சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

செந்தூர் அழகா...1 Khan11

செந்தூர் அழகா...1

5 posters

Go down

செந்தூர் அழகா...1 Empty செந்தூர் அழகா...1

Post by சே.குமார் Fri 3 Jul 2015 - 8:37

செந்தூர் அழகா...1 Tiruchendur


ம்ம குடந்தை சரவணன் அண்ணன் அவர்கள் தனது குடந்தையூர் தளத்தில் திருச்செந்தூர் சென்று அழகன் முருகனைத் தரிசித்து வந்த அனுபவத்தை அழகான பதிவாக்கி இருந்தார். அதைப் பார்(டி)த்ததும் நம்மளும் செந்தூர் முருகனை தரிசித்து வந்த அனுபவத்தை எழுதலாமே என்று நினைத்ததில் தொன்றியதே இந்தப் பகிர்வு...

சென்ற வருடம் விடுமுறைக்குச் சென்ற போதே மனைவி பழனிக்கு கூட்டிப் போகச் சொன்னார். சில காரணங்களால் தள்ளிப் போக, நீங்க ஆறு வருசம் நடந்தே போயி முருகனைப் பார்த்துவிட்டதால் எங்களைக் கூட்டிப் போக மாட்டேங்கிறீங்க என்றார் வருத்தமாய். சரி இந்த வருடம் போகலாம் என்று தள்ளி வைத்து சமாதப்படுத்திவிட்டு அபுதாபிக்கு வந்தாச்சு.

இந்த வருடம் ஊருக்குப் போனதும் தம்பிக்கு முருகன் கோவில்ல மொட்டை போடணும் பழனிக்கு போகலாங்க என்று சொல்லிக் கொண்டிருந்தார். நானும் பழனி பொயிட்டு அப்படியே திண்டுக்கல் வந்து நம்ம தனபாலன் அண்ணன்அவர்களைப் பார்த்துட்டு வந்துடலாம்ன்னு கணக்குப் போட்டேன். திருவிழாக்கள், திருமணங்கள், குழந்தைகளின் பள்ளி மாற்றம் என தினம் ஒன்றாய் தொடர, பழனி போகும் திட்டம் இந்த முறையும் அமையாது போல என்று நினைத்த போது மனைவி எதாவது ஒரு முருகனுக்குத்தான் மொட்டை போடணும் இங்க இருக்க மலைக்கோயில் முருகனுக்கே போட்டு விடுறேன் என்று கோபமாகச் சொல்லிவிட்டார்.

இந்த வருடம் வந்து எங்கும் போகவில்லை, குலதெய்வம் கோயிலுக்கு கூட போகவில்லை... வீட்டுக்குள்ளே பிள்ளைகளோட இருந்தா சரியாப் போச்சா என்று அம்மணி ஆரம்பிக்க... ஊருக்கு வருவதற்கு ஒரு வாரம் முன்னர் சரி இனியும் செல்லவில்லை என்றால் எப்படி... எங்கு போகலாம்... என்று யோசித்து இதுவரை பார்க்காத திருச்செந்தூர் முருகனையே போய் தரிச்சிக்கலாம். அடுத்த முறை பழனி செல்லலாம் என்று தீர்மானித்தோம். திருச்செந்தூர் என்றதும் அம்மா என்னிடம் ஒருமுறை திருச்செந்தூர் கூட்டிக்கிட்டுப் போடா என்று சொன்னது நினைவில் ஆடியது. என்னிடம் கேட்டு நான் கூட்டிச் செல்லவில்லை (நானே போகவில்லை) என்றாலும் இரண்டு மூன்று முறை அம்மா போய் வந்துவிட்டார். இருப்பினும் அவரையும் அழைத்துச் செல்லலாம் என்றபோது அப்படியே நம்ம குடும்பத்தில் எல்லாரையும் கூட்டிப் போகலாம் என மனைவி சொன்னார்.

செந்தூர் அழகா...1 Tiruchendur-murugan-temple_7


உடனே முடிவெடுத்து அப்பா, அம்மாவைக் கேட்டு சிங்கையில் இருந்து வந்திருந்த சின்ன அண்ணனிடம் பேசி, பெரிய அண்ணி, சின்ன அண்ணன் குடும்பம், பெரியக்கா, சின்னக்கா, நடு அக்கா மகள், தம்பி மனைவி, மாமியார், மனைவியின் தங்கை, எல்லாருடைய குழந்தைகள் என 20 பேருக்கு மேல் சந்தோஷமாக முருகனை தரிசிக்கச் செல்வது என முடிவெடுத்து அதற்கான வேலைகளையும் பார்த்து உறவினர் ஒருவரின் வேனையும் ஏற்பாடு செய்தோம்.

அதன்படி திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கெல்லாம் தேவகோட்டையில் இருந்து வேன் எங்கள் ஊருக்குச் சென்று அப்பா, அம்மா, பெரியண்ணி, குழந்தைகள், ஊருக்கு வந்திருந்த சின்ன அக்கா என எல்லாரையும் ஏற்றி, வரும் வழியில் தம்பி மனைவி, சின்ன அண்ணன் குடும்பம், எங்கள் குடும்பம், அக்கா மகள், பெரியக்காவும் அக்கா பேரனும் என ஒவ்வொரு இடமாக ஆள் ஏற்றி விடியலுக்கு முன்னே தேவகோட்டையில் இருந்து இராமநாதபுரம் நோக்கிப் பயணித்தது.

காலை, மதிய சாப்பாட்டுக்கு இட்லி, சட்னி, புளியோதரை, தயிர்சாதம், மண்டி என சமைத்து எடுத்துச் சென்றுவிட்டோம். தண்ணீரும் இரண்டு பெரிய கேனை வாங்கி வைத்துவிட்டோம். காபியும் இரண்டு பிளாஸ்க்கில் போட்டு எடுத்துச் சென்றுவிட்டோம். வேனுக்குள் தெய்வீக ராகங்கள் ஒலிக்க, எங்கள் பயணம் விடியும் முன்னர் இராமநாதபுரத்தை நெருங்கியது. அங்கிருந்து ராமேஸ்வரம் தூத்துக்குடி நெடுஞ்சாலையில் திருச்செந்தூர் நோக்கிப் பயணிக்கவும் விடியும் காலையின் அழகை ரசித்தபடி பயணப்பட, ரோட்டில் வந்த கார்களையும் லாரிகளையும் பார்த்த பயலுக எல்லாம் வேனின் சந்தோஷத்தில் முன்பக்கம் வந்து நின்று ரசிக்க ஆரம்பித்தார்கள்.

செந்தூர் அழகா...1 Nazhi_kinaru_entrance


ஏர்வாடிக்கு அருகில் வேன் சென்றபோது ரோட்டோரத்தில் நிறுத்தி காபி சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பினோம். வேனில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கவும் படம் போடுங்கள் என்று சில குரல்கள்... சிகரம் தொடு படத்தை ஓடவிட,  இடையில் எங்கும் நிறுத்தாமல் பயணப்பட்ட வேன் ஒன்பது மணிக்கு மேல் திருச்செந்தூர் கடலோரத்தை அடைந்தது.

பசி வயிற்றைக் கிள்ள வேனில் வைத்து இட்லியைச் சாப்பிட்டுவிட்டு முருகனின் கோபுரத்தை ரசித்தபடி விஷாலுக்கு மொட்டை போட்டுவிட்டு கடலுக்குச் சென்று குளித்து நாழிக் கிணற்றில் நிராடி அழகன்  முருகனை தரிசிக்கலாம் என்று முடிவு செய்து முடிகாணிக்கைக்கான சீட்டு வாங்க சென்றால் விஷால் முரண்டு பிடிக்க ஆரம்பித்தான்... மொட்டை அடிக்க அவன் கேட்டது என்ன? அறியக் காத்திருங்கள் இதன் தொடர்ச்சியாய் வரும் மற்றொரு பகிர்வுக்காக...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

செந்தூர் அழகா...1 Empty Re: செந்தூர் அழகா...1

Post by நண்பன் Sat 4 Jul 2015 - 8:28

தொடருங்கள் மீதியையும் படிக்கிறோம்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செந்தூர் அழகா...1 Empty Re: செந்தூர் அழகா...1

Post by சே.குமார் Sat 4 Jul 2015 - 8:33

நண்பன் wrote:தொடருங்கள் மீதியையும் படிக்கிறோம்..
தங்கள் கருத்துக்கு நன்றி
இன்று பதிகிறேன்... வாசியுங்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

செந்தூர் அழகா...1 Empty Re: செந்தூர் அழகா...1

Post by நண்பன் Sat 4 Jul 2015 - 8:38

சே.குமார் wrote:
நண்பன் wrote:தொடருங்கள் மீதியையும் படிக்கிறோம்..
தங்கள் கருத்துக்கு நன்றி
இன்று பதிகிறேன்... வாசியுங்கள்.

கண்டிப்பாக  வாசிக்கிறேன்  இன்று கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது 
சேனை முழுக்க உலா வர வேண்டும் என்ற முயற்சியில் படிக்காமல் போன பதிவுகளை மீண்டும் எடுத்துப்படிக்கிறேன் 
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செந்தூர் அழகா...1 Empty Re: செந்தூர் அழகா...1

Post by பானுஷபானா Sat 4 Jul 2015 - 11:40

payana katturai arumai
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

செந்தூர் அழகா...1 Empty Re: செந்தூர் அழகா...1

Post by Nisha Mon 6 Jul 2015 - 16:17

திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம். 

ம்ம் திருச்செந்தூர் என்றாலே கோயிலும் கடலும் அதன் அழகும் தான் நினைவுக்கு வரும்.  என் அப்பாவின் வழி ஊர்,எனினும் இன்னும் போகக்கிடைக்காத ஊர் அது. 

கோயிலைசுற்றிய சுவாரஷ்யங்களை சுரேஷ் அண்ணா சொல்லி கேட்டிருக்கின்றேன்..சுரேஷ் அண்ணா ஊரும் அது தானே..! அடுத்த தடவை இந்தியா வந்தால் கட்டாயம் போக வேண்டும். 

இலங்கையில்  எங்க வீட்டில் அடுத்தடுத்து நான்கு பெண்கள் பிறந்து  அடுத்து ஒரு ஆண் வேண்டும் என அம்மா கந்த சஷ்டி விரதம் இருந்து  மகன் பிறந்தால் கதிர்காமத்தில் முருகன் கோயிலில் மொட்டை போடுவதாய் வேண்டுதல்செய்த நினைவு வருகின்றது. 

இத்தனைக்கும் அப்பா வழியில் நாங்கள் கிறிஸ்தவர்கள். அப்படித்தான் அம்மா இந்துவாயிருந்தாலும் எங்களை வளர்த்தார். படித்ததெல்லாம் கிறிஸ்தவம் தான். ஆனாலும் இன்று வரை தம்பி மட்டும் இந்து தான். கதிர்காமம் முருகன் கோயிலும்  இலங்கையில் மிக புகழ் பெற்ற முருகன் ஆலயம். முருகன் ஆலயம் என்றாலே மொட்டை மட்டும் அல்ல ஔவையாரும் நாவல் பழமும் கூட நினைவுக்கு வரும். 

உங்கள்  வேண்டுதல்  பயணம் குறித்த  பகிர்வுக்கு நன்றி. அருமையான பயண அனுபவம் குமார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

செந்தூர் அழகா...1 Empty Re: செந்தூர் அழகா...1

Post by Nisha Mon 6 Jul 2015 - 16:23

கோயிலும் கடலலையுமாய்  புகைப்படம் மிக அழகாய் மனசை கொள்ளை கொள்கின்றது. 

வானுயர்ந்த பனை மரங்களும் அதையும் தாண்டி நிமிர்ந்த கோயில் கோபுரமும்.  கடலையில் பால் வர்ணமுமாய்  கடலுக்குள்  நின்றே புகைப்படம் எடுத்தவர் யாரோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

செந்தூர் அழகா...1 Empty Re: செந்தூர் அழகா...1

Post by சே.குமார் Mon 6 Jul 2015 - 17:13

பானுஷபானா wrote:payana katturai arumai
கருத்துக்கு நன்றி அக்கா....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

செந்தூர் அழகா...1 Empty Re: செந்தூர் அழகா...1

Post by சே.குமார் Mon 6 Jul 2015 - 17:18

Nisha wrote:திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம். 

ம்ம் திருச்செந்தூர் என்றாலே கோயிலும் கடலும் அதன் அழகும் தான் நினைவுக்கு வரும்.  என் அப்பாவின் வழி ஊர்,எனினும் இன்னும் போகக்கிடைக்காத ஊர் அது. 

கோயிலைசுற்றிய சுவாரஷ்யங்களை சுரேஷ் அண்ணா சொல்லி கேட்டிருக்கின்றேன்..சுரேஷ் அண்ணா ஊரும் அது தானே..! அடுத்த தடவை இந்தியா வந்தால் கட்டாயம் போக வேண்டும். 

இலங்கையில்  எங்க வீட்டில் அடுத்தடுத்து நான்கு பெண்கள் பிறந்து  அடுத்து ஒரு ஆண் வேண்டும் என அம்மா கந்த சஷ்டி விரதம் இருந்து  மகன் பிறந்தால் கதிர்காமத்தில் முருகன் கோயிலில் மொட்டை போடுவதாய் வேண்டுதல்செய்த நினைவு வருகின்றது. 

இத்தனைக்கும் அப்பா வழியில் நாங்கள் கிறிஸ்தவர்கள். அப்படித்தான் அம்மா இந்துவாயிருந்தாலும் எங்களை வளர்த்தார். படித்ததெல்லாம் கிறிஸ்தவம் தான். ஆனாலும் இன்று வரை தம்பி மட்டும் இந்து தான். கதிர்காமம் முருகன் கோயிலும்  இலங்கையில் மிக புகழ் பெற்ற முருகன் ஆலயம். முருகன் ஆலயம் என்றாலே மொட்டை மட்டும் அல்ல ஔவையாரும் நாவல் பழமும் கூட நினைவுக்கு வரும். 

உங்கள்  வேண்டுதல்  பயணம் குறித்த  பகிர்வுக்கு நன்றி. அருமையான பயண அனுபவம் குமார்.
கதிர்காமம் முருகன் கேள்விப்பட்டிருக்கிறேன் அக்கா...
எங்க வீட்டிலும் நான் ஆறாவதாக பிறந்ததால் முருகன் பெயர் வைக்க வேண்டும் என்று ஆறுமுகம் என்று முடிவு செய்து பின்னர் அப்பா திருத்துறைப்பூண்டி ராஜா வீட்டில் இருந்ததால் அவரின் பெயரான குமாரசாமியை வைத்தார். ஜாதகத்தில் குமாரசாமிதான்... பள்ளியில் சேர்த்த பெயர் குமார்....
போட்டோ இணையத்தில் சுட்டது...
கருத்துக்கு நன்றி அக்கா.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

செந்தூர் அழகா...1 Empty Re: செந்தூர் அழகா...1

Post by Nisha Mon 6 Jul 2015 - 17:26

கடலோடு இணைந்திருக்கும் இக்கோயிலும் சுனாமியின் பாதிப்புக்குள்ளானதோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

செந்தூர் அழகா...1 Empty Re: செந்தூர் அழகா...1

Post by சே.குமார் Mon 6 Jul 2015 - 17:30

Nisha wrote:கடலோடு இணைந்திருக்கும் இக்கோயிலும் சுனாமியின் பாதிப்புக்குள்ளதோ?
சுனாமியின் போது கடல் உள்வாங்கியது இங்கு மட்டும்தான் அக்கா
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

செந்தூர் அழகா...1 Empty Re: செந்தூர் அழகா...1

Post by anuradha Sun 2 Aug 2015 - 13:39

செந்தூர் அழகா...1 SAM_0564
செந்தூர் அழகா...1 SAM_0586
செந்தூர் அழகா...1 SAM_0606
செந்தூர் அழகா...1 Thiruchendur-murugan-temple2-big
செந்தூர் அழகா...1 Thiruchendur_1
செந்தூர் அழகா...1 Thiruchendur-big

திருச்செந்தூர் கோயிலைக் கைப்பற்றி, அங்குள்ள சிலைகளை டச்சுக்காரர்கள் எடுத்துச் சென்றனர். அதைக் கொடுத்துவிடுமாறு அப்போது தென் தமிழகத்தை ஆண்ட திருமலை நாயக்கர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு டச்சுப் படைகள் ஒரு லட்சம் ரியால்கள் பிணயத் தொகை கேட்டுள்ளனர்.

இது நடந்தது, 1648ஆம் ஆண்டு வாக்கில். 
ஆனால் இதற்கு மாறான கட்டுக் கதை ஒன்றுதான் இன்று வரலாறாக பேச்சுவழக்கில் உள்ளது.
 திருமலை நாயக்கர் (1623-1659), 1646ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் தனது ஆட்சிக்கு உட்பட்ட காயல்பட்டணம் நகரில் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார். அந்தக் காலகட்டத்தில் திருமலை நாயக்கர் போர்த்துகீசியருடனும் வணிகத் தொடர்பு வைத்திருந்தார். அதனால் டச்சுக்காரர்கள் கோட்டை கட்டுவதை போர்த்துகீசியர்கள் விரும்பவில்லை.
அதனால் டச்சுப் படையின் படகைப் பொருட்களுடன் கைப்பற்றி, அதைப் போர்த்துகீசியர் அழித்தனர். டச்சுப் படை அப்போது மலபார், கொழும்பு போன்ற இடங்களில் கோட்டைகள் கட்டி, வலுவான படைகளுடன் இருந்தது. அவர்கள் கொழும்பில் உள்ள தங்கள் தலைமையகத்திற்கு உதவி கேட்டனர்.
தலைமையகம் காயல்பட்டணத்தில் இருந்த டச்சுப் படைகளுக்காக 10 படகுகளில் படைகளை அனுப்பிவைத்தது. அந்தப் படகுகள் மணப்பாடு அருகே தரையிறங்கியது. அவர்கள் வீரராமபட்டணத்தில் இருந்த போர்த்துகீசியர்களின் தேவாலயத்தைக் கைப்பற்றினர். மேலும் அந்தப் படைகள் முன்னேறி திருச்செந்தூர் முருகன் கோயிலையும் துப்பாக்கி முனையில் கைப்பற்றியது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். கோயில் கைப்பற்றப்பட்டதால் தெய்வ பயமும் அவர்களிடம் சேர்ந்துகொண்டது. இது குறித்து, மன்னர் திருமலை நாயக்கரிடம் முறையிட்டனர். திருமலை நாயக்கர், டச்சுப் படைகளுக்குக் கடிதம் அனுப்பினார். கோயிலை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் காயல்பட்டணத்தில் அவர்கள் கோட்டை தாக்கப்பட்டதற்கு ஈட்டுப் பணம் தருவதாகவும் அவர் உறுதி தந்தார்.
மன்னரின் கோரிக்கையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தூத்துக்குடியை நோக்கி முன்னேறி அதைக் கைப்பற்றினர் (தென்னிந்திய அரசிதழில், 1658இல் டச்சுப் படைகள் தூத்துக்குடியைக் கைப்பற்றியதாகக் குறிப்பு உள்ளது). 40, 000 ரியால்கள் பிணயத் தொகை கேட்டுள்ளனர். அது மிகப் பெரிய தொகை.
இந்த இழுபறிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இதற்கிடையில் திருச்செந்தூர் மக்கள் தங்களாகவே ஒன்றிணைந்து ஒரு படையைத் திரட்டுகின்றனர்.
600 பேர்கள், 60 குதிரைகள், 4 யானைகள் கொண்ட ஒரு படையை உருவாக்குகிறார்கள். டச்சுப் படைகளை எதிர்த்துப் போரிடுகிறார்கள். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 50 வீரர்கள் இறந்து விடுகிறார்கள்.
1648இல் டச்சுப் படையினர் திருச்செந்தூர் கோயிலில் உள்ள சிலைகளுடன் திருச்செந்தூரை விட்டுக் கிளம்பிச் செல்கிறார்கள். சிலைகளுக்குப் பிணயமாக அவர்கள் ஒரு லட்சம் ரியால்கள் கேட்டனர்.
திருமலை நாயக்கரும் அவரது முகவரான வடமலைப் பிள்ளையனும் டச்சுப் படைகளுடன் பேச்சு வார்த்தை நடத்த ஒரு நால்வர் குழுவை அனுப்பினர். பாட்டவியாவில் உள்ள டச்சு கவர்னருக்கு இவர்களின் கோரிக்கை தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் திருமலை நாயக்கர் கொடுக்கும் தொகையை ஏற்றுக்கொண்டு சிலைகளைத் திருப்பிக்கொடுக்க ஆணையிடுகிறார்.
1651ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீட்கப்பட்ட சிலைகள் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. ஆனால் இந்தச் சம்பவம் குறித்துப் பல்வேறு விதமான கதைகளும் புழக்கத்தில் உள்ளன
செந்தூர் அழகா...1 1200px-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

செந்தூர் அழகா...1 Empty Re: செந்தூர் அழகா...1

Post by சே.குமார் Sun 2 Aug 2015 - 20:31

அறியாத செய்தி அறியத் தந்தீர்கள் சகோதரி...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

செந்தூர் அழகா...1 Empty Re: செந்தூர் அழகா...1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum