தது. மேலும், சங்கை ஊதுபவன் சங்கின் அடிப்பகுதியில்
வாயை வைத்தல்லவா ஊதுவான்; புகழேந்திப் புலவரோ
வண்டு மல்லிகையின் மேற்பகுதியில் வாய் வைத்து ஊதியது
போல் ரீங்காரம் செய்தது என்றல்லவா பாடியுள்ளார்.
இது எப்படிப் பொருந்தும்?" என்று கேட்டார்.

    அதற்குப் புகழேந்திப் புலவர், "ஒட்டக்கூத்தர் கூறியதுபோல்
சங்கின் அடிப்பகுதியில் வாய் வைத்துத்தான் ஊத வேண்டும்.
ஆனால், வண்டு முதலில் மல்லிகையில் உள்ள தேனைக்
குடித்துவிட்டது. தேனை "மது" வென்றும் சொல்வார்கள்.
அதனால், மதுவை உண்ட வண்டு அறிவு மயங்கி, மல்லிகையைச்
சங்காகக்கொண்டு ஊதும்போது, அதன் மேல் பகுதி எது?
கீழ்ப்பகுதி எது என்று தெரியாமல் மேற்பகுதியைச் ஊதியது
போல் ரீங்காரம் செய்தது'' என்று பதில் கூறினார்.


    குலோத்துங்க சோழனும் மற்ற கவிஞர்களும் புகழேந்திப்
புலவர் கூறிய பொருத்தமான பதிலைக் கேட்டுப் பாராட்டினர்.
-

---------------------------------------------------------
   புலவர் கி. கிருஷ்ணசாமி

    நன்றி:- தினமணி



rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15638
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: மெல்ல நடந்ததே புன்மாலை அந்திப் பொழுது...

Post by பானுஷபானா on Mon 7 Apr 2014 - 15:37

சூப்பர் 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum