சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


செந்தூர் அழகா...2 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
செந்தூர் அழகா...2 Khan11
செந்தூர் அழகா...2 Www10

செந்தூர் அழகா...2

Go down

Sticky செந்தூர் அழகா...2

Post by சே.குமார் on Sat 4 Jul 2015 - 10:55

செந்தூர் அழகா...2 Tiruchendur2


மொட்டை போட சீட்டு வாங்கலாம் என்று செல்ல, விஷால் மொட்டை அடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான். இந்த  இடத்துல ஒண்ணு சொல்லணும்... கோயிலுக்குப் போயி மொட்டை போடணுமின்னு சொன்னப்பவே நீங்களும் மொட்டை போடுறீங்களான்னு கேட்டு பாக்கலாம் என்று சொல்லியிருந்தேன். எனவே அதுக்குத்தான் பயபுள்ள பின்னால இழுக்குதோன்னு டவுட்டோட உனக்கு என்னடா வேணுமின்னு கேட்கவும் நீங்களும் மொட்டை போட்டா நானும் போடுறேன்னு அடிச்சான் பாருங்க அவனது மழலைத்தனமான குரலில். என்னடா பிளாக்மெயிலா என்றதும் நீங்க போட்ட நா போடுறேம்ப்பா... இல்லேன்னா இந்தா ஐயால்லாம் கடலுக்கு பொயிட்டாக நானும் போறேன்னு சொல்லிச் சிரிச்சான்.

என்னடா இது குமாருக்கு வந்த சோதனை... பழனிக்கு நடந்து போகும் போது ஆறு வருட தரிசனத்தில் முதல் வருடம் மட்டுமே சண்முகநதிக்கு நடந்து போய் மொட்டை போட்டு வந்தேன். அதன் பிறகு மொட்டை போடுவதை அதிகம் விரும்புவதில்லை. பாப்பாவுக்கு அழகர் கோவிலில் முதல் மொட்டை எடுக்கும் போது நானும் போட்டுக் கொண்டேன். அம்புட்டுத்தான். எதுவும் நேர்த்திக்கடன் பாக்கியா... அல்லது முருகன் ஏதோ நன்மைக்காக எனக்கு காணிக்கை கொடுத்துச் செல் என பாலகன் ரூபத்தில் கேட்கிறானோ என்று யோசித்து சரி வா... கோயில் வாசலில் கேட்கிறாய் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி இரண்டு சீட் வாங்கச் சென்றேன்.

அப்போது மாமியார் தனது சின்னமகளின் மகனுக்கும் இறக்கிடலாம் என்று சொல்ல மூன்று பேருக்கும் சீட் எடுக்க, மனைவி நானும் பூமுடி இறக்குகிறேன் என்று வந்தார். நான்கு சீட்டோடு முடி எடுக்குமிடம் சென்று முடியிறக்கினால் ஒரு மொட்டைக்கு ஐம்பது ரூபாயாம்... கணக்குப் பண்ணி கொடுத்துவிட்டு நீராட கடலுக்குச் சென்றோம். ஏற்கனவே கடலுக்குள் ஆட்டம் போட்ட எங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொள்ள, கடலில் குளிப்பதென்றால் நாளெல்லாம் கிடக்கச் சொல்லும்... என்ன ஒரு ஆனந்தம். ஆனா பெரிசுகளோட போனாவா ரொம்ப நேரம் குளிக்க முடியும். மணியாச்சு... வாங்க என அப்பா கரையில் இருந்து கத்திக் கொண்டே இருந்தார். பின்னர் நாழிக்கிணறுக்குள் செல்ல அண்ணன் தண்ணீர் ஊற்றுபவரிடம் பணம் கொடுக்க போதும் போதும் என்று சொல்லும் வரை தண்ணீரை இறைத்து ஊற்றினார்.

செந்தூர் அழகா...2 Images?q=tbn:ANd9GcR38NKcKuPtWXkkXBtYItx_gcy7vEK8SxHd_YSNEiR0l428gPS0


பின்னர் ஆடைகளை மாற்ரிக் கொண்டு கோவிலை நோக்கி நடந்தோம். பணம் கொடுத்து எல்லாம் போகாதீங்க... கூட்டம் கம்மியாத்தான் இருக்கு தர்ம தரிசனத்துலயே போங்க என்று சொன்னார் எங்க வேன் டிரைவர். அவர் சொன்னது போல் தர்ம தரிசனத்துக்கான வரிசையில் செல்ல, ஓரளவு கூட்டம் இருந்தது. வரிசை மெதுவாக நடந்து சென்றது. அருகில் பார்க்க 250 கொடுத்தவர்களுக்கும், அடுத்துப் பார்க்க 100 கொடுத்தவர்களும், ஐயரிடம் 500 கொடுத்து அர்ச்சனைத் தட்டை கொடுத்தவர்களும் வேகமாக தரிசனம் செய்து திரும்ப எங்கள் வரிசை மெதுவாக நகர்ந்தது. நம்மளும் 10,20 ரூபாய் டிக்கெட்ல வந்திருக்கலாம் என்று யோசித்தாலும் எங்களுக்குப் பின்னே நின்ற கூட்டத்தில் இனி வெளியாக முடியாது என்று தோன்ற முருகன் இப்படித்தான் வரணுமின்னு நினைச்சிருக்கான் என்று எண்ணியபடியே மெதுவாக நகர்ந்தோம்.

உள்ளே செல்லும் போது நேராக நின்ற சண்முகனை தரிசித்தபடி செல்ல, செந்தில்நாதன் கடலைப் பார்க்க நிற்பார் என்று அண்ணி சொன்னார்கள். எங்கள் வரிசை நகர்ந்து இடப்புறமாக திரும்ப அங்கே அழகன் முருகன் தனது புன்சிரிப்போடு காட்சியளித்தார். பணம் கொடுத்து வந்திருந்தாலும் முருகனை கொஞ்ச நேரம் நின்னு தரிசிச்சிருக்கலாம்... இதுல போறதால பாத்தோமோ பாக்கலையோ விரட்டிருவாங்க என்று மனைவி சொல்ல, முருகனைப் பார்த்துக் கொண்டே, குழந்தைகளுக்கும் காட்டியபடி முன்னோக்கி நகர்ந்தோம். சரியாக முருகனுக்கு நேரே சென்றபோது தீப ஆராதனை நடக்க நக்ருங்க என காவலாளி சொன்னார். 

அப்போது முன்னே போன கூட்டம் தேங்கி நிற்க, என் மனைவியும் முன்னேற, காவலாளி வரிசை நகரலைம்மா... நீங்க நில்லுங்க... அப்படியே நின்னு முருகனைப் பாருங்க... நின்னு அவனைத் தரிசிக்க கொடுத்து வச்சிருக்கணும்... இருங்க என்று சொல்ல நாங்கள் முருகனுக்கு நேராக பத்து நிமிடங்களுக்கு மேல் நின்று அழகனை ரசித்து மனது உருக வேண்டிக் கொண்டோம். எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பை வழங்கியவன் அவன்தான் இல்லை என்றால் விரைவாக நகர்ந்த கூட்டம் நாங்கள் அவனிடத்தில் வரும்போது நகராமல் நிற்குமா என்ன... மனைவிக்கு சந்தோஷம்... நல்ல தரிசனம்... என்றார். ஆம் அருமையான தரிசனம்...

செந்தூர் அழகா...2 Arupadaiveedu_krs

பின்னர் வெளியாகி கோவில் பிரசாதங்கள் வாங்கி மண்டபத்தில் வைத்து சாப்பிட்டுவிட்டு அப்படியே கோவில் மண்டபத்தில் உள்ள கடைகளுக்குள் புகுந்தால் பயலுக ஆட்டம் ஆரம்பிச்சிருச்சு. காரு... துப்பாக்கி என வாங்கிக் குவித்தார்கள். நாங்களும் முருகன் போட்டோ, பனங்கற்கண்டு, ஏலம் சுக்கு இட்ட கருப்பட்டி என எல்லாம் வாங்கிக் கொண்டு திருச்செந்தூரில் இருந்து கிளம்பி வன திருப்பதி சென்று மதிய சாப்பாட்டை அங்கு முடித்து பெருமாளை தரிசித்து விட்டு தேவகோட்டை நோக்கி பயணமானோம்.

இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்து சாப்பிட்டு 'ஸ்ஸ்ஸ்... அப்பனே முருகா...' என்று படுத்தால் நிம்மதியான உறக்கம்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: செந்தூர் அழகா...2

Post by Nisha on Mon 6 Jul 2015 - 16:31

ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் அப்ப இப்ப நீங்கள் மொட்டைகுமாராகவா இருக்கின்றீர்கள். எங்கேப்பா மொட்டை போட்ட போட்டோ?

மொட்டை போட்ட பின் அப்பாவும் மகனும் சேர்ந்து போட்டோ எடுத்திருப்பிங்க தானே? 

எப்படியோ ஒத்தக்காலில் நின்று அப்பாவையும் முடி இறக்க வைத்த விஷாலின் திறமைக்கு  ஒரு பெரிய்ய்ய்ய சல்யூட்.  ஹாஹா  இனியொரு தடவை இப்படி மொட்டை  போடுவேன் என  நேர்த்தி வைத்திடாமல்  தன் தலைமுடிக்கு  பாதுகாப்பு தேடிக்கொண்டார் போலவே! சபாஷ் மகனே!

அப்புறம்  கோயில் போன  அனுபவம், போகும் அனுபவங்கள் என்றுமே சுவாரஷ்யமானதாய் தான் இருந்திருக்கும். இருக்கும். கடலோடு சேர்ந்த கோயில் என்பதால் அவ்விடம் விட்டு வரவே மனசிருக்காது என்பது நிஜம். 

அதென்னப்பா! எல்லா வீட்டிலும் இந்த அப்பாக்கள் அவசரபட்டுகிட்டே இருப்பது ஏன்? அப்பாக்களுடன் பயணம் போனால் சுடுகுது மடியை பிடி என அடுத்து அடுத்து என ஓடிகிட்டே இருக்க வைப்பார்கள். ஆற அமர  எதையும்  ரசிச்சு, ருசிச்சு அனுபவிக்க விட மாட்டார்கள்.எங்கூட்டு அப்பாவும் இப்படித்தான்பா..  முதல் ஆளாய் வெளிக்கிட்டு விடுவார்.  ஹாஹா.! நமக்கும் வயசாகிட்டால் அப்படித்தான் இருப்போம் போல!

கோயிலை சுற்றிய கடைகள் எப்போதும் இருக்குமா? திருவிழா நாட்களில் மட்டும் கடை போட்டு எடுத்து விட மாட்டார்களோ?

அருமையாய் சுவாரஷ்யமாய் உங்கள் அனுபவத்தினை எங்க கூட பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: செந்தூர் அழகா...2

Post by சே.குமார் on Mon 6 Jul 2015 - 17:15

Nisha wrote:ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் அப்ப இப்ப நீங்கள் மொட்டைகுமாராகவா இருக்கின்றீர்கள். எங்கேப்பா மொட்டை போட்ட போட்டோ?

மொட்டை போட்ட பின் அப்பாவும் மகனும் சேர்ந்து போட்டோ எடுத்திருப்பிங்க தானே? 

எப்படியோ ஒத்தக்காலில் நின்று அப்பாவையும் முடி இறக்க வைத்த விஷாலின் திறமைக்கு  ஒரு பெரிய்ய்ய்ய சல்யூட்.  ஹாஹா  இனியொரு தடவை இப்படி மொட்டை  போடுவேன் என  நேர்த்தி வைத்திடாமல்  தன் தலைமுடிக்கு  பாதுகாப்பு தேடிக்கொண்டார் போலவே! சபாஷ் மகனே!

அப்புறம்  கோயில் போன  அனுபவம், போகும் அனுபவங்கள் என்றுமே சுவாரஷ்யமானதாய் தான் இருந்திருக்கும். இருக்கும். கடலோடு சேர்ந்த கோயில் என்பதால் அவ்விடம் விட்டு வரவே மனசிருக்காது என்பது நிஜம். 

அதென்னப்பா! எல்லா வீட்டிலும் இந்த அப்பாக்கள் அவசரபட்டுகிட்டே இருப்பது ஏன்? அப்பாக்களுடன் பயணம் போனால் சுடுகுது மடியை பிடி என அடுத்து அடுத்து என ஓடிகிட்டே இருக்க வைப்பார்கள். ஆற அமர  எதையும்  ரசிச்சு, ருசிச்சு அனுபவிக்க விட மாட்டார்கள்.எங்கூட்டு அப்பாவும் இப்படித்தான்பா..  முதல் ஆளாய் வெளிக்கிட்டு விடுவார்.  ஹாஹா.! நமக்கும் வயசாகிட்டால் அப்படித்தான் இருப்போம் போல!

கோயிலை சுற்றிய கடைகள் எப்போதும் இருக்குமா? திருவிழா நாட்களில் மட்டும் கடை போட்டு எடுத்து விட மாட்டார்களோ?

அருமையாய் சுவாரஷ்யமாய் உங்கள் அனுபவத்தினை எங்க கூட பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிப்பா!
ஆமா அக்கா மொட்டை போட்டாச்சு... நானும் அவனும் செல்பி எடுத்தோம்... ஹா... ஹா...
பேஸ்புக்ல போடுவோமான்னு கேட்டதுக்கு வேண்டாம்ப்பான்னு சொல்லிட்டான்...
அப்பா சாமி கும்பிட நேரமாயிரும்ன்னு கத்திக்கிட்டு இருந்தார்.
கோயில் மண்டபத்தில் எப்போது கடைகள் இருக்கும் அக்கா..
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா..
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: செந்தூர் அழகா...2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum