சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Khan11

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by சுறா Sun 26 Oct 2014 - 22:30

First topic message reminder :

பாரதியார் எவ்வளவோ சொன்னாரு. பெரியார் என்னென்னவோ சொன்னாரு.

ஏனோ இந்த பெண்ணின் மரணம் என்னை ரொம்பவே துக்கமாக்கிடுச்சி - சுறா

ஈரானில் உளவுத்துறை அதிகாரி ஒருவரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 வயது இளம்பெண் தூக்கிலிடப்பட்டார்.

ஐந்து ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது மரண தண்டனையை நிறைவேற்ற உலகம் முழுவதிலுமிருந்து எதிர்ப்பு எழுந்திருந்த நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் ஈரான் அரசு அவரை தூக்கிலிட்டது.
ரேஹானே ஜபாரி என்ற அந்த பெண் நேற்று முன்தினம் அதிகாலையில் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் சட்ட அமலாக்க அலுவலகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தூக்கிலிருந்து ரேஹானேவை காப்பாற்றுவதற்காக இயங்கி வந்த பேஸ்புக் இணையதள பக்கத்தில் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்ற வாசகங்கள் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தூக்கிலிடப்பட்ட தகவல் உறுதியாகி உள்ளது. வீடுகளின் உள் அலங்கார நிபுணரான ரேஹானே கடந்த 2007 ம் மோர்தெஸா அப்து லாலி சர்பண்டி என்ற உளவுத்துறை அதிகாரியை கத்தியால் குத்தி கொன்றதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் ரேஹானோவை பாலியல் பலாத்காரம் செய்ய அப்துலாலி முயன்றதாகவும், தற்காப்புக்காகத்தான் அவரை ரேஹானே குத்தியதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறி வருகின்றன. இந்த சம்பவம் குறித்த விசாரணை முறையாக நடைபெறவில்லை என கூறிய மனித உரிமை அமைப்புகள், ரேஹானோவுக்கான மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. ஈரானின் திரைப்பட நடிகர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் ரேஹானோவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். குத்தி கொல்லப்பட்ட அப்துலாலியின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கியிருந்தால் ஈரான் நாட்டு இஸ்லாமிய சட்டப்படி ரேஹானோ தூக்கிலிருந்து தப்பியிருப்பார். எனினும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மர்ம நபர் ஒருவர் இருந்ததாகவும், அந்த நபரை பற்றிய உண்மைகளை மூடி மறைக்கும் வரை ரேஹானோவுக்கு மன்னிப்பு வழங்க முடியாது என்றும் கூறி அப்துலாலி குடும்பத்தினர் அதற்கும் மறுத்து விட்டனர். இந்த சூழலில் ரேஹானோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் ஈரானில் இதுவரை 250க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Last edited by சுறா on Sun 26 Oct 2014 - 22:41; edited 3 times in total
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Wed 29 Oct 2014 - 9:38

rammalar wrote:இந்த ஓராண்டில் இதுவரை 250 குற்றவாளிகளுக்கு
மரண தண்டனை வழங்கி இருக்கிறது ஈரான்.
-
அந்த நாட்டு சட்டப்படி கண்ணுக்கு கண்
என்பதாக தண்டனை வழங்கி உள்ளனர்.
-
ஐந்து ஆண்டுகள் வழக்கு நடைபெற்றுள்ளது...
-
நமக்கு ஒரு பக்க நியாயம் மட்டுமே தெரிவதால்
உணர்ச்சி வசப்படுகிறோம்..!
-

கண்ணுக்கு கல் எனும் சட்டமெனில் கற்பழிக்க வந்தவனைடமிருந்து தற்பாதுகாப்புக்கு முயலாமல் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அடங்கி போயிருந்தால் அந்த பெண்ணின் கற்புக்கு பதில் என்ன தண்டனை வழங்கப்பட்டிருக்குமாம். 

ஒரு பக்க நியாயமோ  இரு பக்க நியாயமோ... உலக நாடுகள், பிரபலங்கள் பலர் இணைந்து தண்டனை கொடுக்க கூடாது என வேண் டியும் கொடுத்தது தப்புத்தான்! 

உயிருக்கு உயிர் தான் தண்டனை எனில்  இழக்கப்பட்ட உடல் மன இழப்புக்களுக்கு என்ன தண்டனையை எவருக்கு எப்படி கொடுப்பார்கள்?  யோசிச்சால் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதியாய்  அநீதி தலை விரித்தாடுவது புரியும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Wed 29 Oct 2014 - 9:43

நண்பன் wrote:எனக்குத் தெரிந்த ஒரேயொரு விடயம் தண்டனைகள் அதிகமாகும் போது குற்றங்கள் குறையும் என்பதுதான்..
ஆனால் இடம் பொருள் ஏவல் நோக்க வேண்டும்

தண்டனைகள் அதிகமாகும் போது குற்றங்கள் குறையுமோ இல்லையோ  தண்டனையை பார்த்து வளரும்  எதிர்கால சந்ததி சகிப்புதன்மை இன்றி இரக்கமின்றி அடி வெட்டுகுத்து  தூக்கு என செல்லபோவது மட்டும் உறுதி!

தவறுகளுக்கு தண்டனை என்ன மிக கடுமையாக தண்டிப்பு அவசியம் என்பதில் மறு கருத்தில்லை. ஆனால்  தண்டனை என்பது ஒரு பக்க சார்பாய் பதவியையும் பணத்தையும் வைத்து தான் வழங்கப்படுகின்றது. பணமும் பதவியும் இருந்தால் தப்பு செய்தவனும் தப்பி விடுவார்.

கேட்டால் சம்பந்த பட்ட குடும்பம்  நஷ்ட ஈடை பெற்றுக்கொண்டு மன்னித்து விட்டது என்பர். . ஏழைகளை மிரட்டி பணத்தை வீசி   மன்னிப்பை வாங்குவது என்ன மிக கடினமான விடயமா என்ன?.... அதே நேரம் ஏழைகளிடம் இருக்கும் மன்னிக்கும் மனப்பாங்கு பணம் இருப்போரிடம் இல்லாமல் போனதும் கண்கூடு தானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by நண்பன் Wed 29 Oct 2014 - 9:46

Nisha wrote:
rammalar wrote:இந்த ஓராண்டில் இதுவரை 250 குற்றவாளிகளுக்கு
மரண தண்டனை வழங்கி இருக்கிறது ஈரான்.
-
அந்த நாட்டு சட்டப்படி கண்ணுக்கு கண்
என்பதாக தண்டனை வழங்கி உள்ளனர்.
-
ஐந்து ஆண்டுகள் வழக்கு நடைபெற்றுள்ளது...
-
நமக்கு ஒரு பக்க நியாயம் மட்டுமே தெரிவதால்
உணர்ச்சி வசப்படுகிறோம்..!
-

கண்ணுக்கு கல் எனும் சட்டமெனில் கற்பழிக்க வந்தவனிடமிருந்து தற்பாதுகாப்புக்கு முயலாமல் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அடங்கி போயிருந்தால் அந்த பெண்ணின் கற்புக்கு பதில் என்ன தண்டனை வழங்கப்பட்டிருக்குமாம். 

ஒரு பக்க நியாயமோ  இரு பக்க நியாயமோ... உலக நாடுகள், பிரபலங்கள் பலர் இணைந்து தண்டனை கொடுக்க கூடாது என வேண்டியும் கொடுத்தது தப்புத்தான்! 

உயிருக்கு உயிர் தான் தண்டனை எனில்  இழக்கப்பட்ட உடல் மன இழப்புக்களுக்கு என்ன தண்டனையை எவருக்கு எப்படி கொடுப்பார்கள்?  யோசிச்சால் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதியாய்  அநீதி தலை விரித்தாடுவது புரியும்!
அக்கா நீங்கள் சொல்லும் நியாயம் செத்து பல காலங்கள் போய் விட்டது

உலக நாடுகள் இந்திய பிரபலங்கள் அனைவரும் சொல்லியும் வேண்டாம் எனறு உண்ணா விரதம் இருந்தும் இலங்கையில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த சம்பவங்களும் நடந்துள்ளது
 நியாயம் செத்து விட்டது அக்கா !*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Wed 29 Oct 2014 - 9:50

அதே உலக நாடுகள் இணைந்து தான் அழித்தார்கள்.  உண்ணா விரதமும், தந்தியும் தபாலும் வெறும் நாடகம். அரசியல் வாதிகள் மெல்ல அவலாய்  போன விடயம் இலங்கை தமிழர் விடயம். 

எல்லாம் ச்ச்ச்சும்மா பம்மாலத்து ஆட்டம்.  இந்த பெண் விடயத்தில் அப்படி இல்லை தானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by நண்பன் Wed 29 Oct 2014 - 10:12

Nisha wrote:அதே உலக நாடுகள் இணைந்து தான் அழித்தார்கள்.  உண்ணா விரதமும், தந்தியும் தபாலும் வெறும் நாடகம். அரசியல் வாதிகள் மெல்ல அவலாய்  போன விடயம் இலங்கை தமிழர் விடயம். 

எல்லாம் ச்ச்ச்சும்மா பம்மாலத்து ஆட்டம்.  இந்த பெண் விடயத்தில் அப்படி இல்லை தானே!
அந்தப் பெண் விடயத்தில் கற்பழித்தவனுக்கும் தூக்குத் தண்டனைதான் அந்த நாட்டுச் சட்டப்படி
கொலைக்கு கொலை கண்ணுக்கு கண் பயங்கரமான சட்டம் ப்பா பயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Wed 29 Oct 2014 - 10:19

கற்பழித்திருந்தால்  சட்டம் அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்கும் எனில்  பெண்ணுக்கு என்ன தண்டனை கொடுத்திருப்பார்கள்? மன்னித்து விட்டிருப்பார்களா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by நண்பன் Wed 29 Oct 2014 - 10:34

Nisha wrote:கற்பழித்திருந்தால்  சட்டம் அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்கும் எனில்  பெண்ணுக்கு என்ன தண்டனை கொடுத்திருப்பார்கள்? மன்னித்து விட்டிருப்பார்களா?
பெண் தெரிய வில்லை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Wed 29 Oct 2014 - 10:52

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்காக தண்டனை என்ன என தெரியவில்லையா? இந்த பெண்னுக்கான  தண்டனை என்ன என தெரியவில்லையா?

பொதுவாக அரபி நாடுகளில் சட்டம் இம்மாதிரி சம்பவங்களுக்கு எப்படியான தண்டனை வழங்கப்படுகின்றது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by நண்பன் Wed 29 Oct 2014 - 10:55

Nisha wrote:கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்காக தண்டனை என்ன என தெரியவில்லையா? இந்த பெண்னுக்கான  தண்டனை என்ன என தெரியவில்லையா?

பொதுவாக அரபி நாடுகளில் சட்டம் இம்மாதிரி சம்பவங்களுக்கு எப்படியான தண்டனை வழங்கப்படுகின்றது?
கற்பழித்தவனை சுட்டுக்கொல்வார்கள் அல்லது தூக்குத்தண்டனை உடனே கொடுத்து விடுவார்கள்
கற்பழிக்கப்பட்ட பெண் அவனைக் கொன்றால் என்ன தண்டனை தெரியாது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Wed 29 Oct 2014 - 11:10

நான் கேட்பது கற்பழிக்கப்பட்ட  பெண்ணுக்கு என்ன தண்டனை என்பது தான். 

அவனை தண்டிப்பதுடன் பெண்ணை மன்னித்து விடுவார்களா? பெண்ணுக்கும் தண்டனை உண்டா என்பதுதான்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by நண்பன் Wed 29 Oct 2014 - 11:16

Nisha wrote:நான் கேட்பது கற்பழிக்கப்பட்ட  பெண்ணுக்கு என்ன தண்டனை என்பது தான். 

அவனை தண்டிப்பதுடன் பெண்ணை மன்னித்து விடுவார்களா? பெண்ணுக்கும் தண்டனை உண்டா என்பதுதான்?
பெண் கற்பழிக்கப்பட்டிருந்தால் அவளுக்கு எப்படி தண்டனை தருவது அவளுககு நஷ்ட ஈடுதான் தர வேண்டும் இது பற்றி எனக்கு சரியான அறிவு இல்லை அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Wed 29 Oct 2014 - 11:24

சரிப்பா! 

 நன்றி!

அப்படிப்பார்த்தால்  இந்த கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் எனும் சட்டத்தின் படி  கற்பழிக்கப்ட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாய் பணமோ பொருளோ கொடுத்து விட்டால் அவள் இழந்தது  சரியாக்கப்படுமா?

கண்ணுக்கு கண் எனும் சட்டம் இவ்விட்யத்தில்  மீறப்படலாம் எனில் சட்டம் என்றாலே ஓட்டை தான் என்றாகின்றதல்லவா?

உயிருக்கு உயிர் தான்  எனில் கற்புக்கும் கற்பு தானே தண்டனை யாகணும். ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by நண்பன் Wed 29 Oct 2014 - 11:42

Nisha wrote:சரிப்பா! 

 நன்றி!

அப்படிப்பார்த்தால்  இந்த கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் எனும் சட்டத்தின் படி  கற்பழிக்கப்ட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாய் பணமோ பொருளோ கொடுத்து விட்டால் அவள் இழந்தது  சரியாக்கப்படுமா?

கண்ணுக்கு கண் எனும் சட்டம் இவ்விட்யத்தில்  மீறப்படலாம் எனில் சட்டம் என்றாலே ஓட்டை தான் என்றாகின்றதல்லவா?

உயிருக்கு உயிர் தான்  எனில் கற்புக்கும் கற்பு தானே தண்டனை யாகணும். ஹாஹா!
நல்ல கேள்வி கவுண்ட மணி செந்தில் ரேஞ்சுக்கு போய்க்கொண்டிருக்கிறது மன்னிக்கனும் இது பற்றி என்னால் சொல்ல முடியாது அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Nisha Wed 29 Oct 2014 - 21:32

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 10255551_689743827790843_289044941705338884_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by சுறா Thu 30 Oct 2014 - 9:12

விடைகாண முடியாத இந்த திரியை பற்றி எனக்கும் கவலையாக தான் உள்ளது. என்ன சட்டமோ? தவறு செய்தால் தண்டனை அவசியம். ஆனால் அது ஆணுக்கு ஒன்றும் பெண்ணுக்கு ஒன்றாக இருப்பது தான் விந்தை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன்.  எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்! - Page 2 Empty Re: எனது 1100 வது பதிவாக சோகமாக இதை பதிகிறேன். எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum