சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


“கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும். Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
“கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும். Khan11
“கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும். Www10

“கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும்.

Go down

Sticky “கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும்.

Post by Nisha on Mon 4 Aug 2014 - 16:12

குளிர் பானங்களுக்கு பயன்படுத்தப் படும் “கருப்பு கசகசா” வின் நிலை என்ன?

“கருப்பு கசகசா” வைப் பொருத்த வரையில் அது “கசகசா” இனத்தைச் சேர்ந்த ஒன்றல்ல அதன் பெயர் “சப்ஜா” (basil seeds) என்பதாகும். துளசி செடி வகைகளில் இனிப்புத் துளசி என்ற வகையைச் சேர்ந்த தாவரத்தினால் இந்த சப்ஜா என்ற பதார்த்தம் தயாரிக்கப்படுகின்றது.

இந்த சப்ஜா வைப் பொருத்த வரையில் இதுவொரு சுவை சேர்க்கும் பதார்த்தமாகும். பெரும்பாலும் இதற்கு பாலுடா விதை (faluda seeds) என்ற பெயரையே பயன்படுத்துவார்கள். இலங்கையில் சில இடங்களிலும் தமிழகத்தில் சில பகுதிகளிலும் மாத்திரம் இதற்கு கருப்பு கசகசா என்ற பெயர் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதன் உண்மையான பெயர் “சப்ஜா” எப்பதாகும்.

இந்த “சப்ஜா” என்ற பதார்த்தம் உடல் சூட்டைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும். அதே போல் இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் இது நிவாரணி என்று சொல்லப்படுகின்றது. அத்துடன் வாந்தி ஏற்படும் தன்மையை இது இல்லாமலாக்கவும் செய்யுமாம்.

அதனால் இந்த கருப்பு கசகசா (சப்ஜாவை) வை பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஓபியம் பொப்பி என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் உண்மையான கசகசா தான் தடுக்கப்பட்டது.

இரண்டாவது சந்தேகம் :

ஓபியம் பொப்பி (Opium Pappy) என்ற தாவரத்தின் மூலம் போதை பொருள் தயாரிக்கிறார்கள். ஆனால் அதன் விதைக்கும் போதைக்கும் தொடர்பில்லையே அப்படியிருக்கும் போது அதை எப்படி ஹராம் என்று சொல்வது?

ஓபியம் பொப்பி என்ற தாவரத்தில் இருந்து போதை பொருள் தயாரிக்கிறார்கள் என்பதற்காக மாத்திரம் கசகசா வை நாம் தடை என்று சொல்லவில்லை.

ஓபியம் பொப்பி (Opium Pappy) என்ற தாவரத்தில் இருந்து ஹெராயின் என்ற போதைப் பொருள் தயார் செய்யப்படுகின்றது. இதைத் தயார் செய்வதற்கு பொப்பி தாவரத்தின் பால் பயன்படும். அந்தப் பாலில் போதை ஏற்படுத்தக் கூடிய ஒரு பதார்த்தம் இருக்கிறது. அதற்கு ஓபியேட் (Opiate) என்று பெயர் சொல்லப்படும்.

இந்த ஓபியேட் என்ற பதார்த்தம் பொப்பி தாவரத்தின் பாலில் இருப்பதினால் தான் ஹெராயின் போதைப் பொருளாக இனம் காணப்பட்டுள்ளது.

ஓபியம் பொப்பி செடியில் இருந்து பெறப்படும் போதை பொருளின் பொதுவான பெயர் ஒபியேட் (Opiate) என்பதாகும். இதில் மார்பின் (Morphine) கோடியம் (Codeime) ஆகிய இரு வகையான போதை தரக்கூடிய பதார்த்தங்கள் அடங்கியுள்ளன.

ஓபியேட் என்ற போதையை ஏற்படுத்தக் கூடிய பதார்த்தம் அதன் விதையிலும் சிறு அளவுக்கு காணப்படுகின்றது. அனதால் தான் அது ஹராம் என்றாகின்றது.

அதிகமா (உண்டால்) போதை தரக்கூடியதில் குறைவானதும் ஹராமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : திர்மிதீ (1788)

ஓபியம் பொப்பி செடியில் இருந்து பெறப்படும் “கசகசா” கருப்பு, வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களிலும் காணப்படுகின்றது. இந்த இரண்டு நிற கசகசாவும் ஹராமானதாகும்.

பொதுவாகவே ஓபியம் செடியில் இருந்து பெறப்படும் “கசகசா” வை பிரியானி போன்ற சாப்பாட்டில் தான் பெரும்பாலும் பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது.

(கருப்பு கசகசா என்ற பெயரில் அழைக்கப்படும் சப்ஜா என்பது வேறு கசகசா என்பது வேறு என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸின் படி ஓபியம் பப்பி செடியில் இருந்து பெறப்படும் “கசகசா” விதையிலும் போதை இருப்பதினால் அந்த விதையை நாம் பயன்படுத்துவது கூடாது.
http://rasminmisc.com/kasakasa-santhekangalum-thelivum/



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: “கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும்.

Post by ahmad78 on Mon 4 Aug 2014 - 16:19

பதிவிற்கு நன்றி நிஷா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: “கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும்.

Post by Nisha on Mon 4 Aug 2014 - 16:21

கசகசா வை ஆங்கிலத்தில் Opium Pappy என்று சொல்லப்படும்.

இந்த பப்பி விதை எனப்படும் கசகசா என்பது பப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.

ஆனால் விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது அந்த விதைப் பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்

அதுதான் ஓபியம் என்ற போதைப் பொருள்.

இந்த கசகசாவை ஓராளவுக்கு மேல் சாப்பிட்டால் போதையை கொடுக்கும். இதனால்தான் துபாய், கத்தார், குவைத், ஓமான், சவூதி அரேபியா, சிங்கப்பூர், மலேசிய போன்ற நாடுகளில் இந்த கசகசா போதை பொருள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நாடுகளுக்கு கசகசாவை கொண்டு சென்று பிடிப்பட்டால் சிறை தண்டனை நிச்சயம்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: “கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும்.

Post by Nisha on Mon 4 Aug 2014 - 16:29


வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப்பொருள்.

மட்டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட சேர்க்கப்படும் கசகசா கொண்டு சென்றதற்காக, வளைகுடா நாடுகளில் கைது செய்யப்பட்டாள் 10 முதல் 20 வருடங்கள் வரை அங்கே சிறைத் தண்டனை என்பது தெரியுமா உங்களுக்கு?
சில சமயம் தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது. கூடவே, பயணிகளின் கண்ணில்படும்படியாக 'கசகசாவைக்கொண்டுசெல்லத்தடை' என்றுகொட்டைஎழுத்துகளில் எழுதி
வைக்கப்பட்டுள்ளது

கசகசா ஏன் கதி கலக்குது?
உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது. இந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது... அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது, அந்த விதைப் பையைக் கீறி... அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்... அதுதான் ஓபியம்
.
'பாப்பி' செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான். மற்ற வகையின் 'பாப்பி' மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

-ஜூனியர் விகடன்
நன்றி



“கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும். Images

“கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும். Images%2B%25282%2529

“கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும். Images%2B%25281%2529


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: “கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும்.

Post by நண்பன் on Mon 4 Aug 2014 - 19:06

பெரிய ஒரு சந்தேகம் தீர்ந்தது அக்கா அறிந்திடாத அறிய ஆவலாய் இருந்த ஒரு தகவல் மிக முக்கியமான தகவலும் கூட பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா நன்றி..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: “கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum