சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

உலகப் பழமொழிகள் Khan11

உலகப் பழமொழிகள்

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகப் பழமொழிகள் Empty உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:45

அங்கேரி


* அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.
* ஒரு கை மற்றொரு கையைக் கழுவுகிறது. இரண்டும் சேர்ந்து முகத்தைக் கழுவுகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.
* குருடர் உலகில் ஒற்றைக் கண்ணன் அரசன்.
* சமாதானம் செய்து வைப்பவர் ஒருபோதும் தோல்வியே அடைவதில்லை.
* சமாதானம் விலைகொடுத்து வாங்கத் தகுந்தது.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* சொந்தக் குழந்தை இல்லாதவன் மிகவும் அபாக்கியவான்.
* தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.
* தேன் இனித்தபோதிலும் அதை முள்ளோடு ஏற்காதே!
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அவ்வாறு செய்யமாட்டான்.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நட்சத்திரங்கள் கூச்சல் இடுவதில்லை.
* நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மிகப்பெரிய உதவியும் உதவியே. மிகச்சிறிய உதவியும் உதவியே.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:45

# ஒவ்வொருவரும் தங்களை அறிவாளி என்று எண்ணிக்கொள்கிறார்கள். அதனால்தான் மிகப்பலர் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
# அறிவாளி பொன்னான நாட்களையே கணக்கிடுகிறான்.
# அறிவாளி தடுக்கி விழுந்தால் பலமாகத்தான் விழுவான்.
# நரகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன, நள்ளிரவிலும்கூட.
# உன்னை அளவின்றிப் புகழ்கின்றவன் ஏற்கனவே உன்னை ஏமாற்றிவிட்டான் அல்லது இனி ஏமாற்ற விரும்புகிறான்.
# ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான். மற்ற கரங்களால் அணைக்கிறான்.
# செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்.
# உன் கௌரவம் உனது நாக்கில் உள்ளது.
# தாயைப் பார்த்து மகளை மணம் செய்.
# கணவன் தலைவன், மனைவி அவன் தலையிலிருக்கும் மகுடம்.
# பொறாமைக்காரன் துக்கப்படுவதால் ஒன்று அவன் தொல்லைகளில் இருக்க வேண்டும், அல்லது யாரோ சிலர் அதிர்ஷ்டம் அடைந்திருக்க வேண்டும்.
# வழியைத் தவற விடுவதைவிடப் பாதி வழியில் திரும்பிவிடுவது மேல்.
# நஞ்சு விற்பவன் அழகிய விளம்பரப் பலகையைப் பெற்றிருக்கிறான்.
# மின்னலால் தாக்குண்டவன் இடியோசையைக் கேட்கமாட்டான்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:46

அயர்லாந்து

* அடிமைபோல் உழைத்திடு; அரசனைப்போல் வாழ்ந்திடு.
* எவன் ஒருவன் புகழை வெறுக்கிறானோ,அவனுக்கு உண்மையான புகழ் தானாகவே வந்தடையும்.
* கேட்டால் ஒழிய யோசனை கூறாதே!
* தலையைக் காட்டிலும் உன் நாக்கிற்கு விடுமுறை கொடு.
* பெண்கள் இருக்குமிடத்தில் பேச்சு இருக்கும். வாத்துகள் இருக்குமிடத்தில் கொக்கரிப்பு இருக்கும்.
* நாளை கிடைக்கும் கோழியைவிட இன்று கிடைக்கும் முட்டை மேலானது.
* நமக்குப் பாரமாக இருப்பவர்களை மன்னித்து விடலாம். நாம் பிறருக்குப் பாராமாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
* புலால் இருக்கும்போது பசி இல்லை. பசி வரும்போது புலால் இல்லை.
* பொய்யன் வீடு தீப்பறி எரிந்தாலும் அச்செய்தியும் பொய்யாகிவிடும்.
* முட்டாளுடன் விருந்துண்பதைவிட அறிவாளியுடன் கூலி சுமப்பது மேல்.
* ரோஜாவையும் விரும்பு; அதன் முள்ளையும் நேசி.
* மூடின பாலில் ஈ விழாது.
* ‘மக்களாட்சி’ என்பது அரசை ஆள்பவர்களும் எதிர்ப்பவர்களும் இணைந்து இழுத்துச் செல்லும் வண்டியைப் போன்றது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:46

அல்பேனியா

* ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை.
* ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.
* ஒழுக்கத்தைப் பறிகொடுத்துக் கிடைக்கம் இலபத்திற்கு ‘நஷ்டம்’ என்று பெயர்.
* ஒரு கையைத் தட்டினால் ஓசை எழாது.
* ஏகாந்தம் என்பது இறைவனுக்குப் பொருந்தும்.
* கசப்பான சொல் வெறுப்பை வளர்க்கிறது.
* கத்தும் பூனை எலியைப் பிடிக்காது.
* சிறந்த பொருளை சுருக்கமாக மனதில் பதியும் வண்ணம் கூறுவதே பழமொழயின் தன்மை.
* பழமொழிகளைப்போல் வேறெதுவும் நினைவில் பதிவதும் நீண்ட நாள் தங்குவதும் இல்லை.
* பணத்தை இழந்தால் குறைந்த நஷ்டம். நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்.
* துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால், அது உனக்குக் கற்பித்த பாடத்தை மட்டும் மறந்துவிடாதே!
* நாக்கில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்க வல்லது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:47

அர்மீனியா

* அச்சத்தைவிட மோசமானதொரு ஆலோசகர் இல்லை.
* எதுவும் தெரியாதவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
* ஏழைகள் இதயத்தால் உபசரிக்கிறார்கள்.
* ஒன்றோடு ஒன்று சண்டைபோடும் நாய்கள் ஓநாய்க்கு எதிராக ஒன்றுபடுகின்றன.
* ஓர் இரகசியத்தை அறிய விரும்புகிறாயா? ஒரு குழந்தை, ஒரு பைத்தியம், ஒரு குடிகாரன், ஒரு மனைவி இவர்களிடம் கேள்.
* எப்படிப்பட்ட முட்டாளும் பணத்தை சம்பாதித்துவிடலாம். ஆனால், ஒரு புத்திசாலியால்தான் அதனைக் காப்பாற்ற முடியும்.
* கள்வனிடத்திலிருந்து ஒருவன் திருடும்போது எல்லாம் வல்ல இறைவனே சிரிக்கிறான்.
* குடுவையிலிருந்து வெளியே வந்ததும் மது மிக உரக்கப் பேசுகிறது.
* சத்தியத்திற்கு மற்றொருபெயர் ‘மனசாட்சி’
* பள்ளிக்கூடத்தில் போய் முட்டுவதால் மட்டும் படிப்பு வருவதில்லை.
* பேசுகிறவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான்.
* தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
* தொடக்கத்தைவிட முடிவைப்பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.
* நம்பிக்கை உறுதியாக இருக்கும்போது பிரார்த்தனை நீண்டதாக இருக்கத் தேவையில்லை.
* நீ யாரை நேசிக்கிறாய் என்பதை என்னிடம் சொல். நீ யார் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்.
* நொண்டியைவிடப் பொய்க்காலன் விரைவில் வீழ்வான்.
* நம்பிக்கை செழிப்பைத் தராது. ஆனால், தாங்கி நிற்கும்.
* யூதனைப்போல் கணக்குப் பார். சகோதரனைப்போல் ஏற்றுக்கொள்.
* பேசுகிறவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:47

அரேபியா

* பற்களுக்கிடையில் மனிதன் மறைந்துள்ளான்.
* தண்டிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கும்போது மன்னிப்பதும் ஆகிய இரு வழிகளில் விவேகம் தோன்றுகிறது.
* பேனாவின் வழுக்கலைவிட காலின் வழுக்கல் குறைந்த அபாயமாகவே இருக்கிறது.
* நரை மயிர் மரணத்தின் கடிதம்.
* நீ சாகும்போது உன் தங்கையின் கண்ணீர் போகப்போக உலர்ந்து போகும். உன்னை இழந்தவளின் கண்ணீர் மற்றொருவனுடைய தோள்களில் ஓய்ந்து போகும். ஆனால் உன்னுடைய தாய் அவள் மரணம் அடைகின்ற நாள்வரை உனக்காகத் துக்கப்படுவாள்.
* மணிமுடி மிக கணமாக இருக்கிறது. ஒரு கிரீடத்தின் கீழே இரவிலே முத்துக்களைவிட அடிக்கடி அதிகமாகக் கண்ணீர் வழிகிறது.
* மற்றவர்கள் அனுபவத்திலிருந்து ற்கின்றனர். இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மூன்றாவது வகுப்பினர் அவ்களது சொந்த அனுபவங்களிலிருந்தோ அன்றி பிறர் அனுபவங்களிலிருந்தோ கற்பதில்லை. இவர்கள் மூடர்கள்.
* எவன் அஞ்சுகிறானோ அவன் மட்டுமே உண்மையான வீரன்.
* அதிர்ஷ்டக்காரனை நைல் ந்தயில் தலை கீழாகத் தள்ளினாலும் அவனுடைய வாயில் ஒரு மீனோடு வெளிவருவான்.
* அதிர்ஷ்டசாலியான மனிதனுடைய வழியைப் பின்தொடர்க. நீ அதிர்ஷ்ட சாலி ஆவாய்.
* அழுத்தத்தினாலன்றி எண்ணெய் வெளிவராது.
* ஒரு மூடன் தன்னுடைய வாயில் தன் அறிவைப் பெற்றிருக்கிறான். ஓர் அறிஞன் தன் வாயை அறிவால் நிரப்பி வைத்திருக்கிறான்.
* அறிவைத் தேடும் ஒருவருக்கு தேவதைகள் தங்களுடைய சிறகுகளை வளைத்துக் கொடுக்கின்றன.
* ஆரோக்கியம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.
* எனக்குச் செருப்புகள் இல்லை. நான் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். பாதங்களே இல்லாத ஒரு மனிதனைச் சந்நிக்கும் வரை.
* உங்கள் கூடாரங்களைத் தனித்தே வைத்திருங்கள். இதயங்களை ஒன்றாக கொண்டு வாருங்கள்.
* அன்போடு அன்பைத் திரும்ப வழங்கு.
* அன்புடைமையைத் தவிர அன்புடைமைக்கு வேறு ஏதாவது கைமாறு உண்டோ?
* இளமையின் நினைவு ஒரு பெருமூச்சு.
* ஒரு பொய் அறிவுள்ளதாக இருக்கலாம். ஆனால், உண்மை அதுவே ஞானமாக இருக்கிறது.
* பிறப்பு மரணத்தின் தூதுவன்
* ஒன்றும் தெரியாத நிலையில் தனக்கு ஒன்றும் தெரியாது என்று புரிந்துகொண்டிருப்பவன் ‘சாதாரணமானவன்’. வழிகாட்டப்பட வேண்டிவன்.
* எல்லாம் தெரிந்த நிலையில் தனக்கு எல்லாம் தெரியும் என்ற புரிந்து கொண்டிருப்பவன் ‘புத்திமான்’ பின்பற்றப்பட வேண்டியவன்.
* தன் மனைவியை மதிக்காதவன் தன்னையே அவமதித்துக் கொள்கிறான்.
* போர்வாளே சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் திறவுகோள்.
* தகுதிக்கு மீறிச்செலவு செய்கிறவன் தன் உயிரை முடித்துக் கொள்ள கயிறு திரிக்கிறான்.
* அவன் முன்பு பனையாக இருந்தான். ஆனால், இப்போது சம்மட்டியாக இருக்கிறான்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:48

அமெரிக்கா

* ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான்.
* உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப்ப்ற்றியும் வம்பு அளப்பான்.
* செயலே புகழ் பேசும்.
* உடையவனின் பாதம் வயலுக்கு உரம்.
* சிறு செலவுகள் முழுச் செல்வத்தையும் விழுங்குகின்றன
* தோல்வி ஏற்படும் நேரத்தில்தான் மாவீர்ர்கள் உருவாகிறார்கள். ஆகவே, தொடர்ச்சியான பல பெரிய தோல்விகளே வெற்றி என்பதாக வர்ணிக்கப்படுகிறது.
* தீயோர் நேசத்தைவிட தனிமை மேலானது.
* வலிமை வாய்ந்த நண்பன் வலிமை மிகுந்த எதிரியாக மாறுவான்.
* பல் இல்லாமல் இருந்தால்கூட ஒரு கலைமானால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும்.
* ஒரு பொருளின் இன்றியமையாமை அது தேவைப்படும்போது தான் தெரியும்.
* ஒரு மனிதனுக்கு உணவு மற்றவனுக்கு நஞ்சு
* தள்ள முடியவில்லையென்றால் இழு; இழுக்க முடியவில்லை என்றால் வழியைவிட்டுப் போய்விடு.
* ஆபத்து இல்லை; புகழும் இல்லை.
* நம்முடைய அறிவுரையை ஏற்றுக்கொள்ளாதவர்களை நாம் வெறுக்கிறோம். நம்முடைய அறிவுரைப்படி நடக்கிறவரை நாம் வஞ்சிக்கிறோம்.
* அதிர்ஷ்டம் தைரியத்திற்குச் சலுகை புரிகிறது.
* ஒருவரைத் தண்டிப்பதைவிட தயவு காட்டுவது அதிக வல்லமை உள்ளதாகும்.
* ஒரு பறவையும் ஒரு கூண்டையும் நீ விரும்பினால், நீ முதலில் கூண்டை வாங்கு.
* மேதைத் தன்மை ஒரு பரம்பரை உரிமையன்று.
* பொதுவான விதி ஒவ்வொன்றிற்கும் ஒரு விதி வில்கு உண்டு.
* வெறுமையான பை நேராக நிற்க முடியாது.
* ஒரு மனிதனை நீ மன்னிக்கும் ஒவ்வொரு நேரமும் நீ அவனை பலப்படுத்தி உன்னையும் பலப்படுத்திக் கொள்கிறாய்.
* கோயிலுக்கு அருகாமை கடவுளுக்கு வெகுதூரம்.
* இந்த வாழ்வில் நுழைவதற்கு ஒரு வழியைத்தவிர வேறு வழி இல்லை. ஆனால் மரணத்தின் வாயில்கள் எண்ணிலடங்காமல் இருக்கின்றன.
* உண்மை எல்லாச் சமயங்களிலும் பேசப்படுவதற்கல்ல.
* உடலையும் ஆன்மாவையும் ஒன்றாகவே வைத்திரு.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:48

ஆப்பிரிக்கா

* ஓர் ஆண்டின் களையெடுப்பு ஏழாண்டுகளின் விதை.
* அவர்கள் அவனைப் பிடிக்கும் நாள் வரை ஒவ்வொருவரும் நேர்மையானவரே!
* ஒரு ஆணியின் மேலேயே உன் துணிகள் எல்லாவற்றையும் தொங்கவிடாதே!
* மனித இனத்தைத் தவிர இயற்கையின் எல்லா இனங்களிலும் பெண் இனத்தைவிட ஆண் இனம் அழகாக இருக்கிறது.
* நம் இதயம்தான் நம்மைச் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அழைத்துச் செல்கிறது.
* அழகான பெண் அழகான தொல்லை.
* ஆற்றின் கீழே இருக்கும் பாறாங்கல்லுக்கு பாதைமேல் இருக்கும் பாறாங்கல்லின் வருத்தம் தெரியாது.
* திருப்தியான பறவையும் பசி மிகுந்த பறவையும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்க முடியாது.
* நிலம் சூடாக இருக்கும்போது புழு மண்ணிலேயே இருந்து விடுகிறது.
* மிக மிக வேகமாக ஓடு. நீ இருமுறை ஓடுவாய்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:49

இத்தாலி

* சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்.
* விரும்பியதைப் பெறமுடிவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக.
* மெதுவாக பேசுகிறவன் பத்திரமாகப் பேசுகிறான். தூரமாக போகிறான்.
* முள் குத்தும் நெருஞ்சி விரைவில் வளர்ந்துவிடுகிறது.
* புதைக்கப்பட்டுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்படுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்பட்டுள்ள அறிவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்பது எனக்குத் தெரியும்.
* எடுத்துக்கொள்பவனுக்கு உலகம் சொந்தம்.
* உலகம் எல்லாம் ஒரே தேசம்தான்.
* உலகம் என்பது உயர்ந்த புத்தகம். எப்படிப் படிப்பது என்று தெரியாதவனுக்கு அது சிறிதே பயன்படுகிறது.
* அதிர்ஷ்டம் என்பது ஒரு பசுமாடு. சிலருக்கு அது தனது முகத்தைக் காட்டுகிறது.
* வறுமை அழகைச் சிதைக்காது.
* அறிவுடைமை அழிந்து போவதில்லை. அறிவாளிகள் அழிந்து போகின்றனர்.
* மூடன் தன்னுடைய சொந்தச் செலவில் கற்றுக்கொள்கிறான். அறிஞன் மற்றவர்கள் செலவில் கற்கிறான்.
* மெல்லிய ஆடைகளைப் பெட்டிகளில் வைத்திருப்பவர் முரட்டுப் போர்வையை உடுத்துகின்றனர்.
* நூற்றில் ஓர் இளைஞர்தான் சபிக்கப்பட்டவர். இருபதில் ஓர் முதியவர்தான் ஆசீர்வதிக்கப்ட்டவர்.
* உண்மைதான் அடிக்கடி தண்டிக்கப்படுகிறது .
* வேலை செய்பவனுக்கு ஒரு சட்டை. வேலை செய்யாதவனுக்கு இரு சட்டைகள்.
* சாபங்கள் ஊர்வலங்களைப்போல எங்கே தொடங்கியதே அங்கே முடியும்.
* கடவுள் துணை இருந்தால் சிலந்தி வலையும் ஒரு சுவராகிறது கடவுள் கருணை இல்லாவிட்டால் சுவரும் சிலந்தை வலையாகிறது.
* குழந்தை கேட்கும் ‘ஏன்?’ தான் த்த்துவத்தின் சாவி.
* சேவல் மௌனமாகவும் கோழி கூவும்படியாகவும் உள்ள வீடு துன்பகரமானது.
* ஆன்மா இறைவனுக்குச் சொந்தம். உடம்பு மண்ணுக்குச் சொந்தம். சொத்து யாருக்குச் சொந்தம்?
* ஒரு சிறிய உண்மை முழுப் பொய்யையும் நம்பச் செய்துவிடுகிறது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:49

இங்கிலாந்து

* அரசனைவிட பெண் அதிகத் தந்திரம் உள்ளவள்.
* இன்று செயல்படுங்கள். இன்று சேமியுங்கள். இன்று நல்லது செய்யுங்கள். நாளை நன்கு ஓய்வு எடுக்கலாம்.
* உலகம் ஒரு காய்ந்த மரம். சாகும் மனிதனே அதில் சாய்ந்து நிற்காதே!
* உடம்பே, நீ தேய்ந்து போ! உள்ளமே, நீ உறுதியாக இரு.
* உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி இந்த மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். அந்த மூன்றுமே இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.
* உன்னைப் புண்படுத்துவது எது என்பது உனக்குத் தெரிந்தால் மற்றவர்களைப் புன்படுத்துவது எது என்பது உனக்குத் தெரியும்.
* ஒரு யானையின் உதையை இன்னொரு யானைதான் தாங்க முடியும்.
* ஒரு பொய் ஈட்டியைவிட அதிகமான துன்பத்தைக் கொடுக்க முடியும்.
* எத்தனையோ, அநீதிகள் பழக்கத்தால் நீதிகளாகத் தோன்றுகின்றன.
* ஓநாய்க்குக் கருணை காட்டுவது ஆட்டுக் குட்டிக்குக் கொடுமை செய்வதாகும்.
* கரி சாம்பலைப் பார்த்து சிரிக்கிறது.
* கஞ்சனுடைய பணப் பெட்டியைத் திறக்கும் சாவி, சாவின் கையில் இருக்கிறது.
* இதயம் ஒரு வெள்ளாடு போன்றது. அனைக் கட்டிப்போட வேண்டும்.
* இதயம் ஒரு சிறு குழந்தை.
* ஏழ்மைப்பார்த்து சிரிப்பவன் அதனைத் தன் பக்கம் இழுக்கிறான்.
* ஓர் அழகான பெண் மகிழ்ச்சியடைந்தால் பணப்பை கண்ணீர் விடும்.
* ஒரு சங்கிலியின் வலிமை அச்சங்கிலியிலுள்ள வலிமை குறைந்த வளையத்தைப் பொறுத்தது. ஒரு குழுவின் வலிமை அதிலுள்ள வலிமையற்றவனைப் பொறுத்திருக்கிறது.
* காதல் நோய்க்கு மருத்தவன் இல்லை.
* நாக்குதான் மனிதனைக் கொல்கிறது. நாக்குதான் மனிதனைக் காப்பாற்றுகிறது.
* திறமையான நீச்சல்காரனைத்தான் ஆறு அடித்துக்கொண்டு செல்கிறது.
* பணக்காரன், குழந்தை வேண்டுமென்று கேட்டால் பணம் வருகிறது. ஏழை பணம் வேண்டும் என்று கேட்டால் குழைந்தைக் கிடைக்கின்றன.
* மனித குலம் நம்மை வெறுத்தால் தாங்கிக்கொள்ளலாம். ஆனால், குழந்தைகள் நம்மை வெறுத்தால் தாங்கிக்கொள்ள முடியாது.
* பொருள் வாங்குபவனுக்கு ஆயிரம் கண்கள் தேவை விற்பவனுக்கோ ஒரு கண் போதும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:50

# நல்ல புத்தகத்தைக் காட்டிலும் நம்பிக்கையுள்ள மனிதன் உலகில் எதுவுமில்லை.
# வழக்கம் என்பது முதலில் ஓட்டை. பிறகு இரும்புச் சங்கிலி.
# செயலழகைத் தவிர வேறு அழகில்லை.
# போட்டியிடு! பொறாமைப்படாதே!
# பொறுமையால் அதிகம் சாதிக்க முடியும்.
# குழந்தைகளுக்கு செவிகள் அகலமானவை. நாக்குகள் நீளமானவை.
# மனிதனுக்கு மேலே இருக்கும் சிற்றரசன் அவனது மன சாட்சி.
# தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை.
# தாய்க்காக மனைவியை வெறுப்பவன் பழைய மிருகம். மனைவிக்காக தாயை வெறுப்பவன் புதிய மிருகம்.
# பணிவான சொல், செல்லும் பாதையை எளிமை ஆக்குகிறது.
# உலகம் ஒரு பயணிகள் விடுதி.
# நீயும் நானும் ஒத்துப் போய்விட்டால் வழக்கறிஞர் எதற்கு?
# கத்தி சானைக்கல்லைத் தின்கிறது. சாணைக்கல் கத்தியைத் தின்கிறது?
# அடுத்தவன் தாடியில் தீ பிடித்தால் உன் தாடியை நீரில் நனைத்துக்கொள்.
# பழக்கம் ஒரு முழு வளர்ச்சியடைந்த மலை. அதைத் தாண்டுவதும் கடினம். தகர்ப்பதும் கடினம்.
# தேவையும் துன்பமும் ஒருபோதும் நம்மைவிட்டுப் பிரியாது.
# பணத்தைத் தவிர மற்ற யாவும் உன்னைத் திருப்திப்படுத்தும்.
# எவ்வளவு பணம் வைத்திருக்கிறோமோ அவ்வளவு பணம் மேலும் உனக்குத் தேவைப்படும்.
# குழந்தைகள் தெய்வங்களோடு பேசுகின்றன.
# வீரனின் வியர்வை இரத்தம்.
# பணம் பனி போன்றது.
# தான் தின்னி திருடன்.
# பொய்கள் ஈக்களைப்போல் இரைகின்றன. ஆனால், சத்தியத்தில் சூரியப் பிரகாசம் உண்டு.
# உதட்டினால் மட்டும் செய்யப்படும் பிரார்த்தனை, பிரார்த்தனை அல்ல.
# உன்னால் முடிந்ததையெல்லாம் செய்துவிட்டு இறைவனிடம் உதவிகேள்.
# ஏழ்மைப் பார்த்துச் சிரிப்பவன் அதைத் தன் க்கம் இழுக்கிறான்.
# பத்து வலிமை மிக்க மனிதர்களைவிட தன்னிச்சையாகச் செயல்படுபவனே மேலானவன்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:50

# இட்டப் பணியைச் செய்து முடித்தால் இன்பமான தூக்கம்.
# மூப்பு- இது நோய்கள் சேரும் துறைமுகம்.
# சோதிடம் உண்மை- ஆனால், அதனைச் சோதிடர்கள் கண்டுபிடிக்க முடியாது.
# இயந்திரங்கள் சுழல்வதால் கெடாது; உராய்வதால் கெடும்.
# சரிகை ஆடைகளுடன் எரியூருக்குப் போவதைவிட கூந்தல்களுடன் விண்ணுலம் செல்வது மேல்.
# குண்டூசியை எடுக்கக் குனிய முடியாத மனிதன், ஒரு பவுன் கூட சேர்க்க முடியாது.
# செல்வங்கள் சிரமப்பட்டு சேர்க்கப்படுகின்றன. கவலையுடன் பாதுகாக்கப்படுகின்றன. துக்கத்தோடு இழக்கப் பெறுகின்றன.
# உங்களுடைய உடை உங்களுடைய தொழிலுக்கு ஏற்றபடி பார்த்துக்கொள்ளவும்.
# குலப் பெருமை பேசுபவன் உருளைக் கிழங்கு போன்றவன். கிழங்கைப் போலவே அவன் பெருமையும் மண்ணக்குள் மறைந்திருக்கும்.
# புரியாத காரியத்திற்குத் தாமதமாக் கற்பித்துக்கொள்ளும் வழக்கம் மூட நம்பிக்கை. அது காலம் கடந்தும் தங்கி நிற்கும்.
# கடவுள் நமக்கு உறவினரைத் தந்துள்ளார். ஆனால் அன்பர்களை மட்டும் நாமே தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
# நண்பர்களைப் பற்றி நல்லது பேசு. விரோதிகளைப் பற்றி ஒன்றும் பேசாதே!
# இளமையில் ரோஜா மலர்களின் மீது படுக்க விரும்பினால் முதுமையில் நீங்கள் முட்களின் மீது படுக்க வேண்டிவரும்.
# மூட நம்பிக்கை மனவலிமையற்றவர்களின் மதம்.
# நூறு ஆசான்களுக்கு ஒப்பானவர் பொறுப்பு மிக்க தந்தை.
# காரியங்கள் தாமாக நடப்பதில்லை. நடக்கச் செய்ய வேண்டும்.
# மிகக் குறைந்த முட்டாளே அறிவாளி.
# மற்றவர்களைக் கீழே தள்ளிவிட்டு நீ மேலே ஏற முடியாது.
# செல்வத்திற்குப் பின்னால் வறுமை வருவதைக் காட்டிலும் வறுமைக்குப் பின் செல்வம் வருவது மேல்.
# நாற்பது வயதிற்கு மேல் மனிதன் த்த்துவ ஞானியாக மாறுவான். அல்லது முட்டாளாக மாறுவான். இல்லையெனில் இறந்துவிடுவான்.
# குழந்தைக்கு முதற்பாடம் பணிவு.
# குழந்தைகளே ஏழையின் செல்வங்கள்.
# குழந்தையை கொண்டாடினால் தாயின் அன்பைப் பெறலாம்.
# குழந்தை இல்லாதவனுக்கு அன்பு என்றால் என்ன வென்றே தெரியாது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:50

# இரண்டு தொட்டில்களை ஆட்டுவதைவிட கலப்பை பிடிப்பது மேல்.
# பெண் தேடி வெகுதூரம் செல்பவன் யாரையோ ஏமாற்றப் போகிறான்.
# குற்றத்தை கடவுள் மன்னிக்கிறார். ஆண்கள் சிறுகச் சிறுக மறக்கிறார்கள். பெண்களோ உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொள்கிறார்கள்.
# விதவை, துக்கம் ஆறும் முன் மணம் செய்துகொள்ள வேண்டும்.
# பொதுவாக எல்லோரும் சந்திக்குமிடம் சமாதிதான்.
# ஆயிரத்தில் ஒரு நல்லவனை அறிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு பெண்ணை அறிந்துகொள்ள முடியாது.
# ஒருவருக்கு ஆகாரமாவது மற்றொருவருக்கு நஞ்சாகும்.
# குழந்தைகள் கண்களைத்தான் உபயோகிக்க வேண்டும். செவிகளை அல்ல.
# கரங்கள் சுத்தமாக இருக்கின்றனவா என்பதைக் கடவுள் பார்க்கிறார். நிறைவாக இருக்கின்றனவா என்பதையல்ல.
# ஒரு சிறு குறை நீண்டகால சேவையை அழிக்கிறது.
# எந்தத் தவறை நீ எங்கு கண்டாலும் அதை உன்னிடம் நீ திருத்திக்கொள்.
# உலகின் நல்லறிவுகள் எல்லாம் பழமொழிகளாக்கப்பட்டிருக்கின்றன.
# வாக்களிப்பது கடன்படுவதுபோல.
# பேச்சில் தங்கம், கொடுப்பது செம்பு.
# நோயின் தந்தை யாரோ? தவறான உணவுதான் அதன் தாய்.
# பழமொழிகள் அனுபவத்தின் குழந்தைகள்.
# கோபக்காரனிடமிருந்து கொஞ்சம் விலகி இரு. மௌனம் இருப்பவனிடமிருந்து என்றுமே விலகி இரு.
# ஓர் ஏழைக்கு மற்றொரு ஏழை உதவும்போது கடவுள் சிரிக்கிறார்.
# தர்மம் ஒருபோதும் ஏழை ஆக்கியது இல்லை. செழுமை ஒருபோதும் அறிவாளியாக்கியது இல்லை.
# கவலைக்கு மிகப் பாதுகாப்பான மருந்து வேலையில் ஈடுபடுதல்
# மகிழ்ச்சி வீட்டில் செய்யப்பட்ட ஒரு பண்டம்.
# எப்போதும் பயந்துகொண்டிருப்பதைவிட ஆபத்தை ஒரு தடவை துணிவாக எதிர்ப்பது மேலானது.
# தாயின் செல்லக் குழந்தைகள் இறுதியில் வெண்ணெய் வெட்டு வீர்ர்களாகவே இருப்பார்கள்.
# பெண் குழந்தைகளும் கோழிக்குஞ்சுகளும் எப்பொழுது தின்றுகொண்டே இருக்கும்.
# நீண்ட கேசம் பெண்ணிற்கு ஒரு கருவூலம்.
# கணவன் இருந்தால் ஒய்யாரம் இறந்தால் ஒப்பாரி.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:51

# எட்டாம் பேறு பெண் என்றால், எட்டிப் பார்த்த வீடு குட்டிச் சுவர்
# அறிவைக் கொண்டவள் சிங்காரி. அகந்தை கொண்டவள் அலங்காரி.
# பெண்ணுகு எதிரி அவள் அழகு.
# கடன் மோசமான வறுமை.
# தண்ணீரைவிட நெருப்புக்குக் கப்பல் அஞ்சுகிறது.
# ஆட்டை கொடுப்பதைவிட கம்பளி கொடுப்பது மேல்.
# ஊதாரி பிச்சைக்காரனாகவே இருக்கிறான்.
# பறவைகளின் காரணமாக உலோபி விதைப்பதில்லை.
# குடிசையைப் பெருக்கிக் கூட்டுபவன் துடைப்பத்தின் மேல் உட்காரக் கூடாது.
# நான் துணி அணிந்த நாளிலிருந்து ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை.
# விதி விரும்பியதை வழி நடத்துகிறது. விரும்பாததை இழுத்துக் கொண்டு செல்கிறது.
# போகவிட்ட ஒரு சொல்லும் ஒரு கல்லும் திரும்ப அழைத்துக் கொள்ள முடியாதவை.
# தொழிலை நேசிக்காதவனை தொழிலும் நேசிக்காது.
# நாய் குரைக்காததும் குதிரை கனைக்காததுமான நகரத்தில் நீ வசிக்காதே!
# பதற்றத்துடன் வருபவன் திடீரென விழுகிறான்.
# எல்லா விலைகளையும் கணக்குப் பார்ப்பபவன் ஒருபோதும் கலப்பையை மண்ணில் வைக்க மாட்டான்.
# பூமித்தாயின் தொழில் உறவுகொண்ட ஒருவரும் நஷ்டமடைந்து வெளியேறியதில்லை.
# உண்மை எப்போதும் ஒரு நொண்டித் தூதுவன் மூலம் வருகிறது.
# உண்மை ஒரு கீறலான முகத்தைப் பெற்றிருக்கிறது.
# சரியான பொய்யைச் சொல்வதைவிட கொடூரமான உண்மை பேசுவது மேல்.
# பாதி உண்மை முழுப் பொய்.
# துருப்பிடித்த வாள், காலியான பணப்பை உடன்படிக்கைகளை எதிர்த்துப் பேசும்.
# உன் உணவை உண்பதற்கு ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை.
# ஆபத்துக்களையும் அபாயங்களையும் பற்றி முன்கூட்டியே ஆராய்ந்து கொண்டிருப்பவன் ஒருபோதும் யாத்திரை செல்ல மாட்டான்.
# எங்கே ஆதாயம் பின்தொடர்கிறதோ, அங்கே வலிமறக்கப்படுகிறது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:51

# கடன் வாங்கிய ஆடைகள் ஒருபோதும் நன்கு பொருந்தாது.
# பிறருக்காக இரக்கப்படுவன் தன்னையும் எண்ணிப் பார்த்துக்கொள்ளட்டும்.
# ஆன்மாவைவிட உடல்தான் அதிகமாக ஆடை அணிந்திருக்கிறது.
# ஆன்மா எங்கு வசிக்கிறதோ அந்த இடத்தில் அது இல்லை. அது நேசிக்கும் இடத்தில் ஆன்மா இருக்கிறது.
# மூடுபனிக்கு வழியனுப்பு விழா. அடுத்தது சுகமான பருவகாலம்.
# தனது அறிவைப் பாராட்டிக் கொள்பவன் அவனுடைய அறியாமையைத் தம்பட்டம் அடிக்கிறான்.
# அறம் மிகவும் விலை உயர்ந்த ஆபரணம்
# அறம் தன்னுள் எல்லாப் பொருட்களையும் பெற்றிருக்கிறது.
# கோழையின் அறம் ஐயத்திற்குரியது.
# பாவமாவது அறத்தின் பழக்கத்தால் அடிக்கடி உடைந்து போகிறது.
# ஒரு நல்ல மனிதனுக்கு அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டு. அவன் அதை அறமாக மாற்றுவான்.
# பொருள் இலாபம் கருதும் மனிதனின் மனத்திலிருந்து அறம் பறந்துபோகிறது.
# அறம் மட்டுமே உண்மையான குடிமை.
# காதலிலும் போரிலும் எல்லாமே அழகுதான்.
# அச்சத்திற்கு மருந்தில்லை.
# புலியின்மேல் சவாரி செய்பவர் கீழே இறங்குவதற்கு அஞ்சுகிறார்.
# அவன் என்னவாக இருக்கிறான் என்பதை அவனது உரையாடல் காட்டுகிறது.
# குற்றத்தின் மூலம் எவன் ஆதாயம் அடைகிறானோ, அவனே அக்குற்றத்தைச் செய்கிறான்.
# சம்பவம் நடந்த பிறகு புத்திசாலியாக இருப்பது சுலபமே!
# நீண்ட பயணத்திலோ அல்லது சிறு சத்திரத்திலோ ஒரு மனிதன் தன்னுடைய நண்பனைப்பற்றித் தெரிந்துகொள்கிறான்.
# மயில் ஓசையோடு அகவும்போது நாம் மழையையும் சண்டையையும் பெறலாம்.
# மரியாதையை விரும்புகிறவர்கள் மரியாதைக்குத் தகுதி உடையவர்கள் அல்லர்.
# அடிக்கடி வரும் விருந்தாளிளுக்கு நல் வரவேற்பு இல்லை.
# கடனாக வாங்குவதைவிட விலைக்கு வாங்குவதே மேல்.
# எசமான்னாக இருக்கும் முன் ஒருவன் வேலைக்காரனாக இருக்கவேண்டும்.
# வைகறையில் எழாதவன் ஒருபோதும் ஒருநல்ல நாள் வேலையைச் செய்யமாட்டான்.
# சாந்தமான மனசாட்சி இடியோசையில் உறங்குகிறது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:52

இஸ்ரேல்

* அச்சம் இதயத்தின் சிறை.
* அடுப்படியில் அடைகாக்கும் கணவன் அடிவயிற்றில் வலி.
* அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத யுத்தம் நடந்துகொண்டே இருக்கிறது.
* ஆரோக்கியத்திற்கு அடிப்படை நோயை அடையாளம் காணுதல்.
* ஆண்டவன் எல்லா இடத்திலும் இருக்க முடியவில்லை. அதனால்தான் அன்னையைப் படைத்தான்.
* இதயம் நல்லதாக இருந்தால் துரதிரஷ்டங்களையும் தகர்த்துவிடலாம்.
* இத்தாலியில் பிறந்து, குழந்தை பாதி அநாதை. தாயில்லாக் குழந்தை மீதி அநாதை.
* தந்தை இல்லாக் குழந்தை பாதி அநாதை. தாயில்லாக் குழந்தை மீதி அநாதை.
* கோடி கலைகளும் வயிற்று உணவுக்காகத்தான்.
* ஒரு வீட்டை வாங்குவதற்கு முன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
* எந்த விரலை கடித்தாலும் வலி ஒன்றுதான்.
* பொய்கள் அமர்வதற்கு சிம்மாசனம் அமைத்துக் கொடுக்காதீர்கள். அப்படி அமைத்தால் நீங்கள் உண்மைக்குத் தூக்கு மேடை அமைத்தவர்களாவீர்கள்.
* விளைச்சல் நன்றாக இருந்தால் தானியங்களை உடனே விற்று விடுங்கள். விளைச்சல் குறைவாக இருந்தால் தாமதித்து விற்க வேண்டும்.
* எட்டு மனிதர்கள் உள்ள கிராமத்திலும் ஒருதேச இருப்பான்.
* உங்களையே கிள்ளிப்பாருங்கள். மற்றவர்களுக்கு இதனால் ஏற்படும் துன்பம் எப்படி இருக்குமென்று புரியும்.
* மேற்கே பார்த்துக்கொண்டிருந்தால் சூரிய உதயத்தை காணவே முடியாது.
* பத்து மனிதர்கள் 11 வித நிறம் கொண்டவர்கள்.
* ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால் கடலையும் வற்ற வைக்க முடியும்.
* இன்று செய்த நன்மை நாளைய இன்பம்
* இழந்த பொருள் இறைவனுக்கு அர்ப்பணம்.
* அகம்பாவம் ஒரு முரட்டுக் குதிரை போன்றது. ஒரு முறையாவது சொந்தக்காரனையே வீழ்த்தும்.
* அயோக்கியன் கூட மேடை ஏறிவிட்டால் நல்லதையே பேசுவான்.
* ஆத்திரம் செயல் வேகத்தை மட்டுப்படுத்தும்.
* இளமையில் பட்ட அடிகள் முதுமையில் உணரப்படுகின்றன.
* அதிர்ஷ்டம் உள்ளவனுகு நண்பன் கிடைப்பான். துரதிர்ஷ்டம் பிடித்தவனுக்குப் பெண் கிடைப்பாள்.
* அன்புள்ள பெற்றோர்கள் உண்டு. அன்புள்ள பிள்ளைகள்தான் இல்லை.
* அற்பத் தொல்லைகளுக்கு அஞ்சுபவன் அரிய சாதனை செய்யமாட்டான்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:52

# அதிகமாக யாரும் எதையும் கொடுத்தால் ஏற்காதே!
# அருகில் இருப்பவர்களுக்கு உதவி செய்தால் தூரத்தில் இருப்பவர்களும் தேடி வருவார்கள்.
# அறிவு என்னும் கதிர் அறுக்க கண்ணீர் மழை பொழிய வேண்டும்.
# அறிந்தவர்கள் அதிகம் பேசுவதில்லை, அதிகம் பேசுபவர்கள் அறிந்தவர்கள் இல்லை.
# ஆகாயத்திலிருந்து ஈச்சம் பழம் விழுந்தால் நீயும் வாயைத்திறக்கத்தான் வேண்டும்.
# அறிவிலி கூறும் பொன்மொழி, வாயில் உருளும் கூழாங்கல்.
# அன்பு இருந்தால் யானையைக்கூட ஒரு மயிரில் கட்டி இழுக்கலாம்.
# அறிவுப் பெருக்கத்திற்குச் சரியான சாவி ‘ஐயம்’
# அந்நியர்களுடன் நந்தவனத்தில் உலவுவதைவிட நண்பர்களுடன் விலங்கிட்டிருப்பதே மேல்.
# ஆட்டு மந்தை கிளப்பும் தூசி ஓநாய்க்கு இன்பமான காட்சி.
# இந்த உலகில் மூன்று நண்பர்கள் உண்டு. புத்தி, தைரியம், பகுத்தறிவு.
# ஆணின் சொற்கள் அம்பு, பெண்ணின் சொற்கள் ஒடிந்த விசிறி.
# இன்பமாக வாழ வேண்டுமா? செவிடாக,குருடாக, ஊமையாக இருந்துவிடு.
# இழந்துவிட்ட சட்டைப் பையில் இருந்ததெல்லாம் தங்கம்தானாம்.
# அறிவாளி பயன்படுத்தும் மேற்கோள் விரலில் பளிச்சிடும் மோதிரம்.
# அறிவில் போடும் முதலீடு அதிக இலாபம் தரும்.
# அம்பு வேகமுள்ளது. பழி வாங்கல் படுவேகம் உள்ளது செய்த தவறுக்கு வருந்துதல் அதைவிட வேகமானது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:53

இலங்கை

* உரையாடல் பயணத்திற்கு ஏணி.
* பொன்னாலான ஆயுதத்தால் குத்திய குத்தும், மற்ற எந்த ஆயுதங்களையும் போலவே வலி நிறைந்ததே!
* சுய கட்டுப்பாடு ஒருவனை இறைவனிடம் சேர்க்கிறது.
* உன் மகன் நல்லவனாக இருந்தால் நீ ஏன சேமிக்க வேண்டும்? உன் மகன் தீயவனாக இருந்தால் அவனுக்காக நீ ஏன் சேமிக்க வைக்க வேண்டும்?
* குழந்தைக்குச் சோறு கொடுத்தால் தாய்ப்பாலை மறக்கும். பெண்ணுக்குக் கணவன் வந்தால் தாயை மறப்பாள்.
* திட்டுவதில் ஐம்பது நாக்குகள் படைத்தவன் கூட ஒரு நாக்கு படைத்த பெண்ணிற்கு நிகராக முடியாது.
* பழக்கமில்லாமல் ஒருவன் தன் பற்களைக்கூட சுத்தம் செய்ய முடியாது.
* யாராவது உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைக்கும்பொழுதெல்லாம் உங்களிடம் உள்ள கேடயம் ஞாபகம் வந்து அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். என்ன கேடயம்? நீங்கள் அவர்களிடத்தில் காட்டிய அன்பு.
* உரையாடல் காதுகளின் உணர்வு.
* நல்ல உரையாடல் நல்ல படுக்கையைவிட மேலானது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:53

எகிப்து

* அவசரம் பிசாசின் குணம்.
* இருவர் கூடியிருப்பது என்பது கிடையாது. இறைவனையும் சேர்த்து மூன்று பேர்.
* உருவம் சிறியதென்று எண்ணாதே! ஊசி உருக்கினால் செய்யப்பட்டது.
* உன் மனைவி குள்ளமாக இருந்தால் நீ குனிய வேண்டும்.
* ஒவ்வொருவரும் தன் வீட்டு வாசலைச் சுத்தம் செய்தால் தெரு தானாகவே சுத்தம் ஆகிவிடும்.
* உலகம் ஒரு நாட்டியக்காரி மாதிரி. ஒவ்வொருவருக்காகவும் அது கொஞ்ச நேரம் ஆடுகிறது.
* ஒரு நல்ல காரியத்திலிருந்து மற்றொரு நன்மை உண்டாகிறது. பாலிலிருந்து வெண்ணெய் வருகிறது.
* தாயிலே கெட்டவருமில்லை. சாவிலே நல்லதும் இல்லை.
* கடன் வாங்குதல் ஏழைக்கப் பிறக்கும் முதல் குழந்தை.
* நல்ல மாற்றாந்தாய்கு சொர்க்கத்தில் தங்க நாற்காலி காத்திருக்கிறது.
* தாயை அழவிடுவதில் மனிதர்கள் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால், ஆண்டவன் அவர்களுடைய கண்ணீரை எண்ணிப் பார்க்கிறான்.
* களங்கமற்ற மனம் மிகச் சிறந்த அறிவாற்றலைவிட மேலானது.
* நிலவு உன்னோடு இருந்தால் நட்சத்திரங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:54

எஸ்டோனியா

* ஒரு பெண் மற்றொரு பெண்ணை ஒருபோதும் புகழ்ந்து பேசமாட்டாள்.
* உயர்வான இடத்தைச் சுற்றிப் போ; தாழ்வான இடத்தைத் தாண்டிப் போ.
* அருமையான குழந்தைக்குப் பிரம்பு தேவை.
* பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம் அவர்கள் விற்பனைக்கு உரிய பொருள்கள்.
* பெண் குழந்தைகள் உன் முழங்கால் அளவிற்கு வளர்ந்து விட்டால் அவர்களின் சீதனப் பெட்டிகள் மார்பு அளவு இருக்க வேண்டும்.
* தந்தையின் பாசம் சவக்குழி வரை; தாயின் பாசம் சிரஞ்சீவியானது.
* முதலில் முட்டையிடு; பின்னர் கொக்கரி.
* நல்ல மனசாட்சி இறைவனின் குரல்.
* அழுதுகொண்டே உலகிற்கு வருகிறாய். ஆனால், சிரித்துக் கொண்டே அதை விட்டுச் செல்லும்படி வாழ்வாயாக!
* நாய்க்கு உணவளிக்காதவன் கள்வனுக்கு அளிப்பான்.
* பொய் கனவின் ஆரம்பம்.
* நல்ல மனசாட்சி மென்மையான தலையணை.
* குறைவாகச் சாப்பிட்டு விட்டோம் என்று ஒருபோதும் கவலை கொள்ளாதே!
* வேறொருவனிடம் சொல்ல வேண்டியதை முதலில் உனக்கே சொல்லிப் பார்.
* இலாபமும் நட்டமும் இரட்டைச் சகோதரர்கள்
* நரகத்தில் விசிறிகள் இல்லை.
* ‘உழைப்பே வாழ்வு’ என்பதை உணர்ந்து உழைத்திடு.
* நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடு கட்டும்.
* பெருமை மடமையின் மிகத் தெளிவான அடையாளம்.
* பணக்காரனிடம் பணம் இருக்ககிறது. ஏழைகளிடம் மன அமைதி இருக்கிறது.
* சாவுக்குப் பயந்தவன வாழ்வை இழந்துவிட்டான்.
* வானில் பறவையின் பாதையைக் காண முடியாது. காதலியை நாடும் காதலன் காதையையும் காண முடியாது.
* வீட்டைக் கட்டிப் பாராதவன் மணிலிருந்து அவர்கள் முளைத்து இருப்பதாகக்கூட நினைக்கக் கூடும்.
* பிறர் புகழும் குதிரையை வாங்கு. பிறர் குறை பேசும் பெண்ணை மணந்துகொள்.
* மதிய உணவிற்குப் பிறகு இரண்டடியாவது நட.
* மடையனைத் திருத்தலாம். ஆனால், முரடனைத் திருத்த முடியாது.
* சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன். அத்தகைய கடிகாரம் ஓடினால் என்ன? நின்றால் என்ன?
* நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உனது உயருள்ளபோதே நீ தேடிவைத்துக்கொள்ள வேண்டும்.
* அன்னை உன்னைப் பத்து மாதங்கள் சுமந்தவள். மூன்று ஆண்டுகள் பாலூட்டி வளர்த்தவள். உனக்கு எல்லாம் அவள்தான். அவள் உன்னைப்பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படியாக நடந்துவிடாதே!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:54

# உலகில் மனிதனைவிட உயர்ந்த பொருள் ஏதும் இல்லை. மனிதனின் மனத்தைவிட உயர்ந்த பொருளும் ஒன்றில்லை.
# வெட்டி வீழ்த்திய கோடரியையும் மணக்கச் செய்கிறது சந்தனம்
# மழைக்காலத்தில் பயணம் புறப்பட விரும்புவாய்; ஆனால் கோடைக்காலத்தில் சக்கரங்கள் செய்.
# அதிகமாகப் பயன்படுத்தப்பட கலப்பை மின்னுகிறது. தேங்கிய தண்ணீர் நாறுகிறது.
# கொண்டு வருபவர் இல்லையென்றால் பெற்றுக் கொள்பவரும் இலை. திருடர்கள் இல்லையென்றால் வேலியும் இல்லை.
# உழுகின்ற கைகளையும் ரொட்டிக்கு மாவு பிசையும் கைகளையும் போற்றி வணங்கு.
# கடவுளுக்குக் காலம் உண்டு; உழவர்களுக்கு ரொட்டியுண்டு.
# வசந்த காலத்தில் உழவன் ஒரு மூட்டை அறியாமையைச் சுமக்கிறான். இலையுதிர் காலத்தில் ஒரு மூட்டை அறிவைச் சுமக்கிறான்.
# பித்தளை ஏழைகளின் தங்கம், ஈயம் தேவையானவர்களுக்கு வெள்ளி.
# புண்ணியவதியும் உடைந்த காலும் வீட்டிலேயே தங்கிவிட வேண்டும்.
# எது உன்னை அடிக்கிறதோ அது உனக்கொரு பாடம். எது உன்னை இழந்ததோ அது வீணானது.
# எங்கு உன்னால் எதையும் எட்டிப்பிடிக்க முடியவில்லையோ, அங்கு உன் கையை நீட்டாதே!
# பெண்ணிடம் சொன்ன இரகசியத்தைவிட, அதிகத் தண்ணீரை சல்லடை பிடித்து வைத்திருக்கிறது.
# போதும் என்பது ஒவ்வொருவரின் எஜமான்ன்.
# மருமகள் மாமியாரின் மருந்து.
# எவருக்கும் தாயும் தந்தையும் கற்றுத் தரவில்லையோ அவருக்கு உலகம் கற்றுத் தருகிறது.
# மிகுந்த பணிவு பாதி கர்வம்.
# சமமான பாதையில் ஒரு சிறு கல்கூட சுமை வண்டியைப் புரட்டிவிடும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:55

ஐரிஷ்

* எவ்வளவு காலம் நீ வீட்டைவிட்டு வெளியே இருந்தாலும் நீ உன்னைப்பற்றி ஒரு கெட்ட கதையை வீட்டுக்கு கொண்டு வராதே!
* வாயிலே உறவு, மனதிலே பகை.
* களிப்புற செய்வதற்கும் விருந்தோம்பலுக்கும் கெட்டவனாக இருக்கும் மனிதன் உன்குப் பாதையைக் காட்டுகிற நல்லவன்.
* மூடிய வாய் அமைதி நிறைந்தது.
* ஒரு வழக்கத்தை உடைத்து எறியாதே! புதிதாக ஒரு வழக்கத்தை கண்டுபிடிக்காதே!
* எங்கே வரதட்சணை உள்ளதோ அங்கே ஆபத்தும் உள்ளது.
* உன் சொந்த மூக்கு இன்னும் உனக்கு அறிவுரை கூறலாம்.
* காலிப் பையினுள் கையை விடுவதால் ஒரு நன்மையும் இல்லை.
* பாதை வளைந்திருக்கட்டும்; நேராக இருக்கட்டும் நெடுஞ்சாலை தான் குறுக்கு வழி.
* தன்னைவிடச் சிறந்த தூதனை குள்ளநரி ஒருபோதும் அனுப்பாது.
* அபூர்வம் என்பது எதற்கும் கடைசி. முதன்மையை விட சிறந்தது.
* தனக்கு எதிராகச் சில விஷயங்கள் போகும்வரை ஒருவர் புத்திசாலி இல்லை.
* இதயம் திருப்தியானால் கண்களுக்கும் திருப்தியே.
* கப்பலின் ஆரம்பம் ஒரு ‘பலகை’. சூளையின் ஆரம்பம் ஒரு ‘கல்’ இளவரசரின் ஆட்சிக்கு ஆரம்பம் ‘வருக’ என ஒரு நல்வாழ்த்து உடல் நலத்தின் ஆரம்பம் ‘உறக்கம்’
* நட்சத்திரங்கள் ஓசை இடுவதே இல்லை.
* தனிமையைவிட வாக்குவாதமே மேல்.
* சுமை ஏறிய சோளக் கதிர்தான் தன் தலையை மிகத் தாழ்த்தித் தொங்கப் போட்டுக்கொள்ளும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:55

கலிபோர்னியா

* அதிகாலையில் எழுந்தவனும் இளவயதில் மணந்தவனும் எக்காலத்தம் வருந்தியதே இல்லை.
* செல்வம் என்பது பணம் மட்டுமல்ல.
* கணவனின் பலம் கையிலிருக்கிறது; மனைவியின் பலம் நாக்கிலிருக்கிறது.
* கைம்பெண் கூரையில்லாத கட்டிடம்.
* கிழவிகளையும் ஓநாய்களையும் படைத்த இறைவன் உலகைப் பாழாக்கிவிட்டான்.
* சமையல் மோசமானால் ஒருநாள் இழப்பு; அறுவடை மோசமானால ஓராண்டு இழப்பு; திருமணம் மோசமானால் ஆயுள் முழுதும் இழப்பு.
* பயமின்றி வளரும் பெண்குழந்தை பெருமையில்லாமல் இறக்கும்.
* ஊசி இல்லாத பெண், நகம் இல்லாத பூனை.
* ஏழைப் பெண்ணின் வயல் அவள் முந்தானையிலேயே இருக்கும்.
* ஒருத்தியை நீ அடையும்வரை அவள் கவர்ச்சியாகத்தான் இருப்பாள்.
* கணவன் தலை - மனைவி இதயம். இப்படியுள்ள திருமணம் இன்பமானது.
* மாதா கோயிலுக்குச் செல்லும் பாதையில் இருந்து கொண்டு உனக்கு மனைவியைத் தேர்ந்தெடுக்காதே!
* மனைவி, கப்பல், குதிரை இம்மூன்றையும் மற்றவரை நம்பி ஒப்படைக்காதே!
* மற்றவர்களுடைய தவறுகள் நமக்கு நல்ல ஆசிரியர்கள்.
* அமைதியான நீர் ஆழமான குளம்.
* நீதிக்கு நட்பில்லை.
* பழக்கத்தைப் பசி, சத்தியத்தைப் பேசு.
* தீய செயலைப் பனிக்கட்டியின் மேல் எழுது; ஆனால், நற்செயலை பாறையின் மேல் எழுது.
* கடின உழைப்பாளியும் நற்சுகமும் நண்பர்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:56

கிரேக்கம்

* எல்லாத் தீமைகளின் ஆதாரமும் குடி.
* அவர்கள் உன்னைக் குடித்திருக்கிறாய் என்று சொல்லும்போது சுவரைப் பிடித்துக்கொள். போய்க்கொண்டே இரு.
* உதாரணத்திலிருந்து பிறந்த தத்துவமே சரித்திரம்.
* ஒவ்வொரு கல்லின் கீழும் ஒரு தேள் தூங்குகிறது.
* எல்லா மக்களைப் பற்றியும் நல்லதாகப் பேசுவதே எப்போதும் நல்லது.
* எதையும் விரும்பாதவன் உண்மையான செல்வந்தன். எல்லாவற்றையும் விரும்புவன் உண்மையன ஏழை.
* குள்ளநரிகளைவிட மிகவும் உற்றுக் கவனிப்பது அண்டைவீட்டுக்காரரே.
* முழு வாழ்வைவிடப் பாதி வாழ்வு எவளவு சிறந்தது என்பதை இளைஞர்கள் அறிய மாட்டார்கள்.
* உண்மையின் கதை எளிதானது.
* இழப்பு தரும் துன்பங்களின் அளவிற்கு ஆதாயங்கள்.
* கேளாத இசை மதிப்பை அடையவில்லை.
* பல காரியங்கள் அனுபவத்திற்கு மாறாகவே நடக்கின்றன.
* அறிஞன் தன்னுடைய அதிர்ஷ்டத்தை தன்னுடனே எடுத்துச் செல்கிறான்.
* அவதூறுக்கு சேதப்படுத்தும் வகையில் புகழ் நம்மை உருவாக்குகிறது.
* அதிர்ஷ்டம் உள்ளவனுக்கு ஒவ்வொருவரும் உறவினர்.
* குழல் ஊதுபவர்களிடையேகூட நாவிலிருந்து ஒரு ஓசை வர இயலும்.
* குஷ்டரோகிக்கு மோதிரத்தை விற்க முயல்வது பயன்றறது.
* அறிஞன் அனுமதிக்காவிட்டால் அது கெட்டது. ஒரு முட்டாள் புகழ்ந்தால் அது மோசமானது.
* மௌனம் தீங்கு செய்வது அரிது.
* இளமையில் மௌனம் சிறந்தது பேச்சைவிட.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 18:56

# எங்கே வலி இருக்கிறதோ அங்கே கை இருக்கிறது.
# பள்ளிக்கூடத்திற்கு ஒருபோதும் செல்லாதபோதிலும் விலங்குகள் தங்களுடைய மோசமான எதிரிகளை எதிர்த்து இயல்பாகவே காத்துக்கொள்கின்றன.
# உடல் சிறைபட்டுக் கிடந்தாலும் குறைந்த பட்சம் மனம் சுதந்திரமாக இருக்கிறது.
# மனிதனுக்குச் சிறந்த நன்மையும் பெரிய நோயும் பெண்ணால் கிடைக்கின்றன.
# பெண்ணின் ஆயும் கண்ணீர்.
# அதிர்ஷ்டசாலிக்குச் சேவல்கூட முட்டையிடும்.
# ஒரு விநாடி பொறுமை பத்து விநாடி சுகம்.
# பொய்யன் உணைமையைச் சொல்லும்வரை அவனைப் பொய்கள் சொல்லவிடு.
# இனிமையான குணநலன்கள் கொண்ட நல்ல மனிதன் தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் தன்னுடைய வாரிசுகளாவே ஆக்கிவிடுகிறான்.
# முள்ளின் மேலிருந்து பாடினாலும் மலர் மீதிருந்து பாடினாலும் குயில் இன்மையாகவே பாடுகிறது.
# காதல், அரசியல் இரண்டும் சூதாட்டம்; இரண்டிலும் பொய்யும் பித்தலாட்டமும் செய்வதால்தான் வெற்றிபெற முடியும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகப் பழமொழிகள் Empty Re: உலகப் பழமொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum