சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் ! Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் ! Khan11
இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் ! Www10

இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Go down

Sticky இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Post by ஜுபைர் அல்புகாரி on Sat 8 Nov 2014 - 10:50

ஒரு முறை ராபியத்துல் பஸரியா(ரஹ்)
அவர்கள் ஒரு ஒற்றையடி பாதையில் 
நடந்து செல்கிறார்கள். அப்பாதை
ஒருவர் மட்டுமே செல்லும் அளவிற்கு 
மிக குறுகளான இருபுறமும் முட்புதறும், சகதியும் உடைய பாதையாகும்

அச்சமயம் ஒரு ஆடவர் அப்பாதையின்
எதிரே வருகிறார் , அப்போது ராபியத்துல்
பஸரியா (ரஹ்) அவர்கள் "என் ரப்பே
என்ன இது சோதனை பாதையோ
ஒருவர் செல்லும் அளவில் தான் உள்ளது 
எதிரிலே அந்நிய ஆடவர் வருகிறார் 
அந்த அந்நிய ஆடவரின் மேனியும்
என் மேனி படாமல் பாதுகாப்பாயாக!!!"
என்று துஆ செய்தவர்களாக செல்கிறார் 
, அந்த ஆடவரை கடக்கும்போது
அவர்மேனி ராபியத்துல் பஸரியா (ரஹ்) அவர்கள் 
மேனியுடன் படும்படி இருக்கும் பட்சத்தில் 
உடனே பஸரியா (ரஹ்) அவர்கள் 
ஒரு புற முட்புதரில் விழுந்தார்கள்
அதில் அவர்களின் வலது கையின்
எலும்பு 
முறிந்தது, அப்போது அப்பெண்மனி கூறினார்கள் 
"அந்நிய ஆடவனின் மேனியுடன்
எனது மேனி படாமல் எனது
வலது கை எலும்பை ஒடித்த
இறைவனுக்கே புகழ் அனைத்தும்"
என்று இறைவனுக்கு நன்றி கூறினார்கள் !!!!!!
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Post by Nisha on Sat 8 Nov 2014 - 11:16

என்ன சொல்வது என தெரியவில்லையே1 ஒருவர்  வழி விலகி திரும்பி  செல்ல வேண்டியது தானெ! கை உடையும் என தெரிந்தே விழுவதும். விழுந்த பின்  கடவுளுக்கு நன்றி சொல்வதும்???

அதெல்லாம் இருக்க.. அன்னிய ஆணின் மேனியில் படகூடாது , அன்னிய ஆண் பார்வையின் படகூடாது எனவெல்லாம்  பெண்கள் விண்வெளிக்கே செல்லும் இக்காலத்திலும் பேசிட்டிருக்க முடியுமா?

எனக்கு புரியவில்லை... பிசினஸ்  மற்றும் பல காரணங்களால் இயல்பான கை குலுக்கல்கள்  அவசியமாகின்றதே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Post by நண்பன் on Sat 8 Nov 2014 - 11:23

இந்த சம்பவம் பதிவாகியுள் கிதாப் எதுவாக இருக்கும் அறியத்தரவும் 
ஜுபைர் அல்புகாரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Post by ஜுபைர் அல்புகாரி on Sat 8 Nov 2014 - 12:09

Nisha  அவர்களே இஸ்லாம் கூறுவதை கொஞ்சம் கோபம் கொள்ளாமல்  கேளுங்கள்

ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ”நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்?” முஸ்லிம் கேட்டார்; ‘உங்கள் நாட்டு எலிஸபெத் ரானியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா…?” அவசர அவசரமாக ம்றுத்தார் அந்த ஆங்கிலேயர்; ”அதெப்படி முடியும்? அவர்கள் மகாராணியாயிற்றே….!” … முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ”எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே. அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும்.’ எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குளுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.”

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
”உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையைக் காயப்படுத்திக்கொள்வது கிறந்ததாகும்.” (நூல்:- தபரானி)


மேற்கூறப்பட்ட நபி மொழியை உற்றுநோக்கும்போது
முஸ்லிம் சமூகத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர் மார்க்கக் கட்டளையை புறக்கணித்து விட்டு மேல்நாட்டு கலாசாரங்களை பின்பற்றுகின்றனர். சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன்மகள், சகோரனின் மனைவி, சாச்சி, மாமி, போன்றோருடன் கைக்குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில் மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து நாம் தவிர்ந்துகொள்வது நன்று. இது கையின் விபசாரங்களில் ஒன்றாகும். பின்வரும் ஹதிஸ்களை சற்று கவனித்தல் நன்று.


”இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. இரு கைகளும் விபசாரம் செய்கின்றன. இரு கால்களும் விபசாரம் செய்கின்றன. இச்சை உறுப்பும் விபசாரம் செய்கிறது.” (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்)


நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்: ”நிச்சயமாக நான் பெண்களிடம் முஸாபஹா செய்ய கைகுலுக்க மாட்டேன்.” (அறிவிப்பாளர்: உமைமா பிர்த் ருகைகா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: இப்னுமாஜா)


மேலும்: ”நிச்சயமாக நான் பெண்களின் கைகளைத் தொடமாட்டேன்.” (நூல்: தபரானி)


அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கை, எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டது கிடையாது. உடன்படிக்கை கூட வார்த்தையின் மூலம்தான் செய்து கொண்டார்கள். (நூல்: முஸ்லிம்)


மேற்கூறப்பட்ட பொன்மொழிகள் ”நற்குணமுள்ள மனைவிமார்களை நீ என்னுடைய சகோதரர்களிடம் முஸாபஹா செய்யாவிட்டால் தலாக் கூறிவிடுவேன் என மிரட்டும் கணவன்மார்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.


ஒரு ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அந்நிய ஆணுடனோ முஸபாஹாச் செய்வது ஹராமாகும். அது கை உறை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாபஹாச் செய்தாலும் சரியே!
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Post by Nisha on Sat 8 Nov 2014 - 12:37

உங்கள் நாட்டு எலிஸபெத் ரானியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா…?” அவசர அவசரமாக ம்றுத்தார் அந்த ஆங்கிலேயர்; ”அதெப்படி முடியும்? அவர்கள் மகாராணியாயிற்றே….!” … முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ”எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே. அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும்.’ எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குளுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.”

இது புரியிது தான்! ஆனால் இதே சமூகத்தில்  மனைவியை பிடிக்காவிட்டால்  விவாகரத்து செய்வதும் ஒருவருக்கு நான்கைந்து மனைவியர் அனுமதிப்பதும் கூட உண்டே!  

பெண்களை மகாராணியாக பார்க்கும் நீங்கள் ஏன் இப்படியும் நடக்கணும். 

மார்க்கரிதியான வரைமுறைகள் அக்கால கட்டத்திற்கேற்ப தான்நடைமுறைப்படுத்தப்படுநெறிமுறைப்படுத்தப்பட்டது!   
அக்காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளி வர அவசியம் இருக்கவில்லை.  கணவர் மார் உழைத்து வர வீட்டுக்குள் இருந்து வீட்டை கவனித்தார்கள். இக்காலத்தில் அப்படியா இருக்கின்றது. ஆணுக்கு சமமாய் பெண்னும் உழைத்தால் தான்  வாழலாம் எனும் நிலை இருக்கும் போது.. போக்கு வரத்தில்,, ஆபிஸ் நேரத்தில்  கைகள் குலுக்குவதும் இயல்பானதான பின் இன்னும் இப்படி பேசணுமா என தோணுது! 

கற்பும் கட்டுப்பாடும் நம் மனதில் இருந்தால் போதாதா?  விபச்சாரம் என்பது தொடுதலால்  அல்ல. மனதால்   நினைப்பது தான் உண்மையான் விபச்சாரம். 


Last edited by Nisha on Sat 8 Nov 2014 - 18:17; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Post by Nisha on Sat 8 Nov 2014 - 12:44


(அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்)

”நிச்சயமாக நான் பெண்களின் கைகளைத் தொடமாட்டேன்.” (நூல்: தபரானி)


(அறிவிப்பாளர்: உமைமா பிர்த் ருகைகா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: இப்னுமாஜா)
இவர்கள் எல்லோரும் யார்?   

குரானில் என்ன உண்டு ! அது சொல்வதென்ன என ஆதார விளக்கத்தோடு சொல்வதில்லையே? ஏன் அப்படி?

மனிதர்கள் தமக்கு விருப்பமான படி  தமக்கு சாதகமான படி எதையும் வளைக்க வல்லவர்கள், ஆதலால் மனிதர் கூறும் எந்த வார்த்தையாயினும் உங்கள் சுய ஞானத்தோடு  அதை நான் சொல்லி இருப்பேனா என ஆராய்ந்தறிந்து உங்களுக்கு நீங்களே முடிவெடுங்கள் எனவும் சொல்லப்பட்டிருக்கின்றதே!


Last edited by Nisha on Sat 8 Nov 2014 - 18:19; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 8 Nov 2014 - 14:15

இத்திரியில் உள்ள அத்தனை விடயங்களையும் படித்தேன் அதிகமான விதண்டாவாதம் இருக்கிறது இவற்றுக்கு பதில் எழுதுவதென்றாலே எமக்குள் முரண்படத்தோண்டும் ஆதலால் தவிர்க்க நினைக்கிறேன் 

நிசா அக்காவுக்கு நான் சொல்ல நினைப்பது ஒன்று என்னவென்றால் எங்களுக்கு மார்க்க விடயத்தில் தர்கிப்பதற்கு வரையறை இருக்கிறது சகாபாக்கள் என்று சொல்லுகின்ற நபியவர்களின் தோழர்களின் கூற்றுக்களை அப்படியே நம்புவதுதான் இஸ்லாம் அவர்களை சாதாரணமனிதர்கள் அவர்களின் சிநதனையில் இருந்து சொல்லியிருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்வதில்லை நபிவழியை எடுத்துச்சொல்லியிருக்கிறார்கள் என்று நம்பி பின்பற்றுவோம் 

இஸ்லாத்தைப்பொறுத்தவரை எக்காலத்திற்கும் பொதுவாக விதிக்கப்பட்டிருக்கின்ற வரம்புகளையும் வரையறைகளையும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது இறைகட்டளை அதை பின்பற்றாதவர்களுக்கு தண்டனை உண்டு என்பதும் யாவரும் அறிவர் பின்பற்றாதவர்களைப்பார்த்துவிட்டு ஒட்டு மொத்த இஸ்லாத்திலும் குறைகாண்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எந்தக்குறைகளும் நிருபிக்கவும் யாராலும் முடியாது 
இங்குவிவாதம் இத்தலைப்புடன் தொடரவேண்டாம் முடித்துக்கொள்வோம் என்பது எனது பணிவான வேண்டுகோள்


இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் ! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Post by Nisha on Sat 8 Nov 2014 - 18:25

விவாத நோக்கத்தோடு நான் எதையும் கேட்க வில்லை! பதிவைத்திருத்தி விட்டேன்!  என் பதிவால் யார் மனசாவது காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.   

தொடருங்கள் ஜூபைர் அல்புகாரி அவர்களே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Post by சுறா on Sat 8 Nov 2014 - 18:36

அருமை நிஷா மற்றும் ஜூபைர் அல்புகாரி அவர்களே!


உங்கள் பதிவையும் நிஷாவின் கேள்வியினால் எழுந்த உங்களது விளக்கமும் மிக மிக அருமை. 


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Post by ஜுபைர் அல்புகாரி on Mon 10 Nov 2014 - 13:42

Nisha அவர்களே நட்பிற்குள் விவாதம் வேண்டாம் என்பதால்  

பதில் பதிவுகள் இடவில்லை தோழியே!!!
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Post by ஜுபைர் அல்புகாரி on Mon 10 Nov 2014 - 13:43

சுறா அவர்களே

 நன்றி
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Post by பானுஷபானா on Mon 10 Nov 2014 - 14:03

சாதாரணமாகவே பெயர் போட்டு பதில் சொன்னால் போதுமே. ஏன் புரொஃபைல் போய் காப்பி பேஸ்ட் செய்து பதில் சொல்றீங்க புஹாரி. நேரம் தான் அதிகமாகும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Post by Nisha on Mon 10 Nov 2014 - 14:11

ஜுபைர் அல்புகாரி wrote:Nisha அவர்களே நட்பிற்குள் விவாதம் வேண்டாம் என்பதால்  

பதில் பதிவுகள் இடவில்லை தோழியே!!!

விவாதங்கள் என நினைக்காமல் தாங்கள் அறிந்ததை தாராளமாக பகிருங்கள். நான் எதுவும் நினைக்கவில்லை. கோபம்லாம் படல்லைப்பா? சும்மா சாதாரணமாகத்தான் கேட்டேன்.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இறைநேச பெண்மணி ராபியத்துல் பஸரியா (ரஹ்) வாழ்வில் ஒரு சம்பவம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum