சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


 தமிழில் தான் பேசுகிறோமா? Regist11


Latest topics
» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Yesterday at 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Yesterday at 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Yesterday at 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Yesterday at 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Yesterday at 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Yesterday at 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Yesterday at 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Yesterday at 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Yesterday at 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» திருட்டு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:20

.
 தமிழில் தான் பேசுகிறோமா? Khan11
 தமிழில் தான் பேசுகிறோமா? Www10

தமிழில் தான் பேசுகிறோமா?

Go down

Sticky தமிழில் தான் பேசுகிறோமா?

Post by மதி on Thu 10 Apr 2014 - 17:44

தீஷு தமிழ் படித்துக் கொண்டிருந்தாள். சோளம் என்றால் என்ன என்றாள். சோளக்கருது என்றேன். அப்படினா என்றாள். அப்பொழுது தான் புரிந்தது நாங்கள் சோளத்தை கார்ன் என்று சொல்லுகிறோம் என்று. சிறு வயதில் சோளக்கருது என்று சொன்னது கார்ன் என்று எவ்வாறு மாறியது என்று யோசிக்கத் தொடங்கினேன். பதில் கிடைக்கவில்லை.

அப்படி எத்தனை வார்த்தைகளை மாற்றி இருக்கிறோம் அல்லது மறந்து இருக்கிறோம் என்று நாங்கள் பேசும் பொழுது கவனிக்கத் தொடங்கினேன்.

என் கவனிப்பைச் சொல்லுவதற்கு முன் அதற்கு முதல் நாள் நடந்த ஒரு சின்ன உரையாடல். எங்கள் தோழியர் வட்டத்தில் தெலுங்கு பெண் ஒருவர் இருக்கிறார். அவரிடம் சக்கரைக்கு தெலுங்கில் என்ன என்று ஒரு தோழி கேட்டதற்கு பஞ்சதாரா என்று சொல்லுவிட்டு, இப்பொழுது யாரும் பஞ்சதாரா என்று சொல்லுவது கிடையாது.யார் அவ்வளவு பெரிய வார்த்தையை உபயோகப்படுத்துவார்கள் என்றார். நான் உடனே நகைச்சுவைக்காக நயன்தாராவை எப்படி சொல்லுவீர்கள் என்றவுடன், நயன்தாரா தான் என்றார்கள். அது மட்டும் பெரிய வார்த்தை இல்லையா என்று சிரித்தோம். மற்றொரு தோழி இப்படி அடுத்த தலைமுறைக்குக் கடத்தாத‌ வார்த்தைகள் கொஞ்ச கொஞ்சமாக அழிந்து போகும் என்றார்கள்.

இப்பொழுது என் கவனிப்புக்கு வருவோம். நாங்கள் பேசுவதும், அடைப்புக்குறிக்குள் இருப்பது நான் சிறுவயதில் பேசியதும்.

1. ப்ரஷ் பண்ணு (பல் தேய்)
2. ஸிஸர் (கத்திரிக்கோல்)
3. ஸிலிப்பர்(செருப்பு)
4. ஸ்டவ் (அடுப்பு)
5. வெயிட் (காத்திரு)
6. டேஸ்ட் (ருசி)
7. ஸ்வீட் (இனிப்பா)
8. டைம் ஆகிடுச்சி (நேரம் ஆகிடுச்சி)
9. பனானா (வாழைப்பழம்)
10. டேட்ஸ்(பேரீச்சம் பழம்)
11. காஷூ (முந்திரி பருப்பு)

இது காலையில் பள்ளிக்குக் கிளம்பும் முன் ஒரு சில நிமிடங்கள் நடந்த உரையாடல்களில் நான் கவனித்தது. தோழி கூறியது போல் எத்தனை வார்த்தைகளைக் கடத்தத் தவறி இருக்கிறேன்.

வீட்டில் தமிழில் தான் பேசுவோம் என்று பெருமையாக நான் சொல்லுவது உண்டு. ஆனால் பேசுவது தமிழ் தானா என்கிற சந்தேகம் வரத் தொடங்கி உள்ளது.

நன்றி பூந்தளிர்
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

Sticky Re: தமிழில் தான் பேசுகிறோமா?

Post by Nisha on Thu 10 Apr 2014 - 18:32

நல்ல  பதிவொன்றை  பகிர்ந்தமைக்கு நன்றி மதி!

இந்த கட்டுரையாசிரியர் எங்கே வாழ்ந்து கொண்டு  இக்க்ட்டுரை எழுதி இருப்பார் என யோசித்து பார்க்கிறேன்.

இலங்கை, இந்தியா போன்ற சொந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு ஆங்கிலகலப்பில் பேசுவோரைவிட புலம்பெயர்ந்து  வாழ்வோர் ஆங்கிலக்கலப்புடன் பேசுதல்  குறைவோ என தோன்றுபடி  இருக்கும்.

புலம்பெயர் தமிழர் தான் தமிழ் பேசணும், தமிழ் படிக்கவேண்டும், தமிழ் வாழணும் என பேசிகொண்டு இருக்கிறோம்.  சொந்த நாட்டில்தமிழே  தெரியாமல் கான்வெண்ட் சந்ததி யொன்று உருவாகி கொண்டு வருகின்றது தெரியுமா! 

பேச்சுத்தமிழில் காணும் ஆங்கிலகலப்பு, எழுத்துதமிழில் காணும் எழுத்துபிழையென  தமிழை தமிழுக்காக நம பேசுகின்றோமா என்றால் அதில் நான்கு வார்த்தை ஆங்கிலம் வருவது இயல்பாகி விட்டது.

நல்ல தமிழ் பேசுவோம்னு சேனையில்  ஒரு  தொடர் ஆரம்பிக்கலாம் எனும் ஐடியாவும் வருகிறது உங்கள் கட்டுரை பார்த்து!

எங்கள் வீட்டில்  இரு பிள்ளைகளுமே இங்கே பிறந்து இங்கே கிண்டர்கார்டன்ஸ்கூல்னு  போய் அவர்கள் சிந்திக்கும்  மொழி தாய்மொழின்னால் அவர்கள் மொழி ஜேர்மன் என ஆகி போனது.

இந்த ஆங்கிலக்கலப்பு எங்க வீட்டில் ஜேர்மன் கலப்பாகி போனதென்னமோ நிஜம். மகனுக்கு தமிழ் பேசயும் புரிந்துகொள்ளவும் ஏன் ஓரளவு எழுத்துகூட்டி வாசிக்க வும் தெரியும்.அவனை ஐந்தாம் வகுப்பு வரை தமிழில் ஸ்பெஷலால் படிக்க செய்தோம். அதன் பின் அவனுக்கு ஜேர்மனுடன்  பிரெஞ்ச் ஆங்கிலம் என  புதிய மொழிகள் சேர ஒரே நேரம் நான்கைந்து மொழி படிக்க கஷ்டப்பட தமிழ்  சோறு போடுமான்னு  தோணி தமிழ் கட்டாச்சு! மேலே படிக்க அவனுக்கும் ஆர்வமில்லை!

மகளுக்கு  என்னதான் முட்டிகொண்டாலும்  அவளுடன் தமிழ் பேசி அவள் தமிழ் பேசி புரிய வைக்க  இன்னொரு  தமிழ்  ஜேர்மன் மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுது.

என்ன செய்வது!  சீனி சர்க்கரைன்னால்  தெரியும்தான்  அதை சுகர்ன்னால் தான் நமக்கே புரியிது். உப்புக்கு சால்ட்.  

வணக்கம் என சொன்னால் ஏதோ அன்னிய பாஷை பேசும் அன்னியர் போல் பார்க்கும் காலமும்.  யானைன்னால் எலிபண்டுன்னு  புரிய வைப்பதும், காலைச்சாப்பாடு பிரெட்டாகி போனதும் ..

பெரியவர்களை  மரியாதையாய் அழைக்கணுமென  போலிஷை  போலிஸ் மாமா என சொல்லி பழக்கி  எனக்குமே இப்ப அவர்கள்  போலிஸ்மாமா வாகி அம்மா ஏன் பொலிஸ்மாமாங்கறா என கிண்டலு்க்கும் ஆளாவதும் நடக்கிறது !

அதெல்லாம் சரி.. குட் மோனிங்க்  டியர் என சொல்லும் போது  கிடைக்கும்  மகிழ்ச்சி காலை வணக்கம் அன்பே என சொன்னால் கிடைக்குமா.. !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழில் தான் பேசுகிறோமா?

Post by மதி on Thu 10 Apr 2014 - 18:57

இந்த கட்டுரையாசிரியர் எங்கே வாழ்ந்து கொண்டு  இக்க்ட்டுரை எழுதி இருப்பார் என யோசித்து பார்க்கிறேன்.

உங்களின் கேள்விக்கான பதில்

அவரின் சொந்த ஊர் மதுரை படிப்பை முடித்து பெங்களூரில் மென்பொருள் இன்ஜினியராக வேலை பார்கிறார்

உங்களின் உள்ளம் திறந்த பதில் படிக்கும் போது என்னை அறியாது ஒரு மதிப்பும் மரியாதையும் வருகிறது உங்கள் மேல் வலிக்கும் போது அம்மா என்று கத்தினால் அந்த வலிக்கு மருந்தாவது போல் நான் உணர்கிறேன் சொந்த மொழிக்கு என் தாய்மொழிக்கு தேன்சொட்டும் தமிழ் அதை பேசுவதற்கு இன்று வெட்கப்படுகிறார்கள்
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

Sticky Re: தமிழில் தான் பேசுகிறோமா?

Post by Nisha on Thu 10 Apr 2014 - 19:06

மதி! புரிதலுக்கு நன்றி!

தமிழ் என்கல்வி மொழி அல்ல.. இலங்கையில் இருக்கும் போது  தமிழ் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன்! ஆங்கிலம் , தமிழ்னு  பாடம் இருந்தது. அதன் பின் கடந்த 25  வருடமாய் சுவிஸ  இருக்கிறேன்! என் தமிழ் ஆறிவும் ஆரவமும்  சுயமாய் கற்றவை தான். இங்கே  மேலே படிப்பு வேலை எல்லாம் ஜேர்மன் மொழியில் தான்.

நிரம்ப படிப்பேன். புத்தகங்கள்  என் உயிர் நண்பர்கள்.உறவுகள, எனை தேற்றி ஆற்றுபவர்கள். மகாபாரதமா. இராமாயணமா,கம்பராயணமா, திருக்குறளா,  பொன்னியின் செல்வனா, பாரதியார் கவிதைகளா, ரமணிச்சந்திரன் கதையா  எதுவானாலும் தினம் வாசிக்க வேண்டும. என் மூச்சு நிற்கும் இறுதி நேரம்கூட ஏதும் புத்தகம் கையில் வைத்திருப்பேனோ என்னமோ யாரறிவார் )((


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழில் தான் பேசுகிறோமா?

Post by ராகவா on Thu 10 Apr 2014 - 19:52

Nisha wrote:மதி! புரிதலுக்கு நன்றி!

தமிழ் என்கல்வி மொழி அல்ல.. இலங்கையில் இருக்கும் போது  தமிழ் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன்! ஆங்கிலம் , தமிழ்னு  பாடம் இருந்தது. அதன் பின் கடந்த 25  வருடமாய் சுவிஸ  இருக்கிறேன்! என் தமிழ் ஆறிவும் ஆரவமும்  சுயமாய் கற்றவை தான். இங்கே  மேலே படிப்பு வேலை எல்லாம் ஜேர்மன் மொழியில் தான்.

நிரம்ப படிப்பேன். புத்தகங்கள்  என் உயிர் நண்பர்கள்.உறவுகள, எனை தேற்றி ஆற்றுபவர்கள். மகாபாரதமா. இராமாயணமா,கம்பராயணமா, திருக்குறளா,  பொன்னியின் செல்வனா, பாரதியார் கவிதைகளா, ரமணிச்சந்திரன் கதையா  எதுவானாலும் தினம் வாசிக்க வேண்டும. என் மூச்சு நிற்கும் இறுதி நேரம்கூட ஏதும் புத்தகம் கையில் வைத்திருப்பேனோ என்னமோ யாரறிவார் )((

 சூப்பர் சூப்பர் 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தமிழில் தான் பேசுகிறோமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum