சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


"நீதிக்கதை"   நடப்பதெல்லாம் நன்மைக்கே! Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
"நீதிக்கதை"   நடப்பதெல்லாம் நன்மைக்கே! Khan11
"நீதிக்கதை"   நடப்பதெல்லாம் நன்மைக்கே! Www10

"நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Go down

Sticky "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by Nisha on Tue 28 Oct 2014 - 15:23

"நீதிக்கதை"

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். 

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

நீதி : பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்


படித்ததும் பிடித்தது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by ahmad78 on Tue 28 Oct 2014 - 15:34

நல்ல கதை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by சுறா on Tue 28 Oct 2014 - 19:18

உண்மைதான் பயம் ஒருவனை முட்டாள் ஆக்கிவிடும். பெரியவர் செய்த காரியத்தால் அவன் அடுத்து என்ன செய்யவேன்டும் என்று கற்றுக்கொண்டான்.

அறிவுள்ள கதை. மிக்க நன்றி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by Nisha on Mon 5 Jan 2015 - 1:24

காடு வழியே பயணம் மேற்கொண்டிருந்த ஒருவனுக்கு நெடுந்தூரம் பயணித்த களைப்பில் ஓய்வு தேவைப்பட்டது. உடனே ஒரு பரந்த விரிந்த ஆலமரத்தின் கீழ் துண்டை விரித்துப்போட்டு படுத்தான்.அந்த மரத்துக்கு பக்கத்திலேயே ஒரு பூசணிச் செடி படர்ந்து விரிந்து பசுமையாக காட்சியளித்தது. மிகப்பெரிய பூசணிக்காய்  ஒன்றும் அதில் காய்த்து தரையைத்தொட்டபடி கிடந்தது.  

ஆலமரத்தின் கீழே படுத்தவனுக்கு தீடிரென ஒரு சிந்தனை! "இத்தனை பெரியஆலமரத்தின்  பழம்  சின்னதாய் இருக்கின்றதே..  சிறியதாய் தரையோடு படர்ந்த பூசணிச்செடியில் எத்தனை பெரிய பூசணிக்க்காய் காய்த்திருக்கின்றது.  

கடவுளுக்கு ஏன் இத்தனை ஓரவஞ்சனை என நினைத்தானாம். 

பெரிய மரம்னா சின்ன பழம். சின்ன செடின்னா பெரிய பழம்..." எத்தனை விந்தை என்று யோசித்த படியே தூங்கிப் போனான். 

சற்று நேரத்தில் வீசிய காற்றில் ஆல மரத்திலிருந்து உதிர்ந்த ஒரு சின்ன பழம்  கீழே படுத்திருந்தவன் மீது "சொத்'தென்று விழுந்தது. பதறி  எழுந்தவனுக்கு  திடீரென தன் அறியாமை பற்றி ஞானம் வந்தது.

" அடடா கடவுளை  திட்டி விட்டேனே!... இந்த சின்ன பழம் விழுந்ததுக்கேமுகம் வலித்ததே இவ்ளோ பெரிய  பூசணிக்காய்  விழுந்திருந்தால்  என்ன ஆகி இருப்பேன்! .கடவுளே மன்னி த்து விடு என்றபடியே கடவுளுக்கு நன்றி சொல்லி பயணத்தை தொடர்ந்தான்!


பல நேரம் நாமும் அப்படித்தான்! ஏன் எதுக்கு என ஆராயாமல் சட்டென  முடிவெடுப்போம். கடவுளை வெறுப்போம்! ஆனால் கடவுள் எதைச்செய்தாலும் அதற்கு காரணம் இருக்கும். கரணம் இல்லாமல் அவர் எதையும் அனுமதிப்பதில்லை!  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by Nisha on Mon 5 Jan 2015 - 1:30

ஆலமரமும், பனை மரமும் அருகருகே இருந்து ஆலமரமே நிழலையும் குளிர்ச்சியையும் தந்தாலும் ஆலமரம் தற்காலிக வதிவிடம் தான். 

பனைமரத்தின் கீழ் நிற்க இடமில்லாமல்  போனாலும் அதன் ஓலை நீடித்து நிலைத்து வீட்டுக்கு ஓலையாக நிலையாய் நிற்கும்  நிலைப்பிடம் தான். 

 பார்வைக்கு  கம்பீரமாய் , அழகாய், அமர்த்தலாய் இருக்கின்றதே என ஆலமரத்தை போற்றுதலும் நெட்டையாய்  அழகின்றி  ஓங்கி வளர்ந்ததென பனை பனை மரத்தை தூற்றுதலும்  மனிதர் வாழ்விலும் உண்டே! 

வெளித்தோற்றத்தினை மட்டும் வைத்து முடிவெடுக்காமல்  உள்ளான இதயத்தினை ஆராய்ந்து நல்லது கெட்டதை உணர்வோம். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by பானுஷபானா on Mon 5 Jan 2015 - 14:09

அனைத்தும் அருமையான கதை பகிர்வுக்கு நன்றி நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by Nisha on Wed 16 Sep 2015 - 19:03

ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான் 

குருவே நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா? 

இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம் என்றார் குரு.

 உடன் சீடன் கேட்டான். கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே என்றான் 

அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம் 

மறுபடியும் சீடன் கேட்டான் மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே? ஒரு குறையும் இல்லை என்றார் குரு 

அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான். இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே என்றான். 

குரு கேட்டார் கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா? வலிக்காது குருவே என்றான் மேலும் சிறிது நீரை ஊற்றினால்... குரு கேட்டார். அதுவும் வலிக்காது குருவே என்றான். 


குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் சரியான வகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்? என் தலை பிளந்துவிடும் குருவே என்றான். 


உன் கேள்விக்கான விடை கிடைத்து விட்டது என்றார் குரு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by நண்பன் on Wed 16 Sep 2015 - 19:09

முதல்க் கதை அருமையான கதை பயம் ஒரு மனிதனை எந்த அளவுக்கு முட்டாள் ஆக்குறது என்பது எவ்வளவு உண்மை அருமையான கதை அக்கா நன்றி அன்ட் சாரி தாமதான பின்னூட்டத்திற்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by சுறா on Thu 17 Sep 2015 - 15:47

டெக்னிக்கலான சிஷியன் தான்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum