சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: Khan11

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

4 posters

Go down

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: Empty பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

Post by ahmad78 Mon 25 Aug 2014 - 15:31

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:


 


காம வக்கிரம் கொண்டவர்களை திருத்துவதை விட நாம் திருந்தி கொள்வது நல்லது


நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக விழிப்புணர்வோடு இருந்தால் மட்டும் போதும். 


 


பருவ வயது பையன்கள் சிறிய வயது பெண் குழந்தையைக் கற்பழிப்பது ஏன்?  


பள்ளிகூட டீச்சர்கள் பெண் குழந்தையைக் கற்பழித்தது ஏன்? 


பள்ளிகூட மாணவிகள், கல்லூரி மாணவிகள் கர்ப்பம் தரிப்பது ஏன்?


சிறிய வயதிலேயே மாணவ மாணவிகள் கெட்டுபோக காரணம் என்ன?


 


பள்ளிகூட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிகூட டீச்சர், டியூஷன் டீச்சர், டாக்டர், மிக நெருங்கிய உறவினர்கள், முதியவர்கள், நண்பர்கள்,அண்டை விட்டார்கள் இப்படி ஒரு பெரிய பட்டாளமே வீட்டில் தனியாக இருக்கும் பெண் குழந்தைகளைக் குறி வைத்து கற்பழிப்பது அல்லது பாலியல் தொந்தரவு கொடுக்க காரணம் ஏன்?  இவர்களுக்கு பெண் குழந்தை கிடைக்காத பட்சத்தில் ஆண் குழந்தைகளையும் பாலியல் தொந்தரவு கொடுக்க காரணம் ஏன்?


 


சமீபத்தில் நமது நாட்டில் அதிகப்படியான கற்பழிப்புகளைப் பற்றி கேள்விப்படுகிறோம். மிகக்குறைந்த அளவே செய்திதாளில் வெளிவருகிறது, போலிஸ்சில் புகார் கொடுப்பவர்களும் மிக சிலரே. இவ்வாறான அநியாயங்கள் நடக்கக் காரணம் என்னவென்றும் அதற்கான தீர்வுகளை அலசி ஆராயிந்து பார்ப்போம்.


 


ஆபாசத்தை தூண்டும் சினிமாவும் கேபிள் டிவியும் இண்டர்நெட்டும் யூடிபும் தான் ஆபாசம் எளிதில் பரபப்படுவதும் முக்கிய காரணம் மற்றும் தற்போது புதிதாக வந்துள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் ஆபாசம் எளிதில் பரபப்படுவதும் ஒரு முக்கிய காரணம்.


 


இத்தகைய ஆபாச படக்காட்சிகளை தினமும் டிவியில் அல்லது இன்டர்நெட்டில் அல்லது தன்னுடைய மொபைலில் கண்டு களிக்கும் விடலைகள் மற்றும் பெரியவர்கள் உடனடி வடிகால் தேடுகிறார்கள். ஆகவே கையில் அகப்படும் கன்னியரை அல்லது பெண் குழந்தைகளை அல்லது குடும்ப பெண்களை கற்பழிக்கின்றனர் அல்லது முடிந்த வரை பாலியல் தொந்தரவு கொடுகின்றனர். மாட்டிகொள்வோர் விரல்விட்டு எண்ணக்கூடிய மிக சிலரே, ஏன் என்றால் அந்த சிறிய குழந்தைகளுக்கு தனக்கு என்ன நடக்குதே என்றே தெரியாது என்பது தான் உச்சகட்ட கொடுமை.


  


காநாடக மற்றும் பீகார் மாநில அரசியல் தலைவர்கள், நீண்ட ஆராயிச்சிக்கு பிறகு, கைபேசி மொபைலும்  கற்பழிப்புக்கு மிக முக்கிய காரணம் என்றுள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


 


மேற்கத்திய நாடுகள் பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று வாய்கிழியப் பேசுவார்கள், ஆனால் ஆபாசங்கள் சினிமாக்கள் கவர்ச்சியான பெண்ணின் ஆடைகள் தயாரித்து உலகமெல்லாம் பரப்புவதில் என்ன்னென்ன முடியுமோ அத்தனையும் செய்வார்கள். கேட்டால் பெண் சுதந்திரம் என்பார்கள்.


 


முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு பெண்களுக்கு மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஆபத்து அதிகரித்து உள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: Empty Re: பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

Post by ahmad78 Mon 25 Aug 2014 - 15:32

பெற்றோர்களே !!! உங்கள் பெண் பிள்ளைகள் விசயத்தில் தற்போது அதிக கவனமும் கவலையும் எச்சரிக்கையும் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது


 


நீங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டியவை என்னவென்று பார்ப்போம்.


 


பொதுவாக 


 


குழந்தைகளை தனிமையில் இருக்க அனுமதிக்கக்கூடாது 


குழந்தைகளை யார் வீட்டிலும் இருக்க அனுமதிக்கக்கூடாது 


குழந்தைகளை யார் வீட்டிற்கும் போக அனுமதிக்கக்கூடாது 


குழந்தைகளை யாறும் தொட்டு பேச அனுமதிக்கக்கூடாது 


மொபைல் மற்றும் ஸ்மார்ட் போன்களை பிள்ளைகளுக்கு வாங்கி தரக்கூடாது.


குழந்தைகளை தனிமையில் இன்டர்நெட் வொர்க் பண்ண அனுமதிக்கக்கூடாது 


குழந்தைகளை தனிமையில் ஃபோன் பேச அனுமதிக்கக்கூடாது 


குழந்தைகளை தனிமையில் கணினி வொர்க் பண்ண அனுமதிக்கக்கூடாது 


குழந்தைகளை தனிமையில் டிவி பார்க்க அனுமதிக்கக்கூடாது 


குழந்தைகளை தனிமையில் வீட்டை விட்டு வெளியே போக அனுமதிக்கக்கூடாது 


 


குழந்தைகளை வீட்டில் தனியாக அறையில் கதவை பூட்டி படிக்க அனுமதிக்கக்கூடாது 


குழந்தைகளை எப்போதும் தனியாக அறையில் கதவை பூட்ட அனுமதிக்கக்கூடாது 


 


டிவி சினிமா இன்டர்நெட் தேவை இல்லாதவற்றை தனியாக பார்க்க அனுமதிக்கக்கூடாது, 


நாம் எப்போதும் பிள்ளைகளின் கூட இருக்க வேண்டும்,


 


மொபைல் ஃபோன் இன்டர்நெட் டிவி முழுக்க முழுக்க நமது கண்காணிப்பில் இருக்க வேண்டும், தேவைப்படும்போது அவற்றை பயன்படுத்த வேண்டும். 


 


மொபைலில் தெரியாத நம்பரில் இருந்து மிஸ்டு கால் அல்லது அழைப்பு கால் வந்தால் பெற்றோர் தான் பேச வேண்டும், அடிக்கடி வந்தால் போலீஸில் உடனே புகார் செய்ய வேண்டும்.


 


மொபைல் நம்பரை பெற்றோரின் அனுமதி இல்லாமல் வேறு யாரிடமும் கொடுக்கக்கூடாது, தொடர்புக்கு எப்போதும் பெற்றோரின் நம்பரையே கொடுக்க வேண்டும்


 


பிள்ளைகளை ஆண் பெண் இருபாலார் படிக்கும் CO-EDUCATION பள்ளி கூடங்களில் கல்லூரியில் டியுஷனில் சேர்க்க வேண்டாம் (School, College, Tuition) மாற்று வழியை தேடுங்கள்


 


பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் GOOD TOUCH & BAD TOUCH பற்றி சொல்லி கொடுக்க வேண்டும், முடிந்த அளவு யாரையும் தொட அனுமதிக்கக்கூடாது மற்றும் முத்தம் கொடுக்க அனுமதிக்கக்கூடாது என்று சொல்லி கொடுக்க வேண்டும், யாரையும் நம்ப வேண்டாம் என்றும் சொல்லி தர வேண்டும். யார் அருகிலும் நெருக்கமாக நிற்கக் கூட வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்.


 


குழந்தைகள் பள்ளிக்கூடம் முடித்து வரும் போதும், விளையாடிவிட்டு வரும் போதும், வெளியில் இருந்து வரும் போதும் அவர்களின் முகத்தை எப்போதும் கவனித்து கொண்டு இருக்க வேண்டும், முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனே விசாரிக்க வேண்டும். 


 


சிறிய வயதிலிருந்து பெண் பிள்ளைகளின் ஆடையில் அதிக கவனம் செலுத்த வேண்டும், மேற்கத்திய மாடர்ன் ஆடைகளை ஆபாச ஆடைகளை வாங்கி தரக்கூடாது 


மெல்லிய மற்றும் இறுக்கமான ஆடைகளை வாங்கி தரக்கூடாது 


ஆண்களின் உடையை போல் உள்ள பேன்ட்ஸ் ஜீன்ஸ் டி-ஷர்ட் போன்ற ஆடைகளை வாங்கி தரக்கூடாது 


டாப்ஸ் லேக்கின்ஸ் போன்ற அசிங்கமான உடல் அவயங்கள் வெளியே தெரியக்கூடிய ஆபாச ஆடைகளை வாங்கி தரக்கூடாது 


 


சிறிய வயதிலிருந்து பெண்பிள்ளைகளை எப்போதும் ஷால் போட்டு பழகிக் கொள்ள வேண்டும், பெண் குழந்தைகளுக்கு எந்த வயதிலும் உடலில் மாற்றம் வரும் என்பதை நினைவில் இருக்க வேண்டும், எப்போதும் ஒரேமாதிரியாக இருந்தால் யாருக்கும் சந்தேகம் வராது. 


 


பெண் குழந்தைகளுக்கான உடலமைப்பு சிறுவயதிலிருந்தே ஆண்களின் உடலமைப்போடு வித்தியாசப்பட்டது. ஆண்களை ஈர்க்கக் கூடியது என்பதை பொதுவாக பல பெற்றோர்கள் உணர்வதேயில்லை. எனவே பெண் குழந்தைகளை மற்ற ஆண்களுககு கவர்ச்சி பொருட்களாக ஆக்காமல் அவர்கள் மீது தீயவன் பார்வை படாமல் இச்சை ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை.


 


பெற்றோரின் மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு இல்லாமல் பெண்பிள்ளைகளை எங்கும் அனுப்ப வேண்டாம். கடைக்கு போகுவது, விளையாட விடுவது, போன்ற எதுவாக இருந்தாலும் சரியே


  


பிள்ளைகள் கெட்டு போவதற்கு பெற்றோர் இருவரும் வேளைக்கு செல்வதும் ஒரு காரணம், ஏன் என்றால் வீட்டில் தனிமை, வீட்டில் வேலைக்கு போகும் பெற்றோரின் பெற்றோர்கள் இருந்தாலே தவிர பெற்றோர் இருவரும் ஏழைக்கு போகலாம், பெற்றோரின் பெற்றோர்கள் இல்லாத வீட்டில் தந்தை மட்டும் தான் வேளைக்கு செல்ல வேண்டும். பணம் முக்கியமில்லை, பிள்ளைகளின் வாழ்க்கை தான் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளவும்.


 


பிள்ளைகள் கையில் ஒருபோதும் பணத்தை கொடுகாதிர்கள், உங்கள் ATM கார்டை கொடுக்காதிர்கள், பணமும் கெட்டுபோவதற்க்கு மிக முக்கிய காரணம்.


 


வீட்டில் உள்ள தாதிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தாதி தாயைப் போல் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும், அடிக்கடி குழந்தையிடம் விசாரித்து கொள்ள வேண்டும்.


 


டே கேர் (DAY CARE) உள்ள தாதிகள் மற்றும் டீச்சர்கள் பற்றியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


DAY CARE வேண்டவே வேண்டாம், பெற்ற தாய்க்கே பொறுமை இல்லாத போது மற்றவர்கள் எப்படி நம் குழந்தையோடு பொறுமையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?


 


பெற்றோர் வெளியே செல்லும் போதும் விடுமுறையில் உறவினர் வீட்டில் தங்க வைப்பதில் கவனம் தேவை, பெற்றோரின் இருவரில் ஒருவர் கட்டயாமாக கூட இருக்க வேண்டும்.


 


தெரிந்தவர்கள் வீட்டில் பெண் பிள்ளைகளை விடடுச் செல்லாதீர்கள் 


ஏன் என்றால் அதிகமான பெண் பிள்ளைகள் கற்பழிக்கப்படுவது தெரிந்தவர்களாலே என்று சர்வே கூறுகிறது உதாரணத்திற்கு அண்டைவீட்டாரிடம்,நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என்று தெரிந்தவர்கள் வீடு என்று விடுவது மிக மிக ஆபத்து


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: Empty Re: பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

Post by ahmad78 Mon 25 Aug 2014 - 15:33

பெண் குழந்தைகள் பெரிய பெண்ணாக ஆனால் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும், வேறுபாடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்,எப்போதும் போல் ஒரேமாதிரியாக பார்த்து கொள்ள வேண்டும். 


 


டியூஷன் மற்றும் பள்ளிகூட ஆண் டீச்சர் தொட்டு பேச அனுமதிக்கக்கூடாது


டியூஷன் மற்றும் பள்ளிகூட ஆண் டீச்சர் தனிமையில் சந்திக்க அல்லது சொல்லிதர அனுமதிக்கக்கூடாது (ஸ்பெஷல் வகுப்பு)


பள்ளிகூட டீச்சரின் வீட்டிற்க்கு போக ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது


டியூஷன் டீச்சரிடம் மிகுந்த கவனத்துடன் பெற்றோரின் நேர்காணலில் இருக்க வேண்டும், பெற்றோர் அடிக்கடி போய் நேரே பார்க்க வேண்டும் 


டியூஷன் மற்றும் பள்ளிகூட ஆண் டீச்சரைப் பற்றி அடிக்கடி விசாரிக்க வேண்டும், அவர்களைப் பற்றி அடிக்கடி எச்சரிக்கை செய்ய வேண்டும்.


டியூஷன் மற்றும் பள்ளிகூட டீச்சர் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் வீட்டில் ஆண்கள் இருப்பார்கள் என்பதை கவனத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


 


பள்ளிகூட வேன் ஆட்டோ பஸ் ஓட்டுனரிடம் (டிரைவர்) மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், நமது குழந்தை எப்போதும் தனிமையில் கடைசி அல்லது முதல் குழந்தையாக பிக்கப் டிராப் செய்ய அனுமதிக்கக்கூடாது


தனிமையில் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது


பக்கத்தில் உட்கார அனுமதிக்கக்கூடாது


தொட்டுப் பேச அனுமதிக்கக்கூடாது


முத்தம் கொடுக்க அனுமதிக்கக்கூடாது


விளையாட  மற்றும் சிரித்து பேச அனுமதிக்கக்கூடாது


 


அதேபோல், நண்பரிடம் அண்டைவீட்டாரிடம் உறவினரிடம் முதியவரிடம் தனிமையில் பெண் குழந்தையை அனுமதிக்கக்கூடாது


பக்கத்தில் உட்கார அனுமதிக்கக்கூடாது


மடியில் உட்கார அனுமதிக்கக்கூடாது


தொட்டுப் பேச அனுமதிக்கக்கூடாது


முத்தம் கொடுக்க அனுமதிக்கக்கூடாது


இவர்களுடன் டிவி சினிமா சேர்ந்து பார்க்க அனுமதிக்கக்கூடாது


அவர்களின் ஸ்மார்ட் ஃபோனில் கேம்ஸ் விளையாட அனுமதிக்கக்கூடாது


எப்போதும் நம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் 


இவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள்,


ஏன் என்றால் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் அதேபோல் அவர்களிடம்  மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


 


அதேபோல் மருத்துவமனை ஊழியர் அனைவரிடமும், ஆண் டாக்டரிடம், ஒருபோதும் தனியாக சிறுமியை, பெண்களை விடக்கூடாது, எந்த டெஸ்ட்டாக இருந்தாலும் ஆண் டாக்டரோடு அல்லது மருத்துவமனை ஊழியரோடு எப்போதும் நாம் கூட இருக்க வேண்டும், ஆடையை ஒருபோதும் கழட்டக்கூடாது ரூமில் கேமரா இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


 (CHECK-UP, X-RAY, BLOOD TEST, SCAN, ECG, PHYSIOTHRAPHY)


 


அதேபோல் கடைக்காரரிடமும் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களிடமும் வீட்டை பாதுகாக்கும் காவலர்களிடமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


 


 


குழந்தை சரியில்லை என்றால் முதலில் குழந்தைகளின் பெற்றோர்களை தான் திட்டுவார்கள்,


என்ன இவ்வளவு மோசமாக கேவலமாக குழந்தைகளை வளர்த்து இருகிறார்கள் என்று தான் திட்டுவார்கள் என்பதையும் நினைவில் கொண்டுகுழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.


 


பல குழந்தைகள் கெட்டுபோவதற்க்கு பெற்றோர்களே முழுமுதல் காரணம்,


ஏன் என்றால் பெற்றோர்கள் தான் குழந்தைகளின் முதல் ரோல் மாடல் அதாவது முதல் முன்மாதிரி,பெற்றோர்கள் திருந்தாத வரை குழந்தைகளைதிருத்த முடியாது.


குழந்தைகள் எந்த வேளையில் இருந்தாலும், எப்போதும் பெற்றோராகிய நம்மை கண்காணித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். வேண்டுமானால் சன் டிவியில் குட்டிஸ் நிகழ்ச்சியை ஒருமுறை பாருங்கள் தெரியும், குழந்தைகள் எந்தளவிற்கு நம்மை துல்லியமாக கண்காணிக்கிறார்கள் என்று தெரியும்.


 


பெற்றோர்கள், குழந்தைகளுக்கு முன் சிகரெட் அடிப்பது, தண்ணி அடிப்பது, சீட் விளையாடுவது, சினிமா பார்ப்பது, பொய் சொல்வது, கெட்ட வார்த்தைபேசுவது போன்றவற்றை தயவு செய்து நிறுத்தி கொள்ளவேண்டும். அப்படியே செய்தாலும் பேசினாலும் குழந்தைகளுக்கு தெரியாமல் செய்ய வேண்டும்


பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதை நினைவில் கொள்ளவும் 


 


குழந்தைகளை சிகரெட் வாங்கி வரசொல்வது போன்றவற்றை அறவே செய்யக்கூடாது


முதலில் குழந்தைகளை அடிக்கடி கடைக்கு அனுப்பக்கூடாது, வெளியே அனுப்பக்கூடாது


 


குழந்தைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டக்கூடாது.


இரண்டு அல்லது மூன்று குழந்தைகளையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும்.


ஆண் மற்றும் பெண் குழந்தைகளை ஒரே மாதிரி நடத்த வேண்டும்.


குழந்தைகளுக்கு முன் பெற்றோர்கள் எப்போதும் உண்மையே பேச வேண்டும்


பெற்றோர்கள் வாக்குறுதி கொடுத்தால் அதை எப்பாடுபட்டவாது காப்பாற்ற வேண்டும்


ஒருபோதும் குழந்தைகளுக்குன் கொடுத்த வாக்குறுதியை ஏமாற்றக் கூடாது,


அதேபோல் பொய் பேசக்கூடாது


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: Empty Re: பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

Post by ahmad78 Mon 25 Aug 2014 - 15:34

குழந்தைகளை அடிக்கடி வெளியில் கூட்டி செல்ல வேண்டும்.


குழந்தைகளுக்கு பயனுள்ள அன்பளிப்புகள் வாங்கி கொடுக்க வேண்டும்.


குழந்தைகளுக்கு படிப்பதற்கு நூலகத்துக்கு அழைத்து செல்ல வேண்டும்.


குழந்தைகளுக்கு விளையாட விளையாட்டு மைதானத்துக்கு அழைத்து செல்ல வேண்டும்.


குழந்தைகளுடன் சேர்ந்து ஓடி ஆடி விளையாட வேண்டும்.


 


குழந்தைகளை பிற குழந்தையோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடாது மற்றும் ஒப்பிட்டு பேசக்கூடாது.


குழந்தைகளை பிறர்க்கு முன்னிலையில் அல்லது பிற குழந்தைகளின் முன்னிலையில் திட்டக்கூடாது, மட்டம் தட்டக்கூடாது, கேவலப்படுத்தக் கூடாது.


குழந்தைகளுக்கும் மானம் மரியாதை ரோஷம் அனைத்தும் உள்ளதை வசமாக பல பெற்றோர்கள் மறந்து விடுகிறார்கள்


 


குழந்தைகளை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கக்கூடாது, அடிக்கடி சபிக்கக்கூடாது,


குழந்தைகள் ஒரு வேலை செய்தால் அவர்களை வாழ்த்த வேண்டும் தட்டிக்கொடுக்க வேண்டும் Appreciate பண்ண வேண்டும்


குழந்தைகள் ஒரு தவறை செய்தால் உடனே discourage பண்ணக்கூடாது


குழந்தைகள் ஒரு தவறை செய்தால் உடனே அடித்து விடக்கூடாது


முதலில் அந்த குழந்தை ஏன் அந்த தவறை செய்தது என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும், என்ன காரணம் தீர விசாரிக்க வேண்டும், பிறகு அந்த தவறைப்பற்றி எச்சரிக்கை செய்ய வேண்டும்,


நிதானமாக அந்த தவறின் தீமையைப் பற்றி புரிய வைக்க வேண்டும்


மீண்டும் அதே தவறை செய்தால்


மீண்டும் அந்த தவறின் தீமையைப் பற்றி புரிய வைக்க வேண்டும், மீண்டும் தீவிரமாக எச்சரிக்கை செய்ய வேண்டும்,


பிறகு குழந்தைகளிடம் பேசாமல் இருக்க வேண்டும்,


பிறகு தான் லேசாக காலில் சிறிய கம்பால் அடிக்க வேண்டும்.


முகத்தில் அடிப்பதோ தலையில் கொட்டுவதோ தலையில் அடிப்பதோ உடலில் அடிப்பதோ ஒருபோதும் கூடாது


அதேபோல் குழந்தைகளை காலால் ஒரேபோதும் எட்டி உதைக்கக்கூடாது,


போலிஸ்காரன் போல் காட்டுமிராண்டித்தனமாக கண்டபடி கையால் காலால் அடிக்கக்கூடாது 


பெற்றோர்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்,


நமது செயல் அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும், அதை எத்தனை கோடி கொடுத்தாலும் ஒருபோதும் அழிக்க முடியாது,


 


குழந்தைகளை நமது செயல்பாடுதான், குற்றவாளியாக உருவாக்க காரணமாக இருக்கிறது என்பதை நாம் மறக்க வேண்டாம். பெற்றோர்களாகிய நமது செயல்களால் குழந்தைகளை கொஞ்ச கொஞ்சமாக கொலை செய்து கொண்டு இருக்கிறோம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: Empty Re: பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

Post by ahmad78 Mon 25 Aug 2014 - 15:34

பெற்றோர்கள், குழந்தைகளை எப்போதும் கவனத்துடன் பார்த்து கொள்ள வேண்டும், அசட்டையாக  பொடுபோக்காக இருக்கக் கூடாது  


குறிப்பாக குழந்தைகளை சிறியவயதில் அவர்கள் பார்க்கக் கூடாத எந்த செயலையும் பார்க்காமல் பார்த்து கொள்ள வேண்டும்


பெற்றோர்கள் தாங்கள் ஒருவருடன் கூடும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.


குழந்தைகள் ஒருபோதும் அதைப் பார்க்கக்கூடாது என்பதில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்


குழந்தைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் பேணுதலாக நடந்து கொள்ள வேண்டும்.


உராசுவது, முத்தம் இடுவது, தொட்டு விளையாடுவது, போன்றவற்றை அறவே குழந்தைகளுக்கு மத்தியில் முன் செய்யக்கூடாது


அதேபோல் டிவியில் இன்டர்நெட்டில் குறிப்பாக குழந்தைகள் பார்க்கக் கூடாத எந்த செயலையும் பார்க்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.


 


முதலில் நாம் பார்க்காமல் இருக்க வேண்டும் என்பது தான் மிக முக்கியம். நாம் பார்பதை குழந்தைகள் பார்த்தால் பிறகு குழந்தைகள் பார்க்க ஆரம்பிக்கும்.


முதலில் பெற்றோர்கள் நல்ல ஆடைகளை அணிய வேண்டும் ஆபாசமான ஆடைகளை அறவே அணியக்கூடாது


குழந்தைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் ஒருபோதும் சண்டையிடக் கூடாது, ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளக்கூடாது. ஒருவரின் ஒருவர் குடும்பத்தைதிட்டிக்கொள்ளக்கூடாது. ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளக் கூடாது


இது குழந்தைகளை மிகவும் பாதிக்கு என்பதை பெற்றோர்களாகிய நாம் வசமாக மறந்து விடுகிறோம்.


 


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நண்பர்களை கண்காணிக்க வேண்டும். இது மிக மிக முக்கியம்.


பொதுவாக பிள்ளைகள் எப்போதும் நண்பர்களின் கலாச்சாரத்தில் தான் இருப்பார்கள்


நண்பர்கள் எப்படி இருப்பார்களோ அதேபோல் நமது குழந்தைகள் இருப்பார்கள்


அதேபோல் டிவியில் இன்டர்நெட்டில் எதைப் பார்க்கிறார்களோ அதேபோல் செயல்படுவார்கள் (Behave)


டிவியில் சக்தி மான் பார்த்து மாடியில் இருந்து குதித்து செத்த குழந்தைகள் பற்றி நம் அனைவருக்கும் தெரியும்


அதேபோல் குழந்தைகளை கார்ட்டூன் கேம்ஸ்-க்கு அடிமையாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்


முடிந்தவரை TV பார்க்காமல் கேம்ஸ் விளையாடாமல் பார்த்து கொள்ள வேண்டும் ( Games Cartoon Movies )


 


பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தோல்வியை கற்று கொடுக்க வேண்டும்


எப்போதும் நாம் ஜெய்த்து கொண்டே இருக்க முடியாது என்பதை கற்று கொடுக்க வேண்டும்


வெற்றி தோல்வி மாறி மாறி வரும் என்பதை கற்று கொடுக்க வேண்டும்


தோல்வி தான் வெற்றிக்கு வழி என்பதை புரிய வைக்க வேண்டும்


 


அதேபோல் எல்லா பிள்ளைகளும் நன்றாக படிக்கும் என்பதும் முட்டாள் தனம், ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு விதத்தில் திறமையாக இருப்பார்கள் என்பதை அறிந்து பிள்ளைகளை படி படி என்று டார்ச்சர் பண்ணக்கூடாது, கொடுமை படுத்தக் கூடாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: Empty Re: பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

Post by ahmad78 Mon 25 Aug 2014 - 15:35

குழந்தைகள் பத்து வயது ஆனவுடன் படுக்கையை பிரித்து விட வேண்டும்.


ஒருபோதும் நெருக்கமாக ஒன்றாக பெற்ற தாயிடன் கூட சேர்ந்து தூங்க அனுமதிக்கக் கூடாது.


தனி தனி பாய் அல்லது கட்டில், தனி தனி போர்வை கொடுத்து விட வேண்டும்.


வீட்டில் தங்கும் யாருடனும் சேர்ந்து தூங்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.


இதில் மிகுந்த எச்சரிக்கை தேவை, மிகுந்த கவனம் தேவை, வீடு சின்னாதாக இருந்தாலும் சரியே.


இதில் சிறிய பெரிய ஆண் பெண் அனைவரையும் வயது வித்தியாசமின்றி உறவு வித்தியாசமின்றி யாரையும் நம்ப வேண்டாம்.


படுக்கையை பிரித்து விடுங்கள், சந்தேகம் இருந்தால் தூங்கும் போது கதவை தாழிட்டு கொள்ளவும்.


ஏன் என்றால் வீட்டில் தங்கும் யாரவது ஒருவர் நமது குழந்தையை ஒன்றாக சேர்ந்து தூங்கும் போது கெடுத்து விடுவார்கள் அல்லது தீயதை சொல்லி கொடுத்து விடுவார்கள்.


பல குழந்தைகள் கெட்டுபோவதும் இதனால் தான் நினைவில் கொள்ளவும்.


 


தாயிடமிருந்தே தூங்கும் போது குழந்தையை பிரிக்க வேண்டுமென்றால் மற்றவர்களை அனுமதிக்காலாமா? தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை, ஐந்தில்வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழியை பொன் மொழியை நினைவில் கொண்டு நமது குழந்தைகளை சிறியவயது முதல்ஒழுக்கமானவர்களாக வார்த்து எடுப்போம், வளர்த்து எடுப்போம்.


 


தொட்டில் பருவத்தில் அல்லது வயது ஐந்தில் ஒரு விஷயத்திற்கு குழந்தைகள் அடிமையாகி விட்டால்


அது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பிரதி பளிக்கும், பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.


 


தங்கள் பிள்ளைகள் பருவ வயதை அடைந்தவுடன் (Teenage)


பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நண்பர்கள் போல் பழக வேண்டும்


குறிப்பாக பெற்றோர்கள், பெண் பிள்ளைகளுடன் ஆண் நண்பர்கள் (Boy-Friend) போல் பழக வேண்டும், பார்க் பீச் போன்ற வெளியிடங்களுக்கு கூட்டி செல்ல வேண்டும்.


 


இன்று அவசரமான கால கட்டத்தில், சாப்பிடுவதில் கூட அவசரம், அரக்க பறக்க சாப்பிடுகிறோம்.


மென்று தின்றால் நூறு வயது வாழலாம் என்ற பழமொழியை மறந்து விட்டு வாழ்கிறோம்


குழந்தைகளுக்கு சிறிய வயது முதல் தரையில் உட்கார்ந்து, கை, கால், முகம், வாய் கழுவி சாப்பிட பழக வேண்டும்.


இறைவனை நினைவு கூர்ந்து இறைவன் பெயரை சொல்லி உண்ண ஆரம்பிக்க வேண்டும்


சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது, தொண்டையில் ஏதாவது மாட்டினாலே தவிர 


வாயை மூடி, நன்றாக மென்று, நிதானமாக உண்ண வேண்டும் தின்ன வேண்டும்


உணவை அவசரமாக அப்படியே முழுங்கக் கூடாது வேகமாக சாப்பிடக்கூடாது


ஏப்பம் வந்தபிறகு சாப்பிடக்கூடாது


சாப்பிட்ட பிறகு கையை கழுவி வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும்


இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் 


 


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ப்ராஇலர் சிக்கன் கோழியை அதிகமாக வாங்கி கொடுக்கக்கூடாது ( Broiler Chicken ) இதனால் பிள்ளைகள் சிறிய வயதிலேயே பெரிய பிள்ளைகளாக ஆகிவிடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும், அதேபோல் ஜங்க் மற்றும் பாஸ்ட் புட் போன்ற உணவுகளைஅதிகமாக வாங்கி கொடுக்கக்கூடாது ( Junk Food & FAST FOOD )


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: Empty Re: பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

Post by ahmad78 Mon 25 Aug 2014 - 15:36

வீட்டை விட்டு போகும் போதும், வீட்டிற்க்கு உள்ளே வரும் போதும், பிள்ளைகளை எங்கெல்லாம் சந்திக்கும் போதும் முக மலர்ச்சியுடன் சந்தோசமாக சந்தியுங்கள், குழந்தைகளிடம் வாழ்த்து சொல்ல வேண்டும், அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேளுங்கள், வீட்டில் அவர்களுடன் நேரத்தை செலவழியுங்கள், டிவி இன்டர்நெட் மொபைல் போன்றவற்றில் உட்கார்ந்து உங்கள் பிள்ளைகளின் நேரத்தை தொலைத்து விடாதிர்கள், அடிக்கடி பிள்ளைகளின் தலையை தடவி கொடுக்க வேண்டும், தோலை தட்டிக்கொடுங்கள், வீட்டிற்க்கு வரும்போது அன்பளிப்பு மற்றும் தீன் பண்டம் வாங்கி கொடுக்க வேண்டும். வெளியே போன தந்தை எப்போது வீட்டிற்க்கு வருவார்கள் என்று பிள்ளைகள் எதிர்பார்க்க வேண்டும்.


 


தந்தை வீட்டை விட்டு வெளியே போனால் பல குழந்தைகள் நிம்மதி பெருமூச்சி விட்டார்கள் என்றால் நமது செயல்பாடுகள் எப்படி உள்ளது என்று பார்த்து கொள்ளுங்கள்? நமது செயல்பாடுகளால் எப்படி பிள்ளைகளின் உள்ளம் பாதித்து உள்ளது என்பதை பார்த்து கொள்ளுங்கள்? பெற்றோர் எப்போதும் பிள்ளைகளுக்கு மிக சிறந்த நண்பனைப் போல் நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர் தான் பிள்ளைகளுக்கு எல்லாம் என்பதை மறந்து விட வேண்டாம்,


 


அதேபோல் பிள்ளைகளை பருவ வயதை அடைந்த பிறகு உடனே திருமணத்தை செய்து வையுங்கள், வயதை ரொம்ப நீட்டி விடாதிர்கள், குறிப்பாக பெண் பிள்ளைகளின் திருமணத்தை தாமதம் படுத்தாதிர்கள், வரதட்சனை கொடுக்காதிர்கள், ஆண் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தவுடன் திருமணத்தை முடித்து விடுங்கள், வரதட்சனை வாங்காதிர்கள்.


 


குழந்தைகளிடம் அனைத்தையும் பற்றி அழகிய முறையில் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் யாராக இருந்தாலும் எச்சரிக்கையுடன் தொடாமல் தள்ளி நின்று பழக வேண்டும் என்று அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும்.


 


ஒரு பெண்ணின் மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள் அவளின் 


தந்தை, கணவன், சகோதரன், மற்றும் மகன் என்பதை மனதில் பதிய வைத்து கொள்ள வேண்டும்.


இவர்கள் அல்லாத மற்றவர்களை அவள் எப்போதும் முழுமையாக நம்பிவிடக்கூடாது, எப்போதும் ஜாக்கிரதையாக அலெர்ட்டாக இருக்க வேண்டும்,எந்த சூழ்நிலையிலும் தனிமையில் பிறரை சந்திக்கக்கூடாது. வீட்டில் தனியாக இருக்கும் போது வேறு யாரையும் உள்ளே வர அனுமதிக்கக்கூடாது.


 


குழந்தைகளின் திறமையை வளர்ப்பதற்கு நாம் பல்வேறு சிறப்பு வகுப்புகளில் சேர்க்கிறோம், குழந்தைகளை எங்கு சேர்த்தாலும் அங்கு குழந்தைகளின் பாதுகாப்பு தான் முதலில் முக்கியம் என்பதை மறந்து விட வேண்டாம். பிறகு தான் எதுவும்.


 


குழந்தைகளை சிறையில் நடத்துவது போன்று நடத்துவதா என்று கேள்வி நம்மில் பலர்க்கு வரும், குழந்தைகளுக்கு அனைத்து சுதந்திரமும் கொடுங்கள், குழந்தைகளுடன் ஒன்றாக சேர்ந்து விளையாடுங்கள். பார்க் பீச் கிரௌண்ட் போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லுங்கள். ஆனால் உங்கள் நேரடி கண்காணிப்பில் இருக்குமாரு பார்த்து கொள்ளுங்கள், யாரையும் எளிதில் நம்ப வேண்டாம், அவ்வளவு தான். நாம் அப்படிப்பட்ட கொடுமையான கேடுகெட்ட கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குறிப்பாக செக்ஸ் விஷயத்தில் யார் நல்லவன் கெட்டவன் என்று நம்மால் கண்டு பிடிக்க முடியாத கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குழந்தைகளின் பாதுகாப்பு தான் முதலில் முக்கியம் என்பதை மறந்து விட வேண்டாம். பிறகு தான் எதுவும்.


 


அதேபோல் இந்த அறிவுரைகள் ஆண் குழந்தைகளுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும் 


 


அதேபோல் இன்று பெண்களையும் முழுமையாக நம்பி விட முடியாது என்பதை நினைவில் கொள்ளவும் லெஸ்பியன் போதைக்கு செக்ஸ் சினிமாவுக்கு அடிமையான பல பெண்கள் நம் சமுகத்தில் உள்ளனர்  என்பதை நினைவில் கொள்ளவும், அவர்களும் நம் குழந்தைகளை நாசப்படுத்திவிடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். 


 


நாம் தான் அலெர்ட்டாக எச்சரிக்கையாக ஜாக்கிரதையாக விழிப்புணர்வு ஆக எப்போதும் இருக்க வேண்டும் 


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: Empty Re: பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

Post by ahmad78 Mon 25 Aug 2014 - 15:37

காம வக்கிரம் கொண்டவர்களை மற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது தவறு செய்பவர்களை எப்படி திருத்துவது? என்ன தீர்வுகள் என்னவென்று பார்ப்போம் :


 


பிறக்கும் போதே யாரும் குற்றவாளியாக பிறப்பதில்லை, ஒருவன் வளரக்கூடிய விதம் மற்றும் சுற்று புற சூழல் தான் அவன் தவறு செய்வதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன, அதனால் சுற்று புற சூழலை சரி செய்யாமல் காமக் கொடுரம் கொண்ட மற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது தவறு செய்யும் மனிதர்களை திருத்துவது மிகவும் கடினம், திருத்த முடியாது. இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தான் மிக முக்கியம். 


 


ஆபாசத்தை தூண்டக்கூடிய சினிமா, ஆபாச உடை, செக்ஸ் பத்திரிக்கை, செக்ஸ் போட்டோ, செக்ஸ் புத்தகம், செக்ஸ் சி டி, செக்ஸ் வலைத்தளம் (வெப்சைட்) செக்ஸ் யூடுப் வீடியோ போன்ற அனைத்தையும் அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.


 


போதை மற்றும் மதுவை அரசாங்கம் முழுவதுமாக தடை செய்ய வேண்டும்.


 


அதையும் மீறி தவறு செய்பவர்களுக்கு அரசாங்கம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும், அந்த தண்டனையை தாமதம் படுத்தாமல், உடனே நிறைவேற்ற வேண்டும்.


 


அதுவும் பொதுமக்கள் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும், எப்படி என்றால் சாகும் வரை பொதுமக்களே கல்லெறிந்து சாகடிக்க வேண்டும், இதை பார்ப்பவன் மனதில் அணுவளவும் தவறு செய்ய மனம் வரக் கூடாது. நாம் தவறு செய்தால் நாளைக்கு நமக்கும் இந்த நிலைமை தான் என்று ஒவ்வொருவரும் பதற வேண்டும்.


 


பார்க், பீச், பஸ், ட்ரைன், பஸ் ஸ்டாப், பைக் போன்ற வாகனம் மற்றும் பொது இடங்களில் கணவன் மனைவியாக இருந்தாலும் கூட ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். இதை மீர்பவர்களுக்கு பொது இடத்தில வைத்து  அரசாங்கம் தண்டனை வழங்க வேண்டும்.


 


பேருந்துகளில் மற்றும் கூட்டமாக உள்ள இடங்களில் மற்றும் தெருக்களில் ஆண் பெண் உராசாமல் இருப்பதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும், மீறி உரசுபவர்களுக்கு கடுமையான தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் வழங்க வேண்டும்.


 


இன்று பேருந்துகளில் தான் பெண்கள் அதிகமாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை அரசாங்கம் நினைவில் கொண்டு ஆண்களும் பெண்களும் பாதி பாதியாக பிரித்து அமர மற்றும் நிற்க வைக்க வேண்டும். பெண்கள் பின்னால் உள்ள சீட்டில் எந்த ஆணும் உட்கார அனுமதிக்கக்கூடாது. பஸ்ஸில் முதல் பாதி ஆண்களுக்கும் பின்பாதி பெண்களுக்கும் இருக்கைகள் ஒதுக்க வேண்டும்.


 


ஆண்களும் பெண்களும் நெருங்கி பழகும் இருபாலர் (CO-EDUCATION) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை அரசாங்கம் முழுவதுமாக தடை செய்ய வேண்டும், அதற்கு பதிலாக ஆண்கள் பெண்கள் தனி தனியாக படிக்கும் பள்ளிக்கூடங்களை கல்லூரிகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் அரசாங்கம் அனுமதி தர வேண்டும்


 


பெண்கள் வெளியே வரும் போது ஒழுங்கான ஆடைகளை அணிந்து கொண்டு வர வேண்டும்


ஒழுக்கமான ஆடைக்கு அளவுகோல் என்னவென்றால் பெண்களின் உடல் அவயங்கள் (BODY PARTS) மற்றும் அவயங்களின் அளவுகள் (SIZE)வெளியே தெரியக்கூடாது, அவ்வளவுதான்.


அந்த ஆடை இறுக்கமாக மெல்லியதாக ஆண்களின் உடையைப் போல் இருக்கக்கூடாது


புடவை அணிந்து இருந்தால் புடவை விலாகாமல், இடுப்பு மற்றும் முதுகு தெரியாமல் இருக்க வேண்டும்.


 


பெண்கள் அல்லது பெண் குழந்தைகள், அந்நிய அடுத்த ஆண்களோடு எங்கும் எப்போதும் தனிமையில் இருக்க கூடாது, அதற்கான சந்தர்ப்பத்தை சூழ்நிலையை உருவாக்கக்கூடாது


வீட்டில் தனியாக இருக்கும் போது, அந்நிய அடுத்த ஆண்களை உள்ளே வர அனுமதிக்கக்கூடாது.


தனிமையில் அந்நிய அடுத்த ஆண்களோடு படிக்கக்கூடாது, வேலை செய்யக்கூடாது, பிராயணம் செய்யக்கூடாது, வெளியே செல்லக்கூடாது.


 


இங்கு அரசாங்கத்தை பொறுத்தவரை அது


நமது காங்கிரஸ் ஜனநாயக மதச்சார்பற்ற அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது


நமது ஹிந்துத்வா பிஜேபி அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது


தமிழ்நாடு திராவிட அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது 


அமெரிக்க ஐரோப்பிய முதலாளித்துவ அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது


சின ரஷ்யா கம்யூனிஸ்ட் அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது


மன்னர்கள் ஆட்சி செய்யும் அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது


கடவுள் இல்லை என்று சொல்பவர்களின் விஞ்ஞான அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது


பெயரளவில் முஸ்லிம்கள் ஆட்சி செய்யும் அரசாங்கமாக இருக்கட்டும்


 


இந்த மேலே குறிப்பிட்ட எந்த அரசாங்கத்தினாலும் மக்களுக்கு நன்மையை செய்ய முடியாது, அவர்களுக்கு பணம் தான் முக்கியமே தவிர மக்களின் நலன் முக்கியம் கிடையாது, இந்த அரசாங்கங்கள் ஆட்சி செய்யும் எந்த நாட்டிலும் சிகரெட், மதுவை, விபச்சாரத்தை, ஆபாசத்தை இவர்களால் தடை செய்ய முடியவில்லை, பிறகு எந்த ஆட்சி முறையால் தடை செய்ய முடியும் என்றால் அதுதான் இஸ்லாமிய அரசாங்கம் என்ற இறைவனுடைய ஆட்சி முறை.


 


கடைசியாக


 


பெற்றோர்களை ஏமாற்றும் பிள்ளைகளுக்கும் மற்றும் யாரும் பார்க்காமல் தவறு செய்யும் மனிதர்களுக்கும் :


 


எல்லா நேரமும் அரசாங்கம் நம்மை கண் காணிக்க முடியாது, நம்மை எந்த இறைவன் படைத்தானோ அந்த இறைவன் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறான், நாம் இறந்த பிறகு அந்த படைத்த இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும், (7X24)


அவன் நம்மை மறுமையில் நிற்க வைத்து கேள்வி கேட்ப்பான், நமது வாயை பேச வாய்த்த இறைவன் நாளை மறுமையில் நம் கை கால் உடல் உறுப்புகளை பேச வைப்பான், நாமே நமக்கு சாட்சி சொல்ல போதும். நாம் நல்லவனாக இருந்தால் சொர்க்கம், நாம் கெட்டவனாக இருந்தால் நரகம்.


 


நாம் வாழும் இந்த உலகில் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் நம்மை படைத்த இறைவனை ஏமாற்ற முடியாது என்பதை நாம் உணர்ந்து நம் குழந்தைகளுக்கும் இறைவன் நம்மை எப்போதும் கண்காணித்து கொண்டு இருக்கிறான் என்பதை சொல்லி கொடுக்க வேண்டும்.


 


இறைவனை நாம் பார்க்க முடியாது, ஆனால் இறைவன் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை நம் குழந்தைகளுக்கு சிறிய வயதில் இருந்தே சொல்லி கொடுக்க வேண்டும், மனதில் பதிய வைக்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: Empty Re: பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

Post by SAFNEE AHAMED Tue 26 Aug 2014 - 15:53

இவ்வாறான பதிவுகளை சேனையில் தான் பார்க்க முடிகின்றது
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: Empty Re: பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 18:56

SAFNEE AHAMED wrote:இவ்வாறான பதிவுகளை சேனையில் தான் பார்க்க முடிகின்றது
அதுதான் சேனைத்தமிழ் உலா தம்பி சப்னி... *_ i*
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: Empty Re: பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

Post by Nisha Tue 26 Aug 2014 - 19:10

ahmad78 wrote:பெற்றோர்களே !!! உங்கள் பெண் பிள்ளைகள் விசயத்தில் தற்போது அதிக கவனமும் கவலையும் எச்சரிக்கையும் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுட்

நீங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டியவை என்னவென்று பார்ப்போம்.

பொதுவாக

குழந்தைகளை தனிமையில் இருக்க அனுமதிக்கக்கூடாது


குழந்தைகளை யார் வீட்டிலும் இருக்க அனுமதிக்கக்கூடாது

குழந்தைகளை யார் வீட்டிற்கும் போக அனுமதிக்கக்கூடாது


குழந்தைகளை யாறும் தொட்டு பேச அனுமதிக்கக்கூடாது

மொபைல் மற்றும் ஸ்மார்ட் போன்களை பிள்ளைகளுக்கு வாங்கி தரக்கூடாது.

குழந்தைகளை தனிமையில் இன்டர்நெட் வொர்க் பண்ண அனுமதிக்கக்கூடாது

குழந்தைகளை தனிமையில் ஃபோன் பேச அனுமதிக்கக்கூடாது

குழந்தைகளை தனிமையில் கணினி வொர்க் பண்ண அனுமதிக்கக்கூடாது

குழந்தைகளை தனிமையில் டிவி பார்க்க அனுமதிக்கக்கூடாது

குழந்தைகளை தனிமையில் வீட்டை விட்டு வெளியே போக அனுமதிக்கக்கூடாது

குழந்தைகளை வீட்டில் தனியாக அறையில் கதவை பூட்டி படிக்க அனுமதிக்கக்கூடாது

குழந்தைகளை எப்போதும் தனியாக அறையில் கதவை பூட்ட அனுமதிக்கக்கூடாது

டிவி சினிமா இன்டர்நெட் தேவை இல்லாதவற்றை தனியாக பார்க்க அனுமதிக்கக்கூடாது,

நாம் எப்போதும் பிள்ளைகளின் கூட இருக்க வேண்டும்,

பிள்ளைகளை ஆண் பெண் இருபாலார் படிக்கும் CO-EDUCATION பள்ளி கூடங்களில் கல்லூரியில் டியுஷனில் சேர்க்க வேண்டாம்
(School, College, Tuition) [size=15]



மொத்தத்தில்  கற்கால வாழ்க்கை முறையில் வளர்க்கணும் என சொல்கின்றீர்கள்”.  அட போங்கப்பா! இப்படி கூடாது கூடாது என பட்டியல் போட்டு அடைத்தீர்கள் எனில் தன்னம்பிக்கை இல்லாது பயந்து ஓடி ஒளியும் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க  திராணியற்ற நிலையில்  உங்கள் வீட்டு பெண் குழந்தை இருக்கும்.

அது பரவாயில்ல்லை.  மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டையே கொழுத்தும் ஆலோசனை இது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: Empty Re: பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

Post by Nisha Tue 26 Aug 2014 - 19:26

மாற்று வழியை தேடுங்கள்[/size]

பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் GOOD TOUCH & BAD TOUCH பற்றி சொல்லி கொடுக்க வேண்டும், முடிந்த அளவு யாரையும் தொட அனுமதிக்கக்கூடாது மற்றும் முத்தம் கொடுக்க அனுமதிக்கக்கூடாது என்று சொல்லி கொடுக்க வேண்டும், யாரையும் நம்ப வேண்டாம் என்றும் சொல்லி தர வேண்டும். யார் அருகிலும் நெருக்கமாக நிற்கக் கூட வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்.

குழந்தைகள் பள்ளிக்கூடம் முடித்து வரும் போதும், விளையாடிவிட்டு வரும் போதும், வெளியில் இருந்து வரும் போதும் அவர்களின் முகத்தை எப்போதும் கவனித்து கொண்டு இருக்க வேண்டும், முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனே விசாரிக்க வேண்டும்.

சிறிய வயதிலிருந்து பெண் பிள்ளைகளின் ஆடையில் அதிக கவனம் செலுத்த வேண்டும், மேற்கத்திய மாடர்ன் ஆடைகளை ஆபாச ஆடைகளை வாங்கி தரக்கூடாது

மெல்லிய மற்றும் இறுக்கமான ஆடைகளை வாங்கி தரக்கூடாது
டாப்ஸ் லேக்கின்ஸ் போன்ற அசிங்கமான உடல் அவயங்கள் வெளியே தெரியக்கூடிய ஆபாச ஆடைகளை வாங்கி தரக்கூடாது

பெண் குழந்தைகளுக்கான உடலமைப்பு சிறுவயதிலிருந்தே ஆண்களின் உடலமைப்போடு வித்தியாசப்பட்டது. ஆண்களை ஈர்க்கக் கூடியது என்பதை பொதுவாக பல பெற்றோர்கள் உணர்வதேயில்லை. எனவே பெண் குழந்தைகளை மற்ற ஆண்களுககு கவர்ச்சி பொருட்களாக ஆக்காமல் அவர்கள் மீது தீயவன் பார்வை படாமல் இச்சை ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை.

சிறிய வயதிலிருந்து பெண்பிள்ளைகளை எப்போதும் ஷால் போட்டு பழகிக் கொள்ள வேண்டும், பெண் குழந்தைகளுக்கு எந்த வயதிலும் உடலில் மாற்றம் வரும் என்பதை நினைவில் இருக்க வேண்டும், எப்போதும் ஒரேமாதிரியாக இருந்தால் யாருக்கும் சந்தேகம் வராது.


சரியாக வழி காட்டல் பின்பற்றிட வேண்டும். *_  *_  *_


ஆண்களின் உடையை போல் உள்ள பேன்ட்ஸ் ஜீன்ஸ் டி-ஷர்ட் போன்ற ஆடைகளை வாங்கி தரக்கூடாது

தவறான ஆலோசனை. மிகவும் பாதுகாப்பான உடல்களை மூடி மறைக்கும் ஆடையில் ஜீன்ஸ் ரீசட்ஸ்  அணிவதில் தப்பே இல்லை.  சேலையை விட இது  எம் அங்கங்களுக்கு பாதுகாபபுத்தான்.


பெற்றோரின் மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு இல்லாமல் பெண்பிள்ளைகளை எங்கும் அனுப்ப வேண்டாம். கடைக்கு போகுவது, விளையாட விடுவது, போன்ற எதுவாக இருந்தாலும் சரியே[/size

பிள்ளைகள் கெட்டு போவதற்கு பெற்றோர் இருவரும் வேளைக்கு செல்வதும் ஒரு காரணம், ஏன் என்றால் வீட்டில் தனிமை, வீட்டில் வேலைக்கு போகும் பெற்றோரின் பெற்றோர்கள் இருந்தாலே தவிர பெற்றோர் இருவரும் ஏழைக்கு போகலாம், பெற்றோரின் பெற்றோர்கள் இல்லாத வீட்டில் தந்தை மட்டும் தான் வேளைக்கு செல்ல வேண்டும். பணம் முக்கியமில்லை, பிள்ளைகளின் வாழ்க்கை தான் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளவும்.

பிள்ளைகள் கையில் ஒருபோதும் பணத்தை கொடுகாதிர்கள், உங்கள் ATM கார்டை கொடுக்காதிர்கள், பணமும் கெட்டுபோவதற்க்கு மிக முக்கிய காரணம்.


என்னை பொறுத்த வரை  பிள்ளைகளை சிறுவயதிலேயே தம்மை தாமே பாதுகாத்து  தனித்து இயங்கும் படி வளர்க்கணுமே தவிர எப்போதும் பெற்றோரின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது.

பண விடயமும் அப்படித்தான்.  இன்றிருப்பார் நாளை இருப்போமா என தெரியாத இன்றைய நிலையில்  வாழ்வியல் சூழல் பண நிர்வாகம்  வரவு செலவுகள் குறித்து 10 வயதிலேயே அவர்கள் அறிய நடப்பதும் பணம் கொடுத்து அவர்களுக்கு தேவையானதை தாமே தெரிந்து வாங்கும் படி வளர்ப்பதும் பணத்தின் மதிப்பும் அவர்கள் பிற்கால வாழ்க்கை நம இல்லாது போனாலும் தழும்பாமல் தொடரவும் உதவி செய்யும் என்பேன்.

தெரிந்தவர்கள் வீட்டில் பெண் பிள்ளைகளை விடடுச் செல்லாதீர்கள்

ஏன் என்றால் அதிகமான பெண் பிள்ளைகள் கற்பழிக்கப்படுவது தெரிந்தவர்களாலே என்று சர்வே கூறுகிறது உதாரணத்திற்கு அண்டைவீட்டாரிடம்,நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என்று தெரிந்தவர்கள் வீடு என்று விடுவது மிக மிக ஆபத்து

முதலில் நமக்கு நம்பிக்கை இல்லை எனில் எதற்கு அவர்களை நட்பென பழகணும்.  பழகவே  தேவையில்லையே.!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: Empty Re: பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum