சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


விடுமுறையும் திருவிழாக்களும்... Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
விடுமுறையும் திருவிழாக்களும்... Khan11
விடுமுறையும் திருவிழாக்களும்... Www10

விடுமுறையும் திருவிழாக்களும்...

Go down

Sticky விடுமுறையும் திருவிழாக்களும்...

Post by சே.குமார் on Sun 21 Jun 2015 - 21:50

ணக்கம்.

இறையருளால் உறவுகள் நலமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். விடுமுறை சந்தோஷங்களில் திளைத்து மீண்டும் பாலை மண்ணில் பாதம் பதித்து ஒரு வாரம் ஆனாலும் கண்ணில் ஆடும் மனைவி மக்களின் நினைவில் இருந்து இன்னும் மீள முடியாத துயரம். என்ன செய்வது...? வாழ்க்கை இப்படி ஒரு பாதையில் பயணிக்கிறதே... 

விடுமுறையும் திருவிழாக்களும்... IMG_20150529_180711


மே மாதம் ஊருக்குச் செல்வதில் இரட்டிப்புச் சந்தோஷம்... ஒண்ணு குழந்தைகளோட நேரம் செலவிடலாம்... இரண்டாவது திருவிழாக்கள்... குழந்தைகளோட நேரம் செலவிட்டதால் எங்கு சென்றாலும் நானும் வருவேன் என்று நின்றதால் உள்ளூரிலே கூட நிறையப் பேரைப் பார்க்க முடியவில்லை... அப்புறம் எப்படி நிலவன் ஐயா, தனபால் அண்ணா, கரந்தை ஐயா, சரவணன் அண்ணாவை எல்லாம் பார்ப்பது... எல்லாரும் மன்னிக்கனும்... எப்படியும் பார்க்கலாம் என்று எழுதியிருந்தால் கண்டிப்பாக ஒருநாள் சந்திப்போம்.

எங்க ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா வைகாசி மாதம் நடந்தது. திருவிழா அன்று இரவு சன் டிவி புகழ் தேவகோட்டை ராமநாதன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. அவர் சொன்ன எல்லா நகைச்சுவைகளுமே பத்திரிக்கையில் வந்தவைதான் என்றாலும் கிராமத்து மக்கள்தானே என்று சொன்னார் போல... அதேபோல் பேசியவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள்தான்... அருமையாகப் பேசினார்கள். ஆனால் தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு குழந்தையை மேடை ஏற்றினார்கள். அதற்காகவே பேச்சாளர்களின் வரிசை மாற்றி பேச வைத்தார். அதனால் நல்லா பேசுபவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை... இதையும் ராமநாதன் அவர்கள் கிராமத்து மக்களுக்கு நாலு நகைச்சுவை சொன்னால் போதும் என்று நினைத்துத்தான் செய்தார்.

விடுமுறையும் திருவிழாக்களும்... IMG_20150529_200228


அந்தக் குழந்தை அம்மா சொல்லச் சொல்ல அப்படியே பேசினாலும் அதற்கு வளமான எதிர்காலம் உண்டு. ஒண்ணாம் வகுப்பு படிக்கும் போதே மேடையில் பயமின்றி அழகாய் அம்மாவின் வாயசைப்பைப் பார்த்துப் பேசும் அந்தக் குழந்தை பிற்காலத்தில் மிகச் சிறந்த பேச்சாளராக வரும் என்பதில் சந்தேகமே இல்லை. சிறிய கிராமம்... அவ்வளவாக கூட்டம் இல்லை என்றாலும் ஆரம்பத்தில் இருந்த கூட்டம் கடைசி வரை அப்படியே இருந்தது.

பால்குடம், கரகம் என திருவிழா மிகச் சிறப்பாக நடந்தது. ஸ்ருதியும் விஷாலும் மிக அழகாக முளக்கொட்டினார்கள் என்பது கூடுதல் சந்தோஷம். இதேபோல் இன்னும் சில திருவிழாக்கள், திருமணங்கள், விருந்துகள் என மே மாதம் அழகாய் கரைந்தது.


விடுமுறையும் திருவிழாக்களும்... IMG_20150603_103217


மீண்டும் அபுதாபி திரும்பிய போது ஏர்போர்ட்டில் பெட்டியை மாற்றி எடுத்துக் கொண்டு போன கதை அடுத்த பதிவாய்...

அப்புறம் இன்னொன்னு இன்று காலை ஸ்ருதியும் விஷாலும் போன் செய்து தந்தையர் தின வாழ்த்துச் சொன்னார்கள்... ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது..

மன ஆறுதலுக்காக மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்துத்தான் இந்தப் பகிர்வு... அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதுவேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார். 
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: விடுமுறையும் திருவிழாக்களும்...

Post by Nisha on Sun 21 Jun 2015 - 22:34

அட வாங்க குமார்!

 நலம் தானே! விடுமுறை நலமாய் முடிந்ததோ?  கட்டுரை படிக்கல்லை படித்து விட்டு கருத்து இடுவேனாம்-


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விடுமுறையும் திருவிழாக்களும்...

Post by சே.குமார் on Mon 22 Jun 2015 - 17:37

சந்தோஷமாய் கழிந்தது அக்கா...
நல்ல சுகம்...
தாங்கள் அனைவரும் நலம்தானே?
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: விடுமுறையும் திருவிழாக்களும்...

Post by Nisha on Mon 22 Jun 2015 - 17:50

நலம் தான் பா! 

 போட்டிக்கான பரிசுப்பணம் கிடைத்ததாமோ?

புகைப்படங்களும் விடுமுறை நிகழ்வுகளில் நினைவுகளும் அசத்தல் குமார். 

உங்களுக்காக இல்லாவிட்டாலும் எங்களுக்காக் தொடர்ந்து எழுதுங்கள்.  பெட்டி மாறியகதையை அறிய  ஆர்வத்தோடு காத்திருக்கேன். தொடருங்கள். 

அப்படியே தொடர் கதையையும் கவனியுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விடுமுறையும் திருவிழாக்களும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum