சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 Regist11

Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 Khan11
குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 Www10

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Sticky குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Wed 8 Jul 2015 - 9:54

First topic message reminder :

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 11698513_10153493141154390_8685540525626800595_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 11:21

தவறு என்று சுட்டிக்காட்டியது எது என்று எனக்குப் புரியவில்லை
 
இருட்டில் போகாதே 
நெருப்பைத் தொடாதே 
சேற்றில் விழையாடாதே 
மழையில் நனையாதே 
வெயிலில் போகாதே 
நாய் வருகுது 
வாகனம் வருகுது 
கடல் பக்கம் போகாதே 
மரத்தில் ஏறாதே 
மண்ணைத் தின்னாதே 
மண்ணில் வழையாடாதே 

இவைகளைத்தானே சொல்கிறீர்கள் இவைகள்தான் தவறு என்று குழந்தைக்கு சொல்கிறீர்கள் இவைகளைச் சொல்லி குழந்தைகளின் சுதந்திரத்தைப் பறிக்கிறீர்கள் என்பது புரியவில்லையா அவர்களின் பருவத்தில் அவர்களுக்குண்டான இயற்கைக் குணத்தினை கட்டுப்படுத்துகிறீர்கள் என்பது புரியவில்லையா.......

தவறுகளை விட்டு விட்டு தவறு அல்லாததைச் சொல்லி தடுக்கிறோமே..... அதுதான் எம் தவறு என்கிறேன்

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Wed 12 Aug 2015 - 12:23

என்னைப் பொறுத்த வரை நான் 90 சத வீதம் குழந்தைகளின் குறும்புகளை நான் ரசிக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha on Wed 12 Aug 2015 - 12:33

நேசமுடன் ஹாசிம் wrote:என்னைப் பொறுத்தவரை நான் வீட்டிலிருந்தால் என் குழந்தைகள் எது செய்தாலும் அதை குறும்பாகவே பார்ப்பதுண்டு யாராவது தடுத்தால் அவர்களை ஒன்று இல்லை யென்றாக்கிடுவேன் அது ஒரு தனி ரசனை

இங்கே தான் நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு மிகப்பெரிய தவறை செய்கின்றீர்கள் என நான் நிச்சயமாக் சொல்வேன். 

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது,   முன் ஏர் செல்லும் வழியில் பின் ஏர் தானாய்  செல்லும் என்பார்கள். பிள்ளைகள் வளர்ப்பில் தகப்பனின் பங்களிப்பு என்பது மிகக்குறைவானது.  ஒரே இடத்தில் இருக்கும்  தகப்பன்  கூட காலை வேலைக்கு சென்றால் இரவு வீடு வரும் நிலையில்  அதிக நேரம் வீட்டில் பிள்ளைகளோடு இருக்காத சூழலில்  பிள்ளைகள் செய்யும் குறும்புகளால்  ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் புரிவதில்லை. ஆனால்  அவர்கள்  கூட இருந்து வளர்க்கும் தாய்க்குத்தான் அதன்  கஷ்டம் புரியும்.  சின்ன வயதில்  நன்கு செல்லம் கொடுத்து விட்டு  வளர்ந்து வயதுக்கு வந்த பின் கண்டிக்க ஆரம்பிப்பார்கள்”.  தாயின் வளர்ப்பு சரியில்லை என தாயை திட்டுவார்கள்.  அவர்கள் செய்த, செய்யும் தவறு  அவர்களுக்கு  புரியதில்லை.  பிள்ளைகளை கண்டிக்க வேண்டிய இடத்தில்  அது எத்தனை கரும்பான குறும்பாயிருந்தாலும்  கண்டிக்கணும் என்பது என் அனுபவம். 

அத்தோடு எனனைப்பொறுத்த வரை.... பிள்ளைகளுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது எனும் விவாதமெல்லாம்  ஏற்பதற்கில்லை.  சரியாக கற்பித்தால் ஆறுமாதக்குழந்தையிடம் கூட எடுத்த பொருளை எடுத்த எடுத்தில் வைக்கும் படி நாம் கற்பிக்க இயலும். 

அதிலும் கடைகளில் அடுக்கி இருக்கும் துணிகளை கலைத்து விடுதல் . அலுமாரியில் அழகாக அடுக்கி இருப்பதை கீழே போட்டு  கலைத்தல் என  செய்யும் சூழலில் அவர்கள் எத்தனை வயதில் இருந்தாலும் அவர்களுக்கு தெரிந்த வகையில் அவர்களை அடுக்கி வைக்க சொல்வது தான் அவர்களுக்கான  வழிமுறை. 

ஐந்து வயதில் செய்யும் குறும்பை கண்டிக்காது  போனால் அதே குறும்பை பத்து வயதிலும் செய்வாள் 15 வயதிலும் செய்வாள்.  அவள் செய்த  குறும்பின் பாதிப்பு அவளுக்கு உணர்த்தப்படாமலே போய் விடும். 

குழந்தைகள் குறும்பு செய்தால் ரசியுங்கள். அக்குறும்புகள் யாரையும் பாதிக்காது இருக்கின்றதா? ஆரோக்கியமானதா?  சூழலுக்குகந்ததா என  உங்களை நீங்கள் நிதானித்து முடிவெடுங்கள்.  உங்கள் குழந்தை செய்யும் குறும்பு கரும்பாய் இனிப்பது போல்  அடுத்த வீட்டு குழந்தை இதை செய்தால் ரசிப்பீர்களா என யோசித்து  குழந்தைகள் செய்யும் தவறினை சுட்டி திருத்துங்கள். 

குழந்தைகளில் முதல் வழிகாட்டு, ரோல் மாடல் அவர்கள் பெற்றோர்கள் தான். ட்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha on Wed 12 Aug 2015 - 12:42

டாய்லெட்டில்  வீட்டில் இருக்கும் நோட்டுக்களை கிளித்து போடுவது படத்தில் பார்க்கும் போது ரசிக்க வைக்கும். பட் அதுவே கண்டிக்கப்படாத போது வீட்டில் முக்கியமான் டாக்யுமெண்ட்.. அண்ணா, அக்காக்களின்  பாடப்புத்தங்கள் என  ஒரு நாள் கிளிக்கப்பட்டு  டாய்லெட்டுக்குள்  போகும். அப்போது புரியும்... முதல் தடவை  குழந்தை அந்த வறை செய்யும் போது அது செய்தது தவறு என  புரிய வைக்கப்படாமல் போனதன் விளைவு இதுவென...முளையில் கிள்ளி விடாமல்  அவை முதிர்ந்து  போனபின் கிள்ளி விட முயன்றால் நடக்குமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha on Wed 12 Aug 2015 - 12:44

நண்பன் wrote:குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 11836627_914439671956614_3873522280056291508_n

இது எத்தனை ஆபத்தானது என புரியுமோ? இந்த சிறு பெண்ணின் கால்கள்  டாய்லட் குழிக்குள்  மாட்டினால் என்னாகும் என யோசித்தீர்களோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Aug 2015 - 13:17

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:என்னைப் பொறுத்தவரை நான் வீட்டிலிருந்தால் என் குழந்தைகள் எது செய்தாலும் அதை குறும்பாகவே பார்ப்பதுண்டு யாராவது தடுத்தால் அவர்களை ஒன்று இல்லை யென்றாக்கிடுவேன் அது ஒரு தனி ரசனை

இங்கே தான் நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு மிகப்பெரிய தவறை செய்கின்றீர்கள் என நான் நிச்சயமாக் சொல்வேன். 

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது,   முன் ஏர் செல்லும் வழியில் பின் ஏர் தானாய்  செல்லும் என்பார்கள். பிள்ளைகள் வளர்ப்பில் தகப்பனின் பங்களிப்பு என்பது மிகக்குறைவானது.  ஒரே இடத்தில் இருக்கும்  தகப்பன்  கூட காலை வேலைக்கு சென்றால் இரவு வீடு வரும் நிலையில்  அதிக நேரம் வீட்டில் பிள்ளைகளோடு இருக்காத சூழலில்  பிள்ளைகள் செய்யும் குறும்புகளால்  ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் புரிவதில்லை. ஆனால்  அவர்கள்  கூட இருந்து வளர்க்கும் தாய்க்குத்தான் அதன்  கஷ்டம் புரியும்.  சின்ன வயதில்  நன்கு செல்லம் கொடுத்து விட்டு  வளர்ந்து வயதுக்கு வந்த பின் கண்டிக்க ஆரம்பிப்பார்கள்”.  தாயின் வளர்ப்பு சரியில்லை என தாயை திட்டுவார்கள்.  அவர்கள் செய்த, செய்யும் தவறு  அவர்களுக்கு  புரியதில்லை.  பிள்ளைகளை கண்டிக்க வேண்டிய இடத்தில்  அது எத்தனை கரும்பான குறும்பாயிருந்தாலும்  கண்டிக்கணும் என்பது என் அனுபவம். 

அத்தோடு எனனைப்பொறுத்த வரை.... பிள்ளைகளுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது எனும் விவாதமெல்லாம்  ஏற்பதற்கில்லை.  சரியாக கற்பித்தால் ஆறுமாதக்குழந்தையிடம் கூட எடுத்த பொருளை எடுத்த எடுத்தில் வைக்கும் படி நாம் கற்பிக்க இயலும். 

அதிலும் கடைகளில் அடுக்கி இருக்கும் துணிகளை கலைத்து விடுதல் . அலுமாரியில் அழகாக அடுக்கி இருப்பதை கீழே போட்டு  கலைத்தல் என  செய்யும் சூழலில் அவர்கள் எத்தனை வயதில் இருந்தாலும் அவர்களுக்கு தெரிந்த வகையில் அவர்களை அடுக்கி வைக்க சொல்வது தான் அவர்களுக்கான  வழிமுறை. 

ஐந்து வயதில் செய்யும் குறும்பை கண்டிக்காது  போனால் அதே குறும்பை பத்து வயதிலும் செய்வாள் 15 வயதிலும் செய்வாள்.  அவள் செய்த  குறும்பின் பாதிப்பு அவளுக்கு உணர்த்தப்படாமலே போய் விடும். 

குழந்தைகள் குறும்பு செய்தால் ரசியுங்கள். அக்குறும்புகள் யாரையும் பாதிக்காது இருக்கின்றதா? ஆரோக்கியமானதா?  சூழலுக்குகந்ததா என  உங்களை நீங்கள் நிதானித்து முடிவெடுங்கள்.  உங்கள் குழந்தை செய்யும் குறும்பு கரும்பாய் இனிப்பது போல்  அடுத்த வீட்டு குழந்தை இதை செய்தால் ரசிப்பீர்களா என யோசித்து  குழந்தைகள் செய்யும் தவறினை சுட்டி திருத்துங்கள். 

குழந்தைகளில் முதல் வழிகாட்டு, ரோல் மாடல் அவர்கள் பெற்றோர்கள் தான். ட்
அக்கா நீங்க சொல்றது சரிதான் இதைத்தான் எங்கள் வீட்டுத்தலைவியும் சொல்லி சண்டைபிடிப்பார் வாப்பா வந்தாத்தான் பிள்ளைகள் கெட்டுப்போகிறது என்று சொல்லுமளவு சுதந்திரமாக விட வேண்டும் என்று நினைப்பவன் நான் என் வழியில் அதை தவறாக கொள்ளவே மாட்டேன் ஏன்னா குழந்தை அதை இயந்திரமாக்காமல் இருங்கள் என்று சொல்லுகிறேன் அதற்கும் இறைவன் சிந்தனா சக்தியை வைத்துப் படைத்திருக்கிறான் அதற்கு நாம் தடை விதித்தல் கூடாது என்கிறேன் 

என் குழந்தை மாத்திரமல்ல எக்குழந்தையானாலும் அவ்வாறுதான் நான் பார்ப்பதுண்டு ஒரு குழந்தையைப் பார்த்து படி படி என்று கூட நச்சரிப்பதில்லை காரணம் படிப்பில் உள்ள நண்மைகளை எடுத்துச் சொல்வேன் இப்போது படிக்காவிட்டால் காலத்தை தவறவிட்டால் திரும்ப வராது என்பதை பக்குவமாகச் சொல்வேன் நான் சொல்கிறேன் என்பதற்காக அவர்கள் படித்தாலோ எதையும் செய்தாலோ அவர்களின் சுய சிந்தனையில் புத்தியில் தங்குவதில்லை என்று பார்க்கிறேன் 

சொல்ல வேண்டிய விடயங்களை சொல்லும் விதத்தில் சொல்லித் தந்தாலே போதுமானது நமது வீடுகளில் பிள்ளைகளைப் படுத்தும் பாட்டை மாற்றவேண்டும் என்பதுதான் எனது கருத்தும் அவாவும்

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha on Wed 12 Aug 2015 - 13:56

நண்பன் wrote:குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 11180640_914439028623345_2360105549112425522_n

நண்பன் wrote:குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 11836671_914439045290010_2773387390627431614_n

படிப்பு, குறும்புத்தனம், குழப்படி மூன்ரையும் வெவ்வேறு விதமாய் பார்க்கணும் ஹாசிம்! படிப்பை திணிக்கக்கூடாது. நான் என் பசங்களையும் படிப்பு விடயத்தில் என் சுய விருப்பு வெறுப்புக்களை திணித்ததில்லை.

குறும்புகள் யாரையும் புண்படுத்தாதவாறு எதற்கும் பாதிப்பு இல்லாத வாறு செய்தால் நானும் ரசிப்பேன்.

குழப்படி செய்யும் பிள்ளைகளுக்கு அவர்கள் தவறு உணர்த்தப்படணும். மேலே இருக்கும் படங்கள் இரண்டும் எத்தனை ஆபத்தானது தெரியுமா?டாய்லெட்டில் பேப்பர்களை போடுதல் அவர்களுக்கு நேரடி பாதிப்பில்லை எனினும். இந்த மாதிரி உயரத்தில் ஏறி மாட்டிப்பது அவர்களுக்கே ஆபத்தாய் முடியக்கூடியது.

அடுப்பில் சமையலில் இருக்கும் நேரம் நாம் இல்லைஎன அந்த குழந்தை இப்படி ஏறி நின்றாலோ... அவன் தொங்கும் வேகத்துக்கு அந்த கப்போர்ட்டின் தட்டு கழண்டு கீழே விழுந்தாலோ, அதனுள் கத்தி போன்ற கூரான ஏதேனும் இருந்தாலோ என்னாகும்.?

அதை விட அந்த பிரிஜ்ஜில் மேலிருக்கும் குழந்தையின் கீழே தரை மார்பிள் எனும் போது எவரேனும் கவனிக்காது போனால் மார்பிள் தரையில் விழுந்தால் என்னாகும்.

எதையும் வருமுன் காக்க வேண்டும். வந்தபின் ஐயோன்னாலும் அம்மான்னாலும் ஆகாதுப்பா. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட சில காரியங்கள் உண்டு. ரசிக்கத்தக்க குறும்புகள் பேச்சுக்கள் பல உண்டு. ஆனால் அனைத்தும் அப்படியானதல்ல.
குறும்பு எனும் பெயரில் பெரியவர்களை கிண்டல் செய்வது, வயதுக்கு மரியாதை கொடுக்காமல் பேசுவது ஆரம்பத்திலேயே கண்டிக்கப்படணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by பானுஷபானா on Wed 12 Aug 2015 - 14:13

குழந்தைகலின் குறும்பை ரசிக்க்லாம். ஆனால் ஆபத்தான குறும்பை ரசிக்க முடியுமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha on Wed 12 Aug 2015 - 14:29

சரியான் கேள்வி பானு!

அவங்க குட்டீஸ் பெயிண்ட் டாப்பாவை எடுத்து வீட்டில் தரை, சுவர் என்ன அவங்க மூஞ்சியிலயும் வரைந்து வைக்கணும். அது கரும்புகளின் குறும்பென ரசிக்க தெரிந்த இந்த பெரியவங்களிடமே துடைப்பைங்கட்டையையும் துணியையும் கொடுத்து வீடு முழுக்க துடைச்சி எடுங்க என விடணும். ஒரு நாள் விட்டால் புரியும் .. ரசிப்பும் , ருசிப்பும். ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by பானுஷபானா on Wed 12 Aug 2015 - 15:03

Nisha wrote:சரியான் கேள்வி பானு!

அவங்க குட்டீஸ் பெயிண்ட் டாப்பாவை எடுத்து  வீட்டில் தரை, சுவர் என்ன அவங்க மூஞ்சியிலயும் வரைந்து வைக்கணும். அது கரும்புகளின் குறும்பென ரசிக்க தெரிந்த இந்த பெரியவங்களிடமே துடைப்பைங்கட்டையையும் துணியையும் கொடுத்து வீடு முழுக்க துடைச்சி எடுங்க என விடணும். ஒரு நாள் விட்டால் புரியும் .. ரசிப்பும் , ருசிப்பும். ஹாஹா!  

அதானே வேலை செய்ய விட்டா அடுத்து குறும்பை கரும்பென எப்படி ரசிப்பார்னு பார்க்கனும்... நாளெல்லாம் பிள்ளைகளுடன் இருக்கும் தாய்க்கு தான் தெரியும் ...எப்படி கஷ்டப்படுறாங்கனு...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by *சம்ஸ் on Wed 12 Aug 2015 - 15:27

வாவ் அசத்தல் என் மனதில் எதுவெல்லாம் இருந்ததோ அதை அனைதையும் அருமையாக எழுதி விளக்கி உள்ளீர்கள் நிஷா. 

குறும்பும் கரும்பும் புரிந்தால் அனைவருக்கும் நன்று.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 13 Aug 2015 - 8:44

Nisha wrote:
நண்பன் wrote:குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 11180640_914439028623345_2360105549112425522_n

நண்பன் wrote:குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 11836671_914439045290010_2773387390627431614_n

படிப்பு, குறும்புத்தனம், குழப்படி   மூன்ரையும் வெவ்வேறு விதமாய் பார்க்கணும் ஹாசிம்! படிப்பை திணிக்கக்கூடாது. நான் என் பசங்களையும் படிப்பு விடயத்தில் என் சுய விருப்பு வெறுப்புக்களை திணித்ததில்லை.

குறும்புகள்  யாரையும் புண்படுத்தாதவாறு எதற்கும் பாதிப்பு இல்லாத வாறு செய்தால் நானும் ரசிப்பேன்.

குழப்படி செய்யும் பிள்ளைகளுக்கு அவர்கள் தவறு உணர்த்தப்படணும்.  மேலே இருக்கும் படங்கள் இரண்டும் எத்தனை ஆபத்தானது தெரியுமா?டாய்லெட்டில்  பேப்பர்களை போடுதல்  அவர்களுக்கு நேரடி பாதிப்பில்லை எனினும். இந்த மாதிரி உயரத்தில் ஏறி மாட்டிப்பது அவர்களுக்கே ஆபத்தாய் முடியக்கூடியது.  

அடுப்பில் சமையலில் இருக்கும் நேரம்  நாம் இல்லைஎன  அந்த குழந்தை இப்படி ஏறி நின்றாலோ... அவன்  தொங்கும் வேகத்துக்கு அந்த  கப்போர்ட்டின் தட்டு கழண்டு கீழே விழுந்தாலோ, அதனுள் கத்தி போன்ற கூரான ஏதேனும் இருந்தாலோ என்னாகும்.?

அதை விட அந்த பிரிஜ்ஜில் மேலிருக்கும்  குழந்தையின் கீழே தரை மார்பிள் எனும் போது  எவரேனும் கவனிக்காது போனால்  மார்பிள் தரையில் விழுந்தால் என்னாகும்.

எதையும் வருமுன் காக்க வேண்டும். வந்தபின் ஐயோன்னாலும் அம்மான்னாலும் ஆகாதுப்பா.  பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட சில காரியங்கள் உண்டு.  ரசிக்கத்தக்க குறும்புகள் பேச்சுக்கள் பல உண்டு. ஆனால் அனைத்தும் அப்படியானதல்ல.
குறும்பு எனும் பெயரில் பெரியவர்களை  கிண்டல் செய்வது, வயதுக்கு மரியாதை கொடுக்காமல்  பேசுவது ஆரம்பத்திலேயே கண்டிக்கப்படணும்.
அக்கா இந்தப் புகைப்படங்களிலேயே அதிகமான கருத்துகள் இருக்கிறது இவ்வாறான புகைப்படங்கள் மேலைத்தேய நாடுகளிலேயே காணக்கிடைக்கிறது எம்போன்ற ஆசிய நாடுகளில் இவ்வாறு பிள்ளைகள் செய்வதே இல்லை அது வரை யாரும் பார்த்திருப்பதுமில்லை 

இங்கு கவனித்தீர்களானால் அத்தனை சுதந்திரம் பிள்ளைகளுக்கு கொடுத்திருக்கிறார்கள் அதனால்தான் அந்த நாடுகளில் அதிகமான கண்டுபிடிப்புகளும் விஞ்ஞானிகளும் உருவாகியிருக்கிறார்கள் எம்மால் அடக்கப்படும் போது அடங்கியே போய்விடுவார்கள் 

இவ்வளவு சொல்கின்ற நான் கூட குழந்தை ஒரு ஆபத்தான நிலைக்கு செல்கின்ற போது விட்டுவிட்டு பார்த்திருப்பதில்லை அத்தனையையும் ரசியுங்கள் என்றும் சொல்லவில்லை ஆபத்து நிலையை உணர்த்தி குறும்புகளை ரசிக்கலாமே என்பது எனது வாதம் எம் சமுகங்களில் அவ்வளவு கட்டுப்பாடுகளை நான் காண்கிறேன் அதனால்தான் சொல்கிறேன்

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 13 Aug 2015 - 8:52

பானுஷபானா wrote:குழந்தைகலின் குறும்பை ரசிக்க்லாம். ஆனால் ஆபத்தான குறும்பை ரசிக்க முடியுமா?
கண்டிப்பாக ரசிக்கலாம் ஆபத்து எது என்பது உங்களுக்குத் தெரிகிறது ஆபத்திலும் கற்றுக்கொள்ளத் துடிக்கிறான் குழந்தை அவனுக்கான பாதுகாப்பினை நீங்கள் ஏற்படுத்துங்கள் அது தாயாகிய தந்தையாகிய  உங்களின்  வேலை குழந்தையை ஏன் குற்றம் சொல்கிறீர்கள் 

அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன் இந்தியாவில் இடம் பெற்றது நீங்களும் பார்த்திருப்பீர்கள் சிறு வயதில் காலில் சக்கரம் பொருத்தி மிகவும் உயரம் குறைந்த தடுப்பகளின் கீழ் நெடு தூரும் கால்களை விரித்து பயணித்து சாதனை புரிந்திருக்கிறான் சிறுவன் ஒருவன் அவனை அவனுடைய பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே அச்சம் தவிர்த்து காலில் பொருத்த சக்கரம் வாங்கிக்கொடுத்து அவனின் இஷ்டத்திற்கு விட்டிருக்காவிட்டால் அவனால் சாதித்திருக்க முடியுமா???

எதை எடுத்தாலும் பயம் காட்டி குழந்தைகளை கோழைகாளக்கிக்கொண்டிருக்கிறீர்களே அதுதான் வேண்டாம் என்கிறேன்

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 13 Aug 2015 - 8:58

பானுஷபானா wrote:
Nisha wrote:சரியான் கேள்வி பானு!

அவங்க குட்டீஸ் பெயிண்ட் டாப்பாவை எடுத்து  வீட்டில் தரை, சுவர் என்ன அவங்க மூஞ்சியிலயும் வரைந்து வைக்கணும். அது கரும்புகளின் குறும்பென ரசிக்க தெரிந்த இந்த பெரியவங்களிடமே துடைப்பைங்கட்டையையும் துணியையும் கொடுத்து வீடு முழுக்க துடைச்சி எடுங்க என விடணும். ஒரு நாள் விட்டால் புரியும் .. ரசிப்பும் , ருசிப்பும். ஹாஹா!  

அதானே வேலை செய்ய விட்டா அடுத்து குறும்பை கரும்பென எப்படி ரசிப்பார்னு பார்க்கனும்... நாளெல்லாம் பிள்ளைகளுடன் இருக்கும் தாய்க்கு தான் தெரியும் ...எப்படி கஷ்டப்படுறாங்கனு...

அந்த வகையில் பார்த்தால் என்வீட்டுக் குழந்தைகள் பாக்கியசாலிகள் தான் வீட்டில் பெயின்ட் என்ன தாரினை ஊற்றிவிட்டாலும் கோபப்படுவதில்லை தொடைத்துவிடுங்கள் அது குழந்தை என்றுதான் பார்க்கிறோம் அவ்வாறு கொடுத்துப்பாருங்கள் அதுவெ ரசனையாக மாறி நாளை உங்கள் குழந்தை உலகம் போற்றும் ஆட்டிஸ்டாகவும் ஆகலாம் 

அற்ப சடப்பொருட்களுக்காக குழந்தைகளின் சுதந்திரத்தினை தடுக்காதீர்கள் பணம் கொடுத்தால் அத்தனையும் பெற்றிடலாம் பெறுமதி மதிக்க முடியாத குழந்தை மனம் அவனின் வீரம் அவனின் எதிர்காலம் அவனின் திறமை மழுங்கடிக்கப்பட்டால் எத்தனை கொடுத்தாலும் வாங்கிவிடவே மடியாது அம்மையர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் தாயி என்ற இடத்திலிருந்து குழந்தையாக மாறிப்பாருங்கள் நான் சொல்வதிலும் அர்த்தமிருக்கிறது என்பது புரியும்

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha on Thu 13 Aug 2015 - 10:10

நான் கனவுலகில் கற்பனையில்  ஜீவிக்க விரும்புவதில்லை.  என் பிள்ளைகளையும் அப்படி வளர்ப்பதில்லை. உலக நிஜம், வாழ்வில் நியதி இதுவென  புரியவைத்தே வளர்த்தேன். 

நீங்கள் சொன்ன காலில் சக்கரம் கட்டி ஓடிய சிறுவனின் சாதனை ஆபத்தானதென எனக்கு தெரியவில்லை. இங்கே  நடக்க தெரிந்தபின்  இம்மாதிரி ஸ்கேட்டிங்க் ஓடுவது சாதாரணம்.  பிறந்து மூன்று மாதமான குழந்தை நீச்சல் பழக்குவதும் சாதாரணம்.  என் பிள்ளைகள்  இரண்டு வயதில் ஸ்கேட்டிங்க்  ஓடுவாங்க..  முதலில் பாதுகாப்பாய் முழங்கால், கைகள் , ஹெல்மெட் எனத்தான் பழக்குவோம். அதைவிட  இங்கே தரைகள்  சமதரை என்பதனால் பயமில்லை. 

நாம் சாதனைக்கும்,  தைரியத்துக்கும்,  தன்னம்பிக்கைக்கும், குழப்படி எனும் குறும்புத்தனத்துக்கும்  வித்தியாசம் தெரியாமல் பேசிட்டிருக்கோம் என நினைக்கின்றேன். 

என்னைப்பொறுத்தவரை எல்லாமே ஒரு எல்லையோடு இருக்கணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by கமாலுதீன் on Thu 13 Aug 2015 - 12:15

எதிலும் சுதந்திரமான கட்டுப்பாடு வேண்டும். குழந்தை வளர்ப்பில் அது மிக மிக முக்கியம். எதற்கும் ஒரு எல்லை உண்டு. அதனை பிள்ளைக்ளுக்கு அவ்வப்போது அறிவுறுத்த வேண்டும். அந்த எல்லைக்குள் அவர்கள் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் செயல்பட விட்டுவிடவேண்டும், அதுதான் சுதந்திரம். எல்லைத் தாண்டப்படும் போது அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதுதான் கட்டுப்பாடு. கட்டுப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் கண்காணிப்பு மிக அவசியம். பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்க்களுக்கு மிக மிக அவசியம் நிதானமும் பொறுமையும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by பானுஷபானா on Thu 13 Aug 2015 - 13:07

நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு... அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Thu 13 Aug 2015 - 17:14

பானுஷபானா wrote:நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு... அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

நான் வருவன் இருங்க வாரன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha on Thu 13 Aug 2015 - 17:39

கமாலுதீன் wrote:எதிலும் சுதந்திரமான கட்டுப்பாடு வேண்டும். குழந்தை வளர்ப்பில் அது மிக மிக முக்கியம். எதற்கும் ஒரு எல்லை உண்டு. அதனை பிள்ளைக்ளுக்கு அவ்வப்போது அறிவுறுத்த வேண்டும். அந்த எல்லைக்குள் அவர்கள் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் செயல்பட விட்டுவிடவேண்டும், அதுதான் சுதந்திரம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி   

எல்லைத் தாண்டப்படும் போது அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதுதான் கட்டுப்பாடு. சலூட்   சலூட்   சலூட்

கட்டுப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் கண்காணிப்பு மிக அவசியம். பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்க்களுக்கு மிக மிக அவசியம் நிதானமும் பொறுமையும்.

அருமையான புரிதல் !

அதீத கண்டிப்பும் வேண்டாம், கண்மூடித்தனமான கண்டிப்பும், ஏன் பாசமும் கூட வேண்டாம். அன்பும் அரவணைப்புடனான சுதந்திரம்,  அது அவர்கள் தன்னம்பிக்கையை வளர்ப்பதாய் இருக்கும் படி  கண்காணித்தாலே போதும். 

என் பிள்ளைகள் சின்ன வயதில்  மரத்திலோ, எதன் மீதோ ஏறி விட்டு இறங்க முடியாமல்  அழுதால் ஐயோன்னு ஓடிப்போய் இறக்கி விடவே மாட்டேன்.  எப்படி ஏறினாயோ அப்படியே இறங்கி வா என  சொல்வேன். அதே நேரம் அவ்விடம் விட்டும் போகமாட்டேன்.  அதன் அருகிலேயே நின்று   விழுந்து விடாமல் இருக்க அப்படி விழுந்தால்   அடிபடாமல் இருக்க என்ன செய்யணுமோ அதை செய்வேன். 

அதே நேரம் சுவரில் வரைவதை வரவேற்கவில்லை.  அவர்களுக்கு என தனி பிளக் போர்ட் வாங்கி கொடுத்தோம்.  அதில் வரையை சொல்லி பழக்கினோம். எங்க வீட்டில் எப்படி இருந்தாலும் இன்னொரு வீட்டில் போய் அதை இதை உருட்டி.. விழுத்தக்கூடாதுன்னு  கண்டிப்பேன்.  உதாரணமாக கரண்ட் பாக்ஸில்  விரல் விடுவது. பேனை  மாட்டுவது என் செய்தால் உடனே அவ்விடத்திலேயே விரலில்  சின்ன அடி போடுவேன். ஓரிரு தடவை செய்தபின்  மீண்டும் அப்படி செய்தால் அம்மா அடிப்பாள் என்பது மனதில் பதிந்து விடும். 

அடுப்பை திருகி விட்டால் அதுக்கு கண்டிப்பேன்.  டாய்லட்டில்  எதையேனும் கொண்டு வீசினால் நிச்சயம் உடனே கண்டிப்பு உண்டு.  அதே நேரம்.. விசிஆரில்  பற்றரிகளை போடுவது பிரெட் துண்டுகளை போடுவது என செய்தால்  சிரிப்போம்.ரசித்திருக்கோம். 

பேச்சிலும் அப்படித்தான்.. பெரியவர்களை மட்டுமல்ல சிறியவர்களையும்.. உடல் ஊனமுற்றவர்கள், வயதானவர்களை மரியாதைக்குறைவாக பேசினாலோ கிண்டலடித்தாலோ உடனே என் கண்டிப்பு உண்டு. 

சின்ன வயதில் அப்படி வளர்த்ததால் இன்னிக்கு வளர்ந்த பின்  அனைவராலும் நேசிக்கப்படும் விரும்பப்படும்  பிள்ளைகளாக இருக்காங்க.

தன்னம்பிக்கையும் தைரியமும் பிள்ளைகளுக்கு அவசியம்.  அவை கண் மூடித்தனமாய் இருக்க கூடாது.  உதாரணமாக  மின்சாதனக்களை  கழட்டி அக்கு வேறு ஆணி வேறாக்கி ஆராய்வது...போன்றவைகளை ஊக்குவிக்கணும். அதுவே.. மின் இணைப்பில் இல்லாத போது  செய்கின்றாரா என கண்காணிக்கணும். 

வரைதலை ஊக்குவிக்கணும். அதற்கென  அவர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்து அங்கே வரைய சொல்லணும். அதை அனைவரும் பாராட்டும் படி ஊக் குவிக்கணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha on Thu 13 Aug 2015 - 17:45

வெளி  நாட்டு பிள்ளைகளை இம்மாதிரி ஊக்குவிப்பதால் சாதனைகளும் கண்டுபிடிப்புக்கள் அதிகம் என சொல்வது.....  நம் நாட்டு பிள்ளைகளும் சாதிக்கின்றார்கள். கண்டுபிடிப்புக்களை நிகழ்த்துகின்றார்கள். ஆனால் அவை விளம்பரப்படுத்த வெளிப்படுத்த வாய்ப்புக்கள் இல்லை.  பலருக்கு தெரிவதில்லை. 

வெளி நாடுகள் வளர்ந்த நாடுகளில் தும்பினால் இருமினால் கூட சாதனை என கின்னஸில்  போட்டு பாராட்டுவாங்க.. அவங்களுக்கு அந்த ரெலண்ட் விடயம் தெரியும்.. 

நம் பகுதியில் அப்படி அல்ல.... நம்மோட பல க்ண்டு பிடிப்புக்களுக்கு உரிமையாளர்கள் இன்றைக்கு அமெரிக்கர்கள் தான். மஞ்சளுக்கும் வேம்புக்கும்  உரிமையாளர்களாய் ஆனதே அதற்கு உதாரனம்.  அரிசியும்  அப்படித்தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Thu 13 Aug 2015 - 17:50

குழந்தை படத்தைத்தான் போட்டேன் குழந்தையை எப்படி வளர்க்கனும் எப்படி கண்டிக்கனும் எப்படி ரசிக்கனும் என்று அணுவணுவாக கற்றுத்தருகிறீர்களே தாயே
ம்ம் மிக்க சந்தோசம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Nisha on Thu 13 Aug 2015 - 17:53

ஹேஹே!@

என்ன கிண்டலா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Thu 13 Aug 2015 - 17:54

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 11873637_919651594768755_7871790701728604712_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..

Post by நண்பன் on Thu 13 Aug 2015 - 17:55

Nisha wrote:ஹேஹே!@

என்ன கிண்டலா?

நோ நோ நான் எதிர் பார்க்கவே இல்லை இப்படி வரும் என்று அருமையான கருத்துக்கள் பிடித்திருக்கு ரொம்ப பிடித்திருக்கு

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 11855636_919651781435403_8881203000051795446_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by நண்பன் on Thu 13 Aug 2015 - 17:55

குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம். - Page 3 11203700_919651914768723_4693165605156248388_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum