சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

கொத்தவரங்காயின் அற்புத நன்மைகள்!!!

Go down

Sticky கொத்தவரங்காயின் அற்புத நன்மைகள்!!!

Post by ராகவா on Wed 25 Jun 2014 - 22:21

கொத்தவரங்காயின் அற்புத நன்மைகள்!!! 20-1395328777-13-1394713496-weightloss3-600

பார்ப்பதற்கு ஒல்லியாக தோற்றமளிப்பவர்களை கொத்தவரங்காய் மாதிரி இருக்கிறான் என்று கிண்டல் செய்வோம். ஆனால் கொத்தவரங்காயை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் என்னென்ன பலன்கள் கொத்தாக கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் தினசரி பலவித உணவுகளை நாம் சமைத்து சாப்பிடுவதுண்டு.


இவற்றில் கொத்தவரங்காய்களையும் நமது உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவை மிகுந்த சத்தான உணவாக மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் செய்யும் உணவாகவும் உள்ளது.

கொத்தவரங்காய் ஒரு இயற்கை உணவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல கிரேவிகள் மற்றும் இதர உணவுகளில் இணைச்சேர்க்கை உணவாகவும் உள்ளது. மிகவும் அதிகமான மருத்துவ குணங்கள் கொண்ட கொத்தவரங்காயை தினசரி சாப்பிடுவது உடலை உறுதியாக வளர்க்க உதவும்.

இங்கு கொத்தவரங்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

கர்ப்பிணிகளுக்கு நல்லது

கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது. பிறப்பினால் ஏற்படும் பிரச்னைகளை இதன் மருத்துவ குணம் குறைக்கிறது. ஆகையால் இதை நிச்சயம் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.

எடை குறைக்க உதவும்

கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் உணவு இது. ஆகையால் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு உணவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தேவையற்ற எடையை குறைக்க உதவும்.

இரத்த சோகையை போக்கும்

இரத்தச் சோகை இருப்பவர்கள் இதை சாப்பிடும் போது அதிக இரத்தம் சுரக்கும். இந்த இரத்த பற்றாக்குறையை நீக்கி உடலை நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறது.

புற்றுநோயை தடுக்கும்

உடம்பில் உள்ள ஃப்ரீ ராடிக்கல்கள் புற்றுநோயை விளைவிக்கக் கூடியனவாகும். கொத்தவங்காய் உடம்பில் உள்ள இந்த ஃப்ரீ ராடிக்கல்கள்களை கொன்று புற்றுநோயை தடுக்கிறது.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

இதில் உள்ள நார்ச்சத்து உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது. மேலும் அதிக அளவில் உள்ள புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்த்துகளை கொண்டிருப்பதால் கொத்தவரங்காய் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

பற்கள் மற்றும் எலும்புகள்

பற்களையும், எலும்புகளையும் பலமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள உதவுகின்றது.

நோயெதிர்ப்பு சக்தி

கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

சரும பிரச்சனைகள்

சருமப் பிரச்சனைகளுக்கு மிகுந்த உதவி செய்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்க உதவுகின்றன. இதனால் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை தடுக்கப்படும்.

சரும சுருக்கம்

துத்தநாகம், காப்பர் மற்றும் புரதச்சத்துக்கள் ஆகியவை உள்ள கொத்தவரங்காயை உண்பதன் மூலம் சருமத்தில் வயதாவதற்கு முன்பு வரும் சரும சுருக்கங்களை தடுக்க முடியும்.


நன்றி:http://tamil.boldsky.com
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum