சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் - Page 2 Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் - Page 2 Khan11
MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் - Page 2 Www10

MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha on Fri 18 Jul 2014 - 1:00

First topic message reminder :

ஒரு மலேசிய விமான விபத்து: 295 பேரை பலி கொண்ட சோகம்!

மாஸ்கோ: கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி கோலாம்பூரிலிருந்து 239 பயணிகளுடன் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமான சோகம் மறைவதற்குள், 280 பயணிகள் மற்றும் 15 விமான சிப்பந்திகளுடன், ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம் ஒன்று ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் 777 ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் வான்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானம் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


சுட்டுவீழ்த்தப்பட்டதா?
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இரு படைகளுக்கும் இடையேயான ஏவுகணை தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரஷ்ய ஆதரவு படைகளின் தாக்குதலிலேயே மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.


விமான நிறுவனம் விளக்கம்:
விமானம் உக்ரைன் நாட்டு வான்பரப்பில், சுமார் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமான நிலையத்துடனான கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மீண்டும் சோகம்:

கடந்த மார்ச் 8ம் தேதி, மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் திடீரென மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகள் குறித்து இதுவரை தகவல் ஏதுமில்லை. இந்நிலையில், மீண்டும் மலேசியாவிற்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியிருப்பது அந்நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1024082

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 24 Jul 2014 - 7:49

தற்போது இணையத்தளங்களில் அதன் நேரடிக் காட்சி என்று சில வீடியோக்களும் தரவேற்றிருக்கிறார்கள் பார்க்கும் போது மிகவும் பயங்கரமாக இருக்கிறது 
சோகமான இன்நிகள்வு உலகை ஒரு முறை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது


MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha on Thu 24 Jul 2014 - 22:07

மலேசிய விமானத்தில் இறந்த 193 சடலங்கள் நெதர்லாந்தில்! சோகமாக காட்சி அளிக்கும் நாடு…


கிழக்கு உக்­ரே­னிய பிராந்­தி­யத்தில் வெடித்துச் சிதறி வீழ்ந்த மலே­சிய எம்.எச். 17 விமா­னத்தில் பய­ணித்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளது சட­லங்கள் நெதர்­லாந்­துக்கு விமா­னத்தில் எடுத்துச் செல்­லப்­பட்­டுள்­ளன.

அங்கு அந்த சட­லங்­களை அடை­யாளம் காண்­ப­தற்­கான பிரேத பரி­சோ­த­னைகள் முன்னெ­டுக்­கப்­படவுள்ளன. மலே­சிய விமா­னத்தில் பய­ணித்து உயி­ரி­ழந்த 298 பேரில் 193 பேர் நெதர்­லாந்து பிரஜை­க­ளாவர்.

இந்­நி­லையில் அந்த விமா­னத்தில் பய­ணித்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தும் முக­மாக நெதர்­லாந்தில் ஒரு நாள் தேசிய துக்க தினம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
விமா­னத்தில் பய­ணித்­த­வர்­களில் 200 பேரின் சட­லங்­களே மீட்­கப்­பட்­டுள்­ளன.

மேற்­படி விமானம் சிதறி வீழ்ந்த தளத்தை சுற்­றிய பகு­தியை தமது கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­துள்ள ரஷ்ய ஆத­ரவு கிளர்ச்­சி­யா­ளர்கள் சட­லங்­களை ஒப்­ப­டைப்­பதை தாம­தப்­ப­டுத்­து­வ­துடன் ஆதா­ரங்­களை மாற்­றி­வ­ரு­வ­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

விமான அனர்த்தம் இடம்­பெற்று 4 நாட்­களின் பின் சுமார் 200 சட­லங்­க­ளுடன் குளி­ரூட்­டப்­பட்ட புகை­யி­ரதம் உக்­ரே­னிய அர­சாங்கக் கட்­டுப்­பாட்­டி­லுள்ள கார்கிவ் நகரை செவ்­வாய்க்­கி­ழமை வந்­த­டைந்­தது.இத­னை­ய­டுத்து புதன்­கி­ழமை காலை அவற்றில் 40 சவப்­பெட்­டிகள் கார்கிவ் விமான நிலை­யத்­தி­லி­ருந்த இரு இரா­ணுவ விமா­னங்­களில் ஏற்­றப்­பட்­டன.
இதன்­போது, அந்த விமான நிலை­யத்தில் தூது­வர்­களும், அதி­கா­ரி­களும், படை­வீ­ரர்­களும் கூடி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.நெதர்­லாந்தின் எயின்­ஹோவன் விமான நிலை­யத்தை புதன்­கி­ழமை மாலை முத­லாவது விமானம் வந்­த­டைந்­துள்­ளது.

இதன்­போது, அந்த விமான நிலை­யத்தில் நெதர்­லாந்து பிர­தமர் மார்க் ருத்தும் அந்­நாட்டு அரச குடும்­பத்­தி­னரும் சமு­க­ம­ளித்­தி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.தொடர்ந்து சடலங்கள் ஆளடையாளம் காண்பதற்காக ஹில்வெர்ஸம் பிராந்தியத்தின் தெற்கேயுள்ள கொர்பொரல்வான் அவுட்ஹெயுஸ்டனுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
சடலங்களை அடையாளங் காணும் செயற்கிரமம் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என பிரதமர் மார்க் ருத் தெரிவித்தார்.

அதே­ச­மயம் ரஷ்ய ஆட்சி கிளர்ச்­சி­யா­ளர்­களால் மலே­சிய அதி­கா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட விமா­னத்தின் கறுப்பு பெட்டி தரவு உப­க­ர­ணங்கள் பிரித்­தா­னி­யா­வுக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளன.

அவை பார்ன்­ப­ரோ­வி­லுள்ள விமான விபத்­துக்கள் தலை­மை­ய­கத்தில் பரி­சோ­திக்­கப்­படவுள்ளன. மலே­சிய விமானம் சுட்டு வீழ்த்­தப்­ப­டு­வ­தற்­கான சூழ்­நிலை உரு­வாக்­கப்­பட்­டதில் ரஷ்யா பொறுப்­பாக இருந்த போதும் அந்த விமான அனர்த்­தத்தில் ரஷ்ய அர­சாங்கம் நேர­டியாக தொடர்பு பட்­ட­தற்­கான சான்று எதுவும் இல்லை என அமெ­ரிக்க சிரேஷ்ட புல­னாய்வு அதி­கா­ரிகள் செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர்.

அமெ­ரிக்க தேசிய புல­னாய்வு பணிப்­பாளர் அலு­வ­ல­கத்தை சேர்ந்த அதி­கா­ரிகள் அந்த விமானம் கிழக்கு உக்­ரேனில் உள்ள கிளர்ச்­சி­யா­ளர்­களால் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தற்­கான சான்­று­களை சமர்­பித்­துள்­ளனர்.

ரஷ்­யாவின் உத­வி­யுடன் உரு­வாக்­கப்­பட்ட சூழ்­நி­லையின் கீழ் கிழக்கு உக்­ரேனில் இருந்து ஏவப்­பட்ட எஸ். ஏ.11 ஏவு­கணை ஒன்றின் மூலமே அந்த விமானம் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தாக பெயரை வெளி­யிட விரும்­பாத அந்த அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha on Thu 24 Jul 2014 - 22:08

MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் - Page 2 Natrlaintu-01-600x337

MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் - Page 2 Natrlaintu-600x337

MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் - Page 2 Natrlaintu-02-600x337


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha on Sat 26 Jul 2014 - 0:55

உக்ரைனின் விமானம் என நினைத்து மலேசிய விமானத்தை தவறுதலாக சுட்டுவிட்டோம் என்று கிழக்கு உக்ரைனில் போராடும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

கிழக்கு உக்ரைன் கிளர்ச்சிகுழுவை சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் இத்தாலியில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

உக்ரைனின் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக எங்களது உயரதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். அதன் பின்னர் விமானம் விழுந்த பகுதிகளை நோக்கி சென்றோம். அங்கு 5 வயதுக்கும் குறைவான பெண் குழந்தை ஒன்று முகத்தை பூமியில் புதைத்தபடி இறந்து கிடந்தது. கொடூரமான அந்த காட்சியை பார்த்தோம்.

அப்போதுதான் நாங்கள் சுட்டு வீழ்த்தியது பயணிகள் விமானத்தை என்பது தெரியவந்தது. பின்னர்தான் திரும்பிய இடமெல்லாம் உடல்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ந்தோம்.

உக்ரைன் விமானத்துக்கு குறிவைத்து தவறுதலாகவே மலேசிய பயணிகள் விமானத்தை சுட்டுவிட்டோம்.இவ்வாறு ரஷ்யா ஆதரவு கிளர்ச்சி குழுவைச் சேர்ந்தவர் தெரிவித்தவர்.

இதேவேளை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது உக்ரைனே வீழ்த்தியது என்று ரஷ்யா குற்றம்சாட்டியது. இந்த நிலையில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களே ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது
http://world.lankasri.com/view.php?22cOl72bci80Mb4e2yMM402dBnB3dd0nBnB303C6A42e4608Secb3lOec3


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha on Wed 30 Jul 2014 - 1:10

மலேசிய விமானம் ஏவுகணை தாக்கப்பட்டுதான் வீழ்ந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
யூலை 17ம் திகதி உக்ரைன் மீது பறந்த மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மற்றும் உக்ரைன் அரசு படைகள் இதை தங்கள் தரப்பு செய்யவில்லை என்று மறுத்துவருகின்றன.

அதிக உயரத்தில் பறந்த இந்த விமானத்தை 'பக்' வகை ஏவுகணையை கொண்டு தாக்கிதான் அழித்திருக்க முடியும் என்பது உலகமெங்கும் உள்ள பாதுகாப்பு பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.

இந்த வகை ஏவுகணைகளை ரஷ்யா கண்டுபிடித்தது என்றாலும் கூட, அதை பல நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்துள்ளது. எனவே தாக்குதல் நடத்தியது யார் என்பது மட்டுமின்றி, தாக்குதல் எதனால் நடந்தது என்பது குறித்தும் மர்மம் நிலவியது.

இதுகுறித்து ஐரோப்பிய விமான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்த நாட்டு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எம்எச்17 விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டு வீழ்ந்துள்ளதாக கறுப்பு பெட்டியில் தகவல் உள்ளது.

அந்த ஏவுகணை எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வேலையை சரியாக செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்

MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் - Page 2 Ukraine_jets_006

MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் - Page 2 Ukraine_jets_007

lankasri


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha on Wed 30 Jul 2014 - 1:15

மலேசிய விமானம் ஏவுகணை தாக்கப்பட்டுதான் வீழ்ந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
யூலை 17ம் திகதி உக்ரைன் மீது பறந்த மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மற்றும் உக்ரைன் அரசு படைகள் இதை தங்கள் தரப்பு செய்யவில்லை என்று மறுத்துவருகின்றன.

அதிக உயரத்தில் பறந்த இந்த விமானத்தை 'பக்' வகை ஏவுகணையை கொண்டு தாக்கிதான் அழித்திருக்க முடியும் என்பது உலகமெங்கும் உள்ள பாதுகாப்பு பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.

இந்த வகை ஏவுகணைகளை ரஷ்யா கண்டுபிடித்தது என்றாலும் கூட, அதை பல நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்துள்ளது. எனவே தாக்குதல் நடத்தியது யார் என்பது மட்டுமின்றி, தாக்குதல் எதனால் நடந்தது என்பது குறித்தும் மர்மம் நிலவியது.

இதுகுறித்து ஐரோப்பிய விமான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்த நாட்டு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எம்எச்17 விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டு வீழ்ந்துள்ளதாக கறுப்பு பெட்டியில் தகவல் உள்ளது.

அந்த ஏவுகணை எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வேலையை சரியாக செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்

MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் - Page 2 Ukraine_jets_006

MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் - Page 2 Ukraine_jets_007

lankasri


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum