சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா? Regist11

Latest topics
» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:06

» ஜூன் மாதம் வந்தால் எனக்கு இரண்டு கவலை...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:02

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:01

» சண்டைன்னு வந்திட்டா என் கணவரை நல்லா மொத்திடுவேன்...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:00

» மனசு பேசுகிறது : முகிலினி
by சே.குமார் Sun 2 Jun 2019 - 12:55

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by பானுஷபானா Mon 27 May 2019 - 13:13

.
மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா? Khan11
மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா? Www10

மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Go down

Sticky மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by சே.குமார் on Wed 9 Sep 2015 - 21:55

மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா? Sivaji

க்கள் வரிப்பணத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் தேவையா என்பதுதான் இன்னைக்குமுக்கியமான விவாதமா முகநூல், டுவிட்டர் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் இருக்கு. எங்க அறையில் கூட இது குறித்து பயங்கர விவாதம் நடந்தது. ஆம்... மணிமண்டபம் தேவையா என்று நாமும் விவாதிப்போமே... 

நம் நாட்டில் இதுவரை கட்டப்பட்ட மணிமண்டபங்கள் எல்லாம் என்ன நிலையில் இருக்கு என்பதை நாம் அறிவோம். எங்கள் காரைக்குடியில் கூட கண்ணதாசன் மணிமண்டபம், கம்பன் மணிமண்டபம் எல்லாம் இருக்கு. விழாக்களின் போது மட்டுமே அவை ஜொலிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதே போல் தலைவர்களின் சிலைகளை மூலைக்கு மூலை வைத்திருக்கிறோம். அவர்களின் பிறந்தநாள்... இறந்தநாளில் மட்டுமே மாலைகளில் சிரிப்பார்கள். மற்ற நாட்களில் எல்லாம் குருவிகளின் எச்சத்தை சுமந்து நிற்பார்கள். இதில் என்ன கொடுமை என்றால் சிலைகளை வைத்து நாம் சாதியை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திரமாக வாழ்ந்த பல தலைவர்களை இப்போது சிலைகளாய் கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறோம். இதில் சிவாஜியை கடல்கரையில் இருந்து தூக்குங்கள் என்று வேறு சொல்லிவிட்டார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்... அரசு சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று சொல்லியிருப்பது சரியா தவறா என்பதெல்லாம் இங்கு விவாதம் இல்லை மக்கள் வரிப்பணத்தில் கட்டுவது சரியா என்பதே கேள்வி. அதிமுக அரசு சென்ற முறையே இதற்காக இடம் ஒதுக்கியது என்றும் அதன் பின்னான திமுக அரசு அதை வாடகைக்கு விட்டுவிட்டது என்றும் படித்த ஞாபகம். இப்போது தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை எல்லாம் மறக்கும் முகமாக முதல்வர் அறிவிக்கும் திட்டங்களில் இதையும் மீண்டும் அறிவித்திருக்கிறார்.

சிவாஜி...

மிகச் சிறந்த நடிகர்... சிம்மக் குரலோன்.... நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த கலையார்வம் மிகுந்த அர்ப்பணிப்புக் கலைஞன்... வரலாற்று நாயகர்களை எல்லாம் திரையில் காட்டியவர்... கட்டபொம்மன், இராஜராஜ சோழன், வ.உ.சிதம்பரநாதன், வீரசிவாஜி என எல்லாரையும் திரையில் நம் கண் முன்னே நிறுத்தியவர். இன்றும் வரலாற்று நாயகர்கள் என்றாலே நம் மனக்கண்ணில் வருவது சிவாஜிதான்.

ஒருவரின் நடிப்புத் திறமைக்காக மணிமண்டபம் கட்ட வேண்டுமா? ஆம்... வேண்டும் என்றுதானே பிரபு கேட்டார்.  சினிமாவில் சிறப்பாய் நடித்த ஒரு கலைஞன்... தான் சம்பாதித்து சேர்த்த சொத்தில் ஏழைகளுக்கு உதவியிருக்கலாம் அது நமக்கு தெரிய வேண்டியதில்லை... அவரும் சொல்ல வேண்டியதில்லை... ஏன்னா ஒரு கை செய்வது இன்னொரு கைக்கு தெரியாமல் இருப்பதுதான் உதவி... தம்பட்டம் அடித்துக் கொள்வது உதவியல்ல. எத்தனையோ பேர் வெளியில் தெரியாமல் உதவிக் கொண்டிருக்கிறார்கள்... ஆனால் சினிமா நாயகர்கள் எல்லாருமே பெரும்பாலும் நான் இதைச் செய்தேன்... அதைச் செய்தேன்னு விளம்பரம் செய்யத்தான் செய்கிறார்கள். ஏன் ஒரு பாடாவதி ரசிகன் குடும்பத்தை விட்டுட்டு இவனுக்காக செத்தாக்கூட அவனோட வீட்டுக்குப் போயி பணம் கொடுத்து போட்டோ எடுத்து விளம்பரம் தேடிக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த உதவி விஷயத்தில் விஜயகாந்த் பெரும்பாலானவைகளை வெளியில் தெரியாமல் செய்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது ஒரு சின்ன விஷயம் செய்தாலும் அவரது கட்சிக்கான முகநூல் பக்கத்தில் நான் செய்தேன்... நான் செய்தேன்... என முரசு அடித்து அறிவிக்கிறார்கள். அஜீத் செய்வதாகச் சொல்கிறார்கள்... எல்லாவற்றிற்கும் மேலாக ராகவா லாரன்ஸ் சமீபத்தில் தனது படத்துக்காக கிடைத்த பணத்தை மக்களுக்காக மேடையில் வைத்தே கொடுத்து அதற்காக இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து கலாமின் காலடியில் என்ற அமைப்பின் மூலமாக சேவை செய்யப் போவதாகத் தெரிவித்தார். இதில் அவர் விளம்பரம் தேடிக்கொண்டதாகத் தெரியவில்லை. விஷயம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது.

பாருங்க... மணிமண்டபத்தைப் பற்றி பேச வந்துட்டு பேச்சு அங்கிட்டும் இங்கிட்டுமாப் போயிருது... சிவாஜி தனது குடும்பத்துக்கு தேவையான சொத்தைத் சேர்த்து வைத்துவிட்டுப் பொயிட்டார். எந்த ஏழைக்காவது உதவணுமின்னு டிரஸ்ட் ஆரம்பிச்சி வச்சிருக்காரா...? எனக்குத் தெரிந்தவரை இல்லை என்றுதான் நினைக்கிறேன்... அப்படியிருந்தால் சொல்லுங்கள்.  அரசியலில் வந்து ஆட்சியைப் பிடிக்கும் ஆசையும் அவருக்கு வர தனிக்கட்சி எல்லாம் ஆரம்பித்தார். கஞ்சிக்கு இல்லாதவனுக்கு உதவவா அரசியல்ல இறங்கினார்... இப்படி மக்களுக்கு எதுவுமே செய்யாத ஒரு மனிதருக்கு மக்களின் வரிப்பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

மக்களுக்காகவே உழைத்து மறைந்த பலர் இருக்கும் போது ஒரு கலைஞனுக்கு ஏன் மணி மண்டபம்? மக்களெல்லாம் கேப்பை சாப்பிடுகிறார்கள் என்று தன் தாயையும் கேப்பைதான் சாப்பிட வேண்டும் என்று சொன்ன காமராஜர், மக்களுக்ககாகவே வாழ்ந்த ஜீவா, கக்கன்... இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர்தான் என்றாலும் தனது குடும்பத்தினருக்கு சலுகை அளிக்காத, அனுபவிக்க விடாத அப்துல் கலாம் இப்படி எத்தனையோ மனிதர்கள் மக்கள்... மக்கள் என்று இருந்தார்கள்... ஆனால் சிவாஜி அப்படி இருந்தாரா... அவருக்கு மக்கள் வரிப்பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

மணிமண்டபம் கட்டப்படும் என்று சொன்ன நம்ம முதல்வர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்று வழக்கு நடந்து தீர்ப்பும் வந்து மீண்டும் வழக்கு தொடரப்பட்டிருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு செய்தவர் ஏன் தன் சொந்தப் பணத்திலேயே கட்டக்கூடாது?  கல்யாண் ஜீவல்லரிக்கு மட்டுமே வாங்க... தங்கம் வாங்கன்னு மக்களை ஏமாற்றும் விளம்பரத்தில் நடிக்கும் பிரபுவிடம் அரசு கொடுத்த இடத்தில் மணிமண்டபம் கட்ட பணம் இல்லையா என்ன? இந்த வேஷ்டி சட்டையில் எங்க சிவாஜி தாத்தா மாதிரியே இருக்கீங்கன்னு பேசும் விக்ரம் பிரபு கூட இன்னைக்கி சினிமாவுல சம்பாதிக்கத்தானே செய்கிறார். ஏன் பிரபுவின் அண்ணன் ராம்குமார் சிவாஜி பிலிம்ஸ் மூலமாக படங்களை தயாரித்துக் கொண்டுதானே இருக்கிறார்.  கோடிகளை வைத்திருக்கும் குடும்பம் இருக்க மக்கள் வரிப் பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

மணிமண்டபம் கட்டப்படும் என்று சொன்னதும் கமல், ரஜினி, பிரபு என ஆளாளுக்கு அம்மாவுக்கு நன்றி சொல்றாங்க. தமிழக திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் தலைவராக போட்டிபோடும் நடிகர்கள் மணிமண்டபம் கட்ட ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டாலுமே போதுமே மிக அழகான, நல்லதொரு மணிமண்டபத்தைக் கட்டிவிடலாமே? சிவாஜியைப் பார்த்துத்தான் நடிக்கக் கற்றுக் கொண்டேன் என்றும்... தமிழ் சினிமாவின் பிதாமகன் அவர் என்றும்...  சொல்லும் நடிகர்கள் எவருமே இதற்கு பணம் நாங்கள் போடுகிறோம் என்று சொல்லவில்லையே ஏன்? வரியே கட்டாமல் ஏய்க்கும் இவர்களுக்கு அன்றாடம் சம்பாரித்து அதற்கும் வரிக்கட்டும் குப்பனும் சுப்பனும் கொடுக்கும் பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

நாட்டுக்காகவோ நாட்டு மக்களுக்காகவோ உழைத்தவர்களுக்கு வரிப்பணத்தில் மணிமண்டபம் கட்டப்படுமேயானால் அதை கரம் குப்பி வரவேற்கலாம்... ஆனால் சினிமா என்னும் கவர்ச்சி ஊடகத்தில் ஆடிப்பாடி சம்பாதித்த ஒருவருக்கு மணிமண்டபம் கட்ட மக்கள் வரிப்பணம் பயன்படுத்தப்படுமேயானால் அதை எப்படி வரவேற்பது?  இதை அரசு சொல்லியிருப்பதுதான் வேடிக்கை... என்ன செய்வது கூத்தாடிகள்தானே நம்மை ஆள்கிறார்கள். நடிகர்களையும் ஒரு குடுபத்தையும் குளிர்விக்க செய்யும் இந்தச் செயலால் யாருக்கு லாபம்? நாட்டில் ஆயிரத்தெட்டு தேவைகள் அடிப்படை மக்களுக்கு இருக்க ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த ஒருவருக்கு மணிமண்டபம் கட்டி என்னவாகப்போகிறது? 

சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சி என்று செய்தி போடுகிறார்கள்... உண்மையில் எத்தனை பேர் மகிழ்ந்திருப்பார்கள்... குடும்பத்தை விட்டு கூத்தாடிகளை தலையில் தூக்கி வைத்து ஆடும் அந்த ரசிகர்கள் மட்டுந்தான் நம்ம வரிப்பணத்தில் கட்டுறாங்களே என்று சிந்திக்காமல் வெடிவெடித்து மகிழ்ந்திருப்பார்கள். சரி... நாளை மணிமண்டபம் கட்டியதும் எல்லாரையும் உள்ளே விடுவானுங்களா என்ன..? தலைவருக்கு மணிமண்டபம் என்று குதிக்கும் இவர்கள் டாஸ்மார்க் சரக்கை உள்ளே இறக்கிக் கொண்டு அழுக்கடைந்த உடையோடு போனால் காவலாளி அடித்து விரட்டுவான். இவன் பணத்தில் கட்டிவிட்டு இவனையே உள்ளே விடமாட்டானுங்க... அதுதானே நடக்கும்... அப்புறம் இவனோட வரிப்பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல்கள் செய்கிறார்கள் என்றாலும் அவர்களின் பார்வையும் சரியாகத்தான் தெரிகிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் மணிமண்டபமும் சிலைகளும் மக்கள் வரிப்பணத்தில் செய்வதால் என்ன லாபம்? அடிப்படை வசதிகளற்ற எண்ணற்ற குடும்பங்கள் இன்னும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்கு செலவு செய்து அவர்களை உயர்த்த முயற்சித்தால் அதை பாராட்டலாம்... அதைவிடுத்து மணிமண்டபம் கட்டுவது எதற்கு?

கடைசியாக சொல்லிக்கிறேன்... நான் சிவாஜி ரசிகனுமில்லை... அவருக்கு எதிரியும் இல்லை... எனது இந்தக் கட்டுரை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம். இது என் மனதில்பட்ட கருத்து... நல்ல கலைஞன்... தான் ஏற்ற கதாபாத்திரங்களை அப்படியே நம் கண்முன் நிறுத்தியவர்... தமிழ் சினிமா என்றால் தவிர்க்க முடியாத கலைஞன்... என எல்லாவற்றிலும் அவர் மீது மரியாதை இருக்கு... ஆனால் மக்கள் வரிப்பணத்தில் மணிமண்டபம் கட்டும் அளவுக்கு என்ன மக்கள் தொண்டாற்றினார் என்று நினைக்கும் போது மணிமண்டபம் தேவையா என்றே தோன்றுகிறது... 

இது சிவாஜிக்கு எதிரான பதிவு அல்ல.... என்னோட வரிப்பணமும் அந்த மணிமண்டபத்துக்கு போகுமே அப்ப சிவாஜி நமக்கு என்ன செய்தார்ன்னு தரையில படுத்துக்கிட்டு மோட்டுவலையைப் பாத்து யோசிக்கிற ஒவ்வொரு தமிழனோட மனசாட்சிப் பகிர்வுதான் இது... யார் திட்டினாலும் ஏற்றுக் கொள்ளப்படும்... தயக்கம் வேண்டாம்... தயங்காமல் உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

என்னோட கேள்வி மக்கள் வரிப்பணத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் தேவையா?.என்பதுதான். மணிமண்டபம் தேவை என்றால் கோடிகளைக் குவித்து வைத்திருக்கும் முதல்வரும், கோடிகளில் புரளும் நடிகர்களும், வளமாய் வாழும் பிரபு குடும்பமும் சேர்ந்தே செய்யட்டும்... மக்கள் வரிப்பணத்தில் தேவை இல்லை என்பதுதான் என்னோட எண்ணம்.

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 10 Sep 2015 - 11:24

என் மனதில் சொல்ல நினைத்த அத்தனை கருத்துக்களையும் பதிந்திருக்கிறீர்கள் அத்தனை கருத்துக்களும் அவசியம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களே......

வல்லரசுக் கனவுடன் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் இன்னும் பல்லாயிரம் வறியமக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களின் வாழ்வாதாரத்தினை நோக்காகக் கொண்டு இவர்களின் பெயர்களில் ஏதாவது செய்யலாம் அதை விட்டு சல்லிக்காசுக்கும் பிரயோசனமற்ற சிலைகளையும் மண்டபங்களையும் கட்டி நிலத்தினை பாளாக்கிக்கொண்டிருக்கிறார்கள் 
வாழும்போது மக்களைப்பற்றி நினைக்காத எந்த பிரபலத்திற்கும் இறந்ததன் பின்னர் எதற்காக நாம் நினைக்க வேண்டும் 
இந்தப்பிரபலங்களின் வீடுகளில் கொட்டிக்கிடக்கும் செல்வங்களை ஒன்று சேர்த்தாலே இன்னொரு இந்தியாவை உருவாக்கிடலாம் 

அவசியமான பதிவு நன்றிகள்

மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by Nisha on Thu 10 Sep 2015 - 11:48

நேசமுடன் ஹாசிம் wrote:என் மனதில் சொல்ல நினைத்த அத்தனை கருத்துக்களையும் பதிந்திருக்கிறீர்கள் அத்தனை கருத்துக்களும் அவசியம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களே......

அசத்தல்! மகிழ்ச்சி மகிழ்ச்சி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by பானுஷபானா on Thu 10 Sep 2015 - 15:11

அவரின் ரசிகராவே இருந்தாலும் இதெல்லாம் அதிகம்னு தெரியாதா....

எவ்ளோ பிரச்சனை இருக்கு இது ரொம்ப ரொம்ப முக்கியமா?????? என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை

எனக்கு வர்ற கோவத்துக்கு சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 10 Sep 2015 - 15:12

பானுஷபானா wrote:அவரின் ரசிகராவே இருந்தாலும் இதெல்லாம் அதிகம்னு தெரியாதா....

எவ்ளோ பிரச்சனை இருக்கு இது ரொம்ப ரொம்ப முக்கியமா?????? என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை

எனக்கு வர்ற கோவத்துக்கு சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!
விடுங்க பொளச்சி போகட்டும் 
பொறும பொறும ..............

மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by பானுஷபானா on Thu 10 Sep 2015 - 15:15

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:அவரின் ரசிகராவே இருந்தாலும் இதெல்லாம் அதிகம்னு தெரியாதா....

எவ்ளோ பிரச்சனை இருக்கு இது ரொம்ப ரொம்ப முக்கியமா?????? என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை

எனக்கு வர்ற கோவத்துக்கு சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!
விடுங்க பொளச்சி போகட்டும் 
பொறும பொறும ..............

அட போங்க தம்பி இந்தியால இருந்து பாருங்க நடகிறத கேள்விப்பட்டாலே அவனவனுக்கு பிபி எகிறுது...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 10 Sep 2015 - 15:17

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:அவரின் ரசிகராவே இருந்தாலும் இதெல்லாம் அதிகம்னு தெரியாதா....

எவ்ளோ பிரச்சனை இருக்கு இது ரொம்ப ரொம்ப முக்கியமா?????? என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை

எனக்கு வர்ற கோவத்துக்கு சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!
விடுங்க பொளச்சி போகட்டும் 
பொறும பொறும ..............

அட போங்க தம்பி இந்தியால இருந்து பாருங்க நடகிறத கேள்விப்பட்டாலே அவனவனுக்கு பிபி எகிறுது...
வரணும் வந்து பாகக்கணும் காலமுண்டு பார்க்கலாம்

மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by பானுஷபானா on Thu 10 Sep 2015 - 15:22

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:அவரின் ரசிகராவே இருந்தாலும் இதெல்லாம் அதிகம்னு தெரியாதா....

எவ்ளோ பிரச்சனை இருக்கு இது ரொம்ப ரொம்ப முக்கியமா?????? என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை

எனக்கு வர்ற கோவத்துக்கு சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!
விடுங்க பொளச்சி போகட்டும் 
பொறும பொறும ..............

அட போங்க தம்பி இந்தியால இருந்து பாருங்க நடகிறத கேள்விப்பட்டாலே அவனவனுக்கு பிபி எகிறுது...
வரணும் வந்து பாகக்கணும் காலமுண்டு பார்க்கலாம்

இனிய வரவேற்புகள் வாங்க வாங்க உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் அன்பு மலர் அன்பு மலர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by Nisha on Thu 10 Sep 2015 - 15:31

ஹாசிம் எனக்கும் உங்க செலவுல டிக்கட் போட்டிருங்க..  ஐ லவ் சென்னை. மல்லிப்பூ, பிரேக்பாஸ்ட் இட்லி வித் மட்டன் குழம்பு. 

டிக்கட் நீங்க போடுங்க..   தங்கும் செலவு சாப்பாடு செலவுக்குல்லாம் அண்ணா வீடு இருக்கில்ல.. அங்கே போய் டோரா போட்டிரலாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by பானுஷபானா on Thu 10 Sep 2015 - 15:32

Nisha wrote:ஹாசிம் எனக்கும் உங்க செலவுல டிக்கட் போட்டிருங்க..  ஐ லவ் சென்னை. மல்லிப்பூ, பிரேக்பாஸ்ட் இட்லி வித் மட்டன் குழம்பு. 

டிக்கட் நீங்க போடுங்க..   தங்கும் செலவு சாப்பாடு செலவுக்குல்லாம் அண்ணா வீடு இருக்கில்ல.. அங்கே போய் டோரா போட்டிரலாம்.

எப்போ கெளம்புறீங்க மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா? 3638139948 மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா? 3638139948
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by Nisha on Thu 10 Sep 2015 - 15:39

அங்கே அம்பத்தூரில அண்ணா வீட்டுக்கு மேலே வீடு கட்டி முடியிதாம். இன்னிக்கு  கண்ணாடில்லாம்  போட்டிருவினமாம்.  நேற்று சொல்லிட்டிருந்தான். 

வீட்டுக்கு முன்னாடி ஊஞ்சல் போடபோறானாம். கேட்கவே மனசெல்லாம் அங்கே பறந்து வந்துட்டிருக்கு! வரணும் பானு!  ஆனால் இப்ப இருக்கும் சுழல்... என்னை சுத்திட்டிருக்கு. 

பார்ட்டி சேவிஸ் கேட்டரிங்க் என ஆர்டர் விட்டு எங்கயும் வெளிக்கிட முடியாது.  சொன்னால் நம்ப மாட்டிங்க. அடுத்த யூலை ஆகஸ்ட் சம்மர் ஹாலிடே கூட எங்கயும் போக முடியாது போல இருக்கு. இப்பவே ஆர்டர் செய்திருக்கினம்.  பார்க்கலாம்பா.எல்லாம் கடவுள் சித்தம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by Nisha on Thu 10 Sep 2015 - 19:32

சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டாட்டில் சுவிஸிலிருந்து உண்ணும் விரதம் மேற்கொள்ள இருக்கேன். ஆமாம் சொல்லிட்டேன்.  அதில நீங்களும் கலந்துக்கணும் எனவும் சட்டம் போட்டிருக்கேன்.  

அப்புறம்  நிஜமாக   எத்தனையோ தேவையற்ற செலவுகள் கோடி என்பது தெருக்கொடி போல்  .. ஆனாலும்  இந்திய வளரும் நாடெனும் போர்வையில் இருக்கும் வறுமையை மறைக்க கோடித்துண்டு தேடும் நிலையில் கூட நம்ம மக்கள் இதையெல்லாம் விட மாட்டினம். 

நீங்கள்  நம்ம மோடிசார் இதுவரை உலகம் சுத்த செலவு செய்த கோடியில் எத்தனை கோடித்துணி வாங்கி ஏழைகள் மானம் மறத்திருக்க  முடியும் என யோசித்ததுண்டோ?

அவர் அணியும் சட்டை பட்டணுக்கு செலவளிக்கும் பணத்தில் எத்தனை  பச்சிளம் குழந்தைக்கு பால்வாங்க முடியும் என ஆராய்ந்ததுண்டோ?

இதையெல்லாம் ஆராய்ந்தால் நாம்  தலையை சொறிந்து கொண்டு நம்ம வீட்டு தெருக்கோடியில் தான் இருப்போம். 

மொத்தமாக சொன்னால் இந்த மாதிரி ஆடம்பரங்களும் செலவுகளும் சிவாஜிக்கு மட்டுமல்ல எவருக்குமே தேவையில்லைத்தான். அதை நாம் சொன்னால் கேட்கவா போகின்றார்கள்!?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by சே.குமார் on Sat 12 Sep 2015 - 8:28

//சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டாட்டில் சுவிஸிலிருந்து உண்ணும் விரதம் மேற்கொள்ள இருக்கேன். ஆமாம் சொல்லிட்டேன்.  அதில நீங்களும் கலந்துக்கணும் எனவும் சட்டம் போட்டிருக்கேன். //

அக்கா நீங்க சிவாஜி ரசிகைன்னு தெரியாமப் போச்சு. அவரு குடும்பமோ அல்லது அரசோ கட்டட்டும்... நானும் உங்க கூட கலந்துக்கிறேன்.... உண்ணும் விரதம் இருக்கலாம் தப்பில்லை.

//நீங்கள்  நம்ம மோடிசார் இதுவரை உலகம் சுத்த செலவு செய்த கோடியில் எத்தனை கோடித்துணி வாங்கி ஏழைகள் மானம் மறத்திருக்க  முடியும் என யோசித்ததுண்டோ?//

அவர் உலகம் சுற்றுவதில் இந்தியாவுக்கான எதிர்கால திட்டம் இருக்கு என்று நம்பும் சிலரின் நானும் ஒருவன்... ஏதாவது செய்வார் அந்த டீக்கடைக்காரப் பையன் என்று நம்புவோம்... ஆனா கோடிகள் செலவு என்னும் போது கொஞ்சம் யோசனையாத்தான் இருக்கு....:(

//இதையெல்லாம் ஆராய்ந்தால் நாம்  தலையை சொறிந்து கொண்டு நம்ம வீட்டு தெருக்கோடியில் தான் இருப்போம்.//

இதுதான் உண்மை.

//மொத்தமாக சொன்னால் இந்த மாதிரி ஆடம்பரங்களும் செலவுகளும் சிவாஜிக்கு மட்டுமல்ல எவருக்குமே தேவையில்லைத்தான். அதை நாம் சொன்னால் கேட்கவா போகின்றார்கள்!?//கேட்கமாட்டார்கள்தான் எல்லோரும் சொல்லிப் பார்ப்போம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by சே.குமார் on Sat 12 Sep 2015 - 8:31

நேசமுடன் ஹாசிம் wrote:என் மனதில் சொல்ல நினைத்த அத்தனை கருத்துக்களையும் பதிந்திருக்கிறீர்கள் அத்தனை கருத்துக்களும் அவசியம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களே......

வல்லரசுக் கனவுடன் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் இன்னும் பல்லாயிரம் வறியமக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களின் வாழ்வாதாரத்தினை நோக்காகக் கொண்டு இவர்களின் பெயர்களில் ஏதாவது செய்யலாம் அதை விட்டு சல்லிக்காசுக்கும் பிரயோசனமற்ற சிலைகளையும் மண்டபங்களையும் கட்டி நிலத்தினை பாளாக்கிக்கொண்டிருக்கிறார்கள் 
வாழும்போது மக்களைப்பற்றி நினைக்காத எந்த பிரபலத்திற்கும் இறந்ததன் பின்னர் எதற்காக நாம் நினைக்க வேண்டும் 
இந்தப்பிரபலங்களின் வீடுகளில் கொட்டிக்கிடக்கும் செல்வங்களை ஒன்று சேர்த்தாலே இன்னொரு இந்தியாவை உருவாக்கிடலாம் 

அவசியமான பதிவு நன்றிகள்

வல்லரசு கனவோடத்தான் வாழுறோம்... ஆனா வல்லரசு ஆக விடமாட்டானுங்க...

என்னைப் பொறுத்தவரை சிலைகள் வைப்பது வீண் வேலை மட்டுமல்ல சாதிகளை வளர்க்கும் ஒரு வேலையும் கூட...

ஆனாலும் கயத்தாறில் புதர் மண்டிக்கிடந்த கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை தனது சொந்தப் பணத்தில் வாங்கி அரசிடம் கொடுத்தாராம் சிவாஜி... இதை என் பதிவுக்கு திரு. செல்வராஜ் ஐயா அளித்த பின்னூட்டம் மூலமாக அறிந்தேன்... வியந்தேன்...

போற்றுதலுக்கு உரிய மனிதர்தான்... இருப்பினும் இது வீண் செலவு என்றுதான் தோன்றுகிறது.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by சே.குமார் on Sat 12 Sep 2015 - 8:34

பானுஷபானா wrote:அவரின் ரசிகராவே இருந்தாலும் இதெல்லாம் அதிகம்னு தெரியாதா....

எவ்ளோ பிரச்சனை இருக்கு இது ரொம்ப ரொம்ப முக்கியமா?????? என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை

எனக்கு வர்ற கோவத்துக்கு சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!
ரொம்ப கோபப்படாதீங்க அக்கா...
இப்பத்தானே சிவாஜிக்கு ஆரம்பிச்சிருக்கோம்...
இன்னும் காலங்கள் போக...
ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன்னு எல்லாருக்கும் கட்டுவான் தமிழன்...

இதெல்லாம் அரசியல்ல சாதாரணம் அக்கா...

நாமளும் அப்படிக்கா கொஞ்சம் ஒதுங்கினால் நமக்கும் சிலை வைக்கும் சமூகம் இது...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by சே.குமார் on Sat 12 Sep 2015 - 8:36

Nisha wrote:அங்கே அம்பத்தூரில அண்ணா வீட்டுக்கு மேலே வீடு கட்டி முடியிதாம். இன்னிக்கு  கண்ணாடில்லாம்  போட்டிருவினமாம்.  நேற்று சொல்லிட்டிருந்தான். 

வீட்டுக்கு முன்னாடி ஊஞ்சல் போடபோறானாம். கேட்கவே மனசெல்லாம் அங்கே பறந்து வந்துட்டிருக்கு! வரணும் பானு!  ஆனால் இப்ப இருக்கும் சுழல்... என்னை சுத்திட்டிருக்கு. 

பார்ட்டி சேவிஸ் கேட்டரிங்க் என ஆர்டர் விட்டு எங்கயும் வெளிக்கிட முடியாது.  சொன்னால் நம்ப மாட்டிங்க. அடுத்த யூலை ஆகஸ்ட் சம்மர் ஹாலிடே கூட எங்கயும் போக முடியாது போல இருக்கு. இப்பவே ஆர்டர் செய்திருக்கினம்.  பார்க்கலாம்பா.எல்லாம் கடவுள் சித்தம்!
 அக்கா வாங்க.. வாங்க...
ஆனா மே மாதத்தில் வாங்க...
அப்பத்தான் நானும் ஊருக்கு வருவேன்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Sep 2015 - 10:20

நல்ல விவாதம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum