சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மனசு பேசுகிறது : அபுதாபியில் மையம் கொண்ட புயல் Regist11


Latest topics
» ஹோலியும் ராதையும்
by rammalar Yesterday at 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Yesterday at 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Yesterday at 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Yesterday at 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Yesterday at 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Yesterday at 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

.
மனசு பேசுகிறது : அபுதாபியில் மையம் கொண்ட புயல் Khan11
மனசு பேசுகிறது : அபுதாபியில் மையம் கொண்ட புயல் Www10

மனசு பேசுகிறது : அபுதாபியில் மையம் கொண்ட புயல்

Go down

Sticky மனசு பேசுகிறது : அபுதாபியில் மையம் கொண்ட புயல்

Post by சே.குமார் on Fri 16 Oct 2015 - 14:46

டந்த வாரத்தில் ஒருநாள் கில்லர்ஜி அண்ணாவிடம் இருந்து போன்... 'அபுதாபியில் ஒரு விஐபி புயல்  மையம் கொண்டிருக்கிறது... அடுத்த புதன் மாலை 7 மணிக்கு மதினா சயீதில் மையம் கொள்ள இருக்கிறது. அப்போது நாம் அந்த விஐபி புயலைச் சந்திக்க இருக்கிறோம்... ரெடியா இருங்க...' என்றார். நான் யாரென்று கேட்கவுமில்லை அவர் சொல்லவுமில்லை. ஆனால் அவரின் பதிவில் ஒரு வரியில் விஷயம் சொல்லியிருந்தார். அதனை மனதில் கொண்டு அவராகத்தான் இருக்கும் என்று நினைத்ததோடு வேலை, விடுமுறை என்ற வட்டத்துக்குள் சிக்கி புதன் கிழமை என்பதை மட்டும் மனதில் நிறுத்தி இயந்திர வாழ்க்கைக்குள் எப்பவும் போல் பயணித்துக் கொண்டிருந்தேன்.

மீண்டும் ஞாயிறன்று கில்லர்ஜி அண்ணாவிடம் இருந்து போன்... 'என்ன புதன்கிழமை... விஐபி...' என அவர் ஆரம்பித்ததும் 'அண்ணா மறக்க மாட்டேன்... சரியாக 7 மணிக்கு அங்கேயிருப்பேன்' என்றேன். 'ஆமா விஐபி யாருன்னு நீங்களும் கேக்கலை... நானும் சொல்லலை' என்றார். 'ஆமாம் கேட்கலைதான்... அவருதானே அண்ணா...'  என்று நான் சொன்னதும் 'எப்படி... சரியாச் சொல்லீட்டிங்க...' என்றார். 'நீங்கதான் உங்க பதிவில் ஒரு க்ளூ கொடுத்திருந்தீங்களே' என்றேன். 'அதுசரி சரியாப் பிடிச்சிட்டீங்க' என்று சிரித்தார்.


மனசு பேசுகிறது : அபுதாபியில் மையம் கொண்ட புயல் K2
('பன்முகப் படைப்பாளி' கில்லர்ஜி மற்றும் 'ஆன்மீகப் படைப்பாளி' தஞ்சையம்பதி என்ற மலைகளுடன் நானும்)

அந்தப் புதன்... அதாங்க சென்ற புதன்.... 

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள்.... அப்படி ஒரு புதன்... வாழ்வின் வசந்தமாய் அவரைச் சந்திக்க அலுவலகத்தில் இருந்து வந்ததும் மனைவியிடம் ஸ்கைப்பில் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அவசர அவசரமாய்க் கிளம்பினேன்.  என்னைப் பொறுத்தவரை சரியான சமயத்தில் செல்ல வேண்டும் என்று நினைப்பேன்.  நமக்காக நம்மை வரச் சொன்னவர்களோ நாம் வரச் சொன்னவர்களோ காத்திருக்கக் கூடாது என்று நினைக்கும் ரகம். சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே அங்கு சென்றேன். அண்ணனை போனில் கூப்பிட அவரும் என்னிடம் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்தார்.

இங்கு சும்மாவே டிராபிக் சலங்கை கட்டி ஆடும்... அதுவும் அடுத்த நாள் விடுமுறை என்றால் கேட்கவே வேண்டாமல்லவா..? நீண்ட தூரத்தில் இருந்து வந்து அபுதாபி டிராபிக்கில் நீந்தி மதினா சயீத் ஷாப்பிங் மாலில் இருக்கும் சரவணபவன் ஹோட்டல் அருகில் தனது மகள், மாப்பிள்ளை மற்றும் செல்லக்குட்டி வர்ஷிதாவுடன் கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்தார் அந்த விஐபி...

யார் அந்த விஐபி என்றுதானே கேட்கிறீர்கள்...

இருங்க சொல்றேன்...

நம்ம செல்வராஜூ ஐயாதான் அபுதாபியை மையம் கொண்ட விஐபி புயல்...

மனசு பேசுகிறது : அபுதாபியில் மையம் கொண்ட புயல் K4
(ஐயா. துரை செல்வராஜூ அவர்களின் பேச்சை ரசித்தபடி நான்)

குவைத்தில் இருந்து மகள் வீட்டிற்கு அபுதாபி வந்தாலும் எங்களையும் காண வேண்டும் என தேடி வந்திருந்தார் தஞ்சையம்பதி என்னும் தளத்தில் ஆன்மீகம் மட்டுமின்றி அனைத்துப் பதிவுகளையும் விரிவாய் விளக்கமாய் எழுதும் அன்பு ஐயா திரு. துரை செல்வராஜூ அவர்கள். அம்மாவும் தம்பியும் வந்தபோதே ஐயாவின் மாப்பிள்ளை, மகள் மற்றும் பேத்தியை சந்திருப்பதால் அவர்கள் எங்களுடன் ரொம்ப அன்பாகப் பேசினார்கள். 

நானும் அண்ணனும் அவர் வரும்வரை பதிவர் விழா, பதிவர்கள், எழுத்து என பேசிக் கொண்டே இருந்தோம். கில்லர்ஜி அண்ணாவின் கெட்டப் மாற்றத்தைப் பார்த்து கமலஹாசன் அடுத்த படத்துக்காக தன்னை மாற்றி இப்படி இங்கு வந்திருக்கிறாரோ என பலர் வந்து பார்த்துப் பார்த்துச் சென்றார்கள்... என்ன மாற்றம்ன்னுதானே கேட்கிறீர்கள். போட்டோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஐயா வந்த பின் எங்களை கட்டி அணைத்து அவரின் அன்பைப் பகிர்ந்து கொண்டார். அந்த அணைப்பில் ஒரு தந்தையின் பாசம்... இது நமக்கு தமிழ் கொடுத்த ஒரு உறவு... உணர்வு. பின்னர் ஐயா பேச... நாங்கள் இருவரும் மாணவர்களாய் மாறினோம்.  கில்லர்ஜி அண்ணா அப்போ அப்போ கேள்விக்கு பதில் சொல்லும் மாணவர் ஆனார். நானோ கேட்டுக் கொண்டிருக்கும் மாணவனாய் மட்டுமே...

பதிவுலகில் ஆரம்பித்த பேச்சு பதிவர் விழாவுக்கு வந்து இன்னும் சில பேச்சுக்களின் வழியாக நகர்ந்த நேரத்தில் ஐயாவின் மாப்பிள்ளை... போட்டோவாக எடுத்துத் தள்ளினார். பின்னர் சரவணபவனுக்குள் நுழைந்து டிபன் சாப்பிட்டுக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தோம். மீண்டும் வெளியில் வந்து அமர்ந்து பேச ஆரம்பித்தோம். கில்லர்ஜி அண்ணா சொன்னது போல் ஓராயிரம் பதிவுகளுக்கான தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்... ஐயாவின் தாத்தாவில் ஆரம்பித்து... உவேசாவில் அமர்ந்து... கலைஞரில் நின்று... ஐயா கிராம அதிகாரியாக பணி எடுத்ததில் இளைப்பாறி... இன்னும் இன்னுமாய் நிறையப் பகிர்ந்து கொண்டார்கள்.

மனசு பேசுகிறது : அபுதாபியில் மையம் கொண்ட புயல் K3
('அண்ணா' கில்லரும் 'ஐயா' தஞ்சையம்பதியும்)

அவர்தான் பேசினார்.... நாங்கள் கேட்டுக் கொண்டே இருந்தோம் என்பதைவிட அவரது பேச்சின் வீச்சை ரசித்தோம்... எனது கதைகளை முழுமையாகப் படிக்க முடிவதில்லை... அழுது விடுவேன் என்றார். இதுதான் எனது கதைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்... இதை எனது நண்பன் பல முறை சொல்லியிருக்கிறான்... இப்போதெல்லாம் நான் எழுதினால் அதை அவன் படிக்க நேர்கையில் என்னடா உன்னோட கதையின் கடைசி பாராதான் அழுக வைக்கும்... அது மிஸ்ஸிங் என்பான். உடனே மாற்றுவேன். அதையே ஐயாவும் சொன்னார். எனது இரண்டு தொடர்கதையையும் பாராட்டினார் எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. 

அழ வைப்பது கஷ்டமா... சிரிக்க வைப்பது கஷ்டமா... (முத்து நிலவன் ஐயாவுக்கு பட்டிமன்றத் தலைப்பு ரெடி) என கில்லர்ஜி அண்ணாவும் ஐயாவும் ஒரு விவாத மேடை நடத்தினார். நான் அப்போதும் பார்வையாளனாய் அமர்ந்திருந்தேன். முடிவில் சிரிக்க வைப்பது சுலபம் அழ வைப்பதே கஷ்டம் என தீர்ப்பளிக்க, அப்பா நம்ம கதையில் அழத்தானே வைக்கிறோம் நமக்கே வெற்றி என சந்தோஷம். ஆரம்பத்தில் எனது கதைகளைப் படித்த நண்பர் ஒருவர் நீங்க பாஸிட்டிவ்வா கதை எழுதுங்க எல்லாக் கதையுமே நெகட்டிவாவே இருக்கு... உங்களுக்கு நல்லாவே எழுதத்  தெரியாதா என்றெல்லாம் சண்டையிட்டிருக்கிறார். ஆனால் இன்று உணர்வுப் பூர்வமான கதைகளைத்தான் ஐயா தன்னை அழ வைத்தது என்றார். அதுவே பெரிய பரிசுதானே.

கில்லர் அண்ணாவைப் பற்றி புகழாதவர் யார் சொல்லுங்கள்... கலந்து கட்டி அடித்து ஆடுவதில் சிக்ஸராக விளாசுபவர். ஐயாவும் அவரை இப்படித்தான் புகழ்ந்தார். மேலும் அண்ணாவின் தலைக் கண்ணாடியைப் பற்றியும் சொன்னார். அண்ணாவின் வரலாறு முக்கியம் என்பதை ஐயா அடிக்கடி சொன்னார். தன்னோட பதிவுக்கு கூட வரலாறு முக்கியம்ன்னுதான் தலைப்பிட்டிருக்கிறார்.

மனசு பேசுகிறது : அபுதாபியில் மையம் கொண்ட புயல் K5

(அண்ணா கில்லர்ஜியின் கெட்டைப் பார்த்து ரசிக்கும் ஐயா)


ஐயாவின் பகிர்வைப் படிக்க... வரலாறு முக்கியம். 

நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு ஐயா கிளம்ப, கார் வரை வந்து கில்லர்ஜி அண்ணா வழி அனுப்பிச் செல்ல என்னை காரில் ஏற்றி எனது அறை அருகில் கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள். மிகச் சிறப்பான சந்திப்பு... ஐயாவுடன் ஒரு எதிர்பாராத சந்திப்பு... மிகவும் சந்தோஷமான சந்திப்பு... மீண்டும் கிடைக்குமா என்ற ஆவலுடன் நாங்கள்...


படங்கள் உதவி (நன்றி) : திரு. கில்லர்ஜி அண்ணா.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1459
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum