சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா? Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா? Khan11
வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா? Www10

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by ahmad78 on Tue 17 Jun 2014 - 16:14

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா? Man%2Bface
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!.
யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.

உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.
உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.

ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.

ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.

ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா? Upraisng

முஸ்லிம்களே!.. மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்கள்?. ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர்கள்!!. அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே!. என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்!.
யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.
காரணம் ஒன்றே ஒன்றுதான்!. அதுதான், அவர்கள் கல்வியை முழுமையாக கற்பதால்!!. அதுமட்டுமல்ல!!. மேலும் அவர்களுக்கு சூழ்ச்சியே தாரகமந்திரமாக இருந்தாலும், முஸ்லிம்களை போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாக மோதி சண்டையிட்டுக் கொள்வது கிடையாது!.
கிறிஸ்தவர்களுக்குள் ஆயிரம் பிளவுகள்!. பிரிவுகள்!!. ஒரு வேதத்தையே, பல பிரிவுகளாக்கி கொண்டவர்கள். ஆனால் குறிக்கோள்கள் ஒன்றாகவே உள்ளது!. கல்வி நிலையங்களை தங்களின் பிடியில் வைத்திருப்பதினால் அவர்கள் மற்ற எல்லோரை விட முன்னேறி கொண்டிருகின்றனர்.
ஆனால்......!ஒரே வேதத்தை கொண்ட இஸ்லாத்தில் ஜாதிகள், பிரிவுகள் கிடையாது!. ஆனால் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே நூற்றுகணக்கான ஜமாத்கள்!. இயக்கங்கள்!. பிரிவுகள்!. மற்றும் பிரிவினைகள்!. ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம்!!. கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்றும், அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீனடித்துக் கொண்டு இருப்பதேன்?. 

தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், எதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பை கொண்ட கல்விநிலையத்தை தொடங்கி நடத்தியதுண்டா?.
ஆனால்......!தி.க வின் கி.வீரமணி தொடங்கி, சங்கராச்சாரியார் வரை வல்லம் மற்றும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்த முஸ்லிம் இயக்கமாவது அதை கண்டாவது சிந்தித்தோமா?.
அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.

இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.
உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன!.
ஆனால்......!உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!. இருப்பதையும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைகழகங்கள் முந்திவிட்டன!.
உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.
ஆனால்......!முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே!.
கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள், 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர்.
ஆனால்......!முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை!.
கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98% பூர்த்தி செய்துள்ளன.
ஆனால்......!முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50% மட்டுமே பூர்த்தி செய்துள்ளன!.
40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்.
ஆனால்......!முஸ்லிகள் 2% பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்!.
அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.
ஆனால்......!முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து, ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.
உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
ஆனால்......!ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.
ஆனால்......!இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.
கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.
ஆனால்.....!1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்!.
மேற்கண்ட அணைத்து புள்ளிவிவரங்களும் முஸ்லிம்களின் நிலையை சத்தமிட்டு சொல்லிகொண்டு இருக்கும் அதே வேலை, அதை காது கொடுத்து கேட்கக்கூட இவர்களுக்கு நேரம் இல்லை!. மனம் இல்லை!. அக்கறை இல்லை!!!.
யூதர்களின் கண்டுபிடிப்புக்கள் உலகை மாற்றியதில் சில:

Micro Processing Chip.- Stanley Mezor (Jewish)

Nuclear Chain Reactor - Leo Sziland (Jewish)

Optical Fiber Cable - Peter Schultz (Jewish)

Traffic Lights - Charles Adler (Jewish)

Stainless Steel - Benno Strauss (Jewish)

Sound Movies - Isador Kisee (Jewish)

Telephone Microphone - Emile Berliner (Jewish)

Video Tape Recorder - Charles Ginsburg (Jewish)
யூதர்களால் நடத்தப்படும் சிறந்த தொழில் நிறுவனங்கள்.

Polo - Ralph Lauren (Jewish)

Coca Cola - Jewish

Levi's Jeans - Levi Strauss (Jewish)

Sawbuck's Howard Schultz (Jewish)

Google - Sergey Brin (Jewish)

Dell Computers - Michael Dell (Jewish)

Oracle - Larry Ellison (Jewish)

DKNY - Donna Karan (Jewish)

Baskin & Robbins - Irv Robbins (Jewish)

Dunkin Donuts - Bill Rosenberg (Jewish)
உலகத்தை மீடியா மூலம் ஆட்டிப்படைக்கும் யூத மீடியாக்கள்.

Wolf Blitzer - CNN (Jewish)

Barbara Walters - ABC News (Jewish)

Eugene Meyer - Washington Post (Jewish)

Henry Grunwald - Time Magazine (Jewish)

Katherine Graham - Washington Post (Jewish)

Joseph Lelyeld - New York Times (Jewish)
வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா? 31-01

எனவே முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்!. உங்களின் குழந்தைகளை, சந்ததியினரை கற்றவர்களாக மாற்ற முயலுங்கள். கல்வியை எப்போதும் முன்னெடுத்து செல்லுங்கள். முன்னேற்ற கல்வி கற்பதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் முயலவில்லை எனில், இனி உங்களின் குழந்தைகள் அவர்களாகவே முயலமாட்டார்கள்!.
எனவே முஸ்லிம்களே ஓன்று படுங்கள்!. கல்வியறிவை பெருக்குங்கள்!. பெறுங்கள்!!. உலகில் தலை சிறந்து விளங்குங்கள்!. இது ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந்தாலும், தமிழக முஸ்லிம்களே நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!!. ஏனெனில் நீங்களும் உலக முஸ்லிம்களில் அடங்குவீர்கள்!!.
நன்றி அதிரை முஜீப்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 17:06

இதனை கொஞ்சம் நேரம் ....

செலவு செய்து வாசித்தால்.

யாவரும் நன்மை பெறுவர் என்பது நிச்சயம். 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by Nisha on Tue 17 Jun 2014 - 17:19

இத்தனை கணக்கெடுப்புக்களை இட்டவர்கள் முதலாவதும் முக்கியமானதுமான் ஒன்றை விட்டு விட்டார்களே?

ஏன்?!

பெண்களை அடக்கியாளும், பெண்களுக்கு கல்வி மறுக்கும் எந்த சமுதாயமும் அவ்வளவு சீக்கிரம் வெற்றிப்பாதையை தொடுவதில்லை.!

கிறிஸ்தவர்கள் முன்னேறினால் அதன் அடிப்படை பெண்களையும் தமக்கு நிகராக அனுமதித்ததே!

இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு யூதர்கள் இறைவனின் நேரடி வாரிவுகள் என்பதும் அவர்களின் அறிவு மட்டுமே அவர்களுக்காக இறைவன் இட்டவை என்பது என்பது ஏனையவைகளை பறித்து நாடோடியாய் அலைய விட்டதும் அறிய் கூடியதுதானே!

ஹிடலர் காலத்தில் தேடி தேடி அழிக்கப்ட்ட யூத இனம் மீண்டும் துளிர்ப்பதும் பினிக்ஸ் பறவை போல் உயிர்ப்பதும்ம் இ்றைவன் முன்னறிவித்தவை. அவர்களை நாம் நமக்கான முன் அறிவிப்பாய் மட்டுமே கொள்ள வேண்டும்!நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by Nisha on Tue 17 Jun 2014 - 17:28

இலங்கை பிரச்சனையை எடுத்து கொண்டால் வரலாற்றின்படி முதல் இனரீதியான கலவரம் 1948ல் இஸ்லாமிய பெளத்தக்கலவரமே.

அக்காலத்தில் பௌத்த முஸ்லில் மக்களுக்கிடையிலான கலவரத்தினை தீர்த்துவைத்தவர்கள் தமிழர்கள்.

பொதுவான பார்வையில் இந்து, கிறிஸ்தவம் போல் இஸ்லாம் ஒரு மதம் என்பதை மறந்து இனம் என்று எண்ணத்தோன்றுவதன் விளைவுகள் தான் அனைத்துக்கும் காரணம்!

அடுத்தது ஏனைய மதத்தவருடன் விட்டுக்கொடுத்து வாழ இயலாத வாறு மார்க்க கட்டுப்பாடுகள் அவர்களை மற்றவர்களிடமிருந்து தள்ளியே நிறுத்தி வைக்கின்றது.

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்பதனால் தான் கிறிஸ்தவ சமுதாயம் முன்ன்னேறி செல்கின்றது எனும் உண்மையை எப்போது புரிந்து.. காலத்துக்கு ஏற்ப மாறுவர்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 17:32

Nisha wrote:இத்தனை கணக்கெடுப்புக்களை இட்டவர்கள் முதலாவதும் முக்கியமானதுமான் ஒன்றை விட்டு விட்டார்களே?

ஏன்?!

பெண்களை அடக்கியாளும், பெண்களுக்கு கல்வி மறுக்கும் எந்த சமுதாயமும் அவ்வளவு சீக்கிரம்  வெற்றிப்பாதையை தொடுவதில்லை.!

கிறிஸ்தவர்கள்  முன்னேறினால் அதன் அடிப்படை  பெண்களையும் தமக்கு நிகராக அனுமதித்ததே!

இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு யூதர்கள்  இறைவனின் நேரடி வாரிவுகள் என்பதும் அவர்களின் அறிவு மட்டுமே அவர்களுக்காக இறைவன் இட்டவை என்பது என்பது ஏனையவைகளை பறித்து நாடோடியாய் அலைய விட்டதும் அறிய் கூடியதுதானே!

ஹிடலர் காலத்தில் தேடி தேடி அழிக்கப்ட்ட யூத இனம்  மீண்டும் துளிர்ப்பதும்  பினிக்ஸ் பறவை போல் உயிர்ப்பதும்ம்  இ்றைவன் முன்னறிவித்தவை. அவர்களை நாம் நமக்கான முன் அறிவிப்பாய் மட்டுமே கொள்ள வேண்டும்!

உங்கள் கருத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும்...

பயனுள்ள அங்கீகாரத் தகவலும் கூட...

பகிர்வுக்கு பாராட்டுக்கள்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by Nisha on Tue 17 Jun 2014 - 17:47

இத்த்னைக்குமான மிகப்ப்பெரிய சர்வாயுதம உலக நாடுகளின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யகூடிய வ்ல்லமை யை தம்மிடம் வைத்திருந்தும் அமேரிக்கா போன்ற நாடுகளிடம் அடிமைப்பட்டு அவன் போடும் எலும்புத்துண்டுகளாம் மது, மாது, பொருளெனும் போதைக்கு அடிபணிவதும் தான் இத்தனைக்கும் காரணம்.

அனேக முஸ்லிம் நாட்டில் பெண் சுதந்திரம் இல்லை. மனிதர்களை புரிந்திடும் மனித்ம இல்லை. சக மனிதரை அடிமைகள் என பாவிக்கும் நிலை அவர்களிடம் இருக்கும் பணத்தின் போதை கண்களை மறைக்கின்றது.

சவுதியிலிருந்து அரபி தேசத்திலிருந்து உல்லாசப்பயணிகளாய் வரும் பல அரபிகளை இங்கே காணும் போது வெறுப்புத்தான் மிஞ்சும்.

பணம் இருந்தால் மட்டும் போதுமா. மனமும் குணமும் வேண்டாமா!

என் இந்த வரிகள் என் அன்பு உறவுகள் உங்கள் எவரையும் காயப்படுத்தும் நோக்கில் இல்லை என்பதை புரிந்திடுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 18:02

முஸ்லிம் உலகத்தாரின் அலங்கோலம்....

மாற்றான் மதிக்குமளவுக்கு இல்லாவிட்டாலும்...

மிதிக்கும் அளவுக்கு நடந்து கொள்ளாதே !!!!!

நிதர்சனத்தை இங்கு நிஷா பதிவிட்டிருக்கிறாங்க....

யாரும் மனதை அழுக்காக்கிக் கொள்ள வேண்டாம்.

நிஷா உண்மையும்,,யதார்த்தத்தையும்

சித்தரித்துள்ளார்... அவ்வளவுதான்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 19:10

இஸ்லாமியர்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளார்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by Nisha on Tue 17 Jun 2014 - 19:41

நண்பன் wrote:இஸ்லாமியர்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளார்கள்

காரணம்?

உங்களுக்கு கல்வி மறுக்கப்ட்டதா? அல்லது கற்பித்தல் மறுக்கப்ட்டதா?

சமுதாய மாற்றம் தேவையெனில் முதலில் அடிப்படை கல்வி அவசியம்.
சமுதாயம் என்பது என்ன?

நீங்கள், உங்கள் குடும்பம், உங்கள் உறவினர், உங்கள் கிராமம், உங்க சுற்றுப்புறம்.. இறுதியில் தான் நாடு!

முதலில் உங்களில் ஆரம்பித்தால் அடுத்து உங்கள் சமுதாயம் வளரும். ஆனால் அடிப்படையை விட்டு விட்டு மார்க்க ரிதியில் வாழ்ந்தால் போதுமென உங்களுக்கு நீங்களே கட்டுபாடு விதித்துகொண்டு மாறி வரும் உலகத்தை ஏற்க பின் தங்கி அல்லது அதனுடன் போட்டியிட முடியாது இருக்கும் நிலை ஏன்?

கல்வி நம்க்கு நிரம்ப விடங்களை , நம் சிந்தனையில் பக்குவத்தை கற்பிக்கும் என்பது புரிந்திடும் காலம் எப்போது? உங்கள் வீட்டு பெண்களில் எத்தனை பேர் இன்று 10 வகுப்போடு இடை நிறுத்தப்ட்டு வீட்டுக்குள் அடைக்கபடுகின்றார்கள்!?

ஆண்களிலும் கலாசாலை செல்லவும் மருத்துவ பீட, பொறியியல் பீடத்துக்கு எத்தனை வீதமானவர்கள் வருடம் தோறும் செல்கின்ரார்கள்? ஐந்து வேளை தொழுகை முக்கியம். உணவில் கலால் முக்கியம் என போதனையோடு கல்வியும் முக்கியம் எனும் போதனையை உங்கள் அடி மனதில் ஏற்கப்டாமல் போனதேன்?நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by Nisha on Tue 17 Jun 2014 - 19:52

நானே காண்கின்றேன்! எத்தனை திற்மை சாலிகள் உங்களுக்குள் இருக்கும் திறமையை அறியாது பழுங்கிபோயிருக்கின்றீர்கள்?

அதிகம் வேண்டாம். இம்போர்ட் வானொலியில் ஒரு முறை மட்டுமே நான் பேசினேன். அவர்களை நான் நாற்பது வயதுடையோராய் அஞுபவ சாலிகளாய் கணித்திருந்தேன் தெரியுமா?

சேனையில் அவர்கள் அறிமுகமான்பின் அவர்கள் 17 இலிருந்து 22 வயதுடையோர் என அறியும் போது இத்தனை தெளிவாய் திறமையோடிருக்கும் இவர்கள் தம் கல்வியை முடிக்காமல் போனதேன் எனும் கேள்வி வருகின்றது?

காலம் இழுக்கும் சூழலில் இன்னும் சில காலத்தில் குடும்ப சூழல் எனும் மாயைக்குள் இழுபட்டு ஏதோ ஒரு மத்திய கிழக்கு நாட்டில் தொழில் தேடி தம் இளமையை கழித்திட முனையும் போது அத்த்னை திறனும் என்னாகும் ?

நம்மில் பலர் நம் நிகழ் காலம் குறித்து மட்டும் சிந்திக்கின்றோம். நம் சந்ததியின் எதிர்காலம் கேள்விகுறியாகும் படி அதை சிந்திப்பதே இல்லை!

இத்தனைக்கும் என்ன செய்ய போகின்றீர்கள்? உணர்ச்சி வசப்பட்டு வெட்டு குத்து அடிதடி உயிருக்கு உயிரென் செல்ல போகின்றீர்களா? இல்லை நாளையாவது நாம் மாறுவோம் என உணர போகின்றீர்களா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 20:13

நண்பன் wrote:இஸ்லாமியர்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளார்கள்

இக்கருத்தினை நான் முற்றாக மறுக்கின்றேன் நண்பா !!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by Nisha on Tue 17 Jun 2014 - 20:17

jaleelge wrote:
நண்பன் wrote:இஸ்லாமியர்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளார்கள்

இக்கருத்தினை நான் முற்றாக மறுக்கின்றேன் நண்பா !!!!

மறுத்தலுடன் விளக்கமும் வேண்டும் சார்! இவ்வகை விவாதங்கள் பல விழிப்புணர்வுகளை  தரும் வாய்ப்பே  அதிகம்..

உங்கள் கருத்தினை எழுதுங்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 20:35

Nisha wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:இஸ்லாமியர்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளார்கள்

இக்கருத்தினை நான் முற்றாக மறுக்கின்றேன் நண்பா !!!!

மறுத்தலுடன் விளக்கமும் வேண்டும் சார்! இவ்வகை விவாதங்கள் பல விழிப்புணர்வுகளை  தரும் வாய்ப்பே  அதிகம்..

உங்கள் கருத்தினை எழுதுங்கள்?

இதற்க்கு மிகப் பெரியதாய்  கட்டுரையே எழுத வேண்டும்...

ஆனால் எனது வேலைப் பழு இடமளியாமைக்கு வருந்துகிறேன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 20:40

jaleelge wrote:
நண்பன் wrote:இஸ்லாமியர்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளார்கள்

இக்கருத்தினை நான் முற்றாக மறுக்கின்றேன் நண்பா !!!!

அப்படி என்றால் இந்தக் கருத்துக்கள் பொய்யானதா ஜீ
அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.

உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன!.

ஆனால்......!
உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!. இருப்பதையும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைகழகங்கள் முந்திவிட்டன!.

உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.
ஆனால்......!

முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே!.

கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள், 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர்.

ஆனால்......!

முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை!.

கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98% பூர்த்தி செய்துள்ளன.

ஆனால்......!

முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50% மட்டுமே பூர்த்தி செய்துள்ளன!.

40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்.

ஆனால்......!

முஸ்லிகள் 2% பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்!.

அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.

ஆனால்......!

முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து, ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.

உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

ஆனால்......!

ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.

ஆனால்......!

இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.

கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.

ஆனால்.....!

1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்!.

மேற்கண்ட அணைத்து புள்ளிவிவரங்களும் முஸ்லிம்களின் நிலையை சத்தமிட்டு சொல்லிகொண்டு இருக்கும் அதே வேலை, அதை காது கொடுத்து கேட்கக்கூட இவர்களுக்கு நேரம் இல்லை!. மனம் இல்லை!. அக்கரை இல்லை!!!.
இவைகளை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் ஏன் நமக்கு இந்த நிலை நமக்கு முன்னேற்றத்திற்கு தடை என்னவாக இருக்கும் வறுமையா அப்படியாவின் பணம் படைத்த நாடுகளில் வாழும் இஸ்லாமயர்கள் எந்த வகையான கண்டுபிடிப்புக்களை செய்துள்ளார்கள் இப்படி என்னுள் பல கேள்விகள் ஜீ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by Nisha on Tue 17 Jun 2014 - 20:43

இயன்ற போது  எழுதுங்கள் சார்!

அதிரை  மூஜீப் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையினை ஏற்றிருக்கின்றீர்கள். அவர் கட்டுரையின்  கரு கல்வி குறித்ததாகவே  இருக்கின்றது.

அப்படி இருக்கும் போது நண்பனின் கருத்தை முற்றாக் மறுத்திட காரணம்  என்ன என்பதே என கேள்வி?

சில நேரங்களில்  நான்  கேட்பதும் , எழுதுவதும்  அதிகப்படியாய்  தோன்றலாம்! ஆழ்ந்து யோசித்தால் அதன் நிதர்சனம் புரியும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 20:56

Nisha wrote:இலங்கை பிரச்சனையை எடுத்து கொண்டால்  வரலாற்றின்படி முதல் இனரீதியான கலவரம் 1948ல் இஸ்லாமிய பெளத்தக்கலவரமே.

அக்காலத்தில் பௌத்த முஸ்லில் மக்களுக்கிடையிலான  கலவரத்தினை தீர்த்துவைத்தவர்கள் தமிழர்கள்.

பொதுவான பார்வையில் இந்து, கிறிஸ்தவம்  போல்   இஸ்லாம் ஒரு மதம் என்பதை மறந்து இனம் என்று எண்ணத்தோன்றுவதன் விளைவுகள் தான் அனைத்துக்கும் காரணம்!

அடுத்தது  ஏனைய மதத்தவருடன் விட்டுக்கொடுத்து வாழ இயலாத வாறு மார்க்க கட்டுப்பாடுகள் அவர்களை  மற்றவர்களிடமிருந்து தள்ளியே நிறுத்தி வைக்கின்றது.

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்பதனால் தான் கிறிஸ்தவ சமுதாயம் முன்ன்னேறி செல்கின்றது எனும் உண்மையை எப்போது புரிந்து.. காலத்துக்கு ஏற்ப  மாறுவர்?இல்லை இதை நான் மறுக்கிறேன் இனம் இல்லை இஸ்லாம் ஒரு மதம்தான்
நிச்சியமாக அடுத்த மதத்தவர்களுடன் விட்டுக்கொடுத்து வாழக்கூடியவர்களில் முஸ்லிம்கள்தான் முதலிடம் அது மட்டுமில்லை அடுத்தவர்களின் மதத்தை இழிவு படுத்தும் குணமும் முஸ்லிம்களுக்கில்லை காரணம் குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் உங்களுக்கு உங்கள் மார்க்கம் எனக்கு என்னுடய மார்க்கம் 109:6.

இவ்வாறு குர்ஆனில் உள்ளது அடுத்தவர்களின் மதத்தை நாங்கள் மதிக்கிறோம் அவரவர் நம்பிக்கைக்கேற்றாப்போல் அவரவர் வாழ்க்கை

ஆனால் இன்றய உலகில் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் காட்டு மிராண்டிகள் கருத்து சுதந்திரத்திற்கும் பெண் சுதந்திரத்திற்கும் எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி விட்டார்கள் உண்மையான அமெரிக்கா போன்ற தீவிரவாத நாடுகள்..

இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை (freedom-of-Religion): -

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:256)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by Nisha on Tue 17 Jun 2014 - 23:11

நன்று!

உங்களையும் உங்களை சார்ந்தோரையும் வைத்து முழு சமுதாயத்துமே எடை போடல் கூடாது!

இனம் இல்லை மதம் தான் எனும் புரிதல் உங்களுக்குள் இருப்பதால் தானென்னுடன் இத்தனை பேச முடிகின்றது என்பதை நான் அறிவேன்.

ஆனால் நிஜம் அப்படி அல்ல. முஸ்லிம் களுகான மொழி அரபி என்பதுதான் அனேகர் புரிதல். தமிழ் பேசுவதால் தம்மை தமிழரென இலகுவில் ஒப்புகொள்ள தயங்குவோராய் இருப்போரும் அனேகர்!

இந்த உலகில் பரந்து பல நாடுகளிலும் வாழும் முஸ்ஸிம்கள் அந்தந்த நாட்டு மொழியை பேசினாலும் அராபிய மொழிதான் தம் தாய் மொழி எனு உறிதியுடன் தான் இருப்பர்.. அதே நேரம் எந்த கிறிஸ்தவனும் பைபிள் எழுதப்ட்டது என்பதற்காக எப்ரேய கீப்ரு மொழிகளை தம் மொழிகளென சொல்வதில்லை. தாம் வாழும் நாட்டின் மொழியை தம் மொழியாக்கியே வாழ்வர்.

தீவிரவாதிகளென சிந்தரிக்க அமெரிக்க அரசு முயன்றது அந்த நாட்டு இரட்டைகோபுரத்தின் தாககுதலுக்கு பின்னர் தான் ! அது வரை பின் லாடனை ராஜ் மரியாதையோடு தான் நடத்தியது.

பின் லாடனெனும் ஒருவனை வளர்த்தெடுத்தது அமெரிக்காவானாலும் அவனுக்கு துணை போனது இவன் தானே!

பெண் கல்வி மறுக்கப்டுவது அமேரிக்கா சொல்லிதான் தெரியவேண்டும் எனும் சூழலில் யாரும் இல்லை.

கோசோவா, துருக்கி போன்ற ஐரோப்பிய நாடுகளிலேயே இதுதான் நிலை. மிக சிறிய வயதில் திருமணமுடிப்பதும் கல்வி மறுக்கப்டுவதும், வீட்டுக்குள் அடைட்டு கிடைப்பதும் தான்பெண்ணுக்கான்வை எனும் போக்கு முஸ்ஸிம் சமுதாயத்தில் சற்று அதிகமே!

இதை நீங்கள் ஒப்புகொண்டுதான் ஆக வேண்டும் ! விளையாட்டில் கல்வியில் செயல்பாட்டில் அவளுக்கான திறமைகள் அடக்கியாளப்பட்டு பிள்ளைகள் பெற்றெடுக்கும் சாதனமாகவே பார்க்கபடுகின்றாள்.

அடுத்த மதத்தவர்களுடன் விட்டுக்கொடுத்து வாழக்கூடியவர்களில் முஸ்லிம்கள்தான் முதலிடம்

இந்த விடயத்திலும் நீங்கள் தான் உங்களை மெச்சிக்கொள்ளணும் தம்பி! உங்கள் மார்க்க கட்டுப்பாடே அன்னியரை வீட்டுக்குள் நுழைப்பதை தடை செய்கின்றது. உங்களைப்போன்ற ஒரு சிலர் பழகினாலும் பல்ர் அப்படி அல்ல!

இனம் மொழி ஜாதி கடந்து அனைவரையும் உபசரிப்பதில் அன்புகாட்டுவதில் கிறிஸ்தவர்களுடன் யாரும் போட்டி இட முடியாது எனும் நிஜம் புரிவோம்!

இத்தனை சுட்டலும் உங்களை குற்றம் சாட்டவென நான் இட்டதாய் நினையாது இதிலிருக்கும் உண்மையை புரிந்திட முயலுங்கள்.

குற்றம் சுமத்துதல் என் நோக்கம் அல்ல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 23:19

இந்த விடயத்திலும் நீங்கள் தான் உங்களை மெச்சிக்கொள்ளணும் தம்பி! உங்கள் மார்க்க கட்டுப்பாடே அன்னியரை வீட்டுக்குள் நுழைப்பதை தடை செய்கின்றது. உங்களைப்போன்ற ஒரு சிலர் பழகினாலும் பல்ர் அப்படி அல்ல!
இந்த விடயத்தை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது நிச்சியமாக நீங்கள் சொல்லும் இந்த விளக்கம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் இது பற்றி இப்போது என்னால் அதிகம் எழுத முடியாது மீண்டும் நான் தொடர்வேன் ஜாதிகளற்ற மதம் இஸ்லாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by Nisha on Tue 17 Jun 2014 - 23:25

நண்பன் wrote:

நிச்சயமாய் நண்பன் சார்!

இந்த விளக்கம் மட்டும் தான் ஏற்க இயலாததா!? என் அறிவில் , புரிதலில்தவறிருக்கலாம் அல்லவா?

தம் வீட்டு பெண்களை அன்னியர் பார்ககவே அனுமதிக்காக சூழல் இருக்கும் போது எப்படி அனுமதிக்க இயலும் எனும் கேள்வி எனக்குள் வருகின்றது.

எழுதுங்கள்.. காத்திருக்கின்றேன்.. எழுதினால் பேசினால் தான் நமக்குள் தெளிவு கிடைக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 23:31

இதற்கு விளக்கம் உங்களுக்கு தெரியாதென்றால் நான் எழுதலாம் ஒரு நூலகத்திடம் ஒரு புத்தகம் விளக்கம் சொல்வதா உங்கள் கேள்விக்கு உங்களிடமே பதில் உள்ளது நான் சொல்வதை விட அதிகமாக....!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by Nisha on Tue 17 Jun 2014 - 23:32

உங்களுக்கு தெரியுமோ என்னமோ

வடக்கு கிழக்கை தமிழருக்கென தனி நாடாக்கினால் எமக்கும் தனி நாடொன்றை பிரித்து தர வேண்டும். நம தமிழரல்ல எனும் அரசியல் சூழலும் முஸ்ளிம் அரசியல் வாதிகளால் முன்னொரு பொழுதினில் முன் வைக்கப்பட்டது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by Nisha on Tue 17 Jun 2014 - 23:36

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
இந்த விடயத்திலும் நீங்கள் தான் உங்களை மெச்சிக்கொள்ளணும் தம்பி! உங்கள் மார்க்க கட்டுப்பாடே அன்னியரை வீட்டுக்குள் நுழைப்பதை தடை செய்கின்றது. உங்களைப்போன்ற ஒரு சிலர் பழகினாலும் பல்ர் அப்படி அல்ல!

இந்த விடயத்தை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது நிச்சியமாக நீங்கள் சொல்லும் இந்த விளக்கம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் இது பற்றி இப்போது என்னால் அதிகம் எழுத முடியாது மீண்டும் நான் தொடர்வேன் ஜாதிகளற்ற  மதம் இஸ்லாம்

நிச்சயமாய் நண்பன் சார்!

இந்த விளக்கம் மட்டும் தான் ஏற்க இயலாததா!?  என்  அறிவில் , புரிதலில்தவறிருக்கலாம் அல்லவா?

தம் வீட்டு பெண்களை  அன்னியர்  பார்ககவே அனுமதிக்காக சூழல் இருக்கும் போது  எப்படி அனுமதிக்க இயலும் எனும் கேள்வி எனக்குள் வருகின்றது.  

எழுதுங்கள்.. காத்திருக்கின்றேன்..  எழுதினால் பேசினால் தான் நமக்குள் தெளிவு கிடைக்கும்.
இதற்கு விளக்கம் உங்களுக்கு தெரியாதென்றால் நான் எழுதலாம் ஒரு நூலகத்திடம் ஒரு புத்தகம் விளக்கம் சொல்வதா உங்கள் கேள்விக்கு உங்களிடமே பதில் உள்ளது நான் சொல்வதை விட அதிகமாக....!

ஹாஹா! சிரிச்சிட்டேன்!

நான் நூலகமா.. அதெல்லாம் இல்லை உங்கள் அப்பாவி நிஷாக்கா தான்பா! என்றைக்கும் அப்படித்தான்!

நான் அரசியல் பக்கம் போவதே இல்லை. அரசியலும் மதமும், சினிமாவும் நான் பின்னூட்டங்கள் கூட இட விரும்பாதவைகள். இன்றைக்கு ஏனோ அதை போக்கில் இழு பட்டு போய் எழுதி விட்டேன்.

யாரையாவது என் எழுத்துக்கள் காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்ப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 23:41

Nisha wrote: உங்களுக்கு தெரியுமோ என்னமோ

வடக்கு கிழக்கை தமிழருக்கென தனி நாடாக்கினால் எமக்கும் தனி நாடொன்றை பிரித்து தர வேண்டும்.  நம தமிழரல்ல எனும் அரசியல் சூழலும் முஸ்ளிம் அரசியல் வாதிகளால்  முன்னொரு  பொழுதினில்  முன் வைக்கப்பட்டது!
இது பற்றி நான் அறிந்திருக்க வில்லை அக்கா...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 23:43

நானறிந்த யாழ் நூலகம் சுவிஸ்ஸிலா ????

நூலகத்தின் பதிவுகள்....

மிக அமைதியும்...பெறுமானமுடையதாகவிருக்கும்...

அதில் நான் விரும்பியது....

நான் அரசியல் பக்கம் போவதே இல்லை. அரசியலும் மதமும், சினிமாவும் நான் பின்னூட்டங்கள் கூட இட விரும்பாதவைகள். இன்றைக்கு ஏனோ அதை போக்கில் இழு பட்டு போய் எழுதி விட்டேன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 23:43

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
இந்த விடயத்திலும் நீங்கள் தான் உங்களை மெச்சிக்கொள்ளணும் தம்பி! உங்கள் மார்க்க கட்டுப்பாடே அன்னியரை வீட்டுக்குள் நுழைப்பதை தடை செய்கின்றது. உங்களைப்போன்ற ஒரு சிலர் பழகினாலும் பல்ர் அப்படி அல்ல!

இந்த விடயத்தை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது நிச்சியமாக நீங்கள் சொல்லும் இந்த விளக்கம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் இது பற்றி இப்போது என்னால் அதிகம் எழுத முடியாது மீண்டும் நான் தொடர்வேன் ஜாதிகளற்ற  மதம் இஸ்லாம்

நிச்சயமாய் நண்பன் சார்!

இந்த விளக்கம் மட்டும் தான் ஏற்க இயலாததா!?  என்  அறிவில் , புரிதலில்தவறிருக்கலாம் அல்லவா?

தம் வீட்டு பெண்களை  அன்னியர்  பார்ககவே அனுமதிக்காக சூழல் இருக்கும் போது  எப்படி அனுமதிக்க இயலும் எனும் கேள்வி எனக்குள் வருகின்றது.  

எழுதுங்கள்.. காத்திருக்கின்றேன்..  எழுதினால் பேசினால் தான் நமக்குள் தெளிவு கிடைக்கும்.
இதற்கு விளக்கம் உங்களுக்கு தெரியாதென்றால் நான் எழுதலாம் ஒரு நூலகத்திடம் ஒரு புத்தகம் விளக்கம் சொல்வதா உங்கள் கேள்விக்கு உங்களிடமே பதில் உள்ளது நான் சொல்வதை விட அதிகமாக....!

ஹாஹா!  சிரிச்சிட்டேன்!

நான்  நூலகமா.. அதெல்லாம் இல்லை உங்கள் அப்பாவி நிஷாக்கா தான்பா! என்றைக்கும் அப்படித்தான்!

நான் அரசியல் பக்கம் போவதே இல்லை. அரசியலும் மதமும், சினிமாவும் நான்  பின்னூட்டங்கள் கூட  இட விரும்பாதவைகள்.  இன்றைக்கு ஏனோ அதை போக்கில் இழு பட்டு போய் எழுதி விட்டேன்.

யாரையாவது  என் எழுத்துக்கள் காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்ப்பா!
இந்ய இந்த கருத்துக்களம் ரொம்பி பிடித்திருந்தது ஆர்பாட்டமில்லாமல் அமைதியான முறையில் அழகாக வரவேற்கிறேன்
மன்னிப்பா தமிழில் எனக்கு ரொம்ப பிடித்த வார்தை மன்னிப்பு ஹா ஹா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum