சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


நடத்தை கோளாறு Conduct Disorder Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
நடத்தை கோளாறு Conduct Disorder Khan11
நடத்தை கோளாறு Conduct Disorder Www10

நடத்தை கோளாறு Conduct Disorder

Go down

Sticky நடத்தை கோளாறு Conduct Disorder

Post by ahmad78 on Mon 22 Jun 2015 - 9:19

டாக்டர் சித்ரா அரவிந்த்
நடத்தை கோளாறு Conduct Disorder Ht3629
குழந்தைகள்/டீன்ஏஜ் பருவத்தினரை பாதிக்கும் உணா்ச்சி மற்றும் நடத்தை பிரச்னையில் முக்கியமான பிரிவுதான் நடத்தை கோளாறு. இவர்கள் வாய்ப்பேச்சோடு நிறுத்திக் கொள்வார்கள். அதே நேரம், நடத்தை கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களின் உரிமைகளை மீறுகின்ற வகையிலும் மற்றும் சமுதாய விதிமுறை/வரைமுறையை மீறும் வகையிலும் தொடர்ந்து நடந்து கொள்வார்கள். அதுமட்டுமின்றி, பல நேரங்களில், இதனால் பிறருக்கு காயமோ, மரணமோ, பொருட்சேதமோ ஏற்படவும் கூடும். இதில் 2 வகைகள் உள்ளன.

நடத்தை கோளாறு வகைகள்

1. குழந்தை பருவ நடத்தை கோளாறு அறிகுறிகள் 10 வயதிற்கு முன்னரே ஆரம்பித்துவிடும்.

2. டீன்ஏஜ் பருவ நடத்தை கோளாறு அறிகுறிகள் டீன்ஏஜ் பருவத்தின் போது ஆரம்பிக்கும். 

சில நேரங்களில், எப்போது முதலில் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன என தெரியாமல் கூட போய் விடக் கூடும். ஆண் பிள்ளைகளிடம் தான் இந்த கோளாறு அதிகம் காணப்படுகிறது. மேலும், ஆண்களுக்கு 10 வயதிலும்  பெண்களுக்கு 13-18 வயதிலும் உச்சத்தில் காணப்படும். குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பிக்கும் நடத்தை கோளாறுதான், டீன்ஏஜ் பருவத்தில் ஆரம்பிப்பதைக் காட்டிலும் அபாயமானது. இவர்கள் பெரியவர் ஆனதும், போதை/மது அடிமைத்தனம் போன்ற பல மனநலப் பிரச்னைகளுக்கும் சமூக விரோத வன்முறை செயல்களிலும் ஈடுபடும் அபாயமும் அதிகப்படுகிறது.

அறிகுறிகள் 

பெரும்பாலான அறிகுறிகள் 1 வருடத்துக்கு மேல் காணப்படும், குழந்தையின் சமூக, வேலை மற்றும் பள்ளி வாழ்க்கையை கடுமையாக பாதித்தால் அது, நடத்தை கோளாறாக இருக்கலாம்.

1. முரட்டுத்தனமான நடத்தை

மற்றவரை மிரட்டுதல், கொடுமைப்படுத்துதல், உடல்ரீதியான/பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபடுதல், திருடுதல், வழிப்பறி செய்தல் மற்றும் மிருகங்களைத் துன்புறுத்துதல்.

2. பொருட் சேதம் செய்தல்

தீ வைத்தல் மற்றும் வேண்டுமென்றே மற்றவருக்கு சொந்தமான பொருட்களை / சொத்தை அழித்தல்.

3. ஏமாற்றுதல் / திருட்டு

வீடு  புகுந்து திருடுவது, பிறரை பொய் சொல்லி ஏமாற்றுவது, கார் திருட்டு.

4. தீவிரமான விதி / கட்டுப்பாட்டை மீறுதல் 

13 வயதுக்கு முன்னரே வீட்டை விட்டு ஓடிப் போவது, பள்ளிக்கு செல்லாதிருத்தல், குடி, போதை பழக்கம், சிறு வயதிலேயே பாலியலில் ஈடுபடுதல். ஆண்கள் பெரும்பாலும் முரட்டுத்தன்மை மற்றும் அழிக்கும் விஷயத்தில் ஈடுபடுவார்கள். பெண்கள் ஏமாற்றுவது மற்றும் கட்டுப்பாட்டை மீறும் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நடத்தை கோளாறு Conduct Disorder

Post by ahmad78 on Mon 22 Jun 2015 - 9:19

யாருக்கு நடத்தை கோளாறு வரலாம்?

பின்வரும் காரணிகள் ஒரு குடும்பத்தில் காணப்பட்டால், அங்கிருக்கும் குழந்தைக்கு இவ்வகை கோளாறு ஏற்படுவதுக்கான சாத்தியம் அதிகம்.  இதை முதலிலேயே தெரிந்து கொள்வது மூலம், குழந்தைக்கு நடத்தை கோளாறு வராமல் தடுக்கவும் அல்லது அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்கவும் முடியும்.

1.     குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்காவது நடத்தை கோளாறு இருத்தல்.

2.     குடும்பத்தில் எவருக்கேனும் மன நலப் பிரச்னை இருத்தல்.

3.     பெற்றோரின் தவறான வளர்ப்பு முறை.

4.     பெற்றோர் குடி/போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருத்தல்.

5.     புறக்கணிக்கப்பட்ட குழந்தை மற்றும் பாலியல்/பிற கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட குழந்தை.

6.     மோசமான/ஆரோக்கியமற்ற குடும்ப சூழ்நிலை (பெற்றோரின் சண்டை, தகாத உறவு, விடாத தகராறு)

7.     பல அதிர்ச்சிகரமான வாழ்க்கை நிகழ்வுகள்  குடும்பத்தில் பணக்கஷ்டம், வேலையின்மை.

8.     வறுமை மற்றும் நகர்ப்புற வாழ்க்கை.

9.     கல்வி மற்றும் சமூகத் திறன் குறைபாடுகள்.


வெளித்தோற்றத்துக்கு இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தன்னம்பிக்கையுள்ளவராகவும் வலிமையாகவும் காட்சியளிப்பார்கள். ஆனால், உண்மையில் இவர்கள்பாதுகாப்பு உணர்வற்றவர்களாகவும் மற்றும் பிறர் தம்மை துன்புறுத்தவோ/பயமுறுத்துவதாகவோ தவறாக நம்பிக் கொண்டிருப்பார்கள்.

காரணி மற்றும் சிகிச்சை மரபணு மற்றும் சுற்றுச்சூழல் 

காரணிகள் சேர்ந்து நடத்தை கோளாறு ஏற்படுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. மூளையில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பாகங்கள் சரியாக வேலை செய்யாததால், ஒருவரால் செய்யவேண்டிய செயலை சரியாக திட்டமிட முடியாமை, தூண்டுதலைக் கட்டுப்படுத்த இயலாமை மற்றும் முந்தைய எதிர்மறை அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ளும் திறன் ஆகியவை வலுவிழந்து விடுகின்றதால், இக்கோளாறு ஏற்படலாம். 

மூளையில் ஏதேனும் சேதம் ஏற்படுவதாலோ அல்லது மரபணு ரீதியாகவோ இந்த மாறுதல்கள் ஏற்படலாம். மேலும், பெற்றோரிடமிருந்தும் பிள்ளைகளுக்கு வரலாம். சுற்றுச்சுழல் காரணத்தால் ஏற்படும் நடத்தை கோளாறுகள் டீன்ஏஜ் பருவம் முடியும் தருணத்தில் தானே வீரியம் குறைந்து விடும். ஏ.டி.எச்.டி.(ADHD), இணக்கமற்ற நடத்தை கோளாறு (ODD) மற்றும் போதை அடிமை நோய் போன்ற பிற பிரச்னைகளுடன் சேர்ந்து காணப்படும் நடத்தை கோளாறுக்கு, பெரும்பாலும் மரபணு காரணமாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. அங்ஙனம் காணப்படும் கோளாறின் தன்மை, பெரியவர் ஆன பின்பும் மாறாதிருக்கலாம்.

சிகிச்சை

நடத்தை கோளாறை முதலிலேயே கண்டறிந்து சரிசெய்யாவிட்டால், அறிகுறிகள் தீவிரமடைந்து, அடிக்கடி தோன்ற ஆரம்பித்துவிடும்.  மேலும், பிற பிரச்னைகளும் தோன்றிவிட்டால், இதை சரிசெய்வது சற்று கடினமாகிவிடும். பெரும்பாலும், இவ்விதப் பிரச்னைகளுக்கு குடும்ப சூழ்நிலை ஒரு முக்கிய காரணமாக இருப்பதால், குடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். ஆகையால், குழந்தையின் மன நிலையில் மாற்றத்தைக் கொண்டு வருவது சிரமம்தான். மேலும் குழந்தைகள் வளர்ந்த பின்னர், இவர்களுக்கு சமூகவிரோத ஆளுமை கோளாறு (Antisocial Personality Disorder) ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். 

ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் வளரும் குழந்தைகளை, முதலில் வேறு இடத்தில் தங்க வைப்பதே, சிகிச்சையின் முதல்படி. பின்னர், குழந்தையின் உணர்ச்சியை சமாளிக்கும் திறன்கள் மற்றும் நடத்தையை மாற்றும் வழிமுறைகள் போன்றவை ஆலோசனையின் போது சொல்லிக் கொடுக்கப்படும். மேலும், அக்குழந்தைக்கு மனச்சோர்வோ (depression) அல்லது ஏ.டி.எச்.டி.யோ (ADHD) இருந்தால், அதற்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.மேலும், முக்கியமாக பெற்றோர் பொறுமையாக ஆலோசகரின் வழிகாட்டல்படி நடந்து கொண்டால், குழந்தையின் நடவடிக்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அடுத்த இதழில் குழந்தைக்கு ஏற்படும் பதற்றக் கோளாறுகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3639


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum