சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

பள்ளிகால வாழ்க்கை: Regist11

Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பள்ளிகால வாழ்க்கை: Khan11
பள்ளிகால வாழ்க்கை: Www10

பள்ளிகால வாழ்க்கை:

Go down

Sticky பள்ளிகால வாழ்க்கை:

Post by Nisha on Mon 20 Jul 2015 - 14:58

பள்ளிக்கால வாழ்க்கை:

1.வாத்தியாருக்கு வேணும்னே சீக்கி்ரம் உடைஞ்சு போற மாதிரி குச்சி தர்றது
2.வருசம் புல்லா படிக்காம ஊர சுத்திட்டு, பரிட்சைக்கு ஒரு நாள் முன்னாடி அவசர அவசரமா எத படிகறதுனே தெரியாம முழிச்சது
3.இருக்குறதுலயே அதிக பக்கங்கள் இருக்கிற புக்க வெச்சு 'புக் கிரிக்கெட் ' வெளாடுறது .
4.பிறந்தநாள் லீவு அன்னைக்கு வருதேன்னு வருத்த பட்டது.
5.வட்டம் போட காம்பஸ் இருந்தும் பக்கத்து பெஞ்சுல இருக்க பொண்ணுகிட்ட வளையல் வாங்குவேன்
6.சில்லறைக் காசு கையளவில் ...சந்தோஷமோ கடலளவில்
7.ப்ளாக் போர்டுக்கு கரி பூசும் நாளை திருவிழா போல கொண்டாடுவோம்
8.சட்டையை டக் இன் செய்து, அரைஞான் கயிற்றை பெல்ட்டா யூஸ் செய்வது
9.யாராவது பேசுனீங்க போர்ட்ல நேம் எழுதி வெச்சிருவேன் -மிக அதிகம்,மிக மிக அதிகம்

Kirupakaran Karan

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 14:20

1. காலையில் பாடசாலைக்கு கொண்டு போகும் காசில டொபி வாங்கி வாத்தியாருக்கு ரெண்டு கொடுத்துட்டுத்தான் மத்த வேலை
2. நானும் பாடசாலையில் தவிர வீட்டில்பரிட்சைக்கு கூட  படிச்சதே இல்லை.ஆனால் பாசாகுவேன். முகராசி
3. ஆனால் விடிய விடிய படம் பார்ப்பேன் பார்த்த படத்தின் கதையை ஒன்று விடாமல் நண்பர்களிடம் சொல்வேன்
4. அப்போது நண்பர்களிடம் சொல்வேன் படம் பார்ப்பது போன்று டீவில படிச்சித் தந்தால் நினைவில் நிக்குமோ என்றும் கருத்து கந்தசாமி மாதிரி கருத்து சொல்வேன் 
5. பள்ளிப்பருவ அனுபவம் வாங்கிய அடி எல்லாம் மனதில் நிறையவே உள்ளது இன்னும் நிறைய எழுதலாம் பிறகு எழுதுகிறேன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by Nisha on Sat 19 Sep 2015 - 14:32

நல்ல அனுபவம். 

ரொபி வாங்கிக்கொடுக்கும் பையன் என்பதால் தான் வாத்தியார் பாஸ் மார்க்  போட்டாரோ என்னமோ? பெயிலாக்கினால் அவர் வகுப்பில் தொடர மாட்டிங்க என்பதை விட பள்ளிப்பக்கமே வராமல் போல சான்ஸ் இருக்கு என   நினைச்சிருப்பாரோ?ஹா ஹா.

ஓசில வாற ரொபியை யாராச்சும்  விடுவினமா? ஹாஹா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 14:37

Nisha wrote:நல்ல அனுபவம். 

ரொபி வாங்கிக்கொடுக்கும் பையன் என்பதால் தான் வாத்தியார் பாஸ் மார்க்  போட்டாரோ என்னமோ? பெயிலாக்கினால் அவர் வகுப்பில் தொடர மாட்டிங்க என்பதை விட பள்ளிப்பக்கமே வராமல் போல சான்ஸ் இருக்கு என   நினைச்சிருப்பாரோ?ஹா ஹா.

ஓசில வாற ரொபியை யாராச்சும்  விடுவினமா? ஹாஹா

ஹா ஹா அப்படி இல்லை ஆனால் அந்த வாத்தியாரை முதலில் எனக்கு ரொம்ப பிடிக்கும்

இது போல் பள்ளிப்பருவ நினைவுகள் ஒருபாடுள்ளது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by Nisha on Sat 19 Sep 2015 - 14:44

பள்ளிக்கு போக ரெம்ப  பிடிக்கும். பெரும்பாலும்  பள்ளிக்கு போகும் முதல் ஆள் நான் தான். வகுப்புத்தலைவி என்பதால்  முதலில் போய் வகுப்பறை  கூட்டி, கரும்பலகை துடைத்து திகதி எழுதி.. ஆசிரியரின் மேசையில் அழகாக போகன் வில்லா மலர்களை கலர்கலரா  வைத்து விடுவேன்.

தினம் தினம்  பூ பறிக்க ஒவ்வொரு வீடா போய் பறித்து வந்து வகுப்பறையை அலங்கரிப்பேன். 

அப்புறம்  பள்ளி சுற்றுப்புறங்களை யார் கூட்டணும் என  பார்த்து அவங்களோட உதவி செய்வேன். 

இதனாலும் என்னை ஆசிரியர்களுக்கு பிடிக்கும். 
 
பல நாள் குளிச்சி யூனிவோம்  போட்டு விட்டு சாப்பிடாமல் தான் போயிருக்கோம். அப்படி கஷ்டம். ஆனால் படிப்பில் என்னிக்கும்  சோம்பல் பட்டதில்லை. 

பிறந்த நாள் என மத்த பசங்க  ரொபி சாக்லேட் கொடுக்கும் போது நானும் கொடுக்கணும் என ஆசையாயிருக்கும். ஆனால் வீட்டில் வசதி இருக்காது.   தம்பி ஒருத்தன் என்பதால் அவன் பிறந்த நாள் மட்டும் தான் ஸ்பெஷ்ல். 

அப்படியும் ஒரு தடவை அம்மாவோட அழுது காசு வாங்கி  டீச்சர்களுக்கு மட்டும் ரொபி வாங்கி கொடுத்திருக்கேன். 

ரூபவாகினில மாதம் ஒரு தமிழ் படம் போட்டால்  அந்த படம் பார்க்க மட்டும் கூட்டி போக சொல்லி அடம் செய்து போவோம். பக்கத்து வீட்டில்  முற்றத்தில் போய் அமர்ந்திருவோம். எப்படியும் நாற்பது ஐம்பது பேர்   கறுப்பு வெள்ளை  குட்டி தொலைக்காட்சி முன்  அமர்ந்திருப்போம்.  கலைஞர் டீவி மாதிரி தான் இருக்கும்.   குளிருக்கு இதமா அப்பாவின் சாரத்தினை எடுத்து அதற்குள் நுழைந்து போர்த்திட்டு போயிருவேன். படம் ஆரம்பிக்கும் வரை விழிச்சிருந்து  உடனே தூங்கிருவேன்.  படம் முடிந்ததும்அம்மா திட்டி திட்டி எழுப்பி விடுவா.. 
ஹாஹா!

ஒரு நாள்  அலுமிய பானையில் சோறு சமைச்சு சூட்டோட அடுப்பில்  மூடி வைத்திட்டு உதயகீதமோ, ஒலி ஒளியோ முன் வீட்டு ஜன்னலால்  எட்டிப்பார்க்க போக..  நாய் வந்து சோத்து சட்டியை தூக்கிட்டு போயிட்டுது. அன்னிக்கு பட்டினிதான். 

இன்னும் வரும்... பார்க்கலாம். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by நண்பன் on Sat 19 Sep 2015 - 15:01

ஆஹா அருமையான நினைவும் என்றும் நெஞ்சில் நீங்காத நினைவுகள் நினைக்க நினைக்க நினைக்க இனிக்கும் நினைவுகள் நாங்களும் தொடர்கிறோம் அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by Nisha on Sat 19 Sep 2015 - 16:50

நண்பன் wrote:ஆஹா அருமையான நினைவும் என்றும் நெஞ்சில் நீங்காத நினைவுகள் நினைக்க நினைக்க நினைக்க இனிக்கும் நினைவுகள் நாங்களும் தொடர்கிறோம் அக்கா

நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by *சம்ஸ் on Sat 19 Sep 2015 - 17:02

பசுமையான நினைவுகள் இத்தனை வயதாகியும் மீட்டுப் பார்க்கும் போது இனிக்கிறது.மாத படம் வாரவிடுமுறை நாடகம் என்றும் அனைத்தும் காலத்தால் அழியாக காவியமாய் உள்ளத்தில் பசுமரத்தாணியாய் பதிந்தது.பசுமை நினைவுகளை பகிர்ந்த நிஷா மேடதிற்கு நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by நண்பன் on Sun 20 Sep 2015 - 16:05

நான் படித்த காலத்தில் என் மனதில் இடம் பிடித்த ஒரு ஆசியரியர் அவர் எங்கள் பாட சாலைக்கு வரும் போது பிரின்சிபலாகத்தான் வந்தார்..

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது  நான் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன் விளையாடும் பருவம்  எங்களுக்கு பாடசாலையில் இருக்க  இடம் இல்லை மரத்தடியில் மணலில் இருந்துதான்  மணலில் எழுதித்தான்  படிப்போம் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ

அப்படியான தருணத்தில்  எங்கள் பாடசாலைக்கு புதிய பிரின்சிபல் வந்தார் அவர் பெயர் (பழுலூன்)  பெரிய பெயர் சுருக்கமாக அப்படித்தான் நாங்கள் அழைப்போம்  அந்த நேரம் அவர் எங்களிடம்  நாங்கள் அமர்ந்திருந்த மரத்தடிக்கு வந்தார்  எங்களிடம் சொன்னார்  நீங்கள் அனைவரும் ஒரு தரம் சிரிங்கள் சிரித்துக்காட்டுங்கள் பார்க்கலாம் என்றார்  மகிழ்ச்சியாக நாங்கள் அனைவரும் சிரித்தோம் அன்று அவர் சொன்னார் உங்கள் அனைவருக்கும்  இன்று இரண்டு கப் பிஸ்கட் தருகிறேன் என்றார் நாங்கள் மீண்டும் சந்தோசத்தில் சிரித்தோம்

அந்த நேரம் நான் படிக்கும் போது எங்கள் பாடசாலையில் பிஸ்கட் தருவார்கள் அது  அளர்ந்து தருவார்கள்  நாம் தேயிலை குடிப்பது போன்ற ஒரு கோப்பை சின்னதாக  இருக்கும்  அதனால் அள்ளி அள்ளி தருவார்கள்  ஒருவருக்கு ஒரு கோப்பைதான் கிடைக்கும் அதனுள்  ஒரு  இருபது  துண்டுகள்  கிடைக்கும் சின்ன சின்ன பிஸ்கட்  நல்ல ருஷியாக  இருக்கும்  சில நேரம் எனது பகல் நேர பசியைக் கூட அந்த பிஸ்கட் போக்கி  இருக்கும்  நினைவில் இல்லை  அவ்வளவு  வறுமை எங்களுக்கு.  அதற்கு பிறகு வருகிறேன்  

அப்படியான அந்த தருணம் என் மனதில் இடம் பிடித்த மாஸ்டர்தான் இந்த மா மனிதர் இப்போது உயிரோடு இல்லை மரணித்து விட்டார்  ஆனால் எங்கள் மனதில் என் மனதில் வாழ்கிறார் இவர் பற்றி நான் முன்பு எங்க சரி எழுதி இருக்கிறேனா என்று கேட்டால் நினைவில் இல்லை  இருந்தாலும் இங்க எழுத வேண்டும் என்று என் மனது சொல்கிறது அதனால் எழுதுகிறேன்  

அதே பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை நான் படித்தேன் அது வரை பிரின்சிபலாக அவர்தான்  இருந்தார்  ஏனைய சில ஆசிரியர்களுககும் பிரின்சிபலுக்கும் சின்ன தகராறு வந்தது  அப்போது எனக்கு மற்ற ஆசிரியர் ஒருவர் மேல் வெறுப்பாக இருந்தது.    ஆனால் அவருக்கு என்னைப் பிடிக்கும்  எனக்கு அவரைப்  பிடிக்கவே  இல்லை  இப்போது கூட அவரைப் பார்ப்பேன்  ஆனால் பெரிதாக பேசமாட்டேன்   காரணம்  எனக்குப் பிடித்த பிரின்சிபலுடன்  சண்டை பிடித்தவர் என்ற ஒரே  கோபம்.

இப்படியான கால கலட்டத்தில் நான் அந்தப் பாடசாலையை விட்டு விலகி பொலன்நறுவை எனும் ஊருக்கு சென்று விட்டேன் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இரண்டு மாதங்கள் களித்து ஊருக்கு வந்தேன்  இதை அறிந்த பிரின்சிபல் என்னை அழைத்து வரச்சொல்லி  நல்லாத்திட்டினார் நன்றாகப் படிக்கும் மணவன் முனாஸ்ட தம்பிதானே நீ  நீ ஏன் இப்படி செய்கிறாய் படிக்கும் பருவத்தில் ஊர் சுற்றுகிறாய் மாதக்கணக்கில் பாடசாலைக்கு வர வில்லை என்று அன்பாக திட்டினார் ஆனால் அப்போது அது என் மர மண்டைக்கு ஏற வில்லை

காலம் வேகமாக உருண்டோடியது எனது படிப்பும் இடையில் நிறுத்தி விட்டு எனது குடும்ப வறுமை போக்க நானும் தொழிலுக்காக  மீண்டும் பொலன்நறுவை சென்றேன்.   இதில் முக்கியமான உண்மை ஒன்று படிப்பில் எனக்கு ஆர்வம் இருக்க வில்லை இதுதான் உண்மை லட்சியம் இல்லாமல் இருந்து விட்டேன் அதனால் இன்று கஸ்டப்படுகிறேன்.  அதே நிலையில் இரண்டு மூன்று வருடங்கள் நாட்டில் தொழில் புரிந்து விட்டு   வெளி நாடு வந்தேன் இரண்டு வருடங்கள் கழித்து நாடு சென்றேன் அப்போது கேள்விப்பட்டேன்  பிரின்சிபல் மரணித்து விட்டார் என்று அழுகை அழுகை
ஒரே கவலையாப்போச்சிது  நாட்டில் இருக்கும் போதே போய்ப்பார்த்திருக்கலாம் என்று நினைத்து வருந்தினேன் இனி என்றுதான் அவரைப் பார்க்க முடியும் ?  மனதால் கண்ணீர் வடித்து இறைவனிடம் அவருக்காக இந்த நிமிடம் பிராத்திக்கிறேன்  இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தைப் பரிசாக்க வேண்டும் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
மாறா அன்புடன்
நண்பன் சலூட் சலூட்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 20 Sep 2015 - 17:05

உங்கள் எழுத்தில் எங்களின் நாட்கள் ஞாபகம் வருகிறது நண்பன் நாம் கற்ற கல்வியால் பிறருக்கு நன்மையாக இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கும் அது போய்ச் சேரும் 

பாடசாலைக் காலம் நெகிழச்செய்கிறது 
தொடருங்கள்

பள்ளிகால வாழ்க்கை: Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by நண்பன் on Sun 20 Sep 2015 - 18:07

நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள் எழுத்தில் எங்களின் நாட்கள் ஞாபகம் வருகிறது நண்பன் நாம் கற்ற கல்வியால் பிறருக்கு நன்மையாக இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கும் அது போய்ச் சேரும் 

பாடசாலைக் காலம் நெகிழச்செய்கிறது 
தொடருங்கள்
நன்றி தோழா இன்னும் தொடரும் சூப்பர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by *சம்ஸ் on Sun 20 Sep 2015 - 18:09

பள்ளிக்கால வாழ்க்கை மீண்டும் கிடைக்காதா என்று ஏங்கும் ஒரு அழகிய காலம். அதிலும் பிடித்தவங்க பிடித்த பாடம் ஆசிரியர்,ஆசிரியை என்று சொல்லிக் கொண்டு போகலாம்.

அதிலும் எனக்கு ரெம்ப  பிடித்த ஒரு அதிபர் என்றால் அது  நண்பன் நீங்கள் சொல்லும் இந்த மா மனிதர் மர்ஹூம் பலுதீன் இவர் எனக்கு சொந்தம் எனக்கு அப்பா உறவு முறை இவரை எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும் அவர் மரணிக்கும் போது நான் நாட்டில் தான் இருந்தேன் இறுதி கடமைக்கும் சென்றேன்.

அன்பாகவும் அருமையாகவும் அறிவுரைகள் சொல்லுவார் நினைக்கும் போது அவரின் ஆடையும் அழகிய தாடியும் என் கண்முன்னே வந்து நிற்கிறது.
உண்மையில் ஒரு இலட்சியம் இல்லாமல் இருந்ததால் தான் இன்று கஷ்டப்படுகிறோம் என்று நினைக்கிறேன் நண்பா இன்று சிந்திப்பதை அன்று சிந்தித்து   இருந்தால் நம் வாழ்வில் நல்லது நடந்திருக்குமோ என்னவே யாருக்கு தெரியும் எல்லாம் காலத்தின் நியதி.

படைத்தவனுக்கு தெரியும் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் எதை கொடுத்தால் நன்றாக செய்வான் என்று தெரிந்து தான் நமக்கு இதை தந்திருக்கிறான்.இன்று படித்தவர்கள் அதிகம் தன்நலம் மட்டும் பார்க்கிறார்கள் அடுத்தவன் பத்தி சிந்திக்க அவர்களுக்கு நேரம் இல்லை.

அப்படிதான் சிந்தித்தாலும் எதிர் மாறாக சிந்திப்பவர்கள தான் அதிகம் அல்லவா? 

நண்பா எனக்கு ஞாபகம் இருக்கிறது பாடசாலை வளாகத்தில் பாலை,பசரி,முந்திரிகை என்று பல மரங்கள் இருந்தது அதன் கீழ் பாடங்கள் படித்ததும் மான் குட்டிகளாய் துள்ளி விளையாடியதும் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது மீண்டும் திரும்புமா? அந்த வாழ்கை!

நான் புதிதாகப் பார்த்த முதல் தமிழ் பாட ஆசிரியை அவங்க இந்து நெத்திப் பொட்டும் கூந்தலில் இருந்த பூ கொடியும் எனக்கு புதிதாக தெரிந்தது காரணம் நாங்கள் தனி முஸ்லிம்கள் மாத்திரம் உள்ளதால் இந்துக் கலாச்சாரம் பத்தி அறிந்திருக்க வில்லை ஒரு இரு மாதங்கள் எங்கள் பாடசாலையில் படித்து கொடுத்து விட்டு சென்று விட்டார்கள் அந்த ஆசிரியை என்னுடன் ரெம்ப பாசமாக இருபார்கள் என் அக்காவுடன் நல்ல தோழியாக பழகுவார்கள்.

என் பகுப்பில் முபிதா,ஹம்சியா என்ற சக மாணவிகள் என் தோழிகள்.இதில் முபிதாவின் எழுத்து பார்பதற்கும் படிப்பதற்கும் ரெம்ப அழகாக  இருக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களும் ஆசிரியைகளும் அவளுக்கு எக்ஸலண்ட் போட்டு அவர் பாணியில் 5 குட்டி நட்சத்திரங்கள் போடுவார் அதை பார்த்து ரசித்தது இன்னும் நினைவிருக்கிறது.

நான் 6 வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். எனது வகுப்புத் தோழி ஹம்சியா செம்பருத்தி பூ வரைந்து கொண்டு வந்திருந்தாள். அதன் பூவின் காம்பில் இருந்த சின்னஞ்சிறு நெளிவுகளைக் கூடத் தத்ரூபமாக வரைந்திருந்தாள். அது இன்னும் என் கண் முன் அப்படியே இருக்கிறது.

25,28  மாணவர்களும் அதே செம்பருத்திப் பூவைத்தான் வரைந்திருந்தோம். ஆனால் எங்களுடையது எல்லாம் வெறும் நோட்டில் வரைந்த பூக்களாக மட்டுமே இருந்தன. ஹம்சியா வரைந்ததோ கறுப்பு, வெள்ளையாக இருந்தாலும் இன்று காலை பூத்த அழகிய செம்பருத்தியாகவே மலர்ந்து நின்றது. ஹம்சியா வரைந்த செம்பருத்திப் பூவை நான் மிகவும் ரசித்தேன். ஆனாலும் எது என் நோட்டிலிருக்கும் பூவையும் ஹம்சியா வரைத்தையும் வேறுபடுத்துகிறது என எனக்குப் தெரியவில்லை.

அன்று எனக்கு தோழியான ஹம்சியா இன்று எனக்கு நெருங்கி உறவாக உள்ளார் அவர் எனக்கு என்ன  உறவு தெரியுமா? என் மனைவின் சின்னம்மா எனக்கு மாமி முறை.இதில் என்ன கொடுமை என்றால் அன்று உரிமையுடன் பேசியவர்கள் இன்று சற்று தூரமாக இருக்கிறார்கள்.

பசுமையான நினைவுகளை மீண்டும் புரட்டிப் பார்க்க வைத்து அந்தக் காலத்திற்கே கொண்டு சென்ற உங்களுக்கு நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by நண்பன் on Sun 20 Sep 2015 - 18:23

மிகவும் மகிழ்ச்சி சம்ஸ் எனக்குப் பிடித்த ஆசிரியர் அதிபர் உங்கள் சொந்தம் என்று நான் முன்பு அறிந்திருந்தேன் இடையில் மறந்து போய் விட்டேன்
மகிழ்ச்சியாக உள்ளதல்லவா பழய நினைவுகளைப் புரட்டிப்பார்க்கும் போது நிஷா அக்காவிற்கு நன்றி

இன்னும் நான் தொடர்வேன் பள்ளிப்பருவம் காதல் மலர்ந்த தருணம் இன்னும் சுவாரசியமாக இருக்கும் எழுதுங்கள் எழுவோமும்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by சே.குமார் on Sun 20 Sep 2015 - 18:29

Nisha wrote:பள்ளிக்கால வாழ்க்கை:

1.வாத்தியாருக்கு வேணும்னே சீக்கி்ரம் உடைஞ்சு போற மாதிரி குச்சி தர்றது
2.வருசம் புல்லா படிக்காம ஊர சுத்திட்டு, பரிட்சைக்கு ஒரு நாள் முன்னாடி அவசர அவசரமா எத படிகறதுனே தெரியாம முழிச்சது
3.இருக்குறதுலயே அதிக பக்கங்கள் இருக்கிற புக்க வெச்சு 'புக் கிரிக்கெட் ' வெளாடுறது .
4.பிறந்தநாள் லீவு அன்னைக்கு வருதேன்னு வருத்த பட்டது.
5.வட்டம் போட காம்பஸ் இருந்தும் பக்கத்து பெஞ்சுல இருக்க பொண்ணுகிட்ட வளையல் வாங்குவேன்
6.சில்லறைக் காசு கையளவில் ...சந்தோஷமோ கடலளவில்
7.ப்ளாக் போர்டுக்கு கரி பூசும் நாளை திருவிழா போல கொண்டாடுவோம்
8.சட்டையை டக் இன் செய்து, அரைஞான் கயிற்றை பெல்ட்டா யூஸ் செய்வது
9.யாராவது பேசுனீங்க போர்ட்ல நேம் எழுதி வெச்சிருவேன் -மிக அதிகம்,மிக மிக அதிகம்

Kirupakaran Karan
பள்ளிக்கால நினைவுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த நிஷா அக்காவுக்கு நன்றி.
எழுதிய கிருபாகரன் கரணுக்கும் வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by *சம்ஸ் on Mon 21 Sep 2015 - 11:32

நண்பன் wrote:மிகவும் மகிழ்ச்சி சம்ஸ் எனக்குப் பிடித்த ஆசிரியர் அதிபர் உங்கள் சொந்தம் என்று நான் முன்பு அறிந்திருந்தேன் இடையில் மறந்து போய் விட்டேன்
மகிழ்ச்சியாக உள்ளதல்லவா பழய நினைவுகளைப் புரட்டிப்பார்க்கும் போது நிஷா அக்காவிற்கு நன்றி

இன்னும் நான் தொடர்வேன் பள்ளிப்பருவம் காதல் மலர்ந்த தருணம் இன்னும் சுவாரசியமாக இருக்கும் எழுதுங்கள் எழுவோமும்
நன்றியுடன் நண்பன்

நன்றி நண்பா தொடருங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by Nisha on Tue 22 Sep 2015 - 15:01

Spoiler:

நண்பன் wrote:நான் படித்த காலத்தில் என் மனதில் இடம் பிடித்த ஒரு ஆசியரியர் அவர் எங்கள் பாட சாலைக்கு வரும் போது பிரின்சிபலாகத்தான் வந்தார்..

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது  நான் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன் விளையாடும் பருவம்  எங்களுக்கு பாடசாலையில் இருக்க  இடம் இல்லை மரத்தடியில் மணலில் இருந்துதான்  மணலில் எழுதித்தான்  படிப்போம் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ

அப்படியான தருணத்தில்  எங்கள் பாடசாலைக்கு புதிய பிரின்சிபல் வந்தார் அவர் பெயர் (பழுலூன்)  பெரிய பெயர் சுருக்கமாக அப்படித்தான் நாங்கள் அழைப்போம்  அந்த நேரம் அவர் எங்களிடம்  நாங்கள் அமர்ந்திருந்த மரத்தடிக்கு வந்தார்  எங்களிடம் சொன்னார்  நீங்கள் அனைவரும் ஒரு தரம் சிரிங்கள் சிரித்துக்காட்டுங்கள் பார்க்கலாம் என்றார்  மகிழ்ச்சியாக நாங்கள் அனைவரும் சிரித்தோம் அன்று அவர் சொன்னார் உங்கள் அனைவருக்கும்  இன்று இரண்டு கப் பிஸ்கட் தருகிறேன் என்றார் நாங்கள் மீண்டும் சந்தோசத்தில் சிரித்தோம்

அந்த நேரம் நான் படிக்கும் போது எங்கள் பாடசாலையில் பிஸ்கட் தருவார்கள் அது  அளர்ந்து தருவார்கள்  நாம் தேயிலை குடிப்பது போன்ற ஒரு கோப்பை சின்னதாக  இருக்கும்  அதனால் அள்ளி அள்ளி தருவார்கள்  ஒருவருக்கு ஒரு கோப்பைதான் கிடைக்கும் அதனுள்  ஒரு  இருபது  துண்டுகள்  கிடைக்கும் சின்ன சின்ன பிஸ்கட்  நல்ல ருஷியாக  இருக்கும்  சில நேரம் எனது பகல் நேர பசியைக் கூட அந்த பிஸ்கட் போக்கி  இருக்கும்  நினைவில் இல்லை  அவ்வளவு  வறுமை எங்களுக்கு.  அதற்கு பிறகு வருகிறேன்  

அப்படியான அந்த தருணம் என் மனதில் இடம் பிடித்த மாஸ்டர்தான் இந்த மா மனிதர் இப்போது உயிரோடு இல்லை மரணித்து விட்டார்  ஆனால் எங்கள் மனதில் என் மனதில் வாழ்கிறார் இவர் பற்றி நான் முன்பு எங்க சரி எழுதி இருக்கிறேனா என்று கேட்டால் நினைவில் இல்லை  இருந்தாலும் இங்க எழுத வேண்டும் என்று என் மனது சொல்கிறது அதனால் எழுதுகிறேன்  

அதே பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை நான் படித்தேன் அது வரை பிரின்சிபலாக அவர்தான்  இருந்தார்  ஏனைய சில ஆசிரியர்களுககும் பிரின்சிபலுக்கும் சின்ன தகராறு வந்தது  அப்போது எனக்கு மற்ற ஆசிரியர் ஒருவர் மேல் வெறுப்பாக இருந்தது.    ஆனால் அவருக்கு என்னைப் பிடிக்கும்  எனக்கு அவரைப்  பிடிக்கவே  இல்லை  இப்போது கூட அவரைப் பார்ப்பேன்  ஆனால் பெரிதாக பேசமாட்டேன்   காரணம்  எனக்குப் பிடித்த பிரின்சிபலுடன்  சண்டை பிடித்தவர் என்ற ஒரே  கோபம்.

இப்படியான கால கலட்டத்தில் நான் அந்தப் பாடசாலையை விட்டு விலகி பொலன்நறுவை எனும் ஊருக்கு சென்று விட்டேன்   படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இரண்டு மாதங்கள் களித்து ஊருக்கு வந்தேன்   இதை அறிந்த பிரின்சிபல் என்னை அழைத்து வரச்சொல்லி  நல்லாத்திட்டினார்   நன்றாகப் படிக்கும் மணவன் முனாஸ்ட தம்பிதானே நீ    நீ ஏன் இப்படி செய்கிறாய் படிக்கும் பருவத்தில் ஊர் சுற்றுகிறாய் மாதக்கணக்கில் பாடசாலைக்கு வர வில்லை என்று அன்பாக திட்டினார்   ஆனால் அப்போது அது என் மர மண்டைக்கு ஏற வில்லை

காலம் வேகமாக உருண்டோடியது  எனது படிப்பும்  இடையில் நிறுத்தி விட்டு எனது குடும்ப வறுமை போக்க நானும் தொழிலுக்காக  மீண்டும் பொலன்நறுவை சென்றேன்.    இதில் முக்கியமான உண்மை ஒன்று படிப்பில் எனக்கு ஆர்வம் இருக்க வில்லை இதுதான் உண்மை   லட்சியம் இல்லாமல் இருந்து விட்டேன் அதனால் இன்று கஸ்டப்படுகிறேன்.  அதே நிலையில் இரண்டு மூன்று வருடங்கள் நாட்டில் தொழில் புரிந்து விட்டு   வெளி நாடு வந்தேன் இரண்டு வருடங்கள் கழித்து நாடு சென்றேன் அப்போது கேள்விப்பட்டேன்  பிரின்சிபல் மரணித்து விட்டார் என்று அழுகை அழுகை
ஒரே கவலையாப்போச்சிது  நாட்டில் இருக்கும் போதே போய்ப்பார்த்திருக்கலாம் என்று நினைத்து வருந்தினேன் இனி என்றுதான் அவரைப் பார்க்க முடியும் ?  மனதால் கண்ணீர் வடித்து இறைவனிடம் அவருக்காக இந்த நிமிடம் பிராத்திக்கிறேன்  இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தைப் பரிசாக்க வேண்டும் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
மாறா அன்புடன்
நண்பன் சலூட் சலூட்

அந்த நேரம் நான் படிக்கும் போது எங்கள் பாடசாலையில் பிஸ்கட் தருவார்கள் அது  அளர்ந்து தருவார்கள்  நாம் தேயிலை குடிப்பது போன்ற ஒரு கோப்பை சின்னதாக  இருக்கும்  அதனால் அள்ளி அள்ளி தருவார்கள்  ஒருவருக்கு ஒரு கோப்பைதான் கிடைக்கும் அதனுள்  ஒரு  இருபது  துண்டுகள்  கிடைக்கும் சின்ன சின்ன பிஸ்கட்  நல்ல ருஷியாக  இருக்கும்  சில நேரம் எனது பகல் நேர பசியைக் கூட அந்த பிஸ்கட் போக்கி  இருக்கும்  நினைவில் இல்லை  அவ்வளவு  வறுமை எங்களுக்கு.  அதற்கு பிறகு வருகிறேன்  

ஆஹா! சூப்பரான நினைவுகளை பகிர்ந்திருக்கிங்க தும்பி சாரே!

பிஸ்கட் எங்க  ஸ்கூலிலும் தருவார்கள்.  முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும்  பாடசாலைகளில் தருவார்கள். சின்ன சின்னதாய்  இருக்கும். இடைவேளை நேரம்  கப் கொண்டு அளந்து  தருவார்கள்.  சாப்பிட சுவையாக இருக்கும்...  எனக்கும் ரெம்ப பிடிக்கும்.  சட்டையை தூக்கி சட்டைக்குள் அல்லது புத்தகத்தினை விரித்து அதன் மேல் வாங்கி சாப்பிடலாம். எத்தனை  இருக்கும் என வெல்லாம் எண்ணியதில்லை. ஆனால்  குட்டி குட்டி பிஸ்கட்.

பிரின்சிபால் அறையில் இந்த பிஸ்கட் மூட்டை மூட்டையாய் அடுக்கி இருக்கும். அவங்க வீட்டுக்கு போய் டீ எடுத்து வரும்பையன்கள், வீட்டில் வேலை செய்து கொடுக்கும் பசங்களுக்கு  நிரம்ப அள்ளி கொடுப்பா.. எங்களுக்குல்லாம் தரவே மாட்டா... அழுகை 

அந்த நேரத்தில்பசி போக்கும் அமிர்தம் அது தான் என்பது எத்தனை நிஜம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by Nisha on Tue 22 Sep 2015 - 15:11

படிப்பு, அதனுடனான நினைவுகள், தலைமையாசிரியர் குறித்த நினைவுகள்,  படிப்பை நிறுத்திய சூழல என அனைத்தையும்  நினைவில் வைத்தி எழுதி இருக்கின்றீர்கள்   நண்பனே! 

ஆசிரியர் பலூதீன் குறித்து ஏற்கனவே நட்பு திரியில்  படித்திருக்கின்றேன். இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது சுவாரஷ்யமாக தான் இருக்கின்றது. நமக்கு பிடித்த ஆசிரியரை  திட்டி சண்டை போடும் ஆசிரியர்களை  பிடிக்காமல் போவதும் அக்கால சின்ன மனசு தானே? எனக்குள்ளும் இம்மாதிரி  எண்ணங்கள் வந்துள்ளது.  
எனக்கு ரெம்ப பிடிச்ச பிரின்சிபால் எனில் அது  ஜெயானந்தம் சார் தான்.  என்னை ரெம்ப நல்ல என்கரேஜ் பண்ணி இருக்கின்றார்.  எங்க கஷ்டம் உணர்ந்து  சின்ன சின்ன உதவிகள் செய்திருக்கின்றார். அவரை குறித்து பின்னாட்களில் ஏதேதோ செய்திகள் கேள்விப்பட்டாலும் என் மனசில் உயர்ந்திருக்கும்  ஆசிரியர், தலைமையாசிரியர் அவர் தான். அவர் காலத்தில் எங்க ஸ்கூல் நிரம்ப முன்னேற்றம் கண்டது. 

அவர்  கிழக்கு மாகாண வை,எம்,சீ,ஏ தலைவராகவும்  அக்காலகட்டத்தில் இருந்ததால் அதன் மூலமும் எனக்கு நிரம்ப  உதவி செய்திருக்கின்றார்.  எங்களுக்கு சமூகக்கல்வி, ஆங்கிலம் இரண்டும்  கற்பித்தவரும் அவர் தான். அருமையான ஆசிரியர் கிடைத்தால்  அது  எனக்கு பொக்கிஷம் தான். 

அழகான  கோர்வையான நினைவை மீட்டும் பகிர்வுக்கு நன்றி சாரே! இன்னும் எழுதுங்க.. எழுதுவிங்க தானே?

கிட்டிபுள் அடிச்ச,,கல்லடிச்ச, பேய் பால் விளையாண்ட, கள்ளன் பொலிஸ் விளையாடிய  கதையெலாம் இருக்கும்ல.. அதையெல்லாம் எழுதுங்கோ!மண்டையில் அடிவிழும்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by நண்பன் on Tue 22 Sep 2015 - 15:40

Nisha wrote:

அடடடா உங்களுக்கும் பிஸ்கட் கிடைத்திருக்கா ம்ம் சந்தோசமான தருணங்கள் அவைகள் மரக்கவே முடியாது அதிபரின் அறைக்குள்தான் மூட்டை மூட்டையாக இருக்கும் ஒரு தடவைதான் இரண்டு கோப்பை கிடைத்தது அதற்கு எங்கள் அதிபருக்கு நன்றி எனக்கு கிடைக்கும் பிஸ்கட் அரை வாசியை நான் சாப்பிட்டு விட்டு மீதியைக் கொண்டு எங்க அம்மாக்கு கொடுப்பேன் அவங்களும் சாப்பிடுவாங்க அந்த எண்ணங்கள் இன்னும் என் மனதில்

எங்கள் அதிபரும் அப்படித்தான் வகுப்பாசிரியர் வர வில்லை என்றால் அதிபரே வந்து எங்களுக்கு பாடம் நடத்துவார் என் மீது தனி பாசம் காட்டுவார் அது எனக்கு இறுதியில்தான் தெரிய வந்தது ஆரம்பத்தில் அதை நான் அறிந்திருக்க வில்லை

அப்போதெல்லாம் திங்கட் கிழமை காலைக் கூட்டம் வைப்பார்கள் அந்தக் கூட்டத்தில் யாராவது ஒரு மாணவரை அதிபர் அழைத்து குர்ஆன் வசனம் ஓதிக்காட்டச்சொல்வார் அந்த நேரம் நான் பயந்து குனிந்து விடுவேன் அதிபர் என்னை அழைக்கவே மாட்டார் அன்று நான் பயந்ததை இன்று என் மகள் ஐந்து வயதிலே செய்து காட்டி விட்டார் முன்பை விட இந்தக் காலத்தில் கல்வி மிகவும் மேலோங்கி நல்ல பல தொழில் நுட்பங்களுடனும் மாணவர்கள் பல திறமைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இட்டு மிக்க மகிழ்ச்சி

உங்கள் நினைவுகளுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அக்கா (மேடம்)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by Nisha on Tue 22 Sep 2015 - 15:48

மேடமா?  அது யார்?

ஹப்சா அழகாக பாடிக்காட்டுகின்றாள். மேடைக்கூச்சம், சபைக்கூச்சம் இல்லாமல் அழகாக பாடுகின்றாள்.  பாராட்டுகள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by Nisha on Tue 22 Sep 2015 - 15:55

*சம்ஸ் wrote:பள்ளிக்கால வாழ்க்கை மீண்டும் கிடைக்காதா என்று ஏங்கும் ஒரு அழகிய காலம். அதிலும் பிடித்தவங்க பிடித்த பாடம் ஆசிரியர்,ஆசிரியை என்று சொல்லிக் கொண்டு போகலாம்.

அதிலும் எனக்கு ரெம்ப  பிடித்த ஒரு அதிபர் என்றால் அது  நண்பன் நீங்கள் சொல்லும் இந்த மா மனிதர் மர்ஹூம் பலுதீன் இவர் எனக்கு சொந்தம் எனக்கு அப்பா உறவு முறை இவரை எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும் அவர் மரணிக்கும் போது நான் நாட்டில் தான் இருந்தேன் இறுதி கடமைக்கும் சென்றேன்.

அன்பாகவும் அருமையாகவும் அறிவுரைகள் சொல்லுவார் நினைக்கும் போது அவரின் ஆடையும் அழகிய தாடியும் என் கண்முன்னே வந்து நிற்கிறது.
உண்மையில் ஒரு இலட்சியம் இல்லாமல் இருந்ததால் தான் இன்று கஷ்டப்படுகிறோம் என்று நினைக்கிறேன் நண்பா இன்று சிந்திப்பதை அன்று சிந்தித்து   இருந்தால் நம் வாழ்வில் நல்லது நடந்திருக்குமோ என்னவே யாருக்கு தெரியும் எல்லாம் காலத்தின் நியதி.

படைத்தவனுக்கு தெரியும் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் எதை கொடுத்தால் நன்றாக செய்வான் என்று தெரிந்து தான் நமக்கு இதை தந்திருக்கிறான்.இன்று படித்தவர்கள் அதிகம் தன்நலம் மட்டும் பார்க்கிறார்கள் அடுத்தவன் பத்தி சிந்திக்க அவர்களுக்கு நேரம் இல்லை.

அப்படிதான் சிந்தித்தாலும் எதிர் மாறாக சிந்திப்பவர்கள தான் அதிகம் அல்லவா? 

நண்பா எனக்கு ஞாபகம் இருக்கிறது பாடசாலை வளாகத்தில் பாலை,பசரி,முந்திரிகை என்று பல மரங்கள் இருந்தது அதன் கீழ் பாடங்கள் படித்ததும் மான் குட்டிகளாய் துள்ளி விளையாடியதும் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது மீண்டும் திரும்புமா? அந்த வாழ்கை!

நான் புதிதாகப் பார்த்த முதல் தமிழ் பாட ஆசிரியை அவங்க இந்து நெத்திப் பொட்டும் கூந்தலில் இருந்த பூ கொடியும் எனக்கு புதிதாக தெரிந்தது காரணம் நாங்கள் தனி முஸ்லிம்கள் மாத்திரம் உள்ளதால் இந்துக் கலாச்சாரம் பத்தி அறிந்திருக்க வில்லை ஒரு இரு மாதங்கள் எங்கள் பாடசாலையில் படித்து கொடுத்து விட்டு சென்று விட்டார்கள் அந்த ஆசிரியை என்னுடன் ரெம்ப பாசமாக இருபார்கள் என் அக்காவுடன் நல்ல தோழியாக பழகுவார்கள்.

என் பகுப்பில் முபிதா,ஹம்சியா என்ற சக மாணவிகள் என் தோழிகள்.இதில் முபிதாவின் எழுத்து பார்பதற்கும் படிப்பதற்கும் ரெம்ப அழகாக  இருக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களும் ஆசிரியைகளும் அவளுக்கு எக்ஸலண்ட் போட்டு அவர் பாணியில் 5 குட்டி நட்சத்திரங்கள் போடுவார் அதை பார்த்து ரசித்தது இன்னும் நினைவிருக்கிறது.

நான் 6 வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். எனது வகுப்புத் தோழி ஹம்சியா செம்பருத்தி பூ வரைந்து கொண்டு வந்திருந்தாள். அதன் பூவின் காம்பில் இருந்த சின்னஞ்சிறு நெளிவுகளைக் கூடத் தத்ரூபமாக வரைந்திருந்தாள். அது இன்னும் என் கண் முன் அப்படியே இருக்கிறது.

25,28  மாணவர்களும் அதே செம்பருத்திப் பூவைத்தான் வரைந்திருந்தோம். ஆனால் எங்களுடையது எல்லாம் வெறும் நோட்டில் வரைந்த பூக்களாக மட்டுமே இருந்தன. ஹம்சியா வரைந்ததோ கறுப்பு, வெள்ளையாக இருந்தாலும் இன்று காலை பூத்த அழகிய செம்பருத்தியாகவே மலர்ந்து நின்றது. ஹம்சியா வரைந்த செம்பருத்திப் பூவை நான் மிகவும் ரசித்தேன். ஆனாலும் எது என் நோட்டிலிருக்கும் பூவையும் ஹம்சியா வரைத்தையும் வேறுபடுத்துகிறது என எனக்குப் தெரியவில்லை.

அன்று எனக்கு தோழியான ஹம்சியா இன்று எனக்கு நெருங்கி உறவாக உள்ளார் அவர் எனக்கு என்ன  உறவு தெரியுமா? என் மனைவின் சின்னம்மா எனக்கு மாமி முறை.இதில் என்ன கொடுமை என்றால் அன்று உரிமையுடன் பேசியவர்கள் இன்று சற்று தூரமாக இருக்கிறார்கள்.

பசுமையான நினைவுகளை மீண்டும் புரட்டிப் பார்க்க வைத்து அந்தக் காலத்திற்கே கொண்டு சென்ற உங்களுக்கு நன்றி.

மறக்க முடியாத நினைவுகளை  எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. ஆசிரியர், ஆசிரியைகள் குறித்து அறிய முடிந்ததில்  மகிழ்ச்சி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by நண்பன் on Tue 22 Sep 2015 - 15:55

Nisha wrote:படிப்பு, அதனுடனான நினைவுகள், தலைமையாசிரியர் குறித்த நினைவுகள்,  படிப்பை நிறுத்திய சூழல என அனைத்தையும்  நினைவில் வைத்தி எழுதி இருக்கின்றீர்கள்   நண்பனே! 

ஆசிரியர் பலூதீன் குறித்து ஏற்கனவே நட்பு திரியில்  படித்திருக்கின்றேன். இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது சுவாரஷ்யமாக தான் இருக்கின்றது. நமக்கு பிடித்த ஆசிரியரை  திட்டி சண்டை போடும் ஆசிரியர்களை  பிடிக்காமல் போவதும் அக்கால சின்ன மனசு தானே? எனக்குள்ளும் இம்மாதிரி  எண்ணங்கள் வந்துள்ளது.  
எனக்கு ரெம்ப பிடிச்ச பிரின்சிபால் எனில் அது  ஜெயானந்தம் சார் தான்.  என்னை ரெம்ப நல்ல என்கரேஜ் பண்ணி இருக்கின்றார்.  எங்க கஷ்டம் உணர்ந்து  சின்ன சின்ன உதவிகள் செய்திருக்கின்றார். அவரை குறித்து பின்னாட்களில் ஏதேதோ செய்திகள் கேள்விப்பட்டாலும் என் மனசில் உயர்ந்திருக்கும்  ஆசிரியர், தலைமையாசிரியர் அவர் தான். அவர் காலத்தில் எங்க ஸ்கூல் நிரம்ப முன்னேற்றம் கண்டது. 

அவர்  கிழக்கு மாகாண வை,எம்,சீ,ஏ தலைவராகவும்  அக்காலகட்டத்தில் இருந்ததால் அதன் மூலமும் எனக்கு நிரம்ப  உதவி செய்திருக்கின்றார்.  எங்களுக்கு சமூகக்கல்வி, ஆங்கிலம் இரண்டும்  கற்பித்தவரும் அவர் தான். அருமையான ஆசிரியர் கிடைத்தால்  அது  எனக்கு பொக்கிஷம் தான். 

அழகான  கோர்வையான நினைவை மீட்டும் பகிர்வுக்கு நன்றி சாரே! இன்னும் எழுதுங்க.. எழுதுவிங்க தானே?

கிட்டிபுள் அடிச்ச,,கல்லடிச்ச, பேய் பால் விளையாண்ட, கள்ளன் பொலிஸ் விளையாடிய  கதையெலாம் இருக்கும்ல.. அதையெல்லாம் எழுதுங்கோ!மண்டையில் அடிவிழும்

ஆலையிலே சோலையிலே
ஆலங்காடிச் சந்தையிலே
கிட்டிப் புள்ளும் பம்பரமும்
கிறிக்கியடிக்கப்
பாலாறு, பாலாறு, பாலாறு.
கண்டிப்பாக எழுத வேண்டும் என்றுதான் என் மனம் நாடுகிறது  பழய நினைவுகள் தூசி படிந்து கிடந்தது அதை தூசி தட்டியெடுத்தேன் இன்னும் வரும் பொறுமையாக படிக்க வேண்டும் சரியோ
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by Nisha on Tue 22 Sep 2015 - 16:01

சரி சரி, நல்லா தூசி தட்டி, ஒட்டடை அடிச்சு மட்டும் எழுதுங்கோ! புதுசாக பெயிண்ட் அடிக்க வேண்டாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by நண்பன் on Tue 22 Sep 2015 - 16:37

Nisha wrote:சரி சரி, நல்லா தூசி தட்டி, ஒட்டடை அடிச்சு மட்டும் எழுதுங்கோ! புதுசாக பெயிண்ட் அடிக்க வேண்டாம்.

இல்லை இல்லை பெயின்ட் அடிக்க வில்லை அநியாயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பள்ளிகால வாழ்க்கை:

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum