சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 2 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 2 Khan11
ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 2 Www10

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

Sticky ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Mon 24 Nov 2014 - 6:38

First topic message reminder :

பசலை நோய்…!!
*
உன்னை மனநோயாளி என்று
முத்திரைக் குத்தி
மனசாட்சியில்லாமல்
உறவுகள் இம்சை செய்வதைப்
பார்க்க மனம்
வேதனைப்படுகின்றது.
உன் காதலைப் பிரிக்க
எதையோ சொல்லி
நம்ப வைக்க
முயற்சிப்பவர்களின்
கட்டுக்கதை தானே இது.
உன்னை எப்படி
நம்ப வைப்பதென்று
காதலன் துடிக்கிறான்.
உன்னைச் சேர்த்து விடாமல்
தடுக்க ஊர் துடிக்கிறது.
யார் அறிகிறார்களோ? இல்லையோ?
உன் காதலன் மட்டுமே அறிவான்.
உன் பசலை நோய்க்கு மருந்து.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down


Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Mon 9 Mar 2015 - 7:21

பாராட்டுக்கு நன்றி குமார்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Wed 11 Mar 2015 - 7:36

மலரின் அழுகை…!!
*
கண்ணிமைகளின் நுனியில் - அப்
பெண்ணின் கண்ணீர்த் துளிகள்
திரண்டு ஈரம் படிந்திருக்கின்றது
மறைவாய் போய் துடைத்து
வெளிக் காட்டாமல் இயல்பாய்
அழுகையை உள்ளுக்குள்
அமுக்கி அடக்கிக் கொண்டு
யாரிடமும் எதையும் சொல்லாமல்
இப்படியும் அப்படியும் உலவி
மறைத்து வருகின்றாள் பல நாளாய்
அவளின் நடவடிக்கையைச்
சந்தேகித்து கவனித்து வருகின்ற
தாயோ தங்கையோ கேட்பதற்கு
அஞ்சி மௌனமாய் வாடிய முகமாய்
அவரவர் வேலைகளைக் கவனிப்பர்
அவளின் உள்மனதில் புழுங்கும்
அந்த இம்சையின் வேதனையின்
முகாரி ராகம் நரம்பின் வழியே
புடைத்து எழும்பிடும்போது
அவளுள் ஆத்திரமான ஆவேசம்
வெளிப்படுத்த  எண்ணுகையில்
அதனை வெளிப்படுத்தாமல்
தவிர்த்து விம்மி விம்மி பொருமி
முந்தானையால் மறைத்து மறைத்து…
கல்லென கனத்து விட்ட மனதில்
எதற்கான அழுகையென்று
எவருக்கும் இன்னும் அணுவளவும்
தெரியாமல் ரகசியமாய் நெஞ்சில்
புதைத்து வெம்பிக் கொண்டிருக்கிறாள்.
அவளின் கண்ணீர்த் துளியில் தான்
மையங் கொண்டிருக்கிறதோ
அவளின் காதல் துயரக் கதை…!!
* 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by நண்பன் on Wed 11 Mar 2015 - 7:40

மனம் விட்டுப்பேசினால்
தீராதது எதுவும் இல்லை
உன் அம்மாவையும்
உன் தங்கையையும்
தோழியாப் பார்
உன் மனச்சுமை இறங்கும்
மலரே நீ அழலாமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Wed 11 Mar 2015 - 9:39

பாராட்டுக்கு நன்றி நண்பன்....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Fri 13 Mar 2015 - 6:40

அச்ச வெளிச்சம்…!!
*
இன்டர்வியுவில் மட்டும்
கேட்கும் கேள்விக்கு
பட்பட்டென்று
பதில் சொல்கிறாய்?
உன்னிடம் நான்
கேட்கும் கேள்விக்கு மட்டும்
ஏன் பதில் சொல்ல மறுக்கிறாய்?
உனக்கு பதில் சொல்ல அச்சம்
எனக்கு உன் பதிலே வெளிச்சம்…!!
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by சே.குமார் on Sat 14 Mar 2015 - 16:44

அருமை ஐயா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by rammalar on Sun 15 Mar 2015 - 19:38

சூப்பர் சூப்பர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by நண்பன் on Mon 16 Mar 2015 - 7:59

ந.க.துறைவன் wrote:அச்ச வெளிச்சம்…!!
*
இன்டர்வியுவில் மட்டும்
கேட்கும் கேள்விக்கு
பட்பட்டென்று
பதில் சொல்கிறாய்?
உன்னிடம் நான்
கேட்கும் கேள்விக்கு மட்டும்
ஏன் பதில் சொல்ல மறுக்கிறாய்?
உனக்கு பதில் சொல்ல அச்சம்
எனக்கு உன் பதிலே வெளிச்சம்…!!
*

அருமை அருமை
இன்டர்வியுவில் கேள்வி கேட்பவராக மாறி விடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்  மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Thu 9 Apr 2015 - 13:39

தும்பிகளாய்…!!
*
உனக்குமொரு
எல்லையிருக்கிறது
எனக்குமொரு
எல்லையிருக்கிறது
நாம் எப்பொழுது
எல்லைக் கடந்து
அன்பில் இணைந்து
காதல் தும்பிகளாய்
வாழப் போகிறோம்…!!        
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by கமாலுதீன் on Thu 9 Apr 2015 - 15:42

அருமை ஐயா.

அவனுக்கும் எல்லை உண்டு
அவளுக்கும் எல்லை உண்டு
அவர்கள் கொண்ட காதலுக்கு இல்லை ஐயா எல்லை.
விரைவில் இணைவார்கள்.....

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Fri 10 Apr 2015 - 12:53

வண்டாய்…!!
*
உன்
கூந்தலில் சூடியப்
பூவின் வாசம்
நுகர்ந்து
சுற்றிச் சுற்றி
வலம் வரும்
வண்டாகி விடுகிறேன்
நான்
உன்னைக் காணும்
அந்நொடியில்…!!

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Fri 24 Apr 2015 - 6:51

காதல் துக்கமறியாது…!!
*
முகமெல்லாம் எதற்கு
வியர்த்துக் கொட்டுகிறது?
கைகளில் என்ன நடுக்கம்?
பேச்சில் எதற்கிந்த உளறல்?
நிமிர்ந்துப் பார்த்து நில்
சொல்வதைக் கவனமாகக் கேள்.
வெட்கப்பட்டுக்
கொண்டிருந்தால் எப்படி?
புரிந்துக் கொள்
ஆசை வெட்கமறியாது?
காதல் துக்கமறியாது?
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Mon 4 May 2015 - 14:28

நீ நான்…!!
*
உன் விழிகளில்
நானிருக்கிறேன்
உன் உணர்வுகளில்
என் எண்ணங்கள்
ஊர்கின்றது
உன் உதடுகளில்
என் எச்சில் இருக்கின்றது
உன் காதுகள் எப்பொழுதும்
என் வார்த்தைகளுக்காகக்
காத்திருக்கின்றது.
உன் மூச்சு சுவாசம்
என் மீது வீசி தழுவுகின்றது
உன் வெட்கங்கள்
என்னைக் கண்டதும் வந்து
மௌனமாக்கி விடுகின்றது
நம் சந்திப்புக்கு சமாதானம்
செய்து வைக்கின்றது
வெறுப்பை விரட்டி
மகிழ்கின்ற இருமனங்கள்.
நீ நான் நான் நீ
நான் நீ… சங்கமம்….!!
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by கமாலுதீன் on Mon 4 May 2015 - 15:10

இனிய காதல் வரிகள். படித்து மகிழ்ந்தேன். நன்றி ஐயா.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Mon 4 May 2015 - 16:18

பாராட்டுக்கு மிக்க நன்றி கமாலுதீன்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by கவிப்புயல் இனியவன் on Fri 15 May 2015 - 4:50

அருமையான கவிதைகள் மிக்க நன்றி ஐயா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Mon 18 May 2015 - 13:35

மிக்க நன்றி இனியவன்....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Mon 25 May 2015 - 5:30

கண்கள்….!!
*
எங்கெங்கோ தேடின
கண்கள்
எங்கேயிருக்கிறாய் என்று
காட்டிக் கொடுத்தது.
உன் அசையும்
உன் சிரிப்பலையும்
அருகில் நெருங்கி வந்துப்
பார்த்தேன்…. ஏமாந்தேன்
அது நீயில்லை என்பது
உறுதியானது
உடம்பெல்லாம் வியர்த்தேன்
வெட்கத்தில் குனிந்தேன்
நடந்தச் சம்பவம்
நான் சொன்னதைக் கேட்டு
நீ சிரித்தாய் ரொம்ப நேரம்
அந்தச் சிரிப்பில் மலர்ந்த
உன் முகம் தான்
எத்தனை அழகு….!!
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by கவிப்புயல் இனியவன் on Thu 28 May 2015 - 8:27

அருமை அருமை 
தொடருங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Mon 8 Jun 2015 - 6:32

வாட்ஸ்அப் காதல் தூது…!!
*
செல்பி எடுத்து எடுத்து
வாட்ஸ்அப்பில் சளைக்காமல்
உன் உருவப் படத்தை
அனுப்பி வைக்கிறாய்.
உன் அழகான புன்னகையில்
மலர்ந்த முகம் நெற்றி பொட்டு
காதில் தொங்கும் கம்மல்
சுருட்டை முடி கூந்தல்
மல்லிகைப் பூவின் வெண்மை
பிடித்தமான நிறப் புடவையில்
உன்னைப் பார்த்து பார்த்து
ரசிக்கிறேன்…ருசிக்கிறேன்
என்னுடைய பதில் பதிவை
அவ்வப்போது உனக்கு
அனுப்பி விடுகிறேன்
அதைப் படித்து வெட்கத்தில்
நீ பதித்தப் பதில்கள்
எனக்கு தெம்பூட்டுகின்றன
உற்காசத்தில் நானும்
என்னை செல்பி எடுத்து
அனுப்பியதைப் பார்.
அழகாகயிருக்கிறேனா? சொல்.
செந்தாமரைப் பூவாய்
மலர்ந்து செழிக்கட்டும்
நம் காதல்.
தினம் தினம் தவறாமல்
பரிமாறிக் கொள்வோம்
செல்பி வாட்ஸ்அப் தூது

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Fri 12 Jun 2015 - 6:56

வலி…!!
*
நீ
அனுப்பிய பிறந்த நாள்
வாழ்த்துச் செய்தியை
வாட்ஸ்அப்பில் படித்தேன்.
உயிர்எழுத்துக்களைப் படித்து
உன் உணர்வவுகளைப்
புரிந்துக் கொண்டேன்.
பூக்களுக்குத் தான் தெரியும்
பூக்களின் அருமை.
யாருக்குத் தெரியும்
நம் அவல நிலைமை.
நெருஞ்சி முள்ளாய்
தைக்கின்றன இன்னும்
நம்மிருவரின்                
பிரிவின் வலி….!!

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by பானுஷபானா on Fri 12 Jun 2015 - 12:27

ந.க.துறைவன் wrote:வலி…!!
*
நீ
அனுப்பிய பிறந்த நாள்
வாழ்த்துச் செய்தியை
வாட்ஸ்அப்பில் படித்தேன்.
உயிர்எழுத்துக்களைப் படித்து
உன் உணர்வவுகளைப்
புரிந்துக் கொண்டேன்.
பூக்களுக்குத் தான் தெரியும்
பூக்களின் அருமை.
யாருக்குத் தெரியும்
நம் அவல நிலைமை.
நெருஞ்சி முள்ளாய்
தைக்கின்றன இன்னும்
நம்மிருவரின்                
பிரிவின் வலி….!!

*

பிரிவின் வலி அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Sat 13 Jun 2015 - 9:52

நன்றி பானுஷா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Wed 17 Jun 2015 - 15:38

இன்னிசை…!!
*
இசை விரும்பி நீயென்பது
எத்தனையோ முறைச்
எனக்குச் சொல்லி
விளக்கி இருக்கிறாய்.
மெல்லிசை கர்நாடக இசை
மேனாட்டு இசையென சில
கற்றிருப்பதாகச் சொல்லி
கொஞ்சம் பாடிக் காட்டினாய்.
நான் விரும்பி ரசித்தேன்.
இசைப் பிரியையின் ரசிகன்
என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
ஒரே ஒருமுறை எனக்காக
ஆனந்தபைரவி ராகம் மட்டும்
பாடு… பாடு….கேட்கிறேன்.
பாடல்களைப் பதிவேற்றம் செய்து
எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பு
விரும்பிக் கேட்டு ரசிக்கிறேன்
இசை அலையில் கலந்து
இணைய விரும்புகிறேன்.
இருவர் வசமாகட்டும்
இனிய இன்னிசை.
*

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் on Fri 19 Jun 2015 - 6:36

மனம் போல வாழணும்…!!
*
மாமன் வாரான் பாருங்க
மாமன் வாரான் பாருங்க
மடக்கி விரட்டிப் பிடியுங்க
மஞ்சநீரை ஊத்துங்க
வெள்ளை சட்டை பூராவும்
மஞ்சக் கரையாக்குங்க
அக்கா கேட்டா சொல்லுங்க
அடிக்க வந்தா ஓடுங்க.
மச்சினிச்சி மஞ்ச தண்ணி
மனசு நிறைஞ்சி போகணும்
மாமன் எனை நினைச்சி நாளும்
மகிழ்ச்சி பொங்க சிரிக்கணும்.
மாப்பிள்ளைப் பாத்து வைச்சி
மச்சினிக் கல்யாணத்தை
மனம் போலமுடிக்கணும்
சீருசெனத்தி குறையில்லாம
நாளு பேரு பார்க்கணும்
மணமேடையில் வாயாற
மாமன் வாழ்த்த வாழணும்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum