சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை Regist11

Latest topics
» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:06

» ஜூன் மாதம் வந்தால் எனக்கு இரண்டு கவலை...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:02

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:01

» சண்டைன்னு வந்திட்டா என் கணவரை நல்லா மொத்திடுவேன்...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:00

» மனசு பேசுகிறது : முகிலினி
by சே.குமார் Sun 2 Jun 2019 - 12:55

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by பானுஷபானா Mon 27 May 2019 - 13:13

.
மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை Khan11
மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை Www10

மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by சே.குமார் on Wed 7 Oct 2015 - 21:40

வெள்ளந்தி மனுசியாய் மனசில் சிரித்த நிஷா அக்காவின் தங்கை கணவர் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் அகால மரணமடைந்து விட்டார். அவருக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்றும் அந்தக் குழந்தைக்கு அப்பாவின் இறப்பை தெரியப்படுத்தவில்லை என்றும் கேள்விப்பட்டேன். எவ்வளவு கொடுமை பாருங்கள். சிறிய வயதில் மரணம்... அப்பாவை இழந்த மகள் என என்னை வாட்டிய மனவேதனையில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. நமக்கே இப்படி என்றால் அக்கா, அவர்தான் அவர் தங்கைகளுக்கும் தம்பிக்கும் அம்மாவாக இருந்தார் என்பதை நான் அறிவேன்... எனவே அக்க அந்த வேதனையில் இருந்து விரைவில் மீள்வது என்பது சாத்தியமில்லை என்ற போதிலும் தனக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் வெள்ளந்தி மனிதர்கள் பதிவில் வந்து நன்றி சொல்லியிருக்கிறார்கள். இதுதான் நிஷா அக்காவின் மனசு. அவர் வேதனைகளில் இருந்து விரைவில் மீளவும் என்றும் எப்போதும் சந்தோசமாக இருக்கவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
***

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவிற்கு இன்னும் 4 தினங்களே இருக்கின்றன. சென்ற வருடங்களைக் காட்டிலும் இந்த முறை பதிவர் விழாவுக்கான வேலைகள் இன்னும் சிறப்பாக நடந்து வருகின்றன. போட்டிகள் அறிவித்து நிறையப் பேர்  கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள் என்று சொல்லும் விமர்சனப் போட்டியும் அதற்கான பரிசுகளும் அறிவித்திருக்கிறார்கள்.  வரும் 9 ஆம் தேதி இரவுக்குள் அனுப்ப வேண்டும்... பதிவர்களும் பதிவர் அல்லாதவர்களும் கலந்து கொண்டு சிறப்பியுங்கள் நண்பர்களே... விபரம் அறிய இங்கு சொடுக்குங்கள்.
***

மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை %25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25A9%25E0%25AF%258D
லைப்பதிவர் விழாவுக்கு முத்துநிலவன் ஐயாஉள்ளிட்ட புதுக்கோட்டைப் பதிவர்கள் அனைவரும் எவ்வளவு தீவிர மாக உழைக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். மதுரை வலைப்பதிவர் விழாவுக்கு உழைத்த தனபாலன் அண்ணா புதுக்கோட்டை விழாவுக்கும் மிகச் சிறப்பாக உழைக்கிறார் என்பதை நாம் அறிவோம். மதுரை, புதுக்கோட்டை என்றில்லை நாளை கில்லர்ஜி அண்ணாவுடன் இணைந்துதேவகோட்டையில் விழா வைத்தாலும் ஓடி ஓடி வேலை பார்ப்பவர் யாரென்றால் அது எங்கள்தனபாலன் அண்ணாவாகத்தான் இருக்கும். இன்று விழா குறித்து அண்ணன் அவர்கள் எழுதிய அழகான பாடலை முகநூலில் படித்தேன். 

"ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...

வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...

வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...

கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே..." 

என ஆரம்பித்து மிக அழகாக எழுதியிருக்கிறார். அவரின் வலையில் தேடினேன்... கிடைக்கவில்லை... இந்தப் பாடலை சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸ்அவர்கள் முகநூலில் பகிர்ந்திருக்கிறார்கள்... அங்கு செல்ல... இங்கு சொடுக்குங்கள் மிக அருமையாக எழுதியிருக்கிறார். விழாவுக்காக இரவு பகல் பாராது உழைக்கும் புதுக்கோட்டை நட்புக்கள் அனைவரையும் பாராட்டுவதுடன் அண்ணன் தனபாலன் அவர்களுக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும் சொல்வோம்.
***

மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை Kirumi-14

கிருமி படம் பார்த்தேன். போலீசுக்கு தகவல் சொல்லும் உளவாளிக்கு நடக்கும் நிகழ்வுகள்தான் கதை. நாயகந் கதிருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது. அழகான மனைவி, அன்பான அக்காதான் மாமியார், அழகிய பூவாய் குழந்தை எல்லாம் இருந்தும் நண்பர்களுடன் தங்கிக் கொண்டு தண்ணி, சூதாடம் என்று இருக்கிறார். இடையில் போலீசிடமும் மாட்டுகிறார். போலீஸ் உளவாளியாக இருக்கும் சார்லி, இவரை போலீஸ் உளவாளி ஆக்குகிறார். அதன் பின்னான நிகழ்வுகளில் முக்கியமான புள்ளியை போலீசில் மாட்டிவிட அதன் காரணமாக சார்லியின் மரணம், அவரின் குடும்ப நிலை, நாயகனைத் துரத்தும் வில்லன்கள், போலீசின் இரட்டை நிலை என்று பயணிக்கும் கதை கடைசி வரை தொய்வில்லாமல் செல்கிறது. படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாய் இருப்பதால் பார்க்கலாம்.
***

ண்டி வீரனில் வரும் 'அலுங்குறேன் குலுங்குறேன்' பாடல் அடிக்கடி கேட்கும் பாடலாக ஆகியிருக்கிறது. ரொம்ப அருமையாக இருக்கிறது... அதிலும் முரளியின் மகன் அதர்வாவும் ஆனந்தியும் கலக்கலாய் நடித்திருக்கிறார்கள். ஆனந்தி பல இடங்களில் களவாணி ஓவியாவை நினைவூட்டுகிறார். பின்னணிக் குரலும் ஒருவர்தான் போலும்... அந்தக் குரலும் விளையாட்டுத்தனமான செய்கைகளும் அப்படியே... இது எனக்கு மட்டுந்தானான்னு தெரியலை... ஆனா ஓவியாதான் ஞாபகத்தில் வந்தார். ஆமா அழகா பாவாடை தாவணியில் வர்ற இந்தப் பெண்ணைத்தானே திரிஷா இல்லைன்னா நயன்தாராவுல ரொம்ப மோசமா நடிக்க வச்சிட்டாங்கன்னு அழுது சண்டையெல்லாம் போட வச்சாங்க...

இதே போல் ஜிப்பா ஜிமிக்கியில் மொட்டை ராஜேந்திரன் பாடும் 'ஜிப்பா போட்ட மைனரு' பாடலும் ரொம்பப் பிடிச்சிருக்கு. அந்த அழகான அருவியும், பச்சைப் பசேல் என்ற வயல்வெளியும், மாட்டு வண்டி, அரிக்கேன் விளக்கு என நம்மை சின்ன வயதில் வயல் வரப்புகளில் ஓடி விளையாண்ட நினைவுகளை மீட்டெடுக்க வைத்துவிட்டார் இயக்குநர் நண்பர் ரா.ராஜசேகரன்.
***

புலி படம் பார்க்க பைக்கில் வந்து விபத்துக்குள்ளாகி உயிரைவிட்ட இரண்டு பேரின் வீட்டிற்கும் சென்று பெற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லி பண உதவியும் செய்த விஜயை பாராட்டுவோம். அதே நேரத்தில் உனக்குன்னு குடும்பம் இருக்கு அதுதான் முக்கியம் அதைப் பாரு என் படமெல்லாம் அப்புறம்தான் என்று சொல்ல அஜீத்தைத் தவிர வேறு யாருக்கும் மனம் வரவில்லையே ஏன்..? படம் ரிலீஸ் அன்னைக்கு கட் அவுட் வைக்கவும் அதற்கு பாலாபிஷேகம் செய்யவும் இன்னும் சொல்லப் போனால் வேல் போட்டு பால்குடம் எடுக்கவும் படம் வெளியாவதில் தாமதம் ஆனால் பள்ளி கல்லூரி செல்லும் பெண்களின் பேருந்துகளை மறித்து வெறியாட்டம் நடத்தவும் ரசிகன் தேவை என்று நினைத்து பேசாமல் இருந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். குடும்பம், குழந்தை, குட்டி எதுவும் தேவையில்லை... நடிகன் போதும் என்று ஆட்டம் போடும் உனக்கு அவன் செய்வதென்ன...? அவனுக்காக இறந்தால் உன் வீட்டுக்கு வருவான்.... பணம் கொடுப்பான்... அவ்வளவுதான்... உன் உயிர் உன் உறவுகளுக்காகத்தானே ஓழிய கோடிகளை சம்பளமாகப் பெறும் நடிகனுக்காக அல்ல... திரு. அப்துல்கலாம் இறந்த போது செல்ல முடியாதவர்கள்தான் பப்ளிசிட்டிக்காவும் பணத்திற்காகவும் அலங்கார விளக்குகளின் முன்னே அழகாக பவனிவருகிறார்கள் என்பதை மறக்காதீர்கள்.
***

பாக்யாவின் மக்கள் மனசு பகுதியில் கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து என் கருத்து வெளிவந்து கொண்டிருக்கிறது. கேள்விகளைக் கேட்டு அதை அழகாக தொகுத்து கலர் புகைப்படங்களுடன் வெளியிடும் திரு. எஸ்.எஸ்.பூங்கதிர்சாருக்கு எனது நன்றி.
***

ல்லோருடைய பதிவுகளையும் படிக்கிறேன்... சிலருக்கு கருத்து இடுகிறேன்... பலருக்கு இடவில்லை... கஷ்டமாய்த்தான் இருக்கிறது... என்ன செய்ய வேலையும் கொஞ்சம் அதிகம்... இப்போதுதான் வாழ்க்கையில் புயல் அடித்து ஓய்ந்து எங்கள் இல்லத்தில் தென்றல் வீசுகிறது. வந்த புயலை வாசலோடு அனுப்பிவிட்டோம் என்றாலும் அது கொடுத்த வலிகளும், உறவுகளே வேண்டாம் என்று ஒதுங்க வைத்த நிகழ்வுகளும் எங்களுக்குள் இன்னும் காயவில்லை. அதனால்தான் அதிகம் எழுதவும் முடியவில்லை.  தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே... கண்டிப்பாக வாசிப்பேன்.
***

மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை Paper+flower

ன்பு அண்ணன்கள் ஈரோடு கதிர் மற்றும் தேவா சுப்பையா இருவருக்கும் இன்று பிறந்தநாள். காலையில் வாழ்த்து சொல்லியாச்சு என்றாலும் எல்லாரும் மீண்டும் அவர்களை வாழ்த்தலாம். கதிர் அண்ணா இப்போது மிகப் பிரபலமானவர். வேரில் இருந்து நுனி வரையின்னு புத்தகம் போட்டிருக்கிறார். சிறப்பான பேச்சாளர்... எல்லாருடனும் நட்பு பாராட்டுபவர் என்பது மிக முக்கியம். நான் அவருடன் வலைப்பூ மூலமாக தொடர்பில் இருந்தேன். சில சமயம் முகநூல் வாயிலாக சிறிய அரட்டை அடித்திருக்கிறேன். அவ்வளவே... ஆனால் அவரின் பகிர்வுகளையும் அவர் குறித்த செய்திகளையும் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். அண்ணன் தேவா அவர்களைப் பற்றி.... துபாயில்தான் இருக்கிறார்... எங்க மாவட்டக்காரர்... இரண்டு முறை நேரிலும் சில முறை போனிலுமாய் எங்கள் உறவு என்றாலும் தம்பி என்று சொல்லும் பாசக்காரர். இப்போது இவரின் புத்தகங்கள் அச்சில் இருக்கின்றன. விரைவில் வெளிவர இருக்கின்றன. ஆழ்ந்த சிந்தனை... நம்மை ஆட்கொள்ளும் எழுத்து... இதுதான் தேவா அண்ணா.... இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
***

ருங்க ஒரு முக்கியமான விஷயம், நம்ம சரவணன் அண்ணன்... அதாங்ககுடந்தையூர் தளத்தின் உரிமையாளர் குடந்தை சரவணன் அண்ணன் அவர்கள் பக்காவான திரைக்கதையில் எங்க கணேஷ் பாலா அண்ணன்துளசி சார்,அரசன் அப்படின்னு நம்ம குரூப் ஆட்களை எல்லாம் நடிகர்களாக்கி ஒரு திரில்லர் கதையை குறும்படமாக எடுத்திருக்கிறார். படத்தின் பெயர் அகம் புறம்.... இந்த மாதத்தில் வெளியிடுவார் என்று நினைக்கிறேன்... அவரின் இளமை எழுதும் கவிதை நீ... என்னும் முதல் நாவல் அழகான திரைக்கதை. அப்புறம் சில நொடி சிநேகம்... நல்லதொரு கருவோடு வந்த முதல் குறும்படம்... இப்போ அகம் புறம்... நான் ஆவலாய்... அப்ப நீங்க...?
***

சிங்கையில் புத்தகம் வெளியிட்டு அதே புத்தகத்தை புதுகை வலைப்பதிவர் விழாவில் வெளியிட இருக்கும் தம்பி தவரூபன் அவர்களை வாழ்த்துகிறேன். வரலாற்று நாயகர்களை அற்புத எழுத்தில் நாமெல்லாம் அறியத் தரும் கணித ஆசிரியர். கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களை வாழ்த்தும் வயதில்லை என்பதால் அவரின் பாதம் பணிந்து இன்னும் நிறைய வரலாற்றுப் புத்தகங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
***

ப்புறம் புதுக்கோட்டை விழாவுக்கு எல்லாரும் கண்டிப்பாக போய்விட்டு வந்து நிகழ்வின் அற்புத நிஜங்களை எங்களுக்காக பகிருங்கள்... வெளிநாட்டில் இருந்து வரமுடியாத சூழலில் இருக்கும் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by Nisha on Wed 7 Oct 2015 - 22:12

அடுத்த பதிவா? 

அம்மாடி! எப்படித்தான் எழுதுகின்றீர்களோ எனக்கு தெரியவில்லைப்பா! 

எனக்கான வேண்டல்கள், பிரார்த்தனைகளுக்கு நன்றி!  

கவலைப்படுவதனால் எவன் தன் உடலில் ஒரு முழத்தினை கூட்டவோ குறைக்கவோ முடீயும் என சொல்லுங்கள்.  நான் எதைக்குறித்தும் அதிக கவலைப்படுவதில்லை.  அடுத்து என்ன செய்யணும் என சிந்தித்தே பழகிப்போனது.  கவலை மனிதனை கொல்லும் வியாதி அல்லவா? அத்தோடு மனதின் சோர்வும், பதட்டமும், அழுத்தமும் என் உடல் நிலைக்கு ஒவ்வாதமை என்பதனால் இயன்ற வரை  மனதினை உற்சாகமாய் வைத்திருக்க முயல்வேன். அதற்காகவே நிரம்ப படிப்பதும் எழுதுவதும். என் நினைவுகளை திசை திருப்ப  எழுத்தும் படிப்பும் தான் எனக்கான  மருந்து. 

நேற்றைய நாள்  முடிந்து போனது. இன்றைய தினம் இந்த நிமிடம் என் கையில், நாளை என்னாகும் என்பது எனக்கு தெரியாது எனும் போது எல்லாம் நன்மைக்கே என எடுத்து வாழ பழகி ரெம்ப நாட்கள் ஆகி விட்டதுப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by Nisha on Wed 7 Oct 2015 - 22:21

வலைப்பதிவர் விழா குறித்த பதிவுகள் அறிவிப்புக்களுக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சாரின் பாட்டை  நானும் ரசித்தேன். அவர்கள் உண்மைகள் எனும் தளத்தில் எழுதி இருந்தார்  லிங்க்  
தனபாலன் அவர்களின்  ஒவ்வொரு பூக்களுமேபாடல்

 ஈரோடு கதிர் மற்றும் தேவா சுப்பையா 
இருவருக்கும் எமது பிறந்த நாள் வாழ்த்துகளும் சேரட்டும்!

சினி விமர்சனம்,  புலி பட விஜய் ரசிகர் மரணம் குறித்த கருத்து, பாடல்கள் குறித்த பார்வை, புத்தக வெளியீடுகளுக்கான வாழ்த்து என அனைத்துமே அருமையான எழுத்தும் கருத்துக்களும்.!

உடலுக்கும் மனதுக்கு எழுத்து நிறைவைத்தரும் எனும் போது நடந்தவைகள் குடும்ப கவலைகள் குறித்தெல்லாம் யோசித்து மனதினை கலவரப்படுத்தாமல் ரிலாகசாக இருங்கள். 

 உங்கள் உடல் நலன்  சீராக என் பிரார்த்தனைகள் தொடரும். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by *சம்ஸ் on Thu 8 Oct 2015 - 10:18

நன்றி என்று ஒரு வார்தை சொன்னால் போதாது குமார் உங்களுக்கு உண்மையில் ஒன்றன் பின் ஒன்றாகக் தொடர்ந்து கருத்தாளமுள்ள பதிவுகள் எப்படித்தான் இப்படி எழுத முடிகிறதோ  என்று நினைக்கும் போது எனக்கு மூச்சி முட்டுகிறது காரணம் எனக்கு ஒரு பதிவை படித்து அதற்கு கருத்தெழுத நேரம் கிடைப்பதும் எழுதுவதும் சிரமமாக உள்ளது தாங்கள் அப்படி இல்லை சிறந்த பல பதிவுகள் பந்தி பந்தியாக எழுதி அசத்துகிறீர்கள் உங்களை எப்படி வாழ்த்துவேன்! என்ன சொல்லி வாழ்த்துவதென்று  தெரியவில்லை உங்களின் எழுத்து பயணம் மென் மேலும் உயர்ந்து சிகரம் தொட என் உள்ளம் திறந்து வாழ்த்துகிறேன் வாழ்க குமார் வளர்க தமிழ்!

நிஷா குறித்த பதிவும்  வலைப்பதிவர் விழா குறித்த பதிவுகளும் அருமை. திண்டுக்கல் தனபாலன் சாரின் பாட்டை  நானும் ரசித்தேன் அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது அதிலும் என்னை இந்த வரிகள் மிகவும் கவர்ந்து!

”கருத்து தாங்கும் பதிவுகள் தானே
முன்னணி பதிவில் நிலையாகும்...
எதையும் தாங்கும் உள்ளம் தானே
நிலையான நட்பு காணும்...

”யாருக்கில்லை போராட்டம்...?
பகிர்ந்து கொள்ள ஏன் தயக்கம்...?
ஒரு கனவு கண்டால்...
அதை தினம் பகிர்ந்தால்...
ஒரு நாளில் நிஜமாகும்...!”

திண்டுக்கல் தனபாலன் சார் குறித்து நான் அறிந்ததில்லை அவர் குறித்து அறிய செய்தமைக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

மற்றது சொல்லவே வேண்டாம் திரைப்பட விமர்சனம் நடிகர்கள் குறித்த தகவல்கள் என்று அத்தனையும் சூப்பர்.

வாழ்கையில் புயல் அடிப்பதும் தென்றல் வீசுவதும் இயல்புதான் அனைத்தையும் ஏத்துக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.அதற்கான மனபக்குவத்தை ஏற்படுத்திக்க வேண்டும். நீங்கள் நினைக்கலாம் யார் வேண்டுமானாலும் ஆறுதல் சொல்ல முடியும் என்று உண்மைதான். அடுத்தவருக்கு சொல்லும் போது இலகுவாகத்தான் இருக்கும் அது என் வாழ்வில் வந்த்தால் தெரியும் வலியும் வேதனையும். 

ஒன்று மட்டும் நாம் மனதில் கொள்ள வேண்டும் எது நடந்தாலும் அது என் நல்லதிற்கே நடக்கிறது என்று நினைத்தால் வாழ்கையில் கஷ்டம் குறையும் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

எனக்கு சிறிய ஒரு கஷ்டம் வந்தாலும் என்னால் தாங்கிக்க முடிவதில்லை ரெம்பவும் சோர்ந்து போவேன் மனமுடைந்து மூலையில் முடங்கி விடுவேன். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போவேன். அந்த நிமிடம் நண்பனை நாடி என்ன செய்லாம் எப்படி செய்யலாம் என்று சொல் மனகஷ்டமா உள்ளது என்று கேட்பேன்.
அவரின் பதில்கள் எனக்கு ஆறுதலாகவும் மருந்தாகவும் அமையும்.

உங்களுக்கு ஏற்பட்ட மனகசப்புகளை மறந்து நடக்கவிருக்கும் நல்லதை எண்ணி பயணம் செய்யுங்கள் வெற்றி உங்களுக்கு. எழுத்தும் கருத்தும் நமது மனசுக்கு ஆறுதலைத் தரும் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பதிவுகளையும் கருத்துத்களையும் படிக்கும் போது எங்களையும் எழுத தூண்டுகிறது.உங்களின் ஒவ்வெறு பதிவுகளையும் படிக்க ஆசையாகவும் ஆர்வமாகவும் உள்ளது. 

நல்லதை பெற்று நலமுடன் வாழ  எந்நாளும் என் வாழ்த்துகள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by நண்பன் on Thu 8 Oct 2015 - 16:05

மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

அருமையாக உள்ளது எங்கள் நிஷா அக்கா குறித்தும் எழுதியவை அருமை இன்னும் எதிர் பார்க்கிறேன் அவ்வளவு எழுதலாம் நிஷா அக்கா குறித்து நீங்கள் எழுதும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது

பட விமர்சனங்கள் சிறப்பு எனக்குத்தான் படங்கள் பார்க்க டைம் கிடைப்பதில்லை மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை அனைத்தும் சிறப்பு

தொடருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by Nisha on Thu 8 Oct 2015 - 16:22

உங்க நிஷா  அக்கா குறித்து  இன்னும் எழுதணும் எனில் குமாருக்கு காசு கொடுக்கணுமாம்! அவர் வங்கிக்கணக்கில் காசு போட்டால் தான் இனி எழுதுவாராம். நீங்க காசு போடுவியளோ தங்கமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by *சம்ஸ் on Thu 8 Oct 2015 - 16:26

அப்படி என்றால் நண்பன் பத்தி எழுத சொல்லுங்க வங்கிக்கணக்கில் காசி போடலாம்.....

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by Nisha on Thu 8 Oct 2015 - 16:30

*சம்ஸ் wrote:அப்படி என்றால் நண்பன் பத்தி எழுத சொல்லுங்க வங்கிக்கணக்கில் காசி போடலாம்.....

அது முடியாதாம்.  நிஷாக்கா பத்தி மட்டும் தான் எழுதுவாராம். 
அதெல்லாம் சரி என் தும்பியை பத்தி எழுதணும்லாம் காசு கொடுத்தா எழுதணும் தாடிவாலா சார். உங்களுக்கு கொழுப்பு ரெம்ப கூடிப்போச்சு தாடிவாலா சார். சுட்டுத்தள்ளு.!!    உருட்டுக்கட்டை      மண்டையில் அடிவிழும்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by *சம்ஸ் on Thu 8 Oct 2015 - 16:37

Nisha wrote:
*சம்ஸ் wrote:அப்படி என்றால் நண்பன் பத்தி எழுத சொல்லுங்க வங்கிக்கணக்கில் காசி போடலாம்.....

அது முடியாதாம்.  நிஷாக்கா பத்தி மட்டும் தான் எழுதுவாராம். 
அதெல்லாம் சரி என் தும்பியை பத்தி எழுதணும்லாம் காசு கொடுத்தா எழுதணும் தாடிவாலா சார். உங்களுக்கு கொழுப்பு ரெம்ப கூடிப்போச்சு தாடிவாலா சார். சுட்டுத்தள்ளு.!!    உருட்டுக்கட்டை      மண்டையில் அடிவிழும்

தாங்கள் சொன்னது தப்பு மேடம் டாக்டர் எனக்கு கொழுப்பு இல்லை உடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது என்று சொன்னார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by நண்பன் on Thu 8 Oct 2015 - 17:18

Nisha wrote:உங்க நிஷா  அக்கா குறித்து  இன்னும் எழுதணும் எனில் குமாருக்கு காசு கொடுக்கணுமாம்! அவர் வங்கிக்கணக்கில் காசு போட்டால் தான் இனி எழுதுவாராம். நீங்க காசு போடுவியளோ தங்கமே!

உங்களைப் பற்றி அறிந்தால் தானாகவே எழுத தோணும் நீங்க வேற கூட்டணி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by நண்பன் on Thu 8 Oct 2015 - 17:20

*சம்ஸ் wrote:அப்படி என்றால் நண்பன் பத்தி எழுத சொல்லுங்க வங்கிக்கணக்கில் காசி போடலாம்.....
ஏன்பா ஏன் ஏஏஏஏஏ வேண்டாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by சே.குமார் on Thu 8 Oct 2015 - 19:44

Nisha wrote:அடுத்த பதிவா? 

அம்மாடி! எப்படித்தான் எழுதுகின்றீர்களோ எனக்கு தெரியவில்லைப்பா! 

எனக்கான வேண்டல்கள், பிரார்த்தனைகளுக்கு நன்றி!  

கவலைப்படுவதனால் எவன் தன் உடலில் ஒரு முழத்தினை கூட்டவோ குறைக்கவோ முடீயும் என சொல்லுங்கள்.  நான் எதைக்குறித்தும் அதிக கவலைப்படுவதில்லை.  அடுத்து என்ன செய்யணும் என சிந்தித்தே பழகிப்போனது.  கவலை மனிதனை கொல்லும் வியாதி அல்லவா? அத்தோடு மனதின் சோர்வும், பதட்டமும், அழுத்தமும் என் உடல் நிலைக்கு ஒவ்வாதமை என்பதனால் இயன்ற வரை  மனதினை உற்சாகமாய் வைத்திருக்க முயல்வேன். அதற்காகவே நிரம்ப படிப்பதும் எழுதுவதும். என் நினைவுகளை திசை திருப்ப  எழுத்தும் படிப்பும் தான் எனக்கான  மருந்து. 

நேற்றைய நாள்  முடிந்து போனது. இன்றைய தினம் இந்த நிமிடம் என் கையில், நாளை என்னாகும் என்பது எனக்கு தெரியாது எனும் போது எல்லாம் நன்மைக்கே என எடுத்து வாழ பழகி ரெம்ப நாட்கள் ஆகி விட்டதுப்பா!
வாங்க அக்கா...
தங்கள் கருத்துக்கு நன்றி...
இப்படி இருந்தால் எல்லா நாளும் சுகமே...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by சே.குமார் on Thu 8 Oct 2015 - 19:46

Nisha wrote:வலைப்பதிவர் விழா குறித்த பதிவுகள் அறிவிப்புக்களுக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சாரின் பாட்டை  நானும் ரசித்தேன். அவர்கள் உண்மைகள் எனும் தளத்தில் எழுதி இருந்தார்  லிங்க்  
தனபாலன் அவர்களின்  ஒவ்வொரு பூக்களுமேபாடல்

 ஈரோடு கதிர் மற்றும் தேவா சுப்பையா 
இருவருக்கும் எமது பிறந்த நாள் வாழ்த்துகளும் சேரட்டும்!

சினி விமர்சனம்,  புலி பட விஜய் ரசிகர் மரணம் குறித்த கருத்து, பாடல்கள் குறித்த பார்வை, புத்தக வெளியீடுகளுக்கான வாழ்த்து என அனைத்துமே அருமையான எழுத்தும் கருத்துக்களும்.!

உடலுக்கும் மனதுக்கு எழுத்து நிறைவைத்தரும் எனும் போது நடந்தவைகள் குடும்ப கவலைகள் குறித்தெல்லாம் யோசித்து மனதினை கலவரப்படுத்தாமல் ரிலாகசாக இருங்கள். 

 உங்கள் உடல் நலன்  சீராக என் பிரார்த்தனைகள் தொடரும். 
உடல் நலம் இப்போது கொஞ்சம்  வலி இருக்கிறது...
குடும்பக் கவலைகளை மறக்க முடியவில்லை அக்கா...
தனபாலன் அண்ணாவின் கவிதை அருமை அக்கா... இணைப்புக்கு நன்றி.
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by சே.குமார் on Thu 8 Oct 2015 - 19:51

*சம்ஸ் wrote:நன்றி என்று ஒரு வார்தை சொன்னால் போதாது குமார் உங்களுக்கு உண்மையில் ஒன்றன் பின் ஒன்றாகக் தொடர்ந்து கருத்தாளமுள்ள பதிவுகள் எப்படித்தான் இப்படி எழுத முடிகிறதோ  என்று நினைக்கும் போது எனக்கு மூச்சி முட்டுகிறது காரணம் எனக்கு ஒரு பதிவை படித்து அதற்கு கருத்தெழுத நேரம் கிடைப்பதும் எழுதுவதும் சிரமமாக உள்ளது தாங்கள் அப்படி இல்லை சிறந்த பல பதிவுகள் பந்தி பந்தியாக எழுதி அசத்துகிறீர்கள் உங்களை எப்படி வாழ்த்துவேன்! என்ன சொல்லி வாழ்த்துவதென்று  தெரியவில்லை உங்களின் எழுத்து பயணம் மென் மேலும் உயர்ந்து சிகரம் தொட என் உள்ளம் திறந்து வாழ்த்துகிறேன் வாழ்க குமார் வளர்க தமிழ்!

நிஷா குறித்த பதிவும்   வலைப்பதிவர் விழா குறித்த பதிவுகளும் அருமை.  திண்டுக்கல் தனபாலன் சாரின் பாட்டை  நானும் ரசித்தேன் அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது அதிலும் என்னை இந்த வரிகள் மிகவும் கவர்ந்து!

”கருத்து தாங்கும் பதிவுகள் தானே
முன்னணி பதிவில் நிலையாகும்...
எதையும் தாங்கும் உள்ளம் தானே
நிலையான நட்பு காணும்...

”யாருக்கில்லை போராட்டம்...?
பகிர்ந்து கொள்ள ஏன் தயக்கம்...?
ஒரு கனவு கண்டால்...
அதை தினம் பகிர்ந்தால்...
ஒரு நாளில் நிஜமாகும்...!”

திண்டுக்கல் தனபாலன் சார் குறித்து நான் அறிந்ததில்லை அவர் குறித்து அறிய செய்தமைக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

மற்றது சொல்லவே வேண்டாம் திரைப்பட விமர்சனம் நடிகர்கள் குறித்த தகவல்கள் என்று அத்தனையும் சூப்பர்.

வாழ்கையில் புயல் அடிப்பதும் தென்றல் வீசுவதும் இயல்புதான் அனைத்தையும் ஏத்துக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.அதற்கான மனபக்குவத்தை ஏற்படுத்திக்க வேண்டும். நீங்கள் நினைக்கலாம் யார் வேண்டுமானாலும் ஆறுதல் சொல்ல முடியும் என்று உண்மைதான். அடுத்தவருக்கு சொல்லும் போது இலகுவாகத்தான் இருக்கும் அது என் வாழ்வில் வந்த்தால் தெரியும் வலியும் வேதனையும். 

ஒன்று மட்டும் நாம் மனதில் கொள்ள வேண்டும் எது நடந்தாலும் அது என் நல்லதிற்கே நடக்கிறது என்று நினைத்தால் வாழ்கையில் கஷ்டம் குறையும் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

எனக்கு சிறிய ஒரு கஷ்டம் வந்தாலும் என்னால் தாங்கிக்க முடிவதில்லை ரெம்பவும் சோர்ந்து போவேன் மனமுடைந்து மூலையில் முடங்கி விடுவேன். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போவேன். அந்த நிமிடம் நண்பனை நாடி என்ன செய்லாம் எப்படி செய்யலாம் என்று சொல் மனகஷ்டமா உள்ளது என்று கேட்பேன்.
அவரின் பதில்கள் எனக்கு ஆறுதலாகவும் மருந்தாகவும் அமையும்.

உங்களுக்கு ஏற்பட்ட மனகசப்புகளை மறந்து நடக்கவிருக்கும் நல்லதை எண்ணி பயணம் செய்யுங்கள் வெற்றி உங்களுக்கு. எழுத்தும் கருத்தும் நமது மனசுக்கு ஆறுதலைத் தரும் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பதிவுகளையும் கருத்துத்களையும் படிக்கும் போது எங்களையும் எழுத தூண்டுகிறது.உங்களின் ஒவ்வெறு பதிவுகளையும் படிக்க ஆசையாகவும் ஆர்வமாகவும் உள்ளது. 

நல்லதை பெற்று நலமுடன் வாழ  எந்நாளும் என் வாழ்த்துகள்.
தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி சம்ஸ்...
எனக்கும்தான் வருத்தங்கள் தரும் வலியில் துவண்டுதான் இருப்பேன்... இப்போது தனிமை பழகிவிட்டதால் பெரும்பாலும் எழுத்தும் அப்போ அப்போ பார்க்கும் சினிமாக்களுமே கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது....

எப்படியிருந்தாலும் மாலை ஸ்கைப்பில் வீட்டுக்கு பேசும் அந்த ஒரு மணி நேரம் கொடுக்கும் சந்தோஷமே 23 மணி நேரங்களை சுகமாய் கடக்க வைக்கிறது என்பதே உண்மை.

எழுத உட்கார்ந்தால் எனக்கு அதுவாய் வருவதே பெரிய வரம்... இந்தக் கொடுப்பினை எப்படி வந்தது என்று தெரியவில்லை... தொடர்கதையாக இருந்தாலும் சிறுகதையாக இருந்தாலும் ஆரம்பித்து முடிக்கும் போதுதான் கதையின் போக்கை அறிவேன். அதுவரை எப்படி பயணிக்கும் என்பது தெரியாது.... யோசித்து வைத்து எழுத நினைத்தால் இன்று வரை எழுதாமலேயே விட்டு விடுவேன். அதுபோல்தான் இது போன்ற பதிவுகளும்... இரண்டு கருத்தில் ஆரம்பித்து இரண்டு பக்கமாய் விரிந்து நிற்கும்... இதெல்லாம் கடவுளின் கருணைதான்...

கருத்துக்கு நன்றி சம்ஸ்... தொடர்ந்து பயணிப்போம்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by சே.குமார் on Thu 8 Oct 2015 - 19:52

நண்பன் wrote:மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

அருமையாக உள்ளது எங்கள் நிஷா அக்கா குறித்தும் எழுதியவை அருமை இன்னும் எதிர் பார்க்கிறேன் அவ்வளவு எழுதலாம் நிஷா அக்கா குறித்து நீங்கள் எழுதும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது

பட விமர்சனங்கள் சிறப்பு  எனக்குத்தான் படங்கள் பார்க்க டைம் கிடைப்பதில்லை   மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை அனைத்தும் சிறப்பு

தொடருங்கள்
வாங்க நண்பன்...
தங்கள் கருத்துக்கு நன்றி...
தாங்களும் எழுதுங்களேன்... உங்கள் பார்வையில் நாங்களும் வாசிப்போம் அல்லவா...?

படங்கள் அதிகம் பார்த்தேன்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by Nisha on Thu 8 Oct 2015 - 20:16

வணக்கம் குமார்! எப்படியோ என்னை பத்தி எழுதி வலைப்பூக்கள் பக்கமும் எனக்கு ஒரு அறிமுகம் உருவாக்கி விட்டீர்கள் போல இருக்கின்றது. 

வாழ்த்துக்களை காணும் போதும் வருத்தங்களை பகிரும் போதும் மனம் நெகிழ்கின்றதுப்பா!

அனைத்திற்கும் நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by சே.குமார் on Thu 8 Oct 2015 - 20:35

Nisha wrote:வணக்கம் குமார்! எப்படியோ என்னை பத்தி எழுதி வலைப்பூக்கள் பக்கமும் எனக்கு ஒரு அறிமுகம் உருவாக்கி விட்டீர்கள் போல இருக்கின்றது. 

வாழ்த்துக்களை காணும் போதும் வருத்தங்களை பகிரும் போதும் மனம் நெகிழ்கின்றதுப்பா!

அனைத்திற்கும் நன்றி!

வாங்க அக்கா....
உங்களை வலையுலகில் சூப்பர் ஸ்டாராக்கியதில் மகிழ்ச்சியே... ஹா... ஹா... நன்றி எல்லாம் வேண்டாம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by சே.குமார் on Thu 8 Oct 2015 - 20:36

Nisha wrote:உங்க நிஷா  அக்கா குறித்து  இன்னும் எழுதணும் எனில் குமாருக்கு காசு கொடுக்கணுமாம்! அவர் வங்கிக்கணக்கில் காசு போட்டால் தான் இனி எழுதுவாராம். நீங்க காசு போடுவியளோ தங்கமே!
அக்கா...
காசா.... ஆஹா... வேலையை விட்டுட்டு வந்து எழுதுறேன்...
காசு.... பணம்... துட்டு... மணி... மணி... அக்கா...
வரிசையில் வரச் சொல்லுங்க...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by சே.குமார் on Thu 8 Oct 2015 - 20:39

*சம்ஸ் wrote:அப்படி என்றால் நண்பன் பத்தி எழுத சொல்லுங்க வங்கிக்கணக்கில் காசி போடலாம்.....

சம்ஸ்... என்னோட வங்கிக் கணக்கு எண் வேணுமா...? ஸ்... அப்பா.... இப்படியும் சம்பாதிக்கலாம் போலவே...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by சே.குமார் on Thu 8 Oct 2015 - 20:40

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:அப்படி என்றால் நண்பன் பத்தி எழுத சொல்லுங்க வங்கிக்கணக்கில் காசி போடலாம்.....

அது முடியாதாம்.  நிஷாக்கா பத்தி மட்டும் தான் எழுதுவாராம். 
அதெல்லாம் சரி என் தும்பியை பத்தி எழுதணும்லாம் காசு கொடுத்தா எழுதணும் தாடிவாலா சார். உங்களுக்கு கொழுப்பு ரெம்ப கூடிப்போச்சு தாடிவாலா சார். சுட்டுத்தள்ளு.!!    உருட்டுக்கட்டை      மண்டையில் அடிவிழும்

தாங்கள் சொன்னது தப்பு மேடம் டாக்டர் எனக்கு கொழுப்பு இல்லை உடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது என்று சொன்னார்.
ஆரோக்கியம்தான் முக்கியம் சம்ஸ்...
நலமோடு வளமாய் இருங்கள்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by சே.குமார் on Thu 8 Oct 2015 - 20:41

நண்பன் wrote:
Nisha wrote:உங்க நிஷா  அக்கா குறித்து  இன்னும் எழுதணும் எனில் குமாருக்கு காசு கொடுக்கணுமாம்! அவர் வங்கிக்கணக்கில் காசு போட்டால் தான் இனி எழுதுவாராம். நீங்க காசு போடுவியளோ தங்கமே!

உங்களைப் பற்றி அறிந்தால் தானாகவே எழுத தோணும் நீங்க வேற கூட்டணி 
இது புலி படமில்லை... காத்து வாங்க... இங்க வரிசையில் வரணும்... ரொம்ப பேரு முன்னாலயே பணஙகொடுத்து பதிஞ்சி வச்சிருக்காங்க....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by சே.குமார் on Thu 8 Oct 2015 - 20:42

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அப்படி என்றால் நண்பன் பத்தி எழுத சொல்லுங்க வங்கிக்கணக்கில் காசி போடலாம்.....
ஏன்பா ஏன் ஏஏஏஏஏ வேண்டாம்
அதானே... ஏன்... அவரே கொடுப்பாருல்ல... அப்புறம் எதுக்கு டபுள் பேமெண்ட்... அப்படியெல்லாம் கொள்ளை அடிப்பதில்லை...
என்ன நண்பன்.... சரியாச் சொன்னேனா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by Nisha on Thu 8 Oct 2015 - 20:44

ஹாஹா ! குமார் கூட பின்னூட்டத்தில் பின்னுறாங்கப்பா!  நடத்துங்க நடத்துங்க! 

காசு பணம் கோடி கோடியா கொட்டினாலும் இத்தனை அன்பை கொட்டி எழுத முடியாதே குமார். அதெல்லாம் மனசில் அடி ஆழத்திலிருந்தல்லவா வருகின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by *சம்ஸ் on Mon 12 Oct 2015 - 8:15

சே.குமார் wrote:
*சம்ஸ் wrote:அப்படி என்றால் நண்பன் பத்தி எழுத சொல்லுங்க வங்கிக்கணக்கில் காசி போடலாம்.....

சம்ஸ்... என்னோட வங்கிக் கணக்கு எண் வேணுமா...? ஸ்... அப்பா.... இப்படியும் சம்பாதிக்கலாம் போலவே...

ஆமா! உங்க வங்கி கணக்கு எண்ணை நிஷா மேடத்திற்கு அனுப்பிவையுங்கள் அவங்க பணத்தை வங்கியில் போடுவாங்க!ஹாஹாஹா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by Nisha on Mon 12 Oct 2015 - 9:40

*சம்ஸ் wrote:
சே.குமார் wrote:
*சம்ஸ் wrote:அப்படி என்றால் நண்பன் பத்தி எழுத சொல்லுங்க வங்கிக்கணக்கில் காசி போடலாம்.....

சம்ஸ்... என்னோட வங்கிக் கணக்கு எண் வேணுமா...? ஸ்... அப்பா.... இப்படியும் சம்பாதிக்கலாம் போலவே...

ஆமா! உங்க வங்கி கணக்கு எண்ணை நிஷா மேடத்திற்கு அனுப்பிவையுங்கள் அவங்க பணத்தை வங்கியில் போடுவாங்க!ஹாஹாஹா

 நானா சொன்னேன்? சுட்டுத்தள்ளு.!!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum