சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம் Khan11
சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம் Www10

சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம்

Go down

Sticky சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 16 Oct 2014 - 14:38

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே....
அஸ்ஸலாமு அலைக்கும்
இறைவனும் அவனுடைய தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித்தந்த திருமணம் இன்று ஒரு வியாபாரமாக உருவெடுத்து எம் சமுகத்திற்கு மத்தியில் பெரும் சவாலாக மாறியிருப்பதைக் காணும் போது மனம் பெரும் வேதனை அடைகிறது.அதுபற்றி உங்களை நோக்கி சிறு அன்புக்கட்டளையை முன்வைக்க நான் எடுத்துக்கொண்ட இம் முயற்சி உங்களையும் உங்களின் மனதளவிலும் சிறு மாற்றங்களை ஏற்படுத்துமென நம்புகிறேன் 

இஸ்லாம் நடைமுறைப்படுத்திக் காட்டிய வாழ்க்கை நெறியை முற்றாக மறந்தும் மறைத்தும் மூதாயர்கள் பின்பற்றிய வழியில் சீதனம் கொடுத்தால் திருமணம் செய்கிறேன் என்ற மனப்போக்கும் அசிங்கமான வளக்கமும் பின்பற்றப்பட்டு வருகிறது.  மாஷா அல்லாஹ் இன்றய எம் சில இளைஞர்கள் இந்த முறையை மாற்றி இஸ்லாம் கற்றுத்தரும் அழகிய திருமணங்களை தங்களாலான வசதிக்கு ஏற்ப நிறைவு செய்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து  நிகழ்கால எதிர்கால எம் சமுகத்தை வளப்படுத்தினோமானால் நாளை எமக்காக காத்திருக்கும் உயரிய சுவனத்தினை அனைவரும் அடைந்திடலாம் 

இதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்னும் கேள்வி எமக்குள் எழுகிறது எமது வாழ்வை எமது மார்க்கம் கற்றுத்தந்த முறையில் அமைத்துக்கொண்டாலே போதமானது எம் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே அதற்கான பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும் மனதளவிலும் செயலளவிலும் அதிகமதிகமாக இஸ்லாத்தின் பால் வழிநாட்த்துங்கள்  என் பெண் குழந்தைக்கு சீதனம் கொடுப்பதில்லை எனவும் ஆண் குழந்தைக்கு சீதனம் வாங்குவதில்லை எனவும்  உங்களுக்குள் நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள். அத்தோடு சோம்பேறிகளாக இருந்துவிடாமல் பெண்களை மார்க்க கல்வியின் பால் ஆசையை ஏற்படுத்தி அதன் வழிகாட்டலை பின்பற்றச்செய்யுங்கள் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் அவனாக உழைத்து அவனுக்கான தேவைகளை நிறைவு செய்ய வழியமைத்துக்கொடுங்கள் இவை இரண்டும் சரிவர நிறைவு செய்யப்டுமானால் எம் சமுகத்தின் சமநிலை உறுதிப்படுத்தப்படும்.  

இன்றைய இளைஞர்கள் செயல்பட வேண்டிய தேவை மறந்து மனஇச்சைக்கு அடிபணிந்து வாழ்கிறீர்கள் நாளைய சமுதாயம் உங்களின் கைகளில் அமானிதங்களாக தரப்பட்டிருக்கிறது நேற்றய இளைஞர்களான எம் பெற்றோரின் குற்றம் எம் தலைகளில் சுமத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்  இறைவனுக்காக உங்களை நீங்கள் தயார் செய்யுங்கள் சீதனச் சந்தையில் தலைகுனிந்து நிற்காதீர்கள் உங்களின் பெற்றோர் உங்களை விலைபேசினால் அதற்கு தலைசாய்த்திடாதீர்கள் ஹறாமான செல்வத்தில் உருவாகின்ற உங்களது வாழ்க்கை நாளை நரகத்திற்கு அழைத்துச்செல்லும். தைரியமாக இதற்கெதிராக பேசக்கூடிய அளவு நீங்கள் உங்களைத் தயார் செய்யுங்கள் தயவு செய்து இது பற்றி சிந்தியுங்கள். 

எம் சமுகத் தலைவர்களே நீங்களும்  இதற்கு கடமைப்பட்டிருக்கிறீர்கள். சீதனம் கொடுக்கல் வாங்கல்களுக்கு தயவு செய்து துணை போகாதீர்கள்.
சீதனத்தில் நடாத்துகின்ற திருமணங்களை முன்னின்று நடத்தாதீர்கள். 
 ஊரின் முக்கிய பொறுப்புகள் மற்றும் பள்ளி நிருவாக சபைகள் போன்றவற்றில் இருக்கின்ற நீங்கள் இந்த சீதனத்துக்கெதிரான கோசங்களை ஆரம்பியுங்கள். நீங்கள் வாங்கியிருந்தால் திரும்பக்கொடுத்துவிடுங்கள். அதை விட்டும்  ஒதுங்கிவிடுங்கள்   மிக முக்கியமாக எம் சமுகத்தில் இருக்கின்ற ஆலிம்கள் உங்களை சரிசெய்யுங்கள் அனைவரும் உங்களை காரணம் காட்டி தப்பிக்க முனைகிறார்கள் நீங்கள் வழிகாட்டிகள் அதிகமதிகம் இதுபற்றி எமது ஜும்மாக்களில் பிரசங்கம் செய்யுங்கள் உங்களது சகாக்களை சீதனத்திலிருந்தும் வீடுவித்து நீங்களும் அதிலிருந்து நீங்கி சமுகத்திற்கு உதாரண கர்த்தாவாக இருங்கள்.  எம் ஊரைப்போன்ற சிற்றூர்களில் இவற்றை உங்களால் நடைமுறைப்படுத்தத்  தடுக்கின்ற காரணிகள் எதுவென்று  ஆராய்ந்து துடைத்தெறிங்கள் 

அனைத்து தரப்பினையும் தாண்டி எம் சமுகத்தின் பெண்களே உங்களிடமே இதனை ஒப்படைக்கிறேன். சீதனம் வாங்காது உங்களை மகர்கொடுத்து திருமணம் செய்கின்ற ஆண் வரும் வரை காத்திருங்கள். இறைவனுக்கா உங்களை அர்ப்பணியுங்கள். உங்களது மனங்களைக் கட்டுப்படுத்துங்கள் காதல் கழியாட்டங்களுக்குள் சிக்குண்டு உங்களது வாழ்வை சீரழித்திடாதீர்கள் இறைவன் அனைவரையும் சோடிகளாக படைத்திருப்பதாக வாக்குறிதி அழிக்கிறான்.  கவலை மறந்து கட்டுக்கோப்பான வாழ்வுடன் காத்திருங்கள். உங்களுக்கான உங்கள் துணை கண்ணியத்துடன் தேடிவருவார். அவருக்காக வாழ்ந்து இருவருமாக உயரிய சுவனம் அடைந்திடுங்கள் சீதனம் கொடுத்து ஆண்களை தீங்கு செய்ய நீங்கள் துணைபோகாதீர்கள் நாளைய இறைவனின் பிடி மிகப்பயங்கரமானது பயந்து கொள்ளுங்கள். எம் சமுகத்து அனைத்து தரப்பினரும் இதுபற்றி சிந்தித்து  எடுத்து நடப்போமானால்  நாளைய எம் சமுதாயத்தை நாம் எதிர்பார்க்கின்ற அடைவினை நோக்கி நகர்த்திட நிச்சயமாக முடியும்.  இறுதியாக எம் பெற்றோர்களிடம் வினயமாக நான் வைக்கும் வேண்டுகோள் என்னவெனில் உங்கள் குழந்தைகளுக்கான சொத்துப்பங்கீட்டில் குறை வைக்காதீர்கள் நீதமாக  நடந்து கொள்ளுங்கள் அனேகமாக பெண்களுக்கே ஆண்களின் சொத்துக்களையும் பகுந்து அளிக்கிறீர்கள் இதுவே இந்த சீதனக்கொடுமைக்கு இட்டுச்செல்கிறது இதில் எமது இஸ்லாம் கற்றுத்தரும் பங்கீட்டு விகிதத்தினை பின்பற்றுங்கள் ஆண்களுக்கான இரு பகுதியை கொடுத்தீர்களானால் அதில் அவனால் அவனுக்கு தேவையான வாழ்வை அவன் தயார்செய்து கொள்வான். அவ்வாறு நடந்தேறாத காரணத்தினால் சொத்துக்காக வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் எம் வாலிபர்கள் அவர்களது வாழ்வையே தொலைத்து அதிலிருந்து மீண்டிட முடியாத அளவு இன்னல்களுக்குள்ளாகித் தவிக்கிறார்கள். உங்களது கடமையில் நீங்கள் தவறிழைத்திடாதீர்கள் இறைவன் எம் அனைவரையும் நேர்வழிப்படுத்திட போதுமானவன். நன்றி 
சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம் C39E81ED20FBA49F68509A83F1D9FC65

குறிப்பு : கடந்த ஹஜ் பெருநாளன்று தொழுகையின் பின்னர் பிரதி செய்து வெளியிடமுடிந்தது அதிகமானவர்களின் பார்வையில் சிறப்பான பின்னோட்டத்தினையும் பெற்றேன் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 


சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம்

Post by ahmad78 on Thu 16 Oct 2014 - 14:58

நல்ல கட்டுரை

இன்று சீதனம் கொடுக்கல் வாங்கல் மிகக்குறைந்து வருகிறது. முற்றிலும் தடுப்பது பெண்கள் நினைத்தால்மட்டுமே முடியும்.

சில இடங்களில் சீதனம் வாங்காமல் வசதியுள்ள இடங்களில் திருமணம் செய்கிறார்கள். ஏழைப்பெண்களை புறக்கணிக்கின்றா◌ாகள். இந்த நிலையும் மாறவேண்டும்.

அனைவரும் இறைவனுக்கு பயந்து நடக்கவேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 16 Oct 2014 - 15:22

இது எங்கள் தேசத்தில் அதிலும் எங்கள் பகுதியில் மிகவும் புயலாக தலைவிரித்தாடும் கொடிய நோய் அதனால்தான் இதை எழுத நினைத்தேன் மிக்க நன்றிகள் அஹமட்


சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம்

Post by Nisha on Thu 16 Oct 2014 - 17:20

ஊர் போக முன் இது குறித்து பகிர்ந்தீர்கள்! செயல் படுத்தி விட்டதில் மகிழ்ச்சி ஹாசிம்! இனி வரும் தலை முறையாவது இவ்விடயத்தில் திருந்தினால்  இம்முயற்சிக்கான் வெற்றியாய் அது இருக்கும்.

இன்றைய விதை நாளை விருட்சமாகும் என நம்பி முன் செல்லுங்கள்1 நல்ல சிந்தனைகளும்,செயல் பாடுகளும் உடனே ஏற்கப்படாமல் போனாலும் எதிர்வரும் காலத்தில் நிச்சயம் ஏற்கப்படும்.

அதை விட முன்னெப்போதும் இல்லாதவாறு இந்த சீதன வன் கொடுமைக்கு எதிராக் இன்றைய இளைஞர் சமுதாயம் சிந்திக்க ஆரம்பித்திருப்பதை காணும் போது  இம்மாதிரி முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும் நாள் தூரத்தில் இல்லை என  தோன்றுகின்றது!

நல்ல பணி வாழ்த்துகள்! தொடர்ந்து செயல் படுங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 17 Oct 2014 - 9:33

மிக்க நன்றி நிச்சயமாக இந்த முயற்சி வெற்றி தரும் என்று நம்புகிறேன்


சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum